Friday, December 30, 2011

உங்களுக்கு என்ன பிரச்சனை?

உங்களுக்கு முடி உதிர்கிறதா...? தலை வழுக்கையாகிறதா....? முடி அடர்த்தியே இல்லாமல் காணப்படுகிறதா...? அல்லது தலையில் முடியே இல்லையா....?

இனி கவலையே படவேண்டாம். எங்கள் எருமை மாட்டின் ஆயில் தேய்த்தால் எல்லா பிரச்சனையும் தீரும். உலகப்புகழ் பெற்ற அமேசன் காட்டு புதரில் வாழும் எருமை மாடுகளின் சாணியில் இருந்து எங்கள் ஆராய்ச்சியாளர்களால் பல்லாண்டு காலம் ஆய்ந்து கண்டறியப்பட்டு அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்த எருமை மாட்டின் ஆயில்.

தேய்க்க ஆரம்பித்து மூன்றே மணிநேரத்தில் கொத்துக் கொத்தாக முடி முளைத்துவிடும். என்ன அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், இது அதிசயம் ஆனால் உண்மை. எங்கள் வாடிக்கையாளர்கள் பலர் பயன்படுத்தி பயனடைந்ததைப் பாருங்கள்!

எண்ணை உபயோகிக்கும் முன்எங்கள் எருமை மாட்டின் எண்ணையை உபயோகித்து மூன்றே நாட்களில்


15999 ரூபாய் மதிப்புள்ள இந்த அற்புதமான எண்ணை உங்களுக்காக வெறும் 5999 ரூபாய்க்கே.

போனை எடுங்க உடனே அழைங்க, இந்தச் சலுகை இன்று மட்டுமே.

அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


**************


ஜிம்முக்கு போகாமல் இடையை ச்சீ எடையை குறைக்க வேண்டுமா? தினமும் 20 நிமிடம் வீட்டிலேயே இருந்து எங்கள் கார்ப்பிட் சைக்கிளிங் மெசினில் எக்சர்சைஸ் செய்தால், இரண்டே நாளில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் அனைத்தும் கரைந்து சிங்கிள் மூட்டையாகிவிடும். பின் உங்கள் கவர்ச்சி எக்கச்சக்கமாக அதிகரித்து நீங்கள் ஒரு சினிமா கதாநாயகன் ஆவது உறுதி. 


கார்ப்பிட் சைக்கிள்


இந்த கார்ப்பிட் சைக்கிளை உபயோகிப்பது மிகவும் எளிதானது. ஸ்டாண்டு போட்டு நிறுத்தி ஏறி உக்கார்ந்து பெடலை அழுத்தினால் போதும். அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாடலை உங்கள் லேப்டாப்பில் போட்டுக்கொண்டு பெடலை அழுத்த ஆரம்பித்தால் பாடல் முடிவதற்குள் நீங்கள் ஆளே மாறிப்போய்விடுவது உறுதி!

கார்ப்பிட் சைக்கிளை உபயோகித்து அழகான தோற்றம் பெற்று சினிமாவில் கதாநாயகனாகிய எங்கள் வாடிக்கையாளர்


59, 999 ரூபாய் மதிப்புள்ளே இந்த கார்ப்பிட் சைக்கிள் உங்களுக்காக வெறும் 9,999 ரூபாய்க்கே....!
உடனே அழைப்பீர். சலுகை இன்று மட்டுமே.


அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


***********தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய் சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும் சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?

கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும். 

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி. 

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999


அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012!

நன்றி: கூகிள் இமேஜஸ், பவர் ஸ்டார்
!

121 comments:

ஜீ... said...

Hi maams!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க ஜீ....

ஜீ... said...

எதுக்கு பவர் ஸ்டாருக்கு நன்றி?
ஓ! அவர்தான் மாடலா?

ஜீ... said...

அடடா தலைவரா அது? டோட்டலா மாறி...என்ன மீசைதான் காட்டிக் குடுக்குது!

NAAI-NAKKS said...

Nangale...thane puyal-la
sikki sinna pinna maai
kidakkom.....
6 naal power
kidiyathu.....

Ithula neenga vera
marketing
pannureenga....

Udane...ATM....porom
panam edukkurom....
Order pannurom

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பவர் ஸ்டார் தான் உங்க அம்பாசிடரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பவர் ஸ்டார் தான் உங்க அம்பாசிடரா? அப்போ வியாபாரம் பிச்சிக்குமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜீ... said...
எதுக்கு பவர் ஸ்டாருக்கு நன்றி?
ஓ! அவர்தான் மாடலா?////

இல்லை அவரு எங்க கஸ்டமரு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர்,பாபு தமிழ் தப்பில்லாம எழுதுறதுக்கு ஏதாச்சும் மருந்ந்து இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
அடடா தலைவரா அது? டோட்டலா மாறி...என்ன மீசைதான் காட்டிக் குடுக்குது!////

தாடி வெச்சாலும் பவர் ஸ்டாரோட பவர் குறையுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அல்லது தலையில் முடியே இல்லையா....?//

தலையில் அறிவே இல்லாத டெரர் அவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Nangale...thane puyal-la
sikki sinna pinna maai
kidakkom.....
6 naal power
kidiyathu.....

Ithula neenga vera
marketing
pannureenga....

Udane...ATM....porom
panam edukkurom....
Order pannurom//////

ஆமா கரண்ட்டு இருந்தா மட்டும் இவரு அப்படியே இலக்கியத்தமிழை கசக்கி புழிஞ்சி கழுவி ஊத்திட்டுத்தான் மறுவேல பார்ப்பாரு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாலாவது போட்டோவில் அவ்ளோ முடி இருக்கே. எண்ணெய் நிறைய யூஸ் பண்ணிட்டாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா?//

சாப்பாட்டுடன் பசை கலந்து சாப்பிடவும்

#இப்படிக்கு பாபு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பவர் ஸ்டார் தான் உங்க அம்பாசிடரா? அப்போ வியாபாரம் பிச்சிக்குமே/////

அந்தக் காருலாம் நாங்க விக்கிறதில்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர்,பாபு தமிழ் தப்பில்லாம எழுதுறதுக்கு ஏதாச்சும் மருந்ந்து இருக்கா?/////

பாவம் மருந்து, அவங்க வேணா இங்கிலிபீஸ்ல எழுதட்டும்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாதா ட்ரீட்மெண்ட் பாபுவின் எடையை தாங்குமா?

Yoga.S.FR said...

வணக்கம்,ப.ரா சார்!தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியெல்லாம் கிடையாதா?"மொத்தமா" கேட்டா எங்க போறது?(பணத்துக்கு?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த சைக்கிளுக்கு பெட்ரோல் ஊத்தனுமா? டீசலா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yoga.S.FR said...

வணக்கம்,ப.ரா சார்!தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியெல்லாம் கிடையாதா?"மொத்தமா" கேட்டா எங்க போறது?(பணத்துக்கு?)//

பவர் ஸ்டார் வாழ்கன்னு ஒரு நூறு வாட்டி இம்போசிசன் எழுதினால் கிடைக்கும் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அல்லது தலையில் முடியே இல்லையா....?//

தலையில் அறிவே இல்லாத டெரர் அவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும்?////

பாலிடால் ஊத்தி எனிமா கொடுக்கவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலாவது போட்டோவில் அவ்ளோ முடி இருக்கே. எண்ணெய் நிறைய யூஸ் பண்ணிட்டாரோ?/////


எண்ணை பாட்டல் உடைஞ்சிருச்சாம்......

மயிலன் said...

அந்தாளு பாவம்ண்ணே..விடுங்கண்ணே...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அல்லது தலையில் முடியே இல்லையா....?//

தலையில் அறிவே இல்லாத டெரர் அவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும்?////

பாலிடால் ஊத்தி எனிமா கொடுக்கவும்!//

சயனைடு கலந்தா? அல்லது அப்படியேவா?

மயிலன் said...

நம் வலையில் கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா?//

சாப்பாட்டுடன் பசை கலந்து சாப்பிடவும்

#இப்படிக்கு பாபு////

அப்படி சாப்புட்டா கக்கா வருமா வராதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாதா ட்ரீட்மெண்ட் பாபுவின் எடையை தாங்குமா?////

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்டே அவருக்கு தாங்காது........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா?//

சாப்பாட்டுடன் பசை கலந்து சாப்பிடவும்

#இப்படிக்கு பாபு////

அப்படி சாப்புட்டா கக்கா வருமா வராதா?///

கொஞ்சம் சுடு தண்ணி கொத்திக்க கொதிக்க குடித்தால் பசை கரைய வாய்ப்புள்ளது :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா?//

சாப்பாட்டுடன் பசை கலந்து சாப்பிடவும்

#இப்படிக்கு பாபு////

அப்படி சாப்புட்டா கக்கா வருமா வராதா?///

கொஞ்சம் சுடு தண்ணி கொத்திக்க கொதிக்க குடித்தால் பசை கரைய வாய்ப்புள்ளது :)/////

இதுக்கு பேசாம அடுப்பு மேலேயே உக்கார வெச்சிடலாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Yoga.S.FR said...
வணக்கம்,ப.ரா சார்!தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியெல்லாம் கிடையாதா?"மொத்தமா" கேட்டா எங்க போறது?(பணத்துக்கு?)//////

தவணை முறைல கட்டுறதுக்கு இது என்ன டிவியா ஃப்ரிட்ஜா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த சைக்கிளுக்கு பெட்ரோல் ஊத்தனுமா? டீசலா?/////

நீங்க எதவேணா ஊத்துங்க, ஆனா சைக்கிள் பெடல்ல தான் ஓடும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மயிலன் said...
அந்தாளு பாவம்ண்ணே..விடுங்கண்ணே...:)/////

சரி விடுங்கண்ணே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த சைக்கிளுக்கு பெட்ரோல் ஊத்தனுமா? டீசலா?/////

நீங்க எதவேணா ஊத்துங்க, ஆனா சைக்கிள் பெடல்ல தான் ஓடும்.....//

வீல்ல ஓடாதா? என்ன கொடுமை சார் இது ?

Palaniappan Kandaswamy said...

//பவர் ஸ்டார் வாழ்கன்னு ஒரு நூறு வாட்டி இம்போசிசன் எழுதினால் கிடைக்கும் :))//

ஏனுங்க, எத்தனவாட்டி எழுதுனா சும்மா கொடுப்பீங்க? அவசரமா துணி காயப்போடோணுமுங்க. சீக்கிரம் சொல்லுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

எவ்வளவு கொழுப்பு இருந்தா எங்க பவர்ஸ்டார இம்புட்டு கொடுமை படுத்துவீங்க ராஸ்கல், எல்லாருக்கும் லத்திகா டிவிடியை அனுப்பி பாக்கவச்சி அந்தர் பண்ணிருவேன் ஜாக்கிரதை ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாதா ட்ரீட்மெண்ட் பாபுவின் எடையை தாங்குமா?//

யோவ் பாவம்யா பிள்ளை குட்டிக்காரன் ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே அந்த கயிறை பத்திரமா வச்சிக்கோங்க, பவர் அண்ணன் படம் ரிலீஸ் அன்னைக்கு தியேட்டர் முன்னாடி வச்சா அமோகமா சேல்ஸ் ஆகிரும், செல்வாவும் வல்கரா வந்து வாங்கிட்டு போவான் பாருங்க...

சுவடுகள் said...

ஆமா,இதெல்லாம் ரூம்போட்டு ஜோசிப்பிங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ....//

என்ன ஜிலேபி கொடுக்குற மாதிரி கூப்புடுதீரு...

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS said...
Nangale...thane puyal-la
sikki sinna pinna maai
kidakkom.....
6 naal power
kidiyathu.....

Ithula neenga vera
marketing
pannureenga....

Udane...ATM....porom
panam edukkurom....
Order pannurom//

அண்ணே உங்க ஊர்ல புயல் அடிக்கிறதா நியூஸ் வந்துட்டு இருக்கே...???

Selvakumar selvu said...

நான் வீட்டிற்குக் கிளம்பிவிட்டபடியால் இந்தப் பதிவினை காலையில் வந்து படித்துக்கொள்கிறேன்.

இருப்பினும் இதில் எங்கள் தலைவரைப் பற்றி என்னவோ எழுதியிருப்பதாகவும் அவரை கிண்டல் செய்பவர்களுக்கு சுளுக்கெடுக்க விரைவில் ஆனந்தத் தொல்லை தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதையும் இருமாப்புடன் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து விடைபெருகிறேன்.

Powder Star - Dr. ஐடியாமணி said...

ஹா ஹா ஹா செம காமெடி தல! அந்த எருமை மாட்டு ஆயிலோட பாரின் ஏஜெண்டா என்னையப் போடுங்க தல!

பவர்ஸ்டார் வாழ்க! பன்னியும் வாழ்க!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Powder Star - Dr. ஐடியாமணி said...
ஹா ஹா ஹா செம காமெடி தல! அந்த எருமை மாட்டு ஆயிலோட பாரின் ஏஜெண்டா என்னையப் போடுங்க தல!

பவர்ஸ்டார் வாழ்க! பன்னியும் வாழ்க!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/////

யோவ் ஒழுங்கா சங்கத்துல காசை கட்டிட்டு எண்ணைல கைய வையி.....

ஹாலிவுட்ரசிகன் said...

எப்புடி பாஸ் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? இதுக்காக தனியே எங்காவது ரூம் வச்சிருக்கீங்களா?

சந்தானம் எல்லாம் இந்த காமெடி முன்னாடி ஜுஜுபி ...

Anonymous said...

உங்க ப்ளாக் ல கமெண்ட் போடறதுக்கே ஒரு பயம் தான். ஏன்ன நீங்கெல்லாம் ரத்தபூமி ஆட்களாச்சே.......
ஆனாலும் இன்னைக்கு தடைய(எனக்கு நானே வச்சுகிட்டது) மீறி சொல்றேன்....... ஐயோ சத்தியமா சிரிச்சு சிரிச்சு முடியலங்க..... லொள்ளு நக்கல்னா கவுண்டமணி தான்.......... நீங்க பதிவுலக கவுண்டமனிங்கோ..............

M.R said...

ஹா ஹா ஹா நல்ல கற்பனை நண்பரே

விக்கியுலகம் said...

அய்யா வணக்கமுங்க...எனக்கும் அந்த ஆயில் வேணுமுங்க!

M.R said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!////

நீதான்யா கரெக்டான கஸ்டமரு..... அந்த ஆயிலை தலைல தேச்சிக்கிட்டு கொஞ்சத்த வாய்ல விட்டுக்கிட்டா எல்லாம் சரியாப்போய்டும்......

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!//

டேய் டேய் நாயே என்னை எதுக்குடா கோர்த்து விடுறே...

ராஸ்கல் நீயும் முடி இல்லாமதான் சுத்திட்டு இருக்கிறயா நாசமாபோச்சுபோ...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!////

நீதான்யா கரெக்டான கஸ்டமரு..... அந்த ஆயிலை தலைல தேச்சிக்கிட்டு கொஞ்சத்த வாய்ல விட்டுக்கிட்டா எல்லாம் சரியாப்போய்டும்....//

அப்பிடியே அந்த இத்துப்போன கயித்தையும் தூக்கி கையில குடுத்துரும்ய்யா புண்ணியமா போகும்...

அப்புறம் அந்த மருந்துல காறி துப்பிட்டு குடுங்க தேச்சிக்கட்டும் ஹி ஹி...

விக்கியுலகம் said...

அதாவதுங்க எனக்கு இந்த மருந்து மாத்திரைன்னாலே அலர்ஜிங்க...வேணும்னா சாப்பாட்ல எலி பாஷானம் போல கலந்து சாப்பிட முடியுமாங்க!

Powder Star - Dr. ஐடியாமணி said...

/////Powder Star - Dr. ஐடியாமணி said...
ஹா ஹா ஹா செம காமெடி தல! அந்த எருமை மாட்டு ஆயிலோட பாரின் ஏஜெண்டா என்னையப் போடுங்க தல!

பவர்ஸ்டார் வாழ்க! பன்னியும் வாழ்க!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/////

யோவ் ஒழுங்கா சங்கத்துல காசை கட்டிட்டு எண்ணைல கைய வையி.....///////

அண்ணே, எண்ணையில கைய வைச்சா, கையோட ஒட்டிக்காதுல்ல! ( ஹி ஹி ஹி
)

விக்கியுலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!////

நீதான்யா கரெக்டான கஸ்டமரு..... அந்த ஆயிலை தலைல தேச்சிக்கிட்டு கொஞ்சத்த வாய்ல விட்டுக்கிட்டா எல்லாம் சரியாப்போய்டும்....//

அப்பிடியே அந்த இத்துப்போன கயித்தையும் தூக்கி கையில குடுத்துரும்ய்யா புண்ணியமா போகும்...

அப்புறம் அந்த மருந்துல காறி துப்பிட்டு குடுங்க தேச்சிக்கட்டும் ஹி ஹி...

>>

யாருங்க இந்த இருட்டுல போட்டோ எடுத்த நாதாரி!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அதாவதுங்க எனக்கு இந்த மருந்து மாத்திரைன்னாலே அலர்ஜிங்க...வேணும்னா சாப்பாட்ல எலி பாஷானம் போல கலந்து சாப்பிட முடியுமாங்க!//

டேய் மூதேவி, அதான் வீட்டுல ரெண்டு விஸ்கி பாட்டல் இருக்குன்னு சொன்னியே, அதுல கலந்து அடிச்சி விடு கொய்யால இருக்குறதும் போகட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
அய்யா எனக்கு ஏற்கனவே முடி காலிங்க..ரெண்டு நாதாரிங்க கூட சேந்து மூளையும் காலி...அதுக்கு எதாவது ஹிஹி!////

நீதான்யா கரெக்டான கஸ்டமரு..... அந்த ஆயிலை தலைல தேச்சிக்கிட்டு கொஞ்சத்த வாய்ல விட்டுக்கிட்டா எல்லாம் சரியாப்போய்டும்....//

அப்பிடியே அந்த இத்துப்போன கயித்தையும் தூக்கி கையில குடுத்துரும்ய்யா புண்ணியமா போகும்...

அப்புறம் அந்த மருந்துல காறி துப்பிட்டு குடுங்க தேச்சிக்கட்டும் ஹி ஹி...

>>

யாருங்க இந்த இருட்டுல போட்டோ எடுத்த நாதாரி!//

டேய் அண்ணா இங்கேதான் தப்பு பண்ணுற, யாரும் நம்மை தெளிவா கண்டு பிடிச்சி தெளிவா சாத்திறப்புடாதுன்னு இருட்டுல இருக்கேன் வா நீயும் ஜோதியில கலந்துக்கோ...

விக்கியுலகம் said...

ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!//

இம்புட்டு பேசுற ராஸ்கல் நீ உன் படத்தை போட்டுரு பாத்துருவோம் ஹி ஹி....

விக்கியுலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!//

இம்புட்டு பேசுற ராஸ்கல் நீ உன் படத்தை போட்டுரு பாத்துருவோம் ஹி ஹி....

>>>

அண்ணே இதுகெல்லாம் எங்களுக்கு சொரனை வந்துடுச்சின்னா நாங்கல்லாம் எப்படி அரசியல் வாதி ஆகுரது..போங்கன்னே போய் எதாவது மொராக்கோகாரி வராளா பாருங்க ஹிஹி!

கக்கு - மாணிக்கம் said...

பாவமையா.....ஏனிந்த கொல வெறி பன்னி?

அதுசரி, நா ஒரு வீடியோ பதிவு ஒன்னு இட்டேன் கண்ணு, நம்ம நண்டு நொரண்டு கூட மொதோ ஆளா வந்து கினாருபா......அப்புறமா பாத்தா நம்ம பதிவு கானா பூடிச்சி பா.......தமிழ் மனம் காரனுங்கோ தூக்கிட்டானுங்க போல.

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!//

இம்புட்டு பேசுற ராஸ்கல் நீ உன் படத்தை போட்டுரு பாத்துருவோம் ஹி ஹி....

>>>

அண்ணே இதுகெல்லாம் எங்களுக்கு சொரனை வந்துடுச்சின்னா நாங்கல்லாம் எப்படி அரசியல் வாதி ஆகுரது..போங்கன்னே போய் எதாவது மொராக்கோகாரி வராளா பாருங்க ஹிஹி!//

டேய் மொரோக்காகாரி பேரை சொல்லிட்டியா நாசமாபோச்சுபோ பன்னி இப்போ ஜொள்ளு விட வந்துருவார் பாரு....

டேய் சொரணை இருந்தா அரசியலுக்கு வா இல்லன்னா பிடிச்சி வச்சி கிளிச்சிருவேன்...

Madhavan Srinivasagopalan said...

what's the problem.. ?
who's problem (has) ?
why one has problem ?
when's the problem ?
how's the problem ? (what extent)
where's the problem

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

உங்க எழுத்தை படிச்சிட்டு பவர் ஸ்டாரை பார்த்தா சிரிச்சு வயித்து வலியே வந்துருச்சி..அதுக்கு ஒரு மருந்து போடுங்க

MANO நாஞ்சில் மனோ said...

கக்கு - மாணிக்கம் said...
பாவமையா.....ஏனிந்த கொல வெறி பன்னி?

அதுசரி, நா ஒரு வீடியோ பதிவு ஒன்னு இட்டேன் கண்ணு, நம்ம நண்டு நொரண்டு கூட மொதோ ஆளா வந்து கினாருபா......அப்புறமா பாத்தா நம்ம பதிவு கானா பூடிச்சி பா.......தமிழ் மனம் காரனுங்கோ தூக்கிட்டானுங்க போல.//

கக்கு அண்ணே பார்த்து அண்ணே, உங்களையும் தூக்கிறப்போறாங்க ஹி ஹி....

Yoga.S.FR said...

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி.////ஐந்து நிமிடம் அதிகமில்லையா?

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,ப.ரா சார்! நீங்க புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லிட்டீங்க.அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.யோசிச்சுப் பாத்துப்புட்டு,இன்னிக்கே வாழ்த்து சொல்லுறாருன்னா ரெண்டு நாளைக்கு ப்ளாக் பக்கம் வரமாட்டாரு போல ன்னு பட்டுச்சு.அதனால,நைட்டோட நைட்டா நானும் புத்தாண்டு(ஆங்கில)வாழ்த்து சொல்லிக்கிறேன்!"ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்",டெரர் கும்மி நண்பர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்!!!!!

அஞ்சா சிங்கம் said...

நம்மகிட்ட ஒரு ப்ராடக்ட் இருக்கு .மம்மி பிட் ..சீ..சீ ....டம்மி பிட்

இதை மாட்டிகிட்டா நீங்க எவ்ளோ குண்டா இருந்தாலும் .உங்களை பவர்ச்டார் அளவிற்கு ஒல்லியாக காட்டும் ..

இதையும் கொஞ்சம் விளம்பர படுத்துங்க ப்ரதர் ..............................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த சைக்கிளுக்கு பெட்ரோல் ஊத்தனுமா? டீசலா?/////

நீங்க எதவேணா ஊத்துங்க, ஆனா சைக்கிள் பெடல்ல தான் ஓடும்.....//

வீல்ல ஓடாதா? என்ன கொடுமை சார் இது ?//////

வீலுதான் ஓடும், வீல்ல ஓடாது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Palaniappan Kandaswamy said...
//பவர் ஸ்டார் வாழ்கன்னு ஒரு நூறு வாட்டி இம்போசிசன் எழுதினால் கிடைக்கும் :))//

ஏனுங்க, எத்தனவாட்டி எழுதுனா சும்மா கொடுப்பீங்க? அவசரமா துணி காயப்போடோணுமுங்க. சீக்கிரம் சொல்லுங்க.//////

துணி காஞ்சிடுச்சுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
எவ்வளவு கொழுப்பு இருந்தா எங்க பவர்ஸ்டார இம்புட்டு கொடுமை படுத்துவீங்க ராஸ்கல், எல்லாருக்கும் லத்திகா டிவிடியை அனுப்பி பாக்கவச்சி அந்தர் பண்ணிருவேன் ஜாக்கிரதை ஹி ஹி.../////

யோவ் நாங்கள்லாம் லத்திகா ஷூட்டிங் ஸ்பாட்லயே தங்குறவனுங்க....... எங்ககிட்டயேவா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே அந்த கயிறை பத்திரமா வச்சிக்கோங்க, பவர் அண்ணன் படம் ரிலீஸ் அன்னைக்கு தியேட்டர் முன்னாடி வச்சா அமோகமா சேல்ஸ் ஆகிரும், செல்வாவும் வல்கரா வந்து வாங்கிட்டு போவான் பாருங்க.../////

அடடடா... அதுக்கிடைல இந்த நண்பன் படம் வேற வரபோவுதே, நான் எதுக்கும் ரெண்டு லோடு கயித்துக்கு சொல்லி வெக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சுவடுகள் said...
ஆமா,இதெல்லாம் ரூம்போட்டு ஜோசிப்பிங்களா?/////

ஏன் ஹால்ல உக்காந்து யோசிச்சா ஒத்துக்க மாட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ....//

என்ன ஜிலேபி கொடுக்குற மாதிரி கூப்புடுதீரு...//////

அது என்ன ஜிலேபி கொடுக்கற மாதிரி கூப்புடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Selvakumar selvu said...
நான் வீட்டிற்குக் கிளம்பிவிட்டபடியால் இந்தப் பதிவினை காலையில் வந்து படித்துக்கொள்கிறேன்.

இருப்பினும் இதில் எங்கள் தலைவரைப் பற்றி என்னவோ எழுதியிருப்பதாகவும் அவரை கிண்டல் செய்பவர்களுக்கு சுளுக்கெடுக்க விரைவில் ஆனந்தத் தொல்லை தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதையும் இருமாப்புடன் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து விடைபெருகிறேன்./////

ஆனந்தத் தொல்லை நமக்கு ஆனந்த தொல்லையாகவே இருக்க போகிறது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹாலிவுட்ரசிகன் said...
எப்புடி பாஸ் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? இதுக்காக தனியே எங்காவது ரூம் வச்சிருக்கீங்களா?

சந்தானம் எல்லாம் இந்த காமெடி முன்னாடி ஜுஜுபி .../////

நான் என்ன சேலத்து சித்தா டாகுடரா, பர்மனெண்டா லாட்ஜ்ல ரூம் போட்டு வெச்சிருக்க? எல்லாம் பவர் ஸ்டாரின் மகிமை....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எனக்கு பிடித்தவை said...
உங்க ப்ளாக் ல கமெண்ட் போடறதுக்கே ஒரு பயம் தான். ஏன்ன நீங்கெல்லாம் ரத்தபூமி ஆட்களாச்சே.......
ஆனாலும் இன்னைக்கு தடைய(எனக்கு நானே வச்சுகிட்டது) மீறி சொல்றேன்....... ஐயோ சத்தியமா சிரிச்சு சிரிச்சு முடியலங்க..... லொள்ளு நக்கல்னா கவுண்டமணி தான்.......... நீங்க பதிவுலக கவுண்டமனிங்கோ............../////

வாங்கோ வாங்கோ, இதுக்கெல்லாம் பயந்தா எப்படிங்கோ......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///M.R said...
ஹா ஹா ஹா நல்ல கற்பனை நண்பரே///

நன்றி நண்பரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///M.R said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்////

நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
அதாவதுங்க எனக்கு இந்த மருந்து மாத்திரைன்னாலே அலர்ஜிங்க...வேணும்னா சாப்பாட்ல எலி பாஷானம் போல கலந்து சாப்பிட முடியுமாங்க!////

சாப்பாட்டுல எதுக்கு கலக்கனும்? அதான் பாலிடால் இருக்கே, சரக்குல கலந்து அடிங்க........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆள் இல்லாத டீக்கடையில் தனியாக டீ ஆத்தும் பன்னிக்குட்டியை காறி துப்பிக்கொள்கிறேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வலையில்
நேத்து போட்ட அதே பதிவுதான் இருக்கிறது :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆள் இல்லாத டீக்கடையில் தனியாக டீ ஆத்தும் பன்னிக்குட்டியை காறி துப்பிக்கொள்கிறேன் :)/////

கடமை உணர்ச்சியோடு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பிரபல பதிவரை இன்சல்ட் செய்வதைக் கண்டிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்று என் வலையில்
நேத்து போட்ட அதே பதிவுதான் இருக்கிறது :)/////

நாளைக்கும் இருக்கும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்று என் வலையில்
நேத்து போட்ட அதே பதிவுதான் இருக்கிறது :)/////

நாளைக்கும் இருக்கும்.... //

i will delete. இப்ப என்ன பண்ணுவீங்க?இப்ப என்ன பண்ணுவீங்க?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பாவம் எண்கள் பவர் ஸ்டார் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

இன்று :

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

Selvakumar selvu said...

எங்கள் தலைவரைப் பற்றி தவறாக எந்தக் கருத்தும் இந்தப் பதிவில் எழுதப்படாததால் மகிழ்கிறேன்.

இருப்பினும் சாதாரண சோப்பு, எண்ணை , கயிறு விளம்பரங்களுக்குக் கூட எங்களின் தலைவரின் படம் தேவைப்படுகிறது என நினைக்கும் பொழுது பவர் ஸ்டாரின் ரசிகன் என்கிற முறையில் மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் , கம்பீரமாகவும் இன்னும் என்ன என்னவோவாகவும் இருக்கிறது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Powder Star - Dr. ஐடியாமணி said...
/////Powder Star - Dr. ஐடியாமணி said...
ஹா ஹா ஹா செம காமெடி தல! அந்த எருமை மாட்டு ஆயிலோட பாரின் ஏஜெண்டா என்னையப் போடுங்க தல!

பவர்ஸ்டார் வாழ்க! பன்னியும் வாழ்க!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/////

யோவ் ஒழுங்கா சங்கத்துல காசை கட்டிட்டு எண்ணைல கைய வையி.....///////

அண்ணே, எண்ணையில கைய வைச்சா, கையோட ஒட்டிக்காதுல்ல! ( ஹி ஹி ஹி
)/////

எண்ணை கையோட ஒட்டாது, ஆனா கை எண்ணையோட ஒட்டிக்கும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!/////

தக்காளி.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
ஆமா இவரு God father இவர போட்டு தள்ளி அவங்க பெரிய ஆளாகப்போராங்க..போய்யா டுபுக்கு!//

இம்புட்டு பேசுற ராஸ்கல் நீ உன் படத்தை போட்டுரு பாத்துருவோம் ஹி ஹி....////

இதுதாம்ல ஆப்பு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
பாவமையா.....ஏனிந்த கொல வெறி பன்னி?

அதுசரி, நா ஒரு வீடியோ பதிவு ஒன்னு இட்டேன் கண்ணு, நம்ம நண்டு நொரண்டு கூட மொதோ ஆளா வந்து கினாருபா......அப்புறமா பாத்தா நம்ம பதிவு கானா பூடிச்சி பா.......தமிழ் மனம் காரனுங்கோ தூக்கிட்டானுங்க போல./////

பவர்ஸ்டார்னா தமிழ்நாடே பதறுதுங்கோ.... (தமிழ்மணம் தூக்குற அளவுக்கு அப்படி என்ன வீடியோவுங்ணா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Madhavan Srinivasagopalan said...
what's the problem.. ?
who's problem (has) ?
why one has problem ?
when's the problem ?
how's the problem ? (what extent)
where's the problem/////

ஆல் தி ப்ராப்ளம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நல்ல நேரம் சதீஷ்குமார் said...
உங்க எழுத்தை படிச்சிட்டு பவர் ஸ்டாரை பார்த்தா சிரிச்சு வயித்து வலியே வந்துருச்சி..அதுக்கு ஒரு மருந்து போடுங்க/////

வாங்க பாஸ், அதுக்கு மருந்து மறுக்கா மறுக்கா சிரிக்கிறதுதான்.....

Selvakumar selvu said...

அண்ணன் வந்துவிட்டபடியால் இன்று இங்கே கடையைத் திறக்கலாம் போல இருக்கிறதே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
கக்கு - மாணிக்கம் said...
பாவமையா.....ஏனிந்த கொல வெறி பன்னி?

அதுசரி, நா ஒரு வீடியோ பதிவு ஒன்னு இட்டேன் கண்ணு, நம்ம நண்டு நொரண்டு கூட மொதோ ஆளா வந்து கினாருபா......அப்புறமா பாத்தா நம்ம பதிவு கானா பூடிச்சி பா.......தமிழ் மனம் காரனுங்கோ தூக்கிட்டானுங்க போல.//

கக்கு அண்ணே பார்த்து அண்ணே, உங்களையும் தூக்கிறப்போறாங்க ஹி ஹி....////

ங்கொய்யால எப்புடி எடுத்துக்கொடுக்குதுன்னு பாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Selvakumar selvu said...
அண்ணன் வந்துவிட்டபடியால் இன்று இங்கே கடையைத் திறக்கலாம் போல இருக்கிறதே ?/////

படுவா.. இதென்ன சந்தையா கடை போடுறதுக்கு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Yoga.S.FR said...
எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி.////ஐந்து நிமிடம் அதிகமில்லையா?./////

சில பன்னாடைங்களுக்கு தம் ஜாஸ்தியில்லியா, அதான் 5 நிமிசம்.... (அப்புறம் தப்பிச்சிட கூடாது பாருங்க?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.S.FR said...
இரவு வணக்கம்,ப.ரா சார்! நீங்க புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லிட்டீங்க.அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.யோசிச்சுப் பாத்துப்புட்டு,இன்னிக்கே வாழ்த்து சொல்லுறாருன்னா ரெண்டு நாளைக்கு ப்ளாக் பக்கம் வரமாட்டாரு போல ன்னு பட்டுச்சு.அதனால,நைட்டோட நைட்டா நானும் புத்தாண்டு(ஆங்கில)வாழ்த்து சொல்லிக்கிறேன்!"ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்",டெரர் கும்மி நண்பர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்!!!!!/////

நன்றி நன்றி நன்றி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
நம்மகிட்ட ஒரு ப்ராடக்ட் இருக்கு .மம்மி பிட் ..சீ..சீ ....டம்மி பிட்

இதை மாட்டிகிட்டா நீங்க எவ்ளோ குண்டா இருந்தாலும் .உங்களை பவர்ச்டார் அளவிற்கு ஒல்லியாக காட்டும் ..

இதையும் கொஞ்சம் விளம்பர படுத்துங்க ப்ரதர் ...............................//////

அண்ணே நீங்க ஏதோ தவறான யாவாரம் பண்ற மாதிரி தெரியுது..... பவர் ஸ்டாரை விட்ருங்கண்ணே....!

சசிகுமார் said...

அண்ணே அருமை..... சிரிக்காம இருக்க முடியல.... திரும்பவும் இன்னைக்கு நைட் பதிவ படிக்கணும்.... சிரிச்சுகிட்டே புத்தாண்டை வரவேற்கலாம் இல்ல....

siva sankar said...

me the firstu wishes..

FOOD NELLAI said...

தமிழகத்தில் தானே மழை. தங்கள் வலைப்பூவில் சிரிப்பு மழை.

FOOD NELLAI said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அப்பு said...

வாயில்லாப் பூச்சியைப் போட்டு வாடி எடுக்குரீன்களே...

புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
அனைவருக்கும், பன்னிக்குட்டி அண்ணனுக்கும், டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வைகை said...

:-))

Loganathan Gobinath said...

பவர் ஸ்டாரை பார்த்தால் உங்கள் சைக்கிளை மிதித்ததால் இன்னும் ஒரு சுற்று குண்டானவர் போலிருக்கே பாஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சசிகுமார் said...
அண்ணே அருமை..... சிரிக்காம இருக்க முடியல.... திரும்பவும் இன்னைக்கு நைட் பதிவ படிக்கணும்.... சிரிச்சுகிட்டே புத்தாண்டை வரவேற்கலாம் இல்ல....////

வாங்கண்ணே நன்றி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///siva sankar said...
me the firstu wishes..////

உங்களுக்கும் வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///FOOD NELLAI said...
தமிழகத்தில் தானே மழை. தங்கள் வலைப்பூவில் சிரிப்பு மழை.///

வாங்க ஆப்பீசர்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD NELLAI said...
தங்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////

தங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்பு said...
வாயில்லாப் பூச்சியைப் போட்டு வாடி எடுக்குரீன்களே...

புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
அனைவருக்கும், பன்னிக்குட்டி அண்ணனுக்கும், டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.../////

என்னது வாயில்லாப்பூச்சியா.... ஏண்ணே? வாழ்த்துகளுக்கு நன்றிங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இராஜராஜேஸ்வரி said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.///

நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வைகை said...
:-))///

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Loganathan Gobinath said...
பவர் ஸ்டாரை பார்த்தால் உங்கள் சைக்கிளை மிதித்ததால் இன்னும் ஒரு சுற்று குண்டானவர் போலிருக்கே பாஸ்.////

பின்னே வரிசையா படம் இருக்கு, கிளாமரை கூட்ட வேணாமா?

Dr.Dolittle said...

சார் அந்த கயிறு டிரீட்மன்ட்க்கு யாரு டெமோ செஞ்சு காட்டுவாங்க ? ( ப்ளீஸ் பவர் ஸ்டாரயே செஞ்சு காட்ட சொல்லுங்க )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Dr.Dolittle said...
சார் அந்த கயிறு டிரீட்மன்ட்க்கு யாரு டெமோ செஞ்சு காட்டுவாங்க ? ( ப்ளீஸ் பவர் ஸ்டாரயே செஞ்சு காட்ட சொல்லுங்க )////

அந்தளவுக்கு பவர்ஃபுல் கயிறு இன்னும் கண்டுபுடிக்கலீங்க.....!

சமுத்ரா said...

நல்ல கற்பனை Mr.பன்றி.

Jaleela Kamal said...

http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_20.html

ஒரு நிமிஷம் இங்கு வந்து போகலாமே .
http://samaiyalattakaasam.blogspot.com/2012/09/blog-post_21.html