அப்பவே இந்தப்படம் வேணாம்னு சொன்னேனே கேட்டியா....? இனி பார்க்கிறவன்லாம் இவர் கூட நம்மை கம்பேர் பண்ணித் தொலைவானுங்களே...?
நேத்து வேலையெல்லாம் முடிஞ்சு மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன், திடீர்னு ஒருத்தர் சாட்ல வந்தார். அவர் பேரு சங்கராம். எங்கூட கொஞ்சம் பேசனும்னார். யார்னு தெரியல, ஏதாவது பிரபல பதிவரா இருக்கப்போறாரு சும்மா பேசி வைப்போம்னு சாட் பண்ணேன்..
சங்கர்: சார் வணக்கம்
பன்னி: வணக்கம்..
சங்கர்: எப்படி இருக்கீங்க? உங்க கூட சாட் பண்றதுல ரொம்ப மகிழ்ச்சி சார்
பன்னி: நமக்குள்ள எதுக்குங்க சார் எல்லாம், நான் என்ன கலக்டரா... இல்ல ஜட்ஜா ?
சங்கர்: சரிங்க.. இருந்தாலும் நீங்க எவ்ளோ பெரிய பிரபல பதிவரு என் கூடலாம் சாட் பண்ணுவீங்கன்னு நம்பவே இல்ல...
பன்னி: அட பிரபல பதிவர்னா என்னங்க.. நானும் உங்கள மாதிரி சாதரண ஆளு தாங்க...
சங்கர்: அப்படியெல்லாம் இல்லைங்க, நான் ரொம்ப நாளா உங்க ரசிகன்.
பன்னி: ஓ அப்படிங்களா..... நன்றி சங்கர்
சங்கர்: ஆமாங்க, டெய்லி காலைல உங்க பதிவுலதான் கண்ணு முழிப்பேன். அதுக்காக லேப்டாப்ல உங்க ப்ளாக்க ஓப்பன் பண்ணி பக்கத்துல வெச்சிக்கிட்டுத்தான் தூங்குவேன்.
பன்னி: (ங்கொய்யால இவன் என்ன லூசா... இல்ல நக்கல் பண்றானா?) யோவ் ரசிகன்னு சொன்னீங்க சரி, ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவரு...
சங்கர்: ஓவர்தான் இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்...... என்னோட லவ்வரும் உங்க ரசிகைதாங்க, அவ சொல்லித்தான் நானும் உங்க ரசிகர் ஆனேன். இல்லைன்னா என்னைய அவ லவ் பண்ணி இருக்கவே மாட்டா...
பன்னி: (டேய்.. டேய்ய்... இன்னிக்கு நாந்தானாடா சிக்குனேன்....... ) தம்பி தண்ணியடிச்சிருக்கீங்களா? நாம வேணா அப்புறமா சாட் பண்ணுவோமே?
சங்கர்: இல்லீங்க, நான் தெளிவாத்தான் இருக்கேன், நீங்க தான் நம்ப மாட்டேங்கிறீங்க. இப்ப நான் உங்க கூட சாட் பண்றதுக்குக் கூட அவதான் காரணம்.
பன்னி: எப்படி?
சங்கர்: போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்
பன்னி: (வெளங்கிரும்....) தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல, இந்த மாதிரியெல்லாம் பேச வேணாம் சொல்லிட்டேன்
சங்கர்: சரி அத விடுங்க, நீங்க ஏன் உங்களை பத்தியே எழுதிட்டு இருக்கீங்க?
பன்னி: ஏம்பா நீ என் ப்ளாக் படிச்சிருக்கியா, இல்ல குத்துமதிப்பா பேசிட்டு இருக்கியா? இப்போ கொஞ்சநாளா பவர்ஸ்டார்னு ஒருத்தரை வெச்சித்தான் கடைய நடத்திட்டு இருக்கேன்.. தெரியும்ல?
சங்கர்: ஓ அப்படியா..... படிச்ச மாதிரியே ஞாபகம் இல்லியே... நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானே?
பன்னி: தக்காளி அப்படிப் போடு அருவாள.......... நீ கோக்குமாக்கா பேசும் போதே எனக்கு தெரியும்யா இந்தா மாதிரி ஏதாவது இருக்கும்னு........ ங்கொய்யால இது என்ன அந்தக் காலத்து லேண்ட்லைன் போனா யார்னு தெரியாம கால் பண்றதுக்கு? சாட்ல என்பேர் தான் வந்திட்டு இருக்குல்ல, அதுகூட தெரியாமையா இவ்ளோ நேரம் சாட் பண்ணீங்க?
சங்கர்: சாரி சார் சின்னத் தப்பு நடந்து போச்சு.
பன்னி: என்னடா சாரி.... பரதேசி பன்னாட... காலைலேயே மூட் அவுட் பண்ணிட்டியேடா ராஸ்கல்.... இனி ஒரு ஆஃப் அடிச்சாத்தாண்டா தெளியும்... ஆமா.. டேய்ய்.... நீ அந்த சங்கர்தானே? ங்கொக்காமக்கா..... உனக்கேன்டா இந்த வேல?
சங்கர்: அது வந்து சார், அவசரத்துல கவனிக்காம இப்படி பண்ணிட்டேன்
பன்னி: தம்பி நீ யாருன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..... ஒழுங்கா உண்மைய சொல்லிரு.... இல்லேன்னா ஏகப்பட்ட கெட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும், நான் ஒரு பிரபல பதிவர் தெரியும்ல?
சங்கர்: அண்ணே மன்னிச்சிருங்கண்ணே, சிரிப்பு போலீஸ்தாண்ணே இப்படி பண்ண சொன்னாரு......... அஞ்சும் பத்துமா தர்ரேன், ஒவ்வொரு பிரபல பதிவரா சாட் பண்ணு, ஆஹா ஓஹோன்னு சொல்லு, கடைசில நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானேன்னு கேட்டுட்டு வந்திருன்னாரு.....
பன்னி: ம்ம்.... அப்படி வாடி.......... இதான் மேட்டரா... சரி நீ போ... இத நான் டீல் பண்ணிக்கிறேன்.......
அய்யோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி கழிசடைங்க கூடலாம் கூட்டு சேக்குற....... நல்லா பாத்துக்குங்க மகாஜனங்களே.... இந்தப் பாவத்துக்குலாம் நான் ஆளாகவே மாட்டேன்...
அய்யய்யோ..... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... ஆள விடுங்கடா சாமி.....!
நன்றி: கூகிள் இமேஜஸ்




















