Monday, January 23, 2012

தானே கமிட்டாகிய தானைத்தலைவன்...


டேய்.... ஒரு அரசு அதிகாரிகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது....?

காலை 6.15. அது ஜனவரி மாதமாகையால் கொஞ்சம் சிலுசிலுவென்றிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள். பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போதும் சீக்கிரமே கிளம்பிவிடுவார், ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் தான் பஸ் ஸ்டாப். தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை இன்னும் திறந்திருக்கவில்லை.  அண்ணாச்சி 8 மணிக்குத்தான் கடை திறப்பார். அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.

ஆனால் இன்று கடைமுன்பாக யாரோ ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். புதிதாக இருந்தார். ஆள் பார்ப்பதற்கு ஷங்கர் படங்களில் வரும் அரசு உயர் அதிகாரி போல் இருந்தார். தலையில் ஒரு உல்லன் தொப்பி. அலுவலகத்திற்குச் செல்ல தயாராக இருப்பது போல் நின்று கொண்டிருந்தார். புதிதாக இந்த ஏரியாவிற்கு குடிவந்திருக்கலாம். கம்பெனி வண்டிக்காகவோ நண்பருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார் போல. இப்படி எண்ணிக் கொண்டவாரே பஸ்ஸ்டாப்பை அடைந்தார். 

மறுநாள் காலையும் அவர் அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது கொஞ்சம் பழகிய(?) முகமாகி விட்டதால் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தார் சிரிப்பு போலீஸ், ஆனால் அவர் பதில் ரியாக்சன் கொடுக்காமல் ரொம்ப சீரியசான பாவனையுடன் இருந்ததால், முகத்தில் வந்த சினேகமான புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் அசடு வழிந்தவாறு தன்பாட்டுக்குச் செல்லத் தொடங்கினார். என்ன மனிதர் இவர், சும்மா பதிலுக்கு ஒரு சின்ன புன்னகை செய்தால் என்ன? காசா, பணமா? இப்படியும் இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றடைந்தார். ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!

அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி  சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும், பார்க்க வேறு பெரிய அதிகாரி போல் இருக்கிறார், உண்மையிலேயே உயர் அதிகாரியாக இருப்பாரோ? என்று பலவாறாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்துக் கொண்டே தாமதமாக சாப்பிட்டதில் கேண்டீனில் வடை காலியானதுதான் மிச்சம். அதையும் நினைத்து இன்னும் அதிகமாக புலம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தார்.

மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை,  எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... என்று எங்கு சென்றாலும் அதே நெனப்பு... ரொம்பவே வெறுத்துப் போனார் போலீஸ். கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று எப்படியும் அவரிடம் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தார். 

அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது. இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டு 10 நிமிடம் முன்னதாகவே கிளம்பினார். 

அதே அண்ணாச்சி கடை முன்பாக அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். ரமேஷ் சட்டென்று ஒரு ரெடிமேட் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சார் வணக்கம் என்றார். பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது..  ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.


103 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

//

அவர் ஆபீஸ் ல துன்கதான போறார் .. அதுக்கு எப்ப போனா என்ன ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை
//

அப்ப நான் சொன்னது சரிதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது.. ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.
//

அஹா ஆப்பா..????

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றைய ஸ்பெஷல்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

Madhavan Srinivasagopalan said...

// உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார். //

இதை ஏன், நேத்திக்கே அவரு செய்யல..?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பணமே இல்லாத பார்ச அடிச்சு அவன் என்ன பண்ண போறான் .. உங்களைமாதிரி ஒரு கேடிச்வரனை சாரி கோடிச்வரனை பிடிச்ச போதுமே

மொக்கராசா said...

//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். //

இந்த இடத்துல இதயும் சேத்துக்கோங்க...

சில பல இட்லிகளை வாயில் அமுக்கிவிட்டு... வீட்டில் இருந்து கிளம்பினார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

//

அவர் ஆபீஸ் ல துன்கதான போறார் .. அதுக்கு எப்ப போனா என்ன ?/////

டைமுக்கு போனாத்தானே தூக்கம் நல்லா வரும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை
//

அப்ப நான் சொன்னது சரிதான்/////

நீங்க ஒரு அறிவு டிப்போண்ணே....!

மொக்கராசா said...

//ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம்.//

ஏன் இந்த காய்ஞ்சு போனா பன்னு,பொறை, முருக்கு இது எல்லாம் பிடிக்காதா அவருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
//பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது.. ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.
//

அஹா ஆப்பா..????//////

ஹஹ்ஹா.....

மொக்கராசா said...

//அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.//

மாட்டு சாணியை கூட விட மாட்டாரோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
// உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார். //

இதை ஏன், நேத்திக்கே அவரு செய்யல..?/////

இத அவர்கிட்டதான் கேட்கனும்.....

மொக்கராசா said...

//காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... //

மொத்ததில் அன்னைக்கு அவரு கக்கா போகலை

மொக்கராசா said...

//கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று//

இது எல்லாம் அவருக்கு என்ன புதுசா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
பணமே இல்லாத பார்ச அடிச்சு அவன் என்ன பண்ண போறான் .. உங்களைமாதிரி ஒரு கேடிச்வரனை சாரி கோடிச்வரனை பிடிச்ச போதுமே/////

அவனா போய் அடிச்சான், நம்மாளுதானே தானே போய் கமிட்டாகுனாரு........

மொக்கராசா said...

//அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் //

அன் லீமிடெட் மீல்ஸ் -விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்றைய ஸ்பெஷல்

சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் பேர வச்சு பேமஸ் ஆக்கலாம்ன்னு பார்க்குற. பொழச்சி போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

//அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் //

அன் லீமிடெட் மீல்ஸ் -விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....//

போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க :)

மொக்கராசா said...

//இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான்//


இதுக்கு ஏன் இவ்வள்வு கஷ்டம் அவரை சிரிப்பு போலிஸ் பிளாக்கை படிக்க சொல்லலாம்ல.....

மொக்கராசா said...

//போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க :)

பிள்ளைய படிக்க வைக்கலாம் குட்டியையுமா படிக்க வைக்கோனம்...(ஆட்டு குட்டி, மாட்டு குட்டி , நாய் குட்டி சொன்னேன்)

மொக்கராசா said...

//சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :) //

சரி சரி எங்களுக்கு மிச்சம் வையி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

//போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க :)

பிள்ளைய படிக்க வைக்கலாம் குட்டியையுமா படிக்க வைக்கோனம்...(ஆட்டு குட்டி, மாட்டு குட்டி , நாய் குட்டி சொன்னேன்)//

நீ முதல்ல பத்தாவது பாஸ் பண்ற வழிய பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். //

இந்த இடத்துல இதயும் சேத்துக்கோங்க...

சில பல இட்லிகளை வாயில் அமுக்கிவிட்டு... வீட்டில் இருந்து கிளம்பினார்.////

அது பின்னால இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம்.//

ஏன் இந்த காய்ஞ்சு போனா பன்னு,பொறை, முருக்கு இது எல்லாம் பிடிக்காதா அவருக்கு////

அது பேக்கரி முன்னாடி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

//சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :) //

சரி சரி எங்களுக்கு மிச்சம் வையி....//

எல்லாம் ஆயி போயிந்தி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.//

மாட்டு சாணியை கூட விட மாட்டாரோ/////

மாட்டுசாணிய மட்டுமா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... //

மொத்ததில் அன்னைக்கு அவரு கக்கா போகலை////////

பாய்ண்ட க்ரெக்டா கேட்ச் பண்ணிட்டியே.....?

NAAI-NAKKS said...

T.M-1000

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று//

இது எல்லாம் அவருக்கு என்ன புதுசா......../////

டெய்லி நடக்கறதுதானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///NAAI-NAKKS said...
T.M-1000///

திஸ் இஸ் ரிஜக்டட்....

NAAI-NAKKS said...

NANRI..THANGAL SOLLA VANTHA KARUTHU..
NANRAGA..PURINTHATHU...
PAKIRVUKKU NANRI..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் //

அன் லீமிடெட் மீல்ஸ் -விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....//////

ஓசிச்சாப்பாடுன்னாலே அது அன்லிமிட்டட் மீல்ஸ்தானே, இல்லேன்னா போலீஸ் ஒத்துக்க மாட்டாரு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்றைய ஸ்பெஷல்

சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :)/////

வேற எதுவும் கிடைக்கலியா?

NAAI-NAKKS said...

RAMESH-KU POTTIYA..NEENGA..NINATHUNAALATHAANE..INTHA THAGAVAL...UNGALUKKU..THERICHITHU.???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் பேர வச்சு பேமஸ் ஆக்கலாம்ன்னு பார்க்குற. பொழச்சி போ/////

ஆமா இவர் பேர்ல 5000 கோடி இருக்கு, அத வெச்சி பேமஸ் ஆகுறாங்க......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்றைய ஸ்பெஷல்

சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :)/////

வேற எதுவும் கிடைக்கலியா?//

அதான் இலவசமா கிடைச்சது :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கராசா said...

//அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் //

அன் லீமிடெட் மீல்ஸ் -விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....//

போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க :)////

ஒரு ஸ்கூல் வெச்சுக் குடு, படிக்க வைக்கிறோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
//இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான்//


இதுக்கு ஏன் இவ்வள்வு கஷ்டம் அவரை சிரிப்பு போலிஸ் பிளாக்கை படிக்க சொல்லலாம்ல...../////

அப்புறம் ஓசிச்சோறு கெடைக்காதே?

NAAI-NAKKS said...

AAMA..RAMESH-YODA ORIGINAL PHOTO ENGA KIDACHITHU.?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க :)

பிள்ளைய படிக்க வைக்கலாம் குட்டியையுமா படிக்க வைக்கோனம்...(ஆட்டு குட்டி, மாட்டு குட்டி , நாய் குட்டி சொன்னேன்)/////

ரமேசுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :) //

சரி சரி எங்களுக்கு மிச்சம் வையி....//////

இவன் அதையும் விடமாட்டான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கராசா said...

//சோலா பூரியும்,காய்ந்து போன ரொட்டியும் :) //

சரி சரி எங்களுக்கு மிச்சம் வையி....//

எல்லாம் ஆயி போயிந்தி//////

உனக்கு மட்டுமா, எல்லாத்துக்கும் ஆயிதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
NANRI..THANGAL SOLLA VANTHA KARUTHU..
NANRAGA..PURINTHATHU...
PAKIRVUKKU NANRI../////

யோவ் இங்க என்ன பாடமா நடத்திக்கிட்டு இருக்கோம்.....? புரிஞ்சிடுச்சாம்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////NAAI-NAKKS said...
RAMESH-KU POTTIYA..NEENGA..NINATHUNAALATHAANE..INTHA THAGAVAL...UNGALUKKU..THERICHITHU.???/////

வெளங்கிரும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
AAMA..RAMESH-YODA ORIGINAL PHOTO ENGA KIDACHITHU.?????//////

இதுக்காக ஏவிஎம் ஸ்டூடியோவுக்கா போகமுடியும், குத்துமதிப்பா தேடி எடுக்கறதுதான்........

மொக்கராசா said...

//தானே கமிட்டாகிய தானைத்தலைவன்... //

அவரு இப்ப தான் Committed ஆகியிருக்காரு.....

உங்க தலைப்பை பாக்கும் போது சரியான உள்குத்து, மரண குத்தா தெரியுதே......

NAAI-NAKKS said...

@ AVM...

ITHUKKU AVM OWNER-I SAGADICHIRUKKALAAM...

மொக்கராசா said...

//பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது.. ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்...//

அவரு ரெம்ப பிரில்லியண்ட் ஆச்சே எப்படி சிக்கினாரு.....

நிரூபன் said...

வணக்கம் தலைவா.

இப்போ தானே நீங்க பேஸ்புக்கில பதிவைப் போட்டீங்க.
அதற்குள்ளே ஒரு வழி பண்ணிட்டாங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

//

அவர் ஆபீஸ் ல துன்கதான போறார் .. அதுக்கு எப்ப போனா என்ன ?//

அண்ணே.. அப்போ இன்னைக்கு நீங்க படிக்கிற முதல் பதிவு இதுவா?

சும்மா கலாய்சுக்க கேக்கிறேன்,
கோவிச்சுக்க வேணாம்!

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை
//

அப்ப நான் சொன்னது சரிதான்//

அண்ணே..இடையில போடுற இன்று என் வலையில் என்ற வசனத்தை தவற விட்டு விட்டீர்களே!

நான் போட்டுக்கவா?

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்றைய ஸ்பெஷல்

கக்காவிலிருந்து கோப்பி தயாரிப்பது எப்படியா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்றைய ஸ்பெஷல்

குளிக்காமல் மணக்காமல் வாழ்வது எப்படி?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

போஸ்ட் போட்டு 52 நிமிஷம் கழிச்சு ட்விட்டர்ல லிங்க் குட்த்த தானைத்தலைவா வாழ்க.. யோவ் ராம்சாமி, எப்பவும் ட்விட்ட்டர்லதான்யா முதல் லிங்க் தரனும், அப்புறமாத்தான் திரட்டி.. ( ஒரு வேளை அதிக பிரசிங்கித்தனமா பேசிட்டமோ?::)

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

//

அவர் ஆபீஸ் ல துன்கதான போறார் .. அதுக்கு எப்ப போனா என்ன ?//

அப்புறம் ராஜா சார்..
நீங்க இங்கே வந்து நல்ல மாதிரி கமெண்ட் போடுங்கோ,
அப்புறமா நம்ம பழநி கந்தசாமி ஐயா ப்ளாக்கில போய் அண்ணன் பன்னிக்குட்டியை மறைமுகமா திட்டுங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
போஸ்ட் போட்டு 52 நிமிஷம் கழிச்சு ட்விட்டர்ல லிங்க் குட்த்த தானைத்தலைவா வாழ்க.. யோவ் ராம்சாமி, எப்பவும் ட்விட்ட்டர்லதான்யா முதல் லிங்க் தரனும், அப்புறமாத்தான் திரட்டி.. ( ஒரு வேளை அதிக பிரசிங்கித்தனமா பேசிட்டமோ?::)//////


கும்மில பிசியாகிட்டேன்.... ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிரூபன் said...
வணக்கம் தலைவா.

இப்போ தானே நீங்க பேஸ்புக்கில பதிவைப் போட்டீங்க.
அதற்குள்ளே ஒரு வழி பண்ணிட்டாங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//////

ஹஹ்ஹா....... சிப்பு போலீஸ்னா சும்மாவா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நிரூபன் said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

//

அவர் ஆபீஸ் ல துன்கதான போறார் .. அதுக்கு எப்ப போனா என்ன ?//

அப்புறம் ராஜா சார்..
நீங்க இங்கே வந்து நல்ல மாதிரி கமெண்ட் போடுங்கோ,
அப்புறமா நம்ம பழநி கந்தசாமி ஐயா ப்ளாக்கில போய் அண்ணன் பன்னிக்குட்டியை மறைமுகமா திட்டுங்கோ!//////

இப்பத்தான் தலைவரு கொஞ்சம் கொஞ்சமா திருந்திட்டு வர்ராரு, நீங்க அதையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே?

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்றைய ஸ்பெஷல்
//

ஆமா...பழநி கந்தசாமி அண்ணர் ப்ளாக்கில அண்ணர் என்ன சொல்லியிருக்கார் என்று பாருங்க.

http://swamysmusings.blogspot.com/2012/01/blog-post_19.html

நிரூபன் said...

ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். //

அண்ணே ஒரு அஞ்சா சிங்கத்தின் அரிய குணத்தினை இப்படிப் பப்ளிக்கில போட்டு உடைச்சிட்டீங்களே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிரூபன் said...
"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்றைய ஸ்பெஷல்
//

ஆமா...பழநி கந்தசாமி அண்ணர் ப்ளாக்கில அண்ணர் என்ன சொல்லியிருக்கார் என்று பாருங்க.

http://swamysmusings.blogspot.com/2012/01/blog-post_19.html//////

hahhaa இப்பத்தான் பார்த்தேன்... நமக்கு இதெல்லாம் புதுசா.....!

நிரூபன் said...

அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும்,//

ஒரு வேளை நம்ம ரமேசிற்கு ஆம்பளைங்க மேல ஒரு இது இருக்குமோ;-)))))))))))))

தலைவா கோவிச்சுக்காதே!

நிரூபன் said...

அவர் கையில் கத்தி இருந்தது.. ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.//

அடடா...ரமேஸிற்கு பல்பு கொடுத்திட்டாரா பிக் பாக்கெட் மனுசன்! கறுமம்! கறுமம்!

நிரூபன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
பணமே இல்லாத பார்ச அடிச்சு அவன் என்ன பண்ண போறான் .. உங்களைமாதிரி ஒரு கேடிச்வரனை சாரி கோடிச்வரனை பிடிச்ச போதுமே//

நம்ம தலைவருக்கு ஒரு சல்யூட்! இன்னைக்கு பதிவினை முழுமையாகப் படித்து முடிவினைக் கூடச் சிறப்பாக எழுதியிருக்கிறீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

சிரிப்பு போலீஸை கேவலமா கிண்டல் அடிச்சதை கண்டிக்கறேன் :) (அவருக்கு மேரேஜ் வேற ஆகப்போகுது)

நிரூபன் said...

அண்ணே கதையில லைட்டா பின் நவீனத்துவ வாடை அடிக்குது.

நிரூபன் said...

மொக்கராசா said...
//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். //

இந்த இடத்துல இதயும் சேத்துக்கோங்க...

சில பல இட்லிகளை வாயில் அமுக்கிவிட்டு... வீட்டில் இருந்து கிளம்பினார்.//

அண்ணே...ரமேஷ்!
நீங்க சாப்பிட்டுக் கொண்டே வெளியே கிளம்புவீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
சிரிப்பு போலீஸை கேவலமா கிண்டல் அடிச்சதை கண்டிக்கறேன் :) (அவருக்கு மேரேஜ் வேற ஆகப்போகுது)/////

அப்போ இன்னும் கேவலமா கிண்டல் அடிக்கனுமா? அதானே சொல்ல வந்தீங்க?

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
சிரிப்பு போலீஸை கேவலமா கிண்டல் அடிச்சதை கண்டிக்கறேன் :) (அவருக்கு மேரேஜ் வேற ஆகப்போகுது)//

இதென்ன கொடுமை தலைவா..
அவருக்கு ஆல்ரெடி மாரேஜ் ஆகி
பேரப் புள்ளைங்களும் இருப்பதா ஊரில பேசிக்கிறாங்களே!
இந்த நேரத்தில இன்னொரு மாரேஜ்ஜா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நிரூபன் said...
அண்ணே கதையில லைட்டா பின் நவீனத்துவ வாடை அடிக்குது.////

ஆஹா அதுவும் வந்துடுச்சா....?

goundamanifans said...

//// NAAI-NAKKS said...
NANRI..THANGAL SOLLA VANTHA KARUTHU..
NANRAGA..PURINTHATHU...
PAKIRVUKKU NANRI../////

என்னமோ சொல்ல வர்றாரு..

ஜீ... said...

//எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது//
ஒண்ணு ஊசிச் சாப்பாடு அல்லது ஓசிச் சாப்பாடா?

ஜீ... said...

//ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!//
புன்னகைய ஒரு முதலீடாவே வச்சிருக்கார் போல!

ஜீ... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நிரூபன் said...
அண்ணே கதையில லைட்டா பின் நவீனத்துவ வாடை அடிக்குது.////

ஆஹா அதுவும் வந்துடுச்சா....?//

அந்த மேட்டர் வரலயே கதைல! உங்க கதையைப் படிக்கும்போதே ஒரு பிரமை வருது மாம்ஸ்! :-)

K.s.s.Rajh said...

வணக்கம் தல
சிரிப்பு போலிஸ் ரமேஸ் அண்ணன் உண்மையாவே அப்படித்தானா? டீக்கடையில் வீசி எறிவைதை எடுத்துவைத்துக்கொள்வாரா? எனக்கு அவரை பற்றி தெரியாது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜீ... said...

நான் இலக்கியம் எதுவும் படித்ததில்லை.
முதன்முறையா இந்தக்கதைதான் படிக்கிறேன்.
நிச்சயமா இது உலக இலக்கியங்கள்ல சேர்க்கப்பட வேண்டிய கதை!

ஒரு பரவச நிலையிலேயே இந்தக் கமெண்டை எழுதுகிறேன்! :-)

K.s.s.Rajh said...

கடைசியில் வழிப்பறி கொள்ளைக்காரிடம் பல்பு வாங்கிய பதிவரும் இவரிடமா கொள்ளை அடித்தேன் என்று மனம் திருந்திய திருடனும் என்று இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடுங்க உங்க ஸ்டைலில்

ViswanathV said...

சார்,
சினம் கொண்ட
சிரிப்பு போலீஸ்
சீரியஸா வந்து உங்க ப்ளாக்க
சிதச்சிடுவாறு, பரவால்லியா ?

மனசாட்சி said...

ஹா ஹா ஹா பன்னியாரின் (ஆனந்த தொல்லைக்கு) லொள்ளுக்கு அளவே இல்லை
நடத்துங்கள் ஸ்டார்ட் மியூசிக்.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

அண்ணே, கதையப் படிச்சு கண்ணு கலங்கிருச்சு! சூப்பர்ணே!

சுவடுகள் said...

இதெல்லாம் சரித்திரத்துல வரும்.புஸ்தகத்துல படிப்பாய்ங்க.

Yoga.S.FR said...

வணக்கம் ப.ரா.சார்!வன்மையாக கண்டிக்கிறேன்,ரமேஷை தலை நிமிர்ந்து நடக்கமுடியாத அளவுக்கு கிண்டல் செய்திருப்பதை!தவிரவும்,ஆபீசில் யார் தான் தூங்கவில்லை?இப்படியாக வெள்ளையும்,சொள்ளையுமாக அரச அதிகாரி ஒருவரை அனுப்பியா அவரை மிரட்ட வேண்டும்!ஏலவே பேதி கண்டவரை மீண்டும்....................................!முடியல!!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.
//

100% true//

நிருபன் அவர்களே இதுல நான் எங்கே பன்னிகுட்டி அண்ணன் பெயரை சொன்னேன் ?
எனது பதிவில் பல மொக்கைக்குதான் அதிக கமெண்ட் வந்தது அதனால் அப்படி சொன்னேன் ..
ஏன் வீனா எங்களுக்குள் பிரிவை உண்டக்குகின்றிர்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ராமசாமி அண்ணே ..மன்னிக்கவும் பதிவுக்கு சமந்தம் இல்லாமல் பின்னுடம் இட்டமைக்கு ..

MANO நாஞ்சில் மனோ said...

ஆனாலும் சிப்புபோலிசின் தகிரியத்தை பாராட்டனும்ய்யா......

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் கத்தி காட்டி என்னா பிரயோசனம், நிச்சயம் பணம் கிடைக்காது ஏன்னா நாள் தோறும் அய்யா போறது ஓசி டிக்கேட்டுல அப்புறம் வேணும்னா ஊசிப்போன வடை கிடைச்சிருக்கும் கள்ளனுக்கு ஹி ஹி...

சசிகுமார் said...

பாவம் யாரு திருடனா??? போலீசா???

ஆரூர் மூனா செந்தில் said...

செம மொக்கை, சிரிப்பே வரல, அவரு யாரு உங்க அடிவருடியா?

இப்படிக்கு

டயாபர் வாயன் பிரின்ஸ் முன்னேற்ற சங்கம்

(இது பற்றிய மேலும் விவரங்களுக்கு எங்களின் எதிர்க்கட்சி தலைவர் மெ.ப சிவாவை தொடர்பு கொள்ளவும்)

Anonymous said...

லொள்ளு -:)

FOOD NELLAI said...

ரசிக்கும் நகைச்சுவை. இன்னைக்கு ரமேஷா! பாவங்க.

FOOD NELLAI said...

அதெப்படி அந்த அதிகாரி(!), சிரிப்பு போலீஸை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்தார்?

veedu said...

விதி வலி'யது!

Chitra said...

ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்...... ஹா,ஹா,ஹா, ஹா, செம!

பட்டாபட்டி.... said...

:-)

பட்டாபட்டி.... said...

பார்த்தியா.. நானும் சிரிச்சு வெச்சிருக்கேன்..

:-)

சிராஜ் said...

சகோ செந்தில்,

/* டயாபர் வாயன் பிரின்ஸ் முன்னேற்ற சங்கம் */

யுவகிருஷ்ணாவ விடறமாதிரி ஐடியா இல்ல போலிருக்கு????

vinu said...

vaalthukkal

Jey said...

ippathaan ponnu kudukka oruthaR SAMMATHUICHIRUKKAAR, kudumpasthan aakura neraththula en panni intha kola-veri!!!!!!!!!!!!!!:)

Lakshmi said...

இங்க என்னா நடக்குது?

காட்டான் said...

;-)