Monday, March 28, 2011

உலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா?

உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது?  ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார்! நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா? தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!

அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.

நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு, தென்னை மரத்துல எல்லாம் ஏறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பாத்ததில்ல. இப்போ நம்மூர்ல கிட்டத்தட்ட இது அழிஞ்சுடுச்சுன்னே நெனைக்கிறேன். இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats)சேர்ந்தவை. 2003-ல் சார்ஸ் நோய் பரவிய போது இந்தப் பூனை வகைகளில் இருந்தும் தொற்றியதாம். அதெல்லாம் இருக்கட்டும், இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஹி..ஹி.... "மேட்டரே” அங்கதானே இருக்கு....!

அது என்ன சம்பந்தம்னு படமாவே பாத்துடுங்களேன்...!

இதுதாங்க அந்த மரநாய்

மரநாய் காபி பீன்சை சாப்புடுது

நிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க

காபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கக்கா போய்டும்

கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...


காஸ்ட்லி காபி ரெடி....!

என்ன நம்பலையா.....? நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!

மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க சார். இதிலும் டூப்ளிக்கேட் வருதாம்.  அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க. ஏற்கனவே குடிச்சவங்க யாரும் இருந்தீங்கன்னா வெக்கப்படாம அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கலாமே...?

மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம்.
நன்றி விக்கிப்பீடியா, கூகிள்

245 comments:

«Oldest   ‹Older   201 – 245 of 245
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
அங்குட்டு வாங்க...

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_28.html///////

வந்துட்டம்ல........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கக்கு - மாணிக்கம் said...
வழக்கம்போல நான்தான் லேட்டா?
என்னருமை பன்னிகுட்டி ,நீ ஆயிரம் தான் சொன்னாலும் நாங்க பில்டர் காப்பி குடிகிறத விடுறதா இல்லை.
வேல மெனெக்கெட்டு பூனை ஆயி போனதெல்லாம் கூகிள் ல தேடி எடுத்து போட்டு ஏனைய்யா எங்கள மாறி காப்பி ரசிகர்களா டபாய்கிற?
//////////

வாங்கண்ணே... பில்டர் காப்பியெல்லாம் இந்தமாதிரி பண்றதில்ல, அந்த ஒரு டைப் காப்பி மட்டும்தான் ’அப்ப்டி’.... அதுனால கவலப்படாம அடிங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அப்பாவி தங்கமணி said...
உவ்வே.. காப்பி சாப்பிடற ஆசையே போய்டும் போங்க...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஒரு புது விசியத்த தெரிஞ்சுகிட்டேன்... நன்றி...:)
////////

ஹஹஹா வாங்க வாங்க, நன்றி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Chitra said...
I saw a program about this on TV. It was interesting. :-)
///////

நன்றிங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Mohamed Faaique said...
நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க.../////
இதெல்லாம் ஒரு பொழப்பா......

இப்போதான் office boyகிட்ட ஒரு கப் காபி ஓடர் பண்ணிடு இத படிக்கலாம்’னு உக்கார்ந்தேன். வெச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு...


அன்று ஒரு நாள் ஈ மெயில்’ல காபி கொட்டைகல அடுக்கின போல அந்த போட்டோ வந்துச்சு.. நானும், எப்பிடிதான் இப்படி அடுக்கி வெச்சிருக்கானுங்களோ’னு நெனச்சேன்,இதுதான் மேட்டர்’ஆ?//////

ஹஹஹா... எல்லா காபியும் அந்த மாதிரி இல்ல, அந்த ஒரு டைப் மட்டும்தாங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Mohamed Faaique said...
பன்னிகுட்டி ராமசாமி ப்லோக்’ல இப்படி ஒரு “நல்ல” மேட்டர் படிச்சேன்னு சொன்னா உலகம் நம்புமா?////////

நம்பனும், நம்பித்தான் ஆகனும்... நெலம அப்படி......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ப்ரியமுடன் வசந்த் said...
மேட்டர் புதுசா இருக்கு அதையே உங்க பாணியில நகைச்சுவையா சொல்லியிருக்கிறது பிடிச்சிருக்கு மாம்ஸ்..! இந்த மரநாய் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கென்னவோ நீங்க நிறைய படிச்சவர்ன்னு தோணுது !!
///////

ஹஹஹா வாய்யா மாப்பு..... நன்றி....! மரநாய் நம்ம ஊரு மிருகம்தான்... இப்போ கொஞ்சம் குறைஞ்சு போச்சு...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

.! இந்த மரநாய் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கென்னவோ நீங்க நிறைய படிச்சவர்ன்னு தோணுது !!/

ஹி..ஹி பன்னி படிச்ச பயதான்...
இதை நான் வழிமொழிகிறேன்,,

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)))))))))))))

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே...நீங்க எம்மாம்பெரிய பதிவரு....நீங்க பொய்யா சொல்லப்போறீங்க....நம்புறேன்

மனம் திறந்து... (மதி) said...

சரியாப் போச்சு! இந்த மரநாய் யாரு, அந்தக் காபிக்கொட்டை யாரு, எந்த வம்புக்கும் போவாம ஊர் ஓரமா காபிக்கடை வைக்கப் போவது எந்தக் கட்சின்னெல்லாம் நீங்க சொல்ல வந்த பாய்ண்டை எல்லாரும் சுத்தமா மிஸ் பண்ணிட்டாங்க போலிருக்கே! இவ்வளவு தான் தெளிவு நம்ப மக்களுக்கு? ஹையோ, ஹையோ!!! :(((

எம் அப்துல் காதர் said...

நல்ல மேட்டர். இந்த காபீ எங்க கிடைக்கும் பன்னி சார்!!

சரியில்ல....... said...

இது...இது...இத... இப்பிடி...எப்பிடி... இத எப்பிடி நம்புறது? ச்சேய். . ஒரே கலீயீ மேட்டரா இருக்கே? முருகா... இந்த லோகத்துல எல்லாமே கருமம் கண்றாவியாவே இருக்கே?

நிரூபன் said...

வணக்கம் சகோ, காஸ்ட்லி காப்பி பற்றிய அறிமுகத்திற்கும், தகவல்களுக்கும் நன்றி. இந்தக் காலத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து முதலிய இடங்களில் ஸ்பைடர், கரப்பொத்தான் பூச்சி முதலியவற்றைச் சாப்பிட்டு மகிழ்கிறார்கள் எனும் போது இந்தக் காப்பி அவர்களுக்கு ஒரு ஜு.ஜுயுப்பி..

உங்களின் வழமையான நகைச்சுவையில் நின்றும் விலகி சமூகம் சார் பொது அறிவுப் பதிவாக இது இருக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
சூப்பர்.
//////

அருமை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
.! இந்த மரநாய் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கென்னவோ நீங்க நிறைய படிச்சவர்ன்னு தோணுது !!/

ஹி..ஹி பன்னி படிச்ச பயதான்...
இதை நான் வழிமொழிகிறேன்,,///////

ஆமாய்யா படிச்ச பயதான்யா... உன்னவிட ஒருவகுப்பு கம்மியாத்தான்யா படிச்சிருக்கேன்... போதுமா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
:-)))))))))))))
/////


:-))))))))))))))))))))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
அண்ணே...நீங்க எம்மாம்பெரிய பதிவரு....நீங்க பொய்யா சொல்லப்போறீங்க....நம்புறேன்
//////////

யோவ் என்னய்யா இது கண்டமேனிக்கி உள்குத்தா இருக்கு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மனம் திறந்து... (மதி) said...
சரியாப் போச்சு! இந்த மரநாய் யாரு, அந்தக் காபிக்கொட்டை யாரு, எந்த வம்புக்கும் போவாம ஊர் ஓரமா காபிக்கடை வைக்கப் போவது எந்தக் கட்சின்னெல்லாம் நீங்க சொல்ல வந்த பாய்ண்டை எல்லாரும் சுத்தமா மிஸ் பண்ணிட்டாங்க போலிருக்கே! இவ்வளவு தான் தெளிவு நம்ப மக்களுக்கு? ஹையோ, ஹையோ!!! :(((
/////////

நீங்க பேசாம தேர்தல்ல நில்லுங்கண்ணே... ஜனாதிபதியாகிடலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எம் அப்துல் காதர் said...
நல்ல மேட்டர். இந்த காபீ எங்க கிடைக்கும் பன்னி சார்!!
////////

வாங்க பாஸ், இது இந்தோனேசியாவுல கிடைக்குதாம்.... மலேசியா, சிங்கையிலும் கூட ட்ரைப் பண்ணி பாக்கலாம்..... குடிக்காம விடுறதில்லன்னு முடிவே பண்ணிட்டீங்க போல...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சரியில்ல....... said...
இது...இது...இத... இப்பிடி...எப்பிடி... இத எப்பிடி நம்புறது? ச்சேய். . ஒரே கலீயீ மேட்டரா இருக்கே? முருகா... இந்த லோகத்துல எல்லாமே கருமம் கண்றாவியாவே இருக்கே?
////////

யோவ் ஒலகத்துல அவனவன் என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான், இதுக்கே இப்படி கதறுனா எப்பிடி.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
வணக்கம் சகோ, காஸ்ட்லி காப்பி பற்றிய அறிமுகத்திற்கும், தகவல்களுக்கும் நன்றி. இந்தக் காலத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து முதலிய இடங்களில் ஸ்பைடர், கரப்பொத்தான் பூச்சி முதலியவற்றைச் சாப்பிட்டு மகிழ்கிறார்கள் எனும் போது இந்தக் காப்பி அவர்களுக்கு ஒரு ஜு.ஜுயுப்பி..

உங்களின் வழமையான நகைச்சுவையில் நின்றும் விலகி சமூகம் சார் பொது அறிவுப் பதிவாக இது இருக்கிறது.
/////////

நன்றி நிரூபன்...!

நிரூபன் said...

சகோ நம்ம புளொக்கிற்கும் வாங்களேன். பெரியவங்க எல்லோரையும் இன்விட்டேசன் அனுப்பினால் தான் கூப்பிட முடியுமோ?
நேசமுடன் நிரூபன்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நலமா?
நான் எல்லா நண்பர்களையும் பேஸ் புக்கிலை அட் பணப் போயி என் Friend Request ஐ block பண்ணி வைச்சிருக்காங்க. எப்படியாவது இதிலிருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்க. அவங்களுக்கு மெசேஜ் அனுப்பி பார்த்தேன். அது கூட சரியாகவில்லை.

Sorry, we can't send your request
Because sending requests to strangers is considered spam, your friend requests have been blocked for 14 days. Please visit the help center to learn more or let us know if you believe we've made a mistake

my facebook
http://www.facebook.com/profile.php?id=100001503893018

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
வணக்கம் சகோதரம், நலமா?
நான் எல்லா நண்பர்களையும் பேஸ் புக்கிலை அட் பணப் போயி என் Friend Request ஐ block பண்ணி வைச்சிருக்காங்க. எப்படியாவது இதிலிருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்க. அவங்களுக்கு மெசேஜ் அனுப்பி பார்த்தேன். அது கூட சரியாகவில்லை.////////

இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலியே? தெரிஞ்ச நண்பர்கள் ஏதாவது சொல்றாங்களான்னு பார்ப்போம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
சகோ நம்ம புளொக்கிற்கும் வாங்களேன். பெரியவங்க எல்லோரையும் இன்விட்டேசன் அனுப்பினால் தான் கூப்பிட முடியுமோ?
நேசமுடன் நிரூபன்.///////

அப்படியெல்லாம் இல்லை நிரூபன்.... அவ்வப்போது வரும் நேரக்குறைவும் மறதியும்தான் காரணம்.... இப்போ போயிட்டு வந்தாச்சு..!

டக்கால்டி said...

Asusal I am late partner...But i am the first person to read this post...

Anisha Yunus said...

நரசூஸ் காஃபி, பேஷ் பேஷ் ரெம்ப நன்னாயிருக்குமே.... அந்த காஃபியே வாழ்க வாழ்க!!!

Thilse Senthil said...

ஒரு தடவ குடிச்சேன்(சோம்),. நம்ம ஆபிசுல ஒரு மலேசியன் அண்ணாத்த எல்லாருக்கும் கொடுத்துச்சு.. எல்லோரும் குடிச்சு முடுச்சதுகு அப்புறம் இதே படங்களோட மெயிலு அனுப்பி வச்சு'சு.. நம்ம அதுக்கெல்லாம் அசருவோம.. எவ்ளோ குடிச்சு பார்த்தாச்சு.. கழுத (மர நாய்) இதையும் குடிசாச்சுனு போக வேண்டியது தான்..
டேஸ்டு கொஞ்சம் காபி மாதிரி + 'துவக்குற மாதிரி இருக்கும்'
ஆனா எங்க வெள்ளகார மேனேஜரு குடிக்கும் பொது ரசிச்சு ருசிச்சு குடிச்சுட்டு, மெயில பார்த்ததும் சிரிச்சான் பாருங்க ஒரு சிரிப்பு.. அப்டியே கண்ணுக்குள்ள இருக்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// டக்கால்டி said...
Asusal I am late partner...But i am the first person to read this post...
/////////

விடுங்க பார்ட்னர், நமக்குள்ள என்ன...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அன்னு said...
நரசூஸ் காஃபி, பேஷ் பேஷ் ரெம்ப நன்னாயிருக்குமே.... அந்த காஃபியே வாழ்க வாழ்க!!!
////////

என்னங்க இது, ரொம்ப ஒசத்தியான பெசல் காப்பியவே வேணான்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Thilse Senthil said...
ஒரு தடவ குடிச்சேன்(சோம்),. நம்ம ஆபிசுல ஒரு மலேசியன் அண்ணாத்த எல்லாருக்கும் கொடுத்துச்சு.. எல்லோரும் குடிச்சு முடுச்சதுகு அப்புறம் இதே படங்களோட மெயிலு அனுப்பி வச்சு'சு.. நம்ம அதுக்கெல்லாம் அசருவோம.. எவ்ளோ குடிச்சு பார்த்தாச்சு.. கழுத (மர நாய்) இதையும் குடிசாச்சுனு போக வேண்டியது தான்..
டேஸ்டு கொஞ்சம் காபி மாதிரி + 'துவக்குற மாதிரி இருக்கும்'
ஆனா எங்க வெள்ளகார மேனேஜரு குடிக்கும் பொது ரசிச்சு ருசிச்சு குடிச்சுட்டு, மெயில பார்த்ததும் சிரிச்சான் பாருங்க ஒரு சிரிப்பு.. அப்டியே கண்ணுக்குள்ள இருக்கு..
/////////

வாங்க செந்தில் ரொம்ப நன்றி, ஒருவழியா அந்தக் காபி குடிச்ச ஒரு ஆளு வந்துட்டீங்க.... நீங்க சொல்றதை பார்த்தா எல்லோரும் மேட்டர் தெரியாமத்தான் குடிச்சிருப்பீங்க போல...? அப்போ இனி சான்ஸ் கெடச்சா குடிப்பீங்களா செந்தில்?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

panni kutty chellooo ...

my new post :

யாரும் இதை படிக்காதிர்கள் , அதிர்ச்சி தாங்க முடியாது . . .

http://rockzsrajesh.blogspot.com/2011/03/blog-post.html

சந்திர கிருஷ்ணா said...

நம்ம ஊர்ல மட்டும் என்ன வாழுதாம்?

எஸ்டேட்களில் காப்பி பழங்களை சாப்பிட்டு அட்டுழியம் பண்ணும் குரங்குகளை விரட்டும் எஸ்டேட்காரர்கள் குரங்கு கக்காவுல இருக்குற காப்பி கொட்டைகளை தவறவிடுவதில்லை!

எஸ்டேட் பகுதியில் வசிக்கும் நண்பர்களை கேளுங்கள் உண்மை புரியும்!

சந்திர கிருஷ்ணா said...

நம்ம ஊர்ல மட்டும் என்ன வாழுதாம்?

எஸ்டேட்களில் காப்பி பழங்களை சாப்பிட்டு அட்டுழியம் பண்ணும் குரங்குகளை விரட்டும் எஸ்டேட்காரர்கள் குரங்கு கக்காவுல இருக்குற காப்பி கொட்டைகளை தவறவிடுவதில்லை!

எஸ்டேட் பகுதியில் வசிக்கும் நண்பர்களை கேளுங்கள் உண்மை புரியும்!

இராஜராஜேஸ்வரி said...

ஆஸ்திரேலிய கடையில் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். நிறைய முறை சுத்தம் செய்து தான் தயாரிப்பர்களாம்.மிகுந்த விலை அதிகம் கொண்டது.உடல் நலனுக்கு உகந்தது என்றும் சொன்னார்கள்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃலூவா காபிஃஃஃ

இப்பத் தாங்க அறியுறன் மிக்க நன்றி விக்கியிடம் போயிட்டு வாறன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

சாமக்கோடங்கி said...

எப்படி எல்லாம் யோசிக்கிராணுக.. ஆனா இந்த மரநாய்கள் இதன் மூலம் சந்தோஷமாக உண்டு உயிர்வாழும்.. அதுவே போதும் எனக்கு..

test said...

சூப்பர் மேட்டர் மாம்ஸ்! ஆனா எனக்கு வேணாம்! :-)

Unknown said...

ஹாஹா ஹா.. செம மேட்டரு.. எப்படியெல்லாம் யோசிக்கறானுங்க.. :--)

Tamil Movies said...

மிக நல்ல பதிவு நன்றி :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யோவ் பண்ணி புதுசா பதிவு போட்டு இருக்கேன் வந்து சேரு , ஒவ்வொரு பதிவுக்கு உன்ன வெத்தலை பாக்கு வச்சு அழைக்க வேண்டி இருக்கு .
என்ன கொடுமை சார் இதெல்லாம் ?

தலை எழுத்து . ..

http://rockzsrajesh.blogspot.com/2011/05/1.html

பதிவு : தமிழ் வழி கல்வி அவசியமா ? (பாகம் -1)

Anonymous said...

என்ன புதுசா பதிவு எதையும் காணல! உக்காந்து ஒரு இடத்தில ஆணி புடுங்காம, ஊர் ஊர் போறீங்களோ ?

பொதிகையரசு

Anonymous said...

ஷர்புதீன்,

கூச்சப்படாமல் கலக்குங்க

Anonymous said...

இங்க ஒரு வீட்டில கொடுத்தாங்க. முதல் வாய் வைச்ச் பிறகு தான் அது காப்பியோட பெயர் சொன்னாங்க. வாயில் எடுத்ததை முழுங்கவும் முடியாமல் வெளிய துப்பவும் முடியாமல் ஒரு இரண்டு நிமிடம் நான் பட்ட கஷ்டம் இருக்கே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். மனுசா இவனுங்க. சை.

«Oldest ‹Older   201 – 245 of 245   Newer› Newest»