Wednesday, August 17, 2011

தமிழ்பதிவுலகின் மெகா புதிர் போட்டி இன்று தொடக்கம்...
தமிழ்ப் பதிவுலகில் முதல் முறையாக ஒரு ஆன்லைன் புதிர்போட்டி நடத்த இருக்கிறோம். இது டெரர் கும்மி என்ற எங்கள் நண்பர்கள் குழுவினால் நடத்தபடுகிறது. தெரியாதவர்களுக்காகவும், புதியவர்களுக்காகவும் எங்கள் நண்பர்கள் குழு பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 2010-ன் மத்திய பகுதியில் பட்டாபட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ் இவர்கள் பதிவுகளில் கமெண்ட்டுகளில் மட்டும் நட்பு பாராட்டி கும்மியடித்துக் கொண்டிருந்த எங்களை டெரர் பாண்டியன் ஒரு கூகிள் போரம் மூலமாக ஒன்றிணைத்தார். அந்த போரத்திற்கு டெரர் கும்மி என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் மேலும் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு வளர்ர்சியடைந்தது.  பின்னர் அதற்கென்று ஒரு தனி ப்ளாக்கும் தொடங்கப்பட்டது. ப்ளாக்கிற்குச் சென்றால் எங்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் IIM, Indore நடத்திய க்ளூலெஸ் (KLUELESS) என்னும் புதிர்போட்டி பற்றிய ஒரு விவாதத்தின் போது அது போல ஒரு போட்டியை நாமும் நடத்தினால் என்ன என்று எண்ணம் வந்தது. உடனடியாக அதற்கு அனைத்து நண்பர்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்போது உங்கள் முன் ஹண்ட் ஃபாட் ஹிண்ட் (Hunt for Hint) என்ற புதிர் போட்டியாக பிரம்மாண்டமாக நிற்கிறது. இந்தக் கனவை நனவாக்க ராப்பகலாய் கோடிங் எழுதிய நண்பர்களின் கடின உழைப்பினை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும். இந்தப்போட்டியில் விளையாடும் போது நீங்களும் அதை புரிந்து கொள்வீர்கள். 


இந்த புதிர் போட்டியைப் பத்தி பலர் ஏற்கனவே எங்கள் நண்பர்கள் பதிவுகள்/பஸ்கள் மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு வெப் பக்கத்துல இருந்து அதில் இருக்கும் க்ளூவைக் கண்டு பிடித்து அடுத்த பக்கத்திற்கு போகனும். இந்த க்ளூக்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஒரு படத்திற்குள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது பேஜ் சோர்ஸ், பேஜ் டைடில், URL நேம், இமேஜ் நேம் இப்படி எதிலாவது அந்தக் க்ளூ இருக்கும். அதைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவோ, அல்லது அதற்கான பாக்சிலோ அல்லது URL நேமை மாற்றவோ செய்தால் அது அடுத்த பக்கத்திற்குச் செல்லும், இப்படியே 25 லெவல்கள் வரை கொடுத்திருக்கிறோம். 

25-வது லெவலை அடையும் முதல் 5 நபர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. 


இன்னிக்கு இந்த போட்டி ஆரம்பிச்சாச்சு. உடனே போய் உங்க பேரை பதிவு பண்ணி போட்டியில் கலந்துக்குங்க, கமான்.... சீக்கிரம்.... முதலில் போட்டியை முடிப்பவர்களுக்கே பரிசுகள்...! போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே பாருங்க.  போட்டியில் கலந்து கொள்ள இங்க போங்க.

ரெடி.. ஸ்டார்ட்...... கோ...................
All the Best from Terror Kummi Friends to All Participants....!

!

38 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

போட்டியில் பங்கு பெரும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..

மாணவன் said...

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! :)

வைகை said...

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! :)

M.R said...

நல்ல ஒரு விஷயம் நண்பரே .


போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

M.R said...

தமிழ் மணம் 5

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! :)

MANO நாஞ்சில் மனோ said...

கமான் ஸ்டார்ட் மியூசிக்.......ஏ டண்டனக்கா டண்டனக்கா.......!!!

MANO நாஞ்சில் மனோ said...

கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு ஹி ஹி.....!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ரெடி ஸ்டடி கோ

ஒ நோ..

பேஜ் ஓபன் ஆகாலியே எனக்கு...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல விஷயம்
புது முயற்சி

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கண்டிப்பா கலந்து கொள்ளுவோம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

This website is temporarily not available. Our apologies for the inconvenience.

னு வருது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
This website is temporarily not available. Our apologies for the inconvenience.

னு வருது
//////

ஆமா பாஸ், ஒரு சிறு தொழில்நுட்ப கோளாறு, இன்னும் சற்று நேரத்துல சரியாகிடும்!

Arun Kumar said...

register pannave mudila thala.."enter correct email" nu varudhu.. help pannunga boss

FOOD said...

புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள டெரர் கும்மி நண்பர்களுக்கும், புதிர் போட்டியில் பங்கு பெற உள்ளவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர் & பன்னி அண்ணே,

மிகவும் அருமையான முயற்சியினை டெரர் கும்மி குழுவினர் கையிலெடுத்திருக்கிறார்கள்.

அவர்களின் இம் முயற்சி வெற்றி பெறவும்,
போட்டியில் கலந்து கொள்வோர் வெற்றி பெறவும்
என் உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நண்பர்களே,
புதிர் போட்டியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட DATABASE CRASH காரணமாக வந்த டெக்னிக்கல் பால்ட் சரி செய்யப்பட்டது....
அனைத்து யூசர்களும் ரீசெட் செய்யபடுகிறார்கள்....
சிரமத்திற்கு வருந்துகிறோம்....
இப்பொழுது முதல் கேம் லிங்க் சரியாக இயங்கிறது...

செங்கோவி said...

மிக நல்ல விஷயம் பாஸ்..போட்டி களை கட்டட்டும்.

செங்கோவி said...

போட்டியில கலந்துக்கிட்டாலே பரிசுன்னு சொல்லியிருந்தா நானும் களத்துல இறங்கி இருப்பேன்..

செங்கோவி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

போலீஸ்காரும் இதே போட்டிருக்காரே..போட்டி நடப்பதாலா?

சி.பி.செந்தில்குமார் said...

குட் எஃபார்ட்.. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹா ஹா , இது எப்போதிருந்து ?

ராவணன் said...

5000 ரூபாய்க்கு எத்தனை டாலர்?

என் சேட்டா...பட்டா சொல்லக்கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செங்கோவி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

போலீஸ்காரும் இதே போட்டிருக்காரே..போட்டி நடப்பதாலா?
//

ss

சே.குமார் said...

போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....!! :-)

Real Santhanam Fanz said...

sema idea nanbare...paarpom ithula naanga kooda jeyikkalam...
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…

மாய உலகம் said...

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... said...

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து புத்திசாலிகளுக்கும் வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said...

( வாழ்த்துபவர்களுக்கு ஏதேனும் பரிசு கிடைக்குமா?)

thamizhan said...

parisu parisunnu alaiyaraangappaaa!

thamizhan said...

நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!naanga valaiyila maatttamaatomla.

காட்டான் said...

ஐயா உந்த போட்டிக்கெல்லாம் நான் வரல்ல என்னுடைய மேதாவித்தனத்த எல்லாரும் கண்டு பிடிச்சுடுவாங்கையா...!!???

காட்டான் குழ போட்டான்...

பாரத்... பாரதி... said...

போட்டியின் தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது?
போட்டியை புரோமோட் பண்ன "சியர்ஸ் பாய்ஸ்" டான்ஸ் ஆடப்போகிறார்களாம். உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
போட்டியின் தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது?
போட்டியை புரோமோட் பண்ன "சியர்ஸ் பாய்ஸ்" டான்ஸ் ஆடப்போகிறார்களாம். உண்மையா?///////

போட்டி முடிவுகள் திங்களன்று வெளியாகும்............ சியர் பாய்சுக்கு ஆள் எடுத்துட்டு இருக்கோம், முடிஞ்சா அனுப்பி விடுங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்துகொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!