முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதலாம் என்றவுடன் எனக்கு கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. பின்னே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சும் இடத்தில் கத்துக்குட்டிகள் நுழைவதற்கு கொஞ்சம் அப்படித்தானே இருக்கும்? நல்ல தெளிவான மனநிலையுடன் விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு அமர்ந்தேன், அப்போதுதானே எல்லா முக்கியமான விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்து கோர்வையாக எழுதலாம்?
நம்ம பிரண்டு ஒருத்தன் விஜய் ரசிகன். ரொம்ப நல்ல பையன், கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான், ஆனா ஊமைக்குசும்பு அதிகம். திடீர் திடீர்னு ஏதாவது வில்லங்கமா பண்ணிட்டு வந்து நிப்பான். அப்பல்லாம் நாங்க வீக்கெண்ட்ஸ்ல ஈவ்னிங் ஏதாவது படத்துக்கு போவோம், ஷோ முடிஞ்சு வந்த உடனே நல்லதா ஒரு ஹோட்டலுக்கு போய் செமயா சாப்பிடுவோம். சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை. அதனால ஹோட்டல்கள்ல வெரைட்டியா ஆர்டர் பண்றதுக்கு ஈசியா இருக்கும்.
அப்படித்தான் அவன்கூட பல படங்களுக்குப் போனேன். இந்த மாதிரி பசங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க விஷயம் இருக்கு பாருங்க, அதைவிட ஒலகத்துலேயே கொடுமையான விஷயம் கிடையாதுங்க. ஏதாவது புதுப்படம் வந்தா போதும், இவனுங்க அத பாத்துட்டு வந்து மூணு நாளைக்கு நம்மளையும் தூங்க விடமாட்டானுங்க, சாப்பிட விடமாட்டானுங்க. இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாலு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு லாடம் கட்டிட்டு வந்துடலாம்.
இப்படி போய்ட்டு இருந்தப்போதான் நண்பன் படம் ரிலீஸ் ஆகுச்சு. படம் வேற ரொம்ப நல்லா இருக்கறதா பேச்சு வந்துடுச்சா... நான் கொஞ்சம் கலங்கிட்டேன். பயலை சமாளிக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு. தினம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே வந்து ஆளை. கொஞ்சம் கொஞ்சமா நார்மலாக்கி, அப்புறம் படத்துக்கு போகலாம்னு ப்ளான். இதையெல்லாம் அப்படித்தான் டீல் பண்ணனும் என்ன சரிதானே?
எப்படி இருக்கு என் நண்பன் விமர்சனம்? இருங்க இருங்க நீங்க எந்த நண்பன் விமர்சனம்னு நெனச்சீங்க? நண்பன் பட விமர்சனம்னா? நான் என்ன நண்பன் படம் விமர்சனம்னா சொன்னேன், நண்பன் விமர்சனம்னுதானே சொல்லி இருக்கேன், எங்கே டைட்டிலை மறுக்கா படிச்சுப் பாருங்க?
ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!
நன்றி: கூகிள் இமேஜஸ்!
ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!
நன்றி: கூகிள் இமேஜஸ்!
