Saturday, June 26, 2010

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?

செம்மொழி மாநாட்டுல வேற நல்ல விஷயம் எதுவும் நடந்திருக்கோ இல்லையோ, வெளிநாட்டு தமிழறிஞர்கள் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (டீவியிலதான்). அதில் அஸ்கோ பர்ப்போலா என்னும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. சிந்துச் சமவெளி மக்களின் எழுத்துக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வந்தது. அதனால், அவர்களது மொழி, வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் சரியாக விளக்கப்படாமல் இருந்தது. ஒரு சாரார், சிந்துச் சமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்று சில ஆதாரங்களைக் காட்டினர். வேறு சிலர் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், திராவிடத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ஆர்யர், திராவிடர் என்று இரு இனங்கள் கிடையாது, எல்லாமே ஒரே இனம்தான் என்று வாதாடுகிறார்கள். அவர்கள் கருத்துப்படி, ஆர்யர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை என்பதே (இப்போது புரிந்திருக்குமே இதன் விசமத்தனம்?).

இந்நிலையில் பின்லாந்துப் பேராசிரியர் பர்ப்போலா, செம்மொழி மாநாட்டில் சிந்துச் சமவெளியில் இருந்தது தமிழர்களே என்றும், அவர்கள் பேசியே மொழி தமிழே என்றும் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இவை உண்மையிலேயே சரியான ஆதாரங்களாக இருக்கும் பட்சத்தில் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும். பேராசிரியர் பர்ப்போலா என்ன கூறியிருக்கின்றார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள்வதற்கு முன்பே எதிர் வாதம் தொடங்கிவிட்டது. ரிடிஃப் (Rediff) இணையதளத்தில் அதற்குள்ளாகவே டாக்டர் எஸ். கல்யாணராமன் என்பவரிடம் இருந்து பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள். அவரும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விசம் கக்கி இருக்கிறார். ரிடிஃப், இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் யாரையும் பேட்டி எடுத்து வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. (ரிடிஃபை தொடர்ந்து படித்தவர்கள், அவர்களின் தென்னிந்தியர்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்தை நன்கு அறிந்திருப்பார்கள்).

இவர்களை விட்டுத்தள்ளுவோம், என்றைக்குமே திருந்தப் போவதில்லை!. என்னுடைய ஆதங்கமெல்லாம், பேராசிரியர் பர்ப்போலாவின் விளக்கங்கள், செம்மொழி மாநாட்டின் ஆரவாரங்களிலும் பாராட்டுரைகளிலும் மறக்கப்பட்டு விடக்கூடாது என்பதே! இதைவைத்துக் கொண்டு மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முடிந்தவர்கள் தயவு செய்து உடனே செய்யுங்கள்.

1. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்படவேண்டும். அங்கே தொல்லியல் ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, மற்றும் மொழியியல் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக சோதனைச் சாலைகளும் ஆராய்ச்சியாளர்களும் வேண்டும். மரபணு பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கும் வதிகள் ஏற்படுத்தவேண்டும்.

2. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள்கள் அனைத்தும் மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். கார்பன் டேட்டிங் எனப்படும் காலத்தைக் கணக்கிடும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தி எந்தக் காலத்தை சேர்ந்தவை என்று அனைத்து வரலாற்றுச் சம்பவங்களும் தெளிவு காணவேண்டும். கார்பன் டேட்டிங் முறையில் கணக்கிடப்படும் கால அளவு துல்லியமாது. வள்ளுவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதற்கே இன்னும் நம்மிடம் குழப்பங்கள் நிலவுகின்றன.

3. கன்யாகுமரிக்குத் தெற்கே கடலின் அடியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யப் படவேண்டும். லெமூரியாக் கண்டம் என்று ஒன்று இருந்ததாகவும் அங்கே தமிழர்கள் வாழ்ந்து வந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. முதல் மூன்று தமிழ்ச்சங்கள் அங்குதான் நடந்தன என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இதுகுறைத்து முறையான அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகள் எதுவும் நடந்தாகத்தெரியவில்லை.

4. தமிழ்நாட்டின் மற்ற கடற்கரையோரங்களிலும் கடலிலும் அகழ்வாராய்ச்சி தேவை. பூம்புகார், கடல்கோளினால் அழிந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கடல்கோள் என்றால் சுனாமியாக இருக்கலாம் என்று நாம் சமீபத்தில்தான் புரிந்து கொண்டோம் (லெமூரியாக் கண்டமும் அதுபோன்ற ஒரு நிகழ்வினால் தான் அழிந்திருக்கவேண்டும்). அதனால், இதுபோன்ற வேறுநிகழ்வுகளினால் பண்டைய தமிழக நகரங்கள் எதுவும் மூழ்கியுள்ளனவா என்று ஆராய வேண்டும்.

5. சிந்துச் சமவெளி நாகரிக, மக்கள், மொழி, வழிபாட்டுமுறைகள் குறித்து மறு ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.

6. ஆப்பிரிக்கப் பழங்குடி மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுடைய மரபணு, தமிழகத்தைச் சேர்ந்தவருடைய மரபணுவுடன் அப்படியே ஒத்துப் போவதாக சிலவருடங்கள் முன்பு ஆய்வுகள் வெளியாகின (இது குறித்து ஆனந்தவிகடனில் கூட கட்டுரை வெளியாகி இருந்தது). இது தமிழர்கள் மிகப் பழமையான இனத்தை சேர்ந்தவர்கள் என்பதையே சொல்கிறது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்த ஆராய்ச்சிகள் நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும், நடுநிலையோடு இருப்பதும் மிக அவசியம். ஆராய்ச்சி முடிவுகள் எப்படி இருந்தாலும் அவை சர்வதேச அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட வேண்டும். ஒருவேளை இதுபோன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவயப்படுதலை கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொண்டு அறிவுப்பூர்வமாய் சிந்தித்து இயங்குவோம். அறிவியல் உண்மைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். வெறும் பேச்சுக்களைக் குறைத்து செயலில் இறங்குவோம். செம்மொழி மாநாடு அதற்காவது ஒரு சிறு பொறியாக அமையட்டும்!

86 comments:

பட்டாபட்டி.. said...

தக்காளி..நாந்தான் பஸ்ட்டா?.. இரு படிச்சுட்டு வரேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க தல, ரொம்பக் கஷ்டப்பட்டு கோபத்தைக் குறைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்!

பட்டாபட்டி.. said...

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவயப்படுதலை கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொண்டு அறிவுப்பூர்வமாய் சிந்தித்து இயங்குவோம். அறிவியல் உண்மைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். வெறும் பேச்சுக்களைக் குறைத்து செயலில் இறங்குவோம். செம்மொழி மாநாடு அதற்காவது ஒரு சிறு பொறியாக அமையட்டும்!
//

வழக்கமான நடைய விட்டு.. அழகாக எழுதியிருக்கிறீர்கள் மிஸ்டர் ராமசாமி...

நீங்கள் சொன்ன ஆலோசனைகள் நன்றாக இருக்கின்றன்..அரசியல்வாதிகள் அதை நடைமுறைபடுத்துவதற்க்குள்..நீங்கள் உங்கள் பேரனுக்கு பென்சில வாங்க..ஏதாவது பொட்டி கடையில் க்யூவில் நின்று கொண்டு இருப்பீர்கள்..

( அடுத்த வரும் கமென்ஸ் ..கண்டிப்பா படி...)

பட்டாபட்டி.. said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க தல, ரொம்பக் கஷ்டப்பட்டு கோபத்தைக் குறைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்!
//

சொல்ல வந்தது அழகு..ஆனா..இந்த பன்னாடைகள் அதுல காசு வருவதாக் இருந்தால் மட்டுமே பண்ணுவார்கள்..( தமிழ்..தமிழ்..எங்கும் தமிழ்..எதிலும் தமிழ்...)

சே..கொத்து கொத்து கொன்னப்ப.ஒன்பது ஓட்டையும் அடச்சுக்கிட்டு..டெல்லி தாயாரம்மா கால்ல விழந்து கிடந்த இவனுக...(?).. தமிழுக்கு பண்ணுனானுக.. போங்க சார்...

வேணா தமிழரசிக்கு பன்ணுவானுக...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திராவிடக் கட்சிகளை நம்பி எந்தப் பிரயோசனும் இல்லை, அங்கே திராவிடன் என்ற ஒரு இன்மே இல்லை என்று நிருபிக்க கிளம்பிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கே இந்த அயோக்கியர்கள் பணத்தை வாரி வாரி அள்ளிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களை சரித்திரம் மன்னிக்காது! எப்படியாவது அப்துல் கலாம் போன்ற யாரவது ஒரிருவர் வரமாட்டார்களா என்ற நப்பாசைதான் தல!

பட்டாபட்டி.. said...

இந்த ஆராய்ச்சிகள் நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும், நடுநிலையோடு இருப்பதும் மிக அவசியம்.
//

நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அழிச்சாச்சு...

அடுத்து நடுநிலைமை?..ஆமா ..இந்த முதுகெலும்ப்பு முன்னாடி தொங்கும் பயலுகளுக்கா?..

(யோவ்..பிடிக்கலேனா டெலிட் பண்ணிக்க...)

பட்டாபட்டி.. said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

திராவிடக் கட்சிகளை நம்பி எந்தப் பிரயோசனும் இல்லை, அங்கே திராவிடன் என்ற ஒரு இன்மே இல்லை என்று நிருபிக்க கிளம்பிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கே இந்த அயோக்கியர்கள் பணத்தை வாரி வாரி அள்ளிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களை சரித்திரம் மன்னிக்காது! எப்படியாவது அப்துல் கலாம் போன்ற யாரவது ஒரிருவர் வரமாட்டார்களா என்ற நப்பாசைதான் தல!

//

காந்தி ஹீரோவா?... இல்ல நாதுராம் கோட்ஸே ஹீரோவா?...

இதுல உனக்கு பிடிச்ச ஹீரோ யாருனு சொல்லு...

என்ன நடக்குமுனு நான் சொல்றேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பண்றது? நமக்கு வாய்ச்ச அரசியல்வாதிங்க அப்பிடி! ஆனா உண்மையான வளர்ச்சி இந்தத்திசைல தான் போகனும்! சும்மா மாநாடு நடத்தியோ, மானாட மயிலாட நடத்தியோ இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தல இப்பிடி குண்டக்க மண்டக்க கேட்டு வெச்சிட்ட? எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காதே!

பட்டாபட்டி.. said...

என்ன தல இப்பிடி குண்டக்க மண்டக்க கேட்டு வெச்சிட்ட? எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காதே!
//

ஓ.. நீரு பன்னி என்பதை மறந்துவிட்டேன்..

போய் தாவது ஜுஜிபீ..மேட்டரை எழுது..

அஹோரி said...

மாநாட்டு குஸ்காவுல உப்பு அதிகமா இருக்கு ரொம்ப பேர் கவலைப்பட்டு கிட்டு இருக்குறப்ப நீங்க மட்டும் ஏன் காமெடி மூடுல இருக்கீங்க ? இத நடத்துவரனுங்க என்னைக்கும் தமிழ பத்தி கவலை பட்டதில்ல. அவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு.

அஹோரி said...

மாநாட்டு குஸ்காவுல உப்பு அதிகமா இருக்கு ரொம்ப பேர் கவலைப்பட்டு கிட்டு இருக்குறப்ப நீங்க மட்டும் ஏன் காமெடி மூடுல இருக்கீங்க ? இத நடத்துவரனுங்க என்னைக்கும் தமிழ பத்தி கவலை பட்டதில்ல. அவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
என்ன தல இப்பிடி குண்டக்க மண்டக்க கேட்டு வெச்சிட்ட? எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காதே!
//

ஓ.. நீரு பன்னி என்பதை மறந்துவிட்டேன்..

போய் தாவது ஜுஜிபீ..மேட்டரை எழுது..///

பட்டா என்னையா வம்புல மாட்டிவிடலாம்னு ப்ளான் பண்ணுற? யாருகிட்ட?

மார்கண்டேயன் said...

ஐயன்மீர், உங்களுக்கு (பட்டாபட்டி மற்றும் ராமசாமி என்ற பதிவர்களுக்கு) உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் பின் வரும் இணையதளத்தில், http://www.varalaaru.com/ சென்று அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க அஹோரி அவனவன் குஸ்காவே கெடக்கலன்னு கவலப் பட்டுக்கிட்டு இருக்கான்,இதுல நீங்க வேற? (அது எப்புடிங்க உள்ள எடம்புடிச்சீங்க?)

யூர்கன் க்ருகியர் said...

நண்பா ராம்சாமி,,

கருத்து செறிவுள்ள கட்டுரை.
மேலும் பல கட்டுரைகள் இது போல் வர என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மார்கண்டேயன் said...
ஐயன்மீர், உங்களுக்கு (பட்டாபட்டி மற்றும் ராமசாமி என்ற பதிவர்களுக்கு) உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் பின் வரும் இணையதளத்தில், http://www.varalaaru.com/ சென்று அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்//

நம்மலக் கொண்டுபோயி எதுலேயாவது கோர்த்துவிடனும்னே ப்ளான் பண்றாங்கப்பா (மார்க்கண்டேயன் அந்த வெப்சைட் நல்லாத்தான் இருக்கு, மேலும் படித்துவிட்டு என்னன்னு பார்ப்போம், நன்றி)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யூர்கன் க்ருகியர் said... 16
நண்பா ராம்சாமி,,

கருத்து செறிவுள்ள கட்டுரை.
மேலும் பல கட்டுரைகள் இது போல் வர என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்//

நன்றி யூர்கன், ஏதோ நம்மால முடிந்தது ஒரு புல்லைக் கிள்ளிப் போட்டாலும் சரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!

Phantom Mohan said...

ரொம்ப பெருசா போட்டிருக்க படிச்சிட்டு வர்றேன்!

Phantom Mohan said...

இதைவைத்துக் கொண்டு மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முடிந்தவர்கள் தயவு செய்து உடனே செய்யுங்கள்.
///////////////////////////////

இது வரைக்கும் தான் படிச்சேன், இப்பிடி எல்லோரும் ஐடியா மட்டும் கொடுத்தால், நாடு எப்படி முன்னேறும்? இல்ல எவன் திருந்துவான், இதெல்லாம் இந்தக்கால நடைமுறையில் சாத்தியமில்லை.

Jey said...

அடப்பாவிங்களா சொல்லாம கொல்லாம இங்க வந்து கும்மியடிச்சிட்டு இருக்கீக. நான் தான் லேட்டா? அவ்வ்வ்வ்வ்

Phantom Mohan said...

அடப்பாவி நான் கூட எதோ அரசியல்ல்ன்னு நெனச்ஹ்சு போன கம்மென்ட் போட்டேன், நீ சொல்ல வந்த விஷயம், நல்ல விஷயம் தான்! தாங்கள் சொல்வதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஆளுங்கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பான். எங்க அவன் பேர் வாங்கிடுவானொன்னு பயந்தே ரெண்டு பெரும் மாறி மாறி எதிர்ப்பானுங்க! கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இரண்டு பேரின் பெயர் பொறித்த கல்வெட்டே சாட்சி!

Jey said...

பன்னி, பதிவு சீரியசா இருக்கு, இரு பொறுமையா படிச்சிடு வர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!///

நல்லதையே நினைப்போம் ரமேஷ், வாய்ப்புக் கிடைக்கும் தருணத்தில் நாம் தயாராக இல்லையென்றால் என்னாவது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
அடப்பாவி நான் கூட எதோ அரசியல்ல்ன்னு நெனச்ஹ்சு போன கம்மென்ட் போட்டேன், நீ சொல்ல வந்த விஷயம், நல்ல விஷயம் தான்! தாங்கள் சொல்வதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஆளுங்கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பான். எங்க அவன் பேர் வாங்கிடுவானொன்னு பயந்தே ரெண்டு பெரும் மாறி மாறி எதிர்ப்பானுங்க! கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இரண்டு பேரின் பெயர் பொறித்த கல்வெட்டே சாட்சி!///

மாற்றம் ஒன்றே மாறாதது, இதுவும் மாறும், அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வோம்!

Jey said...

பன்னி பின்னிட்டே, ஊதுர சங்கை ஊதியிருக்கே, பார்ப்போம் கேக்கவேண்டியவங்களுக்கு கேக்குதானு

Jey said...

துரோகத்துல பெரிய துரோகம், வரலாறை நேர்மையா பதிவு செய்யாம, அவங்கவங்க இஷ்டத்துக்கு பதிவு செய்ரதுதான் தல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரிதான் ஜெய், அறிவியல், தொழிநுட்பத்தின் உதவியுடன், வரலாறு, மொழியியல் போன்றவை சரியாக நடுநிலையுடன் பதிவு செய்யப்பட வேண்டும்!

கும்மி said...

மிகச் சிறந்த பதிவு ராம்சாமி. வாழ்த்துகள்.

(ரீடிஃப் தளத்தில் செய்திகளையோ செய்தி விமர்சனங்களையோ, அவர்களது துவேஷம் காரணமாக தற்பொழுதெல்லாம் படிப்பதில்லை.)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
மிகச் சிறந்த பதிவு ராம்சாமி. வாழ்த்துகள்.//

நன்றி கும்மி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
(ரீடிஃப் தளத்தில் செய்திகளையோ செய்தி விமர்சனங்களையோ, அவர்களது துவேஷம் காரணமாக தற்பொழுதெல்லாம் படிப்பதில்லை.)///

நானும் முன்பு படித்து கமென்ட்டுகள் போட்டதும் உண்டு, இப்போது அதிகம் செல்வதில்லை!

பட்டாபட்டி.. said...

பட்டா என்னையா வம்புல மாட்டிவிடலாம்னு ப்ளான் பண்ணுற? யாருகிட்ட?
//

சே..எல்லாப் பயலும் விவரமாயிட்டானுக...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
பட்டா என்னையா வம்புல மாட்டிவிடலாம்னு ப்ளான் பண்ணுற? யாருகிட்ட?
//

சே..எல்லாப் பயலும் விவரமாயிட்டானுக...//

கிரேட் எஸ்கேப்

ILLUMINATI said...

// இவர்களை விட்டுத்தள்ளுவோம், என்றைக்குமே திருந்தப் போவதில்லை!. என்னுடைய ஆதங்கமெல்லாம், பேராசிரியர் பர்ப்போலாவின் விளக்கங்கள், செம்மொழி மாநாட்டின் ஆரவாரங்களிலும் பாராட்டுரைகளிலும் மறக்கப்பட்டு விடக்கூடாது என்பதே!//

அப்பு,தவளைகளின் சத்தத்தில் மறையும் மழைச் சத்தம் போல தான் இதுவும்.

அப்புறம் நீரு சொன்ன carbon dating பத்தி,அதெல்லாம் நடக்கும்,எப்ப தெரியுமா? தமிழ் மேல உண்மையிலேயே பற்று உள்ள ஒருத்தன் ஆளும்போது.இப்ப இருக்குறவனுங்க எல்லாம் மொழிய வச்சு கல்லா கற்றதுலையே குறியா இருக்கானுங்க.பின்ன எப்படி விளங்கும்?

அப்புறம்,கடல்கோள் பத்தி,அது சுனாமியா இருக்கலாம்,இல்லை,artic,antartic கண்டங்களில் பனிப்பாறைகள் உருகியதால் கூட இருக்கலாம்.ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த மாதிரி அப்பப்போ பனி உருகி,சில இடங்கள் அமிழ்ந்து,பூமியின் நிலப்பரப்பே மாறிப்போகும்.அதனால இருக்கலாம்.

அப்புறம்,நீரு இதை மாதிரி எழுதும் ஓய்.சும்மா கும்மி மட்டுமே அடிக்க வேண்டாம்.நல்லாத் தான எழுதுரீறு?அப்புறம் என்ன?

ILLUMINATI said...

//எங்க அவன் பேர் வாங்கிடுவானொன்னு பயந்தே ரெண்டு பெரும் மாறி மாறி எதிர்ப்பானுங்க! கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இரண்டு பேரின் பெயர் பொறித்த கல்வெட்டே சாட்சி! //

சத்தியமான உண்மை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி இலுமி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
அப்புறம்,கடல்கோள் பத்தி,அது சுனாமியா இருக்கலாம்,இல்லை,artic,antartic கண்டங்களில் பனிப்பாறைகள் உருகியதால் கூட இருக்கலாம்.ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த மாதிரி அப்பப்போ பனி உருகி,சில இடங்கள் அமிழ்ந்து,பூமியின் நிலப்பரப்பே மாறிப்போகும்.அதனால இருக்கலாம்.///

பூம்புகார் அழிந்ததற்கு சுனாமி காரணமாக இருக்கலாம், ஆனால் லெமூரியாக் கண்டம் அழிந்ததற்கு நீங்கள் சொல்லும் பனிப் பாறை உருகுதல் நிகழ்வு காரணமாக இருக்க அதிக வாய்ப்புண்டு, ஏனென்றால், அவ்வளவு பெரிய நிலப்பரப்பு சுனாமியால் அழிந்து போயிருக்கும் வாய்ப்புகள் குறைவு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அப்புறம்,நீரு இதை மாதிரி எழுதும் ஓய்.சும்மா கும்மி மட்டுமே அடிக்க வேண்டாம்.நல்லாத் தான எழுதுரீறு?அப்புறம் என்ன?//

ஒரே மாதிரி எழுதினால் நமக்கே போரடித்துவிடும், அதனால்தான இடை இடையே கமெடி மொக்கைகள்!

ILLUMINATI said...

ஆமா,லெமூரியா கண்டம் அழிஞ்சதுக்கு காரணமா சந்தேகப்படப்படுறது இது தான்.

அப்புறம்,மொக்கை இடையிடையே மட்டும் இருக்கட்டும். :)
நம்ம கும்மிய கமெண்ட்ல மட்டும் வச்சுக்கிட்டு,போஸ்ட் எல்லாத்தையும் சீரியஸா எழுதுங்க.நீங்க நல்லா எழுவீங்க.அது படிக்கிறப்பயே நல்லா தெரியுது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
ஆமா,லெமூரியா கண்டம் அழிஞ்சதுக்கு காரணமா சந்தேகப்படப்படுறது இது தான்.

அப்புறம்,மொக்கை இடையிடையே மட்டும் இருக்கட்டும். :)
நம்ம கும்மிய கமெண்ட்ல மட்டும் வச்சுக்கிட்டு,போஸ்ட் எல்லாத்தையும் சீரியஸா எழுதுங்க.நீங்க நல்லா எழுவீங்க.அது படிக்கிறப்பயே நல்லா தெரியுது.///

அதுவும் சரிதான், அப்படியே செய்வோம்! நன்றி இலுமி!

பட்டாபட்டி.. said...

அதனால்தான இடை இடையே கமெடி மொக்கைகள்!

//

?????

பட்டாபட்டி.. said...

மொக்கைகளுக்கு நடுவே நல்ல பதிவுகள்..

( ஒழுக்கமா சரியா..சொல்லு...)

உன்னோட பதிவுலையே எனக்கு புடிச்ச நல்ல பதிவு இதுதான்யா..

மூடிட்டு..அழகா இது மாறியே எழுது...

பட்டாபட்டி.. said...

ஆமா..இதுக்குமுன்னாடி, நான் போட்ட கமென்ஸ்ல, ஏதாவது கெட்ட வார்த்தை இருக்கு?

Jey said...

அலோ வீட்ல யாருப்பா?.

ILLUMINATI said...

அதைத்தான் பட்டு நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

Jey said...

ஆல் அரவம் தெரியுது யாருப்பா வீட்ல?

பட்டாபட்டி.. said...

உஷ்.. லைட் போடாம ..சத்தம் போடாம வா அப்பு..

நாந்தேன்..ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

கீ போர்ட் காணாம போச்சா.. எத்தனை மணி நேரம் சும்மா இருப்பது?

ILLUMINATI said...

பட்டு,அந்த அருவாள சத்தம் இல்லாம எடு.

Jey said...

இதப் பார்ரா இலுமிய?.என் வீட்ல 100 , பன்னி வீட்ல 50.( ஸ் சத்தமிலாம பேசுடா Jey, இங்க ஏதோ சதி நடக்கிறமாற் தெஇய்து.)

Jey said...

( இலுமி & பட்டா, உங்க ஜிமெயில் ஐடி ய அனுப்புகப்பா gjeyakumar72@gmail.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 43
மொக்கைகளுக்கு நடுவே நல்ல பதிவுகள்..

( ஒழுக்கமா சரியா..சொல்லு...)//

ஹி...ஹி...! தப்பிக்க வுட மாட்டேங்குறிங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா டீஆரு ஆப்பிரிக்கா போயிருக்காராமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
கீ போர்ட் காணாம போச்சா.. எத்தனை மணி நேரம் சும்மா இருப்பது?///

அண்ணே நீங்க மியூசிக் டைரக்டரா? சொல்லவே இல்ல?

ILLUMINATI said...

ஜெய்,என் ஐடி எனது ப்லோக்கிலேயே இருக்கிறது.போய் எடுத்துக்கலாம். :)

அப்புறம்,இந்த 50,100 எல்லாம் வச்சு நான் என்ன மசுரா வழிக்க முடியும்.அட போங்கப்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
பட்டு,அந்த அருவாள சத்தம் இல்லாம எடு.///

ஆடு இப்பத்தான் வந்திருக்கு, அந்த மஞ்சத்தண்ணிய எடு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
கீ போர்ட் காணாம போச்சா.. எத்தனை மணி நேரம் சும்மா இருப்பது?///

அண்ணே நீங்க மியூசிக் டைரக்டரா? சொல்லவே இல்ல?///

அப்பிடியே எனக்கு ஒரு டியூன் போடுங்கண்ணே!

பட்டாபட்டி.. said...

அப்பிடியே எனக்கு ஒரு டியூன் போடுங்கண்ணே!
//

நேயர் விருப்பம்?...

ஓ.கே

டண்டனக்கா...டங்கரடங்கர....

ஜெய்லானி said...

ஜெய்லானி...

எஸ் சார்...

உள்ளேன் ஐயா..

லோ..ஹம் ஆகயா...

இவ்விட உண்டல்லோ..

ஜெய்லானி said...

கதையை படிச்சதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சி ....அவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்
அவ்வ்
அவ்

நீ இவ்ளோ நல்லவனாஆஆஆ..

என்னை மண்னிச்சிடு குட்டி

ஜெய்லானி said...

சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க வாங்கி எத்தனை மணி நேரம் ஆகுது..ஹி..ஹி..

ஜெய்லானி said...

அப்பவே சந்தேகம் வந்துச்சி.. மங்குனியும் நல்லவனாகி கதை எழுதும் போதே நெனச்சேன். சம்திங் ராங்குன்னு.

ஜெய்லானி said...

இரு..இரு..உனக்கும் ஒரு விருது குடுத்தா சரியாயிடும்

ஜெய்லானி said...

மீ 65

ஜெய்லானி said...

//வேணா தமிழரசிக்கு பன்ணுவானுக...//

அப்பகனியக்கா, குஷ்பாக்காவுக்கு டாட்டாவா ?

ஜெய்லானி said...

//காந்தி ஹீரோவா?... இல்ல நாதுராம் கோட்ஸே ஹீரோவா?...

இதுல உனக்கு பிடிச்ச ஹீரோ யாருனு சொல்லு...

என்ன நடக்குமுனு நான் சொல்றேன்...//சுபாஷ் சந்திரபோஸ் இவருதான் எனக்கு ஹீரோ . இப்ப சொல்லுங்க பாஸ்...!!

ஜெய்லானி said...

//மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!//

எனக்கும் அந்த சந்தேகத்துல இருந்து இன்னும் மீள முடியாம தவிக்கிறேன்..

ஜெய்லானி said...

//Leave your comment
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!//

பட்டாபட்டியை தவிர

ஜெய்லானி said...

மீ 70

ஜெய்லானி said...

யோவ் யாராவது வாங்கய்யா.. ஓத்தைக்கு பயமா இருக்கு. இதுக்குதான் ராத்திரி தனியா வரக்கூடாதுங்கிறது..அவ்வ்வ்வ்வ்

கும்மி said...

நண்பர் கோவி கண்ணனும் இதே கருத்தோடு ஒரு பதிவிட்டுள்ளார்.

Robin said...

நல்ல பதிவு.
நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
ஜெய்லானி...

எஸ் சார்...

உள்ளேன் ஐயா..

லோ..ஹம் ஆகயா...

இவ்விட உண்டல்லோ..///

வாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
கதையை படிச்சதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சி ....அவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்
அவ்வ்
அவ்

நீ இவ்ளோ நல்லவனாஆஆஆ..

என்னை மண்னிச்சிடு குட்டி///

அடப்பாவி, இவனும் ரொம்ப நல்லவனா இருப்பான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
சரி குட்டி..,பட்டா உன் பிளாக்க வாங்கி எத்தனை மணி நேரம் ஆகுது..ஹி..ஹி..///

இப்பத்தான் பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டிருக்கு (மஞ்சத்துண்டு கிடைக்காததுனால இன்னும் பேரம் பேச முடியல)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
//மறுபடியும் ஏரியா மாறி வந்துட்டனா. பன்னிகுட்டி சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நடக்கும் ஆனா நடக்காது!!//

எனக்கும் அந்த சந்தேகத்துல இருந்து இன்னும் மீள முடியாம தவிக்கிறேன்..///

கவலப்படாதீங்க, கடைல என்ன நடந்தாலும், மொக்க உண்டு!

மங்குனி அமைச்சர் said...

என்னப்பா நடக்குது இங்க , பன்னி என்னப்பா நீ? எவ்ளோ அழகா கும்பத்தோட மேடைல உட்கார்ந்து இருந்தார்கள் , கண் கொள்ளா காட்சி , அத பாக்க நமக்கு ரெண்டு கண்ணு பத்தாது , தபதி எழுதுவியா ?? இந்த வெளிநாட்டு பயலுகளுக்கு நம்மள பத்தி ஏன்னா தெரியும் ? அவனுகளுக்கு வேறவேலை இல்லை ....... வா நாம் போய் நமது மன்னர் குடும்பத்துக்கு புகழ் மாலை சூட்டுவோம் (ஏம்பா இப்படி பதிவு போட்டு மனுஷன் டெண்சனாக்குற ???)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க அமைச்சரே! மன்னர் தமது பரிவாரங்கள் புடைசூழ மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது அமைச்சரே!

முத்து said...

என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரிய மேட்டர் உங்களிடம் இருந்தா?

நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக தான் இருக்கும் ஆனால் பிணத்தின் வாயில் இருந்து கூட காசை திருடும் அரசியல்வாதிகளிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது எந்தளவு சாத்தியம்

முத்து said...

ஜெய்லானி said...

இரு..இரு..உனக்கும் ஒரு விருது குடுத்தா சரியாயிடும்/////

அப்போ எனக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said... 80
என்ன ராமசாமிநோவ் இவ்வளவு பெரிய மேட்டர் உங்களிடம் இருந்தா?

நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக தான் இருக்கும் ஆனால் பிணத்தின் வாயில் இருந்து கூட காசை திருடும் அரசியல்வாதிகளிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது எந்தளவு சாத்தியம் //

இன்னைக்கு கலைஞர் டீவி நியூஸ் பாத்தீங்களா? பூம்புகார், குமரிக்கண்ட (லெமூரியாக் கண்டம்னு இதத்தான் சொல்றோம்) அகழ்வாராய்ச்சிக்கு கலைஞர் மத்திய அரசை வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செய்கிறார்களோ இல்லையோ அந்த எண்ணம் வந்திருப்பதே நல்ல தொடக்கம்தான்!

ரமேஷ் said...

உங்க ஆதங்கம் ரொம்ப நியாயம்..ஆனா நம்ம ஆதங்கப்பட்டு..திட்டம் போட்டு என்ன ஆகப்போகுது...வருத்தமாதான் இருக்கு...நினைச்சா..

Indian said...

வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!

...

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.
”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

...

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.
”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”
அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.
அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

...

ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.
”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.
“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.

Siva said...

http://www.nature.com/nature/journal/v461/n7263/full/nature08365.html

Our Gene pools are from the same ancestors.. there is no striking difference!!!!