Friday, August 26, 2011

பதிவுலக மாமாமேதை சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....





பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.

பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?


****************


டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....


****************

ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........


****************


வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?


ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...


வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?


ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....


****************

எலேய்ய்.. அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...



ரமேஷ்: டேய் என்னடா எல்லாரும் என்னமோ சொல்லிக்கிறாங்க?

இம்சை அரசன் பாபு: இன்னிக்கு ரக்‌ஷாபந்தனாம்யா.... அதான்......

ரமேஷ்: அப்படின்னா....?

இம்சை அரசன் பாபு: கைல ராக்கி கட்டுவாங்க....

ரமேஷ்: ராக்கி சாவந்த எதுக்கு போயி கைல கட்றாங்க?


****************


டெரர்பாண்டியன் : ஹேப்பி ஃப்ரண்ட்ஸ் டே மச்சி...


ரமேஷ் : ஹேப்பி சுறா டே மச்சி...... (எப்பூடி நாங்கள்லாம் யூத்துல?)

டெரர்பாண்டியன்: %^%^*^#*(*@(&$#$......!?!?!

ரமேஷ்: (ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...

டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?

ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?



****************

டெரர் பாண்டியன்: டேய் டேய் ஏன்டா.. பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?

ரமேஷ்: என் கேர்ள்பிரண்டு இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........


****************

ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி இருக்காய்ங்களோ?


சிஐடி வேலைக்கு இண்டர்வியூவுக்கு போனாரு சிரிப்பு போலீசு, அங்க

ஆபீசர்: காந்திய கொன்னது யாரு?

சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா யோசிச்சு பாத்துட்டு) சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க

ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான் டைம்....

உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க டெரர் பாண்டியன் வெயிட் பண்ணிட்டு இருந்தார்.

டெரர்பாண்டியன்: என்னடா மச்சி இண்டர்வியூ என்னாச்சு?

சிரிப்பு போலீஸ்: கெடச்ச மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........


****************

சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங் கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கன்னார்.

அதுக்கு போலீசு,

முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?


****************


சிரிப்பு போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து வரவேண்டும்னு போட்டிருந்தது.


பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!


எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு எடுப்போம்ல....



நன்றி: கூகிள் இமேஜஸ், சில ஜோக்ஸ் மெயிலில் வந்தவையே

!

Wednesday, August 17, 2011

தமிழ்பதிவுலகின் மெகா புதிர் போட்டி இன்று தொடக்கம்...




தமிழ்ப் பதிவுலகில் முதல் முறையாக ஒரு ஆன்லைன் புதிர்போட்டி நடத்த இருக்கிறோம். இது டெரர் கும்மி என்ற எங்கள் நண்பர்கள் குழுவினால் நடத்தபடுகிறது. தெரியாதவர்களுக்காகவும், புதியவர்களுக்காகவும் எங்கள் நண்பர்கள் குழு பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 2010-ன் மத்திய பகுதியில் பட்டாபட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ் இவர்கள் பதிவுகளில் கமெண்ட்டுகளில் மட்டும் நட்பு பாராட்டி கும்மியடித்துக் கொண்டிருந்த எங்களை டெரர் பாண்டியன் ஒரு கூகிள் போரம் மூலமாக ஒன்றிணைத்தார். அந்த போரத்திற்கு டெரர் கும்மி என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் மேலும் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு வளர்ர்சியடைந்தது.  பின்னர் அதற்கென்று ஒரு தனி ப்ளாக்கும் தொடங்கப்பட்டது. ப்ளாக்கிற்குச் சென்றால் எங்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் IIM, Indore நடத்திய க்ளூலெஸ் (KLUELESS) என்னும் புதிர்போட்டி பற்றிய ஒரு விவாதத்தின் போது அது போல ஒரு போட்டியை நாமும் நடத்தினால் என்ன என்று எண்ணம் வந்தது. உடனடியாக அதற்கு அனைத்து நண்பர்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்போது உங்கள் முன் ஹண்ட் ஃபாட் ஹிண்ட் (Hunt for Hint) என்ற புதிர் போட்டியாக பிரம்மாண்டமாக நிற்கிறது. இந்தக் கனவை நனவாக்க ராப்பகலாய் கோடிங் எழுதிய நண்பர்களின் கடின உழைப்பினை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும். இந்தப்போட்டியில் விளையாடும் போது நீங்களும் அதை புரிந்து கொள்வீர்கள். 


இந்த புதிர் போட்டியைப் பத்தி பலர் ஏற்கனவே எங்கள் நண்பர்கள் பதிவுகள்/பஸ்கள் மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு வெப் பக்கத்துல இருந்து அதில் இருக்கும் க்ளூவைக் கண்டு பிடித்து அடுத்த பக்கத்திற்கு போகனும். இந்த க்ளூக்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஒரு படத்திற்குள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது பேஜ் சோர்ஸ், பேஜ் டைடில், URL நேம், இமேஜ் நேம் இப்படி எதிலாவது அந்தக் க்ளூ இருக்கும். அதைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவோ, அல்லது அதற்கான பாக்சிலோ அல்லது URL நேமை மாற்றவோ செய்தால் அது அடுத்த பக்கத்திற்குச் செல்லும், இப்படியே 25 லெவல்கள் வரை கொடுத்திருக்கிறோம். 

25-வது லெவலை அடையும் முதல் 5 நபர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. 


இன்னிக்கு இந்த போட்டி ஆரம்பிச்சாச்சு. உடனே போய் உங்க பேரை பதிவு பண்ணி போட்டியில் கலந்துக்குங்க, கமான்.... சீக்கிரம்.... முதலில் போட்டியை முடிப்பவர்களுக்கே பரிசுகள்...! போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே பாருங்க.  போட்டியில் கலந்து கொள்ள இங்க போங்க.

ரெடி.. ஸ்டார்ட்...... கோ...................




All the Best from Terror Kummi Friends to All Participants....!

!

Saturday, August 6, 2011

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....



என்னது மறுபடியும் பிரச்சாரமா..  ஆளை விடுமய்யா


இன்னும் பயிற்சி வேண்டுமோ?


ஒழுங்கா நடிச்சி நாலு காசு பாத்துட்டு இருந்தேன், உசுப்பேத்திவிட்டு இப்படி ரணகளமாக்கிட்டானுங்களே...?


போதும்யா போதும்.... நான் ஊர்ப்பக்கமா போய் வேற பொழப்ப பாக்கிறேன்....


இனி நம்ம பவர் ஸ்டார் ஸ்பெசல்....


நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....



வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது.....



போங்க சார்.. அப்படி பாக்காதீங்க, எனக்கே வெக்கமா இருக்கு!



அர்விந்த் சாமி மாதிரி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே....?



அதோ அங்க தெரியுது பாரு கோட்டை.. அதை புடிச்சிடனும்...


நன்றி: கூகிள் இமேஜஸ், சவுத் ட்ரீம்ஸ்

Thursday, July 21, 2011

மூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...



Photobucket
ஓடு..ஓடு.. நிக்காம ஓடு.... வேலாயுதம் வருதாம்...!

எழுதுவதற்கு சரக்கு (?)  கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தொடர்பதிவிற்கு அழைத்து வழிகாட்டிய சேட்டைக்காரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  பீலா விடுதல்
ஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது
இ.  பஞ்சாயத்து பண்ணுதல்


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. கையும் களவுமாக மாட்டுவதை
ஆ.பிட்டுப்படம் பார்ப்பது
இ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்
ஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்
இ. விடாத பெரும்பேச்சு (நான் ரொம்ப அப்பாவிங்க...!)


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள்
ஆ. அழகான பெண்கள் பேசுவது
இ.  டிவி சீரியல்கள்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மானிட்டர் (தண்ணி அல்ல)
ஆ. கீபோர்ட்
இ. மௌஸ்


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  மிஸ்டர் பொதுஜனத்தின் பப்ளிசிட்டி அராஜங்கள் 
ஆ. குறள் டீவி
இ. அப்பாடக்டர்ஸ் ஆஃப் டமில் சினிமா


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. மூச்சு விடுகிறேன்
ஆ. மானிட்டரை பார்க்கிறேன்
இ. இதை டைப் பண்ணுகிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்
ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்
இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. சமைத்தல்
ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்
இ.  பேப்பர் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. பதிவு எழுத
ஆ. அல்லக்கைகளை வைத்து பராமரிக்க
இ. கடலை போட


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. பொன்னி அரிசிச் சோறு
ஆ. காரக்கொழம்பு
இ. மாம்பழம்


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. வெட்டி நியாயம்
ஆ. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
இ. புதுசா காதலிக்கிறவனின் புலம்பல்கள்


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...


14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. உயிர்
ஆ. உடம்பு
இ.  உலகம்


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. சாம் ஆண்டர்சன்
ஆ. பவர் ஸ்டார் சீனிவாசன்
இ. டீ ஆர்


அது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம். 
!

Monday, July 18, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய வில்லன்ஸ்...


தமிழ்சினிமா பல்வேறு துறைகளில் வெகுவேகமாக வளர்ச்சி நடை போட்டாலும், இன்னும் கைவிடமுடியாமல் இருக்கும் சில விஷயங்கள் காதல், வில்லன், சண்டை, ஹீரோயிசம்! அதில் வில்லன்களை வைத்துக் கொண்டு நம்மவர்கள் பண்ணும் அநியாயங்கள் இருக்கே, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் அதைவிட வேறு காமெடியே தேவையில்ல.




ஒருகாலகட்டத்தில் வில்லன்களுக்கென்று தனி கெட்டப்புகள் இருந்தன. மொட்டைத்தலை, முரட்டு உடல்வாகு, கெடா மீசை, கோபமான முகம், குறுகுறுப்பான பார்வை, எகத்தாளச் சிரிப்பு, கர்ஜிக்கும் வசனங்கள் என்று அவர்கள் உலகமே வேறு. தற்போது வரும் வில்லன்கள் ஏதாவது ஒரு மேனரிசத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படி வில்லன்கள் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வைத்திருந்தும், ஏன் பிரம்மாண்டமாய் ஆறு அடி உயரத்தில ஆஜானுபாகுவாய் இருந்தாலும், காய்ந்த கருவாடு மாதிரி இருக்கும் ஹீரோக்களிடம் உருண்டு உருண்டு அடிவாங்கித்தான் ஆகவேண்டும், வேறு வழி? ஹீரோக்கள் தோற்க முடியுமா?


அப்புறம் நம் வில்லன்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கே, அப்பல்லாம் இவர்களுக்கு விதவிதமான ஆயுதங்கள் செய்வதற்கென்றே நிறையத் தொழிற்சாலைகள் இருந்திருக்கும் போல. 90-களில் வந்த படங்களை பார்த்தால் தெரியும். வளையம் வளையமாய் கத்திகள், முள் வைத்த தயிர் கடையும் மத்து, ட்ரில்லிங் மிசின் போல் சுத்தும் கத்தி, முள் வைத்த ஜல்லிக் கரண்டிகள் என்று ஏகப்பட்ட நவீன (?) ஆயுதங்களை வைத்து சண்டை போடுவார்கள், ஹீரோ வழக்கம் போல தெனாவெட்டாக வந்து கையால் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மடிப்பு கலையாமல் செல்வார்.


80-களில் வந்த எல்லாப்படத்துலேயும் இந்தக் காட்சி தவறாம இருக்கும், வில்லன் தன் பரிவாரங்களுடன் யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பார். அங்கே சென்று வில்லன்களை ஒழிக்க திட்டமிடும் ஹீரோ, கதாநாயகி அல்லது கவர்ச்சி நாயகியின் உதவியோடு கூத்தாடிகளை போல வேசம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கவர்ச்சி ஆட்டம் போடுவார். அதுவும் நம்ம ஹீரோ மாறுவேசம்னு சொல்லிக்கிட்டு ஒரு தடித்த மீசையும், மருவும் வெச்சுக்கிட்டு வருவாரு பாருங்க, அது ஹீரோ, ஹீரோயின்தான்னு தியேட்டரில் இருக்கும் எல்கேஜி பையனுக்கு கூட விளங்கும், ஆனா உள்ளூர் மற்றும் சர்வதேச போலீசிற்கு தண்ணி காட்டிட்டு கள்ளக் கடத்தல்களில் ஈடுபடும் வில்லன்கள் ஒருத்தனுக்கும் தெரியாதாம். பாவம்யா வில்லனுங்க, இவ்வளவு கேவலமாவா காட்டறது? இது ஏதோ ஒரு படத்தில் எடுத்திருந்தால்கூட பரவாயில்லை, டைரக்டர் யோசிக்க (?) டைம் இல்லாம எடுத்துட்டாருன்னு விட்ரலாம், ஆனா எத்தனை படங்களில் இதே காட்சிய வெச்சி டார்ச்சர் பண்ணாய்ங்க தெரியுமா?




அப்புறம் வில்லன்கள் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நடிகையும் இருப்பார். அவர் எப்போதும் முக்கிய வில்லனுக்கு செட்டப்பாகவே வருவார். ஆனா அடிக்கடி கெட்ட ஆட்டம் போட்டு எல்லாருக்கும் கவர்ச்சி விருந்து வைப்பார். கடைசியில் திடீரென்று காரணமே இல்லாமல் ஹீரோ மீதோ ஹீரோயின் மீதோ இரக்கபட்டு வில்லனுக்கெதிராக அவர்களுக்கு உதவிசெய்து பெருமையுடன் வில்லன் கையால் உயிரை விடுவார். நாமும் கிளைமாக்ஸ் சுவராசியத்தில் பெரிதாக கண்டுகொள்ளமாட்டோம்.


சிலபடங்களில் வில்லன்களுக்கு திடீரென்று ஒரு பெரிய விஐபியை போட்டுத்தள்ள வேண்டி வரும். உடனே அவர்கள், எத்தனை அல்லக்கைகளை வைத்திருந்தாலும், மும்பையில் இருந்து ஒரு விஷேசமான கொலையாளியை வரவழைப்பார்கள் (அந்த கேரக்டரையும் இதுவரை ஒரே நடிகர்தான் பெரும்பாலான படங்களில் பண்ணி இருக்கிறார்). அவர் மெயின் வில்லனை பார்த்து ஸ்பாட் கேஷ் பேமெண்ட் வாங்கிக் கொண்டு, முடித்துக் காட்டுகிறேன் என்று சவால் வேறு விட்டுவிட்டு வேலையை தொடங்குவார்.  அந்த விஐபி வரும் வழியில் ஒரு கட்டிடத்தில் ஏறி தன் அதிநவீன(?) ஆயுதங்களை பொறுத்தி வெகுநேரமாக ஜூம் பண்ணிக் குறிபார்த்துக் கொண்டே காத்திருப்பார். ஆனால் பாவம் என்ன பண்றது, நம்ம ஹீரோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ரொம்பக் கேசுவலாக வந்து விஐபியை காப்பாற்றி விடுவார்.




சில சண்டைக்காட்சிகளில் ஹீரோவும் சைடு வில்லனும் ஆக்ரோசமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள், சுற்றி நிற்கும் வில்லனின் அல்லக்கைகள் எதிரி மாட்டிக் கொண்டான் என்று எல்லாரும் சேர்ந்து போட்டுத்தள்ளுவார்களா, அதைவிட்டுவிட்டு ஏதோ மெரினா பீச்சில் மீன் பொறிப்பதை எச்சி ஒழுக வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, அல்லக்கைள் எல்லாரும் சேர்ந்து ஹீரோவை அடிக்கும் போது எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போய் அடிக்க மாட்டார்கள். சொல்லி வெச்ச மாதிரி கியூவில் நின்று ஒவ்வொருத்தனாகத்தான் போய் அடிப்பார்கள். ஹீரோ ஒருத்தனை அடித்து முடித்துவிட்டு அடுத்தவனுக்கு வெயிட் பண்ணுவார். போய் வரிசையாக அடிவாங்கி சரிவார்கள். ஆனால் பாருங்க கம்பி, உருட்டுக்கட்டைனு எக்குத்தப்பா அடிவாங்கினாலும் திரும்ப திரும்ப ஹீரோவிடம் வந்து அடிவாங்கி கதறியபடி பறந்து சென்று விழுவார்கள். கொடுத்த காசிற்கு என்ன ஒரு விசுவாசம் பார்த்தீர்களா?


வில்லன்களிடம் ஏகப்பட்ட நவீன மெசின்கன்கள் இருக்கும், ஹீரோவைக் குறிவெச்சு சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவார்கள், ஆனால் ஹீரோ தரையில் சாவகாசமாக உருண்டபடியே தப்பிப்பார். ஆனால் அவர் சின்ன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தெனாவெட்டாக சுடுவார், எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு அல்லக்கை செத்து விழுவான். ஹீரோ தன்னிடம் துப்பாகி இருந்தாலும்,  வெறும் கையாலேயே (?) பலரை போட்டுத் தள்ளிவிட்டு கடைசியில் மெயின் வில்லனிடம் வந்து சேர்வார். தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு எழுதப்படாத சட்டம். வில்லனிடம் எத்தனை அல்லக்கைகள் இருந்தாலும், ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேர் மோதாமல் படம் முடியாது. அதுவும் அவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றார்கள் என்றால் கையால்தான் சண்டை போடுவார்கள். அதுவரை வைத்திருந்த ஆயுதங்கள் எங்கே போகும் என்றே தெரியாது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு தங்கள் பலத்தை காண்பிப்பார்கள். அதுவரை அடியே வாங்காமல் இருக்கும் ஹீரோவும் ஓரிரண்டு அடிகள் வாங்குவார். இரத்தம் கூட வரும்.




பழைய படங்களில் பெரும்பாலும் கிளைமாக்சில் சண்டை முடிந்தவுடன் போலீஸ் வந்து யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர் கந்தசாமி என்பார்கள். இடைக்கால, மற்றும் தற்கால படங்களில் சண்டை முடிந்து ஹீரோ வில்லனை கொல்ல முயன்றுவிட்டு வேண்டாம் என்று ஆயுதத்தை கீழே அதுவும் வில்லனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் விட்டுச் செல்வார். உடனே வில்லன் அதை எடுத்துக் கொண்டு ஹீரோவைக் கொல்ல ஓடிவருவார்.  இந்த இடத்தில் ஏதாவது செகண்ட் ஹீரோயின் என ஏதாவது கேரக்டர் இருந்தால் அதை ஹீரோவை காப்பாற்ற வைத்து பலி கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றால், வில்லனை ஹீரோவே தடுத்து நிறுத்தி மிக நீண்ட வசனம் ஒன்று பேசுவார். அந்த நொடிவரை ஆயிரத்தெட்டு அடிவாங்கியும் திருந்தாமல் இருக்கும் வில்லன், இந்த வசனத்தை கேட்டதும் உடனே ஹீரோவை கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீரோடு திருந்தி நிற்பான். படமும் முடியும், மக்களும் கண்ணீரோடு தியேட்டரில் இருந்து எந்திரிப்பார்கள். இதற்கு அந்த வசனத்தை படம் ஆரம்பிக்கும் போதே பேசித் தொலைத்து இருந்தால், இத்தனை பிரச்சனைகள் வந்திருக்காது, நாமும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்திருப்போம்.... இல்லையா?

(கொஞ்சம் வேற மாதிரியா ட்ரை பண்ணேன், ஆனா நீண்ட....  பதிவா போச்சு... !)

நன்றி: திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற பேச்சுக்கள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ்  கட்டுரை இப்பதிவிற்கு உதவியாக இருந்தன.
!

Thursday, July 14, 2011

இருட்டில் வந்த அந்த உருவம்....!





உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதோ நின்று கொண்டிருந்தது. பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது. அமைதியாகப்படுத்தான். அது நெருங்கி வந்து முகத்தில் கையை வைத்து வருடியது. அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. மயக்கம் வருவது போல் உணர்ந்தான். அந்த உருவம் சற்று நிறுத்தி பின் மறுபடி வருட ஆரம்பித்தது. 


கணேஷ் இப்போது அரைமயக்க நிலையில் இருந்தான். மெல்ல நினைவு வருவது போலும் இருந்தது. யார் நீ, என்ன செய்கிறாய் என்று கேட்க நினைத்தான் வாயை அசைக்க முடியவில்லை. அதற்குள் அந்த உருவம் பயப்படாதே, நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம் சற்று பொறுத்துக்கொள் என்று அவன் மனதில் பதிய வைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். அதற்குள் அவனும் அது போலவே மாறி இருந்தான்.



இனி வேறு வழியில்லை, எழுந்து வெளிய ஓடிவிடலாம் என்று முடிவு செய்து எழ முயன்றான், ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த உருவம் அசையவே முடியாத அளவுக்கு அவனை உறையவைத்துவிட்டது.. ஆற்றாமையோடு எரிச்சலும் சேர்ந்து கொள்ள கோபமாய் அந்த உருவத்தைப் பார்த்தான். அது எக்காளமிட்டு சிரித்தது. கணேஷிற்கு கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது. 


அந்த உருவம் மறுபடியும் அவன் அருகில் வந்து அவன் முகத்தில் கைவைத்துத் தடவியது. அதே கெட்ட வாடை. நெஞ்சில் ஏதோ கரிப்பது போல் இருந்தது. ஏப்பம் வேறு வந்தது போல் உணர்ந்தான். அதில் ஏதோ புளித்த வாடை, மெல்ல இருமினான். அந்த உருவம் இப்பொது அவன் முகத்தில் இருந்து இறங்கி வயிற்றில் கைவைத்து அழுத்தத் தொடங்கியது. நெஞ்சுக்குள் என்னமோ பந்தாய் மேலே உருண்டு வந்தது. 


பயந்து போய் அந்த உருவத்தை பரிதாபமாக பார்த்தான் கணேஷ். அதைப் புரிந்து கொண்ட அந்த உருவம் குடல்வழியாக உனது ஆத்மாவை வெளியே எடுக்க போகிறேன் என்று அவன் மனதில் பதிய வைத்தது. என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் பொலக் என்று வெளிய வந்து விழுந்தது அவன் குடல், மறுபடியும் ஓங்கரித்தான்.... 


டேய்ய் என்று கதறீயபடி முதுகில் ஓங்கி அறைந்தது அந்த உருவம்.கணேஷ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். பார்த்தால், அருகில் தலையை பிடித்தபடி ரூம் மேட் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். ஏன்டா எழவெடுத்தவனே, இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...? எத்தனை தடவடா எழுப்புறது?




இது டெரர் பாண்டியன் அவர்களின் பதிவிற்கு (கலி முத்தி போச்சி..) எதிர் கவிதை.. ச்சே.. எதிர் கதை என்று மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...! (இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)

படத்திற்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Thursday, July 7, 2011

கக்கூஸ்ல உக்காந்து பேசாதீங்க....!





நம்ம டெரர் பாண்டி ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால, அவசரமா கக்கா போக வேண்டியதா போச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டு அங்கே இங்கே அலைஞ்சு ஒருவழியா டாய்லெட்ட தேடி கண்டுபுடிச்சாரு. அங்க வரிசையா அஞ்சாறு டாய்லெட்ஸ் இருந்துச்சு, அதுல காலியா இருந்த ஒண்ணுல போய் அப்பாடான்னு உக்காந்தாரு.

அப்போ திடீர்னு பக்கத்து டாய்லெட்ல இருந்து ஒரு குரல்.

என்னப்பா எப்படி போய்ட்டு இருக்கு?

டெரருக்கு ஆச்சர்யம்... ஒரு செகண்ட் யோசிச்சிட்டு பதில் சொன்னாரு,

இன்னிக்கு கொஞ்சம் பரவால்ல சார், அவ்வளவு மோசமில்ல...

கொஞ்ச நேரம் சைலண்டா இருந்துச்சு.. திடீர்னு மறுபடி அதே குரல்,

அப்புறம் எல்லாம் முடிஞ்சதா?

டெரருக்கு ரொம்ப சந்தோசம், கக்கூஸ் போகும் போது கூட மக்கள் இம்புட்டு பாசமா இருக்காய்ங்களேன்னு, உடனே பதில் சொன்னாரு,

இதோ முடிஞ்சிட்டே இருக்கு சார்...!

உடனே மறுபடியும் அதே குரல், கோபமா....

சாரிடா மாப்ள அப்புறமா கால் பண்றேன், இங்க ஒரு பன்னாடை எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கான்....

டெரர்: ?!?!?!?!


********


பறங்கிமலை ஜோதிக்கு கெளம்பி வாடா, இன்னிக்கு ஸ்பெசல் ஷோ இருக்குன்னு செல்வாவுக்கு போன் பண்ணி கூப்பிட்டார் சிரிப்பு போலீசு. அந்த நேரம் பார்த்து செல்வா கைல காசு கம்மியா இருந்துச்சு, என்ன பண்றதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்ச செல்வா, ஒரு முடிவுக்கு வந்தவரா பறங்கிமலை ஜோதி போற ஒரு பஸ் பின்னாடி ஓட ஆரம்பிச்சார்.

தியேட்டர் போய் சேர்ந்த உடனே,

சிரிப்பு போலீஸ்: ஏன்டா இப்படி வேர்த்து மூச்சு வாங்கிட்டு வர்ர? என்னடா பண்ணே?

செல்வா: இல்லண்ணா கைல காசு கம்மியா இருக்கு, அதுனால பஸ் பின்னாலேயே ஓடிவந்து 5 ரூபாய மிச்சம் பண்ணிட்டேன்.. எப்படி என் டெக்குனிக்கு?

சிரிப்பு போலீஸ்: போடா ராஸ்கல், டாக்சி பின்னாடி ஓடி வந்திருந்தா 500 ரூபாய மிச்சம் பண்ணி இருக்கலாம்ல?


********




நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட்டு ஒரு ஆபீஸ்ல ஆபீஸ் பாயா வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் மேனேஜரு கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வா அப்படின்னார். வெங்கட்டும் எடுத்துட்டு வந்தார். 

வெங்கட்டு ரொம்ப சீக்கிரம் எடுத்துட்டு வந்துட்டாருன்னு மேனேஜருக்கு ஒரே சந்தோசம்,  உடனே பாராட்டுனாரு, இதுவரைக்கும் இங்க வேல செஞ்ச எந்த ஆபீஸ் பாயும் இவ்வளவு ஸ்பீடா தண்ணி எடுத்துட்டு வந்ததே இல்லப்பா.... வெரி குட்....

இப்படியே கொஞ்சநாள் போச்சு, ஒருநாள் வெங்கட்டு தண்ணி எடுத்துட்டு வர ரொம்ப டைம் ஆகிடுச்சு, மேனேஜரு பயங்கர கோபமா கத்த ஆரம்பிச்சிட்டார். சவுண்ட கேட்டுட்டு வெங்கட்டு கையில் வெறும் கிளாசோட பயந்துக்கிட்டே வந்தார்.

யோவ் இன்னிக்கு என்னய்யா ஆச்சு, இவ்வளவு டைம் ஆகியும் ஏன்யா வெறும் கிளாசோட வந்திருக்க?

சார், நான் டெய்லி தண்ணி எடுத்துட்டு வர்ர தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்காங்க சார்.... இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியும் இன்னும் அவங்க வெளிய வரல, அதான் இன்னும் தண்ணி எடுக்கல சார்..!

மேனேஜர்: ^(#@;(#@#$$%%




இப்போ ஒரு புதிர் (?):
மூணு எறும்புகள் வரிசையா போய்ட்டு இருந்துச்சாம், மொத எறும்பு கிட்ட போய் உனக்கு பின்னாடி எத்தனை பேருன்னு கேட்டா, அது சொல்லுச்சாம்,
எனக்கு பின்னாடு ரெண்டு எறும்புங்க வருது

ரெண்டாவது எறும்பு,
எனக்கு முன்னாடி ஒண்ணும் பின்னாடி ஒண்ணும் வருது,


மூணாவது எறும்பு,
எனக்கு பின்னாடி ரெண்டு எறும்பு வருதுன்னு சொல்லுச்சாம், ஏன்? 


கண்டுபுடிங்க...


ஏன்...
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.????


அது பொய் சொல்லிருக்கு.....!




படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!
ஜோக்குகள் மெயிலில் வந்தவையே!


!