Thursday, February 17, 2011

ஒரு டாக்டரின் ரத்த சரித்திரம்...

கொஞ்ச நாளாவே நெறைய கெட்ட கனவுகள். என்னன்னே தெரியாம கொழம்பிக்கிட்டு இருந்தேன். அப்புறம் காரமடை ஜோசியரை புடிச்சி ஒரு டோஸ் விட்ட உடனே அவருதான் சின்ன டாகுடர பத்தி ரொம்ப நாளு எழுதல (?), அத உடனே எழுதிட்டா எல்லாம் சரியாயிடும்னு பரிகாரம் சொன்னாரு. இந்த நேரத்துல கரெக்டா நம்ம பிரபாகரன் வேற டாகுடரைப் பத்தி எழுதியே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னாரு (அட நின்னாருங்க...). சரின்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். எனவே வேற வழியே இல்ல, நீங்க இன்னொரு டாகுடரு பதிவ படிச்சுத்தான் ஆகனும் (சே.... ஒரு டாகுடரு பதிவு போட எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு?). டாகுடர் ரசிகர்கள் இத்தோட ஸ்டாப் பண்ணிட்டு வேற ஏதாவது ப்ளாக் பக்கமா போயிடுங்க சார். அப்புறம் உங்க இஷ்டம்...

பிரபாகரன் அழைத்திருந்த தொடர்பதிவின் சப்ஜக்ட் மாதிரியே நான் ஏற்கனவே எழுதி இருக்கறதால அதையே கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, பெயிண்டு அடிச்சு போட்டிருக்கேன்.

மொதல்ல நம்மாளுடைய சிறப்பம்சங்கள், அதாவது வேற எந்த நடிகர்கள் கிட்டேயும் காணமுடியாத அற்பமான... சீ.... அற்புதமான குணாதிசயங்கள் என்னென்னு ஒவ்வொண்ணா பாத்திடுவோம். இந்த விஷயங்கள் தான் அவரை இந்த இடத்தில் உக்கார வைத்திருகிறது என்றால் அது மிகையல்ல.

சிறப்பம்சங்கள்
1. வசனம்: (எலி புழுக்கை போடுற மாதிரியே(?) வசனம் பேசுறது....!)
டாகுடரு வசனம் பேசற அழகே தனி. மொத படத்துல இருந்து போனமாசம் வந்த காவலன் வர அதே வசனம், அதே ஸ்டைல். அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகப்போறாருன்னு சின்னவயசுல இருந்தே நைனா கொடுத்துக்கிட்டு வர்ர ஹெவி ட்ரெயினிங்கால வந்த சிறப்பம்சம் இது. இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ!
 
2. ஸ்டைல்: (எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது...!)
இந்த ஸ்டைல எப்போ கண்டுபுடிச்சாருன்னு தெரியல. ஆனா பலவருசமா இப்படித்தான் நடக்குறாரு நம்ம டாகுடரு. இதுலேயும் ரெண்டு வெரைட்டி (?)  வெச்சிருக்காரு, கோவம் வந்தா ஒரு நடை, அதுல தீப்பொறிலாம் வேற அப்படியே சிதறி ஓடும்... ( அத ஏற்கனவே வடிவேலு வேற நாறடிச்சிட்டாரு....),  அப்புறம் ரொமாண்டிக்கா ஒரு நடை.... பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... அப்படி ஒரு ஸ்டைலு.... ! எதுக்கும் நம்ம டாகுடரு, ஒரு பெரிய டாகுடர (கேப்டன் அல்ல) பாத்துக்கிட்டா நல்லது, அப்புறம் ’பின்’னாடி ப்ராப்ளம் வராதுல?
 
3. பஞ்ச் டயலாக்ஸ்:
பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது நம்ம டாகுடரோட தனி ஸ்பெசாலிட்டி! (நம்ம டாகுடரு தம்பி பேசுறதப் பாத்துப் பாத்து இப்ப கண்ட கண்ட பயலும் பேசுறாங்ய!) ஒண்ணா ரெண்டா, எத்தன டயலாக்கு, எத்தன படம்? எத விடுறது, எத சொல்றது? இருந்தாலும் உங்களுக்காக எனக்குப் புடிச்ச டயலாக்குகளை இங்கே வைக்கிறேன்.




4. டாகுடரின் இயக்குனர்கள்:
பேரரசு மாதிரி டைரக்டருக டாகுடருக்கு மட்டும் எங்கே இருந்துதான் கிடைப்பாய்ங்களோ? படத்துக்குப் படம் என்ன ஒரு முன்னேற்றம்? இந்த மாதிரி அரியவகை இயக்குனர்கள கண்டுபிடிச்சி கைதூக்கி விடுறது தமிழ்சினிமாவுக்கு நம்ம டாகுடர் செய்து வரும் நீண்ட கால சேவை! தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு நைனாவே செய்வினை வெச்சிக்கிட்டாரோ என்னமோ, டாகுடரை எந்த பெரிய டைரக்டரும் கூப்புடவே இல்ல. ஒரே ஒரு ஆளு அதாங்க, நம்ம டாகுடருக்கும் பெரிய டாகுடரு, ஒரே ஒரு கதைய வெச்சிக்கிட்டு மாத்தி மாத்தி எடுத்து எல்லாத்தையும் கேனயனாக்கிக்கிட்டு இருக்காரே ஷங்கரு, அவருக்கு என்ன ஆச்சோ தெரியல, 3 இடியட்ஸ் படத்த டாகுடர வெச்சி எடுக்கலாம்னு ரொம்ப முயற்சி பண்ணாரு. ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு. ஒரு வேள  தனக்கு பஞ்ச் டயலாக் எழுதற அளவுக்கு ஷங்கருக்கு கெப்பாசிட்டி இல்லேன்னு டாகுடரு கண்டுபுடிச்சிட்டாரோ..!

5. கேரக்டர்:
கோவமே வராத அப்பாவிப் புள்ள மாதிரி நெஜ வாழ்க்கையிலும் நடிக்கிறது சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம்லனு டாகுடரு கொந்தளிக்கற வீடியோவ  கிட்டத்தட்ட எல்லொரும் பாத்திருப்பீங்க. டாகுடருக்கு ஏன் அந்த மாதிரி கோவம் வந்துச்சுன்னு ஒரு வீடீயோ கூட வந்திருக்கு, என்னுடைய ஆல்டைம் பேவரிட் வீடியோவான அதை இங்கே உங்களுக்கு டெடிகேட் பண்றேன்.



6. காமெடி: காமெடி பண்றேன்னு அடிக்கடி காமெடி பீசாகுறது...!
வசீகரான்னு ஒரு படம் வந்துச்சு, (அதுல சினேகா மட்டும் இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்லேயே எல்லோரும் காறி துப்பி இருப்பாய்ங்க....), அந்தப் படத்தப் பார்த்துட்டு பலநாள் நடுராத்திரி எந்திரிச்சு அழுதிருக்கேன், அப்படி ஒரு படம், அப்படி ஒரு நடிப்பு. அந்தப் படத்தப் பார்த்துதான் காமெடிக்கு பின்னால எவ்வளவு ரிஸ்க் இருக்குன்னே உணர்ந்தேன். அப்புறம் ரசிகர்களால ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியலேன்னு ஒரு நல்லெண்ணத்துல டாகுடரு காமெடிய கொஞ்சம் கொறச்சிக்கிட்டாருன்னு கேள்விப்பட்டேன்.

7. அரசியல்: அடுத்த மொதல்வர் திட்டம்!
நாலு பஞ்ச் டயலாக் பேசி படம் ஓடிருச்சுன்னா எல்லாப் பயலும் இத ஆரம்பிச்சுடுறானுகய்யா... கேப்டனும், சரத்தும் சீரழிஞ்சத பாத்தும் கொஞ்சம் கூட அசரலியே நம்ம டாகுடர் தம்பி? இதுல அவரு நைனா வேற வாய வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம பேட்டியா கொடுத்து மக்களை அலற வெக்கிறாரு. என்னைக் கேட்டா டாகுடரு அரசியலுக்கு வர்ரதுதான் நல்லது, ஒண்ணு சினிமாக்காரனுக கொஞ்சம் உருப்படுவானுக,  ரெண்டாவது அரசியல்ல குதிச்சா நாலு பேருகிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்குவாங்க டாகுடரும் நைனாவும்....!

எப்பூடி..... நம்ம டாகுடரோட சிறப்பம்சம்........ இதுக்கே நாக்கு தள்ளுதா? இன்னும் பிடிச்ச படங்கள், பாடல்கள்னு நெறைய இருக்கே? மனச தளரவிடாம  நல்லா மூச்ச இழுத்து விட்டு பாடிய கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மேல படிங்க.

நம்ம சின்ன டாகுடருடைய திரைச்சித்திரங்களை ஆரம்ப காலங்கள்ல இருந்து பார்த்துட்டு(?) வரக்கூடியவன் என்ற தகுதியை (?) வெச்சு அவ்ருடைய பல படங்களையும் அலசி ஆராய்ந்து தான் லிஸ்ட்ட தயார் பண்ணி இருக்கேன். அதனால பதட்டப்படாம தைரியமா படிங்க...!

படங்கள்:
 
1. ஷாஜஹான்: தி கிரேட் கிளைமாக்ஸ்...!
ஷாஜஹான் படம் பாத்துட்டு நாட்ல இருக்க வெந்தது வேகாகது, எச்ச டீ குடிச்சது, கடஞ்சொல்லி பீடி அடிச்சது எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, ஏன்னா டாகுடரு வந்து உசுர குடுப்பாராம்.... த்தூ...  படுவா, உண்மைக் காதல்னா உசுரக் கொடுப்பாராம்ல, இவருபாட்டுக்கு வில்லன்க கிட்ட இருந்து நம்மளை காப்பாத்திடுவாரு, அப்புறம் இவருகிட்ட இருந்து காப்பாத்தறது யாரு?
அப்புறம் இந்தப் பட கிளைமாக்ஸ்ல டாகுடரு கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் இருக்கே.... அதப்பாத்து தமிழ்நாடே சே... ஒலகமே கதறிடிச்சுங்ணா.... இந்த ஒரு சீனுக்காகவே டாகுடரை நாம எல்லோரும் சேர்ந்து மொதல்வராக்கி அழகு பாக்கோனும்!

2. சிவகாசி: தி தண்டர் ஓப்பனிங்...
சிவகாசி படத்துல டாகுடரு ஒரு ஷட்டரு போட்ட கடைக்குள்ள இருந்து அப்படியே வெல்டிங் பண்ணிட்டு வெளிய வருவாரு பாருங்க, அதுலேயும்  பிஞ்சு போன ஷட்டர் துண்டுக எகிறி விழுகும் சீன் இருக்கே ....... சான்சே இல்ல.... இப்படி ஒரு சீனைக் கற்பனை பண்ண டைரக்டர பாராட்டறதா, இல்ல இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்ச நம்ம டாகுடர பாராட்டறதா......  வெல்டன் டாகுடர்.....! ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்னு எல்லா வுட்டுகளையும் ஒரே சீன்ல சாய்ச்சுட்டாரு நம்ம டாகுடர்னு எல்லோரையும் சொல்ல வெச்ச படம் இது...!




2. திருப்பாச்சி: பாசமலரின் ரத்தக்காவியம்
இந்தப் படத்துல சடையக் கட் பண்றது மாதிரி ரொம்ப திரில்லிங் சீன்ஸ்லாம் உண்டு. த்ரிசாவும், மல்லிகாவும் பெட் கட்டிக்கிட்டு டாகுடர கூப்புடும்போது நடந்து வருவாரே டியான் டியான்னு ஒரு நடை!  (இதுக்கு கெரகம், தமிழ்நாடு அரசு விருது வேற கெடச்சிருக்காம்.....!) நடையா அது.......கலக்கல்ங்ணா.......! ங்ணா..... இதுதான் உங்க நிஜ நடைங்ளாங்ணா? இப்படி ஒரு ராஜநடைய வெச்சிக்கிட்டு ஏனுங்ணா சும்மா பைல்ஸ் வந்த மாதிரியே நடந்து பீதிய கெளப்புறீங்க?)

3. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்
இந்தப் படத்தப் புகழாத பத்திரிக்கை, டீவி, ரசிகர்கள், பதிவர்கள் யாருமே  இல்லே....!  அகில ஒலகத்தையே அதிர வெச்ச மாமியாருக்கு சோப்பு போடும் சீனுக்கு இணையா இப்போ மட்டுமில்ல, எப்பவுமே, ஏன் டாகுடரால கூட இனி எடுக்க முடியாது, அவ்வளவு பவர்புல் சீன் அது. டாகுடரோட நைனா கற்பனை வளத்தப் பாத்து புலவர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள்லாம் கதறி அழுத சீன்...!  இதுக்காகவே ரசிகன் படத்த ரிலீஸ் ஆகி ஓடுதுனதுக்கப்புறமும் 2-வது முறையா சென்சார் பண்ணாங்க, எப்பேர்ப்பட்ட சாதனை..... இனி யாராலேயாவது முடியுமா..?

4. துள்ளாத மனமும் துள்ளும்:
இந்தப் படத்துல லேடீஸ் பாத்ரூம் சுவத்தப் புடிச்சித் தொங்கிக்கிட்டே நம்ம தங்கத் தலைவி சிம்ரன் பாடுறத பாப்பாரே ஒரு சீன், மறக்க கூடிய சீனா அது? டாகுடரு வேற டூப்பு போடாம, உயிரைத் துச்சமா மதிச்சு ரெண்டு மணீ நேரமா செவத்துல தொங்கிக்கிட்டே நடிச்ச சீன்... ! ங்ணா......அந்த சீன்ல மூஞ்சில சாணிய அள்ளிப் அடிச்ச மாதிரியே ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்களே... அது எனக்கு ரொம்பப் புடிக்கும்னா......

5. ப்ரண்ட்ஸ்:
தங்கச்சி பிரண்ட்ஸ்கிட்ட ல்தகா சைஆ இருக்கான்னு (கொஞ்ச நஞ்ச அலும்பா பண்ணி இருக்காய்ங்க?) கேட்டு மாட்டிக்கிட்டு வழிவாரே ஒரு வழிசல்....... அட அட அட அடடா... என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு எக்ஸ்பிரசன், ஒரே உணர்ச்சிக்குவியல்தான்..... அப்பிடியே அத அள்ளி ஸ்டில்லா போட்டு வெச்சிட்டா காலமெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்...! கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே, என்ன ஒரு பயங்கரமான சீன்பா அது? அப்புறம் அவருக்கு நெனைவு வரும் பாருங்க, அதப் பாத்து வில்லன்கள்லாம் மெரள்றது நமக்கே திகிலா இருக்கும்.

6. குருவி: தி டெட்லி ஆக்சன்!
படத்துல ஒரு மொட்ட மாடில இருந்து ஜம்ப் (ஜம்ப்பா அது?) பண்ணி பறந்துக்கிட்டே.........................போய்ய்ய்யி........ ட்ரெயின புடிப்பாரே, அந்த சீனுதாங்க டாகுடரு இதுவர நடிச்ச சீன்கள்லேயே பெஸ்ட்டு. அதுலேயும் ட்ரெயின்ல ஏறுனதுக்கப்புறம், விரல சுத்தி ஏதோ பண்ணி அதுல இருந்து இண்டர்வல்னு வர வெப்பாரே, அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன், அப்படி ஒரு ஆழமான சீன் அது. இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு,  பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....

இருந்தாலும் பரவால்ல,  அந்த மயிர்க் கூச்செறியும் காட்சிய இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.



பாடல்கள்

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)

2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)

3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)

4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)

5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)

என்ன ஆச்சுன்னு தெரியல இப்பல்லாம் கொத்து பரோட்டா போடுறதில்ல டாகுடரு.... எல்லாம் நைனாவொட ஐடியாவா இருக்கும்.

சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!

நன்றி கூகிள், யூட்யூப்...!





251 comments:

1 – 200 of 251   Newer›   Newest»
செல்வா said...

vadai!!

செல்வா said...

அப்பாட இந்த வடை வாங்குறதுக்குள்ள எத்தன படபடப்பு .. சரி படிச்சிட்டு வரேன் .

மாணவன் said...

வந்தாச்சு :))

மாணவன் said...

ஆத்தி இது என்னா என் வரலாற்றுபதிவ விட பெருசா இருக்கு... ஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் வந்தாச்சு

மாணவன் said...

என்னா செல்வா படிச்சுட்டு வரேன்னாரு ஆளயே காணும்? ஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

ரெண்டு நாள் ஆகும் போல இருக்கே பதிவ படிக்க .........எம்மாடியோவ்

இம்சைஅரசன் பாபு.. said...

சரி சரி படத்தையே ரெண்டு மணி நேரம் உள்ள உக்கார்ந்து அசராம பார்க்குறோம் ..பதிவ படிக்கிறதுக்கு என்ன வந்துச்சி ..

செல்வா said...

//வேற டாகுடரைப் பத்தி எழுதியே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னாரு (அட நின்னாருங்க...)//

இன்னும் நின்னுட்டு இருக்காரா ? இல்ல உட்கார்ந்துட்டாரா ?

சக்தி கல்வி மையம் said...

வடை போச்சே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி...ஹி.... எல்லோரும் வாங்க வாங்க, பதிவு கொஞ்சம் பெருசுதான், டாகுடர பத்தி எழுதி ரொம்ப நாளாயிடுச்சா.... அதான்.....

தினேஷ்குமார் said...

கவுண்டரே இந்தப்பக்கம் நிலவரம் சரி இல்லை அங்க எப்படி இருக்கு

செல்வா said...

//டாகுடர் ரசிகர்கள் இத்தோட ஸ்டாப் பண்ணிட்டு வேற ஏதாவது ப்ளாக் பக்கமா போயிடுங்க சார். அப்புறம் உங்க இஷ்டம்.//


சும்மா வெறும் டாகுடர் டாகுடர் சொன்னா ? இங்க பெரிய டாகுடர் , சின்ன டாகுடர் இருக்காங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
சரி சரி படத்தையே ரெண்டு மணி நேரம் உள்ள உக்கார்ந்து அசராம பார்க்குறோம் ..பதிவ படிக்கிறதுக்கு என்ன வந்துச்சி ..////

எல்லாம் டாகுடரு கொடுத்த தெகிரியம்?

இம்சைஅரசன் பாபு.. said...

//அடுத்த மொதல்வர் திட்டம்!//

எங்க டாக்டர் தம்பி மட்டும் முதல்வர் ஆகட்டும் ....உனக்கு உள்ள கல்லு உடைக்கிற வேளை தாண்டி

செல்வா said...

//இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ! //

தொட மாட்டேன் , தொட்டா விட மாட்டேன் !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனிமே டாகுடரை தமிழ் நாட்டல வாழ வுடமாட்டிங்க போல..

என்னமோ... செய் ராசா செய்..

வேணா..

வலிக்குது..

அழுதுடுவேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கோமாளி செல்வா said...
//வேற டாகுடரைப் பத்தி எழுதியே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னாரு (அட நின்னாருங்க...)//

இன்னும் நின்னுட்டு இருக்காரா ? இல்ல உட்கார்ந்துட்டாரா ?/////

நம்ம பதிவ பாத்துட்டுத்தான் உக்காருவாராம்.....

செல்வா said...

//பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது நம்ம டாகுடரோட தனி ஸ்பெசாலிட்டி!//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலுமாசம் தூங்கமட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
இனிமே டாகுடரை தமிழ் நாட்டல வாழ வுடமாட்டிங்க போல..

என்னமோ... செய் ராசா செய்..

வேணா..

வலிக்குது..

அழுதுடுவேன்..//////

யோவ், நாங்களே டாகுடரு எங்கள நிம்மதியா வாழ விட மாட்டேங்கிறாருன்னு பொலம்பிக்கிட்டு இருக்கோம்.....

செல்வா said...

//ஒரு வேள தனக்கு பஞ்ச் டயலாக் எழுதற அளவுக்கு ஷங்கருக்கு கெப்பாசிட்டி இல்லேன்னு டாகுடரு கண்டுபுடிச்சிட்டாரோ..!//

மறுபடியும் நடிக்கறதா சொல்லுறாங்க

செல்வா said...

//அப்புறம் ரசிகர்களால ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியலேன்னு ஒரு நல்லெண்ணத்துல டாகுடரு காமெடிய கொஞ்சம் கொறச்சிக்கிட்டாருன்னு கேள்விப்பட்டேன்.//

ஆனா சச்சின் படத்துல காமெடி எடுபட்டுதுல . அதுதான் டாக்குடரோட திறமை ..

பொன் மாலை பொழுது said...

எத்தன நாள் வஞ்சமோ இப்போ தீக்குது நம்ம பன்னி.
// எலி புழுக்க போட்டமேரிக்கி வசனம் பேசறது//
நான் ஏபல தடவை இத எப்படி சொல்றதுன்னு யோசிச்சதுண்டு. சரியா சொல்லிடுச்சிய்யா நம்ம பன்னி.!!
அந்த கடைசி வீடியோ பயங்கர லொள்ளுதான்
கீப்பு இட்டு அப்பு ராஜா.!!

சக்தி கல்வி மையம் said...

நம்ம அண்ணன் ஏதோ சொல்லபோறாருன்னு பொருமையா படிச்சுட்டு வந்தா கடைசியில் குடுத்தாரு ---- சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!--- பனிஸ்மென்ட்..

தினேஷ்குமார் said...

வட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//ஒரு வேள தனக்கு பஞ்ச் டயலாக் எழுதற அளவுக்கு ஷங்கருக்கு கெப்பாசிட்டி இல்லேன்னு டாகுடரு கண்டுபுடிச்சிட்டாரோ..!//

மறுபடியும் நடிக்கறதா சொல்லுறாங்க//////

எல்லாம் நைனா ஐடியாதான்....

செல்வா said...

// மனச தளரவிடாம நல்லா மூச்ச இழுத்து விட்டு பாடிய கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மேல படிங்க.//

நான் அப்படியே கிளம்பி வீட்டுக்குப் போய்டட்டுமா ?

செல்வா said...

//ஏன்னா டாகுடரு வந்து உசுர குடுப்பாராம்.... த்தூ... படுவா, உண்மைக் காதல்னா உசுரக் கொடுப்பாராம்ல, //

இதத்தான் தினத்தந்தில ஒரு ஆளு நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் , கூட்டிட்டு உங்க வீட்டுக்கு வந்திடட்டுமா தல அப்படின்னு கேட்டுது , அதுக்கு டாக்குடர் நான் என்ன ரிஜிஸ்தர் ஆபீசா நடத்துறேன் அப்படின்னு பதில் சொன்னார் தெரியும்ல ..

தினேஷ்குமார் said...

யோவ் கவுண்டரே கிடைக்குற கொஞ்ச நேரத்துல இம்மா நீட்டா பதிவு போட்டா எங்கிட்டு படிக்கிறது

வானம் said...

கொஞ்ச நாளா கஷ்டப்பட்டு போற மாதிரி இருந்தது. இன்னிக்கு நல்லா பிரீயா போகும்னு நெனைக்கிறேன்.

செல்வா said...

///அப்புறம் இந்தப் பட கிளைமாக்ஸ்ல டாகுடரு கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் இருக்கே..//

அந்த சீன பாத்ததுக்கு அப்புறம் நாம ஏன் இன்னும் உயிரோட இருக்கணும் அப்படின்னு நிறைய பேரு நினைச்சாங்க தெரியுமா ?

வானம் said...

நான் நேரத்த சொன்னேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//அடுத்த மொதல்வர் திட்டம்!//

எங்க டாக்டர் தம்பி மட்டும் முதல்வர் ஆகட்டும் ....உனக்கு உள்ள கல்லு உடைக்கிற வேளை தாண்டி////////

எனக்கு மட்டுமா ராசா...?

மொக்கராசா said...

மக்களே இந்த எலக்சன் டைத்துல, எல்லாரும் மறந்து போன விஜய்யை பத்தி பதிவு போட்டுருக்கறே எனக்கென்னமோ ஒரு டவுட், விஜய், பன்னி, அம்மா ,இந்த மூவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குற மாதிரி தெரியுது....

Madhavan Srinivasagopalan said...

//இவருபாட்டுக்கு வில்லன்க கிட்ட இருந்து நம்மளை காப்பாத்திடுவாரு, அப்புறம் இவருகிட்ட இருந்து காப்பாத்தறது யாரு? //

உங்கள் கலாய்க்கும் திறமைக்கு இது ஒரு சிறந்த சாம்பிள்..

எஸ்.கே said...

விஜயின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

செல்வா said...

//. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்//

நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?

பெசொவி said...

37

(oppukku comment poduvor sangam)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தினேஷ்குமார் said...
யோவ் கவுண்டரே கிடைக்குற கொஞ்ச நேரத்துல இம்மா நீட்டா பதிவு போட்டா எங்கிட்டு படிக்கிறது/////

யோவ் டாகுடர பத்தி எழுத ஆரம்பிச்சா கைய்யி நிக்க மாட்டேங்கிதுய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
//. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்//

நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?//////

பரவால்ல, யூ ட்யூப்ல, அந்த சீன் மட்டும் கெடைக்கும் பாத்திடு....

பெசொவி said...

இன்ட்லில ஓட்டு போட்டுட்டேன்.

(ஓட்டு மட்டும் சரியாக போடுவோர் சங்கம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
37

(oppukku comment poduvor sangam)////

அப்போ நீங்க டாகுடரு ரசிகரா?

வானம் said...

//// கோமாளி செல்வா said...
//. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்//

நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?/////

என்னது, ரசிகன் படத்தை பாக்கலியா, யாரங்கே? இந்த செல்வாவை பிடித்து சட்டை பேண்ட்டை கழட்டிவிட்டு நாடுகடத்துங்கள்.

செல்வா said...

//(மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே, என்ன ஒரு பயங்கரமான சீன்பா அது? அப்புறம் அவருக்கு நெனைவு வரும் பாருங்க///

அவரு எப்படி இருந்தாலும் வடிவேலு காமெடிக்கா அந்தப் படம் பாக்கலாம் ..ஹி ஹி

மொக்கராசா said...

//நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?

ஆமா எல்லதயும் நீ நிப்பாட்டனும் , இந்த வடை வாங்குற நிப்பாட்டு , அப்பரம் திங்கள் கிழமை செல்வ கதையை நிப்பாட்டு அப்பரம் தினம் ஒரு மொக்கை அதை நிப்பாட்டு -இதுதான் பரிகாரம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
//இவருபாட்டுக்கு வில்லன்க கிட்ட இருந்து நம்மளை காப்பாத்திடுவாரு, அப்புறம் இவருகிட்ட இருந்து காப்பாத்தறது யாரு? //

உங்கள் கலாய்க்கும் திறமைக்கு இது ஒரு சிறந்த சாம்பிள்..//////

ஹி..ஹி... அதென்னமோ டாகுடருன்னு வந்துட்டா அப்பிடித்தான்....

settaikkaran said...

//உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!//

எனக்கு ஸ்பென்சர்ஸ் முன்னாடி ஒரு இடம் ரிசர்வ் பண்ணிருங்க பானா ராவன்னா! :-)

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நீங்க டாகுடரு ரசிகரா?

//

அதுக்கு என்னை இன்னும் கேவலமா திட்டியிருக்கலாம், பன்னி!

சி.பி.செந்தில்குமார் said...

>>> 3 இடியட்ஸ் படத்த டாகுடர வெச்சி எடுக்கலாம்னு ரொம்ப முயற்சி பண்ணாரு. ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு.

3 இடியட்சில் ஒரு இடியட் அதுவும் மெயின் இடியட் சின்ன டாக்டர்தான் என்பது உறுதி ஆகி விட்டது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை பதிவு செய்கிறேன்.

சக்தி கல்வி மையம் said...

கோமாளி எங்களுக்கும் கொஞ்சம் வழி விடுப்பா..

வானம் said...

டாகுடருக்கும் பன்னிக்குட்டிக்கும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கும்னு நெனைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

என்ன ராம்சாமி..? பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. உங்களுக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்குமா?

மொக்கராசா said...

பன்னி 34 கமெண்டுல ஒரு டவுட்டு வந்து கிளியர் பன்னு

சி.பி.செந்தில்குமார் said...

அப்புறம் அந்த 14 மேட்டர் என்னாச்சு?

செல்வா said...

//அதுலேயும் ட்ரெயின்ல ஏறுனதுக்கப்புறம், விரல சுத்தி ஏதோ பண்ணி அதுல இருந்து இண்டர்வல்னு வர வெப்பாரே, அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன், அ//

அத விட அவர கடலுக்குள்ள போட்டதுக்கு அப்புறம் உசுரோட வருவாரு பாருங்க அதுதான் கொடுமை ..

Speed Master said...

// மாணவன் said...
ஆத்தி இது என்னா என் வரலாற்றுபதிவ விட பெருசா இருக்கு... ஹிஹி


ஐய்யோ

வானம் said...

டாகுடரின் பப்ளிகுட்டி மேனேஜர் பன்னிக்குட்டி வாழ்க.....

Arun Prasath said...

எனப்பா நடக்குது... டாகுடறு பத்தி எழுதினாலே எல்லாரும் குசி அய்டரான்கப்பா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டாகுடரின் அடுத்த படைப்புகள்..
இரண்டாம் பாகங்கள்..

பருந்து.. (குருவி)
அம்பு.. (வில்லு)
தாண்டி... (கில்லி)
குருவிகாரன்... (வேட்டைக்காரன்)
புறா.. (சுறா)
பக்கிரி.. (போக்கிரி)
திருவேற்காடு.. (திருப்பாச்சி)

அடுத்த ரவுண்டு நாங்க தானுங்கோ..
இந்த படமெல்லாம் பாரு

தமிழ்நாட்லே எந்தனை வருஷம் ஓடப் போகுது பாரு..

சுதர்ஷன் said...

haha :D ஒவ்வொரு படமா உன்னிப்பா எழுதியிருகீங்க .. நான் எல்லாம் விசை படம் பாக்றதே நிறுத்திவிட்டேன் .. வேட்டைக்காரன் இன்னும் பாக்கேல்ல ..

செல்வா said...

//2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)//

என்னோட பேர கெடுத்திட்டான்களே ?!! இதுக்கு இன்னும் யாரும் பரிகாரம் சொல்லல ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
அப்புறம் அந்த 14 மேட்டர் என்னாச்சு?/////

கண்டிப்பா உண்டு.... அடுத்த வாரம், (நீங்க இவ்வளவு தூரம் சொல்லியும் இல்லேன்னா எப்படி? )

சி.பி.செந்தில்குமார் said...

ஆன்லைன்ல 18 பேர் இருக்காங்க. ஆனா 10 பேர்தான் கமெண்ட் போட்டிருக்காங்க.மீதி 7 பேர் யாரு? (ரொம்ப முக்கியம்)

வானம் said...

இவன் படம் எல்லாத்தையும் பாத்து வேஸ்ட் பண்ண டையத்துல 4 எருமைமாடு வாங்கி மேச்சுருந்தா இன்னேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருக்கலாம். இப்ப பாரு, ஒட்டகம் மேய்க்க வேண்டியதா போச்சு.

மொக்கராசா said...

பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. உங்களுக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்குமா?

இதை எப்படி நான் புரிஞ்சுகிறது ...இதுல டபுள் மீனிங் இருக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மொக்கராசா said... 34
மக்களே இந்த எலக்சன் டைத்துல, எல்லாரும் மறந்து போன விஜய்யை பத்தி பதிவு போட்டுருக்கறே எனக்கென்னமோ ஒரு டவுட், விஜய், பன்னி, அம்மா ,இந்த மூவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குற மாதிரி தெரியுது....//////

கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கலக்டரு......

எஸ்.கே said...

வாழ்க்கையே ஒரு போர்க்களம்! அதில் விஜய் படத்தையும் பார்க்கணும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. உங்களுக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்குமா?

இதை எப்படி நான் புரிஞ்சுகிறது ...இதுல டபுள் மீனிங் இருக்கா//////

யோவ் இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு? எல்லாம் சிங்கிள் மீனிங்தான்......

மொக்கராசா said...

//நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?

ஆமா எல்லதயும் நீ நிப்பாட்டனும் , இந்த வடை வாங்குற நிப்பாட்டு , அப்பரம் திங்கள் கிழமை செல்வ கதையை நிப்பாட்டு அப்பரம் தினம் ஒரு மொக்கை அதை நிப்பாட்டு -இதுதான் பரிகாரம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// எஸ்.கே said...
வாழ்க்கையே ஒரு போர்க்களம்! அதில் விஜய் படத்தையும் பார்க்கணும்!//////

சில பேருக்கு ரிஸ்க் எடுக்கறதுதான் புடிக்கும் போல....

செல்வா said...

//ஆமா எல்லதயும் நீ நிப்பாட்டனும் , இந்த வடை வாங்குற நிப்பாட்டு , அப்பரம் திங்கள் கிழமை செல்வ கதையை நிப்பாட்டு அப்பரம் தினம் ஒரு மொக்கை அதை நிப்பாட்டு -இதுதான் பரிகாரம்...
//

அதெல்லாம் முடியாது .. நான் இப்பவே போய் தினம் ஒரு மொக்கை சொல்லிட்டு வரேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வானம் said...
இவன் படம் எல்லாத்தையும் பாத்து வேஸ்ட் பண்ண டையத்துல 4 எருமைமாடு வாங்கி மேச்சுருந்தா இன்னேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருக்கலாம். இப்ப பாரு, ஒட்டகம் மேய்க்க வேண்டியதா போச்சு./////

அடடடா மிஸ் பண்ணிட்டேனே, தொழிலதிபர் ஆகி, இன்னேரம் தமன்னாவையோ அனுஷ்காவையோ............. அட கல்யாணம் பண்ணி இருப்பேனே.....?

Arun Prasath said...

சில பேருக்கு ரிஸ்க் எடுக்கறதுதான் புடிக்கும் போல....//

அதெல்லாம் ரஸ்க் சாப்டர மாதிரி

Anonymous said...

//சிவகாசி படத்துல டாகுடரு ஒரு ஷட்டரு போட்ட கடைக்குள்ள இருந்து அப்படியே வெல்டிங் பண்ணிட்டு வெளிய வருவாரு பாருங்க, அதுலேயும் பிஞ்சு போன ஷட்டர் துண்டுக எகிறி விழுகும் சீன் இருக்கே//

!அது போதாதுன்னு பேரரசு திடீர்னு ஒரு சீன்ல வந்து பஞ்ச் டயலாக் விடுறது செம டாப்பு!

மொக்கராசா said...

//இவன் படம் எல்லாத்தையும் பாத்து வேஸ்ட் பண்ண டையத்துல 4 எருமைமாடு வாங்கி மேச்சுருந்தா இன்னேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருக்கலாம். இப்ப பாரு, ஒட்டகம் மேய்க்க வேண்டியதா போச்சு.

அப்ப பன்னி ஒட்டகமா மேய்க்கிறங்க அப்ப எங்கிட்ட துபாய் கழுதை மேய்க்கிறேன்னு சொன்னேங்களே
பயபிள்ளை பொய் சொல்லிருக்குது

எஸ்.கே said...

ராம்சாமி அவர்கள் அடுத்த விஜய் படத்துக்கு வசனம் எழுத வேண்டுமென எதிர்ப்பார்க்கிறோம்!

அஞ்சா சிங்கம் said...

ஐயா தெய்வமே உங்களுக்கு தான் சிலை வைக்கணும் எப்படி பட்ட ஆராய்ச்சி கட்டுரை எழுதிருக்கீங்க .

உங்களுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் தரவில்லை .....................

மொக்கராசா said...

//காரமடை ஜோசியரை புடிச்சி ஒரு டோஸ் விட்ட உடனே அவருதான் சின்ன டாகுடர பத்தி ரொம்ப நாளு எழுதல (?),

வீட்டுல சொந்தமா ஜோசியரை புடிச்சி வளர்க்குறேங்களோ அப்பப்ப உங்க பதிவுல வந்துடுரறே

அஞ்சா சிங்கம் said...

கைகளை தோளுக்கு குறுக்கே வைத்து லேசாக குத்த வைத்தபடி பின்புறத்தை ஆட்டியபடி டாக்டர் வசனம் பேசும் அழகிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. படம் அழுக்கு பய மகன்

MANO நாஞ்சில் மனோ said...

//அந்தப் படத்தப் பார்த்துட்டு பலநாள் நடுராத்திரி எந்திரிச்சு அழுதிருக்கேன்//

இதை படிசிட்டு சிரிச்சி சிரிச்சி அழுகாச்சி அழுகாச்சியா வருது.....

ஷர்புதீன் said...

:)

MANO நாஞ்சில் மனோ said...

//தினேஷ்குமார் said...
கவுண்டரே இந்தப்பக்கம் நிலவரம் சரி இல்லை அங்க எப்படி இருக்கு//


மக்கா தினேஷ் வீட்டை விட்டு வெளிய போயிடாதேயும்.
சாயங்காலம் நிலைமை சரியானா என் ரூமுக்கு வாரும் ஓகே....
பக்கார்டி பக்கார்டி..............................

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி...ஹி.... எல்லோரும் வாங்க வாங்க, பதிவு கொஞ்சம் பெருசுதான், டாகுடர பத்தி எழுதி ரொம்ப நாளாயிடுச்சா.... அதான்.....//


நாளைக்கு டியூட்டிக்கு எந்த கோலத்துல வரபோறேனோ அட ஆண்டவா...

அஞ்சா சிங்கம் said...

மக்கா தினேஷ் வீட்டை விட்டு வெளிய போயிடாதேயும்.
சாயங்காலம் நிலைமை சரியானா என் ரூமுக்கு வாரும் ஓகே....
பக்கார்டி பக்கார்டி.....................
......... /////////////


சும்மா கெடந்த என்ன சொறிஞ்சி விட்டுடாங்க ................

MANO நாஞ்சில் மனோ said...

பன்னி இன்னைக்கு அடுத்த குட்டியை [பதிவு] போட்டாச்சு....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
அப்பாட இந்த வடை வாங்குறதுக்குள்ள எத்தன படபடப்பு .. சரி படிச்சிட்டு வரேன்//


ஆனாலும் நீ பெரிய ஆளுதான் நான் ஒத்துக்குறேன் [மிதிக்கிறேன்]

மொக்கராசா said...

//அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன்,

பன்னியோட டிரேட் மார்க வார்த்தை/படம் 'கக்கூசு' இந்த பதிவுலேயும் வந்துருச்சே

ராஜகோபால் said...

//பாடல்கள்
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)
//

ஆகா இதுவல்லுவா பாடல்கள் இந்த மாதிரி இனிமையாக இனிமேல் யாரால் பாட முடியும். இந்த பாடலை
படுவர்தர்க்ககாகதான் டாக்டர் திரையுலகிள் சஞ்சரிதுல்லார் இதை எல்லாம் கேட்க்கும் பொது நல்லா காச்சன என்னைய காதுல உட்டமாதிரி இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
அப்பாட இந்த வடை வாங்குறதுக்குள்ள எத்தன படபடப்பு .. சரி படிச்சிட்டு வரேன் ./////

ஒரு வழியா செல்வா ரொம்ப நாளு கழிச்சு வட வாங்கிட்டான்யா.... (ஆமா அந்த காக்காவ வாடகைக்கு விட்டுட்டயா....?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ராஜகோபால் said...
//பாடல்கள்
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)
//

ஆகா இதுவல்லுவா பாடல்கள் இந்த மாதிரி இனிமையாக இனிமேல் யாரால் பாட முடியும். இந்த பாடலை
படுவர்தர்க்ககாகதான் டாக்டர் திரையுலகிள் சஞ்சரிதுல்லார் இதை எல்லாம் கேட்க்கும் பொது நல்லா காச்சன என்னைய காதுல உட்டமாதிரி இருக்கு./////////

இந்த மாதிரி பாட்டு இனி கெடக்காதேய்யா நம்ம ஜனங்களுக்கு? இதுக்கு நாம ஏதாவது பண்ணியே ஆகோனும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன்,

பன்னியோட டிரேட் மார்க வார்த்தை/படம் 'கக்கூசு' இந்த பதிவுலேயும் வந்துருச்சே//////

அது இல்லேன்னா இது இல்ல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
ஆத்தி இது என்னா என் வரலாற்றுபதிவ விட பெருசா இருக்கு... ஹிஹி/////

இதுவும் வரலாறுதான் மாணவன்.....ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
ரெண்டு நாள் ஆகும் போல இருக்கே பதிவ படிக்க .........எம்மாடியோவ்/////

பொறுமையாவே படிக்கலாம், ஏன்னா அடுத்த பதிவு இனி அடுத்த வாரம்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//டாகுடர் ரசிகர்கள் இத்தோட ஸ்டாப் பண்ணிட்டு வேற ஏதாவது ப்ளாக் பக்கமா போயிடுங்க சார். அப்புறம் உங்க இஷ்டம்.//


சும்மா வெறும் டாகுடர் டாகுடர் சொன்னா ? இங்க பெரிய டாகுடர் , சின்ன டாகுடர் இருக்காங்க ?/////

எப்பவுமே சும்மா டாகுடருன்னா அது நம்ம டாகுடருதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ! //

தொட மாட்டேன் , தொட்டா விட மாட்டேன் !//////

எத...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது நம்ம டாகுடரோட தனி ஸ்பெசாலிட்டி!//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலுமாசம் தூங்கமட்ட///////

நீ போடுற மொக்கைய சொல்றியா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ!//

யோவ் அழகிய தமிழ்மகன் பாக்கலையா. அதுல டாக்டர் மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரு. அவரும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி தான். யாரை ஏமாத்துற..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... அப்படி ஒரு ஸ்டைலு..//

நீ ஏன் வெட்கபடுற?

மொக்கராசா said...

போலிஸ் வந்துட்டரா இனி ரகசிய போலிஸ் படையும்(இவரே செட் பண்ணுன) வந்துருமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

போலிஸ் வந்துட்டரா இனி ரகசிய போலிஸ் படையும்(இவரே செட் பண்ணுன) வந்துருமே//

நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ!//

யோவ் அழகிய தமிழ்மகன் பாக்கலையா. அதுல டாக்டர் மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரு. அவரும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி தான். யாரை ஏமாத்துற..//////

அப்பிடியா சொல்லவே இல்ல? நானும் அவருக்கு கன்னத்துல மரு இல்லையேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேனே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கராசா said...

போலிஸ் வந்துட்டரா இனி ரகசிய போலிஸ் படையும்(இவரே செட் பண்ணுன) வந்துருமே//

நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை/////

எலேய்ய்ய் கூட்ரா பஞ்சாயத்த அங்க வெச்சி முடிவு பண்ணுவோம் அது யாருன்னு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
போலிஸ் வந்துட்டரா இனி ரகசிய போலிஸ் படையும்(இவரே செட் பண்ணுன) வந்துருமே//////


அது அவரு செட் பண்ணதில்ல, அவரேதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... அப்படி ஒரு ஸ்டைலு..//

நீ ஏன் வெட்கபடுற?/////

நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகறது வாஸ்தவம்தான், ஆனா அதுக்காக, உன்னைய பத்தி சொன்னதக் கூட என்ன வெச்சி திங் பண்ணி பாக்குற பாரு.... நீ ரொம்ப ஒசந்துட்டேய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said... 47
//உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!//

எனக்கு ஸ்பென்சர்ஸ் முன்னாடி ஒரு இடம் ரிசர்வ் பண்ணிருங்க பானா ராவன்னா! :-)//////

அப்போ மொத செல உங்களுக்குத்தான் சேட்டை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
//அப்புறம் ரசிகர்களால ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியலேன்னு ஒரு நல்லெண்ணத்துல டாகுடரு காமெடிய கொஞ்சம் கொறச்சிக்கிட்டாருன்னு கேள்விப்பட்டேன்.//

ஆனா சச்சின் படத்துல காமெடி எடுபட்டுதுல . அதுதான் டாக்குடரோட திறமை ../////

பார்ரா... இந்தப் பயலுக்குள்ளேயும் ஒரு ரசிகன் ஒளிஞ்சிருக்கறத....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
எத்தன நாள் வஞ்சமோ இப்போ தீக்குது நம்ம பன்னி.
// எலி புழுக்க போட்டமேரிக்கி வசனம் பேசறது//
நான் ஏபல தடவை இத எப்படி சொல்றதுன்னு யோசிச்சதுண்டு. சரியா சொல்லிடுச்சிய்யா நம்ம பன்னி.!!
அந்த கடைசி வீடியோ பயங்கர லொள்ளுதான்
கீப்பு இட்டு அப்பு ராஜா.!!//////

வாங்கண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////sakthistudycentre-கருன் said...
நம்ம அண்ணன் ஏதோ சொல்லபோறாருன்னு பொருமையா படிச்சுட்டு வந்தா கடைசியில் குடுத்தாரு ---- சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!--- பனிஸ்மென்ட்..////

அப்போ உங்களுக்கு செல வேணாமா? ஒரு சிலை கேன்சல்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
// மனச தளரவிடாம நல்லா மூச்ச இழுத்து விட்டு பாடிய கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மேல படிங்க.//

நான் அப்படியே கிளம்பி வீட்டுக்குப் போய்டட்டுமா ?///////

போயி.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//ஏன்னா டாகுடரு வந்து உசுர குடுப்பாராம்.... த்தூ... படுவா, உண்மைக் காதல்னா உசுரக் கொடுப்பாராம்ல, //

இதத்தான் தினத்தந்தில ஒரு ஆளு நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் , கூட்டிட்டு உங்க வீட்டுக்கு வந்திடட்டுமா தல அப்படின்னு கேட்டுது , அதுக்கு டாக்குடர் நான் என்ன ரிஜிஸ்தர் ஆபீசா நடத்துறேன் அப்படின்னு பதில் சொன்னார் தெரியும்ல ../////

அட எப்படியோ கரெக்டா பதில் சொல்லி இருக்காரே? நல்ல வேல சூட்டிங்னு நெனச்சி ஏதாவ்து ஏடாகூடமா பண்ணாம இருந்தாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானம் said...
கொஞ்ச நாளா கஷ்டப்பட்டு போற மாதிரி இருந்தது. இன்னிக்கு நல்லா பிரீயா போகும்னு நெனைக்கிறேன்./////

ஏன் கக்கூசுக்கு கள்ள டோக்கன் அடிச்சிட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
///அப்புறம் இந்தப் பட கிளைமாக்ஸ்ல டாகுடரு கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் இருக்கே..//

அந்த சீன பாத்ததுக்கு அப்புறம் நாம ஏன் இன்னும் உயிரோட இருக்கணும் அப்படின்னு நிறைய பேரு நினைச்சாங்க தெரியுமா ?//////

பின்னே டாகுடரு அழுகுறத தாங்க முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
நான் நேரத்த சொன்னேன்//////

நான் பேரத்த சொன்னேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
விஜயின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!//////

இம்புட்டு ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
//// கோமாளி செல்வா said...
//. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்//

நான் இந்தப் படம் பாக்கள, அதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?/////

என்னது, ரசிகன் படத்தை பாக்கலியா, யாரங்கே? இந்த செல்வாவை பிடித்து சட்டை பேண்ட்டை கழட்டிவிட்டு நாடுகடத்துங்கள்.//////

டாகுடரு சுறா படத்துல தமன்னா டவுசர கழட்டுவாரே அந்த மாதிரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கோமாளி செல்வா said...
//(மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே, என்ன ஒரு பயங்கரமான சீன்பா அது? அப்புறம் அவருக்கு நெனைவு வரும் பாருங்க///

அவரு எப்படி இருந்தாலும் வடிவேலு காமெடிக்கா அந்தப் படம் பாக்கலாம் ..ஹி ஹி/////

ஆமா, ஆனா டாகுடரு இடை இடையே அவரு வேலையவும் காட்டிக்குவாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நீங்க டாகுடரு ரசிகரா?

//

அதுக்கு என்னை இன்னும் கேவலமா திட்டியிருக்கலாம், பன்னி!/////

இன்னும் கேவலமானா எப்படி? ஓ நீங்கதான் டாகுடரோட மேனேஜரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
>>> 3 இடியட்ஸ் படத்த டாகுடர வெச்சி எடுக்கலாம்னு ரொம்ப முயற்சி பண்ணாரு. ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு.

3 இடியட்சில் ஒரு இடியட் அதுவும் மெயின் இடியட் சின்ன டாக்டர்தான் என்பது உறுதி ஆகி விட்டது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை பதிவு செய்கிறேன்.//////

வயித்ல பீரு வார்த்தீங்க சிபி, அப்பாடா.... இத வெச்சே இந்த வருசத்த ஓட்டிடலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////sakthistudycentre-கருன் said...
கோமாளி எங்களுக்கும் கொஞ்சம் வழி விடுப்பா../////

எதுக்கு டாகுடர பார்க்கவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானம் said...
டாகுடருக்கும் பன்னிக்குட்டிக்கும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கும்னு நெனைக்கிறேன்////

யார் கண்டது இருந்தாலும் இருக்கும்......ஹி..ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
என்ன ராம்சாமி..? பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. உங்களுக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்குமா?/////

பதிவு மட்டுமா பெருசா இருக்கு? வீடியொவும் தான் பெருசா இருக்கு.... (எப்பூடி, நாங்கள்லாம் டீசண்ட்ல....?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//அதுலேயும் ட்ரெயின்ல ஏறுனதுக்கப்புறம், விரல சுத்தி ஏதோ பண்ணி அதுல இருந்து இண்டர்வல்னு வர வெப்பாரே, அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன், அ//

அத விட அவர கடலுக்குள்ள போட்டதுக்கு அப்புறம் உசுரோட வருவாரு பாருங்க அதுதான் கொடுமை ..///////

அவர் யாரு.... டாக்குடர்ர்ரு ஆச்சே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Speed Master said...
// மாணவன் said...
ஆத்தி இது என்னா என் வரலாற்றுபதிவ விட பெருசா இருக்கு... ஹிஹி


ஐய்யோ//////

ஏன் இந்த ஜெர்க்கு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
டாகுடரின் பப்ளிகுட்டி மேனேஜர் பன்னிக்குட்டி வாழ்க...../////

யோவ்.. அப்புறம் டாகுடரு படம் பாத்து கடுப்பானவன்லாம் தேடி வந்து என்னைய பொளக்க போறானுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
எனப்பா நடக்குது... டாகுடறு பத்தி எழுதினாலே எல்லாரும் குசி அய்டரான்கப்பா/////

பின்னே இந்த மாதிரி அடிவாங்க யாரால முடியும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
டாகுடரின் அடுத்த படைப்புகள்..
இரண்டாம் பாகங்கள்..

பருந்து.. (குருவி)
அம்பு.. (வில்லு)
தாண்டி... (கில்லி)
குருவிகாரன்... (வேட்டைக்காரன்)
புறா.. (சுறா)
பக்கிரி.. (போக்கிரி)
திருவேற்காடு.. (திருப்பாச்சி)

அடுத்த ரவுண்டு நாங்க தானுங்கோ..
இந்த படமெல்லாம் பாரு

தமிழ்நாட்லே எந்தனை வருஷம் ஓடப் போகுது பாரு../////

ஏன் இந்த வெறி? பாவங்க நம்ம ஜனங்க..... விட்ருங்க.. ப்ளீஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// S.Sudharshan said...
haha :D ஒவ்வொரு படமா உன்னிப்பா எழுதியிருகீங்க .. நான் எல்லாம் விசை படம் பாக்றதே நிறுத்திவிட்டேன் .. வேட்டைக்காரன் இன்னும் பாக்கேல்ல ..//////

உங்கள மாதிரி 1-2 பேரு டாகுடருகிட்ட இருந்து தப்பிச்சிடுறாங்கன்னு தான் இந்த மாதிரி டீடெயிலா பதிவு போடுறதே.... எப்பூடி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)//

என்னோட பேர கெடுத்திட்டான்களே ?!! இதுக்கு இன்னும் யாரும் பரிகாரம் சொல்லல ../////

என்னது பேரையுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
ஆன்லைன்ல 18 பேர் இருக்காங்க. ஆனா 10 பேர்தான் கமெண்ட் போட்டிருக்காங்க.மீதி 7 பேர் யாரு? (ரொம்ப முக்கியம்)/////

இனிமே வரும் போது பெரிய வலை ஒண்ணு கொண்டுவந்திடுங்க..... புடிச்சி வெச்சிடுவோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...
//சிவகாசி படத்துல டாகுடரு ஒரு ஷட்டரு போட்ட கடைக்குள்ள இருந்து அப்படியே வெல்டிங் பண்ணிட்டு வெளிய வருவாரு பாருங்க, அதுலேயும் பிஞ்சு போன ஷட்டர் துண்டுக எகிறி விழுகும் சீன் இருக்கே//

!அது போதாதுன்னு பேரரசு திடீர்னு ஒரு சீன்ல வந்து பஞ்ச் டயலாக் விடுறது செம டாப்பு!//////

எல்லாம் டாகுடரால வந்தது, இல்லைன்னா பேரரசுவுக்குலாம் இந்த துணிச்சல் வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//இவன் படம் எல்லாத்தையும் பாத்து வேஸ்ட் பண்ண டையத்துல 4 எருமைமாடு வாங்கி மேச்சுருந்தா இன்னேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருக்கலாம். இப்ப பாரு, ஒட்டகம் மேய்க்க வேண்டியதா போச்சு.

அப்ப பன்னி ஒட்டகமா மேய்க்கிறங்க அப்ப எங்கிட்ட துபாய் கழுதை மேய்க்கிறேன்னு சொன்னேங்களே
பயபிள்ளை பொய் சொல்லிருக்குது/////

எல்லாம் ஒண்ணுதான்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
ராம்சாமி அவர்கள் அடுத்த விஜய் படத்துக்கு வசனம் எழுத வேண்டுமென எதிர்ப்பார்க்கிறோம்!////

இனி தமிழ்நாட்டுக்கே வரக்கூடாதுன்னு ப்ளான் பண்ணுறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
ஐயா தெய்வமே உங்களுக்கு தான் சிலை வைக்கணும் எப்படி பட்ட ஆராய்ச்சி கட்டுரை எழுதிருக்கீங்க .

உங்களுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் தரவில்லை ...................../////

டாகுடர பத்தி எழுதுனாவே டாகுடருதான்னு விட்டுட்டாங்க போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//காரமடை ஜோசியரை புடிச்சி ஒரு டோஸ் விட்ட உடனே அவருதான் சின்ன டாகுடர பத்தி ரொம்ப நாளு எழுதல (?),

வீட்டுல சொந்தமா ஜோசியரை புடிச்சி வளர்க்குறேங்களோ அப்பப்ப உங்க பதிவுல வந்துடுரறே/////

அவரு நம்ம மக்கள் எல்லாருக்குமே ஆஸ்தான ஜோசியர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
கைகளை தோளுக்கு குறுக்கே வைத்து லேசாக குத்த வைத்தபடி பின்புறத்தை ஆட்டியபடி டாக்டர் வசனம் பேசும் அழகிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. படம் அழுக்கு பய மகன்/////

அடுப்புல வெந்த மகன்னு வைங்க கரெக்ட்டா இருக்கும்....

அஞ்சா சிங்கம் said...

தல உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் கிடைத்ததா என்று பார்த்து சொல்லவும் .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
//அந்தப் படத்தப் பார்த்துட்டு பலநாள் நடுராத்திரி எந்திரிச்சு அழுதிருக்கேன்//

இதை படிசிட்டு சிரிச்சி சிரிச்சி அழுகாச்சி அழுகாச்சியா வருது...../////

பாத்து மக்கா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
தல உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் கிடைத்ததா என்று பார்த்து சொல்லவும் ......./////

வரலையே, நானே அன்னிக்கு அனுப்பனும்னு நெனச்சேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அஞ்சா சிங்கம் said...
தல உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் கிடைத்ததா என்று பார்த்து சொல்லவும் .......////

ஈமெயில் ப்ளீஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஷர்புதீன் said...
:)/////

:))

அஞ்சா சிங்கம் said...

தலைவரே என் மெயில் ஐடி selwin76@gmail.com ஒரு மெயில் பண்ணுங்க உங்க கூட கோங்கம் பேசணும் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//தினேஷ்குமார் said...
கவுண்டரே இந்தப்பக்கம் நிலவரம் சரி இல்லை அங்க எப்படி இருக்கு//


மக்கா தினேஷ் வீட்டை விட்டு வெளிய போயிடாதேயும்.
சாயங்காலம் நிலைமை சரியானா என் ரூமுக்கு வாரும் ஓகே....
பக்கார்டி பக்கார்டி..............................//////

பாத்து சூதானமா இருங்கப்பா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி...ஹி.... எல்லோரும் வாங்க வாங்க, பதிவு கொஞ்சம் பெருசுதான், டாகுடர பத்தி எழுதி ரொம்ப நாளாயிடுச்சா.... அதான்.....//


நாளைக்கு டியூட்டிக்கு எந்த கோலத்துல வரபோறேனோ அட ஆண்டவா...//////

டாகுடரு பதிவையே படிச்சாச்சுல, இனி என்ன ஆனாலும் தாங்கற சக்தி வந்துடும் பாருங்க மக்கா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
மக்கா தினேஷ் வீட்டை விட்டு வெளிய போயிடாதேயும்.
சாயங்காலம் நிலைமை சரியானா என் ரூமுக்கு வாரும் ஓகே....
பக்கார்டி பக்கார்டி.....................
......... /////////////


சும்மா கெடந்த என்ன சொறிஞ்சி விட்டுடாங்க ................///////

இல்லேன்னா மட்டும் பச்ச தண்ணி கூட பல்லுல படாது பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னி இன்னைக்கு அடுத்த குட்டியை [பதிவு] போட்டாச்சு....////////

இதுக்கெல்லாம் போயி கணக்கு வெச்சிக்கிட்டு...........

மொக்கராசா said...

பன்னி பிளாக் இருக்கும் வரை விஜய் இருப்பார், விஜய் இருக்கும் வரை பன்னி பிளாக் எழுதிகொண்டே இருப்பார்...... இது ஒட்டி பிறந்த 2 குழந்தைகள்......இது கடவுள் எழுதிய தீர்ப்பு

வாழ்க நலமுடன்.வாழ்க இருவரும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பன்னி பிளாக் இருக்கும் வரை விஜய் இருப்பார், விஜய் இருக்கும் வரை பன்னி பிளாக் எழுதிகொண்டே இருப்பார்...... இது ஒட்டி பிறந்த 2 குழந்தைகள்......இது கடவுள் எழுதிய தீர்ப்பு

வாழ்க நலமுடன்.வாழ்க இருவரும்/////

கடைசில என்னையும் டாகுடருகூட உக்கார வெச்சிட்டியேயா...

உளவாளி said...

ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு.///////////////

தல... திரும்ப டாகுடரதான் சங்கர் புக் பன்னிருகாருன்னு கேள்விபட்டேன்...

வைகை said...

ண்ணா.....ரீலு அந்து போச்சு...வீட்ல லேப்டாப் புட்டுகிச்சு..

வைகை said...

இப்ப நான் என்ன பண்ணனும்? சரி வந்ததுக்கு ரெண்டு வணக்கம்...ஒன்னு உங்களுக்கு..இன்னொன்னு போலிசுக்கு! நீங்கதான் ஒன்னுக்குள்ள ஒண்ணாமல? பிபிசியில் சொன்னாங்க !

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

யோவ் அழகிய தமிழ்மகன் பாக்கலையா?//////


யோவ் போலிசு..பன்னி என்னைய பார்த்ததில்லை!

எம் அப்துல் காதர் said...

EVENING வடை எனக்கே!! இருங்க தொட்டுக்க சட்னி எடுத்துக்கிட்டு வர்றேன்!!

எம் அப்துல் காதர் said...

//நாலு பஞ்ச் டயலாக் பேசி படம் ஓடிருச்சுன்னா எல்லாப் பயலும் இத ஆரம்பிச்சுடுறானுகய்யா//

வெளங்கிடுச்சு அதனால தான் கட்சில சேரலையோ??

எம் அப்துல் காதர் said...

//இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு, பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....//

நா கூட இத நெனச்சு அழுத்திட்டேன்னா பாத்துங்களேன்!!

Yoga.s.FR said...

ஏங்க,ஒங்களுக்கு வேற ஆளே கெடக்கலியா?பாவமில்ல?!

Chitra said...

இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!

சிநேகிதன் அக்பர் said...

இதைப்படிச்சா டாக்குடரே சிரிப்பாரு :)

பாரதசாரி said...

//ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே//
Western style closet மேல உக்கார்ந்திருப்பார்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் உங்க முத்திரைய இதுலேயும் பதிச்சுட்டீங்க! நான் தான் ரொம்ப லேட்டு!! அந்த வீடியோ சான்சே இல்ல!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
பாஸ் உங்க முத்திரைய இதுலேயும் பதிச்சுட்டீங்க! நான் தான் ரொம்ப லேட்டு!! அந்த வீடியோ சான்சே இல்ல!!////

எந்த வீடியோ? இன்னைக்கு நெறைய போட்டிருக்கோமே? (எல்லாமே நல்லாத்தான் இருக்கும் ஹி...ஹி..ஹி)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
அப்புறம் அந்த 14 மேட்டர் என்னாச்சு?/////

கண்டிப்பா உண்டு.... அடுத்த வாரம், (நீங்க இவ்வளவு தூரம் சொல்லியும் இல்லேன்னா எப்படி? )


நானும் வெயிட்டிங்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

(எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது...!)

ஆகா என்ன ஒரு அருமையான கண்டு பிடிப்பு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சுறா படத்துல தமன்னா வாயில தண்ணி எடுக்கிற அந்த உருக்கமான சீனைப்பத்தி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் உங்க டெலிபோன் நம்பர் குடுங்க நாளைக்குப் போன் பண்ணுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

றஜீவன், உங்க ஈமெயில் ப்ளீஸ்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு சின்னத்தாமரை பாட்டுல நம்ம டாக்குட்டர் பிடரியில கீரைக்கட்டு மாதிரி ஒன்னு தொங்குமே? அது என்ன பன்னி அண்ணே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

jenikkuddi@gmail.com

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டெலிபோனில பேசும் போது நீங்க எப்புடி பேசுவீங்க னு அறிய ரொம்ப ஆசையா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
ஒரு சின்னத்தாமரை பாட்டுல நம்ம டாக்குட்டர் பிடரியில கீரைக்கட்டு மாதிரி ஒன்னு தொங்குமே? அது என்ன பன்னி அண்ணே?/////////

என்னது கீரைக்கட்டா..... டாகுடரு என்ன கீரை வியாபாரமா பண்றாரு? ஏதாவது குதிர வாலா இருக்கும் (நான் நமீய சொல்லலை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
டெலிபோனில பேசும் போது நீங்க எப்புடி பேசுவீங்க னு அறிய ரொம்ப ஆசையா இருக்கு!/////

போன்லேயும் நான் என்ன மாதிரிதான் பேசுவேன்... எனக்குத்தான் மிமிக்கிரி தெரியாதே ஹி....ஹி.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

///// மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
டெலிபோனில பேசும் போது நீங்க எப்புடி பேசுவீங்க னு அறிய ரொம்ப ஆசையா இருக்கு!/////

போன்லேயும் நான் என்ன மாதிரிதான் பேசுவேன்... எனக்குத்தான் மிமிக்கிரி தெரியாதே ஹி....ஹி.....

February 18, 2011 12:34 AM

பரவாயில்ல சார்! உங்ககிட்ட பேசினா நான் சந்தோசப்படுவேன் !

Riyas said...

பன்னி சார் ஏதோ ரத்த சரித்திரத்தின் விமர்சன எழுதிறிப்பிங்ளோன்னு நம்பி வந்தேன்... எஸ்கேப்..

ப.கந்தசாமி said...

ரொம்பவே சிரமப் பட்டிருக்கீங்க. இவ்வளவு வேண்டுமா?

Philosophy Prabhakaran said...

முதலில் தொடர்பதிவு எழுதியமைக்கு நன்றிகள்...

Philosophy Prabhakaran said...

// அற்பமான... சீ.... அற்புதமான //
// பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... //
// மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன் //

சூப்பர்...

Philosophy Prabhakaran said...

// டாகுடரு வேற டூப்பு போடாம, உயிரைத் துச்சமா மதிச்சு ரெண்டு மணீ நேரமா செவத்துல தொங்கிக்கிட்டே நடிச்ச சீன்... ! //

புதிய தகவல்... டாகுடர் வாழ்க...

Philosophy Prabhakaran said...

// அந்த சீன்ல மூஞ்சில சாணிய அள்ளிப் அடிச்ச மாதிரியே ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்களே... //

அப்புறம், வாய மூடிக்கிட்டு வாய்க்குள்ள நாக்கை சுழட்டுவாரே... சான்சே இல்லை...

Philosophy Prabhakaran said...

// 1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)

2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)

3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)

4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா) //

நேத்து சென்னையில் சுற்றுலா பொருட்காட்சிக்கு போயிருந்தேன்... அங்கே இந்த மாதிரி பாடல்களை வரிசையா ஒலிபரப்பிட்டு இருந்தாங்க... இந்த பாடல்கள் எல்லாம் எந்தப்படம்ன்னு கண்டுபுடிச்சு டவுன்லோட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன்... ஏன் வேலையை சுலபமாக்கிட்டீங்க...

டக்கால்டி said...

சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம்,//

ஒரு நமீதாவோ, சமந்தாவோ,தமன்னாவோ,அனுஷ்காவோ இல்ல இல்லியானாவோ புடிக்கரத்தை விட்டுட்டு ஆச்சியை ஏன்யா புடிக்கிற?

Unknown said...

தமிழ் தெரிஞ்ச தெரியாத அத்தன பேரையும் தன் நடிப்பால(!?) கொன்னுட்டு இருக்கும் இளைய(35 வயசுக்கு மேல போன நடுவாந்திர!) தலைவலி அவர்களை உசுப்பேத்தி விடுமாறு பதிவிட்ட எங்கள் எதிர் கட்சி தலைவர் அவர்களை வாழ்த்து கூறி எதிர்க்கிறேன்!!

-பாருய்யா இந்தப்புள்ளைக்குள்ள என்னமோ இருந்திருக்குன்னு சொன்னாங்க.ஆனா அது பைல்ஸ்(?) அப்படின்னு கண்டுபுடிச்சி இருக்க உங்க ஆராச்சிக்கு என்ன தர்றது.....!

சௌந்தர் said...

ச்சே விஜய் படத்தை தான் பார்க்க போறது இல்லை இங்க இவர் பதிவையும் லேட்டா படிக்குறேன்

சௌந்தர் said...

இவ்வளவு கமெண்ட் வந்த பிறகு நான் கமெண்ட் போட்டேன் தெரியவ போகுது...

சௌந்தர் said...

விஜய் படத்துக்கு கூட இவ்வளவு கூட்டம் வராது இங்க என்ன கூட்டம் டாக்டர் நீங்க உடனே கட்சி ஆரம்பிங்க

Anisha Yunus said...

//இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு, பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....
//

வடிவேலு ஸ்டைல்ல சொன்னாக்க... “முடியல... அவ்வ்வ்வ்வ்”

Unknown said...

அது ஏன் விஜய்-ன வெறியாயிடுறீங்க...

ராஜ நடராஜன் said...

தப்பித்தவறி இந்த கடை ரோட்டுல வந்துட்டேன்!பாதி தூரம் வந்துட்டேன்.இனி திரும்பி போறது நல்லாயில்ல!அதனால டீ சாப்பிட்டே போயிடறேன்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் பார்த்தா(படிச்சா இல்ல) நிறைய டாகுடருகிட்ட மருத்துவம் பார்த்தவங்க போல தெரியுதே:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அப்புறம் காரமடை ஜோசியரை புடிச்சி//.

ஆஹா...காரமடையா? நீங்க எந்த காரமடைய சொல்றீங்க? கோவை டு மேட்டுப்பாளையம் போற வழில இருக்கே அதா? சும்மா கேட்டேன்...:)

Unknown said...

அண்ணே கொன்னுட்டீங்க போங்க ,உண்மைய சொல்லுங்க எத்தன பாட்டில் பாலிடாயில் குடுச்சிட்டு எழுதுனீங்க

Unknown said...

////பிரண்ட்ஸ் : கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?)////

அண்ணே மேக்கப் இல்லனே உண்மையான முகமே அதுதானே

Unknown said...

////பிரண்ட்ஸ் : கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?)////

அண்ணே மேக்கப் இல்லனே உண்மையான முகமே அதுதானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Riyas said...
பன்னி சார் ஏதோ ரத்த சரித்திரத்தின் விமர்சன எழுதிறிப்பிங்ளோன்னு நம்பி வந்தேன்... எஸ்கேப்../////

இதுவும் ஒரு ரத்த சரித்திரம்தாங்கோ (ஒருவேள இவரும் டாகுடரு ரசிகரா இருப்பாரோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////உளவாளி said...
ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு.///////////////

தல... திரும்ப டாகுடரதான் சங்கர் புக் பன்னிருகாருன்னு கேள்விபட்டேன்.../////

ஒருவேள நைனா போயி ஷங்கரு கால்ல தொபுக்கடீர்னு விழுந்துட்டாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
ண்ணா.....ரீலு அந்து போச்சு...வீட்ல லேப்டாப் புட்டுகிச்சு..//////

பாவம் லேப்டாப்பும் எவ்வளவு நாளுதான் தாங்கும்......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
இப்ப நான் என்ன பண்ணனும்? சரி வந்ததுக்கு ரெண்டு வணக்கம்...ஒன்னு உங்களுக்கு..இன்னொன்னு போலிசுக்கு! நீங்கதான் ஒன்னுக்குள்ள ஒண்ணாமல? பிபிசியில் சொன்னாங்க !/////////

பிபிசிலயா வந்துச்சு? டிஸ்கவரில வந்ததா பேசிக்கிட்டாய்ங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

யோவ் அழகிய தமிழ்மகன் பாக்கலையா?//////


யோவ் போலிசு..பன்னி என்னைய பார்த்ததில்லை!//////

நல்ல வேள பாக்கல........ (ஒரு டாகுடர வெச்சே சமாளிக்கமுடியல!)

Anonymous said...

ஆஹா டாக்டரையும் தாடியையும் அண்ணன் புகழ்றதை படிக்கறதே தனி சுகம்தான்

Anonymous said...

எப்படின்னே இன்னும் 3 தொடர் பதிவா போட்ருக்கலாம் போல

«Oldest ‹Older   1 – 200 of 251   Newer› Newest»