Wednesday, December 21, 2011

மாங்கா மரத்துல ஆப்பிள்....!

பாபுவும் ரமேசும், போன நூற்றாண்டுல சின்னப்பசங்களா இருந்தப்ப நடந்தது இது. ரமேசு அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு மாங்கா மரத்துல வேக வேகமா ஏறுனான்..... அங்க ஏற்கனவே பாபு ஏறி மாங்கா களவாண்டுக்கிட்டு இருந்தாரு. ரமேசைப் பார்த்துட்டு

பாபு: டேய்.. டேய்ய்... இங்க ஏன்டா வந்தே?

ரமேஷ்: ஆப்பிள் சாப்பிட.......

பாபு: அடிங்க...... இது மாமரம், இதுல மாங்கா தான் இருக்கும்....

ரமேஷ்: பரவால்ல.... இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் கையோட ஆப்பிள் கொண்டு வந்திருக்கேன்.....

பாபு: ??!!**???

**********


டெரர் பாண்டியன் அப்போ ஸ்கூல் (!)  படிச்சிட்டு இருந்தார்.

டீச்சர்: கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?

டெரர்: நல்ல வேள நான் அதுக்கு முன்னாடி பிறக்கலை, இல்லேன்னா மூச்சு முட்டி செத்திருப்பேன்...

டீச்சர்: ?*?

**********


வைகை கணக்குப்பாடம் படிச்சிட்டு இருந்தாரு. அப்போ

டீச்சர்: டேய் ஏன் தரைல உக்காந்து கணக்கு போடுறே?

வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?


**********


டீச்சர்: டேய் ரமேஷ்... ஏன் இங்க வந்தே, உன்னை லைன் கடைசில தானே நிக்க சொன்னேன்?

ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்........

டீச்சர்: ??!!??**!


**********


டெரரும் செல்வாவும் காட்டுப்பக்கமா நடந்து போய்ட்டு இருந்தாங்க, அப்போ அந்தப்பக்கமா வந்த ஒரு சிங்கம் அவங்களைப் பாத்து உறுமுச்சு. பார்த்தா சிங்கம் ரொம்ப பசியாவும், கோபமாவும் அவங்களை தாக்க தயாராகிட்டு இருந்துச்சு. உடனே செல்வா வேக வேகமா பேக்ல வெச்சிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டிக்கிட்டான்.

டெரர்: டேய்.. செல்வா.. ஏன்டா இந்த டைம்லேயும் இப்படி காமெடி பண்றே... ஷூவ போட்டுக்கிட்டா சிங்கத்தவிட வேகமா ஓடிடுவியா?

செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?


**********


வைகை: என்னடா உன் சாக்ஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கு, அந்தக் காலு செகப்பாவும் இந்தக்காலு பச்சை கலராவும் இருக்கு?

ரமேஷ்: ஆமாடா எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு, புதுசா இப்படி வந்திருக்கு போல, இது மட்டுமில்ல, இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!


**********
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?


நன்றி: ஜோக்குகளும் படமும் மெயிலில் வந்தவையே.....!

112 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்பு நல்லாதான் இருக்கு...

நானும் ரமேஷ் மாதிரி ஆப்பிள் சாப்பிடப்போறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?/
////////

உங்க எல்லோரையும் 1773-க்கு முன்னாடி அனுப்புனுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?
/////////


”கணக்கு பண்ணுங்க“ அப்படின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?

//////////

செல்வா கொஞ்சம் உஷாருதான்...

Sen22 said...

சிங்கம்-கிட்டே ஹாப்பி பர்த்டே பாட்டு பாட சொன்னா ..... அது வந்து தானா மெழுகு வர்த்தி -ய ஊதப்போகுது...

போலீஸ் தப்பிச்சுடலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////////
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?
////////

அங்கிருந்து காட்டுக்குள்ளே ஓடிட்டா சிங்கம் தப்பிச்சிடும்....


ஓ.. நீங்க சிரிப்பு போலீஸ் தப்பிக்க வழி கேட்டிங்களா...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அனைத்தும் அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
Sen22 said...

சிங்கம்-கிட்டே ஹாப்பி பர்த்டே பாட்டு பாட சொன்னா ..... அது வந்து தானா மெழுகு வர்த்தி -ய ஊதப்போகுது...

போலீஸ் தப்பிச்சுடலாம்...
////////

யோவ்.. சும்மா இருக்கிற சிங்கத்துகிட்டே பாட்டை பாடி வேறியேத்த வழி சொல்ற...

மனசாட்சி said...

காமடி கும்மியா அசத்தல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ் எங்கய்யா போனீங்க எல்லோரும்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

செல்வா.. ரொம்ப உசாருன்னு நினைப்பு., அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் அசத்தல் ...

வெளங்காதவன் said...

//இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?

////

அந்த ஆளு என்னத்துக்குத் தப்பிக்கணும்? இன்னும் ரெண்டு மெழுகுவர்த்திய வாங்கிக் கொழுத்தி வச்சுட்டு போயி வேலையைப் பாப்பியா?

:-)

மொக்கராசா said...

அய்யோ அய்யோ சிப்பு சிப்பா வருது....

MANO நாஞ்சில் மனோ said...

இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?//

ஓசில சாப்பாடு கேக்க சொல்லுங்க, சிங்கம் தலைதெறிக்க ஓடிரும்...

மொக்கராசா said...

சிரிப்பு போலிஸ் கல்யாணம் அதுவுமா அவர கயித்துல கட்டி
தொங்கவிட்டுருங்களே...ஏதாவது உள் குத்தா.....

MANO நாஞ்சில் மனோ said...

கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?//

ஒ அப்போ அதுக்கு முன்னாடி ஆக்சிஜன் இல்லாமல்தான் இருந்துச்சா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி...ஹி.. இதோ வந்துட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
தலைப்பு நல்லாதான் இருக்கு...

நானும் ரமேஷ் மாதிரி ஆப்பிள் சாப்பிடப்போறேன்...//

தம்பி நீ உருப்புடமாட்டே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?
/////////


”கணக்கு பண்ணுங்க“ அப்படின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க...//

ஹி ஹி அது எனக்கு ரொம்ப ஈசி ஆச்சே, இங்கிட்டு அனுப்புங்க...

மொக்கராசா said...

//வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?//

கரெக்கெட்டா தான் பண்ணிருக்காரு...... இதுல என்ன சிப்பு வேண்டியிருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
செல்வா.. ரொம்ப உசாருன்னு நினைப்பு.,//

பதிவர் சந்திப்புல போனை சைலன்ட்ல போட்டுட்டு தூங்குனவனாச்சே...

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
சிரிப்பு போலிஸ் கல்யாணம் அதுவுமா அவர கயித்துல கட்டி
தொங்கவிட்டுருங்களே...ஏதாவது உள் குத்தா....//

பொறாமையாம்.....

மொக்கராசா said...

//லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்//

அப்ப டீச்சர் மடியில் உட்கார சொல்லுங்க......ஹி...ஹி....

மொக்கராசா said...

//ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டிக்கிட்டான்//

ஷாக்ஸ் கப்பு தாங்காம சிங்கம் செத்து போகுமே......

மொக்கராசா said...

//இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!//

//இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!///

கன்பார்ம் அப்ப அவரு பவர் ஸ்டார் ரசிகர் தான்.....

ஜீ... said...

//ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்.......//

:-)

ஜீ... said...

//செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?//
செல்வா Rocks! :-)

ஜீ... said...

செம்ம கலக்கல் மாம்ஸ்! :-)

சரியில்ல....... said...

ஹாஹாஹா..... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..... கலக்கல்! :-)

கோமாளி செல்வா said...

ஐ ஏம் ஹியர் டூ சிங் எபவுட் மன்மதன் அம்பூ ...

கோமாளி செல்வா said...

// ரமேஷ்: பரவால்ல.... இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் கையோட ஆப்பிள் கொண்டு வந்திருக்கேன்.....//

அண்ணன் எம்பூட்டு அறிவாளியா இருக்காரு. இதவிட ஒருதடவ தென்ன மரத்தப் பார்த்து காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது இந்த மரத்துலதான்னு சொன்னார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கோமாளி செல்வா said...
ஐ ஏம் ஹியர் டூ சிங் எபவுட் மன்மதன் அம்பூ ...//

அப்படின்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
// ரமேஷ்: பரவால்ல.... இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் கையோட ஆப்பிள் கொண்டு வந்திருக்கேன்.....//

அண்ணன் எம்பூட்டு அறிவாளியா இருக்காரு. இதவிட ஒருதடவ தென்ன மரத்தப் பார்த்து காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது இந்த மரத்துலதான்னு சொன்னார்..//////

அதை விட ஒருதடவ அந்த தென்ன மரத்துலதான் காக்காவே காய்க்குதுன்னாரே....

Yoga.S.FR said...

இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான்,அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?////தப்பிச்சு?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Yoga.S.FR said...
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான்,அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?////தப்பிச்சு?????????/////

அந்த கயித்துலேயே மறுபடி தொங்குவாரு......

Yoga.S.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கோமாளி செல்வா said...
ஐ ஏம் ஹியர் டூ சிங் எபவுட் மன்மதன் அம்பூ ...//

அப்படின்னா?/////"மன்மோகன் சிங்"கை அடுப்பில போடணும்கிறாரு!!!

Yoga.S.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Yoga.S.FR said...
தப்பிச்சு?????????/////

அந்த கயித்துலேயே மறுபடி தொங்குவாரு......////வேதாளம் முருங்க மரத்துல ஏறினாப்புலையா??????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Yoga.S.FR said...
தப்பிச்சு?????????/////

அந்த கயித்துலேயே மறுபடி தொங்குவாரு......////வேதாளம் முருங்க மரத்துல ஏறினாப்புலையா??????/////

ஏறி... தொங்குனாப்புல.......

கோமாளி செல்வா said...

// அதை விட ஒருதடவ அந்த தென்ன மரத்துலதான் காக்காவே காய்க்குதுன்னாரே....//

என்னாது , தென்னை மரத்துல காக்காய் காய்க்குதா ? அப்படின்னா காக்காய்ங்கிறது ஒரு வகையான காயா ? அது பூ பிடிச்சு காயாகி வளருமா ? இல்ல முட்டையிட்டு குஞ்சு பொறிக்குமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோமாளி செல்வா said...
// அதை விட ஒருதடவ அந்த தென்ன மரத்துலதான் காக்காவே காய்க்குதுன்னாரே....//

என்னாது , தென்னை மரத்துல காக்காய் காய்க்குதா ? அப்படின்னா காக்காய்ங்கிறது ஒரு வகையான காயா ? அது பூ பிடிச்சு காயாகி வளருமா ? இல்ல முட்டையிட்டு குஞ்சு பொறிக்குமா ?/////

காக்காய் காய்னுதானே முடியுது?

அருண் பிரசாத் said...

//இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?//

ஒண்ணு தப்பிக்க வேணாம்... சாகட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
//இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?//

ஒண்ணு தப்பிக்க வேணாம்... சாகட்டும்////

பாவம் அந்த சிங்கம்.......

கோமாளி செல்வா said...

// காக்காய் காய்னுதானே முடியுது?//

அப்ப காக்காய்க்கு வயசானா காக்காபழம் ஆகிடுமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கோமாளி செல்வா said...
// காக்காய் காய்னுதானே முடியுது?//

அப்ப காக்காய்க்கு வயசானா காக்காபழம் ஆகிடுமா ?///

வயசானாலும் பழுக்கனும்ல?

Yoga.S.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said.காக்காய் காய்னுதானே முடியுது?///அதோட,காக்கையை?!விரட்டுறப்ப கூட காய் னுதானே விரட்டுறோம்?

கோமாளி செல்வா said...

//வயசானாலும் பழுக்கனும்ல?//

காக்காய் பழுக்குமா, பழுக்காதா ? அப்படிப் பழுத்தா அதுக்கு என்ன பேரு ? சரியா எனக்கொரு பதிலச் சொல்லுங்க..

Yoga.S.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
//இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?//

ஒண்ணும் தப்பிக்க வேணாம்... சாகட்டும்////

பாவம் அந்த சிங்கம்.......///அந்தப் பாவத்த வேற சுமக்கணுமோ?

Yoga.S.FR said...

கோமாளி செல்வா said...

//வயசானாலும் பழுக்கனும்ல?//

காக்காய் பழுக்குமா, பழுக்காதா ? அப்படிப் பழுத்தா அதுக்கு என்ன பேரு ? சரியா எனக்கொரு பதிலச் சொல்லுங்க..////இதென்ன விதண்டா வாதம்?காய் பழுத்தா பழம் தான்.அப்புறம்,பேரு என்ன பேரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.S.FR said...
கோமாளி செல்வா said...

//வயசானாலும் பழுக்கனும்ல?//

காக்காய் பழுக்குமா, பழுக்காதா ? அப்படிப் பழுத்தா அதுக்கு என்ன பேரு ? சரியா எனக்கொரு பதிலச் சொல்லுங்க..////இதென்ன விதண்டா வாதம்?காய் பழுத்தா பழம் தான்.அப்புறம்,பேரு என்ன பேரு?////////

அதானே, அப்போ பழுத்த பழம்னு வேணா வெச்சுக்கட்டும்......

கோமாளி செல்வா said...
This comment has been removed by the author.
கோமாளி செல்வா said...

// இதென்ன விதண்டா வாதம்?காய் பழுத்தா பழம் தான்.அப்புறம்,பேரு என்ன பேரு?//

அந்தப் பழத்துக்கு என்ன பேருன்னு சொல்லனும்..

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக்ஸ் எல்லாம் ஆல்ரெடி படிச்சதுதான் அதை ராம்சாமி பிலாக்ல படிக்கரது ஜாலி, கமெண்ட்ஸ் கும்மல்ஸ் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் நீங்க வழக்கமா வைக்கற்து ,மாதிரி இல்லையே, டெரர் கும்மில ஏதாவது ரூல்ஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ஜோக்ஸ் எல்லாம் ஆல்ரெடி படிச்சதுதான் அதை ராம்சாமி பிலாக்ல படிக்கரது ஜாலி, கமெண்ட்ஸ் கும்மல்ஸ் ஹி ஹி///

ஹி...ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் நீங்க வழக்கமா வைக்கற்து ,மாதிரி இல்லையே, டெரர் கும்மில ஏதாவது ரூல்ஸ்?////

ஏன் சின்னப்பசங்க வெக்கிற டைட்டில் மாதிரி இருக்கா? நம்மல்லாம் யூத்துண்ணே..... அப்படித்தான் இருக்கும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்....//////

இதென்ன அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தையா இல்ல டாஸ்மாக் பாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கவிதை வீதி... // சௌந்தர் // said...
தலைப்பு நல்லாதான் இருக்கு...

நானும் ரமேஷ் மாதிரி ஆப்பிள் சாப்பிடப்போறேன்.../////

நீங்க எந்த மரத்துல ஏற போறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
////////
கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?/
////////

உங்க எல்லோரையும் 1773-க்கு முன்னாடி அனுப்புனுங்க...//////

அனுப்பி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?
/////////


”கணக்கு பண்ணுங்க“ அப்படின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க...//////

கணக்கு பண்ணுவோம்.... (வேற என்ன பண்ணனும்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////
இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?

//////////

செல்வா கொஞ்சம் உஷாருதான்...//////

ஹஹ்ஹா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
/////////
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?
////////

அங்கிருந்து காட்டுக்குள்ளே ஓடிட்டா சிங்கம் தப்பிச்சிடும்....


ஓ.. நீங்க சிரிப்பு போலீஸ் தப்பிக்க வழி கேட்டிங்களா.../////

சிங்கம் தப்பிச்சா சிப்பும் தப்பிச்சிடுவார்ல?

மாணவன் said...

:-)

இம்சைஅரசன் பாபு.. said...

:))))))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அனைத்தும் அருமை/////


வாங்க ராஜா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மனசாட்சி said...
காமடி கும்மியா அசத்தல்////

நன்றிங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
யோவ் எங்கய்யா போனீங்க எல்லோரும்.../////


லாரில லோடு எறக்க போயிட்டாங்க....

காட்டான் said...

சூப்பர்...!!!
அதை விட பினூட்டத்தில் செம கலக்கல் கலக்கிறிங்களே...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
செல்வா.. ரொம்ப உசாருன்னு நினைப்பு., அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் அசத்தல் ...////

தேங்ஸ் கருன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
அய்யோ அய்யோ சிப்பு சிப்பா வருது....////

நல்ல வேள முக்காமயே வந்துருச்சு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MANO நாஞ்சில் மனோ said...
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?//

ஓசில சாப்பாடு கேக்க சொல்லுங்க, சிங்கம் தலைதெறிக்க ஓடிரும்...////

அடங்கொன்னியா...

TERROR-PANDIYAN(VAS) said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் மச்சி.. :) அதுலையும் அந்த சிங்கம் ஹாப்பி பார்த்டே பாடி மெழுக நிறுத்தரது செம செம.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காட்டான் said...
சூப்பர்...!!!
அதை விட பினூட்டத்தில் செம கலக்கல் கலக்கிறிங்களே...!!!////

வாங்க தலைவரே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் மச்சி.. :) அதுலையும் அந்த சிங்கம் ஹாப்பி பார்த்டே பாடி மெழுக நிறுத்தரது செம செம.. :)/////

படுவா அப்படியே ஓடிப்போயிரு.... தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
சிரிப்பு போலிஸ் கல்யாணம் அதுவுமா அவர கயித்துல கட்டி
தொங்கவிட்டுருங்களே...ஏதாவது உள் குத்தா...../////

இதுல உள்குத்துக்கு என்ன இருக்கு, அதான் அப்படியே எல்லாருக்கும் தெரியுதே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?//

ஒ அப்போ அதுக்கு முன்னாடி ஆக்சிஜன் இல்லாமல்தான் இருந்துச்சா..?//////

அறிவுக்கொழுந்துண்ணே நீங்க, பார்த்து இருந்துக்கண்ணே ஆடு, மாடு மேஞ்சிட போவுது.....

TERROR-PANDIYAN(VAS) said...

// படுவா அப்படியே ஓடிப்போயிரு.... //

அப்போ ஸ்போர்ட்ஸ் ஷு வாங்கி தா... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?
/////////


”கணக்கு பண்ணுங்க“ அப்படின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க...//

ஹி ஹி அது எனக்கு ரொம்ப ஈசி ஆச்சே, இங்கிட்டு அனுப்புங்க.../////

பார்ரா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) said...
// படுவா அப்படியே ஓடிப்போயிரு.... //

அப்போ ஸ்போர்ட்ஸ் ஷு வாங்கி தா... :)//////


ஆமா உன் ப்ரொஃபைல்ல யாரோ கல்லு உடைக்கிறாங்களே என்ன அது?

M.R said...

ஹா ஹா அருமை நண்பரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?//

கரெக்கெட்டா தான் பண்ணிருக்காரு...... இதுல என்ன சிப்பு வேண்டியிருக்கு....//////

அவரு கரெக்ட்டா பண்ணதுதான் சிப்பே.....

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா உன் ப்ரொஃபைல்ல யாரோ கல்லு உடைக்கிறாங்களே என்ன அது?//

ஆண்டவா!! ஏண்டா இவனுங்கூட எல்லாம் என்னை சேக்கர? டேய்! அது தானே செதுக்கி உருவாகும் சிலை.. Self Made Man... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
வேடந்தாங்கல் - கருன் *! said...
செல்வா.. ரொம்ப உசாருன்னு நினைப்பு.,//

பதிவர் சந்திப்புல போனை சைலன்ட்ல போட்டுட்டு தூங்குனவனாச்சே...////

யாராவது தண்ணி பார்ட்டிக பக்கத்துல இருந்திருப்பாங்க, பயலுக்கு தூக்கி இருக்கும்....... அதான் தல தொங்கி இருக்கு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ஆமா உன் ப்ரொஃபைல்ல யாரோ கல்லு உடைக்கிறாங்களே என்ன அது?//

ஆண்டவா!! ஏண்டா இவனுங்கூட எல்லாம் என்னை சேக்கர? டேய்! அது தானே செதுக்கி உருவாகும் சிலை.. Self Made Man... :))//////

அப்போ உன் கைய எப்படி செதுக்குனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// M.R said...
ஹா ஹா அருமை நண்பரே////

நன்றி நண்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்//

அப்ப டீச்சர் மடியில் உட்கார சொல்லுங்க......ஹி...ஹி..../////

வெளங்கிரும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டிக்கிட்டான்//

ஷாக்ஸ் கப்பு தாங்காம சிங்கம் செத்து போகுமே....../////

ஷாக்ஸ்லாம் போடுவானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!//

//இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!///

கன்பார்ம் அப்ப அவரு பவர் ஸ்டார் ரசிகர் தான்...../////

அவரும் இதே மாதிரி சாக்ஸ் வெச்சிருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஜீ... said...
//ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்.......//

:-)////

வாங்க ஜீ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜீ... said...
//செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?//
செல்வா Rocks! :-)/////

ஹஹஹ்ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
செம்ம கலக்கல் மாம்ஸ்! :-)////

தேங்ஸ் ஜீ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரியில்ல....... said...
ஹாஹாஹா..... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..... கலக்கல்! :-)/////

வாங்கப்பு, எப்படி இருக்கீக...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Busy :))

#sent from my own iphone

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Busy :))

#sent from my own iphone////


Not busy

#sent from my washing machine

பதிவுலகில் பாபு said...

Yerkanave padicha jokesa irunthalum.. ivanga combinationla kalakkuthu.. :-)

Yoga.S.FR said...

கோமாளி செல்வா said...

// இதென்ன விதண்டா வாதம்?காய் பழுத்தா பழம் தான்.அப்புறம்,பேரு என்ன பேரு?//

அந்தப் பழத்துக்கு என்ன பேருன்னு சொல்லனும்.////அதாங்க,"இன்னொரு" பழம்!!!!

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

டெரர் பாண்டியன் அப்போ ஸ்கூல் (!) படிச்சிட்டு இருந்தார்.

டீச்சர்: கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?

டெரர்: நல்ல வேள நான் அதுக்கு முன்னாடி பிறக்கலை, இல்லேன்னா மூச்சு முட்டி செத்திருப்பேன்...

டீச்சர்: ?*?///


ஹாஹாஹா...
முடியல..

வைகை said...

ரமேசு அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு மாங்கா மரத்துல வேக வேகமா ஏறுனான்..... அங்க ஏற்கனவே பாபு ஏறி மாங்கா களவாண்டுக்கிட்டு இருந்தாரு. ரமேசைப் பார்த்துட்டு////

அடங்கொன்னியா.. இவ்ளோ நாளும் களவாணிப் பயலுககூடவா சகவாசம் வச்சிருந்தோம்? :-))

வைகை said...

டெரர்: நல்ல வேள நான் அதுக்கு முன்னாடி பிறக்கலை, இல்லேன்னா மூச்சு முட்டி செத்திருப்பேன்...//

ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இவ்வளவு அறிவு இருந்ததே பெரிய விசயம்தான் :-))

வைகை said...

டீச்சர்: டேய் ஏன் தரைல உக்காந்து கணக்கு போடுறே?

வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?//

அடிங்.. ஏன்யா வரலாற மாத்துற? டீச்சரே நிக்கும்போது நான் எப்பிடி டேபிள்ள உக்காருரதுன்னு கீழ உக்காந்தேன் :-))

வைகை said...

டீச்சர்: டேய் ரமேஷ்... ஏன் இங்க வந்தே, உன்னை லைன் கடைசில தானே நிக்க சொன்னேன்?

ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்........//

பயபுள்ள பூசைன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு சோறு போடுவாங்கன்னு நினைச்சது போல? :-))

வைகை said...

செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?//

அதுக்கு ஏன்டா வேகமா ஓடனும்? சிங்கத்துகிட்ட டெரர புடிச்சி தள்ளிவிட்டுட்டு அவன திங்கிறத வேடிக்கை பார்க்கலாம்ல? :-))

வைகை said...

ரமேஷ்: ஆமாடா எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு, புதுசா இப்படி வந்திருக்கு போல, இது மட்டுமில்ல, இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!///

அதெல்லாம் சரிடா.. எதையாவது என்னைக்காவது துவைச்சியா? :-))

FOOD NELLAI said...

நீண்ட இடைவேளைக்கு பின் வந்து கலக்குறீங்க.

மேரிஜோசப் said...

super .........

Dr.Dolittle said...

சிரிப்பு போலீஸ் மேகதூதம் ராகத்துல பாட்டு பாடினா மழை வந்துடும் , மெழுகுவத்தி அணைந்து விடும்

டிராகன் said...

நல்ல பதிவு ,நன்றி பன்னி

டிராகன் said...

பதிவை வாசிக்கும் ,மற்றும் சுவாசிக்கும் போது காட்சிகள் கண் முன் விரிகிரின்றன !!

டிராகன் said...

பன்னிகுட்டி ராமசாமியின் இப்பதிவு சாகித்ய அகடமியின் கவனத்தை கவர்ந்துள்ளது # டைம்ஸ் நவ் செய்தி

டிராகன் said...

''' வடகொரியாவின் அதிபர் அகால மரணம் அடைந்ததால் அப்பதவிக்கு ,டாக்டர் விஜயின் தீவிர ரசிகரும் ,ஐ .நா .பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான திரு பன்னிக்குட்டியாரின் பெயர் சிபாரிசு செயபட்டுள்ளாதாக ''' ஆப்கன் அதிபர் திரு .ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில் ,இந்த பதிவின் சாராம்சம் உலக பொருளாதார எழுச்சிக்கு திறவு கோலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .இப்பதிவே ..,உலக தலைவர்களை ,வடகொரிய அதிபர் பதவிக்கு அவரை நெம்பி தள்ளி சிபாரிசு செய்யபட்டுளாதாக தெரிவித்தார் .

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! ஹா ஹா
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"