Saturday, July 2, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. இதே மாதிரி சினிமாக்காரங்களால கண்டுக்காம வீணாக்கப்பட்ட, சில பல  அம்சமான நடிகைகள் லிஸ்ட்ட ஏற்கனவே ஒரு பதிவுல போட்டிருந்தேன் (பழைய பதிவு ஒண்ண படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு?). அதப் படிச்சிப்புட்டு அப்பவே பல பேரு கதறி அழுதாய்ங்க. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகைகள கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)


1. சிந்து மேனன்




அழகுன்னா அழகு குடும்பப்பாங்கான அழகு, அப்படி ஒரு அழகான முகம், அதில் வரும் அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க. ஆனா என்ன பிரயோசனம்? அங்கொண்ணும் இங்கொண்ணும் சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க. சமீபத்துல ஈரம்னு ஒரு படத்துல நடிச்சிருந்தாங்க, அந்தப் பாட்டுல கூட ரொம்ப நல்லா இருப்பாங்க சிந்து. நம்ம மாங்கா மண்டைசுக்கு அப்படியும் புடிக்கல...!


2. வேகா (ஷோபிக்கண்ணு)


பசங்க படத்துல ஷோபிக்கண்ணுவா நடிச்ச வேகாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் (எனக்கு மட்டுமா?). பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி தோற்றம், உணர்ச்சிக் குவியலாய் முகம், தெளிந்த நீரோடை போல் நடிப்பு. அதிலும் அந்த புருவங்கள மேலும் கீழுமாய் அசைச்சி பார்க்குமே ஒரு பார்வை... சான்ஸ்லெஸ்..... ! பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க, வேற என்ன சொல்றது?
ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்.




3. சஞ்சனா


ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க, ஆனா அதுலல்லாம் ஒண்ணுமில்லீங்கோ, கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...)


4. மல்லிகா கபூர்



மென்மையான அழகு, அற்புதத்தீவு படத்துல இளவரசி வேடத்துல நிஜமாவே ஒரு இளவரசி மாதிரி இருந்தாங்க, அத்தனை அழகு.......! அழகான ஸ்ட்ரக்சர், அதற்கேத்த சூப்பர்ப் முகவாக்கு, ம்ம்...... யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ? நாம அட்லீஸ்ட் படத்துலேயாவது பாத்து ரசிக்கலாம்னா நமக்கு அதுக்கும் கொடுத்து வெக்கலியே?


5. விமலா ராமன்



செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? ஹோம்லி முகம், கவர்ச்சியான உடல்வாகுன்னு வெரி டேஞ்சரஸ் காம்பினேசன், என்ன இருந்தும் என்ன பயன்,வழக்கம் போல (?) மனவாடுகள் அள்ளிட்டு போய்ட்டாங்க, இப்போ தெலுங்குல கலக்கிட்டு இருக்காங்க............ ! 


6. சமிக்‌ஷா 



அறிந்தும் அறியாமலும் படத்துல, பாவாடை தாவணியோட ஒரு காட்சில, அப்புறம் மாடர்ன் மங்கையா படம் பூரா.. சும்மா சொல்லக்கூடாதுங்க, நல்லாத்தாங்க இருந்துச்சு. நல்ல ஸ்லிம் பாடி, அதற்கேற்ற முக அழகு வேற என்னங்க வேணும்? ஆனா ஏன் நம்மாளுங்க படத்துல போட மாட்டெங்கிறானுங்க? ஒண்ணுமே புரியலியே?


7. அபிதா



சேது படத்த மறக்க முடியுமா, இல்ல அதுல நடிச்ச அபிதாவத்தான் மறக்க முடியுமா? எப்படி ஒரு ஹோம்லி அழகு? அபிதாவோட முகத்துக்கே எவ்வளவு வேணாலும் கொட்டி கொடுக்கலாம். அம்மிணி ஒரே ஒரு எக்குத்தப்பான மலையாள படத்துல நடிச்சிருச்சுங்க, அதுவும் சேது வரமுன்னாடி சான்ஸ் தேடிட்டு இருந்தப்ப நடிச்சதாம் அது.  சேது ஓடுனதுக்கப்புறம் அந்தப் படத்த தூசிதட்டி எடுத்து ரிலீஸ் பண்ணி அபிதாவ டோட்டலா காலி பண்ணிட்டானுங்க ராஸ்கல்ஸ்....! (அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)

ஓகே லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கு, இத்தோட முடிச்சுக்குவோம். கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!


209 comments:

«Oldest   ‹Older   201 – 209 of 209
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
1. சிந்து மேனன்//

பாஸ் நெசமாவே, சிந்து மேனன் அழகாக தான் இருக்கிறா,
தமிழ் சினிமாவிற்கு இவரைப் பிடிக்கலை என்று நினைக்கிறேன்,
ஒரு வேளை கவர்ச்சி காட்டாம இருந்திருப்பாவோ.///////

ஹஹஹா உண்மைதான் நிரூபன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்//

அப்போ நம்ம பன்னியும் காதல்ல விழுந்திட்டாரா.////////

பசங்க படம் பாருங்க பாஸ், உங்களுக்கும் அந்த ஃபீலிங் வரும்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...//

ஹா....
பன்னி நம்மளுக்கு விருந்து வேறு வைக்கிறாரே,

அடிச்சுப் பார்த்திட்டாப் போச்சு.///////

என்ன விருந்து நல்லா இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சே.குமார் said...
அண்ணா... அலசி... ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற வாய்ப்பிருக்கு... தொடருங்கள்...
///////

ஆஹா அப்போ இதே மாதிரி வரிசையா ரிலீஸ் பண்ணிடுவோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Entertainment said...
Enna evalavu panam koduthanga eppadi directorungala pathi pyesa avangala vilagi ponanga nadikka soldra charecterla nadikalana appadithan
/////////

ரைட்டு விடுங்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////arunvetrivel said...
அட்ரா அட்ரா நாக்க முக்க..சுப்பர்..
மீட்டருக்கு மேல ஏதாவது போட்டு கொடுங்க தலைவா..சீக்கிரம்..எனக்கு பின்னால நிரைய பேரு வருசைக்கட்டி நிக்குராங்க தலைவா...////////

ஹஹஹஹா வாங்க வாங்க......

சரியில்ல....... said...

அடபாவிகளா... பதிவ போட்டு கும்மியடிச்சு கடைய சாத்திட்டு போயிட்டானுகளே... (206 கமெண்ட்ஸ்..) நான் இங்க வந்து கமெண்ட் போட்டு என்ன பிரயோசனம்...

Anonymous said...

கைவிடப்பட்டோருக்கு கைகொடுக்கும் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க

Unknown said...

என்னதான் அழகா இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகையின் ’ராசி’ தான் மிகவும் முக்கியம்.’ராசி மிக முக்கியம் அமைச்சரே!’

«Oldest ‹Older   201 – 209 of 209   Newer› Newest»