Thursday, December 9, 2010

அமெரிக்காவில் இருந்து எனக்கு வரும் மெயில்கள்....!



ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாரின்ல (அமெரிக்காவுல) இருந்து ஒருத்தரு ஈமெயிலு அனுப்பி இருந்தாருங்க. நமக்கெல்லாம் பாரின்ல இருந்து மெயில் வருதே என்னமோ ஏதோன்னு அவசரம் அவசரமா தொறந்து படிச்சா....அது அவரு என்னமோ மருந்து விக்கிறாராம் உங்களுக்கு வேணுமான்னு கேட்டிருந்தாருங்க. அது என்ன மருந்துன்னா கேக்குறீங்க, அட ஏங்க, நீங்க வேற,  தலவலி மருந்தா இருந்தா பரவால்லியே அது என்னமோ வயாகராவாம், எனக்குன்னு பெசல் ஆஃபராம். அதுக்குத் தபால் செலவு வேற தள்ளுபடியாம்.. எது எதுக்கு தள்ளுபடி கொடுக்குறானுங்க, பாத்தீங்களா?


நான் வேற பொறுப்பா, சாரி சார், இந்த மருந்து எனக்கு தேவையில்ல, எங்க ஊருலேயே இது சீப்பா கெடைக்குது, வேற யாராவது தேவைப்படுறவங்களுக்கு கொடுங்கன்னு ரிப்ளை போட்டேன். அன்னிக்குப் புடிச்சதுங்க கெரகம், ரெண்டு வருசமா, டெய்லி அந்த ஆளு எனக்கு மெயில் பண்றாருங்க. அந்த மருந்தே வாங்கித்தான் ஆகனும்னு அடம் புடிக்கிறாருங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டேங்க, ஆளு மசியற மாதிரி இல்ல. ஸ்பேம்ல போட்டாலும் பேர மாத்தி மாத்தி வர்ராருங்க. வயாகரா வாங்குனாத்தான் விடுவார்னு என் பிரண்டு சொல்றான், அதுனால யாருக்காவது இந்த மருந்து வேணும்னா சொல்லுங்கய்யா.... இவன அப்பிடியே உங்க கூட கோர்த்து விடுறேன்...!


என்னத்தச் சொல்ல?

இதாவது பரவால்லீங்க, இன்னொருத்தன் பண்ற அட்டூழியத்துக்கு. அவனும் அதே ஊருதாம்போல! ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனக்கிறேன், ஒரு நாளு உங்க ப்ரண்ட்ஸ பாக்கனுமான்னு சப்ஜக்டோட ஒரு மெயில் வந்துச்சுங்க. ஓப்பன் பண்ணிப் பாத்தா இந்தப் பன்னாட, உங்க ஏரியாவுல இருக்க பொண்ணுங்க டீடெயில் வேணுமான்னு கேட்டிருந்துச்சுங்க,



நானும் அத நம்பி, நம்ம சிரிப்பு போலீசுக்கு வேற உதவியா இருக்குமேன்னு நெனச்சு எங்க ஊரு சென்னைங்க, அங்க உள்ள பொண்ணுங்க டீட்டெயில் மட்டும் அனுப்புங்கன்னு ரிப்ளை பண்ணேன். அப்புறம் அனுப்புனாம் பாருங்க ரிப்ளை, கருமம் கருமம், சே...சே....  எல்லாம் கண்றாவி கண்றாவியா...சே.... அதுவும் சென்னையிலேயாம். இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல?


நான் உடனே ரொம்பக் கடுப்பாயி திட்டி மெயில் போட்டேன். ஏண்டா இப்பிடி கேவலமான படமா அனுப்புற? அதுவும் நீ அனுப்புனது சென்னை பொண்ணுங்களே இல்லேடான்னு. ஆனா, அந்த  நாதாரி  அதையெல்லம்  கொஞ்சம் கூடக் கண்டுக்கவே இல்லங்க. அன்னில ஆரம்பிச்சதுங்க,  இன்னிக்கு வரைக்கும் ஒரு நாளு கூட கேப் விடல அந்த ராஸ்கல், தெனம் தெனம் அனுப்பிக்கிட்டே இருக்கான்.  நானும் ஒரு நாளாவது தப்பித் தவறி அவன் நம்ம சிரிப்பு போலீசுக்கு ஏத்த மாதிரி பொண்ணுங்க வெவரம் அனுப்பிடுவானோன்னு டெய்லி செக் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இன்னும் முடியலங்க.....

இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க. நானும் தெரியாமத்தான் கேக்குறேன், இந்தப் பன்னாடப் பரதேசிங்களுக்கு வேற வேலையே இல்லையா?

இதுல வேற நம்ம பட்டாபட்டி, மங்குனி எல்லோருக்கும் மெயில்லேயே 1000 கோடி, 2000 கோடின்னு  கொடுக்குறானுங்களாம், நமக்கு ஒரு பயபுள்ளையும் அந்த மாதிரி அனுப்ப மாட்டேங்கிறானுகளே. (ஒரு வேள நாம பிரபல பதிவர் இல்லேன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சுடுச்சோ?)  நமக்கு மெயில் அனுப்புற நாதாரிகள்லாம் சொல்லி வெச்சா மாதிரி கோக்குமாக்காவேதான் அனுப்புறானுங்க. இவனுகளால, இப்பல்லாம் பக்கத்துல யாரையும் வெச்சுக்கிட்டு மெயில் ஓப்பன் பண்றதே இல்லீங்க...!


அப்புறம் உங்களுக்கும் யாராவது மெயில்ல 1000 கோடி பணம் கொடுத்தாங்கன்னா (கொடுப்பாங்க......), எனக்கும் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்ணா, உங்க வசதிக்காக கீழ என்னோட பேங்க் டீட்டெயில்ஸ் கொடுத்திருக்கேன், அப்பிடியே பொத்துனாப்பல் ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க, சரியா?

கணக்காளர் பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி
கணக்கு எண்: 88888 88888 88888
பாஸ்வெர்ட்: ********
PIN நெ.:****
வங்கி: பேங்க் ஆப் 'ஆப்பு'ரிக்கா, உகாண்டா கிளை

 இந்த டிடி, ட்ரான்ஸ்பர், லொட்டு லொசுக்கு கமிசன்லாம் கழிச்சிட்டே அனுப்பிதொலைங்க.. என்ன தெரியுதா?


அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார்,  பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?


!

209 comments:

«Oldest   ‹Older   201 – 209 of 209
Unknown said...

//பன்னிக்குட்டி எனக்கு ஒரு மெயில் அனுப்பு நா உனக்கு ஒன்னு குடுக்கணும்.

s.rajagopal1984@gmail.com

அனுப்புறியா//
குடுத்தாரா?

சாமக்கோடங்கி said...

"பாரு.. பன்றதையும் பண்ணீட்டு நல்ல புள்ள மாறி நடிக்கறத... டேய்.. என்தேந்தேந்த நேரத்துக்கு எந்தெந்த மாறி முழிய நீ மாத்துவன்னு எனக்கு தெரியும்டீ....."

இத நான் சொல்லல.. கவுண்டர் சார் சொல்ல சொன்னாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெட்டிப்பேச்சு said...
It is really nice of you to respond decently to the people who have commented without noticing the humor and the hidden intention on your post..

you have a nice humor sense..

God bless you..////

thank you very much sir!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
நமக்கு மெயில் அனுப்புற நாதாரிகள்லாம் சொல்லி வெச்சா மாதிரி கோக்குமாக்காவேதான் அனுப்புறானுங்க.////

ஹி.ஹி.ஹி............. எல்லாம் ஒரு அனுபவத்துலதான்////

அப்போ கோகக்குமாக்கு மெயில ஒளிச்சிக்கிட்டு காசு மெயில மட்டும் ப்ளாக்குல போட்டாச்சு?

Sivakumar said...

இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

R.Gopi said...

தல........

மொத ஃபோட்டோல நம்ம லேட்டஸ்ட் டாக்குடரு கேப்டன் பட்டைய கெளப்புறாருடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

ஹீ...ஹீ....ஹீ..........

R.Gopi said...

தல........

மொத ஃபோட்டோல நம்ம லேட்டஸ்ட் டாக்குடரு கேப்டன் சூப்பரப்பு....

வூட்டுல சொல்லி திஸ்டி சுத்தி போட சொல்லுய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமென்ட்டுகளை அள்ளி வழங்கிய அனைவருக்கும் நன்றி....!

tamil cinema said...

super blog ya... im the koundar fan :):)

«Oldest ‹Older   201 – 209 of 209   Newer› Newest»