Monday, January 9, 2012

சாட் ஹிஸ்டரியும் பிரபல பதிவரும்...


அப்பவே இந்தப்படம் வேணாம்னு சொன்னேனே கேட்டியா....? இனி பார்க்கிறவன்லாம் இவர் கூட நம்மை கம்பேர் பண்ணித் தொலைவானுங்களே...?நேத்து வேலையெல்லாம் முடிஞ்சு மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன், திடீர்னு ஒருத்தர் சாட்ல வந்தார். அவர் பேரு சங்கராம். எங்கூட கொஞ்சம் பேசனும்னார். யார்னு தெரியல, ஏதாவது பிரபல பதிவரா இருக்கப்போறாரு சும்மா பேசி வைப்போம்னு சாட் பண்ணேன்.. 

சங்கர்: சார் வணக்கம்

பன்னி: வணக்கம்.. 

சங்கர்: எப்படி இருக்கீங்க? உங்க கூட சாட் பண்றதுல ரொம்ப மகிழ்ச்சி சார்

பன்னி: நமக்குள்ள எதுக்குங்க சார் எல்லாம், நான் என்ன கலக்டரா... இல்ல ஜட்ஜா ?

சங்கர்: சரிங்க.. இருந்தாலும் நீங்க எவ்ளோ பெரிய பிரபல பதிவரு என் கூடலாம் சாட் பண்ணுவீங்கன்னு நம்பவே இல்ல...

பன்னி: அட பிரபல பதிவர்னா என்னங்க.. நானும் உங்கள மாதிரி சாதரண ஆளு தாங்க... 

சங்கர்: அப்படியெல்லாம் இல்லைங்க, நான் ரொம்ப நாளா உங்க ரசிகன். 

பன்னி: ஓ அப்படிங்களா..... நன்றி சங்கர்

சங்கர்:  ஆமாங்க, டெய்லி காலைல உங்க பதிவுலதான் கண்ணு முழிப்பேன். அதுக்காக லேப்டாப்ல உங்க ப்ளாக்க ஓப்பன் பண்ணி பக்கத்துல வெச்சிக்கிட்டுத்தான் தூங்குவேன்.

பன்னி: (ங்கொய்யால இவன் என்ன லூசா... இல்ல நக்கல் பண்றானா?) யோவ் ரசிகன்னு சொன்னீங்க சரி, ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவரு...

சங்கர்: ஓவர்தான் இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்...... என்னோட லவ்வரும் உங்க ரசிகைதாங்க, அவ சொல்லித்தான் நானும் உங்க ரசிகர் ஆனேன். இல்லைன்னா என்னைய அவ லவ் பண்ணி இருக்கவே மாட்டா...

பன்னி: (டேய்.. டேய்ய்...  இன்னிக்கு நாந்தானாடா சிக்குனேன்....... ) தம்பி தண்ணியடிச்சிருக்கீங்களா? நாம வேணா அப்புறமா சாட் பண்ணுவோமே?

சங்கர்: இல்லீங்க, நான் தெளிவாத்தான் இருக்கேன், நீங்க தான் நம்ப மாட்டேங்கிறீங்க. இப்ப நான் உங்க கூட சாட் பண்றதுக்குக் கூட அவதான் காரணம்.

பன்னி: எப்படி?

சங்கர்: போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்

பன்னி: (வெளங்கிரும்....) தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல, இந்த மாதிரியெல்லாம் பேச வேணாம் சொல்லிட்டேன்

சங்கர்: சரி அத விடுங்க, நீங்க ஏன் உங்களை பத்தியே எழுதிட்டு இருக்கீங்க?

பன்னி: ஏம்பா நீ என் ப்ளாக் படிச்சிருக்கியா, இல்ல குத்துமதிப்பா பேசிட்டு இருக்கியா? இப்போ கொஞ்சநாளா பவர்ஸ்டார்னு ஒருத்தரை வெச்சித்தான் கடைய நடத்திட்டு இருக்கேன்..  தெரியும்ல?

சங்கர்: ஓ அப்படியா.....  படிச்ச மாதிரியே ஞாபகம் இல்லியே... நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானே?

பன்னி: தக்காளி அப்படிப் போடு அருவாள.......... நீ கோக்குமாக்கா பேசும் போதே எனக்கு தெரியும்யா இந்தா மாதிரி ஏதாவது இருக்கும்னு........ ங்கொய்யால இது என்ன அந்தக் காலத்து லேண்ட்லைன் போனா யார்னு தெரியாம கால் பண்றதுக்கு? சாட்ல என்பேர் தான் வந்திட்டு இருக்குல்ல, அதுகூட தெரியாமையா இவ்ளோ நேரம் சாட் பண்ணீங்க?

சங்கர்:  சாரி சார் சின்னத் தப்பு நடந்து போச்சு. 

பன்னி: என்னடா சாரி.... பரதேசி பன்னாட... காலைலேயே மூட் அவுட் பண்ணிட்டியேடா ராஸ்கல்.... இனி ஒரு ஆஃப் அடிச்சாத்தாண்டா தெளியும்... ஆமா.. டேய்ய்.... நீ அந்த சங்கர்தானே? ங்கொக்காமக்கா..... உனக்கேன்டா இந்த வேல?

சங்கர்: அது வந்து சார், அவசரத்துல கவனிக்காம இப்படி பண்ணிட்டேன்

பன்னி: தம்பி நீ யாருன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..... ஒழுங்கா உண்மைய சொல்லிரு.... இல்லேன்னா ஏகப்பட்ட கெட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும், நான் ஒரு பிரபல பதிவர் தெரியும்ல?

சங்கர்: அண்ணே மன்னிச்சிருங்கண்ணே, சிரிப்பு போலீஸ்தாண்ணே இப்படி பண்ண சொன்னாரு......... அஞ்சும் பத்துமா தர்ரேன், ஒவ்வொரு பிரபல பதிவரா சாட் பண்ணு, ஆஹா ஓஹோன்னு சொல்லு, கடைசில நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானேன்னு கேட்டுட்டு வந்திருன்னாரு.....

பன்னி: ம்ம்.... அப்படி வாடி.......... இதான் மேட்டரா... சரி நீ போ... இத நான் டீல் பண்ணிக்கிறேன்.......

அய்யோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி கழிசடைங்க கூடலாம் கூட்டு சேக்குற....... நல்லா பாத்துக்குங்க மகாஜனங்களே....  இந்தப் பாவத்துக்குலாம் நான் ஆளாகவே மாட்டேன்...  

அய்யய்யோ..... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  ஆள விடுங்கடா சாமி.....!

நன்றி: கூகிள் இமேஜஸ்

111 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மெதுவடையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி: கூகிள் இமேஜஸ்.//

கூகிள்க்கு கூட இமேஜ் இருக்கு. இந்த பிளாக் ஓனர் க்கு இல்லியே !!!

சி.பி.செந்தில்குமார் said...

என்ன சாட்? சாதா சாட்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ்.//

கூகிள்க்கு கூட இமேஜ் இருக்கு. இந்த பிளாக் ஓனர் க்கு இல்லியே !!!/////

நாதாரி... இமேஜ்னா படம்னு அர்த்தம்டா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
என்ன சாட்? சாதா சாட்?////

இல்ல ஸ்பெசல் சாதா சாட்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?//

யோவ். நான் பொண்ணு வீட்டுல பிரபல பதிவர்ன்னு சொல்லிருக்கேன். அத மெயிண்டயின் பண்ண வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?//

யோவ். நான் பொண்ணு வீட்டுல பிரபல பதிவான்னு சொல்லிருக்கேன். அத மெயிண்டயின் பண்ண வேணாமா?////////

பிரபல பதிவர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ்.//

கூகிள்க்கு கூட இமேஜ் இருக்கு. இந்த பிளாக் ஓனர் க்கு இல்லியே !!!/////

நாதாரி... இமேஜ்னா படம்னு அர்த்தம்டா//

அததான் நானும் சொல்றேன். எங்க தைரியம் இருந்தா உன் போட்டோ வை இங்க போடு பாப்போம். (செத்தாண்டா சேகரு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Comment deleted
This post has been removed by the author.////

மாட்டுனியா, நான் காப்பி பண்ணி போட்டுட்டேனே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ்.//

கூகிள்க்கு கூட இமேஜ் இருக்கு. இந்த பிளாக் ஓனர் க்கு இல்லியே !!!/////

நாதாரி... இமேஜ்னா படம்னு அர்த்தம்டா//

அததான் நானும் சொல்றேன். எங்க தைரியம் இருந்தா உன் போட்டோ வை இங்க போடு பாப்போம். (செத்தாண்டா சேகரு)//////

போட்டோ போடனும்னா போட்டோதான் வேணும் தைரியம் இல்ல......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Comment deleted
This post has been removed by the author.////

மாட்டுனியா, நான் காப்பி பண்ணி போட்டுட்டேனே.......//

தூ. அது ஸ்பெல்லிங் மிஸ்டேக். அதே comment திருப்பி போட்டிருக்கேன்

சசிகுமார் said...

ரொம்ப சிரிக்க வச்சிடீங்க... இத டைப் பண்ணும போதும் சிரிச்சுகிட்டேன் தான் டைப் பண்றேன்....

இனி சங்கர் என்கிற பேருல யாராவது சாட்ல வந்தா உசாரா இருக்கணும் போல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Comment deleted
This post has been removed by the author.////

மாட்டுனியா, நான் காப்பி பண்ணி போட்டுட்டேனே.......//

தூ. அது ஸ்பெல்லிங் மிஸ்டேக். அதே comment திருப்பி போட்டிருக்கேன்//////

இல்லையே நேராத்தானே போட்டிருக்கே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

நானும் உங்ககிட்ட சாட் பண்ணனும்? எப்போ பிரீ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டோ போடனும்னா போட்டோதான் வேணும் தைரியம் இல்ல......//

சரி இப்போ உன் போட்டோவை இங்கு பப்ளிஷ் செய்யவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நானும் உங்ககிட்ட சாட் பண்ணனும்? எப்போ பிரீ?//

Gtalk is always free..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சசிகுமார் said...
ரொம்ப சிரிக்க வச்சிடீங்க... இத டைப் பண்ணும போதும் சிரிச்சுகிட்டேன் தான் டைப் பண்றேன்....

இனி சங்கர் என்கிற பேருல யாராவது சாட்ல வந்தா உசாரா இருக்கணும் போல.../////

இனிமே அவரு சங்கர்ன பேர்லயா வருவாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// தமிழ்வாசி பிரகாஷ் said...
நானும் உங்ககிட்ட சாட் பண்ணனும்? எப்போ பிரீ?////

நான் சாட் பண்றதுக்குலாம் காசு வாங்குறதில்ல பிரகாஷ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது மணி சங்கர் தான?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போட்டோ போடனும்னா போட்டோதான் வேணும் தைரியம் இல்ல......//

சரி இப்போ உன் போட்டோவை இங்கு பப்ளிஷ் செய்யவும்////

இவன் இதுலேயே குறியா இருக்கானே, எங்கேயும் பெட்டு கட்டி இருப்பானோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது மணி சங்கர் தான?//////

ஆமா அவரு பெரிய கப்பல் யாவாரி... பேரைச் சொன்ன உடனே கண்டுபுடிக்கிறாரு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போட்டோ போடனும்னா போட்டோதான் வேணும் தைரியம் இல்ல......//

சரி இப்போ உன் போட்டோவை இங்கு பப்ளிஷ் செய்யவும்////

இவன் இதுலேயே குறியா இருக்கானே, எங்கேயும் பெட்டு கட்டி இருப்பானோ?///

ஆமா. இல்லை என்றால் என் பிளாக்கில் உன் போட்டோ ரிலீஸ் செய்யப்படும் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போட்டோ போடனும்னா போட்டோதான் வேணும் தைரியம் இல்ல......//

சரி இப்போ உன் போட்டோவை இங்கு பப்ளிஷ் செய்யவும்////

இவன் இதுலேயே குறியா இருக்கானே, எங்கேயும் பெட்டு கட்டி இருப்பானோ?///

ஆமா. இல்லை என்றால் என் பிளாக்கில் உன் போட்டோ ரிலீஸ் செய்யப்படும் :)///////

இது பெரிய திருட்டு டிவிடி.... இவர் எடுத்து ரிலிஸ் பண்ண போறாரு.......

விக்கியுலகம் said...

ஸ்ஸ் அபா..இப்ப தான் ஒருத்தரு ஓஞ்ஞாரு..அடுத்து இங்கயா...வெளங்கிரும்..ரமேஷின் கொல வெறி தாண்டவம்..சங்கர் ஊடாக ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

நீங்க இன்னுமா திருந்தலை, ஐ ஜாலி

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி பனித்துளி சங்கரை தாக்கி பதிவு போட்டிருக்கார், எல்லாரும் ஓடியாங்க ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, நான் பதிவை படிச்சுட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
ஸ்ஸ் அபா..இப்ப தான் ஒருத்தரு ஓஞ்ஞாரு..அடுத்து இங்கயா...வெளங்கிரும்..ரமேஷின் கொல வெறி தாண்டவம்..சங்கர் ஊடாக ஹிஹி!///////

யோவ் இதுக்கும் ஏதாவது உள்குத்து போட்டுடாதே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

நீங்க இன்னுமா திருந்தலை, ஐ ஜாலி/////

ஆமா அவரு திருந்திட்டாலும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி பனித்துளி சங்கரை தாக்கி பதிவு போட்டிருக்கார், எல்லாரும் ஓடியாங்க ஹி ஹி///////

ஓஹோ அப்படியா சொல்லவே இல்ல............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, நான் பதிவை படிச்சுட்டேன்///////

இந்த மாசத்துக்கே இதுதானா?

மனசாட்சி said...

அய்யோ அய்யோ - செம காமடிப்பா.

பல்ப்பு வாங்கிய பன்னியார் வாழ்க

ஹாலிவுட்ரசிகன் said...

“டெம்ப்ளேட் பின்னூட்டம்” (எப்படி வேணுமோ அப்படி எடுத்துக்கங்க)

MANO நாஞ்சில் மனோ said...

போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்//

நாசமாபோச்சிபோ, வெளங்குமா வெளங்குமா இல்லை வெளங்குமான்னு கேக்குறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

நீங்க இன்னுமா திருந்தலை, ஐ ஜாலி//

நீ முதல்ல திருந்துனியா சொல்லு ஹி ஹி...

நிரூபன் said...

அண்ணே, சிரிப்பு போலீஸ் உங்களுக்கு ப்ளான் பண்ணி பல்பு கொடுத்திருக்காரே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி பனித்துளி சங்கரை தாக்கி பதிவு போட்டிருக்கார், எல்லாரும் ஓடியாங்க ஹி ஹி//

நல்ல வேளை டைரக்டர் ஷங்கர்னு சொல்லாம விட்டியே..?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஸ்ஸ் அபா..இப்ப தான் ஒருத்தரு ஓஞ்ஞாரு..அடுத்து இங்கயா...வெளங்கிரும்..ரமேஷின் கொல வெறி தாண்டவம்..சங்கர் ஊடாக ஹிஹி!//

அண்ணே நீ நக்கீரனை தாக்கி இருப்பதாக சிபி சொல்ல சொன்னான்...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?//

இருந்தாலும் ஒரு பப்ளிகுட்டி வேணுமில்ல அதான்....

Yoga.S.FR said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


அததான் நானும் சொல்றேன். எங்க தைரியம் இருந்தா உன் போட்டோ வை இங்க போடு பாப்போம். (செத்தாண்டா சேகரு)//////அடடே!சேகர் தான் "ஒரிஜினல்"பேரா????

jaisankar jaganathan said...

உஙக் மெயில் ஐடி குடுங்க. நானும் சாட் பண்ணுறேன்

Yoga.S.FR said...

"பவர் ஸ்டார்" பேரு போயி, "நாய் ஸ்டாருன்னு பேரு வந்துடப் போவுது!

காட்டான் said...

ஐயோ இந்த பிரபல பதிவர் தொல்லை தாங்க முடியலை சாமி.. ம் பிரபலம்ன்னா சும்மாவா? அதுக்கும் ஒரு விலை இருக்கே...!

வெங்கட் said...

@ பிரகாஷ்.,

// நானும் உங்ககிட்ட சாட் பண்ணனும்?
எப்போ பிரீ? //

அட கொக்க மக்கா.. சாட் பண்றதுக்கு
எப்ப ப்ரீயா.? அப்ப இதுக்கெல்லாமா
காசு வாங்கறாரு..?!! அவ்ளோ பெரிய
அப்பாடக்கரா நம்ம பன்னிகுட்டி..?!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம
வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம்
தேவையா? //

இது வெளம்பரம்னா.. அப்ப இதுக்கு
பேரு என்னவாம்..?!!

http://gokulathilsuriyan.blogspot.com/2011/10/blog-post.html

Anonymous said...

யார் யாரோ பட்டப் பேர் வச்சுகராங்க, உஙகலுக்கும் ஒரு பட்டப் பேர் “மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி”

எழுதுனதெல்லாம் ஹிட் ஆகுது,
உங்க ப்ளாக் வந்தாலே சிரிப்புதான்..


“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
....................

எல்லாரும் சொல்லுஙக

ப.செல்வக்குமார் said...

யாராக இருந்தாலும் எங்கள் பவர் ஸ்டார் இல்லாமல் , அவரைப் பற்றிப் பேசாமல், அவர் புகைப்படம் இல்லாமால் இனி வாழமுடியாது என்பதை இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள எங்கள் தலைவரின் படமே தெள்ளத் தெளிவாக விளக்குகிறது!

வெங்கட் said...

@ எனக்கு பிடித்தவை.,

// எழுதுனதெல்லாம் ஹிட் ஆகுது, 
உங்க ப்ளாக் வந்தாலே சிரிப்புதான்..// 

ஹும்.. ஈஸியா சொல்லிட்டீங்க.. 
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?!!

அஞ்சோ ., பத்தோ குடுத்து ஒவ்வொருத்தரையும் 
இழுத்துட்டு வந்து ஓட்டு + கமெண்ட் வாங்கறது 
இருக்கே.. உஸ்ஸப்பா...

அதெல்லாம் ஒரு பிரபல பதிவரா இருந்தாதான் 
தெரியும்..


:)

ப.செல்வக்குமார் said...

இதாச்சும் பரவால்ல, கொஞ்சநாள் முன்னாடி ரமேசு அண்ணன் எனக்கு போன் பண்ணி கொஞ்சநேரம் இதே மாதிரி என்னைப் பத்திப் பெருமையா பேசிட்டு கடைசில நீங்க சிரிப்புப் போலீசு ரமேசு தானேன்னு கேட்டார் தெரியுமா.?

என்ன ஆச்சுணா ? நீங்கதானே ரமேஷ் ? அப்படின்னேன்

“ ஓ, சாரி! என் நம்பர் உங்கிட்ட இருக்காதுனு நினைச்சேன் “ அப்படின்னார் :))

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல,//
இப்படி அண்ணனை இறக்கிட்டானே பயபுள்ள கையில கிடைச்சான்...சங்குதான்!!

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

சனியை வெச்சு சிலர் ஹிட்டடிக்கிறாங்க..;-)) நமீதாவை வெச்சு ! சிலர் ஹிட்டடிக்கிறாங்க..எந்த கவர்ச்சியும் இல்லாத பவர் ஸ்டாரை வெச்சு ஹிட்டடிக்க தானைதலைவன்...பன்னிகுட்டியார் நாலதான் முடியும்.இதை எந்த ஜில்லா கலெக்டர் முன்னாடியும் சொல்வேன்.

மாணவன் said...

ஹா..ஹா... சூப்பர்
கவுண்டர் கல்லுடைக்கிறார்.....! :-)

Mohamed Faaique said...

அதே ஆளு என் கூடவும் சேட் பண்ணினாருப்பா.....
(இதுல இருந்து தெரிய வருவது, ஹி..ஹி.. நானும் ஒரு பிரபல பதிவரே)

NAAI-NAKKS said...

Konja naal current
illaama naan net-ku
varalai.....athukkulla
enna enna nadakkuthu...?????

PR----neenga kavalai padaatheenga
nan vantha piragu
parunga.......
Enna nadakkuthunnu....?????
He...he....onnum nadakkathu.....

மொக்கராசா said...

what a joke what a joke

மொக்கராசா said...

what a comedy...what a comedy

மொக்கராசா said...

what a funny ..what a funny

மொக்கராசா said...

what a ha ha ha ha ha
what a ha ha ha ha ha

மொக்கராசா said...

சிரிச்சு சிரிச்சு என்ன கமெண்ட்டு போடுறதுன்னு தெரியல......

மொக்கராசா said...

இப்படிதாங்க மூஞ்சி புக்குலேயும் சிரிப்பு போலிஸ் அவருக்கு அவரே ரசிகர் மன்றம் கிரியேட் பண்ணி வச்சுருக்காரு.....

பல ஐடி ல வந்து அவருக்கு அவரே கமெண்ட்ட வேற போட்டுக்குவாரு.....

ரஹீம் கஸாலி said...

anne neengka pirabala pathivar mangkuni amaichar thaane

Madhavan Srinivasagopalan said...

இதே கான்செப்டை, நான், விரைவில் 'சிரிப்பு போலீசுக்கு' பதிலாக 'மங்குனி அமைச்சர்' என்ற பெயரில் வெளியிடப் போகிறேன். எனவே அப்படியொரு பதிவினை யாரும் வெளியிடவேண்டாமேன்றும்.. மீறி வெளியிட்டால் இ.பி.கொ ஏதோவொரு சட்டத்தின் கீழ் கோர்ட் நடவடிக்கை எடுக்கப் படும்..

ஆமாம்.. சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்..

Also Ref :
// http://gokulathilsuriyan.blogspot.com/2011/10/blog-post.html //

FOOD NELLAI said...

ROFL ;))

எஸ்.கே said...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!

Philosophy Prabhakaran said...

யோவ்... பதிவில் வரும் சங்கர் கேபிள் சங்கர் என்று நினைத்துக்கொண்டே படித்தேன்... செம சிரிப்பா இருக்கு...

siva sankar said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மனசாட்சி said...
அய்யோ அய்யோ - செம காமடிப்பா.

பல்ப்பு வாங்கிய பன்னியார் வாழ்க////

எனக்கே அல்வாவா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஹாலிவுட்ரசிகன் said...
“டெம்ப்ளேட் பின்னூட்டம்” (எப்படி வேணுமோ அப்படி எடுத்துக்கங்க)/////

கமெண்ட் அருமை...! (இதுவும் அதேதான்.....ஹி..ஹி....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்//

நாசமாபோச்சிபோ, வெளங்குமா வெளங்குமா இல்லை வெளங்குமான்னு கேக்குறேன்...//////

ஏண்ணே... எதுக்கும் காதுல கொஞ்சம் வெளக்கெண்ண ஊத்தி பாருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

நீங்க இன்னுமா திருந்தலை, ஐ ஜாலி//

நீ முதல்ல திருந்துனியா சொல்லு ஹி ஹி...//////

அவரு திருந்திட்டாருன்னு அப்புறம் நம்ம எப்படி கும்முறதாம்......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிரூபன் said...
அண்ணே, சிரிப்பு போலீஸ் உங்களுக்கு ப்ளான் பண்ணி பல்பு கொடுத்திருக்காரே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//////

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி பனித்துளி சங்கரை தாக்கி பதிவு போட்டிருக்கார், எல்லாரும் ஓடியாங்க ஹி ஹி//

நல்ல வேளை டைரக்டர் ஷங்கர்னு சொல்லாம விட்டியே..?/////

விட்டா அது சங்கர் சிமெண்ட்டு ஓனருன்னும் சொல்லுவாங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
ஸ்ஸ் அபா..இப்ப தான் ஒருத்தரு ஓஞ்ஞாரு..அடுத்து இங்கயா...வெளங்கிரும்..ரமேஷின் கொல வெறி தாண்டவம்..சங்கர் ஊடாக ஹிஹி!//

அண்ணே நீ நக்கீரனை தாக்கி இருப்பதாக சிபி சொல்ல சொன்னான்...//////

நம்ம நாய் நக்சா...... அப்புராணி மனுசனாச்சே அவரு...... அவரையும் விட்டு வெக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?//

இருந்தாலும் ஒரு பப்ளிகுட்டி வேணுமில்ல அதான்....//////

பன்னிக்குட்டியே இருக்கும் போது பப்ளிக்குட்டி எதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


அததான் நானும் சொல்றேன். எங்க தைரியம் இருந்தா உன் போட்டோ வை இங்க போடு பாப்போம். (செத்தாண்டா சேகரு)//////அடடே!சேகர் தான் "ஒரிஜினல்"பேரா????////////

ஆஹா..... ராணுவ ரகசியங்கள் இப்படியே வெளியாகிடும் போல இருக்கே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// jaisankar jaganathan said...
உஙக் மெயில் ஐடி குடுங்க. நானும் சாட் பண்ணுறேன்/////

உங்களுக்கும் பொழுது போகலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.S.FR said...
"பவர் ஸ்டார்" பேரு போயி, "நாய் ஸ்டாருன்னு பேரு வந்துடப் போவுது!/////

நாய் பாவங்க, அது என்ன பண்ணுச்சு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காட்டான் said...
ஐயோ இந்த பிரபல பதிவர் தொல்லை தாங்க முடியலை சாமி.. ம் பிரபலம்ன்னா சும்மாவா? அதுக்கும் ஒரு விலை இருக்கே...!/////

அதானே, யாருங்க அந்த பிரபல பதிவரு.... ரொம்ப தொல்லையா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெங்கட் said...
@ பிரகாஷ்.,

// நானும் உங்ககிட்ட சாட் பண்ணனும்?
எப்போ பிரீ? //

அட கொக்க மக்கா.. சாட் பண்றதுக்கு
எப்ப ப்ரீயா.? அப்ப இதுக்கெல்லாமா
காசு வாங்கறாரு..?!! அவ்ளோ பெரிய
அப்பாடக்கரா நம்ம பன்னிகுட்டி..?!/////

யெஸ் ஐயாம் தி அப்பாட்டேக்கர்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம
வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம்
தேவையா? //

இது வெளம்பரம்னா.. அப்ப இதுக்கு
பேரு என்னவாம்..?!!

http://gokulathilsuriyan.blogspot.com/2011/10/blog-post.html//////

அப்போ இதுக்கு பேரு என்னவாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எனக்கு பிடித்தவை said...
யார் யாரோ பட்டப் பேர் வச்சுகராங்க, உஙகலுக்கும் ஒரு பட்டப் பேர் “மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி”

எழுதுனதெல்லாம் ஹிட் ஆகுது,
உங்க ப்ளாக் வந்தாலே சிரிப்புதான்..


“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
“மிடாஸ் டச் பன்னிக்குட்டி ராமசாமி” வாழ்க
....................

எல்லாரும் சொல்லுஙக/////////

அய்யய்யோ மிடாஸ்ங்கறது சின்ன மேடம் வெச்சிருக்க சாராய கம்பேனியாச்சே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
யாராக இருந்தாலும் எங்கள் பவர் ஸ்டார் இல்லாமல் , அவரைப் பற்றிப் பேசாமல், அவர் புகைப்படம் இல்லாமால் இனி வாழமுடியாது என்பதை இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள எங்கள் தலைவரின் படமே தெள்ளத் தெளிவாக விளக்குகிறது!//////

படம் ரொம்பத் தெளிவா இருக்குன்னு ஒரு லைன்ல சொல்லிட்டு போவியா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
@ எனக்கு பிடித்தவை.,

// எழுதுனதெல்லாம் ஹிட் ஆகுது,
உங்க ப்ளாக் வந்தாலே சிரிப்புதான்..//

ஹும்.. ஈஸியா சொல்லிட்டீங்க..
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?!!

அஞ்சோ ., பத்தோ குடுத்து ஒவ்வொருத்தரையும்
இழுத்துட்டு வந்து ஓட்டு + கமெண்ட் வாங்கறது
இருக்கே.. உஸ்ஸப்பா...

அதெல்லாம் ஒரு பிரபல பதிவரா இருந்தாதான்
தெரியும்..


:)

////////

பாருங்க சார் ஒரு பிரபல பதிவர் மனம் திறக்கிறாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
இதாச்சும் பரவால்ல, கொஞ்சநாள் முன்னாடி ரமேசு அண்ணன் எனக்கு போன் பண்ணி கொஞ்சநேரம் இதே மாதிரி என்னைப் பத்திப் பெருமையா பேசிட்டு கடைசில நீங்க சிரிப்புப் போலீசு ரமேசு தானேன்னு கேட்டார் தெரியுமா.?

என்ன ஆச்சுணா ? நீங்கதானே ரமேஷ் ? அப்படின்னேன்

“ ஓ, சாரி! என் நம்பர் உங்கிட்ட இருக்காதுனு நினைச்சேன் “ அப்படின்னார் :))////////

அப்போ நீயும் பிரபல பதிவராகிட்டியா? சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நல்ல நேரம் சதீஷ்குமார் said...
தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல,//
இப்படி அண்ணனை இறக்கிட்டானே பயபுள்ள கையில கிடைச்சான்...சங்குதான்!!////////

அண்ணன் களத்துல இறங்கிட்டாருய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
சனியை வெச்சு சிலர் ஹிட்டடிக்கிறாங்க..;-)) நமீதாவை வெச்சு ! சிலர் ஹிட்டடிக்கிறாங்க..எந்த கவர்ச்சியும் இல்லாத பவர் ஸ்டாரை வெச்சு ஹிட்டடிக்க தானைதலைவன்...பன்னிகுட்டியார் நாலதான் முடியும்.இதை எந்த ஜில்லா கலெக்டர் முன்னாடியும் சொல்வேன்.//////

அதுக்கெதுக்குண்ணே கலக்டர் வரைக்கும் போய்க்கிட்டு, இந்த டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
ஹா..ஹா... சூப்பர்
கவுண்டர் கல்லுடைக்கிறார்.....! :-)/////

ங்கொய்யால நான் என்ன செண்ட்ரல் ஜெயில்லயா இருக்கேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Mohamed Faaique said...
அதே ஆளு என் கூடவும் சேட் பண்ணினாருப்பா.....
(இதுல இருந்து தெரிய வருவது, ஹி..ஹி.. நானும் ஒரு பிரபல பதிவரே)//////

ஆஹா.... பிரபல பதிவராகுறதுக்கு இதுதான் ஷார்ட்கட்னு இவருக்கும் தெரிஞ்சிடுச்சு போலயே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Konja naal current
illaama naan net-ku
varalai.....athukkulla
enna enna nadakkuthu...?????

PR----neenga kavalai padaatheenga
nan vantha piragu
parunga.......
Enna nadakkuthunnu....?????
He...he....onnum nadakkathu.....///////

உங்க கடமை உணர்ச்சில கண்ணு மட்டுமில்ல எல்லாமே கலங்குதுங்கோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
what a joke what a joke/////

what a comment what a comment...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
சிரிச்சு சிரிச்சு என்ன கமெண்ட்டு போடுறதுன்னு தெரியல......//////

அப்போ மேல நீ போட்டிருக்கறதெல்லாம் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
இப்படிதாங்க மூஞ்சி புக்குலேயும் சிரிப்பு போலிஸ் அவருக்கு அவரே ரசிகர் மன்றம் கிரியேட் பண்ணி வச்சுருக்காரு.....

பல ஐடி ல வந்து அவருக்கு அவரே கமெண்ட்ட வேற போட்டுக்குவாரு.....///////

அவருக்கு இப்படி பலப்பல ஹாபிகள் இருக்கு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
anne neengka pirabala pathivar mangkuni amaichar thaane//////

மங்குவும் இப்படி ஆள் செட் பண்ணி அனுப்புறாரா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
இதே கான்செப்டை, நான், விரைவில் 'சிரிப்பு போலீசுக்கு' பதிலாக 'மங்குனி அமைச்சர்' என்ற பெயரில் வெளியிடப் போகிறேன். எனவே அப்படியொரு பதிவினை யாரும் வெளியிடவேண்டாமேன்றும்.. மீறி வெளியிட்டால் இ.பி.கொ ஏதோவொரு சட்டத்தின் கீழ் கோர்ட் நடவடிக்கை எடுக்கப் படும்..

ஆமாம்.. சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்..

Also Ref :
// http://gokulathilsuriyan.blogspot.com/2011/10/blog-post.html /////////

மங்குனி அமைச்சரை பத்தி தானே... எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///FOOD NELLAI said...
ROFL ;))////

வாங்க ஆப்பீசர்... நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!/////

ஆதவன் சூர்யா படமாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
யோவ்... பதிவில் வரும் சங்கர் கேபிள் சங்கர் என்று நினைத்துக்கொண்டே படித்தேன்... செம சிரிப்பா இருக்கு.../////

யோவ் ஏன்யா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////siva sankar said...
:)////

:))

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?/// ஹா.ஹா. கலக்கல்...

மருதமூரான். said...

சூப்பர் பன்னி சார்!


யாராவது அரட்டைக்கு வந்தால் ரொம்ப உசார இருக்க வைச்சிட்டீங்க.

பார்ரா...... இந்தப்பயபுள்ளங்க எப்படியெல்லாம் அலையுதுண்ணு!!

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

ஓஓ அவரா நீங்க...
கலக்கீட்டீங்க....
பிரபலபதிவரின் பயங்கர டேட்டாவில தந்த டெம்பிளெட் கொமண்ட் நல்லது...

என்னுடைய மொய்...
நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)

Powder Star - Dr. ஐடியாமணி said...

பன்னிக்குட்டி அண்ணே! ரொம்ப அருமையா எழுதறீங்க! உங்கள் ப்ளாக்கை டெயிலி தவறாமல் படிப்பேன்! நீங்கள் மிகச் சிறந்த இலக்கியவாதியா வர வாழ்த்துக்கள்!

( அண்ணே, இதையும் சி.போ.ர தான் சொல்லச் சொன்னாரு! )

! சிவகுமார் ! said...

//நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... ஆள விடுங்கடா சாமி....//

இப்படி சொன்னாலே அது பிரபல பதிவர்தான்னு அர்த்தம். ஹி..ஹி..

veedu said...

அண்ணே! பரவாயில்லைண்ணே!பன்னிக்குட்டியண்ணே...ரமேஷ் மாதிரியே முயற்சி பிளாக் எழுத முயற்சி செய்திருக்கிங்க...இருந்தாலும் ரமேஷ் அளவுக்கு வரமுடியாதுங்க...முயற்சி செய்ங்க 2042ல் வெற்றி கிடைக்கும்...(நான் கரைக்ட்டா கமெண்ட் போட்டுடங்க ரமேஷ் கவனிச்சிருங்க ஆமா!!!)

கிஷோகர் IN பக்கங்கள் said...

ண்ணா நான் கூட உங்க ரசிகர் தானுங்கோ......

கிஷோகர் IN பக்கங்கள் said...

சாரு சாட்டிங் மேட்டர விட ரொம்ப சூடான சாட் மேட்டராவுல்ல இருக்கு! இத வச்சே ஒரு பதிவு தேத்திடணும். "பன்னிக்குட்டி பப்ளிங்ஸ், சாட் ரூமில் நடந்தது என்ன?" தலைப்பு எப்பூடி?