என்னடா இது நம்ம கடைல சமையல் குறிப்பான்னு ஆச்சர்யமா இருக்கா? நேத்துப் போட்ட பதிவுல ஆண்களுக்கு மட்டும்னு போட்டிருந்ததுனால, ஆணாதிக்கவாதி, சாடிஸ்ட் அப்படின்னு நம்ம நலம் விரும்பிகள்(?) பலரும் எடுத்துச் சொல்றாங்க. அதுனால தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும், ஆணாதிக்கவாதி என்ற அவச்சொல்லைத் துடைத்தெறியவும், எனக்கு வேற வழியே தெரியல சார்...!
அதுவுமில்லாம நம்ம காரமடை ஜோசியர் வேற ஏதாவது ஒரு உபயோகமான சமையல் குறிப்பு இந்த மாசம் போட்டே ஆகனும்னு முடிவா சொல்லிப்புட்டாரு. நானும் மனச திடப்படுத்திக்கிட்டு நைட்டு புல்லா உக்காந்து யோசிச்சு, பல புத்தகங்கள், இணையதளங்களைப் புரட்டி, திரட்டி உங்களுக்காக ஒரு அருமையான சமையல் குறிப்போட வந்திருக்கேன். பாத்துப் படிச்சு பயனடையுங்க.
ஓக்கே, இப்போ ஸ்டார்ட் பண்ணுவோமா? (ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம், இல்லேன்னா படிச்சத மறந்திடுவேன்...)
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.
ஸ்டெப் 2:
நல்ல சுத்தமான வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. சுத்தமா இல்லேன்னா நல்லா சோப்புப் போட்டுக் கழுவிக்குங்க. சுத்தம் ரொம்ப முக்கியம். அப்புறம் கழுவும் போது சோப்புத் துணுக்குகள் ஏதும் ஒட்டிக்கிட்டு இருக்காம நல்லா அலசிக் கழுவனும்.
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க
ஸ்டெப் 4:
அந்தப் பாத்திரத்துல நாலுல மூனுபாகம் வரைக்கும் தண்ணிய ஊத்துங்க. அளவுலாம் குத்துமதிப்பாத்தான் பாக்கனும், அளவு தெரியலேன்னு அடிஸ்கேலு வெச்சுலாம் பாக்கப்படாது. குத்துமதிப்பு வரலேன்னா, பாதிக்கு மேல கொஞ்சம் இருக்கும் அளவுக்குத் தண்ணிய ஊத்துனாக்கூட போதும்.
ஸ்டெப் 5:
இப்போ உங்களுக்கு எத்தன முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க. கொஞ்சம் உப்பும் போட்டுக்கலாம்.
ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.
ஸ்டெப் 7:
சரியா 6 நிமிசம் வெயிட் பண்ணி, பாத்திரத்தக் கவனமாகத் திறந்து பார்க்கவும். நீர்க்குமிழிகள் கொஞ்சம் கொஞ்சமா வரத்தொடங்கி இருக்கும். (5 லிட்டருக்கும் குறைவான பாத்திரம்னா 3 நிமிசத்திலேயே பாத்திடனும்). திரும்ப பாத்திரத்த மூடி அப்பிடியே வெச்சுடுங்க.
ஸ்டெப் 8:
இப்போ சரியா 16 நிமிசம் கழிச்சுப் போயி திறந்து பார்த்தீங்கன்னா... தண்ணி கலகலன்னு கொதிச்சிக்கிட்டு இருக்கும். திறந்து பார்க்கும் போது மேல தெறிச்சுடாம கவனாமா இருந்துக்கனும்.
ஸ்டெப் 9:
இன்னொரு 5 நிமிசம் கழிச்சு அடுப்ப ஆஃப் பண்ணிடுங்க. தண்ணிய கீழ ஊத்திடாம அப்பிடியே ஒரு 5 நிமிசம் வையுங்க.
இப்போ சுவையான.............சூடான......................... சுவையான............................ அவிச்ச முட்டை ரெடி................................!!!
(வெயிட் வெயிட்.....அப்பிடியே சாப்பிட்டுத் தொலச்சிடாதீங்க, அப்புறம் எனக்குக் கெட்ட பேராயிடும். தோடுகள மொதல்ல உறிச்சுக்கனும், தெரியுதா?)
என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?
பி.கு. நண்பர்களே உங்களுக்காகவே சென்னை எக்மோர்ல அஞ்சு ரூம் போட்டு வெச்சிருக்கேன். அழுகுறவங்க போயி அழுதுட்டு வாங்க.......!
!
220 comments:
«Oldest ‹Older 201 – 220 of 220இப்படியாக இன்றைய பொழுது இனிதாக் முடிந்தது
சரக்க அடிக்கு போறேன் , நாளைக்கு மருபடியும் கண்டினு பன்னுறேன்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பத்த மாட்டேங்குது!!!!
கடேசி வரைக்கும் கட ஓனரு தல அம்புடலயே. அந்த வருத்தத்துடன் நானும் விடைபெறுகிறேன்.
நன்றி,வணக்கம்
//ன்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... //
அப்ப பன்னிஸ் பாத்ரும்' என்ற அடுத்த பதிவில்
'ஆயி போனா கழுவது எப்படி' என்று செயல் முறை விளக்கம் காட்டுவார் நம்ம பன்னி .// படம் இனைப்புடனா?
செவத்துல போய் முட்டிக்கிட்டேன்...
இது கேள்வி நேரம்
எதுக்குங்கண்ணா முட்டைல உப்பு போடணும்????? :)))
Ellam sari, muttaiya eppadi tharikkanumnu sollunga..
ஃஃஃஃஃஃநண்பர்களே உங்களுக்காகவே சென்னை எக்மோர்ல அஞ்சு ரூம் போட்டு வெச்சிருக்கேன். அழுகுறவங்க போயி அழுதுட்டு வாங்க.......ஃஃஃஃஃ
ஆமாம் விளங்கது பன்னிகுட்டிக்கு இறைத்த நீர் புளொக் வழியோடி கொமண்ட் பொக்சை நிறைக்குமாம்...
Present Sir...
லேடீஸை கவர இப்படியும் பதிவு போடலாமா?
நானும் மனச திடப்படுத்திக்கிட்டு நைட்டு புல்லா உக்காந்து யோசிச்சு,>>>>
fulloodavaa?ஃபுல்லோடவா?
>>இம்சைஅரசன் பாபு.. said... 132
அவன் அவன் ஊர்ல 100 ,200 பன்னிகுட்டி வளக்குறான்........நான் ஒரே ஒரு பன்னிகுட்டி கிட்ட பழகி நான் படும் பாடு இருக்கே ...........
ரிப்பீட்டு
இந்த மாதிரி ஒரு பதிவு போடனும்னு உங்களுக்கு எப்படி ஐடியா வந்துச்சு///?
settings ல Feed option ன Short பன்னி வையுங்க
பன்னிக்குட்டி ராம்சாமி
வரலாறு முக்கியம் நாளைக்கி உங்க சமையல் குறிப்பை அமெரிக்காகாரன் காப்பி அடிச்சிடபோரான் செலவை பாக்கமா இந்த குறிப்பை கல்வெட்டா வீட்டு காமோன்டு சுவருல புதைச்சிங்கனா நாளைய சந்ததி வாழ்த்துங்கனா.
Hello panni sir, unga Group allakaigalea sorry Aadugalea vada edutha epdi, nanga enga porathu ...........
Anne anda muttaya epadi pathirathukula podanumnu solla maranduteengale.....
இதுக்கெல்லாம் மொதல்ல சரக்க வாங்கி வெசிட்டேங்களா!?
இந்த கண்டுபுடிப்ப அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல "பதிவு" பண்ணுனா வருங்கால சந்ததிகளுக்கு உபயோகமா இருக்கும் :)
/////வானம் said...
கடேசி வரைக்கும் கட ஓனரு தல அம்புடலயே. அந்த வருத்தத்துடன் நானும் விடைபெறுகிறேன்.
நன்றி,வணக்கம்//////
அப்பாடா... தப்பிச்சேன்.....
////மொக்கராசா said...
இப்படியாக இன்றைய பொழுது இனிதாக் முடிந்தது
சரக்க அடிக்கு போறேன் , நாளைக்கு மருபடியும் கண்டினு பன்னுறேன்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பத்த மாட்டேங்குது!!!!/////
அடப்பாவி............சரி அப்போ கடன் வாங்கி வெச்சுக்கோ!
////புலிகுட்டி said...
//ன்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... //
அப்ப பன்னிஸ் பாத்ரும்' என்ற அடுத்த பதிவில்
'ஆயி போனா கழுவது எப்படி' என்று செயல் முறை விளக்கம் காட்டுவார் நம்ம பன்னி .// படம் இனைப்புடனா?/////
ஓ இதுல படம் வேறையா?
Post a Comment