Tuesday, March 15, 2011

எங்க ஊரு கிரிக்கெட்டுக்காரன்...



நம்ம பதிவர்கள்/நடிகர்கள் சிலர் உலகக் கோப்பை கிரிக்கெட் டீம்ல எதிர்பாராத விதமா இடம் புடிச்சு ஒரு மேட்ச்ல கலந்துக்கிட்டாங்க. டீம் கேப்டன் வழக்கம் போல நம்ம பெரிய டாகுடரு புர்ச்சி களிங்கர்தான். 

பர்ஸ்ட் மேட்ச் ஏதோ ஒரு சொத்த டீமோட வெள்ளாடுறாங்க. டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தாச்சு, கேப்டனுக்கே கேப்டன் பட்டாபட்டி, சிங்கையின் சிறுத்தை சிரிப்பு போலீஸுடன் களம் இறங்குகிறார்.

பட்டா நேராக அம்பையரிடம் வருகிறார்.

உங்க பேரு டோமரா...?

இல்லை..

உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா?

தெரியாது..

அட்லீஸ்ட் எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீயவாவது தெரியுமா?

தெரியாது தெரியாது தெரியாது.......

யோவ் யார்யா இந்தாள அம்பையர் ஆக்குனது, இவரு இருந்தா நாங்க வெள்ளாட முடியாதுய்யா...

(எதிர் கேப்டன் ஓடிவந்து)... சார் சார் சும்மா வெள்ளாடுங்க சார், மேட்ச் முடியறதுக்குள்ள அவருக்கு நாங்க எப்படியும் ஜெர்மன் கத்துக் கொடுத்துடுறோம்.

அப்போ அது வரைக்கும் எனக்கு அவுட் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!

கொஞ்ச நேரம் மேட்ச் நடக்கிறது. சிரிப்பு போலீஸ் பேட்டிங் செய்கிறார். தூக்கி அடிக்கிறார், எளிதாக கேட்ச் பிடித்து விடுகிறார்கள்.

யோவ் வெண்ணை ஒழுங்கா பாத்து அடிக்க வேணாமா?

இல்ல பட்டா... அந்த பாலை மட்டும் மிட்விக்கெட் பக்கமா அடிச்சிருந்தேன்னா சிக்சர் போயிருக்கும்..

அப்போ அடிச்சிருக்க வேண்டியதுதானே?

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?

த்தூ.... போடா... போயி மங்குனிய அனுப்பி வைய்யி... அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

மங்குனி வந்து பேட்டிங் செய்கிறார். முதல் பாலிலேயே கிளீன் போல்ட்...

யோவ் மங்குனி என்னய்யா அவனுக கிட்ட காசு வாங்கிட்டியா?

அட போய்யா நம்மளை நம்பி எவனாவது கொடுப்பானா...? ரொம்ப நாளா பதிவே எழுதலியே, இந்த மேட்ச வெச்சு ஒரு பதிவு தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...

அடுத்து டெர்ரர் பாண்டியன் வர்ரார்.  பால் காலில் படுகிறது, LBW கொடுக்கப்படுகிறது. உடனே கோபமாக அம்பையரிடம் செல்கிறார்.

ஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க? உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி...  மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...

அடுத்து சின்ன டாகுடர் பேட்டை சுழற்றியபடி வருகிறார். பின்னணியில் கைத்தட்டல், கரகோஷம், விசில் சத்தம் வருகிறது. 

யோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது?

ங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச்சிருக்கேன்....

இதெல்லாம் கரெக்டா பண்ணுங்கடா... ங்கொய்யால மொதல்ல போயி ஒழுங்கா வெளையாடுற வழிய பாருய்யா...

பவுலர் பால் போடுகிறார். பால் மிஸ்சாகி கீப்பரிடம் போகிறது.

அம்பையருங்ணா என்னங்ணா பால் ரொம்ப சிறுசா இருக்கு.. போயி நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பெருசா எடுத்துட்டு வாங்ணா....

மிஸ்டர் இது ஃபுட்பால் இல்ல, கிரிக்கெட்...

ஓ அப்படியா... இப்போ என்ன பண்ணனும்...?

கிழிஞ்சது.... அந்த பேட்டை வெச்சு பாலை அடி... போதும்

இருக்கி சுத்தி திருப்பி அடிக்கனுமா?

அதுக்கு வேற ஒருத்தரு இருக்காரு, நீ பேசாம ஆடு....

சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா....

யோவ்...  இப்போ எதுக்கு தம் கட்டுறே? .... சவுண்ட கம்மி பண்ணு!

ங்ணா.... அப்பிடியே ஒன் டூ த்ரீ சொல்லுங்ணா...

யோவ்... இது சினிமா ஷூட்டிங் இல்ல... மேட்சுய்யா.... மேட்சு....!

அடுத்த பாலில் கிளீன் போல்ட்... சோகமாக சின்ன டாகுடர் வெளிய வருகிறார்.

இதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்குத் தெரியும். அதுக்காகத்தான் நைனா மேடத்தை பாக்க போயிருக்கார். நாளைக்கு மெரினா பீச்சில் இதை கண்டித்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடக்கும்... அதில் நைனா வேலாயுதம் படத்தில் உள்ள ஒரு சூப்பர் குத்துப் பாட்டு பத்தி பேசுவார்..!

அடுத்து தொங்க பாலு இறங்குகிறார். 

அய்யய்யோ கிரவுண்ட்ல பத்து தடியனுங்க சும்மா வெட்டியா நிக்கிறானுகளே, வந்தானுகன்னா எலக்சனுக்காவது ஆகுமே? மேட்சு முடிஞ்ச உடனே கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டுப் போயி பேர் வாங்கிட வேண்டியதுதான்.

மறுபடியும் ஒரு LBW... அடுத்து கண்கள் துடிக்க ஆக்ரோஷமாக கேப்டனே களத்தில் இறங்குகிறார். 

ஊழல் இல்லாத மேட்ச் நடத்தனும் அதுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன், ஆனா சொல்ல மாட்டேன்.

அதெல்லாம் நாங்க பாத்துகிறோம், நீங்க மொதல்ல வெள்ளாடுங்க கேப்டன்!

கேப்டனுக்கும் LBW கொடுக்கப்படுகிறது. கேப்டன் நேராக அம்பையரிடம் செல்கிறார்.

சார், இதுவே அந்த டீம்ம்மா இருந்தா கொடுத்திருப்பீங்களா சார்....? இன்னிக்கு மட்டும் எங்களுக்கு மூணு LBW கொடுத்திருக்கீங்க, இது தப்பு, ஏன்னா இதுவரை ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தாறு மேட்ச் விளையாடி இருக்காங்க, அதுல ரெண்டாயிரத்து நூத்தி இருபத்து மூணு LBW கொடுத்திருக்காங்க, கணக்குப் பாத்தா ஒரு மேட்சுக்கு 1. 37 LBW தான் வருது, ஆனா நீங்க மூணு கொடுத்திருக்கீங்க, இதுக்காக நான் கலங்கிட மாட்டேன். மேட்ச் முடிஞ்ச உடனே உங்களை விருதகிரி பாக்க வெப்பேன்.... அப்போ எனக்கு ஊத்திக் கொடுக்க தயாரா இருங்க அம்பையர் சார்...!

பெரிய டாகுடரு வெளியேற, தோனி உள்ளே வருகிறார். ரொம்ப நேரமாக ஒவ்வொரு பாலா அடிக்க முயற்சி பண்ணுகிறார். ஆனா முடியல. பால் பேட்டில் படவே கூச்சப்படுகிறது. ட்ரிங்ஸ் சிகுனல் காட்டுகிறார். பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.

வெங்கட் என்னய்யா இது நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் பால் பேட்டிலேயே பட மாட்டேங்கிதே?

ஏன் தோனி உங்க ஸ்பெசல் ஹெலிக்காப்டர் ஷாட்ட அடிச்சுத் தொலைய வேண்டியதுதானே?

முடிஞ்சா அடிக்க மாட்டேனா? அது எப்படின்னு திடீர்னு மறந்துடுச்சுய்யா... இப்போ என்ன பண்றதுன்னு கேக்கத்தான்யா உன்ன கூப்புட்டேன்... ஏதாவது ஒரு வழி சொல்லுப்பா....!

சரி எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அம்பையர்கிட்ட பெரிய ஸ்க்ரீன்ல உங்க விளம்பரத்த திருப்பி திருப்பி போட சொல்லுங்க, அதை பாத்து அப்படியே அடிச்சிடுங்க....

த்தூ... ஐடியாவாம் ஐடியா.... சே... இந்தக் கருமத்துக்கு நான் இப்பவே அவுட்டாகி போய்டுவேன்.....

சொன்ன சொல் தவறாமல் தோனி அவுட்டாகிச் செல்ல, அடுத்தாக,

பெரிய கரடி இடுப்பை ஆட்டியபடி....டண்டனக்கா ஏ டனக்கு நக்கா....

இன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...!

பவுலர் அம்பையரிடம்: சார் ஸ்டம்பு, கீப்பரு எதுவுமே தெரியல சார், எப்படி பால் போடுறது....?

அம்பையர்: ஹலோ பேட்ஸ்மேன், கொஞ்சம் தள்ளி நில்லுங்க...!

தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி......

அதற்குள் பவுலர் பந்து வீசி விடுகிறார்.

கரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...

உடனே ரன் ஓடுகிறார்கள், வாயில் இருந்து பாலை எடுக்க பீல்டர்கள் துரத்துகிறார்கள்... ஆனால்.... ரன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...2..4....6... 8... 10...12.. நின்ற பாடில்லை

மெயின் அம்பையர் மயங்கி விழுகிறார், 

லெக் அம்பையர்:...  மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

 




ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?


213 comments:

«Oldest   ‹Older   201 – 213 of 213
எஸ்.கே said...

//அதாங்க, எல்லாரும் கோச்சுக்கிட்டாங்களாம், டெஸ்ட் மேட்சுனால சியர் கேர்ள்சுக்கு பதிலா, சியர் பாய்ச போட்டுட்டாங்கன்னு! //

அதனாலதாங்க சொல்வாங்க பெரியவங்க, ஆடற மாட்டை ஆடிக் கறக்கனும்! பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////விக்கி உலகம் said...
நடத்துப்பா பன்னி..........நீர் தான் ஸ்பான்சரா ஹி ஹி!/////////

அண்ணே ஸ்பான்சர்லாம் பண்ற அளவுக்கு நான் பெரிய கை இல்லேண்ணே........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வெங்கட் said...
நேத்து நான் ஊருக்கு போயிட்டேன்..
( தோனிக்கு ஐடியா குடுக்க தான்..ஹி., ஹி, )
அதான் லேட்டு.. இருங்க என்னைய பத்தி
எதாவது எழுதி இருக்கான்னு படிச்சிட்டு
வர்றேன்.////////

தோனிக்கு ஐடியா கொடுக்க எதுக்கு ஊருக்கு போறீங்க? ஓ அங்கதான் உங்க ஐடியா குடோனு இருக்கா.....? பாத்து நல்ல பூட்டா போட்டு வைங்க, சவுத் ஆப்பிரிக்கா காரன் அள்ளிக்கிட்டு போய்ட போறான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// வெங்கட் said...
நானும்., தோனியும் பேசிகிட்ட ரகசியங்களை
பதிவாய் போட்ட பன்னிகுட்டியை வன்மையாக
கண்டிக்கிறேன்../////////

அத பதிவா போடச் சொல்லி தோனிதாங்க காசு கொடுத்தாரு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ரெண்டாவதா போட்டிருக்குற படம் இருக்கே! செம.........!//////

ஆமா........ ஆனா என்ன நடக்குதுன்னு தான் தெரியல..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...


ஹி......ஹி....ஹி.... அந்த வாய் மட்டும் இல்லைன்னா..........?/////////

இல்லேன்னா அங்கேயும் தாடி முளைச்சிருக்கும்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ரொம்பத்தான் சிரிக்க வச்சிட்டீங்க தல ! தலைப்பு சூப்பர்!///////

ஹஹஹஹஹா.........

நிரூபன் said...

யோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது?

ங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச்சிருக்கேன்....//

எப்பவுமே ஒரே மாதிரி யோசிகாமல் புது மாதிரி யோசிக்கும் உங்களின் ரசனை எனக்குப் பிடிச்சிருக்கு.
சிரிக்கிறேன். சிரிக்கிறேன். நடிகரகளை வைத்து செம சூடு பண்ணிட்டீங்க. இன்னும் கொஞ்ச காமெடி சேர்த்திருக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Speed Master said...
ஹி ஹி ராமராஜன்


நம்ம பதிவு
நல்லவன் vs கெட்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/vs.html////////

என்ன ராமராஜன்? இப்பிடி தலைப்ப மட்டும் பாத்துட்டு கமெண்ட்டு போட்டா பிச்சிபுடுவேன் பிச்சி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////// பாட்டு ரசிகன் said...
//////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html/////

சின்னத்தாயவள் தந்த ராசாவே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// நிரூபன் said...
யோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது?

ங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச்சிருக்கேன்....//

எப்பவுமே ஒரே மாதிரி யோசிகாமல் புது மாதிரி யோசிக்கும் உங்களின் ரசனை எனக்குப் பிடிச்சிருக்கு.
சிரிக்கிறேன். சிரிக்கிறேன். நடிகரகளை வைத்து செம சூடு பண்ணிட்டீங்க. இன்னும் கொஞ்ச காமெடி சேர்த்திருக்கலாம்.///////

வாங்க நிரூபன், ரொம்ப நன்றி......

டக்கால்டி said...

கடைசி படம் கரடி வாய்க்கு கன கச்சிதம்

சாமக்கோடங்கி said...

ஏன் இந்தக் கொலை வெறி...??

«Oldest ‹Older   201 – 213 of 213   Newer› Newest»