Saturday, October 9, 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!

இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் )

இத்தகவலை மேலும் பகிர்பவர்களுக்கும், உதவுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

21 comments:

கொல்லான் said...

ராம்சாமி, இன்னும் தூங்கலியா?

கொல்லான் said...

இது மாதிரி கோவைக்கும் ஏதேனும் உள்ளனரா?

கொல்லான் said...

நம்மால நாலு பேருக்கு உதவ முடிஞ்சா அது சந்தோசம் தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இல்ல சார், இன்னிக்கு செம ஆணி, சரி எப்பிடியும் இதை மட்டும் பதிவுல ஏத்திட்டு படுப்போம்னுதான் உக்காந்தேன்!, கோவைக்கு எதுவும் இருக்கமாதிரி தெரியவில்லை!

கொல்லான் said...

//உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.//

கண்டிப்பா விடிஞ்சதும் தொடர்பு கொள்கிறேன்.

கொல்லான் said...

உங்க தொடர்பு எண்ணை சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நன்றி சார்!

கொல்லான் said...

இந்த மாதிரி நல்ல காரியம் செய்ய என்னைத் தூண்டியதற்கு நான் தான் நன்றி சொல்லணும்.

கொல்லான் said...

இங்க வருசா வருஷம் வசதியில்லா மாணவர்களுக்கு (ஒரு பத்து பேர்) துணி, புத்தகம், எல்லாம் செஞ்சிட்டு வர்றேன். எதோ என்னால் முடிஞ்சது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் நான் இந்தியாவுல இல்ல. நீங்க அந்த வெப்சைட் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்க், ப்ளீஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கொல்லான் said...
இங்க வருசா வருஷம் வசதியில்லா மாணவர்களுக்கு (ஒரு பத்து பேர்) துணி, புத்தகம், எல்லாம் செஞ்சிட்டு வர்றேன். எதோ என்னால் முடிஞ்சது.///

ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு!

கொல்லான் said...

சரிங்க ....

நான் பாத்துக்கறேன்.

Chitra said...

உதவி செய்ய ஊக்கப்படுத்தும் நல்ல தொடர் பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

OK Sir

எஸ்.கே said...

செய்கிறோம் நண்பரே!

Anonymous said...

உதவி செய்வோம் நண்பரே

Anonymous said...

இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே..//
அடடா...எல்லா ஊர்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு வரலாம்....

பருப்பு (a) Phantom Mohan said...

தரமான பதிவத்தான்யா போட்டிருக்க.

நல்ல விசயம்.

மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தெள்ளவாரித்தனம் பண்றவன் எல்லாம், கொஞ்சமாது புண்ணியம் தேட உதவி பண்ணுங்க.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி என் பங்கு உதவியை செய்கிறேன்.

NaSo said...

செய்யறோம் பன்னிகுட்டி சார்!!

செல்வா said...

சந்தோஷ் அண்ணன் ப்ளாக்ல படிச்சேன்..
அவசியமான பதிவும் கூட அண்ணா ..

geethappriyan said...

நல்ல இடுகை நண்பா
இதுபோல நானும் ஒரு இடுகை போடறேன்.