
டாக்டர் பட்டம் கொடுப்பதை வைத்து எப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று பார்த்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையோடு யார் யாருக்கு எதிர்காலத்தில் டாக்டர் பட்டம் கிடைக்கப் போகிறது என்ற ஒரு லிஸ்ட்டை தயாரித்துள்ளோம். இதை வைத்து தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் செய்து கொண்டால் கடைசிநேரக் குழப்படிகளைத் தவிர்க்கலாம்.
இன்னும் 6 மாததிற்குள் தேர்தல் வரக்கூடிய நிலை இருப்பதால், தேர்தல் முடிவுகளையொட்டிய சாத்தியக்கூறுகளை வைத்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
இனி யார் யாருக்கு டாக்டரேட் பட்டம் கிடைக்கப் போகிறது?
தேர்தலில் திமுக கூட்டணி வென்றால்:
1. அழகிரி
2. கனிமொழி
3. கலாநிதி மாறன்
4. தயாநிதி மாறன்
5. உதயதி
6. துரை தயாநிதி
7. அறிவுநிதி
8. வைரமுத்து
9. வாலி
10. இராம. நாராயணன்
11. எஸ். ஏ. சந்திரசேகர் (தனிகட்சி தொடங்கக்கூடாது என்ற உத்தரவாதத்துடன்)
12. விஜயகாந்த் (கூட்டணியில் இணைந்தால் அல்லது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தால்)
13. டி. விஜய ராஜேந்தர்
14. ராதிகா சரத்குமார்
தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால்
1. ஜெயலலிதா
2. சசிகலா
3. சசிகலாவின் அண்ணன் தம்பிகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்
4. சசிகலாவின் அக்கா தங்கைகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்
எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாக்டர் பட்டம் கிடைக்க வாய்ப்பே இல்லாதவர்கள்
1. வைகோ
2. மருத்துவர் அய்யா
3. நல்லமுத்து
4. தா. பாண்டியன்
5. திருமாவளவன்
பதிவர்களும் இந்த லிஸ்ட்டை பயன்படுத்தி சம்பந்தப் பட்டவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவித்து ஆச்சர்யம் அளிக்கலாம். அதைப் பயன்படுத்தி அப்படியே அவர்களைப் பழக்கம்பிடித்து வைத்துக்கொண்டால் பின்னால் பயனளிக்கும்!
பி.கு.: தங்களுக்கும் டாக்டர் பட்டம் வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் (Deemed University) ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனுடைய அதிபரை தகுந்த சிபாரிசோடும், சன்மானத்தோடும் சந்தித்தால், உங்களுக்கும் உண்டு பட்டம்!
எச்சரிக்கை: மத்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கலைக்கப் போவதாக கொள்கை முடிவு எடுத்து இப்போது நிலுவையில் உள்ளது. எனவே பட்டம் வேண்டுவோர் விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்!