Sunday, June 27, 2010

சமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது?

சமீப காலமாகச் சந்தையில் பல புதிய சமையல் எண்ணைகள் வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. இதயதிற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தச் சமையல் எண்ணைகளின் உண்மை நிலை என்று பார்ப்போமா?

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. PUFA விலும் இரண்டும் வகை உள்ளது, w-6 (ஒமேகா-6) மற்றும் w-3 (ஒமேகா-3). இதில் ஒமேகா-3 தான் உடலுக்கு நல்லது. ஆனால் தாவர எண்ணைகளில் இரண்டும் கலந்தேதான் இருக்கின்றன. எனவே சமையல் எண்ணைகளை மதிப்பிடுவதற்கு இரண்டு கொழுப்பு அமிலங்களும் (ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3) என்ன விகிதத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுகிறார்கள். ஒமேகா-3 அதிகமாக இருந்தால் அது நல்லது. ஏனென்றால் ஒமேகா-6 உடலில் புகுந்த பின்பு சும்மா இருப்பதில்லை, அது சுயமாகக் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லாமல், ஒமேகா-3 வின் நல்ல விளைவுகளையும் எதிர்க்கிறது. (நல்லதுக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க!)

இனி சமையல் எண்ணைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணை:
திரவக்கொழுப்பு அதிகம் உள்ளது, அதனால் இதைப் பயன்படுத்துவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது. எனவே இதய நோயாளிகளும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒமேகா-3 அறவே இல்லை. வெறும் ஒமேகா-6 மட்டுமே உள்ளது. நீண்டகால உபயோகத்திற்கு இது பொறுத்தமானதா என்பது சந்தேகதிற்குரியது. ஒமேகா- 6 வின் கெட்ட விளைவுகளில் சில சூரியகாந்தி எண்ணையை நீண்ட நாள் பயன்படுத்தியவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோள எண்ணை (கார்ன் ஆயில்):
இது ஓரளவு சூரியகாந்தி எண்ணையைப் போன்றதே. இந்த எண்ணையில் ஒமேகா-3 உள்ளது, ஆனால் வெறும் 2% தான். மீதம் முழுவதும் ஒமேகா-6 தான். அதனால், ஒமேகா-6 வினால் ஏற்படும் கெட்ட விளைவுகளை இது தடுக்காது. எனவே சூரியகாந்தி எண்ணையைப் போன்றே நீண்டநாள் பயன்பாட்டிற்கு இதுவும் பொருத்தமானதல்ல.

கடலை எண்ணை:
முன்பு வெகு பிரபலமாக இருந்த எண்ணை. இது திரவ கொழுப்புகள் அதிகம் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகவே ஆராய்ச்சிப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணையின் கொழுப்பு அமிலங்களைப் பார்க்கும் போது பாதுகாப்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் பரிசோதனை முடிவுகள் குழப்பும்படியாக உள்ளன. அதனால் எப்போவாவது பயன்படுத்துவதில் தப்பில்லை.

அரிசி உமி எண்ணை (ரைஸ் பிரான் ஆயில்):
இந்த எண்ணை ஜப்பான், சீனாவில் அதிகம் பயன்படுத்தபடுகின்றது. இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. அருமையான எண்ணை, அதிக நலன்களைக் கொண்டது. இதில் உள்ள ஒரைசெனோல் (Oryzanol) இதய நோயைத்தடுக்கும் சக்தி வாய்ந்தது (நீங்கள் விளம்பரங்களில் பார்ப்பது உண்மையே). மேலும் இந்த எண்ணை உணவுப் பொருட்களால் உறிஞ்சப்படுவது குறைவு. 5% ஒமேகா-3 உள்ளது.

நல்லெண்ணை:
இது நிஜமாகவே நல்ல எண்ணைதான். இந்த எண்ணையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய தன்மை உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 1 சதவீததிற்கும் குறைவாகவே ஒமேகா-3 உள்ளது.


முடிவாக என்ன எண்ணைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா? மேலே படிங்க. பொதுவாக இந்தியச் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணைகளில் ஒமேகா- 3 மிகக்குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை மட்டுமே தேவையான அளவு ஒமேகா- 3 கொண்டுள்ளது, மிகச் சிறந்த சமையல் எண்ணையும் இதுவே. ஆனால் பொறிப்பதற்குப் பயன்படுத்த முடியாது (பொறிக்கும்போது வரும் கடும் வெப்பம் இந்த எண்ணையை சேதம் அடையச் செய்கிறது, அப்போது வெளியாகும் பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போது பொறிப்பதற்கேற்ற ஆலிவ் எண்ணையும் வருகின்றது). விலை அதிகம், கிடைப்பதும் கடினம் (இந்தியாவில்) போன்ற காரணங்களால் தினசரி பயன்பாட்டிற்கு இந்த எண்ணையை பயன்படுத்துவது சாத்தியமல்ல.

அடுத்த சிறந்த எண்ணை அரிசி உமி எண்ணையே (ரைஸ் பிரான் ஆயில்). இந்த எண்ணையே இந்தியப் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறது. சுமார் 450 டிகிரி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சூடாக்கலாம் (சமையல் எண்ணைகளிலேயே இதற்குத்தான் அதிகம் வெப்பம் தாங்கும் சக்தி). அதனால் இந்த எண்ணையை தினந்தோறும் பயன்படுத்தலாம். ஆனாலும் இடைஇடையே சூரியகாந்தி எண்ணை, சோள எண்ணை, நல்லெண்ணை என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த எண்ணையைப் பயன்படுத்தினாலும், ஒரேவகை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் (பெரும்பாலான பிஸ்கட்டுகளில் வனஸ்பதி உள்ளது, எனவே பிஸ்கட்டுகள் வாங்கும்போது கூட கவனம் தேவை, hydrogenated vegetable oils, shortened vegetable oils, margarine என்று பல பெயர்களில் போட்டிருப்பார்கள் எல்லாம் வனஸ்பதி வகையைச் சேர்ந்தவையே). வெளிநாடுகளில் இருப்பவர்கள் எண்ணை வாங்கும் போது பொறிப்பதற்கேற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும் (பாட்டிலின் மேலேயே குறிப்பிட்டு இருப்பார்கள்).


பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!

(சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இந்தப்பதிவு, மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)

169 comments:

யூர்கன் க்ருகியர் said...

தாளிச்சிட்டீங்க !!

அத்திரி said...

//மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)//

:)))))))



நல்ல பதிவு

Swengnr said...

ஹலோ - நாந்தான் ஐம்பதாவது பாலோவேர்! இதுக்கு எதுவும் ட்ரீட் கொடுக்கறீங்களா? நல்ல எண்ணைல வறுத்த கோழியா இருந்தாலும் ஒகே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தூ...ரமுங்கோ//

ரம்தான் சாப்புடுவீன்களா. ஒயின்,விஸ்க்கி?

முத்து said...

இந்த கண்றாவிக்கு தான் நான் wine பயன்படுத்துறேன்

முத்து said...

Software Engineer said...

ஹலோ - நாந்தான் ஐம்பதாவது பாலோவேர்! இதுக்கு எதுவும் ட்ரீட் கொடுக்கறீங்களா? நல்ல எண்ணைல வறுத்த கோழியா இருந்தாலும் ஒகே!////////////

வருத்த பன்னி கால் ஓகே வா பாஸ்

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தூ...ரமுங்கோ//

ரம்தான் சாப்புடுவீன்களா. ஒயின்,விஸ்க்கி?//////

நீங்க சாப்புடுறத அவர் சாப்பிட மாட்டார் ஒன்லி பட்டை

முத்து said...

யூர்கன் க்ருகியர் said...

தாளிச்சிட்டீங்க !!//////////


எதை யூர்கன் பன்னி தொடையா

111 said...

பன்னி, கடையில எண்ணை வாங்கும் போது, அதன் அட்டயில் போட்டதை இனிமே முழுசா படிக்கனும் போலயே?.

கிராமத்துல கடலை எண்ணயில் சமைச்சதை சாபிடுரவரையிலும் உடம்பு நல்லாத்தானயா இருந்தது, சிட்டிக்கு வட்ந்து எவ்வளவு சூதானமா இருந்தாலும், உடம்பு வீக்காதான் இருக்கு. இதிலிருந்து என்ன தெரியுது? ??????????

111 said...

Software Engineer said...
ஹலோ - நாந்தான் ஐம்பதாவது பாலோவேர்! இதுக்கு எதுவும் ட்ரீட் கொடுக்கறீங்களா? நல்ல எண்ணைல வறுத்த கோழியா இருந்தாலும் ஒகே!///

கவலையே படாதீங்க அண்ணே பன்னி தலைமயிலே பஞ்சாயத்து கூட்டி ஒரு நல்லா தீர்ப்பா கொடித்திரலம்.

Swengnr said...

முத்து - சத்தியமா நான் அமெரிக்கால இருந்தப்போ நண்பர்கள் தயவால பன்னி கறி சாப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் hard ஆக இருக்கும். மத்தபடி ஒகே

Swengnr said...

முத்து - சத்தியமா நான் அமெரிக்கால இருந்தப்போ நண்பர்கள் தயவால பன்னி கறி சாப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் hard ஆக இருக்கும். மத்தபடி ஒகே

முத்து said...

Jey said...

பன்னி, கடையில எண்ணை வாங்கும் போது, அதன் அட்டயில் போட்டதை இனிமே முழுசா படிக்கனும் போலயே?.

கிராமத்துல கடலை எண்ணயில் சமைச்சதை சாபிடுரவரையிலும் உடம்பு நல்லாத்தானயா இருந்தது, சிட்டிக்கு வட்ந்து எவ்வளவு சூதானமா இருந்தாலும், உடம்பு வீக்காதான் இருக்கு. இதிலிருந்து என்ன தெரியுது? ??????????////////////////


இனிமே நீங்களும் என்னை மாதிரி wine ட்ரை பண்ணுங்க

முத்து said...

Software Engineer said...

முத்து - சத்தியமா நான் அமெரிக்கால இருந்தப்போ நண்பர்கள் தயவால பன்னி கறி சாப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் hard ஆக இருக்கும். மத்தபடி ஒகே////////


சரியா சொல்லுங்க பாஸ் ஏன்னா பண்ணி கரி சாப்ட் அப்போ நீங்க சாப்பிட்டது

Swengnr said...

ஜெய் - நீதான்யா நம்ம ஆளு!

111 said...

டாஸ்மாக்ல wine கூட கலப்படமாத்தானேய கிடைக்குது முத்து

முத்து said...

எண்ணையில் இவ்வளவு ஆராய்ச்சி பண்ண நம்ம பன்னிக்கு என்ன அவார்ட் குடுக்கலாமுன்னு சொல்லுங்கப்பா

Swengnr said...

முத்து - அமெரிக்காலேயே கருப்பு வெள்ளைன்னு சொல்ல கூடாதுன்னு சொல்லிடாங்கே! உங்களுக்காக மட்டும் சொல்றேன், வெள்ளை பன்னிதேன்!

முத்து said...

Software Engineer said...

ஜெய் - நீதான்யா நம்ம ஆளு!//////

பார்தீங்களா நீங்க பன்னி சாப்பிடல உடும்பு கரி சாப்பிட்டதை சொன்னதுக்காக எனக்கே சேம் சைடு கோல் போடுறிங்க

முத்து said...

Software Engineer said...

முத்து - அமெரிக்காலேயே கருப்பு வெள்ளைன்னு சொல்ல கூடாதுன்னு சொல்லிடாங்கே! உங்களுக்காக மட்டும் சொல்றேன், வெள்ளை பன்னிதேன்!/////////////


இதில் என்ன சந்தேகம்

முத்து said...

Jey said...

டாஸ்மாக்ல wine கூட கலப்படமாத்தானேய கிடைக்குது முத்து////////////

எனக்கு இங்க அந்த பிரச்னை இல்லை

முத்து said...

Jey said...

Software Engineer said...
ஹலோ - நாந்தான் ஐம்பதாவது பாலோவேர்! இதுக்கு எதுவும் ட்ரீட் கொடுக்கறீங்களா? நல்ல எண்ணைல வறுத்த கோழியா இருந்தாலும் ஒகே!///

கவலையே படாதீங்க அண்ணே பன்னி தலைமயிலே பஞ்சாயத்து கூட்டி ஒரு நல்லா தீர்ப்பா கொடித்திரலம்.////////////////


இதுக்கு எதுக்கு நாட்டாமை, சொம்பு,எல்லாம் சாருக்கு ஒரு தொடை கரி பார்சல்

Swengnr said...

வளைச்சி வளைச்சி வந்து வம்பிழுகிராங்களே! பன்னி குட்டி அண்ணே நீங்க கேட்க மாட்டீங்களா? ஆனாலும் நல்லா பொழுது போகுது!

முத்து said...

சார் இப்போ அவர் வர மாட்டார் ஏன் என்றால் சாப்பிட போயி இருக்கார் அது தெரிஞ்சு தானே கும்மி அடிக்க அவர் இல்லாத நேரத்தில் வந்து இருக்கேன்

துளசி கோபால் said...

இது என்ன புதுக்குழப்பம்?

//உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.//

நல்லெண்ணெய் உறையுமா? இதுவரை இல்லையே!

முத்து said...

துளசி கோபால் said...

இது என்ன புதுக்குழப்பம்?

//உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.//

நல்லெண்ணெய் உறையுமா? இதுவரை இல்லையே!///////

உறையும் பாஸ் பிரிட்ஜில் வைத்து பாருங்கள்

துளசி கோபால் said...

எங்க ஊரே ஃப்ரிட்ஜில் இருக்கும் ஊர்தான்.

111 said...

//தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை.//

இந்த தேங்காய் எண்ணை யூஸ் பண்ணிதானெ பன்னி , நம்ம மல்லு ஃபிகருக அழகா கொலு கொலுனு இருகாக.

111 said...

//
இதுக்கு எதுக்கு நாட்டாமை, சொம்பு,எல்லாம் சாருக்கு ஒரு தொடை கரி பார்சல்//
முத்து ஒரு முடிவோடதான் இருக்கியா?. நேத்து விளயாண்ட கோலி விளையாட்டோட எஃபெக்டா?

முத்து said...

பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்! //////

அப்போ வயிற்றுக்கு உணவு இல்லாத போது எதற்கு ஈயப்படும்


இப்படிக்கு
எதற்க்கெடுத்தாலும் சந்தேகம் கேட்கும் சங்கம் (தலைவர்:ஜெய்லானி)

முத்து said...

துளசி கோபால் said...

எங்க ஊரே ஃப்ரிட்ஜில் இருக்கும் ஊர்தான்.///////

அப்படியா அப்போ கண்டிப்பா உறையும்,நான் இருக்கும் ஊரில் உரையுதே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு...

111 said...

பன்னி, நமக்கெல்லம் உபதேசம் பனிட்டு, கடலை எண்ணைல பொரிச்ச வாத்து கற் சாப்பிட போயிருக்கு.

முத்து said...

Jey said...
இந்த தேங்காய் எண்ணை யூஸ் பண்ணிதானெ பன்னி , நம்ம மல்லு ஃபிகருக அழகா கொலு கொலுனு இருகாக.///////////////

உங்க ஊட்டு காரம்மாவிடம் கேட்க வேண்டிய கேள்வி

துளசி கோபால் said...

22 வருசமா உறையலை. ஒருவேளை இந்த வருசம் உறையலாம்!!!!!

முத்து said...

Jey said...

//
இதுக்கு எதுக்கு நாட்டாமை, சொம்பு,எல்லாம் சாருக்கு ஒரு தொடை கரி பார்சல்//
முத்து ஒரு முடிவோடதான் இருக்கியா?. நேத்து விளயாண்ட கோலி விளையாட்டோட எஃபெக்டா?//////////


இல்லை நேத்து போட்ட wine எஃபெக்டா

முத்து said...

பட்டாபட்டி.. said...

கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு.../////////////////


தலைவர் வாழ்க

111 said...

துளசி கோபால் said...
எங்க ஊரே ஃப்ரிட்ஜில் இருக்கும் ஊர்தான்.///
பிரிட்ஜுக்குள்ள ஊரா, அது எந்த ஊரு அன்னாச்சி?

முத்து said...

Jey said...

பன்னி, நமக்கெல்லம் உபதேசம் பனிட்டு, கடலை எண்ணைல பொரிச்ச வாத்து கற் சாப்பிட போயிருக்கு.//////////

இதான்யா உன்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம் பப்ளிக்கில் உண்மையை சொல்லிடுவே

111 said...

//தலைவர் வாழ்க//

முத்து நீயும் தானைத் தலைவைர்ர்ர் பட்டாபட்டியூட தொண்டரா?, சொல்லவே இல்லை?.

முத்து said...

Jey said...

துளசி கோபால் said...
எங்க ஊரே ஃப்ரிட்ஜில் இருக்கும் ஊர்தான்.///
பிரிட்ஜுக்குள்ள ஊரா, அது எந்த ஊரு அன்னாச்சி?//////

கோத்ரேஜ் பிரிட்ஜு,made by கோத்ரேஜ் சரியா பாஸ்

முத்து said...

Jey said...

//தலைவர் வாழ்க//

முத்து நீயும் தானைத் தலைவைர்ர்ர் பட்டாபட்டியூட தொண்டரா?, சொல்லவே இல்லை?.////


என்ன கேள்வி கேட்குற உனக்கு இன்னும் ஆரஞ்சு மேட்டர் தெரியல போலிருக்கு

111 said...

த்ஹானைத் தல அண்ராயருகிட்ட இருக்கிர கேட பழக்கமே இதுதான். எட்டி பத்துட்டு ஆனி புடுங்க போரது, ஆனாலும் ஞாயித்துகிழமயில என்ன ஆனி?, ஏதும் சீக்ரெட் ஆனியா!!!!

யூர்கன் க்ருகியர் said...

//பிரிட்ஜுக்குள்ள ஊரா, அது எந்த ஊரு அன்னாச்சி? //

freezerland இருக்குமோ ?

முத்து said...

யூர்கன் க்ருகியர் said...

//பிரிட்ஜுக்குள்ள ஊரா, அது எந்த ஊரு அன்னாச்சி? //

freezerland இருக்குமோ ?/////////////

இருக்கலாம் யூர்கன் நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்

முத்து said...

Jey said...

த்ஹானைத் தல அண்ராயருகிட்ட இருக்கிர கேட பழக்கமே இதுதான். எட்டி பத்துட்டு ஆனி புடுங்க போரது, ஆனாலும் ஞாயித்துகிழமயில என்ன ஆனி?, ஏதும் சீக்ரெட் ஆனியா!!!!////

அவரும் ஒரு வேலை குண்டு விளையாட போயிட்டாரோ

முத்து said...

48

முத்து said...

49

முத்து said...

எல்லோரும் சீக்கிரம் கமெண்ட்ஸ் போடுங்கபா பன்னி வரது காட்டியும் ஒரு 200 கமெண்ட்ஸ் ஆவது போட்டுருவோம்

துளசி கோபால் said...

யூர்கன்,

பாதி ரைட்.

லேண்ட்தான். ஆனா புது லேண்ட்.

நியூஸிலேண்ட்.

முத்து said...

ஜெ இந்த தடவையும் உங்களுக்கு வட போச்சு நான் தான் 50

முத்து said...

துளசி கோபால் said...

யூர்கன்,

பாதி ரைட்.

லேண்ட்தான். ஆனா புது லேண்ட்.

நியூஸிலேண்ட்.////

அதை நாங்கள் உங்கள் profile பார்த்து கண்டு பிடிச்சுடோம்

முத்து said...

முத்து said...

துளசி கோபால் said...

நியூஸிலேண்ட்.///////

அங்க இந்த வருஷம் எவ்வளவு மைனஸ் பண்ணியது
நான் இருக்கும் ஊரில் -18°பண்ணியது

முத்து said...
This comment has been removed by the author.
முத்து said...

பண்ணி சீக்கிரம் வந்துடாத இன்னும் 146 கமெண்ட்ஸ் பாகி இருக்கு

முத்து said...

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை.//////////


தேங்காய் எண்ணை ஓகே.அது எப்படி பாமில் இருந்து ஆயில் எடுக்க முடியும் வெடிச்சுடாது



இப்படிக்கு
எதற்க்கெடுத்தாலும் சந்தேகம் கேட்கும் சங்கம் (தலைவர்:ஜெய்லானி)

Swengnr said...

பண்ணி குட்டி அண்ணே கமெண்ட் பாத்து ஏமாந்துரதிங்கன்னே! நான் தான் ஐம்பதாவது பாலோவேர். முத்து ஐம்பத்தி ஒன்னு தான்!

111 said...

Software Engineer said...
பண்ணி குட்டி அண்ணே கமெண்ட் பாத்து ஏமாந்துரதிங்கன்னே! நான் தான் ஐம்பதாவது பாலோவேர். முத்து ஐம்பத்தி ஒன்னு தான்!//

முத்து சாப்ட்வேர் அண்ணனுக்கு விட்டு கொடுத்டுரு, இந்த தடவை 50 போட்டதுக்கு அவர இலவசமா ட்ரைனிங்குக்கு அனுப்பிரலா.

Swengnr said...

அச்சச்சோ! ட்ரைனிங் மீ ! நாட் கம்மிங்! இன்னுமா, இதுக்கு முத்துக்கே ட்ரீட் கொடுத்திருங்க! ஐ அம் எஸ்கேப்!

மிஸ்டர். ஜெய் - எப்படி என்னோட வீக் பாயிண்ட் பாத்து அடிகிறீங்க! வேணாம்! பண்ணி அண்ணன் கிட்ட சொல்லிருவேன், ஆமாம்!

111 said...

அய்யோ, வேணாம் சார், பன்னி கடிச்சா, 234 ஊசி போடனுமா.,

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு...////


இதில் உள்குத்து எதுவும் இல்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் . பட்டா பாட்டியிடமே நல்ல பேர் வாங்கியதால் இன்றுமுதல் நம் பன்னிகுட்டி

" பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி"

என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவார்

பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க
பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க ,வாழ்க
பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க ,வாழ்க,வாழ்க

முத்து said...

Software Engineer said...
பண்ணி குட்டி அண்ணே கமெண்ட் பாத்து ஏமாந்துரதிங்கன்னே! நான் தான் ஐம்பதாவது பாலோவேர். முத்து ஐம்பத்தி ஒன்னு தான்!//



நான் தான் 3vathu follower 51um நானே

முத்து said...

Software Engineer said...

அச்சச்சோ! ட்ரைனிங் மீ ! நாட் கம்மிங்! இன்னுமா, இதுக்கு முத்துக்கே ட்ரீட் கொடுத்திருங்க! ஐ அம் எஸ்கேப்!

மிஸ்டர். ஜெய் - எப்படி என்னோட வீக் பாயிண்ட் பாத்து அடிகிறீங்க! வேணாம்! பண்ணி அண்ணன் கிட்ட சொல்லிருவேன், ஆமாம்!//////////////



பன்னி தான் உங்களை ட்ரைனிங் அனுப்ப போறதே எங்க எஸ்ஸாவ பார்கிறீங்க

முத்து said...

Jey said...

அய்யோ, வேணாம் சார், பன்னி கடிச்சா, 234 ஊசி போடனுமா.,///////////


தப்பா சொல்லாதே 2334 ஊசி பிரதர்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு...////


இதில் உள்குத்து எதுவும் இல்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் . பட்டா பாட்டியிடமே நல்ல பேர் வாங்கியதால் இன்றுமுதல் நம் பன்னிகுட்டி

" பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி"

என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவார்

பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க
பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க ,வாழ்க
பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க ,வாழ்க,வாழ்க/////////////

அமைச்சர் சொன்னால் மறு பேச்சி ஏது

பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி
வாழ்க ,வாழ்க,வாழ்க

Swengnr said...

பண்ணி குட்டி அண்ணே தெளிஞ்சி வந்துட்டருயா! சங்கத்த உடனே கலைங்கய்யா!

Riyas said...

அடடா.. அசத்தல்..

Riyas said...

அடடா.. அசத்தல்..

ஜெய்லானி said...

ஜெய்லானீஈஈஈஈ

எஸ் சார்.....

உள்ளேன் ஐயா....

ஜெய்லானி said...

யாராவது இருக்கீங்களா இல்லையா..?ச்சே.. நா வரும் போது ஒரு பயப்புள்ள இருக்க மாட்டாங்கப்பா..!!

ஜெய்லானி said...

வழக்கமா வரும் நம்ம முத்துவையும் கானோமே..!!

ஜெய்லானி said...

@@@முத்து
பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்! //////

அப்போ வயிற்றுக்கு உணவு இல்லாத போது எதற்கு ஈயப்படும்


இப்படிக்கு
எதற்க்கெடுத்தாலும் சந்தேகம் கேட்கும் சங்கம் (தலைவர்:ஜெய்லானி) //



வாவ்..!! அடுத்த விருது உனக்கு நிச்சயம் இருக்கு முத்து..என் கேள்வியை சரியா கேட்டுட்ட..!!

ஜெய்லானி said...

மீ 75

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி வாழ்க//

சாப்ட்வேர் இஞ்சினியர் இப்படி இந்த குரூப் ல வந்து மாட்டிகிட்டேகளே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யூர்கன் க்ருகியர் said... 1
தாளிச்சிட்டீங்க !! //


வாங்க யூர்கன் இன்னிக்கு வட உங்களுக்குத்தான் பாஸ்! (எல்லாம் நல்ல எண்ணையிலதான்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அத்திரி said... 2
//மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)//

:)))))))



நல்ல பதிவு //

நன்றி அத்திரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Software Engineer said... 3
ஹலோ - நாந்தான் ஐம்பதாவது பாலோவேர்! இதுக்கு எதுவும் ட்ரீட் கொடுக்கறீங்களா? நல்ல எண்ணைல வறுத்த கோழியா இருந்தாலும் ஒகே! //

நம்ம கடைக்கு வந்துட்டீங்கள்ல, வறுத்த கோழியென்ன , பெருத்த ஆடே கெடைக்கும் பாருங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 5
//தூ...ரமுங்கோ//

ரம்தான் சாப்புடுவீன்களா. ஒயின்,விஸ்க்கி? ///

ரம்முதானுங்கோ எப்பவுமே (மத்த ஐட்டம்லாம் நம்ம பாடி கன்டிசனுக்கு ஒத்து வரமாட்டேங்கிது பாஸ்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said... 6
இந்த கண்றாவிக்கு தான் நான் wine பயன்படுத்துறேன் ////


முத்து நீங்க இருக்க இடம் அப்படி!1!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said... 10
பன்னி, கடையில எண்ணை வாங்கும் போது, அதன் அட்டயில் போட்டதை இனிமே முழுசா படிக்கனும் போலயே?.

கிராமத்துல கடலை எண்ணயில் சமைச்சதை சாபிடுரவரையிலும் உடம்பு நல்லாத்தானயா இருந்தது, சிட்டிக்கு வட்ந்து எவ்வளவு சூதானமா இருந்தாலும், உடம்பு வீக்காதான் இருக்கு. இதிலிருந்து என்ன தெரியுது? ?????????? ////

என்னத்த சாப்பிட்டாலும் கொஞ்சம் உடம்ப அப்பிடி இப்பிடி வளைச்சிட்டா போதும் எல்லாம் சரியாயிடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said... 15
Software Engineer said...

முத்து - சத்தியமா நான் அமெரிக்கால இருந்தப்போ நண்பர்கள் தயவால பன்னி கறி சாப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் hard ஆக இருக்கும். மத்தபடி ஒகே////////


சரியா சொல்லுங்க பாஸ் ஏன்னா பண்ணி கரி சாப்ட் அப்போ நீங்க சாப்பிட்டது///

வேற ஏதாவது அனிமல்ஸா இருக்கப் போவுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Software Engineer said... 24
வளைச்சி வளைச்சி வந்து வம்பிழுகிராங்களே! பன்னி குட்டி அண்ணே நீங்க கேட்க மாட்டீங்களா? ஆனாலும் நல்லா பொழுது போகுது! ///

இதோ சாப்பிட்டுட்டு வந்திர்ரேன்னு வாய்தவறி சொல்லிட்டுப் போயிட்டேன், அதுக்குள்ள குமுறி எடுத்துட்டானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//துளசி கோபால் said...
இது என்ன புதுக்குழப்பம்?

//உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.//

நல்லெண்ணெய் உறையுமா? இதுவரை இல்லையே!//

வாங்க துளசிகோபால், எந்தத் திரவமாக இருந்தாலும் வெப்பநிலை குறைந்து அதன் உறைநிலை வெப்பத்தை எட்டிவிட்டால் உறைந்துதான் ஆகவேண்டும்!
நல்லெண்ணை -6 C ல் உறைகிறது. மிகக்குறைந்த வெப்பநிலையாக சோள எண்ணை -20 C ல் உறைகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 33
கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு...//

இதுல உள்குத்து எதுவும் இல்லையே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைவர் வாழ்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said... 63
பட்டாபட்டி.. said...

கலக்கல் பதிவு ராமசாமி...
இது போல நல்ல பதிவுகளா பொடுங்க பாஸ்..சூப்பராயிருக்கு...////


இதில் உள்குத்து எதுவும் இல்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் . பட்டா பாட்டியிடமே நல்ல பேர் வாங்கியதால் இன்றுமுதல் நம் பன்னிகுட்டி

" பட்டாப்பட்டி போற்றிய குட்டிபன்னி"

என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவார்///

வாருங்கள் அமைச்சரே! இன்றுதான் நீர் ஒரு அமைச்சரென்று நிரூபித்திருக்கிறீர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Riyas said...
அடடா.. அசத்தல்..//

நன்றி ரியாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said... 74
@@@முத்து
பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்! //////

அப்போ வயிற்றுக்கு உணவு இல்லாத போது எதற்கு ஈயப்படும்


இப்படிக்கு
எதற்க்கெடுத்தாலும் சந்தேகம் கேட்கும் சங்கம் (தலைவர்:ஜெய்லானி) //



வாவ்..!! அடுத்த விருது உனக்கு நிச்சயம் இருக்கு முத்து..என் கேள்வியை சரியா கேட்டுட்ட..!! ////


என்ன ஜெய்லானி சந்தேகமே வரலையா? பதிவு அவ்வளவு தெளிவா இருக்கா இல்லே ஒண்ணுமே புரியற மாதிரி இல்லையா?

ILLUMINATI said...

யோவ்,இவ்வளவு எழுதினயே?விளக்கெண்ண பத்தி எழுதணும்னு தோணிச்சா உனக்கு.என்ன தான் உனக்கு சுய தம்பட்டம் பிடிக்காதுன்னாலும் இப்புடியா? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
யோவ்,இவ்வளவு எழுதினயே?விளக்கெண்ண பத்தி எழுதணும்னு தோணிச்சா உனக்கு.என்ன தான் உனக்கு சுய தம்பட்டம் பிடிக்காதுன்னாலும் இப்புடியா? :)///

விளக்கேணையப் பத்தியும் எழுதலாம்னுதான் பாத்தேன், ஆனா நெறைப் பேரு என்னையப் பத்தி எப்பிடி எழுதலாம்னு அடிக்க வந்துடுவானுங்கன்னு தான் விட்டுட்டேன்!

ILLUMINATI said...

சரி விடுய்யா,அவனுங்கள பத்தி எனக்கு என்ன தெரியும்.உனக்கு தான் தெரியும். :)

இருந்தாலும் அவை அடக்க்த்துல எழுதாம விட்டத கூட எப்புடி சொல்லுது பாரு பக்கி .. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நியூஸ் கேட்டியா இலுமி, தானைத்தலைவரு நம்ம பதிவுகள படிக்கிறாருபோல?

ILLUMINATI said...

எந்த தலைவரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்நாட்டுக்கு இருக்கறது ஒரே ஒரு தானைத்தலைவருதான்யா!

ILLUMINATI said...

யோவ்,அவருக்கு எவ்ளோ வேலைகள் இருக்கு?

செம்மொழி மாநாடு,அப்பப்ப உண்ணாவிரதம்,அடிக்கடி டெல்லி பயணம்,ஓயாத முதல்வர் வேலை,அலுப்பாக்கும் விழாக்கள்,லந்து பண்ணும் கட்சிக்காரர்கள்(தப்பா சொல்லிட்டமோ,பசங்க புரிஞ்சுப்பானுங்க...)
இவ்ளோ இருக்குறப்ப அவருக்கு எதுய்யா நேரம்?போதாக்குறைக்கு இந்த சினிமா பசங்க எடுக்குற விழாவுக்கு எல்லாம் போகணும்.அப்புறம்,இந்த பத்திரிகைகாரங்களின் (ஏற்கனவே எழுதி கொடுத்த) கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லணும்...

மக்கள் பணி ஆற்றவே நேரம் இல்லையாம்.இதுல இதுக்கு எப்புடியா ஒரு முதல்வருக்கு நேரம் இருக்கும்? எனக்கு புரியலையே? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேத்து நியூசுல பூம்புகார், குமரிக்கண்டம் பற்றி ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யனும்னு மத்திய அரசுக்கு கலைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கார்யா (அதுவும் நம்ம பதிவ படிச்சிட்டு!)

ILLUMINATI said...

நல்லா கேட்டுப் பாருயா.அது வேற ஏதாவது கோரிக்கையா இருக்கப் போகுது.

ILLUMINATI said...

ஏற்கனவே சொன்ன மாதிரி,அவருக்கு படிக்க எல்லாம் நேரம் இல்ல.கேக்க மட்டும் தான் நேரம் இருக்கு. :P

ஓயாத வேலை... :)

ILLUMINATI said...

அப்புறம் என்ன கேக்குறாருனு எல்லாம் எகத்தாளமா கேக்க கூடாது. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க போயிப் பாரு!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27682

ILLUMINATI said...

என்னையா தலைவர் மாநாடு பத்தி இப்படி அடிச்சுக்குரானுங்க?

யோவ்,தமிழனை வளர்க்க தலைவர் மானாட மயிலாட ஏற்பாடு செய்த மாதிரி,தமிழ வளர்க்க மாநாடு ஏற்பாடு செய்தார்.
இதைக்கூட புரிஞ்சுக்க முடியாத சோற்றால் அடித்த பிண்டங்களா இருக்கீங்களே!
அடப் போங்கய்யா....

ILLUMINATI said...

யோவ்,என்னய்யா இப்படி வேண்டும்,வேண்டும் னு வாரி இரைச்சு இருக்காரு?

அது சரி,கிடைக்கப் போறது கிடையாதுனு ஆனபின்ன,எவ்ளோ கேட்டா என்ன?

ஆனா,சும்மா சொல்லக்கூடாதுய்யா.தலைவர் தலைவர் தான்.
அதுலயும் இது டாப்.

"தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். "

என்ன ஒரு சிந்தனை? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
விளக்கேணையப் பத்தியும் எழுதலாம்னுதான் பாத்தேன், ஆனா நெறைப் பேரு என்னையப் பத்தி எப்பிடி எழுதலாம்னு அடிக்க வந்துடுவானுங்கன்னு தான் விட்டுட்டேன்! //

ஆமா பின்ன விளக்கெண்ணை போராட்டம் நடக்கும் சொல்லிபுட்டேன்...

யூர்கன் க்ருகியர் said...

//இங்க போயிப் பாரு!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27682

//

Avoid Dinamalar ...dude!
they r real f***ing A** holes!
be aware!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///யூர்கன் க்ருகியர் said...
//இங்க போயிப் பாரு!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27682

//

Avoid Dinamalar ...dude!
they r real f***ing A** holes!
be aware!///

மன்னிச்சுக்க தல, சும்மா மேற்கோள் காட்டவே அது, பாலுக்கும் விசத்துக்கும் நமக்கு வித்தியாசம் தெரியாதா? (எல்லாத்துக்கும் தெரியத்தான் செய்யும், சில பயளுக தெரியாத மாதிரி நடிக்கிறானுங்க அம்புடுதேன்!)

Foods4Smart said...

You article is sucks. PUFA oil is dangerous.

http://www.newtreatments.org/FoodInfo/ga/420/

Coconut oil is the healthiest oil on earth.

http://www.coconut-connections.com/healthiest_oil.htm

Do not trust western lies and MBBS doctors.

Trust Ayurveda

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிஸ்டர் சந்துரு, முன்கூட்டியே மனதில் ஒரு அபிப்ராயத்தை வைத்துக்கொண்டு படித்திருக்கிறீர்கள். ஆயுர்வேதமா ஆங்கில மருந்தா என்ற விவாதம் இங்கு தேவையில்லாத ஒன்று. PUFA oil is dangerous என்று சொல்லியிருக்கிறீர்கள், நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று தயவு செய்து பதிவை ஒரு முறையாவது முழுவதும் படித்துவிட்டு கமென்ட் போடவும்.

பொன் மாலை பொழுது said...

முதலில் பன்னிகுட்டி ராம்சாமிக்கு வாழ்த்துக்கள்.
வெறும் "கும்மி" மட்டும் கொட்டாமல் அவப்போது பிறருக்கு பயன் தரும் நல்ல செய்திகளை
நாம் பகிர்ந்து கொள்வதே இந்த ப்ளாகரின் சிறப்பு அல்லவா?!
பகிர்வுக்கி நன்றி திரு ப. கு. :):)

பெருபாலும் விவாதங்களை விட்டு விலகி விடுவேன்.
சந்த்ரு என்பவரின் பின்னூட்டம் படித்து சற்று அதிர்சியடைதேன் .
மற்ற எண்ணைகளை விடவும்,தேங்காய் எண்ணையில் பொதுவாக கொழுப்பு சத்து மிக அதிகம்
என்பதுதான் ஆய்வுகளில் உள்ள செய்தி. இது குறித்து நீண்ட நாட்கால, இன்னமும் கூட ஆய்வுகள்
நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அணைவரும் கூறும் முடிவு தேங்காய் எண்ணையில்தான் மிக அதிக
கொழுப்பு சத்துள்ளது என்பதே. இவரின் கூற்றுப்படி தேங்காய் எண்ணெய் மிகசரியானது என்றும் அதற்கு ஆயுர்வேத சான்றுகளும் தருகிறார்.
நிற்க, தமிழ் மருத்துவ முறைகள் அல்லது சித்தர்களின் மருத்துவ வழிமுறைகளில் எங்கெல்லாம் எண்ணெய் யை பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் நல்ல எண்ணெய் யை பயன் படுத்தும் வழிமுறைகளை காணலாம்.
மேலும் தமிழர்கள் வழக்கபடி சமையலுக்கு, பொரிப்பதற்கு அதிகம் பயன்பட்டது முன்பு கடலை எண்ணெய் , பின்னர் நல்ல எண்ணெய் இப்போது அவைகள் கூட மாறிவிட்டன. ஆனால் தேங்காய் எண்ணையை அதிகம் சமையலுக்கு பயன் படுத்தும் வழக்கம் நமிடையே இல்லை.கேரளா மற்றும் இலங்கையில் உள்ள பழக்கம் அது.தேங்காயையும் அதிகம் சமையலில் சேர்க்கும் பழக்கமும் அவ்வாறே.எப்படியோ, இது குறித்த விவாதங்கள் (நல்லமுறையில்) இங்கு தொடர்ந்தால் நமக்கு இன்னமும் விபரங்கள் கிடைக்கலாம்.

ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி சந்தேகமே வரலையா? பதிவு அவ்வளவு தெளிவா இருக்கா இல்லே ஒண்ணுமே புரியற மாதிரி இல்லையா? //


புரிஞ்சதாலதான் அமைதியா வந்துட்டேன் தல. இந்த பதிவுல கும்மி அடிக்க விரும்பல . அருமையா இருக்கு.

ஜெய்லானி said...

கக்கு சார் நீங்க சொன்னது முழுக்க சரி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி கக்கு- மாணிக்கம், இது மாதிரி ஆட்கள் எல்லாம் மூளைசலவை செய்யப்பட்டவர்கள், விவாதம் செய்ய இயலாது. பதிவைப் முழுதாகப் படிக்காமலே அவர் கமென்ட் போட்டிருக்கிறார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஜெய்லானி!

கொல்லான் said...

//செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்! //

ராம்சாமி,
சிறிது இல்ல, நிறையவே ஈன்சுட்டீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி கொல்லான்!

Foods4Smart said...

Sorry, I haven't read the post well before comment.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சந்துரு Chanthru said...
Sorry, I haven't read the post well before comment.//

இது நியாயம்! நன்றி சந்துரு!

எம் அப்துல் காதர் said...

டிஸ்கி இல்லாம இருக்கேன்னு பார்த்தா பி.கு தான் டிஸ்கியாமா இது என்ன தல நியாயம்?

எம் அப்துல் காதர் said...

யோவ் எப்ப செக்காளை தொறந்தே சொல்லவே இல்ல,, அது சரி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எம் அப்துல் காதர் said... 120
டிஸ்கி இல்லாம இருக்கேன்னு பார்த்தா பி.கு தான் டிஸ்கியாமா இது என்ன தல நியாயம்?

அது என்னய்யா டிஸ்கி, விஸ்கின்னு நாய்க்குட்டி பேரு மாதிரி இருக்கு, பன்னிக் குட்டி இருக்க இடத்துல அப்புடி வுடமுடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//எம் அப்துல் காதர் said... 121
யோவ் எப்ப செக்காளை தொறந்தே சொல்லவே இல்ல,, அது சரி!! //

சாருக்கு ரெண்டு லிட்டர் வெளக்கெண்ணை பார்சல்!

Anonymous said...

What about Canola Oil?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Anonymous said...
What about Canola Oil?//

அனானி ரொம்ப சரியான கேள்வி கேட்டிருக்கீங்க, பதிவுல அதையும் சேக்கலாம்னுதான் இருந்தேன், சரி இது நம்மாளுங்க அதிகமா பயன்படுத்துறதில்லைன்னு விட்டுட்டேன் (பதிவு சுருக்கமா இருக்கவும்தான்), இப்போ இங்கே நேரமாயிடுச்சி, நாளைக்கு பதில் சொல்றேன்! நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனானி, உங்களுக்கான பதில்:
Canola Oil, கனோலா எண்ணை என்பது இந்தியாவின் கடுகு எண்ணையில் ஒருவகை என்றும் சொல்லலாம். ஆலிவ் எண்ணைக்கு அடுத்து இதில்தான் அதிகமான w-3 உள்ளது. மேலும் இயற்கை எண்ணையில் 50% எருசிக் அமிலம் உள்ளது. கனோலா எண்ணையில் இந்த அமிலம் குறைக்கப்பட்டே தயாரிக்கப்படுகிறது. அதனால் தான் CANOLA (CANadian Oil, Low Acid) என்று அழைக்கப்படுகிறது. எருசிக் அமிலமானது நீண்ட நாள் பயன்பாட்டில் இதய நோயைத் தடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயதசையை காயப்படுத்துவதாக எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. எனவேதான் இந்த எண்ணையில் எருசிக் அமில அளவைக் குறைத்தபின்பே விற்கிறார்கள். சூடுபடுத்தும்போது எழும் புகை நுரையீரல் புற்றுநோயை அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாட்டு நிறுவனம், அமெரிக்க சர்க்கரை நோய் சங்கம் போன்றவை கனோலா எண்ணை முற்றிலும் பாதுகாப்பானதே என்று அறிவித்துள்ளன. இதற்குமேல் நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ராஜ நடராஜன் said...

நல்ல பதிவு.

ஆனால் பதிவின் பின்னூட்டக்காரர்கள் குழப்புற மாதிரி தெரியுதே.

பின்னூட்ட முத்துவை வருண் தேடிகிட்டு இருக்கிறார்.எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நல்லெண்ணையை குளிர்பதன பெட்டிக்குள் ஏன் வைக்க வேண்டும்.
நீரை வைத்தாலும் கூடத்தான் திடப் பொருளாகி விடுகிறது.

எண்ணைக்கு மாற்று சொல்லுங்கன்னா திராட்சை ரசம் ஊத்திப்பாருங்கன்னா

Wine is a flavouring agent for Red and White meat as per wine's color.

ராஜ நடராஜன் said...

//கிராமத்துல கடலை எண்ணயில் சமைச்சதை சாபிடுரவரையிலும் உடம்பு நல்லாத்தானயா இருந்தது, சிட்டிக்கு வட்ந்து எவ்வளவு சூதானமா இருந்தாலும், உடம்பு வீக்காதான் இருக்கு. இதிலிருந்து என்ன தெரியுது?//

கடல பார்க்கவும்,போடவும் சென்னை சிட்டிக்கு வந்துடனும்ன்னு தெரியுது.

முத்து said...

ராஜ நடராஜன் said... 127

நல்ல பதிவு.

ஆனால் பதிவின் பின்னூட்டக்காரர்கள் குழப்புற மாதிரி தெரியுதே.

பின்னூட்ட முத்துவை வருண் தேடிகிட்டு இருக்கிறார்.எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.///////////////


வந்துட்டேன்,என்ன இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும் அடிச்சரபடாது மீ பாவம்

முத்து said...

யாருப்பா வருண் உனக்கும் எனக்கும் எதுவும் வாய்க்கால் தகறாரு இல்லையே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன முத்து எங்கேயோ போயி வம்ப வெலைக்கி வாங்கிட்டு வந்துட்ட?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
யாருப்பா வருண் உனக்கும் எனக்கும் எதுவும் வாய்க்கால் தகறாரு இல்லையே///

நீ அந்தப் புள்ளைய கையப் புடிச்சி இழுத்தியா இல்லியா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன முத்து எங்கேயோ போயி வம்ப வெலைக்கி வாங்கிட்டு வந்துட்ட?////////////


என்ன விளையாடுறியா இது உன் ப்ளாக் என்கிட்டையே கேள்வி கேட்க்குரியா? யாருப்பா அந்த வருண்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
யாருப்பா வருண் உனக்கும் எனக்கும் எதுவும் வாய்க்கால் தகறாரு இல்லையே///

நீ அந்தப் புள்ளைய கையப் புடிச்சி இழுத்தியா இல்லியா?///////////

வருண் ஆம்பள புள்ள பேரு மாதிரி இல்ல இருக்கு ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன முத்து எங்கேயோ போயி வம்ப வெலைக்கி வாங்கிட்டு வந்துட்ட?////////////


என்ன விளையாடுறியா இது உன் ப்ளாக் என்கிட்டையே கேள்வி கேட்க்குரியா? யாருப்பா அந்த வருண்///


யோவ் உன்னத்தான்ய்யா மேடைக்கு கூப்புடுறாங்க. எதுக்கும் இந்த மஞ்சத்துண்ட தலைல போட்டுக்கிட்டுப் போ!

முத்து said...

வருண் சார் ,வருண் சார் எல்லாத்துக்கும் இந்த பன்னி தான் காரணம்,அவர் தான் எங்கையாவது போயி என் பெயரில் கமெண்ட் போடுறது வழக்கம்,நீங்க எது செய்யறதா இருந்தாலும் பன்னி கிட்டயே வைச்சுகோங்க அவர் தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் உன்னத்தான்ய்யா மேடைக்கு கூப்புடுறாங்க. எதுக்கும் இந்த மஞ்சத்துண்ட தலைல போட்டுக்கிட்டுப் போ!/////////////

கோத்து விடறதுன்னு முடிவு பண்ணிட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
வருண் சார் ,வருண் சார் எல்லாத்துக்கும் இந்த பன்னி தான் காரணம்,அவர் தான் எங்கையாவது போயி என் பெயரில் கமெண்ட் போடுறது வழக்கம்,நீங்க எது செய்யறதா இருந்தாலும் பன்னி கிட்டயே வைச்சுகோங்க அவர் தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்///

இப்பிடியெல்லாம் சொன்னா கலாக்காகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடியெல்லாம் சொன்னா கலாக்காகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்//////////////

கலா அக்கா தான் இப்படி சொல்ல சொன்னதே

Gayathri said...

வித்யாசமான பதிவு நல்லா இருக்கு

பருப்பு (a) Phantom Mohan said...

வருண் சார் வருண் சார், சட்டு புட்டுன்னு வாங்க சார்...பைட் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!

பருப்பு (a) Phantom Mohan said...

Mr. ராஜராஜன் நீங்களே ஏரியாவுக்கு புதுசா இருக்கீங்க. இதுல வருண் யாருன்னு சொன்னீங்கன்னா சந்தோசமா இருக்கும்.

ப.கந்தசாமி said...

என்ன ப.ரா., கடைல எண்ணெயெல்லாம் விக்கறாப்பல இருக்கு. கடலெண்ணை நல்லெண்ணையா வேணுமே, கெடைக்குமா, கூட்டம் ஜாஸ்தியா இருக்கு, நான் அப்பறமா, சாவகாசமா வர்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///DrPKandaswamyPhD said...
என்ன ப.ரா., கடைல எண்ணெயெல்லாம் விக்கறாப்பல இருக்கு. கடலெண்ணை நல்லெண்ணையா வேணுமே, கெடைக்குமா, கூட்டம் ஜாஸ்தியா இருக்கு, நான் அப்பறமா, சாவகாசமா வர்றேன்.///

வாங்க சார், சாருக்கு அஞ்சு லிட்டர் வேப்பென்ணை பார்சல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Gayathri said...
வித்யாசமான பதிவு நல்லா இருக்கு///

தேங்க்ஸ் மேடம்!

Jey said...

halo எச்சூஸ்மீ , கடைகுள்ள இருட்டாஅ இருக்கு, இருட்டுல யாராவது இருக்கனுகளா?.. ஹலோ ஹலோ....

முத்து said...

Phantom Mohan said...

வருண் சார் வருண் சார், சட்டு புட்டுன்னு வாங்க சார்...பைட் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!///////////


என்ன ஒரு வில்லத்தனம் இரு உன்னை don't do வுடன் கோத்து விடறேன்

முத்து said...

Jey said...

halo எச்சூஸ்மீ , கடைகுள்ள இருட்டாஅ இருக்கு, இருட்டுல யாராவது இருக்கனுகளா?.. ஹலோ ஹலோ....//////////

இருட்டா இருந்தா ஆற்காட்டாரிடம் போயி கேளு

முத்து said...

149

முத்து said...

ஐய்யா ட்ரைனிங் எக்ஸ்டேன்சியன் ஆகிடுச்சு

Unknown said...

வணக்கம் தல,
நான் உங்களோட விசிறி, மேலும் நான் மிகவும் ரசிப்பதே கவுண்டமணியின் காமெடிதான்..அவரின் பெயரில் நீங்கள் செய்யும் காமெடி நான் மிகவும் ரசிப்பவை..

இனி கமேன்டிலும் தொடர்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
வணக்கம் தல,
நான் உங்களோட விசிறி, மேலும் நான் மிகவும் ரசிப்பதே கவுண்டமணியின் காமெடிதான்..அவரின் பெயரில் நீங்கள் செய்யும் காமெடி நான் மிகவும் ரசிப்பவை..

இனி கமேன்டிலும் தொடர்கிறேன்...//


என்ன சார் இப்பிடி (ஆனந்த) அதிர்ச்சி கொடுத்திட்டீங்க, ரொம்ப நன்றி சார்! நான் இப்ப உங்க கடையில தான் இருக்கேன்! நல்லா போயிக்கிட்டு இருக்கு!

Kannan said...

உங்கள் தமிழ் நடை மிகவும் அருமை.

எம் அப்துல் காதர் said...

இப்படியெல்லாம் ஆச்சாரம் கம்மியா எழுதக் கூடாதுன்னேன்!

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா நீ இன்னும் முளிக்கலையா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
ஏம்பா நீ இன்னும் முளிக்கலையா ????//

இல்ல தல, வியாழன் வெள்ளின்னாலே நான் மட்டையாயிடுவேன், இனி ஏதுவா இருந்தாலும் சனிகெழமதான்!

ஷங்கர் said...

பன்னி சார் ,
நான் இந்த மாசம் திருச்சி போறேன் ,ஒரு பரீட்சைக்கு ,அங்கே NATIONAL INSTITUTE OF TECHNOLOGY எங்கே இருக்கு சார் ,ட்ரைன்ல தான் போறேன் பஸ் நம்பர் எதாவது இருந்த சொல்லுங்க ....., நான் செங்கல்பட்டு தாண்டியதில்லை ;))நீங்க திருச்சி என்று பதிவுல பார்த்தேன் அதான் கேட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஷங்கர் said... 158
பன்னி சார் ,
நான் இந்த மாசம் திருச்சி போறேன் ,ஒரு பரீட்சைக்கு ,அங்கே NATIONAL INSTITUTE OF TECHNOLOGY எங்கே இருக்கு சார் ,ட்ரைன்ல தான் போறேன் பஸ் நம்பர் எதாவது இருந்த சொல்லுங்க ....., நான் செங்கல்பட்டு தாண்டியதில்லை ;))நீங்க திருச்சி என்று பதிவுல பார்த்தேன் அதான் கேட்டேன் ///

ஷங்கர், NIT தஞ்சாவூர் ரோட்ல இருக்கு!, திருச்சில இருந்து தஞ்சாவூர் போற எல்லா பஸ்சும் அதுவழியாத்தான் போகும். நீங்க திருச்சி ஜங்சன்ல இறங்கி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் போயிடுங்க (ஜங்சன்ல இருந்து பக்கம்தான், ஒரு 10- 15 நிமிடம் நடக்கனும், இல்லே அங்கேயே நின்னு டவுன் பஸ்ல மத்திய பேருந்து நிலயம் போகலாம். அங்கே முதல் பிளாட்பார்மில் (கிழக்கிலிருந்து) தஞ்சை செல்லும் பேருந்துகள் நிற்கும், NIT (REC) நிற்குமா என்றூ கேட்டுவிட்டு ஏறிக்கொள்ளுங்கள், NIT-க்கு பஸ் திருவெரும்பூர் தாண்டி ஒரு 20 நிமிசமாவது ஓடும், கண்டக்டரிடம் கேட்டு இறங்கிக் கொள்ளுங்கள், மெயின் ரோட்டிலேயே NIT கேட் உள்ளது.

ஷங்கர் said...

ரொம்ப நன்றி சார் ...,

ப.கந்தசாமி said...

ஆஜர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஷங்கர் said...
ரொம்ப நன்றி சார் ...,///

என்ன சார் இதுக்குப் போயி? நல்லா பரிட்சைய எழுதிட்டு வாங்க (அப்பிடியே திருச்சில இப்போ என்ன படம் (?) ஓடுதுன்னு பாத்துக்கிட்டு வாங்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
ஆஜர்.//

வாங்க (கௌரவ) தலைவரே!

முத்து said...

இவ்வளவு நாளா ஒரே எண்ணையை உபயோகபடுத்த கூடாது சீக்கிரம் எண்ணையை மாத்து

ஷங்கர் said...

///அப்பிடியே திருச்சில இப்போ என்ன படம் (?) ஓடுதுன்னு பாத்துக்கிட்டு வாங்க!///

கண்டிப்பா !!!நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நினைச்சிட்டேன் எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நொடி என்னுடைய முதல் வேலை அது தான் சார் :))

அந்த அனானி கிட்டேயும் சொல்லிடுங்க

Anonymous said...

நல்லா தாளிச்சுருக்கீங்க பன்னி சார்..

சமச்சதெல்லாம் சரிதான்.. சாப்டீங்களா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம உருப்படியா பண்ணுற வேலையே அதுமட்டும்தானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி!
@Kannan
@எம். அப்துல் காதர்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஷங்கர், NIT தஞ்சாவூர் ரோட்ல இருக்கு!, திருச்சில இருந்து தஞ்சாவூர் போற எல்லா பஸ்சும் அதுவழியாத்தான் போகும். நீங்க திருச்சி ஜங்சன்ல இறங்கி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் போயிடுங்க (ஜங்சன்ல இருந்து பக்கம்தான், ஒரு 10- 15 நிமிடம் நடக்கனும், இல்லே அங்கேயே நின்னு டவுன் பஸ்ல மத்திய பேருந்து நிலயம் போகலாம். அங்கே முதல் பிளாட்பார்மில் (கிழக்கிலிருந்து) தஞ்சை செல்லும் பேருந்துகள் நிற்கும், NIT (REC) நிற்குமா என்றூ கேட்டுவிட்டு ஏறிக்கொள்ளுங்கள், NIT-க்கு பஸ் திருவெரும்பூர் தாண்டி ஒரு 20 நிமிசமாவது ஓடும், கண்டக்டரிடம் கேட்டு இறங்கிக் கொள்ளுங்கள், மெயின் ரோட்டிலேயே NIT கேட் உள்ளது.

//



ஓ......

Anonymous said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

பெற்றுக்கொள்ளவும்.

Guruji said...

தலைவரே!

Swengnr said...

மிஸ்டர் பன்னிகுட்டி சார், நான் ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்கேன், மரியாதையா வந்து வோட்டு போட்டு கமெண்ட் போட்டு போங்க!

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!