Monday, September 26, 2011

சூடான தலைப்புகளும் ஐடியாக்களும் விற்பனைக்கு....

அன்பார்ந்த வாலிப வயோதிக புதிய பதிவர்களே... நீங்க உடனே பிரபல பதிவர்கள் ஆகனுமா? நீங்க ஏற்கனவே பிரபல பதிவரா? உங்க பதிவுகள் சீக்கிரம் பிரபலமாகனுமா....  எங்க கிட்ட வாங்க...... 

பிரபல திரட்டிகள்ல எப்படி பதிவுகள் உடனே பிரபலமாகுதுன்னு பல மாசங்களா உக்காந்து ஆராய்ச்சி பண்ணி அதுக்கேத்த மாதிரி தலைப்புகள் செலக்ட் பண்ணி வெச்சிருக்கோம். தலைப்பை நியாயப்படுத்துற மாதிரி மேட்டரும் ரெடி பண்ணியாச்சு, அதுனால திரட்டிகள் கூட பதிவை நீக்க யோசிப்பாங்க. நீங்க தைரியமா எங்ககிட்ட தலைப்புகளை வாங்கி களத்துல இறங்கி அடிச்சு ஆடுங்க..!


இன்னிக்காவது அது நடக்குமா?



பிரபல பதிவராகவேண்டுமா? எங்களிடம் வாங்க.......!

தலைப்புகளை வாங்குங்க....  ஹிட்சை அள்ளுங்க.......


கீழ்காணும் பதிவுத் தலைப்புகள் (வித் ஃப்ரீ ஐடியா) விற்பனைக்கு:

1. தினமும் அது முக்கியமா? 
இந்த தலைப்பைப் போட்டுட்டு சாப்பாடு, தண்ணி, டீ, காபின்னு எத பத்தி வேணா எழுதலாம். அவ்ளோ ஈசியான தலைப்பு. ஆனா பதிவு சூப்பர் ஹிட்டாகிடும் அது மட்டும் கன்பர்ம்.

2. அதை பிடிக்கவில்லையா?
கேரட் ரொம்ப சத்தான காய், ஆனா அதைப் பிடிக்கலேன்னா பீட் ரூட்டை பயன்படுத்துங்கன்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்.

3. பெண்களும் அதுக்காக காத்திருப்பார்களா?
இப்போ பெண்கள் துணிவாங்க போனா நாம காத்திருக்கிறோம், ஆனா நாம வாங்கப் போனா அவங்க காத்திருப்பாங்களா? எப்படி தலைப்புக்கு மேட்சா மேட்டர் ரெடியா? இத மட்டும் போட்டுப் பாருங்க, அப்புறம் நீங்க எங்கேயோ போய்டுவீங்க....

4. ஹன்சிக்காவை காதலிக்க மறுத்த பதிவர்
அந்த பிரபல பதிவர் ஹன்சிக்காவ காதலிக்க முடியாதுன்னுட்டார் ஏன்னா அவருக்கு அஞ்சலி மட்டும்தான் புடிக்குமாம்னு எழுதிடலாம். அப்புறம் ஹிட்ஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடாது?

5. தமிழர்கள் செய்வது சரியா?
தமிழர்கள் எத்தனையோ அக்கிரமம் செய்றோம் கொஞ்சம் நஞ்சமா ஈசியா எதையாவது ஒண்ணை எடுத்துப் போட்டு ஒப்பேத்திடலாம், ரோட்ல எச்சி துப்புறது, ஒண்ணுக்கு போறது, பிட்டுப்பட போஸ்டர் பாத்துக்கிட்டே வண்டி ஓட்டறதுன்னு எதையாவது போட்டு சமாளிச்சிக்கலாம். இல்லேன்னா கொஞ்சம் காரமா அரசியலை தூவி விட்டு வெள்ளாடலாம். அப்படியே சீரியசா நாலு கமெண்ட் வரும், அதுக்கு பதில் சொல்லி இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்.

6. அணைப்பதற்கு அது வேண்டுமா?
இந்த தலைப்புக்கு லைட்டை அணைப்பதற்கு சுவிட்ச் வேணுமான்னு எழுதி ஜமாய்ச்சிடலாம்.

7. நடு இரவில் கதற கதற...
செம தலைப்புல்ல? நடு இரவுல கதற கதற மூட்டைப் பூச்சிய நசுக்குனேன்னு வெலாவாரியா நாலு பாராவுக்கு எழுதிட்டீங்கன்னா அப்புறம் பாருங்க ஹிட்சை.... சர்வரே பிச்சுக்கும்...........!


இதுல ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணி பதிவா போட்டீங்கன்னா நீங்களும் உங்க பதிவும் பிரபலமாகுவது கன்பர்ம். அப்படி பிரபலம் ஆகலேன்னா உடனடி பணம் வாபஸ்......!

உடனே உங்கள் தலைப்புகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.... இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். 

அணுக வேண்டிய முகவரி:
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!


எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!


!


221 comments:

«Oldest   ‹Older   201 – 221 of 221
shanmugavel said...

நீங்க ஏமாத்தப் பாக்கறீங்க! அது பிரச்சினையாமே?

Yoga.s.FR said...

இப்ப "தலைப்பு" எல்லாம் கூட வினியோகம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா?அது கூட ப்ரீயாமில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// shanmugavel said...
நீங்க ஏமாத்தப் பாக்கறீங்க! அது பிரச்சினையாமே?///////

அது பதிவுகுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாம இருந்தாத்தானாம்.... நாங்கதான் தலைப்புக்கேத்த மேட்டரையும் ரெடி பண்ணி கொடுக்கிறோமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.s.FR said...
இப்ப "தலைப்பு" எல்லாம் கூட வினியோகம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா?அது கூட ப்ரீயாமில்ல?/////

ஆமாங்க அதுவும் ஃப்ரீதான்....

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரெவெரி said...
ரூம் போட்டு 'அத' யோசிச்சீங்களோ...///////

ஆமா அதுக்குத்தானே ரூம் போடுறதே?///

அவுரு எந்த அத சொல்றாரு, இவுரு எந்த அத சொல்றாரு, அதே விளங்கமாட்டேங்குதே

Philosophy Prabhakaran said...

இன்னைக்கு 200வது வடையையும் தாண்டி கல்லா கட்டிருச்சு போல...

Philosophy Prabhakaran said...

சுருக்கமா சொல்லனும்ன்னா தலைப்புல அதுன்னு ஒரு வார்த்தையை வச்சிட்டு எதை பத்தி வேணும்னாலும் எழுதலாம்...

K said...

ஹா ஹா ஹா பாஸ்! சிரிச்சு சிரிச்சு களைத்தே போனேன்! செம காமெடி பதிவு! ஐடியாக்களும் அருமை!

நான் ஒரு பதிவு போடப்போறேன்!

தலைப்பு - ‘ அது ‘ சுருங்கியிருந்தால் பெண்களுக்குப் பிடிக்காதாமே?

என்று தலைப்பு போட்டுவிட்டு, குடை பற்றி எழுதப் போறேன்! அதாவது குடை பிடித்துக்கொண்டு போகவே எப்போதும் பெண்கள் விரும்புவார்கள்!

அதனை சுருக்கி வைத்துவிட்டு, வெயிலில் காய்ந்துகொண்டு போவதை விரும்ப மாட்டார்கள்!

எப்புடி? பிய்ச்சுக்கிட்டு ஓடுமா? ஹிட்ஸ் எகிறுமா?

Anonymous said...

'அது' பற்றி எழுதி அமோக ஓட்டுக்களை அல்ல ஐடியா குடுத்த தங்களை 'அது இது எது' நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட்டாக நியமிக்கிறோம். எனக்கு ஒரு சந்தேகம்ணே.. 'அது' பத்தி எழுதுறவங்க எல்லாம் அஜித் ரசிகர்களா இருப்பாங்களோ?

Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிரபலம்ன்னா என்னன்னே ?///////

அது ஒரு ஆபாச வார்த்தைண்ணே.....//

பிரபலம் ஆக தாமஸ் ஆல்வா எடிசன் படத்துக்கு முன்னால குந்திக்குனு ஆறுகால பூஜை செஞ்ச ஆளுங்களை இப்படி பொசுக்குனு நசுக்கிபுட்டீங்களே....என்ன இருந்தாலும் நீங்களும் ஒரு (அதி)பிரபல பதிவர். மறந்துடாதீங்க.

Anonymous said...

//! சிவகுமார் ! said...
'அது' பற்றி எழுதி அமோக ஓட்டுக்களை அல்ல//

அள்ள..

M.R said...

நல்லா தான் ஐடியா குடுக்கிரீங்க

ஹையோ ஹையோ

இன்னும் நிறைய தலைப்பு இருக்கு

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணே,

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

பதிவுலக யதார்த்தத்தினைப் புட்டு வைத்திருக்கிறீங்க.
இந்த அது வரிசையில் மன்மோகன் சிங் பற்றிய கோபப் பதிவுகளையும் சேர்த்திருக்கலாம்.

அவ்வ்வ்வ்வ்வ்

அப்புறமா இப்ப அது போயி, அந்த மாதிரி என்றோர் தலைப்பும் வந்தாச்சா..

நிரூபன் said...

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா பாஸ், பதிவெழுத வந்து மூன்றாவது மாதத்தில நான்
எனக்கு டாய்லெட் போக கஸ்டமா இருக்கு என்பதை ஒரு பதிவா எழுதினேன். அப் பதிவிற்கு
”எனக்கு அது போக மாட்டேங்குது” என்று தலைப்பும் வைத்தேன்.

அதனோட பின் விளைவுகள் தான் இந்தத் தலைப்புக்களாக இருக்குமோ...

ஏன்னா நான் மூன்றாவது மாசத்தில் ஒரு பதிவிற்கு மாத்திரம் தான் அது என்று தலைப்பு வைத்தேன்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


அப்புறமா "அந்த மாதிரி" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பதனை விளக்கியும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

ஆனால் இப்போதெல்லாம் பல பதிவுகள் அந்த மாதிரித் தலைப்பைத் தாங்கி வருகின்றன.

IlayaDhasan said...

'அத' மட்டும் எப்படி கரெக்டா புடிச்சீங்க

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

Unknown said...

பன்னிக்குட்டி சார் அந்த கதற கதற தலைப்பு செம சிரிப்பு ROFL

Unknown said...

//நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!//
மிதிச்சாச்சு

சாம் ஆண்டர்சன் said...

அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்

http://spoofking.blogspot.com

Anonymous said...

ஹஹஹா தொடர்ந்து இப்படியான ஐடியா தலைப்புக்களை வழங்குங்கள் பாஸ் ))))

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

Unknown said...

இப்படி தலைப்பு வைக்கலாம் அப்படி தலைப்பு வைக்கலாம் என்று எழுதியே இத்தனை பேரை இழுத்துக்கிட்டீங்களே! சும்மா சொல்லக்கூடாது அருமையான ஐடியாக்கள். [இதை கிண்டலுக்காக (நகைச்சுக்காக)எழுதப்பட்ட பதிவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்}]

«Oldest ‹Older   201 – 221 of 221   Newer› Newest»