Monday, July 18, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய வில்லன்ஸ்...


தமிழ்சினிமா பல்வேறு துறைகளில் வெகுவேகமாக வளர்ச்சி நடை போட்டாலும், இன்னும் கைவிடமுடியாமல் இருக்கும் சில விஷயங்கள் காதல், வில்லன், சண்டை, ஹீரோயிசம்! அதில் வில்லன்களை வைத்துக் கொண்டு நம்மவர்கள் பண்ணும் அநியாயங்கள் இருக்கே, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் அதைவிட வேறு காமெடியே தேவையில்ல.




ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள் இருந்தன. மொட்டைத்தலை, முரட்டு உடல்வாகு, கெடா மீசை, கோபமான முகம், குறுகுறுப்பான பார்வை, எகத்தாளச் சிரிப்பு, கர்ஜிக்கும் வசனங்கள் என்று அவர்கள் உலகமே வேறு. தற்போது வரும் வில்லன்கள் ஏதாவது ஒரு மேனரிசத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படி வில்லன்கள் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வைத்திருந்தும், ஏன் பிரம்மாண்டமாய் ஆறு அடி உயரத்தில ஆஜானுபாகுவாய் இருந்தாலும், காய்ந்த கருவாடு மாதிரி இருக்கும் ஹீரோக்களிடம் உருண்டு உருண்டு அடிவாங்கித்தான் ஆகவேண்டும், வேறு வழி? ஹீரோக்கள் தோற்க முடியுமா?


அப்புறம் நம் வில்லன்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கே, அப்பல்லாம் இவர்களுக்கு விதவிதமான ஆயுதங்கள் செய்வதற்கென்றே நிறையத் தொழிற்சாலைகள் இருந்திருக்கும் போல. 90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், ஹீரோ வழக்கம் போல தெனாவெட்டாக வந்து கையால் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மடிப்பு கலையாமல் செல்வார்.


80-களில் வந்த எல்லாப்படத்துலேயும் இந்தக் காட்சி தவறாம இருக்கும், வில்லன் தன் பரிவாரங்களுடன் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பார். அங்கே சென்று வில்லன்களை ஒழிக்க திட்டமிடும் ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார். அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? இது ஏதோ ஒரு படத்தில் எடுத்திருந்தால்கூட பரவாயில்லை, டைரக்டர் யோசிக்க (?) டைம் இல்லாம எடுத்துட்டாருன்னு விட்ரலாம், ஆனா எத்தனை படங்களில் இதே காட்சிய வெச்சி டார்ச்சர் பண்ணாய்ங்க தெரியுமா?




அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார். நாமும் கிளைமாக்ஸ் சுவராசியத்தில் பெரிதாக கண்டுகொள்ளமாட்டோம்.


சிலபடங்களில் வில்லன்களுக்கு திடீரென்று ஒரு பெரிய விஐபியை போட்டுத்தள்ள வேண்டி வரும். உடனே அவர்கள், எத்தனை அல்லக்கைகளை வைத்திருந்தாலும், மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் கொண்டு, முடித்துக் காட்டுகிறேன் என்று சவால் வேறு விட்டுவிட்டு வேலையை தொடங்குவார்.  அந்த விஐபி வரும் வழியில் ஒரு கட்டிடத்தில் ஏறி தன் அதிநவீன(?) ஆயுதங்களை பொறுத்தி வெகுநேரமாக ஜூம் பண்ணிக் குறிபார்த்துக் கொண்டே காத்திருப்பார். ஆனால் பாவம் என்ன பண்றது, நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ரொம்பக் கேசுவலாக வந்து விஐபியை காப்பாற்றி விடுவார்.




சில சண்டைக்காட்சிகளில் ஹீரோவும் சைடு வில்லனும் ஆக்ரோசமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள், சுற்றி நிற்கும் வில்லனின் அல்லக்கைகள் எதிரி மாட்டிக் கொண்டான் என்று எல்லாரும் சேர்ந்து போட்டுத்தள்ளுவார்களா, அதைவிட்டுவிட்டு ஏதோ மெரினா பீச்சில் மீன் பொறிப்பதை எச்சி ஒழுக வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, அல்லக்கைள் எல்லாரும் சேர்ந்து ஹீரோவை அடிக்கும் போது எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போய் அடிக்க மாட்டார்கள். சொல்லி வெச்ச மாதிரி கியூவில் நின்று ஒவ்வொருத்தனாகத்தான் போய் அடிப்பார்கள். ஹீரோ ஒருத்தனை அடித்து முடித்துவிட்டு அடுத்தவனுக்கு வெயிட் பண்ணுவார். போய் வரிசையாக அடிவாங்கி சரிவார்கள். ஆனால் பாருங்க கம்பி, உருட்டுக்கட்டைனு எக்குத்தப்பா அடிவாங்கினாலும் திரும்ப திரும்ப ஹீரோவிடம் வந்து அடிவாங்கி கதறியபடி பறந்து சென்று விழுவார்கள். கொடுத்த காசிற்கு என்ன ஒரு விசுவாசம் பார்த்தீர்களா?


வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான். ஹீரோ தன்னிடம் துப்பாகி இருந்தாலும்,  வெறும் கையாலேயே (?) பலரை போட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் மெயின் வில்லனிடம் வந்து சேர்வார். தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். வில்லனிடம் எத்தனை அல்லக்கைகள் இருந்தாலும், ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் மோதாமல் படம் முடியாது. அதுவும் அவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றார்கள் என்றால் கையால்தான் சண்டை போடுவார்கள். அதுவரை வைத்திருந்த ஆயுதங்கள் எங்கே போகும் என்றே தெரியாது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு தங்கள் பலத்தை காண்பிப்பார்கள். அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.




பழைய படங்களில் பெரும்பாலும் கிளைமாக்சில் சண்டை முடிந்தவுடன் போலீஸ் வந்து யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர் கந்தசாமி என்பார்கள். இடைக்கால, மற்றும் தற்கால படங்களில் சண்டை முடிந்து ஹீரோ வில்லனை கொல்ல முயன்றுவிட்டு வேண்டாம் என்று ஆயுதத்தை கீழே அதுவும் வில்லனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் விட்டுச் செல்வார். உடனே வில்லன் அதை எடுத்துக் கொண்டு ஹீரோவைக் கொல்ல ஓடிவருவார்.  இந்த இடத்தில் ஏதாவது செகண்ட் ஹீரோயின் என ஏதாவது கேரக்டர் இருந்தால் அதை ஹீரோவை காப்பாற்ற வைத்து பலி கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றால், வில்லனை ஹீரோவே தடுத்து நிறுத்தி மிக நீண்ட வசனம் ஒன்று பேசுவார். அந்த நொடிவரை ஆயிரத்தெட்டு அடிவாங்கியும் திருந்தாமல் இருக்கும் வில்லன், இந்த வசனத்தை கேட்டதும் உடனே ஹீரோவை கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீரோடு திருந்தி நிற்பான். படமும் முடியும், மக்களும் கண்ணீரோடு தியேட்டரில் இருந்து எந்திரிப்பார்கள். இதற்கு அந்த வசனத்தை படம் ஆரம்பிக்கும் போதே பேசித் தொலைத்து இருந்தால், இத்தனை பிரச்சனைகள் வந்திருக்காது, நாமும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்திருப்போம்.... இல்லையா?

(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட....  பதிவா போச்சு... !)

நன்றி: திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற பேச்சுக்கள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ்  கட்டுரை இப்பதிவிற்கு உதவியாக இருந்தன.
!

215 comments:

«Oldest   ‹Older   201 – 215 of 215
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Jey said...
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
திங்ககிழமை ஆபீஸ்ல வேலை செய்ய விடமாட்டேன்க்கிரானுகளே//

இதப் பாருடா...மத்த நாள்ல எல்லாம் நல்லா புல் மேயுரா மாதிரியும்....///////

நல்லா கேளு ஜெய்ய்..... இவன் பண்ற அலும்பு தாங்கல.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Jey said...
// மாணவன் said...
தெளிவான பார்வையுடன் அற்புதமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... (யார்ரா அங்க சிரிக்கிறது) நான் பதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்... :)//

ங்கொய்யாலே பன்னி பதிவை முழுசா படிச்சிருந்தா இப்படி தெளிவா கமென்ஸ் போடமுடியுமாக்கும்...
///////

தப்பிச்சிட்டான் விடு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jey said...
//(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட.... பதிவா போச்சு... !)//

நீ எப்பதான் சின்ன பதிவு போட்ருக்கே????( என்னோட பதிவுகளை பாத்தும் தெருஞ்சுக்களையே....)

எவ்வளவு நாள் ட்யூசன் எடுத்தும்!!!! ஒழுங்கா கத்துக்களையே பன்னி...
///////

அடுத்த வாட்டி இதைவிட பெருசா போட்டுடுறேன் மொதலாளி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Jey said...
முத்துப்பய காணாம போனது உங்களுக்கெல்லாம் துளிர் விட்டுப் போச்சி..., அவனை தேடிப் புடிச்சாவது தள்ளிட்டுவரனும்...
///////

யோவ் அவன் எங்கய்யா போனான்? யாரும் புடிச்சிட்டு போய்ட்டாய்ங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நிரூபன் said...
ஆப்பிசர், வேணும்னா, இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. உங்களை ஹீரோவாகவும், சிபியை வில்லனாகவும், வைச்சு ஒரு படம் பண்ண நான் ரெடி.
நீங்க ரெடியா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹீரோயின் யாருன்னு சொல்லிட்டா (யாரா இருந்தா என்ன?) நான் ரெடிங்கோ....//


தமிழ் திரையுலகம் வீனாக்கிய அழகிகள் லிஸ்ட்லேர்ந்து ஒன்னைப் போட்டா போதுமா பன்னி...//////

வீணாக்கிய அழகிகள்லாம் நமக்கெதுக்கு மச்சி.... அதுக்கு வேற ஆள் இருக்கான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Jey said...
//TERROR-PANDIYAN(VAS) said...
அருமையாக உள்ளது அய்யா!//

இதுக்கு பன்னிய தலைகீழா தொங்கப் போட்டு சாட்டையாலயே அடிச்சிருக்கலாம்....

பன்னி இந்த கமென்ஸப் படிச்சுட்டு இன்னுமா உசுரோட இருக்கே???!!!. இன்னேரத்துக்கு டிப்புடிப்பு பூச்சி மருந்து குடிச்சிட்டு போய் சேந்திருக்கவேணாமா?////////

அதுக்குத்தான் அவசரத்துக்கு பூச்சி மருந்து கிடைக்காம சிரிப்பு போலீஸ் ப்ளாக்கு படிச்சிட்டு வந்திருக்கேன்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பத்த்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..//////

ம்ம், மொதல்ல இந்த டெம்ப்ளேட் கமெண்ட் போடுறதுக்கு வாத்திக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கனும்யா....

ராஜி said...

சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

ராஜி said...

சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

படிக்காதீங்க.. (இந்திரா) said...

முன்னாடியெல்லாம் ஹீரோயின தான் வடக்குப்பக்கத்துல இருந்து இறக்குமதி பண்ணுவாங்க..
இப்ப வில்லன்களையும் அங்குட்டு இருந்து கொண்டுவர்றது ஃபேஷனாய்டுச்சு.

N.H. Narasimma Prasad said...

செம காமெடி பதிவு கவுண்டரே...

Anonymous said...

// ஹீரோ ஒரு மீசையும் மருவும் வச்சுக்கிட்டு மாறுவேசம் ன்னு சொல்லிக்கிட்டு வருவாரு
அது ஹீரோதாம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா அந்த வில்லனுக்கு மட்டும் தெரியாது //

சரியான பதிவு சார் . இதே வேலைய நம்ம கம்மர்சியல் இயக்குனர்கள் பல தடவை பண்ணிருக்காங்க

ஆனா அதையும் நம்ம மூணு மணி நேரம் உக்காந்து பாக்குறோம் பாருங்க . அதுதான் கொடுமையிலும் கொடுமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜி said...
சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!
///////

நன்றிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///N.H.பிரசாத் said...
செம காமெடி பதிவு கவுண்டரே...
/////

நன்றி நண்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சுந்தர் said...
// ஹீரோ ஒரு மீசையும் மருவும் வச்சுக்கிட்டு மாறுவேசம் ன்னு சொல்லிக்கிட்டு வருவாரு
அது ஹீரோதாம்னு எல்லாருக்கும் தெரியும் ஆனா அந்த வில்லனுக்கு மட்டும் தெரியாது //

சரியான பதிவு சார் . இதே வேலைய நம்ம கம்மர்சியல் இயக்குனர்கள் பல தடவை பண்ணிருக்காங்க

ஆனா அதையும் நம்ம மூணு மணி நேரம் உக்காந்து பாக்குறோம் பாருங்க . அதுதான் கொடுமையிலும் கொடுமை
//////

ஆமா சார், என்ன பண்றது, கமர்சியல் படம்னாலே லாஜிக் தேவையில்லைனு ஆக்கிட்டாங்க நம்மாளுங்க....!

«Oldest ‹Older   201 – 215 of 215   Newer› Newest»