Tuesday, January 17, 2012

நண்பன்: எனது விமர்சனம், முதல் முறையாக...
முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதலாம் என்றவுடன் எனக்கு கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. பின்னே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சும் இடத்தில் கத்துக்குட்டிகள் நுழைவதற்கு கொஞ்சம் அப்படித்தானே இருக்கும்? நல்ல தெளிவான மனநிலையுடன் விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு அமர்ந்தேன், அப்போதுதானே எல்லா முக்கியமான விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்து கோர்வையாக எழுதலாம்?

நம்ம பிரண்டு ஒருத்தன் விஜய் ரசிகன். ரொம்ப நல்ல பையன், கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான், ஆனா ஊமைக்குசும்பு அதிகம். திடீர் திடீர்னு ஏதாவது வில்லங்கமா பண்ணிட்டு வந்து நிப்பான். அப்பல்லாம் நாங்க வீக்கெண்ட்ஸ்ல ஈவ்னிங் ஏதாவது படத்துக்கு போவோம், ஷோ முடிஞ்சு வந்த உடனே நல்லதா ஒரு ஹோட்டலுக்கு போய் செமயா சாப்பிடுவோம். சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை. அதனால ஹோட்டல்கள்ல வெரைட்டியா ஆர்டர் பண்றதுக்கு ஈசியா இருக்கும்.

அப்படித்தான் அவன்கூட பல படங்களுக்குப் போனேன். இந்த மாதிரி பசங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க விஷயம் இருக்கு பாருங்க, அதைவிட ஒலகத்துலேயே கொடுமையான விஷயம் கிடையாதுங்க. ஏதாவது புதுப்படம் வந்தா போதும், இவனுங்க அத பாத்துட்டு வந்து மூணு நாளைக்கு நம்மளையும் தூங்க விடமாட்டானுங்க, சாப்பிட விடமாட்டானுங்க. இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாலு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு லாடம் கட்டிட்டு வந்துடலாம்.

இப்படி போய்ட்டு இருந்தப்போதான் நண்பன் படம் ரிலீஸ் ஆகுச்சு. படம் வேற ரொம்ப நல்லா இருக்கறதா பேச்சு வந்துடுச்சா... நான் கொஞ்சம் கலங்கிட்டேன். பயலை சமாளிக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு. தினம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே வந்து ஆளை. கொஞ்சம் கொஞ்சமா நார்மலாக்கி, அப்புறம் படத்துக்கு போகலாம்னு ப்ளான். இதையெல்லாம் அப்படித்தான் டீல் பண்ணனும் என்ன சரிதானே?

எப்படி இருக்கு என் நண்பன் விமர்சனம்? இருங்க இருங்க நீங்க எந்த நண்பன் விமர்சனம்னு நெனச்சீங்க? நண்பன் பட விமர்சனம்னா? நான் என்ன நண்பன் படம் விமர்சனம்னா சொன்னேன், நண்பன் விமர்சனம்னுதானே சொல்லி இருக்கேன், எங்கே டைட்டிலை மறுக்கா படிச்சுப் பாருங்க?

ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!

நன்றி: கூகிள் இமேஜஸ்!

40 comments:

மொக்கராசா said...

எங்களை ஏமாற்றிய பன்னியை பவர்ஸ்டாருக்கு அப்பவாக நடிக்க சாபம் இடுகிறேன்.......

மொக்கராசா said...

கொஞ்சம் கேள் பிரண்டையும் விமர்சனம் பண்ணிருந்தா என்னைய மாதிரி யூத்துக்கு நல்லா இருக்குமுல.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
எங்களை ஏமாற்றிய பன்னியை பவர்ஸ்டாருக்கு அப்பவாக நடிக்க சாபம் இடுகிறேன்.......//////

ஹஹ்ஹா..... என்னையப் பத்தி தெரியுமில்ல...

கும்மாச்சி said...

ப.கு. ஸார் ரொம்பதான் லொள்ளு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
கொஞ்சம் கேள் பிரண்டையும் விமர்சனம் பண்ணிருந்தா என்னைய மாதிரி யூத்துக்கு நல்லா இருக்குமுல......./////

அப்போ அப்படி ஒரு படம் எடுக்க சொல்லு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மாச்சி said...
ப.கு. ஸார் ரொம்பதான் லொள்ளு./////

ஹஹ்ஹா.......

ப.செல்வக்குமார் said...

//எங்களை ஏமாற்றிய பன்னியை பவர்ஸ்டாருக்கு அப்பவாக நடிக்க சாபம் இடுகிறேன்.......//

பவர் ஸ்டாருக்கு அப்பாவாகவா ? இதை நான் வன்மையாகக் கண்டுக்கிறேன்.

ப.செல்வக்குமார் said...

இன்னிக்கு இங்க நல்லா போனியாகும் போலயே ? எதுக்கும் கடையை விரிச்சு வைப்போம்..

Madhavan Srinivasagopalan said...

இந்த போஸ்டோட தீம்ல பெ.சோ.வி வாடை அடிக்குது..

NAAI-NAKKS said...

Ihaiya....nanga ellam
roomba ushaar parteega.....

Oru silar post-i
nanga....
Keezhe irunthu than
padippom....

Nan...azhalaiye....
Azhalaiye.....

:)

ப.செல்வக்குமார் said...

//இந்த போஸ்டோட தீம்ல பெ.சோ.வி வாடை அடிக்குது..//

மூக்க கழட்டி வச்சிருங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//எங்களை ஏமாற்றிய பன்னியை பவர்ஸ்டாருக்கு அப்பவாக நடிக்க சாபம் இடுகிறேன்.......//

பவர் ஸ்டாருக்கு அப்பாவாகவா ? இதை நான் வன்மையாகக் கண்டுக்கிறேன்.///////

அடங்கொன்னியா.....

கே. ஆர்.விஜயன் said...

great idea. welldone.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
இன்னிக்கு இங்க நல்லா போனியாகும் போலயே ? எதுக்கும் கடையை விரிச்சு வைப்போம்../////

ரெடியா இரு....

Yoga.S.FR said...

வணக்கம் ப.ரா.சார்!ஒடனேயே எனக்கு ஒரு ரூம் போடுங்க!மூணு நாளைக்கி ஒக்காந்து அழணும்.இப்புடில்லாம் எனக்கு ஒரு "நண்பன்"கெடைக்கலியேன்னு!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
இந்த போஸ்டோட தீம்ல பெ.சோ.வி வாடை அடிக்குது../////

அவர் லீவுல இருக்கறதால தற்காலிகமா அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Ihaiya....nanga ellam
roomba ushaar parteega.....

Oru silar post-i
nanga....
Keezhe irunthu than
padippom....

Nan...azhalaiye....
Azhalaiye.....

:)//////

என்ன ஒரு வில்லத்தனம்.... நோட் பண்ணிக்கிறேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கே. ஆர்.விஜயன் said...
great idea. welldone.////

வாங்க சார், நன்றி!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
உங்களுக்குள் இப்படி ஒரு ரணகள மனிதனா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

அண்ணே, இப்படி ஒரு மகா மொக்கையைப் போட்டு விஜய் ரசிகர்களுக்கே பல்பு கொடுத்திட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

இப்படியே லொள்ளு பண்ணிட்டு இருந்தீங்கன்னா பிரபா மாதிரி உங்களையும் மேதை பார்க்க வெச்சுடிவோம் ஜாக்கிரதை.. யோவ், ஒரு சயிண்ட்டிஸ்ட் இப்படி பண்ணலாமா?

K.s.s.Rajh said...

தல தலைப்பை பார்த்து ஏதோ மொக்கைதான் போடப்போறீங்க என்று புரிந்துவிட்டது பிறகு நீங்களாவது டாகுதர் படத்தின் விமர்சனம் எழுதுறதாவது அவ்வ்வ்வ்வ் ஆனா உள்ளே வந்தா உலக மகா மொக்கை

டாகுதர் ரசிகர்களுக்கு நல்ல பல்பு கொடுத்திருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்

எஸ்.கே said...

நட்புக்கு இலக்கணம் வகுத்த நீவீர் வாழ்க!

RAMVI said...

நண்பன் பட விமர்சனம் அருமை!!!!!!!!!!!!

காட்டான் said...

வணக்கம் ராம்சாமி!
அட பன்னிகுட்டி என்றால் நேர்மையான விமர்சனத்த எதிர்பாக்கலாம் என்று ஓடி வந்தா இப்பிடி பல்பு கொடுக்கிறீங்களே!!

என்னடா அரைப்பக்க விமர்சனமா இருக்கேன்னு முதல்லேயே அலெர்ட் ஆகாம போனது நம்ம பிழைதான். ;-)!!!

சிவானந்தம் said...

நானும் ஏதோ ஆர்வமா வந்தா, இப்படி கடிச்சிட்டீங்களே? இதெல்லாம் பிறவிப் பயன்.எல்லோருக்கும் வராது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போடாங்

ராஜகோபால் said...

யோ பண்ணி ஒன்னோட லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா நானும் ரொம்பநாள் கழிச்சு நம்ம டாக்டர பத்தி பண்ணி கடைல படிக்கலாம்ன்னு வந்தா இப்புடி பண்ணிடியே சரி அடுத்து பவர்ஸ் டார் ஆனந்த தோல் ல்லைக்காவது ஒழுங்கா விமர்சனம் எழுத்து

FOOD NELLAI said...

ஆனாலும் கொஞ்சம் ஓவர்தானுங்கோ!இதைப் படிச்ச அத்தனை பேரும் உடனே நண்பனை(!)ப் பார்க்கப்போயிருவாங்க.

விக்கியுலகம் said...

”நண்பன்” பன்னிகுட்டி அவர்கள் அடுத்து எதிரி விமர்சனம் போடுவார் ஹிஹி!

மனசாட்சி said...

பன்னியாரே,

எல்லாத்துக்கும் அளவுகோல் இருக்கு மொக்கைக்கு இல்லாமல் போச்சே...ஹிம்...

மயிலன் said...

அண்ணே எனக்கு ஒரு ரூம்...

மயிலன் said...

விமர்சனம் சூப்பர் சகோ..
பதிவிற்கு நன்றி...அருமை...

ஹி ஹி ....

Jayadev Das said...

சரியான ஆப்பு பாஸ்!! நான் திரீ இடியட்ஸ் படத்தை முன்னரே பார்த்துவிட்டேன், தமிழில் அமைக்க பட்ட காட்சிகள் கதாபாத்திரங்கள் [சத்யன் உட்பட] அப்படியே ஒரிஜினல் படத்தில் வருவது மாதிரியே செய்ய முயற்சித்திருக்கிறார்கள், [இதுக்கு பேசாமல் அவர்கள் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கலாம்] ஆனாலும் ஒரிஜினல் அளவுக்கு இல்லை, அதைப் பார்த்தவர்களுக்கு இது சப்பென்றே இருக்கும். படம் எனக்கு இம்பிரஸ் ஆக இல்லை. ஆமிர்கான் சில நல்ல கருத்துகளை இந்தப் படத்தில் சொல்லியுள்ளார், அதை அப்படியே மொழி மாற்றம் செய்து ஏதோ நம்ம டாக்குட்டரே சொல்லி நாட்டுக்கு நல்லது பண்ணி விட்டது போல பெரும்பாலான பதிவர்கள் சீன் போட்டுக் கொண்டிருக்கும் வேலையில் நீங்கள் அசராமல் இப்படி ஒரு நல்ல பதிவு போட்டு உங்கள் கொள்கையில் [= டாக்குடரை வாருவது!!] வழுவாமல் இருந்ததற்கு பாராட்டுக்கள்!!

மனசாட்சி said...

என்னது ரூம்.... யு மீன் லாட்ஜ் - அப்ஜெக்சன் யுவர் ஆனர் லார்ஜ்ம் வேணும்...?

வெங்கட் said...

// கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான்,
ஆனா ஊமைக்குசும்பு அதிகம். //

யாருக்கு..? அவனுக்கு..?!!

ViswanathV said...

நீங்க 'நண்பன்'னு சொல்ல
உரிமை கொடுத்துருக்காரு பாருங்க
ஒருத்தரு, அவருக்கு
கோவில் கட்டிக் கும்புடணு நீங்க

ஹாலிவுட்ரசிகன் said...

மரண மொக்கை. இப்படி கவிழ்த்திட்டீங்களே மாப்ள.

Mohamed Faaique said...

////// கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான்,
ஆனா ஊமைக்குசும்பு அதிகம். /////

உங்க கூட சேர்ந்தா அப்படித்தானே இருப்பான்,.. லூஸ்ல விடுங்க...

Mohamed Faaique said...

////// கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான்,
ஆனா ஊமைக்குசும்பு அதிகம். /////

உங்க கூட சேர்ந்தா அப்படித்தானே இருப்பான்,.. லூஸ்ல விடுங்க...