Monday, November 8, 2010

இந்தி கத்துக்குங்க சார்... இந்தி...!

எல்லாரும் நல்லபடியா தீபாவளி கொண்டாடி இருப்பிங்க. நெறையப் பேரு பலகாரம், பட்சணங்கற பேருல வீட்டுக்கார அம்மணியோட பல பரிசோதனை முயற்சிக்கு ஆளாகி இன்னும் தெளிஞ்சிருக்க மாட்டீங்க. சரி சரி.....  சின்ன விசயத்துக்குலாம் இப்பிடி கவலப்பட்டா எப்பிடி? கண்ணத் தொடைங்க! நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க, இப்போ நாம இந்தி கத்துக்கப் போறோம். கத்துக்கிட்டு எங்கேயோ போகப் போறோம், இனி நம்ம ரேஞ்சே வேற!

இந்திதான் தேசிய மொழின்னு 80 கோடி இந்திவாலாக்கள் நம்புறாங்க, சொல்றாங்க. ஒரு ஜனநாயக நாட்டுல, மெஜாரிட்டி கருத்துக்கு மரியாத கொடுக்குறதுதானே முறை? ஆகவே நம்ம ஜனநாயகத்தக் கட்டிக் காக்க நாமலும் இந்தி கத்துக்கப் போறோம் மக்கா. இந்தியக் கத்துக்கிட்டுப் போயி நாமல்லாம் யாருன்னு இந்திவாலாக்களுக்குக் காட்டறோம், சென்ட்டர்ல ஆச்சியப் புடிக்கிறோம்.

இவ்வளவு சொல்லியும் இந்தி கத்துக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றவங்களுக்காக, நாம எல்லோரும் இந்தி கத்துக்கறதுனால என்னென்ன நன்மைகள்னு வெளக்கமா ஒரு பட்டியல் போட்ருக்கேன். அதப் பாத்தாவது திருந்ததுற வழியப் பாருங்கப்பு!

  1. தமிழ்நாடுங்கற பேர டமில் ப்ரதேஷ் அப்படின்னு மாத்தி உடனடியா தேசிய நீரோட்டத்துல ஓடிப்போயி தொபுக்கடீர்னு குதிச்சிடலாம்!
  2. ஒரு தமிழன் பிரதமரா வர்ரதுக்கு உடனடி வாய்ப்பு (அது அஞ்சாநெஞ்சனான்னு முந்திரிக்கொட்ட மாதிரிக் கேக்கப்படாது!)
  3. இனி நம்ம மீனவர்கள இலங்க்கை கடற்படை தாக்குனா, நம்ம இந்தியக் கடற்படை பெரும் போர் நடத்தி காப்பாத்தும்  (ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!)
  4. காவிரில தண்ணி தினந்தோறும் திறந்துவிடப்படும், திறக்க மறுக்கும் கர்னாடக அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்! (இதப்பத்தி நம்ம மொதல்வரு, தமிழ்ல கடிதம் எழுதுனதுதான் தப்பு! என்ன எழுதியிருக்குன்னு புரியாம, பிரதமர் அய்யா, நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு! இனி இந்தில கடிதம் எழுதி காரியத்த கச்சிதமா முடிப்போம்ல?)
  5. கேரளாவில் முல்லைப்பெரியார் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தடை செய்து இருக்கும் அணையைத் தமிழகத்திடம் ஒப்படைக்கும்! அதே போல் அந்திராவிலும் பாலாற்று அணைக்குத்தடை!
  6. சுப்ரீம் கோர்ட் கிளை உடனடியாக சென்னைக்குக் கொண்டுவரப்படும் (இனி தைரியமா டெல்லில இருந்து வந்து இந்திலயே வாதாடலாம்ல?)
  7. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை முழுக்க முழுக்க இந்தியிலேயே நடத்தி சாதனை படைப்பார் தமிழினத் தலைவர்!
  8. சன் டிவி ஒரு முழுநேர இந்திச் சேனல் ஆரம்பித்து நமக்குப் பேரானந்தம் அளிக்கும்! (சன்டிவியே பாத்துப் பாத்துப் பழகியவர்கள், இனி இந்தி சன்டிவியைப் பார்த்து பெருமிதம் அடையலாம்!)
  9. தமிழ்ப் படங்களுக்கு குறைந்தது 10 தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும்! அதைப்பத்தி கமல் இந்தியிலேயே பேட்டி அளிப்பார் (பயப்படாதீங்க, வழக்கம்போல யாருக்கும் புரியாத மாதிரிதான்!)
  10. டாகுடர் விஜய்யின் ஐம்பெருங்காப்பியங்களான ஆதி, வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு சரித்திரம் படைக்கும், அதைத் தொடர்ந்து டாகுடர் மும்பை ஜூஹூவில் பெரிய பங்களா வாங்குவார் (உடனே ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்து எல்லோரும் மும்பையில் வீடு வாங்கும் நல்ல நிலை(?) ஏற்படும்!)
  11. அது கண்டு மிரளும் அமிதாப்பும், ஷாருக்கானும் சென்னைக்கு ஓடிவந்து ஆளுக்கொரு பங்களா வாங்கிவிடுவார்கள் (தமிழர்கள் இனி தினமும் அவர்களைக் கண்டு மனமாறத் தரிசித்து இன்புறலாம்!)
  12. தமிழ் சினிமாவின் அழகுப் பதுமைகள் இனி சௌகர்யமாக இந்தியிலேயே பேட்டி கொடுத்து நம்மை மகிழ்விப்பார்கள் (ரொம்ப முக்கியம்! நமீதா மச்சான்ஸ்... ரசிகர்கள் சாரி வெறியர்கள் மன்னிப்பார்களாக!)
  13. அம்பானிகள், டாட்டாக்கள் சென்னையில் பாதிக் கம்பெனிகளை (பாதிச் சென்னையையும்தான்) வாங்கிவிடுவார்கள். நாமும் அவர்களுக்கு நம் புது விசுவாசத்தை இந்தியில் காட்டி மகிழலாம்!
  14. மாறன் அன் கோ, இனி அமிதாப்பை வைத்து எந்திரன் - 2 எடுக்கும்! (அப்போ எந்திரன் -3 கோவிந்தாவ வெச்சான்னுலாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது!)
  15. அன்பு அண்ணன் அஞ்சாநெஞ்சர் தலைமையில் மதுரையில் மாபெரும் ஒலிம்பிக்ஸ் நடத்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் (அதையும் கல்மாடி அண்ணனே நடத்திக் கொடுப்பாரு!)
  16. தமிழகம் இந்தியாவின் 37வது மாநிலமாக இணைக்க்படும் (என்னது ஏற்கனவே அங்கேதான் இருக்கோமா, சாரி சாரி, டங்க்... சே.... கையி...ஸ்லிப்பு ஆய்டுச்சி, இத யாரும் படிக்காதீங்க!).

பாத்திங்களா மக்களே எம்புட்டு நன்மைகள் நம்மத் தேடி வருதுன்னு? இதுக்கு மேலேயும் இந்தி கத்துக்காம இருக்கலாமா? அது தப்பில்லையா? அநியாயமில்லையா?

சரி, ஏழுகழுத வயசாயிடுச்சு இதுக்கு மேல எங்கே போயி இந்தி கத்துக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? நான் இருக்கும் போது நீங்க இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்குலாம் தயங்கலாமா? பயப்படாம வாங்க நான் கத்துதரேன், அதுவும் இலவசமா!

ஓக்கே, ஸ்டார்ட்!

பர்ஸ்ட்டு, நம்பர் சொல்றது,
கையில ஏதாவது கர்லாக் கட்ட இருந்தா தூக்கிகிடுங்க (ஏதாவது உருட்டுக்கட்டயா இருந்தாலும் பரவால்ல! ) இப்போ வரிசையா சொல்லுங்க பாப்போம்!
ஏக்கு, தோவ்வு, தீனு, சாரு (பிச்சிபுடுவேன், இது அந்தச் சாரு இல்ல!), பாஞ்ச்சு.....!
அட என்ன சார் நீங்க இதக் கூட சரியா சொல்ல மாட்டேங்கிறீங்க? சரி சரி, கோச்சுக்காதீங்க, கக்கூசுல கக்கா போவும்போது இன்னொரு வாட்டி சொல்லிப் பாத்துக்கிடுங்க போதும்! இனி நாம அடுத்த பாடத்துக்குப் போவோம்!


ஒருவழியா நம்பர் சொல்லக் கத்துக்கிட்டீங்க, அதே மாதிரி இனி பேசுறது எப்படின்னு பாப்போம். பக்கத்துல ஏதாவது மிக்சர், பக்கோடா, காராச்சேவு ஏதாவது வெச்சுக்குங்க! (எதுக்குன்னு வெளக்கெண்ண கேள்வியெல்லாம் கேக்கப்படாது!)

மிக்சர கைநெறைய அள்ளி வாயில போட்டுக்குங்க, இப்ப நான் சொல்லச் சொல்ல நீங்க திருப்பி சொல்லனும் (இது பார்த்திபன் மாதிரி திருப்பி இல்ல!)

ஏக் காவுன் மே....... (கவுனு இல்ல காவுன்...    கா....   வு....    ன்.....!)


ஏக் கிஸான்......


ரக தாதா.....!


எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க

ஏக் காவுன் மே..............    ஏக் கிஸான்................    ரக தாதா...... ரக.,... ரக..... ரக தாதா......

என்ன சார் இப்பிடி சொதப்புறீங்க, இது சரிப்படாது, இன்னும் கொஞ்சம் மிக்சர் வாய்ல அள்ளிப் போட்டுக்கிட்டு, இன்னொரு வாட்டி இந்த வீடியோவப் பாத்து அதே மாதிரி டிரை பண்ணுங்க!




சரி பாடம் படிச்சாச்சு, இனி டெஸ்ட்டு. கீழே இருக்க கேள்விகளுக்கு பதில் சொன்னா அதிரடி பரிசுகள் உண்டு!


1. "ஏக் மார் தோ துக்கடா" என்றால் என்ன?


2. "கலத் காம் மத் கர்": சிறு குறிப்பு வரைக.


சரியாக விடையளிக்கும் முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு,

முதல் பரிசு:
மங்குனி அமைச்சர் ராப்பகலாக எழுதிக்கொண்டிருக்கும் 'இந்தி டிக்சனரி' என்ற அதிர வைக்கும் திரில்லர் நாவல்!

இரண்டாம் பரிசு:
பட்டாஜி அவர்கள் இத்தாலி மொழியில் எழுதியுள்ள 'அன்னையின் ஆணை' குணச்சித்திர நாவல்!

மூன்றாம் பரிசு:
சிரிப்பு போலீஸ் சிங்கை லக்கி பிளாசாவில் தோழிகளுடன் அமர்ந்து கொலம்பியா மொழியில் எழுதிய 'பழைய காதலி' என்ற மனதை மயக்கும் காதல்கதை!

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நம்ம டீஆர் இந்தியில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய தமிழ்ப்படத்தின் DVDக்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்!

209 comments:

«Oldest   ‹Older   201 – 209 of 209
R.Gopi said...

ஹிந்தி என்பது வடமொழி... அதை கற்க வேண்டிய அவசியம் மரத்தமிழனுக்கு இல்லை...

தமிழ் எனது மூச்சு
தமிழ் எனது பேச்சு
தமிழ் எனது வாட்சு
தமிழ் எனது பீச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///R.Gopi said...
ஹிந்தி என்பது வடமொழி... அதை கற்க வேண்டிய அவசியம் மரத்தமிழனுக்கு இல்லை...

தமிழ் எனது மூச்சு
தமிழ் எனது பேச்சு
தமிழ் எனது வாட்சு
தமிழ் எனது பீச்சு///

எனன சார் இது தமிழன மரக்கட்டைனு சொல்லிட்டீஙக, இது மட்டும் தமினத்தலைவருக்கு தெரிஞ்சது... அம்புட்டுதான்!

Prabu M said...

//ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!) //

சூப்பர்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரபு . எம் said...
//ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!) //

சூப்பர்......////

நனறி பிரபு!

cho visiri said...

//ஆடு மாட்டிகிச்சு..................
ஆடா மர்கயா ஹை!//

O tho, Aadu margayaa nahihe......

Sahime bholne jaave tho, o yesaahe, "Aadu fazgaya hai" sorry srry, "Bhakree fazxgayi hai".

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

//காவிரில தண்ணி தினந்தோறும் திறந்துவிடப்படும், திறக்க மறுக்கும் கர்னாடக அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்! (இதப்பத்தி நம்ம மொதல்வரு, தமிழ்ல கடிதம் எழுதுனதுதான் தப்பு! என்ன எழுதியிருக்குன்னு புரியாம, பிரதமர் அய்யா, நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு! இனி இந்தில கடிதம் எழுதி காரியத்த கச்சிதமா முடிப்போம்ல?) //சரி, ஹிந்தியை எதிர்ப்பத்தால் காவிரியில் தண்ணீர் வந்து விட்டதா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தீர்ந்து விட்டதா? இல்லை, கருணாநிதி ஹிந்தியில் கடிதம் எழுதித்தான் தன்னுடைய பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் மத்தியில் பதவி வாங்கித் தந்தாரா? ஹிந்தியை தார் பூசி அழித்த பாசறையில் இருந்து வந்த மாறன்களின் தமிழ் பத்திரிகையில் दिनकरण என்று அச்சடிக்கப் பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றது. [அங்கு பேப்பர் விற்கும் பசங்களுக்குத் தமிழ் தெரியாதாம்!]. ஐயா, ஹிந்தி எதிர்ப்பு என்பது நடிப்பு, பிழைப்புக்காகச் செய்த நடிப்பு. தமிழர்களின் நன்மைக்காக செய்த புரட்சி அல்ல. சுயநலத்துக்காக தமிழர்கள் உருப்படாமல் போகச் செய்த கயவானித் தனம். சிலர் ரொம்ப புத்திசாலித் தனமாகக் கேட்பது, "ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் அத்தனை பேருக்குமே வேலை கிடைத்து விட்டதா?" என்பது. இது கூமுட்டைத் தனமான கேள்வி. உடல் இளைக்க வேண்டுமானால் நீச்சல் செய்யுங்கள் என்று உங்களை மருத்துவர் சொல்லுவார், அவரிடம், ஏன் சார் திமிங்கலம் எப்பாவுமே நீச்சலடிச்சுகிட்டுத் தானே இருக்கு, அது ஒன்னும் இளைச்ச மாதிரி தெரியலையே என்று கேட்பது கேணத்தனம். கேரள மாநிலப் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப் படுகிறது, அவர்கள் மொழி ஒன்றும் செத்துவிடவில்லை, பொருளாதார ரீதியில் அவர்கள் எந்த விதத்திலும் தமிழர்களை விடக் குறைத்து போய்விடவில்லை. சொல்லப் போனால் தமிழகம் தவிர மற்ற எல்லா தென் மாநிலங்களிலுமே ஹிந்தி பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகிறது. தமிழ நீ பிழைக்க வேண்டுமா? ஹிந்தி படி தப்பே இல்லை. அரசியல் வாதி பேச்சைக் கேட்டால் அவன் பிள்ளைகள் நன்றாக இருக்கும், நீ நாசமாகப் போவாய்.

«Oldest ‹Older   201 – 209 of 209   Newer› Newest»