Saturday, November 13, 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்ஸ்.......தொடர் பதிவு!

 சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் என்றாலே, முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்ப்பது, கட் அவுட்டிற்கு பால் ஊற்றுவது, சூப்பர் ஸ்டாரின்  முதல்  சீனுக்கு  விசிலடித்து பேப்பர் தூவுவது போன்றவைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களைபோன்று, வாய்ப்புக் கிடைக்கும்போது படம் பார்த்து, விசிலடிக்காமல், பால் ஊற்றாமல் அமைதியாக, சூப்பர் ஸ்டாரை ரசித்த ரசிகர்களும் இருக்கிறார்கள்.  சூப்பர் ஸ்டாரின் படங்களைத் தரவரிசைப் படுத்தும் அளவுக்கு சினிமா ஞானம் எனக்கில்லை. இருந்தாலும், நண்பர்களின் தொடர்பதிவுகளில் ஒரு சங்கிலியாக என்னையும் இணைத்துவிட்ட நண்பர் தேவா அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க,  இதோ என்னுடைய வரிசைப்படுத்தல்........


10. பில்லா
ரஜினியின் ஸ்பெசல்களில் ஒன்று அவருடைய வில்லத்தனம் கலந்த நடிப்பு. ஸ்டைலிசான வில்லத்தனம் சூப்பர் ஸ்டாருக்கு அற்புதமாக வரும். அது இதுவரை வெகுசில படங்களிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  அவற்றில் பில்லாவும் ஒன்று. இப்படத்தில் ரஜினி பெட்ரோல் பங்கிலிருந்து தப்பும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.





9. மூன்று முகம்
மறக்க முடியுமா எந்தப் பக்கம் உரசினாலும் பற்றிக்கொள்ளும் அலெக்ஸ் பாண்டியன் டிஎஸ்பியை! இந்தக் காட்சிகள் படத்தில் சிறிது நேரமே வந்தாலும், பார்ப்பவர்களுக்கு, திடீரென முழுவேகத்தில் சென்று கொண்டிருக்கும் புல்லட் டிரெய்னில் ஏறிவிட்ட உணர்வை ஏற்படுத்தும். காதுகளில் இன்னமும் ரீங்காரமிடும்... மந்தாரச் செடி ஓரம்.........




8. ஜானி
இந்தப்படத்தில் ரஜினி-ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி வெகு அற்புதமாக இருக்கும்.
முடிவெட்டும் ரஜினி கேரக்டரின் ஓப்பனிங் சீன் சான்சே இல்ல, (அந்த கெட்டப்புக்கே ஒரு தனி விருது கொடுக்கலாம்) சோபாவில் படுத்து தூங்கிட்டு இருப்பார். வீடுமுழுக்க கோழிகள் அது இதுவென நிறைந்திருக்கும். அப்போது ஒரு கோழி முட்டையிடும். தலைவர் அப்பிடியே கேசுவலாக எடுத்து உடைத்துக் குடிப்பார்.  வேறு யார் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஃபீல் வருமா என்பது தெரியவில்லை.

இந்த கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களே அப்பின்னா  என்னான்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்களே மக்கா, இந்த வீடியொவ பாருங்க, அதப் பத்தி பாடமே எடுத்திருக்காங்க!





7. தளபதி
ரஜினியும் மணிரத்தினமும் இணைந்த படம். இப்போது எந்திரன் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை, தளபதிக்கு அப்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு! தாய் என்று  தெரியாமலே  ஸ்ரீவித்யாவைச்  சந்திக்கும் நேரங்களில் ஏற்படும் ஒரு இனம் புரியாத வலியயை, உணர்வை   அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் சூப்பர் ஸ்டார்.  சின்னத்தாயவள் தந்த ராசாவே......




6. எஜமான்
நாட்டாமை என்றாலே தொள தொள சட்டை, முதிர்ச்சியான தோற்றம், கோயம்புத்தூர் பேச்சு என்று இருந்த வழக்கத்திற்கு முற்றிலும் நேர் மாறாக சிம்பிளாக நடித்துக் கலக்கியிருப்பார் ரஜினி. வெறும் துண்டை வைத்துக்கூட ஸ்டைல் பண்ண ரஜினியால் மட்டுமே முடியும். வானவராயனின் கம்பீரத்தில் எஜமான்!


5. ஆறிலிருந்து அறுபது வரை
அனைத்து ரஜினி ரசிகர்களும், விமர்சகர்களும் பார்த்தே தீர வேண்டிய படம்! ரஜினி வெகு இயல்பான நடிப்பால் படத்தை தூக்கி சுமந்திருப்பார். இப்படியும் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்று பார்த்துப் பார்த்து வியந்த படம் இது.


4. படையப்பா
வழக்கமாக வில்லன் கேங், அடியாட்கள் சண்டை என்று இல்லாமல், நீலாம்பரி என்ற ரஜினியை விரும்பும் கேரக்டர் மூலமாகவே படம் நகர்வதும், ரஜினியின் ஸ்டெயிலிஷான பதிலடிகளும்  படத்தையும்  ரஜினியையும்  ரொம்பவே ரசிக்க வைத்தது. 


3. தம்பிக்கு எந்த ஊரு
காதலின் தீபம் ஒன்று பாட்டில் வரும் ரஜினிக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வெகு இயல்பான, எளிமையான நடிப்பால் பார்ப்பவர்களைக் கட்டிப் போட்டுவிடுவார் சூப்பர்ஸ்டார். எப்போதும் ரசித்துப் பார்க்க  உகந்த அருமையான காதல் படம்!


2. சந்திரமுகி
வேட்டைய மகாராஜா..... மிக மிகக் குறைவான நேரமே வந்தாலும், மறக்க  முடியாத கேரக்டர், ரஜினியால் மட்டுமே சாத்தியம்! கேரக்டரை மீறாமல்  டாக்டராக வரும் ரஜினி, இக்கால டாகுடர் நடிகர்களுக்கு ஒரு பாடம்! இப்படத்தில் வரும் காட்சிகள் ரஜினியும் துப்பறியும் கேரக்டரில் நடித்தால் என்ன என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது! ரஜினி ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை, என்ன சொல்றிங்க நண்பர்களே?




1. பாட்ஷா
ரஜினி இனி எத்தனை படத்தில் நடித்தாலும் பாட்ஷா போல வருமா என்று தெரியவில்லை. பாட்ஷாவுக்கு நிகர் பாட்ஷாதான். அதிலும் அந்த பர்ஸ்ட் பைட் காட்சியை எத்தனை தடவை வேணுமென்றாலும் பார்க்கலாம். பர்ஸ்ட் பைட் ஆரம்பிக்கும் முன் ரஜினி பாட்சாவாக மாறுவாரே அப்போது முகத்தைப் பார்க்கனும்.... சான்சே இல்லை.....
நான் ஒருதடவ சொன்னா......





போனசாக (?) சூப்பர் ஸ்டாரின் பாடல்களையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

10. மாசி மாசம்தான் (ஊர்க்காவலன்)
9. அடி ஆடு பூங்கொடியே (காளி)/மீனம்மா மீனம்மா (ராஜாதிராஜா)
8. உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)
7. காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு)
6. பொன்னோவியம் (கழுகு)/மலைகோவில் வாசலிலே (வீரா)
5. ஒருநாளும் உனை மறவாத (எஜமான்)
4. கண்மணியே காதல் என்பது (6லிருந்து 60வரை)
3. சினோரிட்டா ஐ லவ் யூ (ஜானி)
2. தென்மதுரை வைகை நதி (தர்மத்தின் தலைவன்)
1. அக்கரைச் சீமை அழகினிலே (ப்ரியா)
.

பெஸ்ட் வில்லன்
ரகுவரன் அண்டு ரகுவரன் ஒன்லி!


ரஜினியின் பெஸ்ட் ஹீரோயின்
இத உங்க சாய்சுகு விட்டுடுறேன்!

இதைத் தொடர நான் அழைக்கும் இரு நண்பர்கள்
1. பனங்காட்டு நரி
2. நாகராஜசோழன் M.A
(என்னோட வேண்டுகோளை ஏத்துக்குங்க மக்கா..... உங்களுக்கு ஒருவாரம் தான் டைம்! வேண்டுகோள ஏத்துக்கிறதுக்கில்ல, தொடர்பதிவு போடுறதுக்கு!)

இந்தத் தொடர்பதிவில் ஏற்கனவே பதிவிட்ட நண்பர்கள்
1. அருண் பிரசாத்
2. சிரிப்பு போலீஸ் ரமேஷ் ரொம்ப கெட்டவன் (சாரி ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சி) ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)
3. LK
4. தேவா
தகவல் தந்து உதவிய விக்கிபீடியா, வீடியோ தந்த யூ டியூப், மற்றும் வீடீயோ அப்லோட் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

!

218 comments:

«Oldest   ‹Older   201 – 218 of 218
ஹரிஸ் Harish said...

சாரி பார் லேட்..சேச்சி இவிட எந்தா நடக்குனது?

NaSo said...

//dineshkumar said...

யோவ் வர்றியா இல்லையா காடை பிரை சிக்கன் பிரியாணி மாங்க ஊறுகாய் எம்சி புல்லு ராயல்டச் பீரு ஓல்ட்மங் ரம்மு வர்றியா இல்லையா//

வந்துட்டேன். வந்துட்டேன்..

NaSo said...

//ஹரிஸ் said...

சாரி பார் லேட்..சேச்சி இவிட எந்தா நடக்குனது?//

சேச்சி இவிட இல்லை. ஞானும் அறிந்சிண்டிள்ள.

ஹரிஸ் Harish said...

சேச்சி இவிட இல்லை. ஞானும் அறிந்சிண்டிள்ள//

கடை ஓணர் எங்க பாஸ்?..(என்னா,,கடைய நீங்க வாங்கீட்டீங்களா..)

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

யோவ் வர்றியா இல்லையா காடை பிரை சிக்கன் பிரியாணி மாங்க ஊறுகாய் எம்சி புல்லு ராயல்டச் பீரு ஓல்ட்மங் ரம்மு வர்றியா இல்லையா//

வந்துட்டேன். வந்துட்டேன்..

வாங்க வாங்க

தினேஷ்குமார் said...

ஹரிஸ் said...
சேச்சி இவிட இல்லை. ஞானும் அறிந்சிண்டிள்ள//

கடை ஓணர் எங்க பாஸ்?..(என்னா,,கடைய நீங்க வாங்கீட்டீங்களா..)

நாங்க தான் இன்னைக்கு ஓனர்

உங்களுக்கு என்ன வேணும்

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

எங்கள் டாக்டர் அய்யா இளையதளபதியுடைய டாப் 10 படங்கள் பாடல்கள் மற்றும் காமெடிகளை வரிசைபடுத்த மறுத்த பண்ணியாரை நன்கு ஊமைக்குத்து குத்த பொதுகுழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

எங்கள் டாக்டர் அய்யா இளையதளபதியுடைய டாப் 10 படங்கள் பாடல்கள் மற்றும் காமெடிகளை வரிசைபடுத்த மறுத்த பண்ணியாரை நன்கு ஊமைக்குத்து குத்த பொதுகுழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினேஷ்குமார் said...

மக்கா ஓவரா பேசிட்டேன் பீல் பண்ணவேண்டாம் ரொம்ப நாளாச்சு சிரிச்சு

R.Gopi said...

My choice of Top-20 movies of Super Star Rajnikanth....Please see here....

1) Part-1
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

2) Part-2
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

3) Part-3
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

jokkiri said...

யோவ்....

அங்க ஒருத்தரு உடன்பிறப்புங்களுக்கு டெர்ரர் லெட்டர் எழுதிட்டு வந்து பார்ப்பீங்கன்னு காத்துட்டு இருக்காரு...

வந்து பாத்து, என்னா ஏதுன்னு சொல்லுவியா!!!

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம்
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html

ரிஷபன்Meena said...

6 -60 வரை, 3முகம், ஜானி எல்லாம் வந்தப்பெல்லாம் நான் பச்சக் குழந்தை. அவைகளை இன்று வரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஆமா ரஜினியுடன் கவுண்டர் ரவுசு பண்ணிய மன்னன்,உழைப்பாளி படமெல்லாம் விட்டுடீங்களே!

ரிஷபன்Meena said...

பின்னூட்டம் தனியா பாப் அப் ஆறாதாலே மற்ற பின்னூட்டங்களை அவ்வளவு ஈசியா படிக்க முடியலை.

இது ஆவறதில்லைன்னு பாதியிலேயே விடவேண்டிருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dheva said...
மாப்ஸ்....செம... கலக்கலான வரிசை....! டைரக்டர் சங்கர் மாதிரி மாப்ஸ் நீ.. ஒவ்வொரு போஸ்டலயும் நவரசத்தையும் காட்டுவ..

சூப்பர் மாப்ஸ்.. !////

தேங்ஸ் ஊர்ஸ்.....!

அன்பரசன் said...

நல்ல வரிசைப்படுத்தல்

அன்பரசன் said...

எப்படிங்க இப்படி.
220 கமெண்ட்..

Anonymous said...

இதை எப்படி மிஸ் பண்ணேன்?

Anonymous said...

பில்லா காலத்தால் அழியாத சினிமா...ரஜினியை மாஸ் ஹீரோ ஆக்கிய படம்..அவரிடமிருந்த ஃபையர் வெளிப்பட்ட படம்...

«Oldest ‹Older   201 – 218 of 218   Newer› Newest»