Thursday, November 25, 2010

சார்... சார்... 'பின்''நவீன'த்துவம்னா என்ன சார்?

பன்னிக்குட்டி: என்ன அமைச்சரே ரொம்ப டல்லா இருக்கீங்க?

மங்குனி அமைச்சர்: ஆமாப்பா, நேத்துதான் ஊர்ல இருந்து ட்ரெய்ன்ல வந்தேன், ட்ரெய்ன்ல அப்பர் பெர்த்துதான் கெடச்சது. தூக்கமே வரல. ஒரே தலைவலி!

பன்னிக்குட்டி: இது ஒரு பிரச்சனையா? லோயர் பெர்த்துல இருந்தவங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?

மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு  இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!

........................................

மங்குனி அமைச்சர், சென்னைக்கு வந்த புதுசுல, நண்பரோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தார். அங்கே...

மங்குனி அமைச்சர்: இது என்ன?

நண்பர்: இது ஆரஞ்ச் ஜூஸ் மிக்ஸ்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா?

நண்பர்: அப்படின்னா... ஆரஞ்சு ஜூஸ் பவுடரு, தண்ணியோட கலந்தா ஆரஞ்ச் ஜூஸ் வரும்.

மங்குனி அமைச்சர்: ஓ.... சரி...சரி..,  இது என்ன?

நண்பர்: மில்க் பவுடரு....

மங்குனி அமைச்சர்: தண்ணில மிக்ஸ் பண்ணா மில்க் வரும் அதுதானே?

நண்பர்: ஆமா.. பரவால்லயே வெரி குட்...

மங்குனி அமைச்சர்: சரி, இது என்ன?

நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!


...................................................
சிரிப்பு போலீஸ்: நேத்து ஸ்பென்சருக்கு ஷாப்பிங் போயி ரொம்ப பேஜாராயிடுச்சுப்ப்பா...!

பன்னிக்குட்டி: ஏன் யாரையாவது கையப் புடிச்சி இழுத்திட்டீங்களா போலீஸ்கார்?

சிரிப்பு போலீஸ்: சேச்சே... இப்பல்லாம் அப்பிடி பண்றதில்ல... எஸ்கலேட்டர்ல போயிட்டு இருக்கும் போது திடீர்னு பவர் கட் ஆயிடுச்சு.

பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

.......................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சிரிப்பு போலீச பின்னியெடுத்துட்டாங்களா.. ஏன்?

மங்குனி அமைச்சர்: நேத்து நைட்டு லேட்டா வந்திருக்கார். ஒரு கான்ஸ்டபிளு, பைக்க நிறுத்தி, யாரு நீங்க, எங்க போறீங்கன்னு கேட்டாராம். அதுக்கு இவரு பழக்கதோஷத்துல நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு, அவ்வளவுதான் அப்பிடியே தூக்கிட்டுப் போயி பட்டையக் கெளப்பிட்டானுங்க...!


....................................................
 
பன்னிக்குட்டி: அங்க என்னய்யா கலாட்டா?

சிரிப்பு போலீஸ்: ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.

பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!


..................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சி.பி. செந்தில்குமாரு சாரு அவசரமா கேரளா போயிருக்காரா... ஏன்?

சிரிப்பு போலீஸ்: ஆமா அவரு எழுதுன பிட்டுப்பட விமர்சனம் நல்லா இல்லேன்னு, அந்தப் பட டைரக்டரு, அடுத்த படத்துக்கு விமர்சனம் எழுத ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொல்லிட்டாராம்!

பன்னிக்குட்டி: அடடடா....   நாமலும் போறதுக்கு ஏதாவது வழி இருக்கா...?

சிரிப்பு போலீஸ்: இது டூ லேட்..... நம்ம மங்குனி அமைச்சரு அல்ரெடி  சீக்ரெட்டா போயிட்டு  வந்திட்டாரு....

..........................................


செல்வா: நம்ம கேப்டன் தோனியில்ல, அவரு ஹர்பஜன் கிட்ட ரெண்டு பெப்சி வாங்கிட்டு வரச்சொன்னாரு. பெப்சி வங்கிட்டு வந்த ஹர்பஜன் தோனிகிட்ட போகாம, ஷேவாக் கிட்ட போனாரு ஏன்?

பன்னிக்குட்டி: ஏன்?

செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?

.........................................................
செல்வா: நம்ம டெர்ரரு ஆபீஸ் போகும்போதும் வரும்போதும், நடுவழிலே டிபன் பாக்ச ஓப்பன் பண்ணிப் பார்ப்பாரு, எதுக்கு?

பன்னிக்குட்டி: டிபன் பாக்ஸ் அவருது தானான்னு செக் பண்றதுக்காகப் பார்ப்பாரா..?

செல்வா:  இல்ல...  இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!

...........................................................

பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!


........................................................


பன்னிக்குட்டி: பட்டா சார்.... பட்டா சார்... இந்த பின்நவினத்துவம்னா என்ன சார்?

பட்டாபட்டி: ம்ம்ம். அதுவா... வெஸ்டர்ன் டாய்லெட்டுல கக்கா போறதுதான் 'பின்''நவீன'த்துவம்!

பன்னிக்குட்டி: அப்போ முன்நவீனத்துவம்னா....?

பட்டாபட்டி:  #$^%^%$##@!^%^%$#@!!


(பதிவர்கள் நலன் கருதி பட்டாபட்டி அவர்களின் பதில் மட்டுறுத்தப்பட்டுள்ளது.  தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பணமாக 699 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும்!)

(இதுல சில ஜோக்ஸ் என்னோடது, சிலது சுட்டது, அத எழுதுனவங்க யாரா இருந்தாலும் என் நன்றிகள்!)

கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி





!

214 comments:

«Oldest   ‹Older   201 – 214 of 214
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்பரசன் said... 183
//கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?//

வேற யாரு?
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய் ////

மெஜாரிட்டி செலக்சன் டாகுடர் தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்பரசன் said... 184
50க்கு வாழ்த்துக்கள் ராம்சாமி ////

நன்றி அன்பரசன்!

vaarththai said...

:)

எல்லமே "மேல்" நவீனத்துவமா இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vaarththai said...
:)

எல்லமே "மேல்" நவீனத்துவமா இருக்கு.../////

ஆமா அப்படித்தான்.... 'கீழ்'நவீனத்துவம்னாலே பல பிரச்சனைகள் வரும், நம்ம உடம்பு தாங்காது சாமி...!

Chitra said...

Funny!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் வயித்தெரிச்சலை கிளப்பாதையா ...,எல்லாருடைய மெயில் ID யும் அதுல தான் இருந்துது ......,ரமேஷ மெயில் ID ய அனுப்பி விடு சொன்னேன் ..,அதுல இல்ல ...,எவனுமே என்னை

நம்பலை தெரியுமா ...,

சரி நீ ஏன் இந்த கமெண்ட் க்கு மட்டும் பதில் சொல்றே ? அப்ப உனக்கு இன்னொரு ப்ளாக் இருக்கு அப்படிதானே ....
//
அட மூளக்காரா.. நாந்தான் டோண்டுனு சொல்லாம விட்டையே.. அது வரை சந்தொசம்..ஹி..ஹி

சரி.. விடு..

அடுத்து எப்ப பாஸ்வேர்ட தொலைப்பே?..

ஹி..ஹி

அஞ்சா சிங்கம் said...

இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்

anu said...

Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

தினேஷ்குமார் said...

சாரி கவுண்டரே நேத்து கொஞ்சம் சரக்கு ஓவராயிடுச்சு இப்பதான் தெளிஞ்சுது ...

ஆனா இன்னைக்கு இப்பதான் ஸ்டார்ட் ஆகுதுங்கோ

R.Gopi said...

தல....

சீக்கிரம் இங்கே வாங்க... ஒரு டெர்ரர் எபிஸோட் ரெடியா இருக்கு....

அதிரடி டைரக்டர்கள் 2011 - ஒரு டெர்ரர் சந்திப்பு
http://jokkiri.blogspot.com/2010/11/2011.html

சாமக்கோடங்கி said...

தூள் கேளப்பீடிங்க சில்வர் ஸ்டார் சில்பா குமார்..

Anonymous said...

அய்யா ராமசாமி.. முதல் முறையா உங்க பதிவை படிக்க வந்த என்னை இப்படி டெர்ரர் வீடியோ போட்டு விரட்டி அடிக்ரீங்களே... எங்க ஊர்ல பூ மிதிக்ற நோம்பி வச்சிருக்கோம். வர்றீங்களா. குஞ்சானி! குஞ்சானி! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

RVS said...

இப்பத்தான் படிச்சேன். அட்டகாசம். அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். ;-)

sakthi said...

அண்ணே கலக்கல்!!! பிச்சுட்டீங்க

«Oldest ‹Older   201 – 214 of 214   Newer› Newest»