Tuesday, November 9, 2010

ஆவியோடு எனது அனுபவங்கள்.....!

ஆவின்னாலே எல்லாருக்கும் ஒரு பயம், திகில். சண்டைக்கு பயப்படாதவங்க  கூட பேய்க்கு பயப்படுவாங்க. நம்மில் பலருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய அனுபவம் கண்டிப்பாக இருக்கும். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவியோடு பேசுவது பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு மாதப் பத்திரிக்கையும் நடத்தி வருகிறார்.  ஆவிகளை பற்றிய என்னுடைய அனுபவங்கள இங்கே பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.
நண்பர்கள் எஸ்.கே வும் மாதவனும் ஆவிகளைப்பத்தி பதிவு போட்டிருந்தாங்க, அதப்படிச்சிட்டு எனக்கு சில சம்பவங்கள் ஞாபகம் வந்தது.  அதப்பத்திதான் எழுதியிருக்கேன். இவை நேரடியாக நான் கேட்டு அறிந்தவை.

முதல் அனுபவம் எனது பெரியப்பாவிற்கு நேர்ந்தது. அவர் இளைஞராக இருக்கும் போது நடந்த சம்பவம் எப்படியும் 35 வருடங்களூக்கு முன்பு இருக்கலாம். அப்போது இரவில், வீட்டின் ஹாலில் அவரும் தாத்தாவும் தூங்கிக் கொண்டிருந்து இருக்கிறார்கள். திடீரென எழுந்து கொண்ட பெரியப்பா எதோ தெரிவதைப் போல தோன்ற என்னவெனக் கவனித்து இருக்கிறார். அது அங்கே இருந்த மேசையின் மேல் தோன்றிய ஒரு போர்ட்ரெயிட் அளவிற்கான மனித உருவம். அதிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு முக்காடு போட்டிருந்தது. மேலும் அது தாத்தாவையே உற்று நோக்கியபடி இருந்திருக்கிறது. அதன் பார்வையின் வீச்சு தாங்கமுடியாமலோ என்னவோ தாத்தா உசும்பி புரண்டு, புரண்டு, பின்னர் எழுந்து வெளீயே சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது சற்று மறைந்த அவ்வுருவம், அவர் வெளியே சென்றவுடன் மீண்டும் தோன்றியிருக்கிறது. அது கண்டு, அது தாத்தாவைத் தாக்கக்கூடும் என்று அஞ்சிய பெரியப்பா, டேய்..என்று கத்தியபடி அதன்மேல் பாய்ந்திருக்கிறார். அது உடனே மறைந்து விட்டது.  பின்பு அவரும் தாத்தாவின் பின்னாலேயே சென்று  எங்கும்  பார்த்து  விட்டு  வந்தாராம்.

அப்புறம் வேறு எங்கும் அது தென்படவில்லை. அது பற்றி பலதடவை என்னிடம் கூறியிருக்கிறார்.  இத்தனைக்கும் என் பெரியப்பா ஒரு கடுமையான நாத்ததிகவாதி.  அறிவியல்  ஆர்வம்  மிகுந்தவர்.  ஐன்ஸ்டைன்  தியரிகளை கை தேர்ந்த விஞஞானிகள்  போல விளக்கும்  திறன் படைத்தவர் (இன்றும் எனக்குப் பல விஷயங்களில் ரோல் மாடலாக இருப்பவர்!).  அந்த ஆவியைப் பார்த்த போது அவர் செய்த பரிசோதனைகள் பற்றி சொல்லச் சொல்ல வியப்பாக இருக்கும். என் தாத்தாவும் அவரும் படுத்திருந்தது 90 டிகிரி ஆங்கிளில். இவர் அந்த உருவத்தை பார்த்தது அதன் இடது பக்கதில் இருந்து. எனவே அந்த உருவத்தால் இவரை நேருக்கு நேராகப் பார்க்க முடிந்திருக்காது. அந்த உருவத்தால் ஒருவர் விழித்துக் கொண்டு இருப்பதையும் அதைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் உணர (பார்க்க முடியவில்லை என்றாலும்)  முடிகிறதா என்று அறிய,  அவர் படுத்துக் கொண்டே காலையும் பின்னர் கையையும்  மெல்ல ஆட்டியிருக்கிறார். ஆனால் அந்த உருவம் அவர் டேய் என்று சத்தமிடும் வரைக்கும் அவரை உணரவில்லை! அது மறைந்த பின்பு அது நின்ற இடத்தில் ஏதும் சூடு அல்லது குளிர்ச்சி தெரிகிறதா என்று தடவிப் பார்த்திருக்கிறார். அந்த நள்ளிரவிலும் வீட்டைச் சுற்றி  (வெளியே  தெருவிலும்)  வந்து ஏதேனும் தெரிகிறதா என்று தேடியும் இருக்கிறார். எந்த ஒரு அடையாளமோ தடையங்களோ  கிடைக்கவில்லை. இதுவரைக்கும் அதன் மர்மமும் விளங்கவில்லை....!

இரண்டாவது அனுபவம் என் மாமாவின் நண்பருக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு நேர்ந்தது.  அப்போது அவர் வெளியூரில் வேலை செய்து கொண்டு இருந்தார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வருவார். அப்படி ஒருமுறை வரும்போது தாமதமாகி இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டுத் திண்ணையில் வழக்கமாக ஒரு வயதான் பெண் படுத்திருப்பார் (அந்தப் பாட்டி வழக்கமாக அங்கே தான் தூங்குவார்). அன்றும் அந்த்ப் பாட்டி திண்ணையில் இருந்து கொண்டு இவரைப் பார்த்து என்ன இப்போதான் வரீங்களான்னு கேட்டிருக்காங்க! இவரும் ஆமா பஸ்ஸு கொஞ்சம் லேட்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மனைவியிடம் எதேச்சையாக அந்தப் பாட்டி கேட்டதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் அவர் மனைவி அம்மாடி என்று அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். அந்தத் பாட்டி இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்! அந்த நபருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல்!

இப்பிடி இரண்டு மறுக்க முடியாத அனபவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும் எனக்கு ஆவிகள் பற்றி பெரிதாக நம்பிக்கை இல்லை. இப்படித்தான் ஒரு நண்பனிடம் ஆவிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் வந்துவிட்டது.  தானும் ஆவியைப் பார்த்திருப்பதாக நண்பன் கூறீனான். நானோ  ஆவியயை நானே பார்த்தால்தான் நம்புவேன் என்று  சொல்லிவிட்டேன்.  நண்பன் சற்று யோசித்துவிட்டு அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.  அடுத்த வாரமே போவோம், நான் போன் பண்ணிக் கூப்பிடும் போது வந்தால் போதும் என்றான்.

வீம்புக்காக சரி பாத்துடுவோம் என்று சொல்லிவிட்டாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருக்கவே செய்தது. அந்த வாரம் முழுவதும் நண்பன் எப்போது கூப்பிடுவானோ என்று நடுக்கத்திலேயே கழிந்தது. சரியாக 8வது நாள், இரவு 9 மணி இருக்கும், நண்பனின் தொலைபேசி அழைப்பு. பயந்து கொண்டே எடுத்தேன். உடனே கெளம்பி வா என்றான். நான் இந்த நேரத்திலேயா என்று தயக்கத்துடன் கேட்டேன். அவன் இதான் சரியான நேரம் என்று கூறிவிட்டான்.

அவன் என்னை மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்றான். கொஞ்சம் இங்கேயே இரரு வந்திடுறேன்னுட்டுப் போயிட்டான். எனக்கு திக்கு திக்குன்னு இருந்தது. சரி கூட நண்பந்தான் இருக்கானே, ஆவி ஒருவேளை இருந்தாலும் அது அவனுக்குத் தெரிந்த ஆவியாகத்தான் இருக்கும் அதனால் பிரச்சனை ஒன்றும் வந்துவிடாது என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். அதற்குள் அவனும் வந்து விட்டான். கையில் என்னமோ வைத்திருந்தான்.

அதை என் கையில் கொடுத்து ஆவி பாக்கனும்னியே இந்தா பாரு என்றான். வாங்கிப் பார்த்தால்.....
..
..
அது...............


ஆனந்த விகடன்........!(மக்கா..... இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன், அதுனால நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ்........   மீ பாவம்ல?)

!

143 comments:

ஹரிஸ் said...

நான் தான் பஸ்ட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஹரிஸ் said...
நான் தான் பஸ்ட்டு////

வாங்க......வாங்க...!

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 4 பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???///

அப்பொ மூதேவி பாக்கனும் சொன்ன டெரர் போட்டோ கொடுப்பியா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ங்கொய்யால.....................
நான் ஆனந்த விகடனை வச்சு காமெடி பண்ணலாம்னு நினைச்சேன். பன்னிகுட்டி முந்திகிச்சே!

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல அனுபவம்.. நானும் இந்த ஆவியை பாக்கனும் பாக்கனும்னு ஆர்வமா இருக்கேன்.. கழுத கன்ல சிக்க மாட்டேங்குது..

நான் இங்க பெங்களூர் வந்த புதுசுல இப்படித்தான்... நாங்க முதல்ல இருந்த வீடு பெரிய வீடு ஆனா வாடகை ரொம்ப கம்மி.. அந்த ஏரியால மத்த வீடெல்லாம்.. அனியாய வாடகையா இருக்கும் போது இந்த வீட்டுக்கு மட்டும் ஏன் வாடகை இவ்லோ கம்மி.. நம்ம ஓனரம்மா ரொம்ப நல்லவங்கன்னு பெருமையா நினைச்சோம்.. அப்புறம் வந்த கொஞ்ச நாள்லதான் தெரிஞ்சது.. அந்தம்மாவோட வீட்டுக்காரர்.. நாங்க குடியிருந்த வீட்டு பெட்ரூம்லதான் தூக்கு போட்டு செத்து போயிருக்காருன்னு... பசங்கல்லாம்.. நடுங்கிப்போயிட்டானுங்க.. எனக்கு பயங்கர குஷி.. எப்படியும் என்னோட ஆவி ஆசை நிறைவேறிடும்னு நினைச்சேன்.. நிறைய நாள் தனியா இருக்கும் போது நைட்ல அந்த ஆளோட உருவம் (அருவம்) தெரியுதான்னு உத்து உத்து பாத்துட்டு இருந்தேன்.. ஒரு மண்ணும் தெரியலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவ்ளோ என் கஷ்டப்படனும். பேசாம இட்லி அவிக்க வேண்டிதான?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆவி பிடிச்சா ஜலதோசம் போயிடும்னு சொல்றாங்களே..அதை பத்தி எழுதலியே பாஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆவிகள் பத்தி ஸ்வாரஸ்யமா எழுதி இருக்கீங்க

கோவி.கண்ணன் said...

உங்க பாணியில் இதுவும் நல்ல நகைச்சுவை இடுகை. :)

வெறும்பய said...

நடத்துங்கையா.. நடத்துங்க... இதென்ன ஆவி சீசனா...

ஹரிஸ் said...

//இருந்தாலும் எனக்கு ஆவிகள் பற்றி பெரிதாக நம்பிக்கை இல்லை//

உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? (இவன் ஆவி இல்ல பாவினு யாருபா அங்க சொல்லுறது)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி ஒரு சின்ன கால் (ஆட்டுககால் இல்ல!), அதான் லேட்டு!

Madhavan said...

பன்னிகுட்டி கூட என்னைய ஃ பாலோ பண்ணி ஒரு 'ஆவி' மேட்டர போட்டுடிச்சே..
பன்னிக்குட்டிக்கு சத்தமா ஒரு 'ஓ' போடுங்க பாப்போம்.. சாரி.. கேப்போம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???///

அதுக்குத் தாண்டி உன் போட்டோவ வெச்சசிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ங்கொய்யால.....................
நான் ஆனந்த விகடனை வச்சு காமெடி பண்ணலாம்னு நினைச்சேன். பன்னிகுட்டி முந்திகிச்சே!////


ஹா ஹா..ஹா... தொப்பி தொப்பி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரியமுடன் ரமேஷ் said...
நல்ல அனுபவம்.. நானும் இந்த ஆவியை பாக்கனும் பாக்கனும்னு ஆர்வமா இருக்கேன்.. கழுத கன்ல சிக்க மாட்டேங்குது..///

ஆவிய பாக்ககுறதுக்கு ஏன் கழுதய கூப்புடறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//TERROR-PANDIYAN(VAS) said... 4 பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???///

அப்பொ மூதேவி பாக்கனும் சொன்ன டெரர் போட்டோ கொடுப்பியா///

எல்லாத்துக்கும் ஒரே போட்டோதான் அதுடெர்ரருதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இவ்ளோ என் கஷ்டப்படனும். பேசாம இட்லி அவிக்க வேண்டிதான?///

திஙகிறதுலேயே இரு!

பிரியமுடன் ரமேஷ் said...

//
ஆவிய பாக்ககுறதுக்கு ஏன் கழுதய கூப்புடறீங்க?

மனுசங்க ஆவிதான் கண்ல சிக்கலை.. கழுத ஆவியாவதே சிக்குதான்னுதான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆவி பிடிச்சா ஜலதோசம் போயிடும்னு சொல்றாங்களே..அதை பத்தி எழுதலியே பாஸ்///

உங்களுக்கு ஜலதோசமா? ஆவி என்ன டாகுரா ஜலதோசத சரி பணண?

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து ஏற்கனவே மாதவன் பதிவுல படிச்சதுனால கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் படிச்சேன்........வெரும்பயலும் தப்பிட்டாறு நினைக்கிறன்

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து ஏற்கனவே மாதவன் பதிவுல படிச்சதுனால கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் படிச்சேன்........வெரும்பயலும் தப்பிட்டாறு நினைக்கிறன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோவி.கண்ணன் said...
உங்க பாணியில் இதுவும் நல்ல நகைச்சுவை இடுகை. :)///

வாங்க சார், நன்றி!

இம்சைஅரசன் பாபு.. said...

ஆனாலும் டாக்டரு தம்பியவே படிச்சிட்டு......... இப்படி விதய்சமாக எழுதின நல்லா தான் இருக்கு மக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
நேத்து ஏற்கனவே மாதவன் பதிவுல படிச்சதுனால கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் படிச்சேன்........வெரும்பயலும் தப்பிட்டாறு நினைக்கிறன்///

இப்படியெல்லாம் தப்பிச்சுடுவீங்கன்னுதான் ரெண்டு உண்மைச் சமப்வங்கள முன்னாடி வெச்சேன்,அதையும் ஜம்ப் பண்ணி வந்துட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
ஆனாலும் டாக்டரு தம்பியவே படிச்சிட்டு......... இப்படி விதய்சமாக எழுதின நல்லா தான் இருக்கு மக்கா///

தேங்க்ஸ் மக்கா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரியமுடன் ரமேஷ் said...
//
ஆவிய பாக்ககுறதுக்கு ஏன் கழுதய கூப்புடறீங்க?

மனுசங்க ஆவிதான் கண்ல சிக்கலை.. கழுத ஆவியாவதே சிக்குதான்னுதான்..///

கழுத ஆவியவெச்சி எனன பண்ணப்போறிங்க? இருங்க ப்ளூகிராஸ்ல புடிச்சிக் கொடுக்குறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Madhavan said...
பன்னிகுட்டி கூட என்னைய ஃ பாலோ பண்ணி ஒரு 'ஆவி' மேட்டர போட்டுடிச்சே..
பன்னிக்குட்டிக்கு சத்தமா ஒரு 'ஓ' போடுங்க பாப்போம்.. சாரி.. கேப்போம்..////


:))

எஸ்.கே said...

இந்த ஆவி எனக்கு புடிக்கும் சின்ன வயதில் நிறைய பழகியிருக்கேன். இப்ப டச் விட்டு போச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆவிகள் பத்தி ஸ்வாரஸ்யமா எழுதி இருக்கீங்க///

நன்றிங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
இந்த ஆவி எனக்கு புடிக்கும் சின்ன வயதில் நிறைய பழகியிருக்கேன். இப்ப டச் விட்டு போச்சு.///

இது என்ன மர்மம்னு வெளங்கலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
//இருந்தாலும் எனக்கு ஆவிகள் பற்றி பெரிதாக நம்பிக்கை இல்லை//

உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? (இவன் ஆவி இல்ல பாவினு யாருபா அங்க சொல்லுறது)////

படுவா.... எல்லா பயலும் அங்கேயே சுத்திச் சுத்தி வாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
நடத்துங்கையா.. நடத்துங்க... இதென்ன ஆவி சீசனா...///

ஆமாங்க...ஆமா.....!

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!///

தாத்தா இல்ல செல்வவா அது பெரியப்பா,தாத்தாவுக்கு அது தெரியாது!

சௌந்தர் said...

உங்களை எல்லாம் உண்மையில் ஆவி அடிச்சி இருக்கணும்

கானா பிரபா said...

(வெண்ணிறஆடை மூர்த்தி குரலில்) ஆவியைக் காட்டச் சொன்னா மூதேவி புத்தகத்தைக் காட்டிட்டானா பர்ர்ர்ர்ர்ர்

சௌந்தர் said...

ovember 9, 2010 1:48 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 37
/// ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!///

தாத்தா இல்ல செல்வவா அது பெரியப்பா,தாத்தாவுக்கு அது தெரியாது!///

இப்போ என்ன அவர் தாத்தா ஆகவே இல்லையா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
உங்களை எல்லாம் உண்மையில் ஆவி அடிச்சி இருக்கணும்///

ஹி..ஹி... தப்பிச்சிட்டம்ல...? எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
ovember 9, 2010 1:48 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 37
/// ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!///

தாத்தா இல்ல செல்வவா அது பெரியப்பா,தாத்தாவுக்கு அது தெரியாது!///

இப்போ என்ன அவர் தாத்தா ஆகவே இல்லையா....///

அதானே இன்னிக்கு என்ன ஒணணூம் நடக்கலியே.... நல்லா போயிக்கிட்டு இருககேன்னு பாத்தேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கானா பிரபா said...
(வெண்ணிறஆடை மூர்த்தி குரலில்) ஆவியைக் காட்டச் சொன்னா மூதேவி புத்தகத்தைக் காட்டிட்டானா பர்ர்ர்ர்ர்ர்////

பப்...பப்...... !

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 42
////சௌந்தர் said...
ovember 9, 2010 1:48 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 37
/// ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!///

தாத்தா இல்ல செல்வவா அது பெரியப்பா,தாத்தாவுக்கு அது தெரியாது!///

இப்போ என்ன அவர் தாத்தா ஆகவே இல்லையா....///

அதானே இன்னிக்கு என்ன ஒணணூம் நடக்கலியே.... நல்லா போயிக்கிட்டு இருககேன்னு பாத்தேன்....!///

ஆவிக்கு தான் கால் இல்லையே எப்படி நடக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said... 42
////சௌந்தர் said...
ovember 9, 2010 1:48 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 37
/// ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே உங்க தத்தா ரொம்ப தைரியசாளிதானுங்க..!!///

தாத்தா இல்ல செல்வவா அது பெரியப்பா,தாத்தாவுக்கு அது தெரியாது!///

இப்போ என்ன அவர் தாத்தா ஆகவே இல்லையா....///

அதானே இன்னிக்கு என்ன ஒணணூம் நடக்கலியே.... நல்லா போயிக்கிட்டு இருககேன்னு பாத்தேன்....!///

ஆவிக்கு தான் கால் இல்லையே எப்படி நடக்கும்...///

கால் இல்லேனன்னாலும் நடக்கும் அதுதான் ஆவி...!

அலைகள் பாலா said...

aaaaaaaaaaaaViiii.......

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 45

கால் இல்லேனன்னாலும் நடக்கும் அதுதான் ஆவி...!///

ஆவி நடக்காது பறக்கும் அந்த ஆ வி பேப்பரை கிழித்து போடுங்க அப்போ பறக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 45

கால் இல்லேனன்னாலும் நடக்கும் அதுதான் ஆவி...!///

ஆவி நடக்காது பறக்கும் அந்த ஆ வி பேப்பரை கிழித்து போடுங்க அப்போ பறக்கும்///

அது காத்தடிச்சாதான் பறக்கும்!

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

//அந்தத் பாட்டி இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்! அந்த நபருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல்///

செம நடுக்கமா இருந்திருக்கும் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அந்தத் பாட்டி இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்! அந்த நபருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல்///

செம நடுக்கமா இருந்திருக்கும் ..!!////

ஆமா... அது பயத்துல வந்த காய்ச்சல் தான்!

மொக்கராசா said...

பன்னி

உங்கள் பதிவை திகிலோடு படித்தேன்.திகில்,மர்மம் நிறைந்த ஒரு தொடரை போல் இருந்தது.

படித்தவுடன் பயம் தொத்திக்கொண்டது.

அடி ஆத்தி பயந்து வருது!!!!

ங்கொய்யாலு,பன்னி நீங்க மட்டும் என் கையில சிக்குன சுறா படத்தில விஜய் வர entry சீனை 100 தடவை பாக்க வைப்பேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அலைகள் பாலா said...
aaaaaaaaaaaaViiii.......////

ஆமா ஆவிதான் பயங்கரமான ஆவி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
பன்னி

உங்கள் பதிவை திகிலோடு படித்தேன்.திகில்,மர்மம் நிறைந்த ஒரு தொடரை போல் இருந்தது.

படித்தவுடன் பயம் தொத்திக்கொண்டது.

அடி ஆத்தி பயந்து வருது!!!!

ங்கொய்யாலு,பன்னி நீங்க மட்டும் என் கையில சிக்குன சுறா படத்தில விஜய் வர entry சீனை 100 தடவை பாக்க வைப்பேன்/////

சுறா படம் பாத்ததுக்கப்புறமும் உங்களுக்கு இந்தமாதிரி பயம் வருதுன்னா சம்திங் ராங்?

மங்குனி அமைச்சர் said...

........ங்கொய்யாலே............ நாதாரி நாயே ரத்தக்காட்டேரி பாத்திருக்கியாடா ? என்னா அழிச்சாட்டியம் பண்றானுக ????

மங்குனி அமைச்சர் said...

நீ பாத்தா அந்த ஆவிக்கு காலு இருந்துச்சா பண்ணி ???

அருண் பிரசாத் said...

நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு... ஏன் மொக்கைல முடிச்சிட்டீங்க

அருண் பிரசாத் said...

அதிசயம் ஆனால் உண்மை.. ப்திவு பொட்டு இவ்வளவு நேரம் ஆகியும் வெறும் 57 கமெண்ட் தானா?


சூனியம் வெச்சிட்டாங்களோ!

பட்டாபட்டி.. said...

யோவ்.. சொல்லீட்டு பதிவ போடுய்யா...

இனிமேல என்னைய மாறி 18 வயசுக்கு கீழ உள்ளவங்க(?) , படிக்கவேண்டாமுனு, பதிவின் தொடக்கதில போர்ட் வெச்சுப்பழகு...

பயமாயிருக்கில்லே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
........ங்கொய்யாலே............ நாதாரி நாயே ரத்தக்காட்டேரி பாத்திருக்கியாடா ? என்னா அழிச்சாட்டியம் பண்றானுக ????////


முன்னாடி பாத்ததில்ல, இதோ இப்பத்தான் பாக்குறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
நீ பாத்தா அந்த ஆவிக்கு காலு இருந்துச்சா பண்ணி ???///

ஆமா மூணு காலு இருந்துச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// அருண் பிரசாத் said...
நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு... ஏன் மொக்கைல முடிச்சிட்டீங்க/////

மொக்கைல முடிக்கத்தானே நல்லா கொண்டுபோனதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
அதிசயம் ஆனால் உண்மை.. ப்திவு பொட்டு இவ்வளவு நேரம் ஆகியும் வெறும் 57 கமெண்ட் தானா?


சூனியம் வெச்சிட்டாங்களோ!////

படிச்சவங்க நெறையப் பேருக்கு பயத்துல காய்ச்சல் வந்திருக்கும் மந்திரிச்சிப் பாக்க போயிருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. சொல்லீட்டு பதிவ போடுய்யா...

இனிமேல என்னைய மாறி 18 வயசுக்கு கீழ உள்ளவங்க(?) , படிக்கவேண்டாமுனு, பதிவின் தொடக்கதில போர்ட் வெச்சுப்பழகு...

பயமாயிருக்கில்லே.....///

18 வயசுக்கு கீழே உள்ளவங்களுக்குப் போடலாம், ஆனா 81 வயசுக்குலாம் போட முடியாதுங்கோ!

ராஜகோபால் said...

//இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன்//

பன்னி அழுதுச்சா ச்ச பன்னிக்கே -"பன்னிக்காச்சலா"

பட்டாபட்டி.. said...

ஆனா 81 வயசுக்குலாம் போட முடியாதுங்கோ!
//

அது உனக்கு மட்டுமில்ல.. எல்லோருக்கும் தெரியும்.. சரி.. நான் கேட்டதற்க்கு பதில் எங்கேய்யா?

ப்ரியமுடன் வசந்த் said...

மேட்டர் சிறிசோ பெரிசோ அதை கடைசிவரைக்கும் ட்விஸ்ட்டோட எழுதுறது ரொம்ப கஷ்டம் பாசு.. உங்களுக்கு அது அழகா கைகூடியிருக்கு பாராட்டுகள்...!

அன்பரசன் said...

//(மக்கா..... இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன், அதுனால நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ்........ மீ பாவம்ல?)//

கண்டிப்பாக நீங்க பாவம்தான்.

இனியா said...

பாராட்டுகள் raamasamy!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
//இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன்//

பன்னி அழுதுச்சா ச்ச பன்னிக்கே -"பன்னிக்காச்சலா"////

யோவ் இது பேய்க்காய்ச்சல்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
ஆனா 81 வயசுக்குலாம் போட முடியாதுங்கோ!
//

அது உனக்கு மட்டுமில்ல.. எல்லோருக்கும் தெரியும்.. சரி.. நான் கேட்டதற்க்கு பதில் எங்கேய்யா?////

சரி சரி இனிமே சொல்லிட்டே பதிவு போடுறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப்ரியமுடன் வசந்த் said...
மேட்டர் சிறிசோ பெரிசோ அதை கடைசிவரைக்கும் ட்விஸ்ட்டோட எழுதுறது ரொம்ப கஷ்டம் பாசு.. உங்களுக்கு அது அழகா கைகூடியிருக்கு பாராட்டுகள்...!///

ரொம்ப ரொம்ப தேங்ஸ் மாப்ஸ்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்பரசன் said...
//(மக்கா..... இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன், அதுனால நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ்........ மீ பாவம்ல?)//

கண்டிப்பாக நீங்க பாவம்தான்./////

ஹி...ஹி....ஹி...1

Anonymous said...

வணக்கம் உறவே

உங்களின் பதிவினை எமது www.meenakam.com/topsites இலும் இணைக்கவும்.

நன்றி

மீனகம் குழுவினர்

நாஞ்சில் மனோ said...

‎//அதானே இன்னிக்கு என்ன ஒணணூம் நடக்கலியே.... நல்லா போயிக்கிட்டு இருககேன்னு பாத்தேன்....! //
பண்ணி குட்டிய போட்டு தாளிச்சிட்டங்கடோ:]

Chitra said...

அதை என் கையில் கொடுத்து ஆவி பாக்கனும்னியே இந்தா பாரு என்றான். வாங்கிப் பார்த்தால்.....
..
..
அது...............


ஆனந்த விகடன்........!


........ஆஆஆஆஆ.......!!!!!

சே.குமார் said...

நகைச்சுவை இடுகை.

எம் அப்துல் காதர் said...

ரொம்ப நல்லா இருந்துசுங்கனா. ஆவின்னா என்னன்னா. நான் ஒரு வேலை பேயோன்னு நெனெச்சேன்.

ஆமா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியான்னா!! ஏன்னா சும்மா ஒரு காமெடிக்காக கேட்டேன்!! வரட்டுங்களா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Anonymous said...
வணக்கம் உறவே

உங்களின் பதிவினை எமது www.meenakam.com/topsites இலும் இணைக்கவும்.

நன்றி

மீனகம் குழுவினர்///

இணைச்சுட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாஞ்சில் மனோ said...
‎//அதானே இன்னிக்கு என்ன ஒணணூம் நடக்கலியே.... நல்லா போயிக்கிட்டு இருககேன்னு பாத்தேன்....! //
பண்ணி குட்டிய போட்டு தாளிச்சிட்டங்கடோ:]////

ஆவியப் பாத்து பயந்து போயி எதை எதையோ உளர்ரத பாரு..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Chitra said...
அதை என் கையில் கொடுத்து ஆவி பாக்கனும்னியே இந்தா பாரு என்றான். வாங்கிப் பார்த்தால்.....
..
..
அது...............


ஆனந்த விகடன்........!


........ஆஆஆஆஆ.......!!!!!////

ஆனந்த விகடனப் பாத்தா இப்பிடி பயப்படுறிங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சே.குமார் said...
நகைச்சுவை இடுகை.////

நன்றி குமார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எம் அப்துல் காதர் said...
ரொம்ப நல்லா இருந்துசுங்கனா. ஆவின்னா என்னன்னா. நான் ஒரு வேலை பேயோன்னு நெனெச்சேன்.

ஆமா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியான்னா!! ஏன்னா சும்மா ஒரு காமெடிக்காக கேட்டேன்!! வரட்டுங்களா??////

ஆவின்னா தண்ணி கொதிக்கும் போது வருமே அதுதான். ஏன் கல்யாணம் ஆன்வங்கன்னா பேயப் பாத்து பயப்பட மாட்டாங்களா? ஹி..ஹி..ஹி..!
நன்றி...!

ரிஷபன்Meena said...

புரொபைல்,சைடுபார் எல்லாம் தூள்.
கவுண்டன் கவுண்டன் தான்
கவுண்டருக்கு இப்படி தீவிர ரசிகரா ?

இந்தப் பதிவும் பரவாயில்ல ரகம்.

கும்மி said...

தலைப்பை பார்த்துட்டு, ரொம்ப விளக்கமா பின்னூட்டம் போட வேண்டி இருக்கும்; பிறகு வருவோம், என்று இப்பொழுது வந்து படித்தால்........

.
.
.
.
.
.
எங்க வீட்டுக்கு பக்கத்துல பூ மிதிக்கிறாங்க. நீங்கதான் வந்து முதல்ல பூ மிதிச்சி விழாவை சிறப்பிக்கனும்ன்னு எல்லோரும் விரும்புறாங்க. அவசியம் வரனும். என்னது... முள்ளா? இல்லை, இல்லை, பூவுல முள்ளெல்லாம் இருக்காது. அவசியம் வாங்க.

Fire Blogger Tools said...

hello blogger
your blog is good content
but u need apro template and to customiza it
get blogger templates and blogger tricks and hacks and tutorials and tools go to
Fire Blogger Tools
thanks!!!

அன்னு said...

//அது அவனுக்குத் தெரிந்த ஆவியாகத்தான் இருக்கும் அதனால் பிரச்சனை ஒன்றும் வந்துவிடாது என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். //

வடையில் பருப்பு வேகலை போலவே...ஹெ ஹெ ஹெ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரிஷபன்Meena said...
புரொபைல்,சைடுபார் எல்லாம் தூள்.
கவுண்டன் கவுண்டன் தான்
கவுண்டருக்கு இப்படி தீவிர ரசிகரா ?

இந்தப் பதிவும் பரவாயில்ல ரகம்.///

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
தலைப்பை பார்த்துட்டு, ரொம்ப விளக்கமா பின்னூட்டம் போட வேண்டி இருக்கும்; பிறகு வருவோம், என்று இப்பொழுது வந்து படித்தால்........

.
.
.////

ஹி...ஹி....ஹி...
(எப்படியோ நம்மலையும் டோமரு ரேஞ்சுக்கு வெச்சுப் பாத்ததுக்கு நன்றி!)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மச்சி ....,
இன்னும் போஸ்ட் படிக்கலை...,ஆனா ...,ஆனா ...., உன்னக்கு மெயில் அனுபரேன் சொல்லியிருந்தேன் இல்ல ..,அது தான் மாமு இந்த ஆவி பத்தி ..,வெக்கத்தை விட்டு சொல்றேன் ..,பெட் ரூம் ல இருந்து ..,எப்படி பாத் ரூம் போனேன் ..,எப்படி கிழே விழுந்தேன் ...,யாரோ என் நெஞ்சு மேல இருந்து மெரிச்ச மாதிரி இருந்தது ...,அப்புறம் எங்க அப்பா செவிட்டுல ஒரு அரை அறைஞ்சதும் தான் நினைவுக்கு வந்தது ...,நான் பாத் ரூம் வாசல்ல இருந்து எழுந்து நிற்கிறேன் ...,

குறிப்பு : நான் அன்று தண்ணி அடிக்கவில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
.
.
எங்க வீட்டுக்கு பக்கத்துல பூ மிதிக்கிறாங்க. நீங்கதான் வந்து முதல்ல பூ மிதிச்சி விழாவை சிறப்பிக்கனும்ன்னு எல்லோரும் விரும்புறாங்க. அவசியம் வரனும். என்னது... முள்ளா? இல்லை, இல்லை, பூவுல முள்ளெல்லாம் இருக்காது. அவசியம் வாங்க.


ஐயாம் வெரி பிசி..8ம் தேதி ஊட்டில ஊர்வலம், 9ம் தேதி சேலத்துல மாநாடு, 10ம் தேதி.... டெல்லில இருக்கென்... ம்ம்ம் என்ன பண்ணலாம் வெரி டெலிக்கேட் பொசிசன்....!

ஓக்கே உங்களூக்காக டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வர்ரேன், நல்லா பூவ போட்டு வையுங்க, நான் வந்து தளூக்கு புளுக்குன்னு மிதிச்சிர்ரேன். ... (அப்புறம் அந்தக் காந்தக் கண்ணழகி... ஓக்கே ஓக்கே எல்லாம் பாத்து பண்ணிடுங்க, எலக்சன் வேற வருது!)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் ....,
இதெல்லாம் நிஜமாயா ...,ஒரு எழவும் புரியலை ...,எங்கப்பா செவிடுள்ள அறைஞ்சது மட்டும் நினைவிருக்கு ...,யோவ் பன்னி என் FIGURE கிட்ட சொன்னா நீ பையித்தியம் ஆயிட்டேன்னு சொல்லுவாளோன்னு பயாமா இருக்குயா ...,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
மச்சி ....,
இன்னும் போஸ்ட் படிக்கலை...,ஆனா ...,ஆனா ...., உன்னக்கு மெயில் அனுபரேன் சொல்லியிருந்தேன் இல்ல ..,அது தான் மாமு இந்த ஆவி பத்தி ..,வெக்கத்தை விட்டு சொல்றேன் ..,பெட் ரூம் ல இருந்து ..,எப்படி பாத் ரூம் போனேன் ..,எப்படி கிழே விழுந்தேன் ...,யாரோ என் நெஞ்சு மேல இருந்து மெரிச்ச மாதிரி இருந்தது ...,அப்புறம் எங்க அப்பா செவிட்டுல ஒரு அரை அறைஞ்சதும் தான் நினைவுக்கு வந்தது ...,நான் பாத் ரூம் வாசல்ல இருந்து எழுந்து நிற்கிறேன் ...,

குறிப்பு : நான் அன்று தண்ணி அடிக்கவில்லை/////

இது எப்போ நடந்துச்சு? அப்போ உடம்புக்கு ஏதாவது முடியாம இருந்தியா? கெட்ட கனவு கண்டியா? வெளக்கமா சொல்லு மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் ....,
இதெல்லாம் நிஜமாயா ...,ஒரு எழவும் புரியலை ...,எங்கப்பா செவிடுள்ள அறைஞ்சது மட்டும் நினைவிருக்கு ...,யோவ் பன்னி என் FIGURE கிட்ட சொன்னா நீ பையித்தியம் ஆயிட்டேன்னு சொல்லுவாளோன்னு பயாமா இருக்குயா ...,/////


உனக்கு பிகருலாம் வேற இருக்கா மாப்பு, சொல்லவே இல்ல?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// கெட்ட கனவு கண்டியா? ////

ஒரு எழவும் இல்ல ....,எங்கப்பா செவிட்டுல அறைஞ்சது மட்டும் நியாபகம் இருக்கு ...,


டிஸ்கி : அய்யோயோ ...,நான் வெக்கத்தை விட்டு சொல்லிட்டேன் ..,இந்த டெர்ரர் பையன் இன்னா சொல்லுவான்னு தெரியலையே ,,,சரி சரி ...,நமக்கு எது வெக்கம் ,மானம் ,சூடு ,சொரணை ,ஈசி ,பேசி எல்லாம் ...,நாம தான் தொடையை சொரிஞ்சிட்டு போயிட்டே இருப்போம் இல்ல ...,ஹா ஹா ஹா

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

உனக்கு பிகருலாம் வேற இருக்கா மாப்பு, சொல்லவே இல்ல ? //////

யோவ்

இன்னாயா இப்படி கேட்டுட்ட ??? நான் லவ் பண்ற பொண்ணு தான் lover அவங்க லவ் பண்ணாலும் சரி ...., இல்ல பண்ணலாலும் சரி ........,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// கெட்ட கனவு கண்டியா? ////

ஒரு எழவும் இல்ல ....,எங்கப்பா செவிட்டுல அறைஞ்சது மட்டும் நியாபகம் இருக்கு ...,


டிஸ்கி : அய்யோயோ ...,நான் வெக்கத்தை விட்டு சொல்லிட்டேன் ..,இந்த டெர்ரர் பையன் இன்னா சொல்லுவான்னு தெரியலையே ,,,சரி சரி ...,நமக்கு எது வெக்கம் ,மானம் ,சூடு ,சொரணை ,ஈசி ,பேசி எல்லாம் ...,நாம தான் தொடையை சொரிஞ்சிட்டு போயிட்டே இருப்போம் இல்ல ...,ஹா ஹா ஹா////


நீ எதையாவது சொறிஞ்சி தொலை..! மேட்டர கரெக்டா சொன்னேனா உன் ப்ராப்ளத்த நான் தீர்த்து வெக்கிறேன்.. அவ்வளவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உனக்கு பிகருலாம் வேற இருக்கா மாப்பு, சொல்லவே இல்ல ? //////

யோவ்

இன்னாயா இப்படி கேட்டுட்ட ??? நான் லவ் பண்ற பொண்ணு தான் lover அவங்க லவ் பண்ணாலும் சரி ...., இல்ல பண்ணலாலும் சரி ........,////

இப்பிடி ஒரு பிகரு உன்ன பைத்தியம்னு நெனச்சா என்ன நெனக்காட்டி என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்னு said...
//அது அவனுக்குத் தெரிந்த ஆவியாகத்தான் இருக்கும் அதனால் பிரச்சனை ஒன்றும் வந்துவிடாது என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். //

வடையில் பருப்பு வேகலை போலவே...ஹெ ஹெ ஹெ..////


ஹி....ஹி...ஹி..... நல்லாத்தான் ஜூம் போட்டு பாக்குறீங்க!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// மேட்டர கரெக்டா சொன்னேனா உன் ப்ராப்ளத்த நான் தீர்த்து வெக்கிறேன்.. /////

அவ்வளவுதான்,பெட் ரூம் ல இருந்து ..,எப்படி பாத் ரூம் போனேன் ..,எப்படி கிழே விழுந்தேன் ...,யாரோ என் நெஞ்சு மேல இருந்து மெரிச்ச மாதிரி இருந்தது .. இது தான் நடந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
/// மேட்டர கரெக்டா சொன்னேனா உன் ப்ராப்ளத்த நான் தீர்த்து வெக்கிறேன்.. /////

அவ்வளவுதான்,பெட் ரூம் ல இருந்து ..,எப்படி பாத் ரூம் போனேன் ..,எப்படி கிழே விழுந்தேன் ...,யாரோ என் நெஞ்சு மேல இருந்து மெரிச்ச மாதிரி இருந்தது .. இது தான் நடந்தது////

இது தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கெ அந்த மாதிரிதான், இதுக்கும் பேய், பிசாசுன்னு ஏதாவது பேரு வெச்சுடாதே!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சரி மச்சி ...,
இப்போ நான் பெட் ல தூங்கிட்டு இருக்கேன் ..,ஆனா கமெண்ட் மட்டும் டைப் பண்றேன் எப்படி ..,? : )))))))))))))))

என்னது நானு யாரா? said...

//அவ்வளவுதான் அவர் மனைவி அம்மாடி என்று அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். //

வாய்விட்டு சிரித்துவிட்டேன். உங்க ஆ.வி அனுபவம் சூப்பரு! உங்க நண்பர் உங்களை ஒரு 12 மணிக்கு கூப்பிட்டு இருந்தா இன்னும் ரியலிஸிட்டிக்காக இருந்திருக்கும். காமெடியோடு அதிசயதக்க அனுபவங்களை சொல்லிட்டீங்க! நன்றித் தல!

வேலை விஷயமா பெங்களூர் வந்திருக்கேன். அதனால தான் நண்பர்களோட ப்ளாகிற்கு வரமுடியாமல் போய்விடுகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என்னது நானு யாரா? said...
//அவ்வளவுதான் அவர் மனைவி அம்மாடி என்று அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். //

வாய்விட்டு சிரித்துவிட்டேன். உங்க ஆ.வி அனுபவம் சூப்பரு! உங்க நண்பர் உங்களை ஒரு 12 மணிக்கு கூப்பிட்டு இருந்தா இன்னும் ரியலிஸிட்டிக்காக இருந்திருக்கும். காமெடியோடு அதிசயதக்க அனுபவங்களை சொல்லிட்டீங்க! நன்றித் தல!

வேலை விஷயமா பெங்களூர் வந்திருக்கேன். அதனால தான் நண்பர்களோட ப்ளாகிற்கு வரமுடியாமல் போய்விடுகிறது.////

வாங்க நண்பா, கூப்பிட்ட உடனே வந்ததுக்கு ரொம்ப நன்றி நணபா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
சரி மச்சி ...,
இப்போ நான் பெட் ல தூங்கிட்டு இருக்கேன் ..,ஆனா கமெண்ட் மட்டும் டைப் பண்றேன் எப்படி ..,? : )))))))))))))))////

அப்பபோ நீய்யி தலைகீழ கூடத்தான் நடக்குற, எப்பிடின்னு யாராவது கேட்டோமா?

R.Gopi said...

தலீவா....

ஆவி அமுதான்னு ஒருத்தரு இருக்காய்ங்களாம்... பேசித்தான் பாருங்களேன்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// R.Gopi said...
தலீவா....

ஆவி அமுதான்னு ஒருத்தரு இருக்காய்ங்களாம்... பேசித்தான் பாருங்களேன்!!!/////

வில்லங்கமான ஆளுய்யா நீரு...!

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு!

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் தலைப்பைப் பார்த்து உங்களை நான் தப்பாவே நெனச்சுட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு!///

அதெல்லாம் இருக்கட்டும் என்ன புது போஸ்ட்டு ஒண்ணும் காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் தலைப்பைப் பார்த்து உங்களை நான் தப்பாவே நெனச்சுட்டேன்.

அப்பிடிலாம் அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதே,மொதல்ல பதிவ படிச்சி முடி!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு!///

அதெல்லாம் இருக்கட்டும் என்ன புது போஸ்ட்டு ஒண்ணும் காணோம்?//

தீபாவளி லீவ்லே கொஞ்சம் ஊர் சுத்துனேன். அதனால போட முடியல. இனி போட்டுடுறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு!///

அதெல்லாம் இருக்கட்டும் என்ன புது போஸ்ட்டு ஒண்ணும் காணோம்?//

தீபாவளி லீவ்லே கொஞ்சம் ஊர் சுத்துனேன். அதனால போட முடியல. இனி போட்டுடுறேன்.///

ஏதாவது சிக்குச்சா?

பதிவுலகில் பாபு said...

பதிவுலகத்துல புது டிரண்ட் உருவாயிடுச்சா.. ஒரே ஆவியா இருக்கு... :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலகில் பாபு said...
பதிவுலகத்துல புது டிரண்ட் உருவாயிடுச்சா.. ஒரே ஆவியா இருக்கு... :-))///

ஆமாங்க இப்பல்லாம் என் ப்ளாக்குக்கு வரவே ரொம்ப பயமா இருக்குங்க

பதிவுலகில் பாபு said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..
///ஆமாங்க இப்பல்லாம் என் ப்ளாக்குக்கு வரவே ரொம்ப பயமா இருக்குங்க ///

ஹா ஹா ஹா.. அப்போ என் பிளாக்குக்கு வாங்க அடிக்கடி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பதிவுலகில் பாபு said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..
///ஆமாங்க இப்பல்லாம் என் ப்ளாக்குக்கு வரவே ரொம்ப பயமா இருக்குங்க ///

ஹா ஹா ஹா.. அப்போ என் பிளாக்குக்கு வாங்க அடிக்கடி..////

நிச்ச்சயமா வாரேன்...!

dineshkumar said...

யோவ் கவுண்டரே
பதிவு போட்டா சொல்றது இல்லையா ஜஸ்ட் ஒரு மிஸ் கால ஒரு மெயில் எதாவது பன்னுயா jemdinesh@gmail.com, 00973-39014958

சரி கொஞ்சம் வந்து போங்க கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
யோவ் கவுண்டரே
பதிவு போட்டா சொல்றது இல்லையா ஜஸ்ட் ஒரு மிஸ் கால ஒரு மெயில் எதாவது பன்னுயா jemdinesh@gmail.com, 00973-39014958

சரி கொஞ்சம் வந்து போங்க கவுண்டரே///

ஓக்கே நண்பா... இப்பவே வர்ரேன்!

dineshkumar said...

நான் நம்பறேன் கவுண்டரே
எங்க ஊர்ல சித்திரை மாசம் சிறுத்தொண்டன் படையல் திருவிழா ரொம்ப சிறப்பா நடக்கும் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் எங்க தாத்தாவும் அப்பாவும் தான் அந்த படையலுக்கு அரும்பாடுபட்டவர்கள் நாளடைவில் ஊர் தகராறு ஒன்றின் மூலமாக இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது இத நான் ஏன் சொல்ல்றேன்னா.

திருவிழா தடைபட்ட வருடமே என் தாத்தா காலமாகிவிட்டார். மறுவருடம் சித்திரையும் வந்தது சிறுதொண்டன் படையலுக்கு முன் தின இரவில் தாத்தா என் கனவில் காட்சி கொடுத்து ஊர் போனால் என்ன இந்த படையல் நீங்க தொடர்ந்து செய்துகிட்டே இருக்கணும்னு சொன்னார் நானும் தூக்கத்திலே பேசியிருக்கேன் காலைல நான் அப்பாகிட்ட சொல்லுவதற்கு முன்னே அப்பா கேட்டார் என்னடா தூக்கத்துல யார்கிட்ட பேசிட்டிருந்தேனு கேட்டார் அப்பாகிட்ட விவரத்தை சொன்னேன் இன்று வரை சித்திரையில் என் வீட்டில் சிறுத்தொண்டன் படையல் போட்டு அண்ணம் அளிப்பதை சிறு தொண்டாக செய்து வருகிறோம்.......

பிரபு . எம் said...

ஹலோ பாஸ் :)
இதான் முதல்தடவை உங்க கடைக்கு வர்றது...
பன்னிக்குட்டி ராம்சாமி!! என்ன பேர் சார் இது :) :)
சூப்பர்.. ரொம்ப இண்ட்ரஸ்டிங் உங்க வலைப்பூ... பதிவுகள் எல்லாமே...
என்னையும் குரூப்புல சேத்துக்கோங்க.... ( நான் அல்லக்கைஸ் இல்ல!!)
ஆவி சேட்டை சூப்பரப்பு :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரபு . எம் said...
ஹலோ பாஸ் :)
இதான் முதல்தடவை உங்க கடைக்கு வர்றது...
பன்னிக்குட்டி ராம்சாமி!! என்ன பேர் சார் இது :) :)
சூப்பர்.. ரொம்ப இண்ட்ரஸ்டிங் உங்க வலைப்பூ... பதிவுகள் எல்லாமே...
என்னையும் குரூப்புல சேத்துக்கோங்க.... ( நான் அல்லக்கைஸ் இல்ல!!)
ஆவி சேட்டை சூப்பரப்பு :)///


வாங்க வாங்க... இங்க வந்துட்டீங்கள்ல, இனி நீங்களும் நம்ம குருப்புத்தான்!
நன்றி பிரபு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
நான் நம்பறேன் கவுண்டரே///

நன்றி நண்பா....!

கவிதை காதலன் said...

உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...

நான் அதை வழி மொழிகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,உங்க பதிவின் டைட்டிலை பார்த்ததுமே அதில் ஆனந்த விகடனை யூஸ் பண்ணீ இருப்பீங்கனு நினைச்சேன்,எக்சாட்லி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 4 பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???///

அப்பொ மூதேவி பாக்கனும் சொன்ன டெரர் போட்டோ கொடுப....\

யோவ் ரமேஷ் தேவி மேட்டர் என்னாச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உனக்கு பிகருலாம் வேற இருக்கா மாப்பு, சொல்லவே இல்ல ? //////

யோவ்

இன்னாயா இப்படி கேட்டுட்ட ??? நான் லவ் பண்ற பொண்ணு தான் lover அவங்க லவ் பண்ணாலும் சரி ...., இல்ல பண்ணலாலும் சரி ........,////


இது மேட்டரு

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,வழக்கமான உங்க நையாண்டி இதுல கம்மி,பார்த்துக்குங்க,,,

தமிழ்க் காதலன். said...

பேய்களைப் பற்றி எழுதி பயமுறுத்துறீங்க.... உங்க குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நன்றி. வந்து பாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை காதலன் said...
உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...////

அடடா... இப்பிடி வேற பிரச்சனையா?

ஹேமா said...

உங்க பின்னுக்கே வந்து நானும் ஆவியைப் பாக்காலாம்ன்னு தொடர்ந்தும் வாசிச்சேன்.கடைசில ஆனந்த விகடன் தானான்னு போச்சு.உண்மையான ஆவிக்கதை ஒண்ணு சொல்லுங்க !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
கவிதை காதலன் said...

உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...

நான் அதை வழி மொழிகிறேன்////

ஓக்கே.. இது விஷயமா நாளைக்கு பில்கேட்ஸுகிட்ட பேசுரேன், இதெல்லாம் எனக்கு சாதாரணம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,உங்க பதிவின் டைட்டிலை பார்த்ததுமே அதில் ஆனந்த விகடனை யூஸ் பண்ணீ இருப்பீங்கனு நினைச்சேன்,எக்சாட்லி///

உங்களுக்கு கிட்னி ஜாஸ்திங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 4 பன்னிகுட்டி

அப்பொ பாவி பாக்கனும் சொன்ன உன் போட்டோ கொடுப்பியா???///

அப்பொ மூதேவி பாக்கனும் சொன்ன டெரர் போட்டோ கொடுப....\

யோவ் ரமேஷ் தேவி மேட்டர் என்னாச்சு?////

என்னய்யா இது புதுக்கதையா இருக்கு? சிங்கப்பூரு மேட்டரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உனக்கு பிகருலாம் வேற இருக்கா மாப்பு, சொல்லவே இல்ல ? //////

யோவ்

இன்னாயா இப்படி கேட்டுட்ட ??? நான் லவ் பண்ற பொண்ணு தான் lover அவங்க லவ் பண்ணாலும் சரி ...., இல்ல பண்ணலாலும் சரி ........,////


இது மேட்டரு///

சேம் பிளட்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,வழக்கமான உங்க நையாண்டி இதுல கம்மி,பார்த்துக்குங்க,,,////

அப்படிங்கிறீங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தமிழ்க் காதலன். said...
பேய்களைப் பற்றி எழுதி பயமுறுத்துறீங்க.... உங்க குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நன்றி. வந்து பாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )////

நன்றி சார், இதோ வர்ரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஹேமா said...
உங்க பின்னுக்கே வந்து நானும் ஆவியைப் பாக்காலாம்ன்னு தொடர்ந்தும் வாசிச்சேன்.கடைசில ஆனந்த விகடன் தானான்னு போச்சு.உண்மையான ஆவிக்கதை ஒண்ணு சொல்லுங்க !////

மேலே இல்ல ரெண்டு சம்பவங்களும் உண்மையா நடந்ததுங்க...! அதுக்கப்புறம் வர்ரதுதான் ...ஹி...ஹி... டுபாக்கூரு....!

கவிதை காதலன் said...

//கவிதை காதலன் said...

உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...

நான் அதை வழி மொழிகிறேன்////

ஓக்கே.. இது விஷயமா நாளைக்கு பில்கேட்ஸுகிட்ட பேசுரேன், இதெல்லாம் எனக்கு சாதாரணம்....! //

அதெப்பிடிங்க ராம்சாமி விடாம அடிக்கிறீங்க.. சோக்கு....ஹி.. ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை காதலன் said...
//கவிதை காதலன் said...

உங்க பிளாக்ல கமெண்ட் ஓபன் பண்றதுக்குள்ள என் நெட் ரொம்ப ஹேங் ஆயிடுது.. அவ்ளோ கமெண்ட் இருந்தா எப்படித்தான்யா ஒருத்தன் கமெண்ட் போடுறது.. முடியலை...

நான் அதை வழி மொழிகிறேன்////

ஓக்கே.. இது விஷயமா நாளைக்கு பில்கேட்ஸுகிட்ட பேசுரேன், இதெல்லாம் எனக்கு சாதாரணம்....! //

அதெப்பிடிங்க ராம்சாமி விடாம அடிக்கிறீங்க.. சோக்கு....ஹி.. ஹி../////

வேறென்ன வேல இருக்கு? ஹி...ஹி....!

பாரத்... பாரதி... said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இவ்ளோ என் கஷ்டப்படனும். பேசாம இட்லி அவிக்க வேண்டிதான?///

திஙகிறதுலேயே இரு!

nice