Monday, November 1, 2010

பிரபல பதிவர்களும் பிரச்சனைகளும்! வழிதான் என்ன?

பதிவர்கள் ஆயிட்டாலே பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள், அதிலும் பிரபல பதிவர்னா சொல்லவே வேணாம், கல்யாணம் காதுகுத்து எல்லாமே பிரச்சனைதான். பதிவர்கள்னாலே தியாகிகள்தானே, இதெல்லாம் அனுசரிச்சுக்கிட்டு போகவேண்டியதுதான் என்றாலும், அப்பிடியே விட்ற முடியுமா? இனிமே இந்த மாதிரி பிரச்சனை வராம எப்படி ஒரு பங்க்சன் நடத்துறதுன்னு நம்ம ஐடியா மணி அண்ணன் கிட்ட கேட்டோம், மனுசன் பிச்சி உதறிட்டாரு! உங்களுக்காக கீழே அதை கொடுத்திருக்கேன், பாத்து, படிச்சு, பக்குவமா நடந்துக்குங்க, ஆமா!
மொதல்ல இன்விட்டேசன்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம், இன்விட்டேசன் அடிக்கும்போது, மறந்துடாம அதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு, யாரு காசு கொடுத்தா, பாக்கி எவ்வளவு இருக்கு எல்லாத்தையும் முன்பக்கத்துல போட்ருங்க (ஆமா பொண்ணு மாப்ள பேருக்கும் முன்னாடி தான் போடனும்)

அப்புறம் எல்லாத்தையும் கூப்பிடறதுதான் பெரிய வேல. இதுலதான் சிக்கலே இருக்கு. எல்லாரும் யார் யாரைக் கூப்புடனும்னு லிஸ்ட் தயார் பண்ணுவாங்க, ஆனா நீங்கதான் பிரபல பதிவராச்சே, அதுனால, நீங்க யார் யார கூப்புடக் கூடாதுன்னு லிஸ்ட் தயார் பண்ணனும். (கல்யாணத்தன்னிக்குக் கூட, நீங்க கூப்புடாத ஆளுக மண்டபத்துகுள்ள வராம பாத்துக்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்)

இனி துணி எடுக்கப் போவோமா? துணி வாங்கும்போது அதுல எதுலேயும் விலை ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர கிழிச்சிடாதீங்க. அப்படியே வெச்சுடுங்க. நடிகன் படத்துல கவுண்டரு, சத்யராஜ் பெரியப்ப பையன்னு சொல்லி பாக்க வருவாரே அந்த மாதிரி கல்யாண்த்தன்னிக்கு ட்ரெஸ்ஸ அப்பிடியே ஸ்டிக்கரோடவே போட்டுக்கனும். யாரும் எது என்ன விலைன்னு கேட்டு நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க, அப்பிடியே பாத்துக்கலாம்.

கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, சமையல் கான்ட்ராக்ட் எவ்வளவுன்னு ஸ்டேஜ் பேக்ரவுண்ட்ல பெரிய பேனர் பிரின்ட் பண்ணி வெச்சிடலாம். ஒரு சாப்பாட்டுக்கு குத்துமதிப்பா எவ்வளவு செலவு பண்ணியிருக்கீங்கன்னும் போட்டுட்டிங்கன்னா, மொய்யெழுதறவங்க அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க வசதியா இருக்கும். மொய் நிறைய கொடுக்குறவங்கள கல்யாண மண்டப ஓனர்கிட்டயே கூட்டிட்டு போயி செலவு விபரம் சொல்லலாம். அதுக்கும் மேல அதிகமா மொய் கொடுத்தவங்கள, உக்கார வெச்சி, கல்யாணத்தோட மொத்த வரவு செலவு கணக்க தயார் பண்ணி ஒப்படைச்சிடலாம். அவங்க பாத்து சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் மண்டபத்த விட்டே வரனும்!

கல்யாணத்துக்கு வர்ர பிரபலபதிவர்கள் யாரும் மண்டபத்துக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாதுன்னு சொல்லிடலாம். அதே மாதிரி யாரும் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பான உத்தரவு போட்ருங்க. நீங்க  எடுக்கும் போட்டோவையும் யாருக்கும் கொடுத்துடாதீங்க  (எந்திரன் படத்த விட கஷ்டமா இருக்கும் போலேயே?)

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு, மறந்திட்டேன், பதிவரு சந்திப்புன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா மண்டபத்து பக்கம் இல்ல, அந்த தெரு பக்கமே விட்றாதீங்க. இது ரொம்ப முக்கியம் ஆமா!

கல்யாணம்  முடிஞ்சப்புறம் ஹனிமூன் அது இதுன்னு ஓடிடாதீங்க, பொறுமையா உக்காந்து, யாரெல்லாம் வந்ததாங்க, எப்பிடி சாப்புட்டாங்க, சாபாட்டு மெனு, லைட் மியூசிக்ல என்ன பாட்டு பாடுனாங்க,  மண்டபத்துல என்ன பெயின்ட் அடிச்சிருந்தாங்க, டாய்லெட்டுல என்ன கம்பெனி சிங்க் இருந்துச்சு, எவ்வளவு மொய் வந்துச்சு, டோட்டல் கணக்கு வழக்கு  விபரமா தயார் பண்ணி நீங்களே ஒரு பதிவா போட்ருங்க!

இதுக்கு மேலேயும் கல்யாணத்தப் பத்தி வேற ஏதாவது பதிவுப் பிரச்சனை வந்துடுச்சுன்னா, உடனடியா போயி கெஜட்ல இருந்தே உங்க டோட்டல் பேமிலி பேருகளையும் மாத்திடுங்க!

தத்துவக் குத்து:  தாத்தா சொல்றார், பதிவர்களே... ஓ... பதிவர்களே...! நீங்கள் என்னை எத்தனை முறை குமுறக் குமுறக் குதறினாலும், சளைக்கமாட்டேன், மீண்டும் மீண்டும் வாயைக் கொடுத்து அங்கமெல்லாம் புண்ணாகுவேன்!

பி.கு: இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது, ங்கொக்காமக்கா இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா, அப்புறம் நம்ம டீஆரு கட்சில சேத்து விட்டுருவேன் ஆமா....!

!

173 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட ரொம்ப நாளிக்கப்புரம் வட்டை கிடைச்சது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாட ரொம்ப நாளிக்கப்புரம் வட்டை கிடைச்சது////

பாத்து பாத்து விக்கிக்க போகுது!

சௌந்தர் said...

@@@ரமேஷ் யோவ் கல்யாணவீட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தான் வடை கிடைக்கும்

சௌந்தர் said...

ரமேஷ் இந்த ஆளை அந்த தெருபக்கமே விடாதீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சௌந்தர் said...
ரமேஷ் இந்த ஆளை அந்த தெருபக்கமே விடாதீங்க///

எனக்கே அல்வாவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கல்யாணத்துக்கு வர்ர பிரபலபதிவர்கள் யாரும் மண்டபத்துக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாதுன்னு சொல்லிடலாம். அதே மாதிரி யாரும் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பான உத்தரவு போட்ருங்க. நீங்க எடுக்கும் போட்டோவையும் யாருக்கும் கொடுத்துடாதீங்க (எந்திரன் படத்த விட கஷ்டமா இருக்கும் போலேயே?)///

பேசாம கல்யாணத்த சன் டிவி க்கு காண்ட்ராக்ட் விட்டுடுவோம்...

சௌந்தர் said...

ஹலோ பன்னிக்குட்டி கல்யாணத்திற்கு எந்த அப்பளம் போடலாம் பாக்குரிங்களா???

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிரபல பதிவர்னாலே ஒரே குஸ்டமப்பா..ச்சே கஸ்டமப்பா..எனக்கே இப்படீன்னா நம்ம பன்னிக்குட்டி அண்ணன் மாதிரி அகில உலக பிரபல பதிவர்னா நினைச்சாலே நெஞ்சம் பதறுகிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கல்யாணத்துக்கு வர்ர பிரபலபதிவர்கள் யாரும் மண்டபத்துக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாதுன்னு சொல்லிடலாம். அதே மாதிரி யாரும் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பான உத்தரவு போட்ருங்க. நீங்க எடுக்கும் போட்டோவையும் யாருக்கும் கொடுத்துடாதீங்க (எந்திரன் படத்த விட கஷ்டமா இருக்கும் போலேயே?)///

பேசாம கல்யாணத்த சன் டிவி க்கு காண்ட்ராக்ட் விட்டுடுவோம்...///

ஏன் தியேட்டர்லேயே ரிலீஸ் பண்ணிடுவோம்!

சௌந்தர் said...

பி.கு: இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது, ங்கொக்காமக்கா இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா, அப்புறம் நம்ம டீஆரு கட்சில சேத்து விட்டுருவேன் ஆமா....!///

ரமேஷ் வடையில் உப்பு இருந்ததா????

அருண் பிரசாத் said...

எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கல்யானத்துக்கு வந்தமா ,சாப்பாடு ஒரு கட்டு கட்டினமா பணம் இல்லாத வெறும் கவரை பொண்ணு மாப்ல கையில கொடுத்தமா எஸ்கேப் ஆனமான்னு இருக்கணும் அங்க ஏண்டா நொள்ளைக்கண்ணு போட்டுகிட்டு ஆராய்ச்சி பண்றிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
பி.கு: இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது, ங்கொக்காமக்கா இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா, அப்புறம் நம்ம டீஆரு கட்சில சேத்து விட்டுருவேன் ஆமா....!///

ரமேஷ் வடையில் உப்பு இருந்ததா????///

அதெல்லாம் வேற தெரியுமா போலீசுக்கு?

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?/////

அவர் தான் நம்ம பன்னிக்குட்டி.....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹல்லோ..மிஸ்டர் ராமசாமி பிரபல பதிவர் சுதந்திரமா ஒண்ணுக்கு கூட போகமுடியாத இந்த அவல நிலையை பத்தி பிபிசி க்கு ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து தரமுடியுமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?//

சத்தியமா நீங்க இல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
ஹலோ பன்னிக்குட்டி கல்யாணத்திற்கு எந்த அப்பளம் போடலாம் பாக்குரிங்களா???///

பின்னே பதிவர்கள் கல்யாணம்னா சும்மாவா? அப்பளம் போட்டே ஆச்சிய புடிச்சிட மாட்டேன்?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரமேஷ் வடையில் உப்பு இருந்ததா????///

அதெல்லாம் வேற தெரியுமா போலீசுக்கு?//
அவருக்கு கம்மாய்,கன்னுகுட்டி,கட்டிப்புடி தான் தெரியும் உப்பு தெரியாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
பி.கு: இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது, ங்கொக்காமக்கா இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா, அப்புறம் நம்ம டீஆரு கட்சில சேத்து விட்டுருவேன் ஆமா....!///

ரமேஷ் வடையில் உப்பு இருந்ததா????///

அதெல்லாம் வேற தெரியுமா போலீசுக்கு?//

நான் பன்னி மாதிரி சூடு சுரணை இல்லாதவன்னு நினைசீன்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?///

அந்தக்கருமத்த எப்பிடிக் கண்டுபிடிக்கீறதுன்னுதான் ஒரு தனிப் பதிவே போட்டிரந்தேனே?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்பாட ரொம்ப நாளிக்கப்புரம் வட்டை கிடைச்சது//எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் கமெண்ட் போட இடமே கிடைச்சது

அருண் பிரசாத் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?//

சத்தியமா நீங்க இல்ல//

அப்பாடி தப்பிச்சேன்.... அப்போ, நீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹல்லோ..மிஸ்டர் ராமசாமி பிரபல பதிவர் சுதந்திரமா ஒண்ணுக்கு கூட போகமுடியாத இந்த அவல நிலையை பத்தி பிபிசி க்கு ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து தரமுடியுமா///

சாரி அல்ரெடி புக்குடு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
அருண் பிரசாத் said...
எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?/////

அவர் தான் நம்ம பன்னிக்குட்டி.....///

இதுக்குத்தான் கீழே பெருசா எச்சரிக்கை போட்டிருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

எல்லாம் ஓகே தான் இந்த பிரபல பதிவர் பிரபல பதிவர்னு சொல்லுறீங்களே அது யாரு?//

சத்தியமா நீங்க இல்ல//

அப்பாடி தப்பிச்சேன்.... அப்போ, நீங்களா?///

அதததான்யா அபபிடி நேக்கா சொல்றாரு போலீசு!

Anonymous said...

பி.கு. அருமை... டி ராஜேந்தர் என்னப்பா பண்ணாரு... ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கல்யானத்துக்கு வந்தமா ,சாப்பாடு ஒரு கட்டு கட்டினமா பணம் இல்லாத வெறும் கவரை பொண்ணு மாப்ல கையில கொடுத்தமா எஸ்கேப் ஆனமான்னு இருக்கணும் அங்க ஏண்டா நொள்ளைக்கண்ணு போட்டுகிட்டு ஆராய்ச்சி பண்றிங்க///

என்ன பண்றது, அப்பிடி பணணலேன்னா கக்கா வரமாட்டீங்கிதாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
பிரபல பதிவர்னாலே ஒரே குஸ்டமப்பா..ச்சே கஸ்டமப்பா..எனக்கே இப்படீன்னா நம்ம பன்னிக்குட்டி அண்ணன் மாதிரி அகில உலக பிரபல பதிவர்னா நினைச்சாலே நெஞ்சம் பதறுகிறது///

அடடடா...ஒண்ணுமே இல்லேன்னாலும் இவிங்களே பிரச்சனைய தேடிப்புடிச்சி கூட்டிடடு வருவாங்க போல?

மங்குனி அமைசர் said...

பக்குவமா நடந்துக்குங்க, ஆமா!
////

யாருகிட்ட ?????

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?

ராஜகோபால் said...

பன்னிக்குட்டி said...

//பின்னே பதிவர்கள் கல்யாணம்னா சும்மாவா? அப்பளம் போட்டே ஆச்சிய புடிச்சிட மாட்டேன்? //

ஆகா அப்பா 2011 - ல நம்ம ஆட்சிதான்..

டிஸ்க்கு : யோ அது ஆட்சியா இல்ல நம்ம மனோரம்மா ஆச்சியா

மங்குனி அமைசர் said...

(கல்யாணத்தன்னிக்குக் கூட, நீங்க கூப்புடாத ஆளுக மண்டபத்துகுள்ள வராம பாத்துக்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்)////

ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்ப போல ???

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன பண்றது, அப்பிடி பணணலேன்னா கக்கா வரமாட்டீங்கிதாமே?//அவனுகளை பிடிச்சிட்டு போய் 100 தடவை குருவி படம் போட்டு காட்டணும்..இல்லைன்னா டி ஆரு கட்சியில செர்த்து விட்ரணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மங்குனி அமைசர் said...
பக்குவமா நடந்துக்குங்க, ஆமா!
////

யாருகிட்ட ?????////

ஆமா யாருகிட்ட? டேய் தம்பி போயி நம்ம ஐடியா மணி அண்ணன கூட்டிட்டு வா!

மங்குனி அமைசர் said...

கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, ////

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ? பிகாஸ் ஐ "டோண்டு" வான்ட்டு எனி கபியுசன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம். பதிவர் என்ன சொந்தக்கார பயளுக கூட வரமாட்டான். ஆனா பயத்துல பொன்னும் வரலன்னா ரொம்ப குஷ்டம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?///

நீங்க சூரியன் படம் இன்னொரு வாட்டி பாருங்க!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி//
அதுவா தம்பி? சிறுத்து கன்னுக்குட்டி மாதிரி சின்ன வயசுல இருந்த அண்ணன் பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் பூரிப்புல கொஞ்சம் பெருத்து பன்னிகுட்டி ஆயிட்டாரு

மங்குனி அமைசர் said...

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது,////

ஆமா இது முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுத்தப்பட்டது . நோபடி "டோண்டு " டேக் எனி அதர் ஐடியாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, ////

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ? பிகாஸ் ஐ "டோண்டு" வான்ட்டு எனி கபியுசன்///

இதுல உள்குத்து, வெளீகுத்து, நடுகுதது, சைடுகுத்து எல்லாம் இருக்கு ஓய்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம்//
இந்த ஆளு சுத்து பட்டு 18 பட்டி ஜனத்தையும் கொல்ல ஐடியா சொல்றாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி//
அதுவா தம்பி? சிறுத்து கன்னுக்குட்டி மாதிரி சின்ன வயசுல இருந்த அண்ணன் பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் பூரிப்புல கொஞ்சம் பெருத்து பன்னிகுட்டி ஆயிட்டாரு///

ஆஹா... மாப்பு நம்மலுக்கே வெக்கிராய்ங்க ஆப்பு!

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?////

இந்த குழந்தை புள்ளைய உட்காரவச்சு கூல்ட்ரிங்க்ஸ் குடுங்க , நான் டீ சாப்ட்டு வந்திடுறேன் , (தக்காளி எவனாவது இந்த பீசா தப்பிச்சு போக விட்டிங்க , அப்புறம் நடக்கிறதே வேற )

நாகராஜசோழன் MA said...

//
கல்யாணம் முடிஞ்சப்புறம் ஹனிமூன் அது இதுன்னு ஓடிடாதீங்க, //

இங்க கல்யாணத்துக்கே வழிய காணோம். இதுல ஹனிமூன் வேறயா?

பிரியமுடன் ரமேஷ் said...

//அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு, மறந்திட்டேன், பதிவரு சந்திப்புன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா மண்டபத்து பக்கம் இல்ல, அந்த தெரு பக்கமே விட்றாதீங்க. இது ரொம்ப முக்கியம் ஆமா!

ஹ ஹ ஹ..

நம்ம ரமேஷ் கல்யாண ரிசப்சன்ல நடந்த பதிவர் சந்திப்பை இந்த லிங்க்ல பாருங்க..

http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_31.html

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, ////
புள்ளையார் கோவில்ல தாலி கட்டினாலும் இதே கேள்விதானா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம்//
இந்த ஆளு சுத்து பட்டு 18 பட்டி ஜனத்தையும் கொல்ல ஐடியா சொல்றாரு///

இது கல்யாணத்துக்கு சொல்ற ஐடியா மாதிரி தெரியலியே, ஏதொ காரியம் பண்ண ஏற்பாடு மாதிரி இருக்கே?

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?////

இந்த குழந்தை புள்ளைய உட்காரவச்சு கூல்ட்ரிங்க்ஸ் குடுங்க , நான் டீ சாப்ட்டு வந்திடுறேன் , (தக்காளி எவனாவது இந்த பீசா தப்பிச்சு போக விட்டிங்க , அப்புறம் நடக்கிறதே வேற )//

சீக்கிரம் வாய்யா நேரம் ஆகுதுல்ல. (ஆடு துள்ளுது).

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம்//
இந்த ஆளு சுத்து பட்டு 18 பட்டி ஜனத்தையும் கொல்ல ஐடியா சொல்றாரு///

இது கல்யாணத்துக்கு சொல்ற ஐடியா மாதிரி தெரியலியே, ஏதொ காரியம் பண்ண ஏற்பாடு மாதிரி இருக்கே?//

மொத்தமா எல்லோருக்கும் காரியத்த முடிச்சிடலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?////

இந்த குழந்தை புள்ளைய உட்காரவச்சு கூல்ட்ரிங்க்ஸ் குடுங்க , நான் டீ சாப்ட்டு வந்திடுறேன் , (தக்காளி எவனாவது இந்த பீசா தப்பிச்சு போக விட்டிங்க , அப்புறம் நடக்கிறதே வேற )////

நீ கேட்ட கேள்விய பாத்து மெரண்டு அது எப்பவோ ஓடிடிச்சு!

ILLUMINATI said...

//கல்யாண்த்தன்னிக்கு ட்ரெஸ்ஸ அப்பிடியே ஸ்டிக்கரோடவே போட்டுக்கனும். யாரும் எது என்ன விலைன்னு கேட்டு நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க, அப்பிடியே பாத்துக்கலாம்.//

இன்னொரு முக்கியமான விஷயம்! யாரு காசு கொடுதான்னு இன்னொரு லேபல் இருந்தா இன்னும் வசதி..

//அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு, மறந்திட்டேன், பதிவரு சந்திப்புன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா மண்டபத்து பக்கம் இல்ல, அந்த தெரு பக்கமே விட்றாதீங்க. இது ரொம்ப முக்கியம் ஆமா!//

அடுத்து இனிமே அப்படி தான் போல மச்சி...

//தாத்தா சொல்றார், பதிவர்களே... ஓ... பதிவர்களே...! நீங்கள் என்னை எத்தனை முறை குமுறக் குமுறக் குதறினாலும், சளைக்கமாட்டேன், மீண்டும் மீண்டும் வாயைக் கொடுத்து அங்கமெல்லாம் புண்ணாகுவேன்!//

திரும்ப திரும்ப சொல்றேன்! நன்'பேண்(டு)'டா...

ராஜகோபால் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம். பதிவர் என்ன சொந்தக்கார பயளுக கூட வரமாட்டான். ஆனா பயத்துல பொன்னும் வரலன்னா ரொம்ப குஷ்டம்
//

நம்ம டி.ஆர் டாடி மம்மி பாட்டுக்கு குத்து டான்ச ஆடவச்சு டிவில காட்டலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, ////
புள்ளையார் கோவில்ல தாலி கட்டினாலும் இதே கேள்விதானா///

சாரி ராங்க் கொஸ்டின்!, நெக்ஸ்ட்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைசர் said...

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது,////

ஆமா இது முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுத்தப்பட்டது . நோபடி "டோண்டு " டேக் எனி அதர் ஐடியாஸ்///

மங்க்குனிக்கு ஹாரிபாட்டர் புக் இலவசம்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 37
பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம். பதிவர் என்ன சொந்தக்கார பயளுக கூட வரமாட்டான். ஆனா பயத்துல பொன்னும் வரலன்னா ரொம்ப குஷ்டம்////

அதுக்கு அந்த விஜய் பையனை நேரில் கூப்பிட்டா அந்த மாவட்டமே இருக்குது அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
திரும்ப திரும்ப சொல்றேன்! நன்'பேண்(டு)'டா...///

நண்பேணடா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைசர் said...

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது,////

ஆமா இது முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுத்தப்பட்டது . நோபடி "டோண்டு " டேக் எனி அதர் ஐடியாஸ்///

மங்க்குனிக்கு ஹாரிபாட்டர் புக் இலவசம்////

செத்தான் மங்குனி, ப்ளாக்க அடச்சிட்டு ஊருக்கு ஓடிடு!

dondu(#11168674346665545885) said...

இத்தனை நாளா கட்டிக்காத்து, மத்தவங்களுக்கும் வழிமொழிந்த சீர்திருத்த எண்ணங்களுக்கு மாறா பெரியவங்க கொள்கைக்கு மதிப்பு கொடுக்கறதுக்காக மாத்தி செஞ்சா அதை பேசாம தங்களுக்குள்ளேயே செஞ்சுக்கோணும்.

அதை விட்டுட்டு முதல்ல பதிவர் மீட்டிங்குன்னு வச்சுட்டு முக்கிய ஆளுங்க அந்த இடத்திலே அந்த நேரத்துல மேனர்ஸ் இல்லாம போகக்கூடாது.

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.

போட்டோ எடுத்தா பின்புலத்துல சாமி படங்கள், மங்கலச் சின்னங்கள் எதுவும் இல்லாம பாத்துக்கோணும்.

எதார்த்தமா தகவலுக்காக அவ்வளவு அருமையான மண்டபத்துக்கு வாடகை எவ்ளோன்னு பெரிசு கேட்டா, இன்னும் பில் வரல்ல, பாத்து சொல்லறேன்னு சொல்லணும் இல்லேனாக்க உண்மையைச் சொல்லணும். ஆனால் அதே உண்மை சங்கடம் தருவதாக இருந்தால் பாலிஷ்டா சொல்லணும். ராபணான்னு பெண் வீட்டார் தலையில்தான் அச்செலவுன்னு சொல்லறது (அது உண்மையோ பொய்யோ) எப்போதுமே ஒரு பெண்ணியவாதி செய்யக்கூடாத விஷயம்.

பெரிசுக்கும் ஒரு வார்த்தை. பதிவர் மீட்டிங் யார் கூப்பிடறாங்கன்னு தராதரம் பார்த்து போகணும். தன் வீட்டுக்கு தேவையில்லாத பதிவர்கள் வருவதை தடுக்கணும். இந்தப் பின்னூட்டத்தையும் அது தன்னோட பதிவில் சேஃப்டிக்காக போடறது நல்லது.

ஆக எல்லோருக்குமே பாடம்தான்னு வச்சுண்டா டேமேஜ் லிமிட்டாகும்.

முரளி மனோகர்

சௌந்தர் said...

மங்குனி அமைசர் said...

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது,////

ஆமா இது முழுவதும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுத்தப்பட்டது . நோபடி "டோண்டு " டேக் எனி அதர் ஐடியாஸ்///

இதோ நான் ஒன்னு சொல்றேன்....

இந்த பன்னிக்குட்டி மனதில் இருப்பதை எல்லாம் வெளியே சொல்லிட்டு வெறும் நகைசுவை சொல்லி தப்பிக்க பார்கிறார்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேசாம மண்டப வாசல்ல பெரிய திரை கட்டி விஜய் படம் போடலாம். பதிவர் என்ன சொந்தக்கார பயளுக கூட வரமாட்டான். ஆனா பயத்துல பொன்னும் வரலன்னா ரொம்ப குஷ்டம்
//

நம்ம டி.ஆர் டாடி மம்மி பாட்டுக்கு குத்து டான்ச ஆடவச்சு டிவில காட்டலாம்.////

யோவ் நீ எக்குத்தப்பான ப்ளானா போடுற, எதுக்கும் முன் ஜாமீனுக்கு சொல்லி வைய்யி!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அய்யோ அம்மா ஒரு பெரிய திமிங்கலம் வந்து விழுந்து கிடக்குது..அணுகுண்டு வெடிக்கப்போகுது எஸ்கேப்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ dondu(#11168674346665545885)///

அடடா, வட போச்சே, சார்வாள் இத மெயில் பண்ணியிருந்தா இன்னொரு பதிவ தேத்தியிருக்கலாமே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
அய்யோ அம்மா ஒரு பெரிய திமிங்கலம் வந்து விழுந்து கிடக்குது..அணுகுண்டு வெடிக்கப்போகுது எஸ்கேப்///

ஆஹா கடையே காலியாயிடுச்சே?

நா.மணிவண்ணன் said...

// மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?////

இந்த குழந்தை புள்ளைய உட்காரவச்சு கூல்ட்ரிங்க்ஸ் குடுங்க , நான் டீ சாப்ட்டு வந்திடுறேன் , (தக்காளி எவனாவது இந்த பீசா தப்பிச்சு போக விட்டிங்க , அப்புறம் நடக்கிறதே வேற )//

சீக்கிரம் வாய்யா நேரம் ஆகுதுல்ல. (ஆடு துள்ளுது).

// மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?////

இந்த குழந்தை புள்ளைய உட்காரவச்சு கூல்ட்ரிங்க்ஸ் குடுங்க , நான் டீ சாப்ட்டு வந்திடுறேன் , (தக்காளி எவனாவது இந்த பீசா தப்பிச்சு போக விட்டிங்க , அப்புறம் நடக்கிறதே வேற )//

சீக்கிரம் வாய்யா நேரம் ஆகுதுல்ல. (ஆடு துள்ளுது).
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு

ராஜகோபால் said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீ எக்குத்தப்பான ப்ளானா போடுற, எதுக்கும் முன் ஜாமீனுக்கு சொல்லி வைய்யி!//

அப்ப பேரரச வரசொல்லி மைக்கு குடுத்து பஞ்சு டயலாக் பேச சொல்லுவோமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு/////

இதுவேற நடக்குதா. நா.மணிவண்ணன் நீர் வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு////

டோட்டல் டேமேஜ், மேட்டர் ஓவர்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடடா, வட போச்சே, சார்வாள் இத மெயில் பண்ணியிருந்தா இன்னொரு பதிவ தேத்தியிருக்கலாமே.//
பன்னிக்குட்டிக்கு வந்த மிரட்டல் நு நான் ஒரு பதிவ தேத்திடுரேன்...இன்னும் சில தலைப்புகள்..
1வேட்டிக்குள் ஓணானை விட்டுக்கொண்ட பன்னிகுட்டி எனும் பிரபல் பதிவர்
2பிரபல பதிவருக்கு இது தேவையா?
3ராமசாமி பதிவருக்கு மெயிலில் வந்த அணுகுண்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜகோபால் said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீ எக்குத்தப்பான ப்ளானா போடுற, எதுக்கும் முன் ஜாமீனுக்கு சொல்லி வைய்யி!//

அப்ப பேரரச வரசொல்லி மைக்கு குடுத்து பஞ்சு டயலாக் பேச சொல்லுவோமா/////

முடியல.....பாத்து செய்யுங்க!

ராஜகோபால் said...

//நா.மணிவண்ணன் said...

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு //

பன்னி இல்ல பன்னிகுட்டிக்கு
பிரசவம் பாத்துருப்பார்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு//
யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்..எங்கண்ணனை பார்த்து என்ன வார்த்தை சொல்லிபுட்டி ஆயிரம் பன்னிகளை..
பன்னிக்குட்டி ராமசாமி;-வேண்டாம் பிரச்சனையை இதோட விட்ரு
இல்லண்ணே..உங்களை பார்த்து என்ன வார்த்தை
ப்.ராமசாமி;சரி என்ன தான சொன்னாரு கோபபடாத..இன்னமும் டேமேஜ் பன்னிடாத..எல்லோரும் பார்க்கறாங்க
இல்லண்ணே...உங்களை போயி..
ப்.ராமசாமி;டேய் படவா..கம்முன்னு இருந்துக்கோ..கண்ல தண்ணியை அடக்கிகிட்டு இருக்கேன்..வீணா என்னை கொலைகாரனா மாத்திடாதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அடடா, வட போச்சே, சார்வாள் இத மெயில் பண்ணியிருந்தா இன்னொரு பதிவ தேத்தியிருக்கலாமே.//
பன்னிக்குட்டிக்கு வந்த மிரட்டல் நு நான் ஒரு பதிவ தேத்திடுரேன்...இன்னும் சில தலைப்புகள்..
1வேட்டிக்குள் ஓணானை விட்டுக்கொண்ட பன்னிகுட்டி எனும் பிரபல் பதிவர்
2பிரபல பதிவருக்கு இது தேவையா?
3ராமசாமி பதிவருக்கு மெயிலில் வந்த அணுகுண்டு///

போனவாட்டி மாதிரி இல்லாம கமிசன் கரெக்டா வந்துடனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராமசாமி பதிவருக்கு மெயிலில் வந்த அணுகு(டோ)ண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

நா.மணிவண்ணன் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு////

டோட்டல் டேமேஜ், மேட்டர் ஓவர்!////

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ,
தர்மம் மறுபடி வெல்லும்

நாகராஜசோழன் MA said...

பேசாம கல்யாணத்துக்கு சாம் ஆண்டர்சனை கூப்பிட்டுக்கலாம்.

மங்குனி அமைசர் said...

dondu(#11168674346665545885) said.../////

பண்ணி இதுவரைக்கு உன்னை எதாவத் தாப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்க , எப்பையாவது உன்னை தரம் தாழ்ந்து கேவலமா அசிங்கப் படுத்தி இருந்தாலோ , உன்மானத்தை மட்டு மரியாதை இல்லாமல் மானத்தை வாங்கி இருந்தாலோ , உன்னை கண்ட கண்ட கெட்ட வார்த்தையில திட்டி இருந்தாலோ மன்னித்துக் கொள்நண்பா , உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

dondu(#11168674346665545885) said.../////

பண்ணி இதுவரைக்கு உன்னை எதாவத் தாப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்க , எப்பையாவது உன்னை தரம் தாழ்ந்து கேவலமா அசிங்கப் படுத்தி இருந்தாலோ , உன்மானத்தை மட்டு மரியாதை இல்லாமல் மானத்தை வாங்கி இருந்தாலோ , உன்னை கண்ட கண்ட கெட்ட வார்த்தையில திட்டி இருந்தாலோ மன்னித்துக் கொள்நண்பா , உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்////

அந்த பயம் இருகனும்லே. நீ என்னடான்னா பன்னிகிட்ட உன்னோட இன்டர்நெட் வாடைகை எவ்ளோன்னு கேட்டிருக்க. எவ்ளோ திமிரு உனக்கு!!!

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு////

டோட்டல் டேமேஜ், மேட்டர் ஓவர்!////

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ,
தர்மம் மறுபடி வெல்லும்//

இப்ப இது எதுக்கு அமைச்சரே!

இம்சைஅரசன் பாபு.. said...

பண்ணி நல்ல இருக்கு .ரொம்ப நாளைக்கு அப்புறம் ரத்த (சினிமா ) வாடை வராம ஒரு பதிவு ...............
அது சரி படிச்சிட்டு கிட்டு கமெண்ட்ஸ் எப்படி போட்டிருகங்கன்னு படிசுகிட்டே வந்தேன் 58 வது கமெண்ட்ஸ் படிக்கும் போதே ரத்த வடை வந்துருச்சி ......டோன்ட் MISTAKE ME ................

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

அந்த பயம் இருகனும்லே. நீ என்னடான்னா பன்னிகிட்ட உன்னோட இன்டர்நெட் வாடைகை எவ்ளோன்னு கேட்டிருக்க. எவ்ளோ திமிரு உனக்கு!!!//

மாம்ஸ் நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்களை எங்காவது மெயிலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறாக சொல்லிருந்தால் மன்னித்துக்'கொல்'லவும்.

ம.தி.சுதா said...

சகோதரா நானும் இனிமேல் கடைப்பிடிக்கிறேன்...
என்ன சகோதரா இம்புட்டு கொமண்ட்ஸ் இருக்கு வாக்கு மட்டும் கம்மியாகவெ இருக்கிறது...

நாகராஜசோழன் MA said...

// நா.மணிவண்ணன் said...

///நா.மணிவண்ணன் said...
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு////

டோட்டல் டேமேஜ், மேட்டர் ஓவர்!நான் ஒன்லி பிரசவம்னு மட்டும் சொன்னேன் நீங்கதான்
மேட்டர் னு சொல்லிட்டீங்க//

யோவ் அசிங்கமாக பேசாதய்யா!

மங்குனி அமைசர் said...

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.////

வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான் , இனி எல்லாரும் கவனமா இருக்கனுமின்னு இப்பவாவது தெரிஞ்சுக்கங்க .

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்//
ஆமண்ணே என்னோட கமெண்டையும் எச்சி தொட்டு அழிச்சிரு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான்//
.ஓ..இப்பதான் மேட்டர் புரியுது..எவனோ அடக்க முடியாம அய்யர் மடியிலியே உச்சா போயிட்டான் போலிருக்குடோய்...

மண்டையன் said...

மொய் கம்மியா வச்சவங்களுக்கு நம்ம டாக்டர் தம்பி நடிச்ச படம் dvd தரப்படும் .
அதிகம் மொய் வக்கிரவன்களுக்கு சகீலா dvd தரப்படும்னு ஒரு அறிவிப்பு குடுத்தா .
collection அள்ளிடலாம் .

பிரவின்குமார் said...

ஹ..ஹா... ஹா சூப்பர்..!!

கும்மி said...

நம்ம சிரிப்பு போலிஸ் ப்ளாகுல, நான் கொடுத்த ஐடியாவ விட எல்லாம் சூப்பரா இருக்கு. கலக்குங்க ராம்சாமி.

எஸ்.கே said...

சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

Cable Sankar said...

:))))

நா.மணிவண்ணன் said...

உங்க influence தெரியாம ஓவரா கமெண்டிடேன் மன்னிக்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கும்மி said...

நம்ம சிரிப்பு போலிஸ் ப்ளாகுல, நான் கொடுத்த ஐடியாவ விட எல்லாம் சூப்பரா இருக்கு. கலக்குங்க ராம்சாமி.//

haahaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

96

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

97

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட ஒரு பய இல்ல. பன்னி சார் பட்டாசு(எவ்ளோ நாள்தான் வடை )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
நம்ம சிரிப்பு போலிஸ் ப்ளாகுல, நான் கொடுத்த ஐடியாவ விட எல்லாம் சூப்பரா இருக்கு. கலக்குங்க ராம்சாமி.///

அதப்பாத்துதான் இந்த பதிவுக்கான ஐடியாவே வந்துச்சுஙணா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாட ஒரு பய இல்ல. பன்னி சார் பட்டாசு(எவ்ளோ நாள்தான் வடை )///

கொஞ்சம் ஆணி புடுங்கிட்டு வாரதுக்ககுள்ள வட போச்சே?

அன்பரசன் said...

சமீபகாலமா கல்யாணம் பத்தியே பதிவு போடுறீங்களே...
கல்யாணஆசை வந்துருச்சா????

taaru said...

சத்யசோதனை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Premkumar Masilamani said...
பி.கு. அருமை... டி ராஜேந்தர் என்னப்பா பண்ணாரு... ஹி ஹி ஹி///

என்ன பண்ணாரா? அந்த வீடியோ இன்னும் நீங்க பாக்கலியா?

TERROR-PANDIYAN(VAS) said...

vote potten machiii!!!

கக்கு - மாணிக்கம் said...

சத்திய சோதனை - 2

கக்கு - மாணிக்கம் said...

சத்திய சோதனை - 2

வெறும்பய said...

இன்னைக்கு ரொம்ப லேட்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு//
யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்..எங்கண்ணனை பார்த்து என்ன வார்த்தை சொல்லிபுட்டி ஆயிரம் பன்னிகளை..
பன்னிக்குட்டி ராமசாமி;-வேண்டாம் பிரச்சனையை இதோட விட்ரு
இல்லண்ணே..உங்களை பார்த்து என்ன வார்த்தை
ப்.ராமசாமி;சரி என்ன தான சொன்னாரு கோபபடாத..இன்னமும் டேமேஜ் பன்னிடாத..எல்லோரும் பார்க்கறாங்க
இல்லண்ணே...உங்களை போயி..
ப்.ராமசாமி;டேய் படவா..கம்முன்னு இருந்துக்கோ..கண்ல தண்ணியை அடக்கிகிட்டு இருக்கேன்..வீணா என்னை கொலைகாரனா மாத்திடாதே///
யாரும் பாக்கலினாலும் பாக்க வெச்சி டேமேஜ் பண்ணுவானுங்க போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
ஆஹா விட்டா கொழம்பு வச்சு குடுச்சுடு வாங்க போல .எஸ்கேப்

ஆச்ட்சுவல்லி நான் என்ன நெனைச் சேனா ஒரு வேல பன்னிக்கு பிரசவம் பாத்துருப்பார் போல னு
அது னாலதான் இந்த பட்டம் போலன்னு////

டோட்டல் டேமேஜ், மேட்டர் ஓவர்!////

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ,
தர்மம் மறுபடி வெல்லும்////

வெளங்கலியே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
பேசாம கல்யாணத்துக்கு சாம் ஆண்டர்சனை கூப்பிட்டுக்கலாம்.///

யோவ் அப்புறம் பொண்ணு சாம் அழகுல மயங்கி ஓடிட போகுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
dondu(#11168674346665545885) said.../////

பண்ணி இதுவரைக்கு உன்னை எதாவத் தாப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்க , எப்பையாவது உன்னை தரம் தாழ்ந்து கேவலமா அசிங்கப் படுத்தி இருந்தாலோ , உன்மானத்தை மட்டு மரியாதை இல்லாமல் மானத்தை வாங்கி இருந்தாலோ , உன்னை கண்ட கண்ட கெட்ட வார்த்தையில திட்டி இருந்தாலோ மன்னித்துக் கொள்நண்பா , உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்///

ம்ம்......அது....! இனி எலக்சன்ல நிக்கவேண்டியதுதான் பாக்கி! மாப்பு, எந்த தொகுதி நல்லாருக்குன்னு பாரு, போயி நின்னு ஜெயிச்சி சீரழிச்சிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி அமைசர் said...

dondu(#11168674346665545885) said.../////

பண்ணி இதுவரைக்கு உன்னை எதாவத் தாப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்க , எப்பையாவது உன்னை தரம் தாழ்ந்து கேவலமா அசிங்கப் படுத்தி இருந்தாலோ , உன்மானத்தை மட்டு மரியாதை இல்லாமல் மானத்தை வாங்கி இருந்தாலோ , உன்னை கண்ட கண்ட கெட்ட வார்த்தையில திட்டி இருந்தாலோ மன்னித்துக் கொள்நண்பா , உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்////

அந்த பயம் இருகனும்லே. நீ என்னடான்னா பன்னிகிட்ட உன்னோட இன்டர்நெட் வாடைகை எவ்ளோன்னு கேட்டிருக்க. எவ்ளோ திமிரு உனக்கு!!!///

அது மடடுமா, கம்ப்யூட்டர் எவ்வளவு, மவுஸு எவ்வளவு அந்த ஒயரு எவ்வளவுன்னு டார்ச்சரு பண்ணுது மங்கு !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
பண்ணி நல்ல இருக்கு .ரொம்ப நாளைக்கு அப்புறம் ரத்த (சினிமா ) வாடை வராம ஒரு பதிவு ...............
அது சரி படிச்சிட்டு கிட்டு கமெண்ட்ஸ் எப்படி போட்டிருகங்கன்னு படிசுகிட்டே வந்தேன் 58 வது கமெண்ட்ஸ் படிக்கும் போதே ரத்த வடை வந்துருச்சி ......டோன்ட் MISTAKE ME ................////

அதுககு ஏன்யா இப்பிடி பம்முற? நம்ம பெலாக்குல என்னிக்குத் தான் ரத்த வாடை அடிக்கல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

அந்த பயம் இருகனும்லே. நீ என்னடான்னா பன்னிகிட்ட உன்னோட இன்டர்நெட் வாடைகை எவ்ளோன்னு கேட்டிருக்க. எவ்ளோ திமிரு உனக்கு!!!//

மாம்ஸ் நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்களை எங்காவது மெயிலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறாக சொல்லிருந்தால் மன்னித்துக்'கொல்'லவும்.////

மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்த!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ம.தி.சுதா said...
சகோதரா நானும் இனிமேல் கடைப்பிடிக்கிறேன்...
என்ன சகோதரா இம்புட்டு கொமண்ட்ஸ் இருக்கு வாக்கு மட்டும் கம்மியாகவெ இருக்கிறது...///

பகல்ல அப்பிடிதத்தான் இருக்கும், நம்ம பயலுக நைட்டானாத்தான் வருவாங்க்ய கள்ள ஓட்டுப்போட!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மங்குனி அமைசர் said...
பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.////

வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான் , இனி எல்லாரும் கவனமா இருக்கனுமின்னு இப்பவாவது தெரிஞ்சுக்கங்க .////

சொல்லிட்டாருய்யா மெசேஜு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஆர்.கே.சதீஷ்குமார் said...
உனக்கு இவ்வளவு பெரிய இன்புளுயன்ஸ் இருக்குமின்னு தெரியாம பண்ணிட்டேன்//
ஆமண்ணே என்னோட கமெண்டையும் எச்சி தொட்டு அழிச்சிரு////

அது எப்பிடி, சிக்குனா எல்லாரும் சேந்துதான்டி சிக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான்//
.ஓ..இப்பதான் மேட்டர் புரியுது..எவனோ அடக்க முடியாம அய்யர் மடியிலியே உச்சா போயிட்டான் போலிருக்குடோய்...////

வழில போறத எடுத்து மடில விட்டுடீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மண்டையன் said...
மொய் கம்மியா வச்சவங்களுக்கு நம்ம டாக்டர் தம்பி நடிச்ச படம் dvd தரப்படும் .
அதிகம் மொய் வக்கிரவன்களுக்கு சகீலா dvd தரப்படும்னு ஒரு அறிவிப்பு குடுத்தா .
collection அள்ளிடலாம் .////

யோவ் இது என்ன கல்யாணமா இல்ல வேற எதுவுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரவின்குமார் said...
ஹ..ஹா... ஹா சூப்பர்..!!////

நன்றீங்கோ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
சூப்பர்! சூப்பர்! சூப்பர்!///

தேங்ஸ்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Cable Sankar said...
:))))////

வாங்க சார், ரொம்ப நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
உங்க influence தெரியாம ஓவரா கமெண்டிடேன் மன்னிக்கவும்///

என்ன இன்னனிக்கு எல்லாப் பயலும் நம்மலப் பாத்து பம்முறானுங்க, பேசாம பெரிய ரவுடி ஆயிடலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
சமீபகாலமா கல்யாணம் பத்தியே பதிவு போடுறீங்களே...
கல்யாணஆசை வந்துருச்சா????///

யாருக்கு?

dineshkumar said...

ஹாய் கவுண்டர்
கல்யாணமா யாருக்கு பொண்ணு செலக்ஷன் ஆகிடுச்சா கவுண்டரே பொண்ணுக்கு தங்கச்சி ஏதாவது இருக்கா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////taaru said...
சத்யசோதனை.....////

பிரபல பதிவருங்கனாலே இதெல்லாம் இருக்கறதுதானே!

dineshkumar said...

ஆமாம் குத்து மதிப்பா எத்தன பிகர்ஸ் வருவாங்க கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
ஹாய் கவுண்டர்
கல்யாணமா யாருக்கு பொண்ணு செலக்ஷன் ஆகிடுச்சா கவுண்டரே பொண்ணுக்கு தங்கச்சி ஏதாவது இருக்கா....////

இது சும்மா தமாசுக்கு....ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
ஆமாம் குத்து மதிப்பா எத்தன பிகர்ஸ் வருவாங்க கவுண்டரே////

பிகர்ஸ்லாம் நெறைய வரும், ஆனா நீய்யி தாங்க மாட்டியேய்யா...!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 132
///dineshkumar said...
ஆமாம் குத்து மதிப்பா எத்தன பிகர்ஸ் வருவாங்க கவுண்டரே////

பிகர்ஸ்லாம் நெறைய வரும், ஆனா நீ தாங்க மாட்டியேய்யா...!

என்னது நா தாங்க மாட்டனா யோவ் கவுண்டரே நல்லா பாத்து சொல்லுயா வேணும்நா குளிச்சிட்டு வர்றேன் அன்னைக்கு மட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
vote potten machiii!!!////

யாரோ நம்ம டெர்ரரு பளாக்க ஹேக் பண்ணிட்டாங்கன்னு நெனக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 132
///dineshkumar said...
ஆமாம் குத்து மதிப்பா எத்தன பிகர்ஸ் வருவாங்க கவுண்டரே////

பிகர்ஸ்லாம் நெறைய வரும், ஆனா நீ தாங்க மாட்டியேய்யா...!

என்னது நா தாங்க மாட்டனா யோவ் கவுண்டரே நல்லா பாத்து சொல்லுயா வேணும்நா குளிச்சிட்டு வர்றேன் அன்னைக்கு மட்டும்///

ம்ஹூம் விதி யார விட்டது? நேரா ஆல் இன் ஆல் அழகுராஜா ப்ளாக்குக்கு போங்க வெவரம் என்னன்னு தெரியும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
சத்திய சோதனை - 2///

என்னண்ணே ஏதாவது புதுப்பபட பேரா?

dineshkumar said...

November 1, 2010 5:04 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 135
///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 132
///dineshkumar said...
ஆமாம் குத்து மதிப்பா எத்தன பிகர்ஸ் வருவாங்க கவுண்டரே////

பிகர்ஸ்லாம் நெறைய வரும், ஆனா நீ தாங்க மாட்டியேய்யா...!

என்னது நா தாங்க மாட்டனா யோவ் கவுண்டரே நல்லா பாத்து சொல்லுயா வேணும்நா குளிச்சிட்டு வர்றேன் அன்னைக்கு மட்டும்///

ம்ஹூம் விதி யார விட்டது? நேரா ஆல் இன் ஆல் அழகுராஜா ப்ளாக்குக்கு போங்க வெவரம் என்னன்னு தெரியும்!

யோவ் கவுண்டரே என்ன கடைய மாத்துற பிகர்ஸ்னு சொல்லி பீலிங் ஏத்திட்டியே கவுன்டரே சரி இப்பதான் வாங்கிட்டு வந்தேன் நம்ப ஊர் சரக்கு oldmung ஓல்ட்மங்க் ரம் ரெண்டு புல்லு வரியா நைட்டு ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
இன்னைக்கு ரொம்ப லேட்..///

அதுனால என்ன, பயப்படாதீங்க, நாங்க இம்போசிசன்லாம் கொடுக்க மாட்டோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// dineshkumar said...
யோவ் கவுண்டரே என்ன கடைய மாத்துற பிகர்ஸ்னு சொல்லி பீலிங் ஏத்திட்டியே கவுன்டரே சரி இப்பதான் வாங்கிட்டு வந்தேன் நம்ப ஊர் சரக்கு oldmung ஓல்ட்மங்க் ரம் ரெண்டு புல்லு வரியா நைட்டு ......../////

இது உனக்கே நல்லாருக்காய்யா? டெய்லி இப்பிடி வாட்டமா ஏத்திக்கிட்டு இருக்கியே, அதுவும் சொல்லி சொல்லி வேறுப்பேத்துற?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 139

தனியா எத்திக்க மனசு கேக்கத்தான் மாட்டுது கவுண்டரே பக்கத்துல அபுதாபியில தான இருக்க அப்புடியே தீபாவளி லீவுக்கு பஹ்ரைன் பக்கம் வர்றதுதான கவ்ன்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 139
/// dineshkumar said...
யோவ் கவுண்டரே என்ன கடைய மாத்துற பிகர்ஸ்னு சொல்லி பீலிங் ஏத்திட்டியே கவுன்டரே சரி இப்பதான் வாங்கிட்டு வந்தேன் நம்ப ஊர் சரக்கு oldmung ஓல்ட்மங்க் ரம் ரெண்டு புல்லு வரியா நைட்டு ......../////

இது உனக்கே நல்லாருக்காய்யா? டெய்லி இப்பிடி வாட்டமா ஏத்திக்கிட்டு இருக்கியே, அதுவும் சொல்லி சொல்லி வேறுப்பேத்துற?

தனியா எத்திக்க மனசு கேக்கத்தான் மாட்டுது கவுண்டரே பக்கத்துல அபுதாபியில தான இருக்க அப்புடியே தீபாவளி லீவுக்கு பஹ்ரைன் பக்கம் வர்றதுதான கவ்ன்டரே/////

யோவ் நான் இந்தப்பக்கம், ரியாத்!

dineshkumar said...

சரி ஒரு ஹெலிகாபிட்டர் தான் வாங்குறது வந்துட்டு போக வசதியா இருக்குமில்ல

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைசர் said... 86

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.////

வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான் , இனி எல்லாரும் கவனமா இருக்கனுமின்னு இப்பவாவது தெரிஞ்சுக்கங்க .
//

ஏன்.. கழிப்பறைக்குள் போகும் போது கதவை மூடவில்லையா?.....
.
.
.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்டாபட்டி.. said...
மங்குனி அமைசர் said... 86

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.////

வந்தவுங்க எல்லாம் பொது இடம் , மற்றும் சபை நாகரீகம் கருதி மேனர்சோட டீசன்ட்டா நடந்துக்குவாங்கன்னு நினைச்சது தப்பு தான் , இனி எல்லாரும் கவனமா இருக்கனுமின்னு இப்பவாவது தெரிஞ்சுக்கங்க .
//

ஏன்.. கழிப்பறைக்குள் போகும் போது கதவை மூடவில்லையா?....///

விடு விடு, அது கழிப்பறைனு தெரியாம போயிட்டாங்க!

பட்டாபட்டி.. said...

Blogger dondu(#11168674346665545885) said...

இத்தனை நாளா கட்டிக்காத்து, மத்தவங்களுக்கும் வழிமொழிந்த சீர்திருத்த எண்ணங்களுக்கு மாறா பெரியவங்க கொள்கைக்கு மதிப்பு கொடுக்கறதுக்காக மாத்தி செஞ்சா அதை பேசாம தங்களுக்குள்ளேயே செஞ்சுக்கோணும்.

அதை விட்டுட்டு முதல்ல பதிவர் மீட்டிங்குன்னு வச்சுட்டு முக்கிய ஆளுங்க அந்த இடத்திலே அந்த நேரத்துல மேனர்ஸ் இல்லாம போகக்கூடாது.

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.

போட்டோ எடுத்தா பின்புலத்துல சாமி படங்கள், மங்கலச் சின்னங்கள் எதுவும் இல்லாம பாத்துக்கோணும்.

எதார்த்தமா தகவலுக்காக அவ்வளவு அருமையான மண்டபத்துக்கு வாடகை எவ்ளோன்னு பெரிசு கேட்டா, இன்னும் பில் வரல்ல, பாத்து சொல்லறேன்னு சொல்லணும் இல்லேனாக்க உண்மையைச் சொல்லணும். ஆனால் அதே உண்மை சங்கடம் தருவதாக இருந்தால் பாலிஷ்டா சொல்லணும். ராபணான்னு பெண் வீட்டார் தலையில்தான் அச்செலவுன்னு சொல்லறது (அது உண்மையோ பொய்யோ) எப்போதுமே ஒரு பெண்ணியவாதி செய்யக்கூடாத விஷயம்.

பெரிசுக்கும் ஒரு வார்த்தை. பதிவர் மீட்டிங் யார் கூப்பிடறாங்கன்னு தராதரம் பார்த்து போகணும். தன் வீட்டுக்கு தேவையில்லாத பதிவர்கள் வருவதை தடுக்கணும். இந்தப் பின்னூட்டத்தையும் அது தன்னோட பதிவில் சேஃப்டிக்காக போடறது நல்லது.

ஆக எல்லோருக்குமே பாடம்தான்னு வச்சுண்டா டேமேஜ் லிமிட்டாகும்.

முரளி மனோகர்

//

உண்மைதான் முரளி.. அப்பால என்ன.. ஆங்க்.. மனோகர்..

விடுங்க.. எல்லாரும் மனுசப்பயலுகளை கல்யாணத்துக்கு கூப்பிடுவாங்க

எப்போதாவது நம்மைமீறி சிறு தவறு ஏற்படுவது, சகஜம் தானே...
ஆமா.. என்னா பேரு.. ஆங்க்......முரளி மனோகர் அவர்களே...

dineshkumar said...

ஓகே கவுண்டரே சரக்கடிக்க நேரம் என்னை அழைப்பதால் வடை பெற்றுகொல்கிறேன் சாரி சாரி விடை பெற்றுகொல்கிறேன்

அருள் said...

போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

குட்டு வெளிப்பட்டதால். போண்டா மாதவன் "அனானி" ஆப்ஷனையே மூடிவிட்டது.

http://dondu.blogspot.com/2010/11/blog-post.html

அலைகள் பாலா said...

ஹா ஹா ஹா.............. ஐயோ அய்யோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
ஓகே கவுண்டரே சரக்கடிக்க நேரம் என்னை அழைப்பதால் வடை பெற்றுகொல்கிறேன் சாரி சாரி விடை பெற்றுகொல்கிறேன்///

டெய்லி வந்து நல்லா டெம்போ ஏத்திவிட்டுட்டு போய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருள் said...
போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

குட்டு வெளிப்பட்டதால். போண்டா மாதவன் "அனானி" ஆப்ஷனையே மூடிவிட்டது.

http://dondu.blogspot.com/2010/11/blog-post.html////

அப்போ போண்டா மாதவனுக்கு அருள் வந்திடிச்சுன்னு சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அலைகள் பாலா said...
ஹா ஹா ஹா.............. ஐயோ அய்யோ///

ஓஹோ......!

ப்ரியமுடன் வசந்த் said...

// இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா,//

நட்டு போல்டுன்னு ஆரம்பிச்சா டாட்டாபிர்லா கம்பெனியில சேர்த்துவிடுவீகளோ?

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்த மாதிரி கல்யாண்த்தன்னிக்கு ட்ரெஸ்ஸ அப்பிடியே ஸ்டிக்கரோடவே போட்டுக்கனும்.//

யோவ் கல்யாணத்தன்னிக்கே ட்ரெஸ்ல ஸ்டிக்கர் ஒட்டியிருந்தா பொண்டாட்டியாகப்போறவளுக்கு சந்தேகம் வராது??????

விக்கி உலகம் said...

நாளைக்கு இதெல்லாம் பாடத்துல வரும் உங்களுக்கு சிலை வைப்பாங்க
அய்யோ அய்யோ
நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//கல்யாணம் முடிஞ்சப்புறம் ஹனிமூன் அது இதுன்னு ஓடிடாதீங்க, பொறுமையா உக்காந்து, யாரெல்லாம் வந்ததாங்க, எப்பிடி சாப்புட்டாங்க, சாபாட்டு மெனு, லைட் மியூசிக்ல என்ன பாட்டு பாடுனாங்க, மண்டபத்துல என்ன பெயின்ட் அடிச்சிருந்தாங்க, டாய்லெட்டுல என்ன கம்பெனி சிங்க் இருந்துச்சு, எவ்வளவு மொய் வந்துச்சு, டோட்டல் கணக்கு வழக்கு விபரமா தயார் பண்ணி நீங்களே ஒரு பதிவா போட்ருங்க!//

இல்லாட்டினா கல்யாணாத்துல தின்னுட்டுப்போன யாரோ ஒரு கிழம் பதிவா போட்ரும் ஆமா இது எச்சரிக்கை!

philosophy prabhakaran said...

155 பின்னூட்டங்கள்... கண்டிப்பா யாராவது வண்டி வண்டியா திட்டிருப்பாங்கனு எதிர்பார்த்தேன்... பன்னிக்குட்டி தப்பிச்சிடுச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

yoov ராமசாமி சாரி ஃபார் லேட்டு (எனக்கு இதே பொழப்ப்பா போச்சு

சி.பி.செந்தில்குமார் said...

நான் மெயில் பாக்கறதில்லை எனவே பதிவு போட்டா 9842713441 இந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்,கும்ம சவுகர்யமா இருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில இவ்வளவு ஓட்டு யாரும் வாங்குனதில்லைனு நினைக்கறேன்,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட ரொம்ப நாளிக்கப்புரம் வட்டை கிடைச்சது

யோவ் ரமேஷ் எப்போ பாரு நெட்லயே இருந்தா எங்களுக்கும் தான் வட கிடைக்கும்.நாங்க எல்லாம் வேலை செஇய்யறோம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?///

நீங்க சூரியன் படம் இன்னொரு வாட்டி பாருங்க!

யோவ் அந்தப்படம் நான் பாத்துட்டேன்.என்னனு புரிஉயலையே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அய்யோ அம்மா ஒரு பெரிய திமிங்கலம் வந்து விழுந்து கிடக்குது..அணுகுண்டு வெடிக்கப்போகுது எஸ்கேப்

சதீஷ் நீயே ஒரு பெரிய வெடிகுண்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
// இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா,//

நட்டு போல்டுன்னு ஆரம்பிச்சா டாட்டாபிர்லா கம்பெனியில சேர்த்துவிடுவீகளோ?///

என்னது டாட்டா பிர்லா கம்பெனியிலா? நான் என்ன வேலைக்கா ஆள் எடுக்குறேன் மாப்பு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
//அந்த மாதிரி கல்யாண்த்தன்னிக்கு ட்ரெஸ்ஸ அப்பிடியே ஸ்டிக்கரோடவே போட்டுக்கனும்.//

யோவ் கல்யாணத்தன்னிக்கே ட்ரெஸ்ல ஸ்டிக்கர் ஒட்டியிருந்தா பொண்டாட்டியாகப்போறவளுக்கு சந்தேகம் வராது??????////

ஸ்டிக்கரு அவங்களுக்கும் தான் இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// விக்கி உலகம் said...
நாளைக்கு இதெல்லாம் பாடத்துல வரும் உங்களுக்கு சிலை வைப்பாங்க
அய்யோ அய்யோ
நன்றி////

அரசியல்வாதிங்கன்னாலே இதெல்லாம் இருக்கறதுதானே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
//கல்யாணம் முடிஞ்சப்புறம் ஹனிமூன் அது இதுன்னு ஓடிடாதீங்க, பொறுமையா உக்காந்து, யாரெல்லாம் வந்ததாங்க, எப்பிடி சாப்புட்டாங்க, சாபாட்டு மெனு, லைட் மியூசிக்ல என்ன பாட்டு பாடுனாங்க, மண்டபத்துல என்ன பெயின்ட் அடிச்சிருந்தாங்க, டாய்லெட்டுல என்ன கம்பெனி சிங்க் இருந்துச்சு, எவ்வளவு மொய் வந்துச்சு, டோட்டல் கணக்கு வழக்கு விபரமா தயார் பண்ணி நீங்களே ஒரு பதிவா போட்ருங்க!//

இல்லாட்டினா கல்யாணாத்துல தின்னுட்டுப்போன யாரோ ஒரு கிழம் பதிவா போட்ரும் ஆமா இது எச்சரிக்கை!/////

ஆமாங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///philosophy prabhakaran said...
155 பின்னூட்டங்கள்... கண்டிப்பா யாராவது வண்டி வண்டியா திட்டிருப்பாங்கனு எதிர்பார்த்தேன்... பன்னிக்குட்டி தப்பிச்சிடுச்சு...////

யாரும் திட்டுனா அவங்களையும் காமெடி பீசாக்கிடுவோமோன்னு பயத்துல யாரும் திட்ட மாட்டங்க!
அவ்வளவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
yoov ராமசாமி சாரி ஃபார் லேட்டு (எனக்கு இதே பொழப்ப்பா போச்சு////

லேட்டா கமென்ட் போட்டதுனால, நானும் லேட்டாதான் பதில் சொல்லுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said... 158
நான் மெயில் பாக்கறதில்லை எனவே பதிவு போட்டா 9842713441 இந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்,கும்ம சவுகர்யமா இருக்கு. ////

இதெல்லாம் நடக்குற காரியமா? சரி சரி டிரை பண்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
இண்ட்லில இவ்வளவு ஓட்டு யாரும் வாங்குனதில்லைனு நினைக்கறேன்,வாழ்த்துக்கள்////

என்னங்ணா கமெடி பண்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே .உங்கப்லோக்குக்கு இப்பதானே புதுசா வரேன்
அண்ணே அது என்னனே பேரு
பன்னிகுட்டி ?///

நீங்க சூரியன் படம் இன்னொரு வாட்டி பாருங்க!

யோவ் அந்தப்படம் நான் பாத்துட்டேன்.என்னனு புரிஉயலையே///

நான் பாக்க சொன்னது மேட்டரு சீன இல்ல, படத்துல கவுண்டரு பேரும், அதுகு வெளக்கமும் வரும் அத பாக்க சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட ரொம்ப நாளிக்கப்புரம் வட்டை கிடைச்சது

யோவ் ரமேஷ் எப்போ பாரு நெட்லயே இருந்தா எங்களுக்கும் தான் வட கிடைக்கும்.நாங்க எல்லாம் வேலை செஇய்யறோம்///

அவருக்கு இதான் வேலையே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அய்யோ அம்மா ஒரு பெரிய திமிங்கலம் வந்து விழுந்து கிடக்குது..அணுகுண்டு வெடிக்கப்போகுது எஸ்கேப்

சதீஷ் நீயே ஒரு பெரிய வெடிகுண்டு////

பாத்து பாத்து வெடிச்சிட போவுது!