Saturday, January 29, 2011

இதயச்சாரலில்...


வலைப்பூக்களில் எழுதி பப்ளிஷ் செய்வது இலவசமாகவும், சுலபமாகவும் இருப்பதினாலேயே என்னைப் போன்றவர்கள் ஜாலியா எதையாவது எழுதி, கலாய்த்து விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் சீரியசாக ஒன்றும் எழுதவில்லையென்றாலும், தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் படிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். 



அப்பிடித்தான் ஒருநாள் இதயச்சாரல் என்ற வலைப்பூவைப் படிக்க நேர்ந்தது. முழுக்க முழுக்க கவிதை மழை. சுத்தமான தமிழ் வார்த்தைப் பிரயோகம். படிப்பதற்கே ஒரு சுகானுபவம்.

தொடர்ந்து தரம் குறையாமல் எழுதுவது ரொம்ப சிரமம். வெகு சிலராலேயே அதை செய்ய முடிகிறது. அந்த வெகு சிலரில் நானும் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. இதயச்சாரல் எழுதிவரும் தமிழ்க்காதலன் அனாயசமாக அதைச் செய்துவருகிறார். தரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய இன்பத்தமிழ் இதயச்சாரல், பெருமழையாக மாறி உங்கள் இதயங்களைத் தமிழ்த்துளிகளால் நனைக்க ஏதோ எண்ணாலான ஒரு சிறிய முயற்சியாக அவரது வலைப்பூவை எனது பதிவில் அறிமுகம் செய்கிறேன். தமிழைக் காதலிப்பவர்களுக்கு அவரது தளம் அடுத்த தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மனச்சிதறல் என்ற கவிதையிலிருந்து,

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...

கசியும் என் காதல்...!

உன் எழில் கூட்டும்...!!

காற்றில் அலையும் கற்றைக் குழலை

ஒற்றைத் தலை அசைப்பில்...

சரி செய்யும் அழகில்..

சரிந்துப் போகிறேன்...!

செல்லமே...!!


இதயத்திற்கு அருகில் என்ற கவிதையில் இருந்து,

சோர்ந்துப் போகும் விழிகளில்

சொக்கி நிற்கும் உறக்கம்.

ஆயினும்,...

காத்திருக்கிறேன்.

கைப்பேசிக்கருகில்....

காதலுடன்...!

நீளும் இரவில்.....

 
இப்படி சுவராசியமான ரசனையோடு கவிதைகள் நிறைந்திருக்கின்றன, இதயச்சாரல் வலைப்பூவில். காதல் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. விரும்பும் நண்பர்கள் நேரம் கிடைக்கும் போது சென்று வாசிக்கலாம். இதைப் பார்த்துவிட்டு யாராவது ஒருவர் சென்று வாசித்தாலும் சந்தோசப்படுவேன்.

நன்றி (கலியுகம்) தினேஷ், நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு.



முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள் http://www.petitiononline.com/TNfisher/
 
!

71 comments:

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு//
என்னுடைய நன்றிகளும் உங்களுக்கும் பங்கு தினேஷுக்கும்....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா மாப்பு, ஆமா எங்கே ஆளைக்காணோம்?

Speed Master said...

நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு என்னுடைய நன்றிகளும் உங்களுக்கும் பங்கு தினேஷுக்கும்

karthikkumar said...

ட்விட்டேர்ல இருக்கேன் மாம்ஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு என்னுடைய நன்றிகளும் உங்களுக்கும் பங்கு தினேஷுக்கும்//////

நன்றி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
ட்விட்டேர்ல இருக்கேன் மாம்ஸ்.../////

பார்த்தேன், நான் போரம்ல கேட்டேன்....

karthikkumar said...

அப்டியா மாம்ஸ் எங்க நம்ம க்ரூப்ப இன்னும் காணோம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஏற்க்கனவே நானறிந்த நண்பர் தான்.. ஆனாலும் அறியாத நண்பர்களுக்காக அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

மாணவன் said...

நண்பர் தமிழ்க்காதலன் முன்னமே தெரியும் என்றாலும் உங்கள் மூலம் மீண்டும் பல நண்பர்களுக்கு அறிய செய்தமைக்கு நன்றி அண்ணே

நண்பர் தினேஷ்க்கும் நன்றி

Unknown said...

உங்களுடைய அன்பளிப்புக்கு நன்றி முடிஞ்சா என் பதிவுக்கு வரவேட்க்கிறேன்.

மாணவன் said...

நான் புதிதாக பதிவு எழுத தொடங்கிய நேரத்தில் எனது கவிதைகளிலும் எனது தளத்தில் உள்ள சிறு சிறு எழுத்துப்பிழைகளையும் சுட்டிகாட்டி திருத்திக்கொள்வதற்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் நண்பர் “தமிழ்க்காதலன்” அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறேன்....

மங்குனி அமைச்சர் said...

iru padichchittu varren

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி .....சரி ,சரி எவ்ளோ துட்டு வாங்குன ? நானும் கூட இவுங்களுக்கு ஒரு பதிவு போடுறேன் ....... பேமென்ட் எவ்ளோ கிடைக்கும் ?? (மங்கு இது நல்ல தொழிலா இருக்கே )

சக்தி கல்வி மையம் said...

நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு
என்னுடைய நன்றி.நம்மள பத்தி எதாவது????

http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html
டைம் இருந்தா வாங்க..

Unknown said...

நல்ல அறிமுகம், நன்றி சார் ..

வைகை said...

என்ன? வாளின்ட்ரி வலைச்சரமா?!!

வைகை said...

நன்றி அறிமுகத்திற்கு!

வைகை said...

http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.html

பன்னி இங்க வந்தும் பாருங்க! மீனவனின் வலியை!

Unknown said...

அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! :-)

சௌந்தர் said...

இதோ பாருடா இவர்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு

பொன் மாலை பொழுது said...

பன்னிகுட்டிக்கு இன்னமும் கண்ணாலம் ஆகல போல! விதி யார விட்டுது?? அனுபவி ராஜா அனுபவி.

Unknown said...

அண்ணே அண்ணே nandri அண்ணே

ராஜகோபால் said...

நல்ல அறிமுகம், சரி நாம எப்ப கவிதா ச்சி கவித எழுதுவது.

ராஜகோபால் said...

வடை

ராஜகோபால் said...

பன்னி வடை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இருங்க பாஸ் சத்த வேலையா வெளிய போறேன்! வந்து கலந்துக்கறேன்! இன்னிக்கு நம்ம வூட்ல உங்களுக்கு பார்ட்டீங்கோ!

ராஜகோபால் said...

பன்னிக்குட்டி மீனவர் சுடபடுவதை கண்டித்து நாம் அனைவரும் ஒரு பதிவு போடலாமா.

செல்வா said...

அவர் பத்தி எனக்கு ஏற்கெனவே தெரியும் அண்ணா . அவர் கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கும் , ஆனா எனக்குத் தான் புரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
பன்னிக்குட்டி மீனவர் சுடபடுவதை கண்டித்து நாம் அனைவரும் ஒரு பதிவு போடலாமா.//////

போடலாம், ஆனால்
ஏற்கனவே நிறைய பதிவிட்டு விட்டார்கள், நாம் ட்வீட்டரிலும் மற்ற தளங்களிலும் முன்னெடுத்து செல்வோம்,

சி.பி.செந்தில்குமார் said...

rராம்சாமி அண்ணே.. நீங்க அறிமுகப்படுத்திய நண்பர் தினேஷின் நண்பரை நான் முன்பே அறிவேன். அவரது மைனா பாட்டு ரீ மிக்ஸ் இசை அமைப்பாளர் குமரனிடம் ( களவாணி இசை)அறிமுகப்படுத்தி உள்ளே. தேநீர் விடுதி என்ற படத்தை அவர் இயக்கி முடித்து விட்டார். அந்தப்பட ரிலீசுக்குப்பிறகு எடுக்கப்போகும் படத்தில் தமிழ்க்காதலனுக்கு வாய்ப்பு உண்டு. திஒறமைசாலிகளை அடையாளங்காட்டும் உங்களுக்கும் ஒரு சல்யூட்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>Comment deleted

This post has been removed by the author.

ஓப்பனிங்க்லயே ராங்க்ரூட் போட்டதாரு?

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா சனிக்கிழமை பதிவு போட மாட்டீங்களே.. சண்டே தானே போடுவீங்க..?

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக்ல இந்தியன் டைம் செட் பண்ணீட்டீங்க போல.. குட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
உங்க பிளாக்ல இந்தியன் டைம் செட் பண்ணீட்டீங்க போல.. குட்///////

எப்படியோ ஒருவழியா கண்டுபுடிச்சு செட் பண்ணிட்டேன் ஹி...ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
வழக்கமா சனிக்கிழமை பதிவு போட மாட்டீங்களே.. சண்டே தானே போடுவீங்க..?/////


இல்ல இல்ல, சண்டே எப்பவும் போடறதில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
rராம்சாமி அண்ணே.. நீங்க அறிமுகப்படுத்திய நண்பர் தினேஷின் நண்பரை நான் முன்பே அறிவேன். அவரது மைனா பாட்டு ரீ மிக்ஸ் இசை அமைப்பாளர் குமரனிடம் ( களவாணி இசை)அறிமுகப்படுத்தி உள்ளே. தேநீர் விடுதி என்ற படத்தை அவர் இயக்கி முடித்து விட்டார். அந்தப்பட ரிலீசுக்குப்பிறகு எடுக்கப்போகும் படத்தில் தமிழ்க்காதலனுக்கு வாய்ப்பு உண்டு. திஒறமைசாலிகளை அடையாளங்காட்டும் உங்களுக்கும் ஒரு சல்யூட்.////

நல்லவிஷயம் பண்ணியிருக்கீங்க சிபி, நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.html

பன்னி இங்க வந்தும் பாருங்க! மீனவனின் வலியை!/////

பார்த்துட்டேன் வைகை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாத்தி யோசி said...
இருங்க பாஸ் சத்த வேலையா வெளிய போறேன்! வந்து கலந்துக்கறேன்! இன்னிக்கு நம்ம வூட்ல உங்களுக்கு பார்ட்டீங்கோ!////

கொண்டாடிவோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
பன்னிகுட்டிக்கு இன்னமும் கண்ணாலம் ஆகல போல! விதி யார விட்டுது?? அனுபவி ராஜா அனுபவி.////

ஹி..ஹி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 36

////சி.பி.செந்தில்குமார் said...
வழக்கமா சனிக்கிழமை பதிவு போட மாட்டீங்களே.. சண்டே தானே போடுவீங்க..?/////


இல்ல இல்ல, சண்டே எப்பவும் போடறதில்ல posting..

எஸ்.கே said...

நல்ல வலைப்பூ அது! இனிமையான கவிதைகள் சுழலுமிடம் அது!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னையா பொசுக்குன்னு இப்படி திருந்திட்ட .... என்னையா பொசுக்குன்னு இப்படி திருந்திட்ட ....

'பரிவை' சே.குமார் said...

திருவாளர் ராம்சாமி அண்ணா அவர்களுக்கு...
நகைச்சுவை இழையோட எழுதும் உங்கள் வலைப்பூவில் எனது ஆரூயிர் நண்பன் " இதயச்சாரல்" தமிழ்க்காதலன் அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

தமிழ் மீது தீராத மோகம் கொண்டு தமிழ்க்கவிதைகளை தினம் ஒன்றாய் ( ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கூட எழுதுவாய்யா.... சாப்பிட, தூங்க நினைக்க மாட்டன்போல... எல்லாம் வூட்டுக்காரியின்னு ஒருத்தி வந்தா சரியாகுமோ என்னவோ) எப்பவும் தமிழே அவன் காதலி, மனைவி எல்லாம்.

அந்த செந்தமிழ்க்கோன் தமிழ்க்காதலனை அறிமுகப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
என்னையா பொசுக்குன்னு இப்படி திருந்திட்ட .... என்னையா பொசுக்குன்னு இப்படி திருந்திட்ட ...////

என்னது திருந்திட்டேனா? என்னமோ நேத்து வரைக்கும் கொள்ளைக் கோஷ்டி தலைவனா இருந்துட்டு இன்னைக்கு திருந்துன மாதிரியில்ல சொல்ற? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சே.குமார் said...
திருவாளர் ராம்சாமி அண்ணா அவர்களுக்கு.../////

நன்றி குமார், எதுக்கு இந்த திருவாளர் எல்லாம்?

எம் அப்துல் காதர் said...

தல அறிமுகமெல்லாம் சரிதான். நீங்க ரெண்டு 'பிட்டு' கவிதைய எடுத்து விடுங்களேன்!! பிட்டுன்னா ஹி..ஹி.. அந்த பிட்டல்ல. சின்ன சின்ன கவிதையின்னு சொல்ல வந்தேன்.

தினேஷ்குமார் said...

காதலன் காதலி கவிபாடும் நேரமிது
நேரலை காணமாய் வான்பறந்து
வளம் வரும் கவிமழையாய்
செந்தமிழை கோர்வையாக்கி
போர்வையாக போர்த்தியுள்ளாரோ
என்னவோ தமிழ் காதலன் .......

இதயம் கனிந்த நன்றி கவுண்டரே தமிழ்

வினோ said...

அருமையான ப்ளாக் தல... தொடர்ந்து படிக்கிறேன்...

தமிழ்க்காதலன் said...

எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல் வணக்கம். உங்களின் அன்பில் நெகிழும் இந்த வினாடிகளை கண்ணீரால் ஆராதிக்கிறேன். உங்களின் அறிமுகப்படலம் பார்த்து அதிசயிக்கிறேன். எமது வலைப்பூவிற்கு வருகை தந்து, கவிதைகளை நிதானமாய் படித்து ஒரு கவிஞனின் பல்வேறு பரிணாமங்கள் பேசிய விதம் அருமை. உங்களின் எழுத்தின் மீதான மதிப்பீடு புரிகிறது.

உங்களின் இந்த பாராட்டுக்கள் என் அன்னைத் தமிழால் கிடைத்தவை. நல்ல தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.

நம் தாய் மொழிக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பயனுற வாழ்தல் பிறவியின் பயன் என எண்ணுகிறேன். உங்களின் இந்த ஆதரவை தொடர்ந்து தருமாறு வேண்டுகிறேன்.

என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழுணர்ச்சியோடு நவில்கிறேன்.

என்றும் அன்புடன்
-தமிழ்க்காதலன்.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு ராமசாமி அவர்களுக்கு, தமிழ்க்காதலனின் முதல் வணக்கம். உங்களின் அன்பில் நெகிழும் இந்த வினாடிகளை கண்ணீரால் ஆராதிக்கிறேன். உங்களின் அறிமுகப்படலம் பார்த்து அதிசயிக்கிறேன். எமது வலைப்பூவிற்கு வருகை தந்து, கவிதைகளை நிதானமாய் படித்து ஒரு கவிஞனின் பல்வேறு பரிணாமங்கள் பேசிய விதம் அருமை. உங்களின் எழுத்தின் மீதான மதிப்பீடு புரிகிறது.

உங்களின் இந்த பாராட்டுக்கள் என் அன்னைத் தமிழால் கிடைத்தவை. நல்ல தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.

நம் தாய் மொழிக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பயனுற வாழ்தல் பிறவியின் பயன் என எண்ணுகிறேன். உங்களின் இந்த ஆதரவை தொடர்ந்து தருமாறு வேண்டுகிறேன்.

என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழுணர்ச்சியோடு நவில்கிறேன்.

என்றும் அன்புடன்
-தமிழ்க்காதலன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாருங்கள் தமிழ்க்காதலன், உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன். நீங்கள் அடைய வேண்டிய உயரங்கள் நிறைய உள்ளன. நிச்சயம் அடைவீர்கள், வாழ்த்துக்கள்! உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.

செங்கோவி said...

நல்ல அறிமுகம்...//தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் படிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.// படிக்கிறதுக்கே முயற்சியா..சரிதான்!

தமிழ்க்காதலன் said...

அன்பு தோழர் திரு.செந்தில் குமார் அவர்களுக்கு உங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாய் தமிழ் என்னை வளர்த்தமைக்கு தமிழுக்கு என்னை தருகிறேன். உங்களுக்கு என் அன்பையும், பிரியங்களையும் உரிமையாக்குகிறேன். இந்த அன்பு எப்போதும் நீடித்திருக்க வேண்டுகிறேன்.

உங்களுக்கு என் நெஞ்சார்ந்த (நன்றிகள்) நட்பைத் தருகிறேன்.

என்றும் நட்புடன்...
-தமிழ்க்காதலன்.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு தோழன் குமாருக்கு.., உன் அன்பில் நனைந்துகொண்டிருக்கும் "தமிழ் நேசனாய்" நான் என்பதில் சந்தோசம். உங்கள் அன்பிற்கு ஈடாய் அன்பை தவிர வேறு எதை தந்தும் ஈடு செய்ய முடியாது என்பதை நானறிவேன். உங்கள் நல்ல உள்ளத்துக்கு எனது அன்பின் ஆராதனை.

என்றும் அன்புடன்....
-தமிழ்க்காதலன்.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு தம்பி தினேஷ் குமாருக்கு, இந்த பாச உள்ளங்களை பிணைத்து வைக்கும் பாலமே... உன்னை உடன் பிறப்பாய் பெற்றமைக்கு என் உள்ளம் மகிழ்கிறேன்... உன் பிரியங்கள் என்றும் தொடர்ந்திருக்க வேண்டுகிறேன்.
உண்மை பாசத்தை உரிமையாக்கி உன்னில் கலக்கிறேன்.

என்றும் பிரியத்துடன்....
-தமிழ்க்காதலன்.

Anonymous said...

>>> மீனவர்களுக்காக பதிவுலகம் ஒன்றாக போராடட்டும். நம் பலம் உலகுக்கு தெரியட்டும்.

Philosophy Prabhakaran said...

தலைப்பை படித்துவிட்டு நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன்...

Philosophy Prabhakaran said...

இதயச்சாரல் - நான் ஏற்கனவே பின்தொடர்ந்து வருகிறேன்... இருப்பினும் நன்றி...

ஜெய்லானி said...

ம்...நல்ல விஷயம்தான் ..அதையும் பார்த்துட்டு வரேன் :-)

Anonymous said...

பன்னி! என்ன நடக்கிதிங்கே!

தமிழ் தமிழ் -னு சத்தம் தாங்கலேடா சாமி.

Anonymous said...

இதய சாரல் கவிதைகளை அருமையாக விமர்சனம் செய்து இருக்கீறிர்கள்.

Arun Ambie said...

நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு என்னுடைய நன்றி.
நிஜமாகவே அருமையான கவிதைகள்.

அப்படியே நம்ம பக்கம் http://ch-arunprabu.blogspot.com/க்கு வாங்க பழகலாம்!

அஞ்சா சிங்கம் said...

முத்தான கவிதைகள் அறிமுகத்திற்கு நன்றி ................

பாரதசாரி said...

//என்னது திருந்திட்டேனா? என்னமோ நேத்து வரைக்கும் கொள்ளைக் கோஷ்டி தலைவனா இருந்துட்டு இன்னைக்கு திருந்துன மாதிரியில்ல சொல்ற? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி! //

அறிமுகத்துக்கு நன்றி தல...இந்த பதிவுல உங்க பன்ச் மிஸ்ஸிங்னு நெனைச்சேன் ஆனா பின்னூட்டதுதுல பிண்ணிடீங்க:-)

Anonymous said...

நல்லதொரு புதுமை நிறை கவிதை பக்கத்தை அறிமுகப் படுத்திய பன்னிஅண்ணா நீங்க வாழ்க வாழ்க!!

ரகசிய போலீஸ் படை (ஸ்காட்லாந்து பிரிவு)

goma said...

நானும் பார்க்கிறேன்.பன்னிக்குட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் ஆதரவிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி நண்பர்களே!

Jayadev Das said...

Pig Rams அண்ணே, நான் "நான்கு சின்ன புதிர்கள்..":என்ற பதிவுக்கு கீழ்க் கண்ட பின்னூட்டத்தை போட்டேன், ஆனா அதை Blog Owner இதை Block பண்றார். இதில நன் தப்ப எதாச்சும் சொல்லியிருக்கேனா? என் இப்படி பண்றார்? பதிவர்களைப் பத்தி எனக்கு பல விஹயங்கள் புதிராவே இருக்கு? ஏன்னு தெரிஞ்சா பின்னூட்டம் போடாம நம்ம வேலையைப் பார்க்கலாம். [எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா, ஆறுதல் சொல்ல??]

Jayadev Das said...

புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி அல்லது இரும்பு பெட்டி

2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி பெட்டி

புதிர் 2:

\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.

5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\
ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.

புதிர் 3:

மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?

புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jayadev Das said.../////

தலைவரே போட்டி முடியற வரைக்கும் விடை வெளிய தெரியக் கூடாதுன்னு மாடரேசன் போட்டு வெச்சிருக்காங்க, அவ்வளவுதான். இப்போ நீங்க சரியான விடையைச் சொல்லி, அது கமெண்ட்ல வெளியாயிட்டா, அடுத்து வர்ரவங்க யோசிக்க எதுவுமே இருக்காதே? அதுனால 2-3 நாளு கழிச்சி எல்லா கமெண்ட்டும் வெளியாகும்!