Monday, December 27, 2010

ஏலத்திற்கு வந்த பிரபல பதிவர்களின் சொத்துக்கள்......



நம்ம பிரபல பதிவர்கள்லாம் ப்ளாக்குகள்ல சைடுல கீழ, மேலேன்னு ஏதாவது ஒரு மேட்டர சென்டிமென்ட்டா வெச்சி இருக்காங்க. அது எதுக்குன்னு எனக்கும் ரொம்ப நாளா வெளங்காம இருந்துச்சு.  அப்புறம் ஒருநா காரமடை ஜோசியர்தான் சொன்னாரு, அட மண்டு அது ப்ளாக்குக்கு கெட்ட சக்திகள்லாம் வரக்கூடாதுன்னு மந்திரிச்சது, வாஸ்துப் படி அவங்கவங்க ப்ளாக்குல வெச்சிருக்காங்கன்னு! எனக்கும் ஒன்னு அந்த மாதிரி பண்ணிக்கொடுங்கன்னு கேட்டதுக்கு, திட்டித் தொறத்தி விட்டுட்டார். என்ன பண்றது, போன தடவ ஐடியா கேட்டதுக்கே இன்னும் கடன் பாக்கி! 

நானும் வேற வழியே தெரியாம, நம்ம பிரபல பதிவருங்க வெச்சிருந்த மேட்டருங்கள எல்லாம் நைஸா லவட்டிக்கிட்டு வந்துட்டேன். இப்போ திடீர்னு பாருங்க, நிதி நெலம கொஞ்சம் சரியில்ல, அதுனால அது எல்லாத்தையும் ஏலத்துல விட்டு கொஞ்சம் நிதி தெரட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். கீழ கடை பரப்பியிருக்கேன், பாத்து புடிச்சத செலக்ட் பண்ணிக்கிட்டு வழக்கம்போல நம்ம பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல பணத்த போட்டுடுங்க சார்.


1. மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருக்கும் விலை உயர்ந்த நோக்கியா கேமரா செல்போன்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

2. பட்டாபட்டி ப்ளாக்கில் இருக்கும் 1800-ங்கொய்யாலே ஹாட்லைன் சேட்டிலைட் ஃபோன்.

ஏலத்தொகை: 199 பைசா மட்டுமே



சிறப்பம்சங்கள்: அதிநவீன சேட்டிலைட் ஹாட்லைன் தொலைபேசி. இத்தாலி மற்றும் கொலம்பியாவிற்கு விஷேச இலவச அழைப்பு வசதி. மேலும் தற்போது தானைத்தலைவர் ராகுல் ஜீயின் தனி லைனுடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தி பட்டாஜீ அவர்கள் போன வாரம் 2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு..... தவற விடாதீர்கள்... இன்றே கடைசி!

3. இம்சைஅரசன் பாபு வாயில் வைத்திருக்கும் அருவாள்.
இவர் எந்நேரமும் கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. அப்புறம் பாட்டி வடை சுட்ட கதையைப் வெச்சித்தான் எடுத்தோம். அதாங்க, நீங்க ரொம்ப நல்லாப் பாடுவீங்களே, எங்கே காக்கா மாதிரி ஒரு பாட்டுப் பாடுங்கன்னு சொன்னோம், அவ்வளவுதான்!
 இந்த அருவாளுக்கு ரெண்டு கத்தி எலவசங்கோவ்....  வாங்கிப் போட்டீங்கன்னா  கெடாவெட்டுக்கு யூஸ் ஆகும்ணா......!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




4. கோமாளி செல்வா
செல்வா அந்த வெள்ளக் காக்காவ வெச்சுத்தான் இத்தன  நாளும்  கரெக்டா  வடையத்  தூக்குறாருன்னு இப்போதான் தெரிஞ்சது, விட்ருவமா?  உடனே  தூக்கிட்டோம்ல? இப்போ நீங்க வேணா உங்க ப்ளாக்குல அத வெச்சு அழகு பாருங்களேன்......!
வடை எடு...கொண்டாடு.....!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே



5. வெறும்பய:
இவர் ப்ளாக்குல இருந்து இதத் தூக்கிட்டு வாரதுக்குள்ள கைய சுட்டுடுச்சுங்க, ஒளிச்சு வேற வச்சிருந்தாரு. அது என்னான்னு நீங்களே பாத்துக்குங்க சார், பேரு சொன்னா அடிப்பாரு. இத உங்க ப்ளாக்குல வெச்சுக்கிட்டீங்கன்னா, கவிதையா எழுதித்தள்ளலாம். ரசிகைகளும் (!)  நிறைய கிடைப்பார்கள்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே


6. டெர்ரர் பாண்டியன்:
இந்த ப்ளாக்குல ஒரு கருமாந்திரமும் கெடைக்கலிங்கோ, , சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!

ஏலத்தொகை: 10 பைசா மட்டுமே




7. கோகுலத்தில் சூரியன் வெங்கட் ப்ளாக்குக்கு போனா ரெண்டு சங்கம்தான் கெடச்சுது. அப்பிடியே அள்ளிக்கிட்டு வந்துட்டோம். இந்த சங்கங்கள வாங்கி வெச்சுக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு ப்ளாக்கு  வெச்சிருக்கறதே  மறந்திடுவீங்க  சார்.  பின்னே சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டான்னு நீங்க பல பஞ்சாயத்த சமாளிக்கறதுக்கே நேரம் பத்தாது, அப்புறம் ப்ளாக்க வெச்சு வேற என்னத்தப் பண்றது...?

ஏலத்தொகை: வாங்குனா அவங்களே சங்கத்துல இருந்து உங்களுக்கு ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க சார்!



8. நெ.1 பதிவர் சித்தப்பு சிபி.செந்தில்குமார் ப்ளாக்கில் கிடைத்தது ஒரு சூப்பர் மேட்டரு(DVD)ங்க, அத எலவசமாவே எல்லாருக்கும் வழங்குறேன். இது என்ன படம்னு கண்டுபுடிச்சீங்கன்னா ஒரு சிறப்புப் பரிசு, அதுவும் சித்தப்பு கையால உண்டு.


9. தேவாவின் ப்ளாக்குல இருந்து எதையோ சுட்டுக்கிட்டு வந்தேன், ஆனா அது என்னன்னுதான் இப்போ வரைக்கும் கண்டுபுடிக்கமுடியல. யாரு கண்டுபுடிக்கிறீங்களோ, அவங்க அது என்னன்னு எல்லாத்ததுக்கும் சொல்லிட்டு அப்படியே ஃப்ரியா எடுத்துக்கலாம்!.




10. சிரிப்பு போலீஸ்:
இந்தக் கடைல தூக்குற மாதிரி ஒரு எழவுமே சிக்கல,  இன்னும் கொஞ்சம் டீப்பா தேடிப்பார்த்தா எனிமா கொடுத்த மாதிரி புடிங்கிரும்னு, ஸ்ட்ரெயிட்டா கடையவே தூக்கிட்டு வந்துட்டேன்...! வேணுங்கறவங்க எடுத்துக்கலாம். எத வேணா எழுதலாம், என்ன வேணா பண்ணலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் கண்டிப்பாகப் பொறுப்பேற்காது. இன்சூரன்ஸ் வைத்து இருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!


ஏலத்தொகை: எப்படியாவது யாராவது எடுத்துத்தொலைங்க போதும்...!


User Name: dumeel007
Password: *********

எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.com

!

208 comments:

«Oldest   ‹Older   201 – 208 of 208
சி.பி.செந்தில்குமார் said...

நான் எத்தனையோ நல்ல விஷயம் எல்லாம் எழுதறேன் அதெலாம் கண்ணூக்குத்தெரியாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

///பட்டாபட்டி.... said... 4

பன்னிக்குட்டி ராம்சாமி said... 193

////பட்டாபட்டி.... said...
ஹா..ஹா/////

வாய்யா வா. என்ன சிரிப்பு? அப்போ பங்கு கெடச்சது நெசந்தானா?
//

உனக்கு குசும்பு ஜாஸ்தியா...

ஹி..ஹி
நல்லாத்தான் இருக்கு பதிவு...

அப்படியே.. டோமர் சைட் போனா..ஏதாவது கிடைக்குமா பாரு..
பிரச்சனை வந்தா..ரமேஸ் எதுக்கு இருக்காரு?.. ஹி..ஹி ///

மச்சி நீங்க எல்லாம் யாரு?

Unknown said...

அதுசரி உங்க ப்ளோக்குல ஏன் பன்னிக்குட்டி இல்லை!?

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ...ஹா ....ஏன் அருவாமேல உனக்கு அவ்வளவு ஆசையா ????....சரி சரி அது எனக்கு டெர்ரர் தந்த பரிசு ...வேற எதாவது கேளு ....இலவசமாகவே தருகிறேன் மக்கா

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாம

கனவுக்கன்னி பதிவை தொடர்வதற்கு உங்களை அழைக்கிறேன்... எழுதுகிறீர்களா...

Madhavan Srinivasagopalan said...

super

சாமக்கோடங்கி said...

//இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!

ஏலத்தொகை: 10 பைசா மட்டுமே
//


அடப்பாவிங்களா....

வானம் said...
This comment has been removed by the author.
«Oldest ‹Older   201 – 208 of 208   Newer› Newest»