பிரபாகரன் அழைத்திருந்த தொடர்பதிவின் சப்ஜக்ட் மாதிரியே நான் ஏற்கனவே எழுதி இருக்கறதால அதையே கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, பெயிண்டு அடிச்சு போட்டிருக்கேன்.
மொதல்ல நம்மாளுடைய சிறப்பம்சங்கள், அதாவது வேற எந்த நடிகர்கள் கிட்டேயும் காணமுடியாத அற்பமான... சீ.... அற்புதமான குணாதிசயங்கள் என்னென்னு ஒவ்வொண்ணா பாத்திடுவோம். இந்த விஷயங்கள் தான் அவரை இந்த இடத்தில் உக்கார வைத்திருகிறது என்றால் அது மிகையல்ல.
சிறப்பம்சங்கள்
1. வசனம்: (எலி புழுக்கை போடுற மாதிரியே(?) வசனம் பேசுறது....!)
டாகுடரு வசனம் பேசற அழகே தனி. மொத படத்துல இருந்து போனமாசம் வந்த காவலன் வர அதே வசனம், அதே ஸ்டைல். அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகப்போறாருன்னு சின்னவயசுல இருந்தே நைனா கொடுத்துக்கிட்டு வர்ர ஹெவி ட்ரெயினிங்கால வந்த சிறப்பம்சம் இது. இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ!
2. ஸ்டைல்: (எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது...!)
இந்த ஸ்டைல எப்போ கண்டுபுடிச்சாருன்னு தெரியல. ஆனா பலவருசமா இப்படித்தான் நடக்குறாரு நம்ம டாகுடரு. இதுலேயும் ரெண்டு வெரைட்டி (?) வெச்சிருக்காரு, கோவம் வந்தா ஒரு நடை, அதுல தீப்பொறிலாம் வேற அப்படியே சிதறி ஓடும்... ( அத ஏற்கனவே வடிவேலு வேற நாறடிச்சிட்டாரு....), அப்புறம் ரொமாண்டிக்கா ஒரு நடை.... பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... அப்படி ஒரு ஸ்டைலு.... ! எதுக்கும் நம்ம டாகுடரு, ஒரு பெரிய டாகுடர (கேப்டன் அல்ல) பாத்துக்கிட்டா நல்லது, அப்புறம் ’பின்’னாடி ப்ராப்ளம் வராதுல?
3. பஞ்ச் டயலாக்ஸ்:
பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது நம்ம டாகுடரோட தனி ஸ்பெசாலிட்டி! (நம்ம டாகுடரு தம்பி பேசுறதப் பாத்துப் பாத்து இப்ப கண்ட கண்ட பயலும் பேசுறாங்ய!) ஒண்ணா ரெண்டா, எத்தன டயலாக்கு, எத்தன படம்? எத விடுறது, எத சொல்றது? இருந்தாலும் உங்களுக்காக எனக்குப் புடிச்ச டயலாக்குகளை இங்கே வைக்கிறேன்.
4. டாகுடரின் இயக்குனர்கள்:
பேரரசு மாதிரி டைரக்டருக டாகுடருக்கு மட்டும் எங்கே இருந்துதான் கிடைப்பாய்ங்களோ? படத்துக்குப் படம் என்ன ஒரு முன்னேற்றம்? இந்த மாதிரி அரியவகை இயக்குனர்கள கண்டுபிடிச்சி கைதூக்கி விடுறது தமிழ்சினிமாவுக்கு நம்ம டாகுடர் செய்து வரும் நீண்ட கால சேவை! தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு நைனாவே செய்வினை வெச்சிக்கிட்டாரோ என்னமோ, டாகுடரை எந்த பெரிய டைரக்டரும் கூப்புடவே இல்ல. ஒரே ஒரு ஆளு அதாங்க, நம்ம டாகுடருக்கும் பெரிய டாகுடரு, ஒரே ஒரு கதைய வெச்சிக்கிட்டு மாத்தி மாத்தி எடுத்து எல்லாத்தையும் கேனயனாக்கிக்கிட்டு இருக்காரே ஷங்கரு, அவருக்கு என்ன ஆச்சோ தெரியல, 3 இடியட்ஸ் படத்த டாகுடர வெச்சி எடுக்கலாம்னு ரொம்ப முயற்சி பண்ணாரு. ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு. ஒரு வேள தனக்கு பஞ்ச் டயலாக் எழுதற அளவுக்கு ஷங்கருக்கு கெப்பாசிட்டி இல்லேன்னு டாகுடரு கண்டுபுடிச்சிட்டாரோ..!
5. கேரக்டர்:
கோவமே வராத அப்பாவிப் புள்ள மாதிரி நெஜ வாழ்க்கையிலும் நடிக்கிறது சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம்லனு டாகுடரு கொந்தளிக்கற வீடியோவ கிட்டத்தட்ட எல்லொரும் பாத்திருப்பீங்க. டாகுடருக்கு ஏன் அந்த மாதிரி கோவம் வந்துச்சுன்னு ஒரு வீடீயோ கூட வந்திருக்கு, என்னுடைய ஆல்டைம் பேவரிட் வீடியோவான அதை இங்கே உங்களுக்கு டெடிகேட் பண்றேன்.
6. காமெடி: காமெடி பண்றேன்னு அடிக்கடி காமெடி பீசாகுறது...!
வசீகரான்னு ஒரு படம் வந்துச்சு, (அதுல சினேகா மட்டும் இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்லேயே எல்லோரும் காறி துப்பி இருப்பாய்ங்க....), அந்தப் படத்தப் பார்த்துட்டு பலநாள் நடுராத்திரி எந்திரிச்சு அழுதிருக்கேன், அப்படி ஒரு படம், அப்படி ஒரு நடிப்பு. அந்தப் படத்தப் பார்த்துதான் காமெடிக்கு பின்னால எவ்வளவு ரிஸ்க் இருக்குன்னே உணர்ந்தேன். அப்புறம் ரசிகர்களால ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியலேன்னு ஒரு நல்லெண்ணத்துல டாகுடரு காமெடிய கொஞ்சம் கொறச்சிக்கிட்டாருன்னு கேள்விப்பட்டேன்.
7. அரசியல்: அடுத்த மொதல்வர் திட்டம்!
நாலு பஞ்ச் டயலாக் பேசி படம் ஓடிருச்சுன்னா எல்லாப் பயலும் இத ஆரம்பிச்சுடுறானுகய்யா... கேப்டனும், சரத்தும் சீரழிஞ்சத பாத்தும் கொஞ்சம் கூட அசரலியே நம்ம டாகுடர் தம்பி? இதுல அவரு நைனா வேற வாய வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம பேட்டியா கொடுத்து மக்களை அலற வெக்கிறாரு. என்னைக் கேட்டா டாகுடரு அரசியலுக்கு வர்ரதுதான் நல்லது, ஒண்ணு சினிமாக்காரனுக கொஞ்சம் உருப்படுவானுக, ரெண்டாவது அரசியல்ல குதிச்சா நாலு பேருகிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்குவாங்க டாகுடரும் நைனாவும்....!
எப்பூடி..... நம்ம டாகுடரோட சிறப்பம்சம்........ இதுக்கே நாக்கு தள்ளுதா? இன்னும் பிடிச்ச படங்கள், பாடல்கள்னு நெறைய இருக்கே? மனச தளரவிடாம நல்லா மூச்ச இழுத்து விட்டு பாடிய கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மேல படிங்க.
நம்ம சின்ன டாகுடருடைய திரைச்சித்திரங்களை ஆரம்ப காலங்கள்ல இருந்து பார்த்துட்டு(?) வரக்கூடியவன் என்ற தகுதியை (?) வெச்சு அவ்ருடைய பல படங்களையும் அலசி ஆராய்ந்து தான் லிஸ்ட்ட தயார் பண்ணி இருக்கேன். அதனால பதட்டப்படாம தைரியமா படிங்க...!
படங்கள்:
1. ஷாஜஹான்: தி கிரேட் கிளைமாக்ஸ்...!
ஷாஜஹான் படம் பாத்துட்டு நாட்ல இருக்க வெந்தது வேகாகது, எச்ச டீ குடிச்சது, கடஞ்சொல்லி பீடி அடிச்சது எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, ஏன்னா டாகுடரு வந்து உசுர குடுப்பாராம்.... த்தூ... படுவா, உண்மைக் காதல்னா உசுரக் கொடுப்பாராம்ல, இவருபாட்டுக்கு வில்லன்க கிட்ட இருந்து நம்மளை காப்பாத்திடுவாரு, அப்புறம் இவருகிட்ட இருந்து காப்பாத்தறது யாரு?
அப்புறம் இந்தப் பட கிளைமாக்ஸ்ல டாகுடரு கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் இருக்கே.... அதப்பாத்து தமிழ்நாடே சே... ஒலகமே கதறிடிச்சுங்ணா.... இந்த ஒரு சீனுக்காகவே டாகுடரை நாம எல்லோரும் சேர்ந்து மொதல்வராக்கி அழகு பாக்கோனும்!
2. சிவகாசி: தி தண்டர் ஓப்பனிங்...
சிவகாசி படத்துல டாகுடரு ஒரு ஷட்டரு போட்ட கடைக்குள்ள இருந்து அப்படியே வெல்டிங் பண்ணிட்டு வெளிய வருவாரு பாருங்க, அதுலேயும் பிஞ்சு போன ஷட்டர் துண்டுக எகிறி விழுகும் சீன் இருக்கே ....... சான்சே இல்ல.... இப்படி ஒரு சீனைக் கற்பனை பண்ண டைரக்டர பாராட்டறதா, இல்ல இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்ச நம்ம டாகுடர பாராட்டறதா...... வெல்டன் டாகுடர்.....! ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்னு எல்லா வுட்டுகளையும் ஒரே சீன்ல சாய்ச்சுட்டாரு நம்ம டாகுடர்னு எல்லோரையும் சொல்ல வெச்ச படம் இது...!
2. திருப்பாச்சி: பாசமலரின் ரத்தக்காவியம்
இந்தப் படத்துல சடையக் கட் பண்றது மாதிரி ரொம்ப திரில்லிங் சீன்ஸ்லாம் உண்டு. த்ரிசாவும், மல்லிகாவும் பெட் கட்டிக்கிட்டு டாகுடர கூப்புடும்போது நடந்து வருவாரே டியான் டியான்னு ஒரு நடை! (இதுக்கு கெரகம், தமிழ்நாடு அரசு விருது வேற கெடச்சிருக்காம்.....!) நடையா அது.......கலக்கல்ங்ணா.......! ங்ணா..... இதுதான் உங்க நிஜ நடைங்ளாங்ணா? இப்படி ஒரு ராஜநடைய வெச்சிக்கிட்டு ஏனுங்ணா சும்மா பைல்ஸ் வந்த மாதிரியே நடந்து பீதிய கெளப்புறீங்க?)
3. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்
இந்தப் படத்தப் புகழாத பத்திரிக்கை, டீவி, ரசிகர்கள், பதிவர்கள் யாருமே இல்லே....! அகில ஒலகத்தையே அதிர வெச்ச மாமியாருக்கு சோப்பு போடும் சீனுக்கு இணையா இப்போ மட்டுமில்ல, எப்பவுமே, ஏன் டாகுடரால கூட இனி எடுக்க முடியாது, அவ்வளவு பவர்புல் சீன் அது. டாகுடரோட நைனா கற்பனை வளத்தப் பாத்து புலவர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள்லாம் கதறி அழுத சீன்...! இதுக்காகவே ரசிகன் படத்த ரிலீஸ் ஆகி ஓடுதுனதுக்கப்புறமும் 2-வது முறையா சென்சார் பண்ணாங்க, எப்பேர்ப்பட்ட சாதனை..... இனி யாராலேயாவது முடியுமா..?
4. துள்ளாத மனமும் துள்ளும்:
இந்தப் படத்துல லேடீஸ் பாத்ரூம் சுவத்தப் புடிச்சித் தொங்கிக்கிட்டே நம்ம தங்கத் தலைவி சிம்ரன் பாடுறத பாப்பாரே ஒரு சீன், மறக்க கூடிய சீனா அது? டாகுடரு வேற டூப்பு போடாம, உயிரைத் துச்சமா மதிச்சு ரெண்டு மணீ நேரமா செவத்துல தொங்கிக்கிட்டே நடிச்ச சீன்... ! ங்ணா......அந்த சீன்ல மூஞ்சில சாணிய அள்ளிப் அடிச்ச மாதிரியே ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்களே... அது எனக்கு ரொம்பப் புடிக்கும்னா......
5. ப்ரண்ட்ஸ்:
தங்கச்சி பிரண்ட்ஸ்கிட்ட ல்தகா சைஆ இருக்கான்னு (கொஞ்ச நஞ்ச அலும்பா பண்ணி இருக்காய்ங்க?) கேட்டு மாட்டிக்கிட்டு வழிவாரே ஒரு வழிசல்....... அட அட அட அடடா... என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு எக்ஸ்பிரசன், ஒரே உணர்ச்சிக்குவியல்தான்..... அப்பிடியே அத அள்ளி ஸ்டில்லா போட்டு வெச்சிட்டா காலமெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்...! கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே, என்ன ஒரு பயங்கரமான சீன்பா அது? அப்புறம் அவருக்கு நெனைவு வரும் பாருங்க, அதப் பாத்து வில்லன்கள்லாம் மெரள்றது நமக்கே திகிலா இருக்கும்.
6. குருவி: தி டெட்லி ஆக்சன்!
படத்துல ஒரு மொட்ட மாடில இருந்து ஜம்ப் (ஜம்ப்பா அது?) பண்ணி பறந்துக்கிட்டே.........................போய்ய்ய்யி........ ட்ரெயின புடிப்பாரே, அந்த சீனுதாங்க டாகுடரு இதுவர நடிச்ச சீன்கள்லேயே பெஸ்ட்டு. அதுலேயும் ட்ரெயின்ல ஏறுனதுக்கப்புறம், விரல சுத்தி ஏதோ பண்ணி அதுல இருந்து இண்டர்வல்னு வர வெப்பாரே, அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன், அப்படி ஒரு ஆழமான சீன் அது. இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு, பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....
இருந்தாலும் பரவால்ல, அந்த மயிர்க் கூச்செறியும் காட்சிய இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.
பாடல்கள்
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)
என்ன ஆச்சுன்னு தெரியல இப்பல்லாம் கொத்து பரோட்டா போடுறதில்ல டாகுடரு.... எல்லாம் நைனாவொட ஐடியாவா இருக்கும்.
சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!
நன்றி கூகிள், யூட்யூப்...!
251 comments:
«Oldest ‹Older 201 – 251 of 251//// எம் அப்துல் காதர் said...
EVENING வடை எனக்கே!! இருங்க தொட்டுக்க சட்னி எடுத்துக்கிட்டு வர்றேன்!!/////
கொஞ்சம் வெயிட் பண்ணா டாகுடரே சட்னியாகிடுவாரு.........
வரும் வேலாயுதம் வரும்..இன்னும் 30 பதிவுக்கு தரும் மேட்டர் தரும்..அப்ப சிரிங்கடா அஹஹாஹான்னு
////// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா டாக்டரையும் தாடியையும் அண்ணன் புகழ்றதை படிக்கறதே தனி சுகம்தான்//////
ஹி..ஹி..... எல்லாத்துக்கும் டாகுடருனாலே ஒரு இது......?
//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
எப்படின்னே இன்னும் 3 தொடர் பதிவா போட்ருக்கலாம் போல///////
வெசத்த கொஞ்சம் கொஞ்சமாத்தானே ஏத்தனும்? மொத்தமா கொடுத்தா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாது?
///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
வரும் வேலாயுதம் வரும்..இன்னும் 30 பதிவுக்கு தரும் மேட்டர் தரும்..அப்ப சிரிங்கடா அஹஹாஹான்னு/////
வேலாயுதம் போஸ்டர பாத்து இப்பவே கைய்யி நமைச்சல் எடுத்துடுச்சு......ஹி...ஹி......
/////எம் அப்துல் காதர் said...
//நாலு பஞ்ச் டயலாக் பேசி படம் ஓடிருச்சுன்னா எல்லாப் பயலும் இத ஆரம்பிச்சுடுறானுகய்யா//
வெளங்கிடுச்சு அதனால தான் கட்சில சேரலையோ??//////
ஹி...ஹி...
/////// எம் அப்துல் காதர் said...
//இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு, பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....//
நா கூட இத நெனச்சு அழுத்திட்டேன்னா பாத்துங்களேன்!!/////
என்னது நீங்களுமா? அப்போ நீங்க டாகுடர் ரசிகர் இல்லியா?
///////Yoga.s.FR said...
ஏங்க,ஒங்களுக்கு வேற ஆளே கெடக்கலியா?பாவமில்ல?!/////
வேற யாருண்ணே இம்புட்டு அடியவும் தாங்குறது?
/////Chitra said...
இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!//////
நன்றிங்க...........
////// சிநேகிதன் அக்பர் said...
இதைப்படிச்சா டாக்குடரே சிரிப்பாரு :)///////
அப்பிடியாவது சிரிச்சா சரிதான்.....
////பாரதசாரி said...
//ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே//
Western style closet மேல உக்கார்ந்திருப்பார்.///////
டாகுடருனாலே எல்லாம் ஸ்டெடியாகிடுறாங்கப்பா......
//////மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
(எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது...!)
ஆகா என்ன ஒரு அருமையான கண்டு பிடிப்பு?//////
வேற வேல.......?
//////மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
சுறா படத்துல தமன்னா வாயில தண்ணி எடுக்கிற அந்த உருக்கமான சீனைப்பத்தி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்!//////
பார்ட்-2 போடனும் போல இருக்கே?
//////DrPKandaswamyPhD said...
ரொம்பவே சிரமப் பட்டிருக்கீங்க. இவ்வளவு வேண்டுமா?//////
ஹி..ஹி....
///// Philosophy Prabhakaran said...
முதலில் தொடர்பதிவு எழுதியமைக்கு நன்றிகள்...///////
வாங்க வாங்க.........
///// Philosophy Prabhakaran said...
// அற்பமான... சீ.... அற்புதமான //
// பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... //
// மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன் //
சூப்பர்...//////
நன்றி......
//////Philosophy Prabhakaran said...
// டாகுடரு வேற டூப்பு போடாம, உயிரைத் துச்சமா மதிச்சு ரெண்டு மணீ நேரமா செவத்துல தொங்கிக்கிட்டே நடிச்ச சீன்... ! //
புதிய தகவல்... டாகுடர் வாழ்க.../////
வழக்கமா எல்லாத்துக்கும் டூப்பு போடும் டாகுடரு, லேடீஸ் பாத்ரூம் சுவத்துல தொங்கனும்ன உடனே ஒத்துக்கிட்டாராம்...........
//////Philosophy Prabhakaran said...
// அந்த சீன்ல மூஞ்சில சாணிய அள்ளிப் அடிச்ச மாதிரியே ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்களே... //
அப்புறம், வாய மூடிக்கிட்டு வாய்க்குள்ள நாக்கை சுழட்டுவாரே... சான்சே இல்லை...///////
ஹஹஹா அப்பிடியே ஓங்கி ஒரு குத்து விடலாம் போல தோனுமே?
///////Philosophy Prabhakaran said...
// 1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா) //
நேத்து சென்னையில் சுற்றுலா பொருட்காட்சிக்கு போயிருந்தேன்... அங்கே இந்த மாதிரி பாடல்களை வரிசையா ஒலிபரப்பிட்டு இருந்தாங்க... இந்த பாடல்கள் எல்லாம் எந்தப்படம்ன்னு கண்டுபுடிச்சு டவுன்லோட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன்... ஏன் வேலையை சுலபமாக்கிட்டீங்க.../////
அடப்பாவி இந்தப் பாட்டுகளா வேணும்.? இதுகள கேட்டா காரமா சிக்கன் கொத்து பரோட்டா தின்ன மாதிரி இருக்குமே?
//////டக்கால்டி said...
சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம்,//
ஒரு நமீதாவோ, சமந்தாவோ,தமன்னாவோ,அனுஷ்காவோ இல்ல இல்லியானாவோ புடிக்கரத்தை விட்டுட்டு ஆச்சியை ஏன்யா புடிக்கிற?//////
நம்மால முடிஞ்சதை தானேண்ணே புடிக்க முடியும்?
//////விக்கி உலகம் said...
தமிழ் தெரிஞ்ச தெரியாத அத்தன பேரையும் தன் நடிப்பால(!?) கொன்னுட்டு இருக்கும் இளைய(35 வயசுக்கு மேல போன நடுவாந்திர!) தலைவலி அவர்களை உசுப்பேத்தி விடுமாறு பதிவிட்ட எங்கள் எதிர் கட்சி தலைவர் அவர்களை வாழ்த்து கூறி எதிர்க்கிறேன்!!
-பாருய்யா இந்தப்புள்ளைக்குள்ள என்னமோ இருந்திருக்குன்னு சொன்னாங்க.ஆனா அது பைல்ஸ்(?) அப்படின்னு கண்டுபுடிச்சி இருக்க உங்க ஆராச்சிக்கு என்ன தர்றது.....!/////
ஆராய்ச்சி முத்திப் போயித்தான் பைல்ஸ் முத்தி போயி இருக்கறத கண்டுபுடிச்சேன்!
///// சௌந்தர் said...
ச்சே விஜய் படத்தை தான் பார்க்க போறது இல்லை இங்க இவர் பதிவையும் லேட்டா படிக்குறேன்//////
டாகுடருக்கு அது போதும்...
/////சௌந்தர் said...
இவ்வளவு கமெண்ட் வந்த பிறகு நான் கமெண்ட் போட்டேன் தெரியவ போகுது...///////
அதெப்படி, கடைக்கு வந்தவங்கள சும்மா விட்ருவமா?
//////சௌந்தர் said...
விஜய் படத்துக்கு கூட இவ்வளவு கூட்டம் வராது இங்க என்ன கூட்டம் டாக்டர் நீங்க உடனே கட்சி ஆரம்பிங்க//////
ஆரம்பிச்சிடலாம்னுதான் பாக்குறேன், நமீயோட கால்சீட்டுதான் இன்னும் கெடைக்கல.......
//////அன்னு said...
//இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு, பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....
//
வடிவேலு ஸ்டைல்ல சொன்னாக்க... “முடியல... அவ்வ்வ்வ்வ்”//////
என்னது முடியலியா? அப்போ அந்தப் படத்த மறுக்கா பாருங்க....
/////பாரத்... பாரதி... said...
அது ஏன் விஜய்-ன வெறியாயிடுறீங்க...//////
அதாங்க எனக்கும் புரியல, நல்ல டாகுடர்கிட்ட காட்டனும்........
/////ராஜ நடராஜன் said...
தப்பித்தவறி இந்த கடை ரோட்டுல வந்துட்டேன்!பாதி தூரம் வந்துட்டேன்.இனி திரும்பி போறது நல்லாயில்ல!அதனால டீ சாப்பிட்டே போயிடறேன்.///////
டீயே வேணுமா? இந்த பார்லித்தண்ணி கிண்ணி குடிக்கப்படாது?
/////ராஜ நடராஜன் said...
பின்னூட்டம் பார்த்தா(படிச்சா இல்ல) நிறைய டாகுடருகிட்ட மருத்துவம் பார்த்தவங்க போல தெரியுதே:)/////
அப்பிடி பாக்காதவங்களும் இங்க வந்தா போதும் அதே எஃபக்ட் ஃப்ரீயா கெடச்சிடும்...........
//// அப்பாவி தங்கமணி said...
//அப்புறம் காரமடை ஜோசியரை புடிச்சி//.
ஆஹா...காரமடையா? நீங்க எந்த காரமடைய சொல்றீங்க? கோவை டு மேட்டுப்பாளையம் போற வழில இருக்கே அதா? சும்மா கேட்டேன்...:)/////
அப்பிடியா? காரமடை அங்கதான் இருக்கா?
////// FOOD said...
அண்ணே, ரொம்ப சின்ன பதிவா இருக்கு. சூப்பரோ சூப்ப்பர்.
தங்கள் வலை பக்கத்தில், என் தளத்திற்கு வாசல் அமைச்சதுக்கு நன்றிங்கோ.////
வாங்க சார், நன்றி........
//////நா.மணிவண்ணன் said...
அண்ணே கொன்னுட்டீங்க போங்க ,உண்மைய சொல்லுங்க எத்தன பாட்டில் பாலிடாயில் குடுச்சிட்டு எழுதுனீங்க//////
அதுகெல்லாம் கணாக்கே இல்ல, பேனாவுல கூட இங்க்குக்கு பதிலா பாலிடாய்ல் ஊத்திதான் எழுதி இருக்கேன்.........
/////நா.மணிவண்ணன் said...
////பிரண்ட்ஸ் : கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?)////
அண்ணே மேக்கப் இல்லனே உண்மையான முகமே அதுதானே///////
ஓஹோ... லோ-பட்ஜெட் படமா அது? அதான் டைரக்டரு கிளைமாக்ஸ்ல பயங்கர பீலிங்கை ரொம்ப ஈசியா வரவெச்சிட்டாரு போல....?
enathu 236aaaaaaaaaaaaa
he he he konjam late aaayuduchchi
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html
என்னது? 238 கமேன்டசா?? அடப்பாவிகளா . எனக்கு வயித்தால பிச்சிகிச்சு இங்க!! இப்போ இதையும் சேத்தா 239 ஆ........ஐயோ ஐயோ
அல்லாஹு அக்பர்.
ஃஃஃஃஃவசனம்: (எலி புழுக்கை போடுற மாதிரியே(?) வசனம் பேசுறது....!)ஃஃஃஃ
நம்மளை மாதிரீண்ணு சொல்லங்க அண்ணாத்தே...
ஃஃஃஃஃஷாஜஹான் படம் பாத்துட்டு நாட்ல இருக்க வெந்தது வேகாகது, எச்ச டீ குடிச்சது, கடஞ்சொல்லி பீடி அடிச்சது எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சிடுச்சுஃஃஃஃ
ஆமா ஆமா... பகுதி 2 எப்ப எடுப்பாங்க..
ஃஃஃஃஃஅதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன்ஃஃஃஃ
ஹ...ஹ...ஹ.. ஏங்க இதை வாசிச்சு நான் இப்ப அங்கே ஓடப் போறன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
சிரிச்சு சிரிச்சு வயிறே புண் ஆயிடிச்சு...
//பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. .!//
ஏன்?..என்ன..?..எதுக்கு..எங்க..எப்படி..எவ்வளவு..எத்தனை...யாரு...யார்கிட்ட?
உங்கபக்கம் வந்தா மனம் விட்டு சிரிக்க முடியுது. பதிவை விட பின்னூட்டமும் உங்களின் பதில்களும்.
/////vinu said...
enathu 236aaaaaaaaaaaaa
he he he konjam late aaayuduchchi
///////
நானும்தான் ஹி...ஹி.....
/////////அருள் said...
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html////////
ஏண்ணே............?
//////கக்கு - மாணிக்கம் said...
என்னது? 238 கமேன்டசா?? அடப்பாவிகளா . எனக்கு வயித்தால பிச்சிகிச்சு இங்க!! இப்போ இதையும் சேத்தா 239 ஆ........ஐயோ ஐயோ
அல்லாஹு அக்பர்./////////
இதுக்கேவா...... பழைய பதிவுகளை கொஞ்சம் பாருங்கண்ணே............
////ம.தி.சுதா said...
ஃஃஃஃஃவசனம்: (எலி புழுக்கை போடுற மாதிரியே(?) வசனம் பேசுறது....!)ஃஃஃஃ
நம்மளை மாதிரீண்ணு சொல்லங்க அண்ணாத்தே...////////
அப்பிடியா....? அப்போ சென்னைக்கு வந்து முயற்சி பண்ணுங்கண்ணே... நடிக்கறீங்களோ இல்லியோ டாகுடர் பட்டமாவது கெடைக்கும்........
////// ம.தி.சுதா said...
ஃஃஃஃஃஷாஜஹான் படம் பாத்துட்டு நாட்ல இருக்க வெந்தது வேகாகது, எச்ச டீ குடிச்சது, கடஞ்சொல்லி பீடி அடிச்சது எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சிடுச்சுஃஃஃஃ
ஆமா ஆமா... பகுதி 2 எப்ப எடுப்பாங்க..//////
ஆந்திராவுல படம் எதுவுமே ஓடலேன்னா.......!
/////ம.தி.சுதா said...
ஃஃஃஃஃஅதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன்ஃஃஃஃ
ஹ...ஹ...ஹ.. ஏங்க இதை வாசிச்சு நான் இப்ப அங்கே ஓடப் போறன்..////////
கிளியராயிடுச்சுங்ளா.........?
/////சாமக்கோடங்கி said...
சிரிச்சு சிரிச்சு வயிறே புண் ஆயிடிச்சு...////////
வாங்க பாஸ்........
/////// செங்கோவி said...
//பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. .!//
ஏன்?..என்ன..?..எதுக்கு..எங்க..எப்படி..எவ்வளவு////////
இன்னும் வேற எதாவது கேள்வி இருக்கா?
////// Lakshmi said...
உங்கபக்கம் வந்தா மனம் விட்டு சிரிக்க முடியுது. பதிவை விட பின்னூட்டமும் உங்களின் பதில்களும்.//////
வாங்க மேடம்.......!
//என்னைக் கேட்டா டாகுடரு அரசியலுக்கு வர்ரதுதான் நல்லது, ஒண்ணு சினிமாக்காரனுக கொஞ்சம் உருப்படுவானுக, ரெண்டாவது அரசியல்ல குதிச்சா நாலு பேருகிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்குவாங்க டாகுடரும் நைனாவும்....!//
செம டையலாக் :-))
Post a Comment