Wednesday, September 14, 2011

பூமியைத் தேடி... தொடர்கதை..




அறிவியல், குறிப்பா வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிப்பதிலும் விவாதிப்பதிலும் எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு. வானியலில் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மங்கள் ஏராளம். நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாத பிரம்மாண்டங்களை வானவெளி தன்னில் கொண்டிருக்கிறது. இந்த அண்டவெளியில் பூமியும், மனிதனும் ஒரு தூசியின் அளவு கூட முக்கியத்துவம் இல்லாதவையாக தோன்றக் கூடிய மாபெரும் பிரம்மாண்டம் அது.  எத்தனையோ பில்லியன் நட்சத்திரங்களும், கேலக்சிகளும்,  கருந்துளைகளும்.... மனிதனின் தொலைநோக்கு சக்தி அதிகரிக்க அதிகரிக்க அண்டவெளியின் முடிவிலா எல்லையை நோக்கி நம் பார்வை விரிவடைந்து கொண்டே போகிறது. 

அதில் சில கற்பனைகளை சேர்த்து ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற ஆவல் ப்ளாக்கரில் நுழைந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. இப்போது அதை செயல்படுத்தி இருக்கிறேன். இந்தத் தொடரை டெரர் கும்மி ப்ளாக்கில் எழுதுகிறேன். இது Hunt for Hint என்ற புதிர் போட்டி நடத்தப்பட்டதே அந்த ப்ளாக்தான். லிங் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்து, கருத்தும் கூறலாமே. இங்கே நம்ம கடையில் வழக்கம் போல் நகைச்சுவை, நக்கல் பதிவுகள் தொடரும். 

!

32 comments:

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வணக்கம் வணக்கம்........

நிரூபன் said...

அண்ணே தப்பு நடந்து போச்சண்ணே,

இந்தப் பதிவு டெரர் கும்மியில் தானே தொடராக வரனும்,,.

இருங்க விரிவாகப் படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

அதில் சில கற்பனைகளை சேர்த்து ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற ஆவல் ப்ளாக்கரில் நுழைந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. இப்போது அதை செயல்படுத்தி இருக்கிறேன். இந்தத் தொடரை டெரர் கும்மி ப்ளாக்கில் எழுதுகிறேன். இது Hunt for Hint என்ற புதிர் பொட்டி நடத்தப்பட்டதே அந்த//

அட...இது ட்ரெயிலரா..

சாரிண்ணே...
நான் ஏதோ மீளவும் இங்கே போட்டிருக்கிறீங்க என்று நெனைச்சிட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
அதில் சில கற்பனைகளை சேர்த்து ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற ஆவல் ப்ளாக்கரில் நுழைந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. இப்போது அதை செயல்படுத்தி இருக்கிறேன். இந்தத் தொடரை டெரர் கும்மி ப்ளாக்கில் எழுதுகிறேன். இது Hunt for Hint என்ற புதிர் பொட்டி நடத்தப்பட்டதே அந்த//

அட...இது ட்ரெயிலரா..

சாரிண்ணே...
நான் ஏதோ மீளவும் இங்கே போட்டிருக்கிறீங்க என்று நெனைச்சிட்டேன்.
//////

ஆமா நிரூபன், இன்னும் அதிக வாசகர்களை சென்றடையலாம்னு இங்கேயும் கதையை அறிமுகம் பண்ணி இருக்கேன்

நிரூபன் said...

அண்ணே, அப்போ நான் உங்களை டெரர் கும்மியில் மீட் பண்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது Hunt for Hint என்ற புதிர் பொட்டி நடத்தப்பட்டதே அந்த ப்ளாக்தான்.//

எந்த பொட்டி மச்சி. ஸ்பெக்ட்ரம்ல வாங்கினிய அந்த போட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராஸ்கல் நல்லா படிச்சுப்பாரு........

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துங்க நடத்துங்க மக்கா..

MANO நாஞ்சில் மனோ said...

vaaztthukkal...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
நடத்துங்க நடத்துங்க மக்கா..


vaaztthukkal...
////////

நன்றீங்கோ..........

K said...

வணக்கம் சார்!

நீங்க வானியல் துறையில் ஆரவமுள்ளவரா இருக்கீங்க! கோள்கள், நட்சத்திரங்கள் பற்றி போதிய அறிவுடையவரா இருக்கீங்க! என்னோட ஒரு குழப்பத்தை தீர்த்துவையுங்க சார்!

எனக்கு இது நிஜமாவே ஒரு குழப்பம்! இன்னிக்குத் தீர்வு வேணும் சார்!

அதாவது பால் வீதிகளிலும், இதர சுற்றுப்பாதைகளிலும் சுற்றிவரும் கோள்களும், ஏனைய நட்சத்திரங்களும், பூமியில் உள்ள மனிதனின், வாழ்க்கையில் என்னவிதமான தாக்கத்தைக் கொடுக்கும்?

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அது தீர்மானிக்குமா? உங்கள் கருத்து என்ன? இது உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@மணியண்ணே,

அன்றாட வாழ்வில் இந்த நட்சத்திரங்களால் எந்த மாற்றாத்தையும் உண்டு பண்ண முடியாது என்பதே என் கருத்து. ஏனென்றால் பண்டைய கால கணிப்புகள் பிறந்த நேரத்தை கொண்டு ஒருவனை கிரகங்கள் எவ்வாறு பாதிக்க கூடும் என்று கணிப்பதாகவே உள்ளன. ஒருவன் பிறந்த நேரத்தில் குறிப்பிட்ட நிலைகளில் இருக்கும் கிரகங்கள் அவனை வாழ்முழுதும் பாதித்துக் கொண்டே இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இவையெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இதுதான் எனது கருத்து.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

K said...

@மணியண்ணே,

அன்றாட வாழ்வில் இந்த நட்சத்திரங்களால் எந்த மாற்றாத்தையும் உண்டு பண்ண முடியாது என்பதே என் கருத்து. ஏனென்றால் பண்டைய கால கணிப்புகள் பிறந்த நேரத்தை கொண்டு ஒருவனை கிரகங்கள் எவ்வாறு பாதிக்க கூடும் என்று கணிப்பதாகவே உள்ளன. ஒருவன் பிறந்த நேரத்தில் குறிப்பிட்ட நிலைகளில் இருக்கும் கிரகங்கள் அவனை வாழ்முழுதும் பாதித்துக் கொண்டே இருக்கும் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இவையெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இதுதான் எனது கருத்து. ////////

மிக்க நன்றி சார்! இதுபோன்ற அறிவியல்கருத்துக்கள் தான் சார் இன்றைய காலத்துக்குத் தேவை!

இவைபற்றி நாம் இன்னும் இன்னும் விவாதிக்கலாம்! ரொம்ப நன்றி சார்!

Unknown said...

வணக்கம் பாஸ்! அங்கே தொடர்கிறேன்!

செங்கோவி said...

நானும் அண்ணன் மப்புல மாத்திப் போட்டுட்டாரோன்னு ஓடி வந்தேன் நிரூ..

அவர் தெளிவாத்தான் இருக்கார்.

செங்கோவி said...

பூஜாவைத் தேடி தொடர் என்னாச்சுண்ணே..க்ளைமாக்ஸ் சுபமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
பூஜாவைத் தேடி தொடர் என்னாச்சுண்ணே..க்ளைமாக்ஸ் சுபமா?///////

இல்ல இன்னிக்குத்தான் அது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
வணக்கம் பாஸ்! அங்கே தொடர்கிறேன்!//////

வாங்க ஜீ......

செங்கோவி said...

அடடா...நல்ல பொறுமைசாலி தான் நீங்க.

ஏன் இப்படி ஆஃபீஸ் நேரத்துல பதிவு போடறீங்க? உங்களுக்கு ஆஃப் டே தான் டூட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////செங்கோவி said...
அடடா...நல்ல பொறுமைசாலி தான் நீங்க.

ஏன் இப்படி ஆஃபீஸ் நேரத்துல பதிவு போடறீங்க? உங்களுக்கு ஆஃப் டே தான் டூட்டியா?//////

அதுதான் ஈசி..... வீட்லன்னா டீவி தொந்தரவு அதிகமா இருக்கு.....ஹி...ஹி...

Rizi said...

//இங்கே நம்ம கடையில் வழக்கம் போல் நகைச்சுவை, நக்கல் பதிவுகள் தொடரும்.//

இதுதான் உங்ககிட்ட புடிச்சது,,

Rizi said...

உங்க அந்தப்பதிவையும் படிச்சுப்பார்க்கிறேன்

Riyas said...

ஓக்கே சார்.. அங்க போய் படிக்கிறேன்.. எனக்கும் அறிந்து கொள்ள ஆவல்தான்,,

பகிர்விற்கு நன்றி..

Unknown said...

நீங்க கலக்குங்க மாப்ள!

Anonymous said...

Space க்கு இலவசமா டூர் கூட்டிட்டு போறதா கேள்வி பட்டு வந்தேன்...Take Diversion ன்னு விவேக் ஸ்டைல சொல்லீட்டிங்க...:)

M (Real Santhanam Fanz) said...

///அறிவியல், குறிப்பா வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிப்பதிலும் விவாதிப்பதிலும் எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு///

அண்ணே நீங்க ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜாண்ணே...இருங்க அங்கயும் போயி படிச்சிட்டு வாறோம்!!

M (Real Santhanam Fanz) said...

//செங்கோவி said...
பூஜாவைத் தேடி தொடர் என்னாச்சுண்ணே..க்ளைமாக்ஸ் சுபமா?//
செங்கோவிண்ணே அந்த பூஜாக்கா நடிச்ச கில்மா பட டி.வி.டி யை தேடியா?

Unknown said...

நீங்கள் அறிவியல் சார்ந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர் என்பது உங்களுடைய பல பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடருக்காக வாழ்த்துகள்.(நீங்கள் வேதியியலாளரா?)

உணவு உலகம் said...

ரொம்ப லேட்டாத்தான் வர முடிந்தது.அங்கு சென்று படித்து அறிந்து கொள்கிறேன். நன்றி.

Madhavan Srinivasagopalan said...

me the first..