Sunday, June 27, 2010

சமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது?

சமீப காலமாகச் சந்தையில் பல புதிய சமையல் எண்ணைகள் வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. இதயதிற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தச் சமையல் எண்ணைகளின் உண்மை நிலை என்று பார்ப்போமா?

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. PUFA விலும் இரண்டும் வகை உள்ளது, w-6 (ஒமேகா-6) மற்றும் w-3 (ஒமேகா-3). இதில் ஒமேகா-3 தான் உடலுக்கு நல்லது. ஆனால் தாவர எண்ணைகளில் இரண்டும் கலந்தேதான் இருக்கின்றன. எனவே சமையல் எண்ணைகளை மதிப்பிடுவதற்கு இரண்டு கொழுப்பு அமிலங்களும் (ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3) என்ன விகிதத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுகிறார்கள். ஒமேகா-3 அதிகமாக இருந்தால் அது நல்லது. ஏனென்றால் ஒமேகா-6 உடலில் புகுந்த பின்பு சும்மா இருப்பதில்லை, அது சுயமாகக் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லாமல், ஒமேகா-3 வின் நல்ல விளைவுகளையும் எதிர்க்கிறது. (நல்லதுக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க!)

இனி சமையல் எண்ணைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணை:
திரவக்கொழுப்பு அதிகம் உள்ளது, அதனால் இதைப் பயன்படுத்துவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது. எனவே இதய நோயாளிகளும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒமேகா-3 அறவே இல்லை. வெறும் ஒமேகா-6 மட்டுமே உள்ளது. நீண்டகால உபயோகத்திற்கு இது பொறுத்தமானதா என்பது சந்தேகதிற்குரியது. ஒமேகா- 6 வின் கெட்ட விளைவுகளில் சில சூரியகாந்தி எண்ணையை நீண்ட நாள் பயன்படுத்தியவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோள எண்ணை (கார்ன் ஆயில்):
இது ஓரளவு சூரியகாந்தி எண்ணையைப் போன்றதே. இந்த எண்ணையில் ஒமேகா-3 உள்ளது, ஆனால் வெறும் 2% தான். மீதம் முழுவதும் ஒமேகா-6 தான். அதனால், ஒமேகா-6 வினால் ஏற்படும் கெட்ட விளைவுகளை இது தடுக்காது. எனவே சூரியகாந்தி எண்ணையைப் போன்றே நீண்டநாள் பயன்பாட்டிற்கு இதுவும் பொருத்தமானதல்ல.

கடலை எண்ணை:
முன்பு வெகு பிரபலமாக இருந்த எண்ணை. இது திரவ கொழுப்புகள் அதிகம் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகவே ஆராய்ச்சிப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணையின் கொழுப்பு அமிலங்களைப் பார்க்கும் போது பாதுகாப்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் பரிசோதனை முடிவுகள் குழப்பும்படியாக உள்ளன. அதனால் எப்போவாவது பயன்படுத்துவதில் தப்பில்லை.

அரிசி உமி எண்ணை (ரைஸ் பிரான் ஆயில்):
இந்த எண்ணை ஜப்பான், சீனாவில் அதிகம் பயன்படுத்தபடுகின்றது. இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. அருமையான எண்ணை, அதிக நலன்களைக் கொண்டது. இதில் உள்ள ஒரைசெனோல் (Oryzanol) இதய நோயைத்தடுக்கும் சக்தி வாய்ந்தது (நீங்கள் விளம்பரங்களில் பார்ப்பது உண்மையே). மேலும் இந்த எண்ணை உணவுப் பொருட்களால் உறிஞ்சப்படுவது குறைவு. 5% ஒமேகா-3 உள்ளது.

நல்லெண்ணை:
இது நிஜமாகவே நல்ல எண்ணைதான். இந்த எண்ணையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய தன்மை உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 1 சதவீததிற்கும் குறைவாகவே ஒமேகா-3 உள்ளது.


முடிவாக என்ன எண்ணைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா? மேலே படிங்க. பொதுவாக இந்தியச் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணைகளில் ஒமேகா- 3 மிகக்குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை மட்டுமே தேவையான அளவு ஒமேகா- 3 கொண்டுள்ளது, மிகச் சிறந்த சமையல் எண்ணையும் இதுவே. ஆனால் பொறிப்பதற்குப் பயன்படுத்த முடியாது (பொறிக்கும்போது வரும் கடும் வெப்பம் இந்த எண்ணையை சேதம் அடையச் செய்கிறது, அப்போது வெளியாகும் பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போது பொறிப்பதற்கேற்ற ஆலிவ் எண்ணையும் வருகின்றது). விலை அதிகம், கிடைப்பதும் கடினம் (இந்தியாவில்) போன்ற காரணங்களால் தினசரி பயன்பாட்டிற்கு இந்த எண்ணையை பயன்படுத்துவது சாத்தியமல்ல.

அடுத்த சிறந்த எண்ணை அரிசி உமி எண்ணையே (ரைஸ் பிரான் ஆயில்). இந்த எண்ணையே இந்தியப் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறது. சுமார் 450 டிகிரி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சூடாக்கலாம் (சமையல் எண்ணைகளிலேயே இதற்குத்தான் அதிகம் வெப்பம் தாங்கும் சக்தி). அதனால் இந்த எண்ணையை தினந்தோறும் பயன்படுத்தலாம். ஆனாலும் இடைஇடையே சூரியகாந்தி எண்ணை, சோள எண்ணை, நல்லெண்ணை என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த எண்ணையைப் பயன்படுத்தினாலும், ஒரேவகை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் (பெரும்பாலான பிஸ்கட்டுகளில் வனஸ்பதி உள்ளது, எனவே பிஸ்கட்டுகள் வாங்கும்போது கூட கவனம் தேவை, hydrogenated vegetable oils, shortened vegetable oils, margarine என்று பல பெயர்களில் போட்டிருப்பார்கள் எல்லாம் வனஸ்பதி வகையைச் சேர்ந்தவையே). வெளிநாடுகளில் இருப்பவர்கள் எண்ணை வாங்கும் போது பொறிப்பதற்கேற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும் (பாட்டிலின் மேலேயே குறிப்பிட்டு இருப்பார்கள்).


பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!

(சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இந்தப்பதிவு, மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)

Saturday, June 26, 2010

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?

செம்மொழி மாநாட்டுல வேற நல்ல விஷயம் எதுவும் நடந்திருக்கோ இல்லையோ, வெளிநாட்டு தமிழறிஞர்கள் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (டீவியிலதான்). அதில் அஸ்கோ பர்ப்போலா என்னும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. சிந்துச் சமவெளி மக்களின் எழுத்துக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வந்தது. அதனால், அவர்களது மொழி, வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் சரியாக விளக்கப்படாமல் இருந்தது. ஒரு சாரார், சிந்துச் சமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்று சில ஆதாரங்களைக் காட்டினர். வேறு சிலர் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், திராவிடத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ஆர்யர், திராவிடர் என்று இரு இனங்கள் கிடையாது, எல்லாமே ஒரே இனம்தான் என்று வாதாடுகிறார்கள். அவர்கள் கருத்துப்படி, ஆர்யர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை என்பதே (இப்போது புரிந்திருக்குமே இதன் விசமத்தனம்?).

இந்நிலையில் பின்லாந்துப் பேராசிரியர் பர்ப்போலா, செம்மொழி மாநாட்டில் சிந்துச் சமவெளியில் இருந்தது தமிழர்களே என்றும், அவர்கள் பேசியே மொழி தமிழே என்றும் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இவை உண்மையிலேயே சரியான ஆதாரங்களாக இருக்கும் பட்சத்தில் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும். பேராசிரியர் பர்ப்போலா என்ன கூறியிருக்கின்றார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள்வதற்கு முன்பே எதிர் வாதம் தொடங்கிவிட்டது. ரிடிஃப் (Rediff) இணையதளத்தில் அதற்குள்ளாகவே டாக்டர் எஸ். கல்யாணராமன் என்பவரிடம் இருந்து பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள். அவரும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விசம் கக்கி இருக்கிறார். ரிடிஃப், இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் யாரையும் பேட்டி எடுத்து வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. (ரிடிஃபை தொடர்ந்து படித்தவர்கள், அவர்களின் தென்னிந்தியர்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்தை நன்கு அறிந்திருப்பார்கள்).

இவர்களை விட்டுத்தள்ளுவோம், என்றைக்குமே திருந்தப் போவதில்லை!. என்னுடைய ஆதங்கமெல்லாம், பேராசிரியர் பர்ப்போலாவின் விளக்கங்கள், செம்மொழி மாநாட்டின் ஆரவாரங்களிலும் பாராட்டுரைகளிலும் மறக்கப்பட்டு விடக்கூடாது என்பதே! இதைவைத்துக் கொண்டு மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முடிந்தவர்கள் தயவு செய்து உடனே செய்யுங்கள்.

1. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்படவேண்டும். அங்கே தொல்லியல் ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, மற்றும் மொழியியல் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக சோதனைச் சாலைகளும் ஆராய்ச்சியாளர்களும் வேண்டும். மரபணு பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கும் வதிகள் ஏற்படுத்தவேண்டும்.

2. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள்கள் அனைத்தும் மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். கார்பன் டேட்டிங் எனப்படும் காலத்தைக் கணக்கிடும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தி எந்தக் காலத்தை சேர்ந்தவை என்று அனைத்து வரலாற்றுச் சம்பவங்களும் தெளிவு காணவேண்டும். கார்பன் டேட்டிங் முறையில் கணக்கிடப்படும் கால அளவு துல்லியமாது. வள்ளுவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதற்கே இன்னும் நம்மிடம் குழப்பங்கள் நிலவுகின்றன.

3. கன்யாகுமரிக்குத் தெற்கே கடலின் அடியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யப் படவேண்டும். லெமூரியாக் கண்டம் என்று ஒன்று இருந்ததாகவும் அங்கே தமிழர்கள் வாழ்ந்து வந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. முதல் மூன்று தமிழ்ச்சங்கள் அங்குதான் நடந்தன என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இதுகுறைத்து முறையான அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகள் எதுவும் நடந்தாகத்தெரியவில்லை.

4. தமிழ்நாட்டின் மற்ற கடற்கரையோரங்களிலும் கடலிலும் அகழ்வாராய்ச்சி தேவை. பூம்புகார், கடல்கோளினால் அழிந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கடல்கோள் என்றால் சுனாமியாக இருக்கலாம் என்று நாம் சமீபத்தில்தான் புரிந்து கொண்டோம் (லெமூரியாக் கண்டமும் அதுபோன்ற ஒரு நிகழ்வினால் தான் அழிந்திருக்கவேண்டும்). அதனால், இதுபோன்ற வேறுநிகழ்வுகளினால் பண்டைய தமிழக நகரங்கள் எதுவும் மூழ்கியுள்ளனவா என்று ஆராய வேண்டும்.

5. சிந்துச் சமவெளி நாகரிக, மக்கள், மொழி, வழிபாட்டுமுறைகள் குறித்து மறு ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.

6. ஆப்பிரிக்கப் பழங்குடி மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுடைய மரபணு, தமிழகத்தைச் சேர்ந்தவருடைய மரபணுவுடன் அப்படியே ஒத்துப் போவதாக சிலவருடங்கள் முன்பு ஆய்வுகள் வெளியாகின (இது குறித்து ஆனந்தவிகடனில் கூட கட்டுரை வெளியாகி இருந்தது). இது தமிழர்கள் மிகப் பழமையான இனத்தை சேர்ந்தவர்கள் என்பதையே சொல்கிறது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்த ஆராய்ச்சிகள் நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும், நடுநிலையோடு இருப்பதும் மிக அவசியம். ஆராய்ச்சி முடிவுகள் எப்படி இருந்தாலும் அவை சர்வதேச அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட வேண்டும். ஒருவேளை இதுபோன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவயப்படுதலை கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொண்டு அறிவுப்பூர்வமாய் சிந்தித்து இயங்குவோம். அறிவியல் உண்மைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். வெறும் பேச்சுக்களைக் குறைத்து செயலில் இறங்குவோம். செம்மொழி மாநாடு அதற்காவது ஒரு சிறு பொறியாக அமையட்டும்!

Wednesday, June 23, 2010

சந்தியா..சந்தியா....!




சந்தியா..சந்தியா....பாடல் மிதந்து வருகின்றது. காற்றில் வந்த மழைவாசம் பாடலோடு இணைந்து மூச்சில் கலந்து கொண்டிருந்தது. பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்? தெரியவில்லை. எதுவும் தெரியக்கூடாது என்றுதானே முகவரியோ, தொலைபேசி எண்ணோ வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது, தவிப்பு அடங்க மறுக்கின்றதே!


அவளைக் கடைசியாகப் பார்த்த அன்று காதலர் தினம்! காதலர்தினம்தான் காதலர்கள் பிரிவதற்கும் பயன்பட்டிருக்கிறது. அன்றுதான் அவள் மனம் திறந்தாள், அதற்கு அவசியமே இருக்கவில்லையென்றாலும்! ஒருவேளை பின்னர் அதுவே பெரிய தவிப்பாகிவிடும் என்றுதான் சொன்னாளா? நான் எதுவுமே பேசவில்லை, அவளும் கேட்கவில்லை. ஒருவேளை நானும் சொல்லியிருக்கலாமோ? எனக்கு ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை? அவளை பார்த்த நாளில் இருந்து அவளோடு ஒற்றை வார்த்தையாவது பேசிவிடவேண்டும் துடித்த எத்தனையோ பொழுதுகளும், அவள் பெயரை உச்சரித்தே வாழ்ந்த நாட்களும் என்னோடு இன்னும் சண்டை போடுகின்றன. அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டைரி என்னைத் தினமும் ஏளனம் செய்கிறது, நான் என்ன செய்வேன்? அவள் கீழே வீசிச்சென்ற கசங்கிய காகிதம் தினமும் என்னோடு பேசுகிறது.


அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது. நான் என்ன செய்வேன்? அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். அவள் பதிவு செய்து கொடுத்த பாடல் கேசட் பெட்டியில் உறங்கிகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு முறை எடுத்துப் பார்க்கும்போதும் மனம் நடுங்குகிறது. இங்குதானே அவள் தொட்டிருப்பாள், கேசட்டைத் தடவிப்பார்க்கின்றேன்.
அவள் எனக்காக எழுதிய வாழ்த்து அட்டை படபடக்கிறது. படிக்க தெம்பில்லை. கீழே சட்டை, அது அவளோடு முதல் முதலாகப் பேசியபோது அணிந்திருந்தது, அப்படியே இருக்கிறது துவைக்காமல், பொக்கிசமாக! எடுத்து அணைத்துக்கொள்கிறேன். அவள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. சட்டையை கீழே வைக்கிறேன், சட்டைதான் என்னைப்பார்த்து சிரிக்கிறது. வேகமாக டைரியை எடுக்கிறேன். அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே, இடையே இடையே அவள் கையெழுத்துக்களும், டைரியைத் திறக்கமுடியவில்லை.டைரியை வைத்துவிட்டு எப்போதும் போல நினைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் அவள் வருவாள், வந்து அவளே படித்துக்காட்டுவாள்.

அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!

!!!

Tuesday, June 22, 2010

ஏ டன்டனக்கா ஹே!

ஏ டன்டனக்கா ஹே!
ஏ டனக்கு நக்கா ஹே!
ஏ பகுத் அச்சா ஹே!



ஏ அச்சா..அச்சா...பகுத் அச்சா...
ஏ மச்சான் மச்சான் ஒன்ணுமில்லடா மிச்சம்!



டேய் ஷாருக்கு உன்கிட்டே இல்லடா சரக்கு!
டேய் சல்மானு நீ இனிமே வெறும்மானு!
டேய் அக்சை உனக்கு கிடையாது மீசை!
டேய் ஹிர்த்திக்கு ரோஷன் உனக்கு வேணும்டா கொஞ்சம் ரோசம்!



வந்துட்டேண்டா டீஆரு, இனி
உங்களுக்கெல்லாம் டெர்ரரு!
நான் இனிமே பாலிவுட்டு ஸ்டாரு


ஏ டண்டனக்கா ஏ டனக்கு நக்கா...!


பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு




Sunday, June 20, 2010

ஐசு....ஐசு....! இது நியாயமா மணி சார்?




ஐஸ்வர்யா ராய் உலக அழகிதான் ஒத்துக்கிறேன், உண்மையிலேயே இந்தமாதிரி ஒரு அழகான பெண்ண பாக்க முடியாதுதான்... அதுக்காக?
ராவணண் விமர்சனம் பாத்தா ஒருத்தர் பாக்கியில்ல, எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி ஜொல்ளியிருக்காங்க, சில விமர்சனங்கள்ல மணி சாருக்கே அடிவிழுந்திருக்கு, ஆனா பாருய்யா இந்தப் புள்ள தப்பிச்சிருச்சு! ஐசு அப்பிடி நடிக்குது, இப்ப்டி நடிக்குதுன்னு ஆளாளுக்கு எடுத்து விட்டுருக்காங்க!எனக்கும் அந்தப் புள்ளைய புடிக்கத்தான் செய்யும் ஆனா ஒரு சம்பவத்துக்கு அப்பறம் ஐசை சினிமவுல பாக்க புடிக்கவே மாட்டேங்குது!

அது என்ன சம்பவம் அது இதுன்னு பயந்துடாதீங்க! அது படத்துல வர்ர சீனுதான். ஜீன்ஸ் படத்துல அன்பே அன்பே பாட்டு எல்லாரும் பாத்திருப்பீங்க, நம்ம வைரமுத்து அண்ணனும் ஏகத்துக்கு ஜொள்ளியிருப்பாரு, அது பரவாயில்லங்க நம்ம எல்லாரும் அப்பப்ப பண்ணிக்கறதுதான் (கீழே உள்ள பாட்டு வரிகள்ல, முக்கியமா இரண்டாவது வரிய உண்மையிலயே ஐஸ்ச நெனச்சா வைரமுத்து எழுதியிருப்பாருன்னு நெனக்கிறீங்க?), ஆனா அந்தப்புள்ள இந்தப் பாட்டுல அய்யோ சகிக்க முடியல. என்னான்னு கொஞ்சம் வெளக்கமா பாப்போமா?

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி"
இந்த வரி வரும்போது ஐசு சும்ம இடுப்ப ஆட்டிக்கிட்டு இருக்கும், ஒன்ணும் பிரச்சனையில்ல, அடுத்த வரில தான் மேட்டரே!

"சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலடி"

இதுக்கு ஐசு சும்மா வெக்கப்பட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு மூஞ்சிய மூடிக்கிட்டு ஓடனும், ஆனா படத்துல ஒருமாதிரி கேவலமா பன்ணியிருக்கும் பாருங்க, அதப் பாத்த அன்னியோட ஐசு படம் பாக்குறத அடியோட விட்டுட்டேன்!

என்னய்யா ரியாக்சன் அது? சும்மா குருப் டான்சர்கள்ல நாலாவது வரிசைல மூனாவது புள்ளையக் கூப்புட்டாக் கூட அதவிட சூப்பரா நளினமா அசத்தியிருப்பா! ஐசு கிட்ட இருந்து அப்பிடி ஒரு மட்டமான ஆக்சன நாங்க எதிர்பாக்கவே இல்ல. என்ன பண்ண்றது, ஆண்டவன் ஒண்ண கொடுத்தா இன்னொன்ன எடுத்துடறான்! அதுல இருந்து இப்போ வரைக்கும் ஐசுக்கும் நடிப்பு வரும்னு நாங்க நம்புறதே இல்லீங்கோ.

ஐசு அழகுதான் ஆனா நடிகையா ரசிக்க முடியல. நாங்கள்லாம் இன்னமும் ஐசை ஒரு மாடலாத்தான் பாக்குறோம். அதுக்குத்தான் அவங்க லாயக்கு!

சினிமாவுல நளினமா அழகா நடிக்க எத்தனையோ சிட்டு சிட்டா புள்ளைங்க இருக்கும்போது மணி இப்பிடி பண்ணுவது நியாயமா? இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மணி சார்?

???

Friday, June 18, 2010

கலைஞருக்கு ஹெல்ப் பண்ணுவோம் வாங்க!

நம்ம சரக்கு வேற முடியப் போகுது என்ன ஒரு பயலையும் காணோம், ம்ம்ம்... ஆஹா ஒரு அல்லக்கை (அல்லக்கை ரூல்ஸ் படி அவங்க பேர சொல்றதில்ல) நம்மல பாத்து வந்துட்டிருக்கே, படுவா இங்க எதுக்கு வர்ரான், இன்னைக்கு என்ன வில்லங்கத்துல மாட்டி விடப் போறானோ?

வாடா மண்டையா! என்னடா இந்நேரத்துல இந்தப் பக்கமா வந்திருக்க?

அல்லக்கை: உங்களப் பாக்கத்தாண்ணே வந்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி: என்னப் பாக்கவா? நீ சும்மா வரமாட்டியே, என்னன்னு சொல்லு?

அல்லக்கை: அண்ணே, மதுரைல வழக்கறிஞர்கள்லாம் ஏதோ உண்ணாவிரதம் இருக்காங்களாமே?

ப.ரா.: அது ஏதோ உண்ணாவிரதமில்லைடா தடியா, ஹைகோர்ட்டுல தமிழ்லதான் வாதாடனும்னு அவங்க போறாடுராங்க

அல்லக்கை: எங்க டெல்லி ஹைகோர்ட்டுலயா அண்ணே?

ப.ரா.: டேய் தீவட்டி, நம்ம சென்னை, மதுரை ஹைகோர்ட்டுலைடா

அல்லக்கை: ஏண்ணே இந்த கோர்ட்டுகள் தமிழ்நாட்டுலதானே இருக்கு, இவ்வளவுநாளும் தமிழ்ல வாதாடலையா? அப்போ படத்துல எல்லாம் தமிழ்ழதாண்ணே வாதாடுராங்க?

ப.ரா.: பாருங்க சார், கருவாட்டு மண்டையன் சினிமா பாத்து பாத்து எப்படி டெவலப் ஆயிருக்கான்னு, உன்ன மாதிரி நாட்டுல 6 கோடி பேரு இருக்காங்க என்ன செய்யறது? எல்லாரும் சினிமா பாத்துட்டு வீட்டுக்கு போனா உடனே குப்புறப் படுத்துக்காதீங்க, புத்தகங்கள் படிங்க, செய்திகள் பாருங்க, படிங்க, அப்படியே டெவலப் ஆகுங்க

அல்லக்கை: புல்லரிக்குதுண்ணே, நல்ல கருத்தா சொல்றீங்கண்ணே!

ப.ரா.: ங்கொக்கா மக்கா குசும்ப பாரு, கொள்ளிக்கட்டைய எடுத்து அப்படியே தேச்சு விட்ருவேன்!

அல்லக்கை: அதெல்லாம் சரிண்ணே, லாயர்கள்லாம் உண்ணாவிரதம் இருக்காங்களே அதுக்கு என்ன செய்யபோறீங்க?

ப.ரா.: எங்க வந்து என்ன கேள்வி கேட்குது பாரு? ஏண்டா மண்டையா, செய்யவேண்டியவனுங்க எல்லாரும் செம்மொழி மாநாடுலயும், அடுத்து என்ன பாராட்டு விழான்னும் பிசியா இருக்காங்க, எங்க கொண்டு போயி என்னைக் கோர்த்து விடற பாத்தியா?

அல்லக்கை: அதுக்கில்லண்ணே, ஏதோ நம்மால முடிஞ்சது ஏதாவது செய்யலாம்ணே!

ப.ரா.: அது மட்டும் நட்க்காது மவனே, எதையாவது பண்ணி என்னைச் சிக்கல்ல மாட்ட வெக்கனும் அதானே உன் ப்ளான், படுவா!

அல்லக்கை:இல்லண்ணே, தலைவரு வழக்கமா டெல்லிக்கு கடிதம் எழுதுவாரே, அத இப்போ ஏன் இன்னும் எழுதல? யோசிச்சீங்களா?

ப.ரா.:
கடிதம் எழுதறது அவரு இஷ்டம், அதப்ப்பத்தி நமக்கென்ன? சரி யோசிச்சு நீயே சொல்லு!

அல்லக்கை: தலைவரு செம்மொழி மாநாட்டு வேலைலயும், பாராட்டு விழாக்கள்லயும் ரொம்ப பிசியா இருக்காருண்ணே, அதான் இந்தத் தடவ கடிதம் எழுத முடியல போல,

ப.ரா.: கரண்டி வாயனுக்கு எப்படியெல்லாம் யோசனை போகுது பாரு, ம்ம்ம்.. அதுக்கு என்ன பண்ரது சொல்லு?

அல்லக்கை: தலிவரு எழுதுவது மாதிரியே நீங்க ஒரு கடிதம் எழுதுங்கண்ணே, அதை கொண்டு போயி தலைவருகிட்டே கொடுத்தோம்னா, சந்தோசப்படுவாரு, நமக்கும் ஏதாவது கெடைக்கும்!

ப.ரா.: (ம்ம்ம்.. நல்ல ஐடியாவாத்தான் இருக்கு, இவன் பேச்ச நம்பி இறங்கலாமா?) டேய் பேரிக்கா மண்டையா, வாழ்க்கையில மொத மொதலா ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்க, உன் பேச்சை நம்பி எழுதுறேன், ஏதாவது வில்லங்கம் வந்துச்சி, மவனே நீ சட்னிதாண்டி!

ஓக்கே ஸ்டார்ட்!

அனுப்புனர்:
மாண்புமிகு டாக்டர் தமிழனத்தலைவர் கலைஞர்
முதலைமைச்சர்
தலைமைச்செயலகம் (புதியது)
சென்னை,
தமிழ்நாடு

பெறுநர்:
மாண்புமிகு டாக்டர் மன்மோகன்சிங்
பிரதமர்,
டெல்லி

பொருள்: தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவது சம்பந்தமாக

பெருமதிப்பிற்குரிய அய்யா,
தமிழ்நாட்டில் சில வழக்குறைஞர்கள் சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்து உளவுத்துறை மூலமாக தாங்கள் அறிந்து இருப்பீர்கள். அதைத் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இதுவரை நான் எழுதிய எந்தக் கடித்ததிற்குமே நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் போதும், நான் இங்கே உள்ளவர்களை சமாளித்துக் கொள்வேன்.
மேலும் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் நேரத்தில் இவ்வாறு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே கடித்ததிற்கு பிறகும் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் நான் தந்தி அடிக்க வேண்டியிருக்கும் என தெரியப்படுத்தி கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு
மு.க

பி.கு: எனது மகளுக்கு கேபினட் அமைச்ச்ர் பதவி கொடுப்பது சம்பந்தமாக நான் உங்களைச் சந்திருக்க அடுத்த வாரம் டெல்லி வருகிறேன். மத்திய அமைச்சர் அழகிரி மதுரையிலிருந்தவாறே பணிகளைக்கவனிக்கவும், பாராளுமன்றத்திற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தனி அரசாணை வெளியிடுவதாக என்னிடம் வாக்கு அளித்திருந்தீர்கள். அது ஏன் தாமதம் ஆகின்றது? அதுபற்றியும் அப்போது விரிவாகப் பேசுவோம்.இலங்கைத்தமிழர் குடியேற்றம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இனிமேல் நீங்கள் இதுபோல் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தால் அது நல்லதல்ல. மறுபடியும் எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால் அன்னையிடம் இதுசம்பந்தாமாக புகார் செய்வேன், எச்சரிக்கை! நன்றி!

எப்பூடி, தலைவருக்கே கடிதம் எழுத ஹெல்ப் பண்ணீட்டம்ல? ஒருவழியா தமிழினத்தலைவருக்குத் தேவையான கடிதம் தயார், இனி அவர் டெல்லிக்கு அனுப்பவேண்டியதுதான் பாக்கி!

மேற்கண்ட கடிதத்திற்கு ஸ்டாம்ப் ஒட்ட பணம் தேவைப்படுவதால் கீழ்கண்ட அக்கவுண்ட்டிற்கு தங்களால் இயன்ற அளவு பணம் அனுப்பவும். தமிழுக்குத் தொண்டு செய்த பெரும்புகழும் பாக்கியமும் உங்களுக்கும் கிடைக்கும்.

A/c: 345621987

Tuesday, June 15, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

ஜெனிலியா இலங்கைத் திரைவிழாவுக்குப் போனாங்களா, இல்லையா? அவங்க படம் ரீலீஸ் ஆகுமா இல்லையா? யாராவது உண்மை என்னான்னுட் கரெக்டா சொல்லுங்க! ஒண்ணுமே புரியமாட்டெங்கிதுப்பா! ஆளுக்கொரு நியூஸா போட்டு கொழப்புறானுங்க!

கரெக்டா என்னான்னு பாத்து முடிவு பண்ணுங்கப்பா, ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா... ங்கொய்யாலே.....அப்புறம் நாங்க சும்மா இருக்கமாட்டோம்!





உன்பேரும் தெரியாது..உன் ஊரும் தெரியாது....அழகான பறவைக்கு பேர் வேண்டுமா?

பி.கு.: உருப்படியா (?) ஏதாவது போஸ்ட் பண்ணுங்கன்னு பசங்க நச்சரிக்கிரானுங்க, அதுக்குத்தானுங்ணா இப்பூடி!
ஏதோ நம்மால முடிஞ்சது ஒரு முக்கியமான பிரச்சனைய கெளப்பியாச்சு!
.
.

Saturday, June 12, 2010

பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி)




இந்த பிட்டு படம்னாலே எல்லாருக்கும் ஒரு இதுதான். நான் திருச்சில இருந்தப்ப தான் பிட்டுப்படம் பாக்கவே பழகுனேன். அமைதி அமைதி, அதுக்கு முன்னாடியெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா மூனு எக்ஸ் படம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்னு சொல்ல வர்ரேன். (பிட்டுப்படமா அப்படின்னான்னு கேக்கரவங்க தயவு செஞ்சு இத க்ளோஸ் பண்ணிட்டு வேற வேலை எதுனா இருந்தா போயிப்பாருங்க சார்). திருச்சிதான் இந்த மாதிரிப் படம் பாக்கரதுக்கு அலாதியான ஊரு. சும்மா சொல்லக்கூடாது, நல்லா ரசிச்சு ரசிச்சுப் பாப்பானுங்க. நம்ம ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் இருந்தானுங்க பிட்டுபடம் பாக்குரதுல எக்ஸ்பர்ட்ஸ். நாங்க எப்பவும் அவனுகளக் கூட்டிட்டுப் போய்த்தான் பிட்டுப்படம் பார்ப்போம்(பிட்டுபடம் பார்க்க எதுக்கு எக்ஸ்பர்ட்ஸ்னுல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது). எந்த தியேட்டர்ல எப்போ பிட்டு ஓட்டுவான்னு அவனுகளுக்குத்தான் கரெக்டாத்தெரியும், நாமபாட்டுக்குத் தெனாவெட்டா தனியா போனம்னா, ஏமாந்துதான் வரனும். தியேட்ட்ர்காரனுங்களே நம்ம பசங்களப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவனுங்க தங்கி இருந்த ரூமுக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டுவானுங்க, நம்ம பசங்க மகிம அப்படி!

திருச்சிலயே பெரிய தியேட்டர் கம்ப்ளெக்ஸ், மாரிஸ் தான் (சென்னைல தேவி கம்ப்ளக்ஸ், கோவைல KG காம்ப்ளக்ஸ் மாதிரின்னு வைங்களேன்), ஆனா பாருங்க சிட்டிலயே பெஸ்ட் பிட்டு ஓடுரது அங்கேதான். மத்த ஊருல இப்படி நெனச்சுபாக்க முடியுமா? (இப்போ மாரிஸ் கம்ப்ளக்ஸ்ல வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு நெனக்கிறேன், அதுனால மூடி வெச்சிருக்காங்க போல, பாவம் திருச்சிக்காரங்கே) 2000 ஆவது வருசம், ஒரு பிட்டு படம் வந்துச்சு மலையாள படம், தமிழ் டப்பிங் (பிட்டுனாலே அப்படித்தான் அத வேற தனியா சொல்லனுமாங்கரீங்களா?) அப்போ எங்களுக்கு எக்ஸாம் டைம்., ஸ்டடி ஹாலிடேய்ஸ், படிச்சுக்கிட்டு (?) இருக்கோம், ஏதேச்சையா தினத்தந்தி (நம்ம படங்கள்லாம் எங்க ஓடுதுன்னு தினத்தந்திதான் புல்லா கவர் பண்ணுவான்) பாக்குறேன், அந்தப்படம் மாரிஸ் தியேட்டர்ல வெற்றீகரமான (!) 30ம் நாள்னு போட்ருக்கான். நான் உடனே மாப்ள என்னடா ஒரு பிட்டுப் படம் திருச்சில அதுவும் மாரிஸ்ல 30 நாள் ஓடுது அப்படின்னா, இங்க அப்படித்தான்டாங்கரான். சரி, 30நாள் ஓடுதுன்னா நிச்சயம் சூப்பர் படமாத்தான் இருக்கனும் எக்ஸாம் முடிஞ்சதும் பாத்துடனும்னு அப்பவே முடிவு பன்ணிட்டோம், எக்ஸாம் முடியர வரைக்கும் படத்த தூக்காம இருக்கனுமே கவலை வேற! தியரி முடிஞ்சு பிராக்டிகள்ஸ் நடந்துக்கிட்டு இருக்கு, படம், 95வது நாள்னு போட்ருக்கான், எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி, அப்போ அரியர்ஸ் எழுத வந்த சீனியர்கிட்ட (கோர்ஸ் முடிச்சிட்டு போனவர்) இப்படி ஒரு படம் திருச்சில நூறு நாள் ஓடப்போகுதுங்கன்னு சொல்லி வாய் மூடலை, அவர் கேட்டார், என்னது அந்தப் படத்த மறுபடியும் போட்டுட்டானா?
நாங்கள்லாம் சுயநினைவுக்கு வரவே கொஞ்சம் நேரமாயிடுச்சு. ங்கொக்கா மக்கா இந்த திருச்சிக்காரங்கே இருக்காங்களே! ஒரு பிட்டுப்படம் 100 நாளைக்கு மேல ஓடுனது திருச்சிலதான்னு நெனக்கிறேன். கடைசில அந்தப்படம் 130நாள் வரைக்கும் மாரிஸ் தியேட்டர்ல ஓடுச்சுங்கோ (படத்த அப்புறம் எல்லாரும் போயி பாத்தாச்சுன்னு வைங்களேன்!)

அப்புறம் இன்னொரு படம், வாழ்க்கையில திருச்சியவும் மறக்க முடியாது, அந்தப்படத்தையும் மறக்கமாட்டேன். அப்படி என்ன படம்னு கேக்கரீங்களா? படம்பேரு 'சிராக்கோ' இப்போ புரிஞ்சிருக்குமே? ஹலோ புரியாதமாதிரி நடிக்காம மேல படிங்க. காவேரி தியேட்டர்லதான் இந்தப்படத்த போட்டாங்க்ய. அப்பவே என் ரூம்மேட் (பழம்தின்னு கொட்டை (?) போட்டவரு!) சொன்னாரு, உடனே போய் சிராக்கோ பாத்துடுங்கன்னு. நாங்க கொஞ்சம் பிஸியா இருந்துட்டோம், பாக்கமுடியல, படத்த ரெண்டு வாரத்துல தூக்கிட்டங்க, எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம், திருச்சில எப்படி இப்படின்னு?
அப்புறம் அந்த படத்த அதே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணான் பாருங்க, 'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க, மீண்டும் திருச்சியில் சிராக்கோ'ன்னு போஸ்டர் ஒட்டி! பயபுள்ளைக எல்லாரும் அசந்துட்டானுங்க! சூப்பர் ஊரு சார் திருச்சி, இப்படி விஷயங்கள் நெறைய இருக்கு.திருச்சில வீடு வெச்சிருக்கவங்க கொடுத்து வெச்சவனுங்க, ஹும்...! பாத்துக்கிட்டே இருக்கலாம். திருச்சில தற்காலிகமா தங்கி இருக்கவங்க மிஸ் பண்ணாம எல்லாத்தையும் எஞ்சாய் பண்ணுங்க

(திருச்சி மன்னார்புரம் வெங்கடேஸ்வரா தியேட்டர் பத்தி தனிபதிவே போடலாம் என்பதால் இங்கே அதைப்பற்றி எழுதலையாக்கும்.அதனால் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம் .ஹி..ஹி)
சேலத்தைப் பத்தியும் இந்த மாதிரி கேள்விப்பட்டு இருக்கேன், சேலத்துக்காரங்கே என்ன சொராய்ங்கன்னு பாப்போம்!

அந்த 130 நாள் ஓடுன படம் என்னன்னு யாராவது கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Wednesday, June 9, 2010

என்னைப் பார்! சிரி!








என்னைப் பார்! சிரி!



(ஓண்ணுமில்லீங்கோ, நம்ம பதிவுக்கு கண்ணு பட்டுருச்சு! தக்காளி, நேத்து கேப்டன் படத்த போட்டதுல இருந்து நிக்காம போயிக்கிட்டு இருக்கு!)

Tuesday, June 8, 2010

எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா?

????



கீழ இருந்து மேல தாவுறது, மேலே இருந்து கீழ குதிக்கறது, பறந்துக்கிட்டே அடிக்கறது எல்லாத்தையும் பாத்தாச்சு. இது என்ன டெக்னிக்குன்னு யாரவது கொஞ்சம் சொல்லுங்களேன்!




!!!

Sunday, June 6, 2010

பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை)




தமிழ்ப் பதிவர்கள் வட்டத்துல சில நாட்களா நடந்து வரும் சம்பவங்கள் மூலமா நாட்டாமைகளுக்கு ஏகப்பட்ட கிராக்கியாப் போச்சுங்க, இன்னும் நெறைய பேரு நாட்டாம ஆக ரெடியா இருக்காங்க, ஆனா சொம்பு, ஜமுக்காளம் கெடக்காம நாட்டாமை ஆக முடியாமத் தவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டு உடனே செயல்ல இறங்கிட்டோம். நாங்களே ஒரு லாரிய எடுத்துக்கிட்டு ஈரோடு, பொள்ளாச்சி பக்கமா போயி, நாட்டாமை ஜமுக்காளம், சொம்பு, கம்பு, நாட்டாமை சட்டை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம். நாட்டாமையாக விரும்புரவங்க, இதப் பயன்படுத்திக்கிட்டு உடனே நாட்டாமையாயிடலாம்.எங்கள் சொம்பை பயன்படுத்துரவங்க ஒரே நாள்ல நாட்டாமையா ஆகுவது உறுதி! அப்படியும் நாட்டாமையா ஆக முடியாதவங்க கருத்துச் செல்வி குஷ்பு அளிக்கும் பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சி எடுத்து முயற்சிக்கலாம், முன்பதிவுக்கு
அணுக வேன்டிய முகவரி,

பட்டாபட்டி,
மா. செ. (தென்சென்னை)
கு.மு.க
டோல் ப்ரீ நம்பர்: 1800-ங்கொய்யா

அதிகமான டிமாண்டு இருப்பதால் உங்கள் பொருள்களுக்கு முந்துங்கள். முன்பதிவு பன்ணிட்டீங்கன்னா ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.


ஜமுக்காளம்



ஜமுக்காளம்



சொம்பு


நாட்டாமை சட்டை (KS ரவிகுமார் கம்பேனியில் விஷேசமாக ஆர்டர் கொடுத்து வாங்கி வரப்பட்டது)


ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நீங்கள் வாங்கும் எல்லாப் பொருள்களிலும் 'பன்னி' மார்க் தர முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்!

எச்சரிக்கை!: எங்ககிட்ட பொருள்களை வாங்கிட்டுப் போயி பிளாக்குல விற்க கண்டிப்பாக அனுமதி இல்லை, மீறி விற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.



பின்குறிப்பு: எங்களிடம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

Tuesday, June 1, 2010

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!



தமிழ் சினிமாவுல எத்தனையோ நடிகைங்க வந்து போறாங்க, சிலபேருதான் 3- 4 வருசமாவது தாக்குபிடிக்கிறாங்க. அதுலயும் சிலபேருதான் டாப்புக்கு வர்ராங்க. அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), வெவ்வேறு காலகட்டங்கள்ல டாப்ல இருந்தாங்க. நெறையப்பேரு டாப்புக்கே வரலன்னாக்கூட சொல்லிக்கிறபடியா நிறையப் படங்கள் நடிச்சாங்க. ஆன்ன நம்ம தமிழ் சினிமா வரலாறப் பார்த்தா (வரலாறு முக்கியம் அமைச்சரே!) சில நடிகைகளக் காரணமே இல்லாம நம்மாளுங்க புறக்கணிச்சிருக்கானுங்க. அப்புடி ஒரு லிஸ்ட்டுதான் இது.




இது அனிதா, சாமுராய் படத்துல விக்ரமோட ஜோடியா நடிச்சா. படத்துல ரொம்ப அழகா இருப்பா, அதுலயும் 'ஆகாயச்சூரியனை ஒற்றைச் சடையில் ஏந்தியவள்...'பாட்டுல அனிதாவ நாள்முழுக்கப் பாத்துக்கிட்டே இருக்கலாம். கொள்ளை அழகு. ஏனோ தெரியல, நம்ம காட்டானுங்களுக்கு அனிதாவோட அருமை தெரியாமப் போச்சு.



இது சாக்க்ஷி, இவளப் பத்தி நெறையப் பேருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு நெனக்கிறேன். இவளோட உடல்வாகு இருக்கே அதுக்கே கோடி கோடியா குடுக்கலாம் அவ்வளவு அற்புதமான உடலமைப்பு! ஆனா பாவம் புள்ளைக்கு நடிப்பே சுத்தமா வரல, பேரழகிங்கறதால மன்னிச்சு விட்ருக்கலாம். பாருங்க நம்ம பேரிக்கா தலையனுங்க இவளையும் ஓரங்கட்டிடானுங்க



இந்தப்புள்ள பேரு கீர்த்தி ரெட்டி, கொஞ்சம் பழைய ஆளுங்களுக்கு இவளோட கீர்த்தி பத்தி தெரிஞ்சிருக்கும். சும்மா சொல்லக்கூடாது, பேரழகின்னா அது இவதான். இவளோட முகவாக்கு இருக்கே அதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுங்க. இன்னிக்கி நம்ம லிஸ்ட்ல உள்ள பிகருங்கள்ல டாப்னா அது இவதான். நடிப்பையும் குறை சொல்ல முடியாது. உடல் அழகிலும் இவ பெரிய பேரழகி. நந்தினின்னு ஒரு படம் வந்துச்சு, அதுல ஸ்விம்சூட்ல வந்து கலக்கியிருப்பா, அப்புறம் பிரபுதேவாகூட ஒரு படம் வந்துச்சு நினைவிருக்கு வரைன்னு, நல்லாத்தான் இருந்தா. அல்டிமேட் பிகர்னா அது இவதான். கோணித்தலையனுங்க இவளையும் கண்டுக்காது விட்டுட்டானுங்கன்னா பாருங்களேன். தமிழ் சினிமா சரித்திரத்துல நமக்கெல்லாம் பேரிழப்புன்னா அது இதுதான்!



இது ஹீரா, எல்லாருக்கும் தெரிஞ்ச பிகரு. இதயம் படத்துல இவ சேலைகட்டி நடந்து வர்ர நளினத்த பாத்து இப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாளான்னு ஏங்காத ஆளே தமிழ்நாட்ல இருக்க முடியாது. சின்னப் பசங்கள்லாம் உடனே இதயம் படத்த DVDல பாருங்க இல்ல பெரிசுகள்ட்ட கேட்டுப் பாருங்க. தமிழ் நடிகைகளப் பொறுத்த வரைக்கும் கிளாஸ் பிகர் அப்படின்னா அது இவதான். இவ கணிசமான படங்கள்ல நடிச்சா, ரொம்பக் கவர்ச்சியாக் கூட நடிச்சா, ஆனா இதயம் படமே இதயத்துல நிக்கிரதாலே மத்தத எல்லாம் திரும்பிக்கூட பாக்க முடியல. இதயம் மாதிரி திரும்ப ஒரு படத்துல கூட இவள நம்ம டாஸ்மாக் வாயனுங்க யாருமே காட்டல, அதனால இவளையும் இந்த லிஸ்ட்டுக்கு கொண்டுவந்துட்டேன். நம்ம தறுதல அயோக்கியன் இவளையும் கொஞ்ச சீரழிச்சான். அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு?



இவ கஸ்தூரி, சொல்லவே வேண்டியதில்ல, இவள எதுக்கு இந்த லிஸ்ட்ல போட்ருக்கேன்னு சில பேருக்கு டவுட் வரலாம், என்னப் பொறுத்த வரைக்கும், கஸ்தூரியோட முழுப் பரிமாணத்தையும் யாருமே சரியாக் காட்டல, உங்களுக்குத் தெரியுமா, கஸ்தூரி மிஸ்.மெட்ராஸ் பட்டம் வாங்கின ஒரு புரபசனல் மாடல்னு? இவளோட உடல்வாகு இவளுக்குக் கெடச்ச ஒரு வரப்பிரசாதம். இத்தன வருஷத்துலயும் ஒரு இஞ்ச் சேஞ்ச் கூடத் தெரியல. இவளும் கேடுகெட்ட படத்துலயெல்லாம் நடிச்சிருக்கா (மிஸ்.மெட்ராஸ்னே ஒரு படம், பிட்டுப்படம் ரேஞ்சுக்கு வந்துச்சு, தெலுங்குல எடுத்தது, தமிழ்ல டப்பிங் பண்ணி, ரிலீஸ் பண்ணாங்க, அதுவும், பறங்கிமலை ஜோதி, ஓடியன் மணி மாதிரி தியேட்டர்கள்ல), இவளையும் தமிழ் சினிமா முழுமையா பயன்படுத்திக்கல, இன்னும் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாத்தான் இருக்கா, ஆனா பன்னாடைங்க விடமாட்டேங்கிரானுங்க.இப்போ நூற்றுக்கு நூறுன்னு ஒரு படத்துல நடிக்கிறான்னு கேள்விப்பட்டேன்! நம்ம பறக்கும்படைகிட்ட சொல்லி இப்போ இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கண்டுபிடிக்க சொல்லனும்!


டைப் பண்றதாவது ஈஸியா இருக்கும் போல, இந்தப் புள்ளைங்களுக்கு டீசன்ட்டா ஆளுக்கொரு படம் தேடி எடுக்குறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சுப்பா! அதுலயும் ஹீராவுக்கும், கஸ்தூரிக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!(படங்க நல்லா இல்லைன்னா மெயில்ல அனுப்புறேன், எல்லாம் விவகாரமா இருக்கு!)

இப்போதைக்கு இவ்வளவு போதும், என்ன உங்க கைவசம் ஏதாவது லிஸ்ட் இருக்கா? போட்டுத் தாளிச்சு உடுங்க!

நாமளும் பிரபல(!) ப்திவராயிட்டோம், கொஞ்சம் முன்மாதிரியா(?) ஏதாவது எழுதுவோமேன்னு தான் இப்பிடி...ஹிஹி..



(மேலே உள்ள இலியானா படம் சும்மா ஒரு இதுக்கு...!)