Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - இன்றுமுதல் பதிவுகளை இணைக்கலாம்!

அனைவருக்கும் வணக்கம்,
சுனாமி என்ற ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடி 7 அண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயற்கையின் ஆக்ரோஷ சக்தியை முழுமையாக உணர்ந்த தருணங்கள் அவை. சுனாமியால் வந்த பேரிழப்புகளும், துயர் துடைக்க நீண்ட ஆதரவுக்கரங்களும் என்றென்றும் மறக்கமுடியாதவை. 

இனி நம் டெரர் கும்மி விருதுகள் பற்றிய இன்றைய அறிவிப்பினைக் காண்போம்.

முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.



முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளை இணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.

                                                                                      




நன்றி..!

39 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனுப்பிடுவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
அனுப்பிடுவோம்...////

வாங்க வாங்க.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் ரிஜிஸ்ட் பண்ணிட்டேன்...

எனக்கு எப்போ கண்பர்மேஷன் தகவல் வரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

15 நிமிசத்துக்குள்ள வந்துடும் சௌந்தர்......!

NAAI-NAKKS said...

Ennai mathiri miga periya
APPATAKKER-ku
thaniya ethuvum illaiye.....
Udane...room podurom.....
Yosikkirom.....
Prize-a
ellarukkum vittu
kodukkurom......

He....he.......

NAAI-NAKKS said...

Ennai pottila...kalanthu kolla
kuudaathunnu.....
Mirattaravanga
kitte irunthu
ennai.....kappathuveengala.....

Nan kalanthu kitta
avungalukku oru
parisume
kidaikkathaam

K.s.s.Rajh said...

வணக்கம் தலைவா உங்கள் முதல் முயற்சி சிறப்பாக வெற்றி பெறவேண்டும்.

இதோ நான் என் பதிவுகளை அனுப்புறன்

NAAI-NAKKS said...

Vazhthukkal
:)
pakirvukku nanri
kalakkal
etc....etc

template comment
poduvor sangam....he...he...he

NAAI-NAKKS said...

Intha potti-la
ELI
kalanthukkalaama ?????
Avar thanga kettga sonnar ???
Ippadikku-----
panchayathu thalaivar....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Ennai mathiri miga periya
APPATAKKER-ku
thaniya ethuvum illaiye.....
Udane...room podurom.....
Yosikkirom.....
Prize-a
ellarukkum vittu
kodukkurom......

He....he.......////


ஏன் இந்த கொலவெறி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// K.s.s.Rajh said...
வணக்கம் தலைவா உங்கள் முதல் முயற்சி சிறப்பாக வெற்றி பெறவேண்டும்.

இதோ நான் என் பதிவுகளை அனுப்புறன்/////

நன்றி ராஜ்..... வாழ்த்துக்கள்.......!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனுபவம் என்ற பிரிவில் பயணக்கட்டுரை மட்டுதான் பகிர வேண்டுமா..

நகைச்சுவைப்பிரிவில் மொக்கை நகைச்சுவை அடங்குமா தெரியப்படுத்தவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
அனுபவம் என்ற பிரிவில் பயணக்கட்டுரை மட்டுதான் பகிர வேண்டுமா..

நகைச்சுவைப்பிரிவில் மொக்கை நகைச்சுவை அடங்குமா தெரியப்படுத்தவும்/////

அனுபவப்பிரிவில் அனைத்துவிதமான அனுபவங்களையும் இணைக்கலாம், பயணக்கட்டுரைகள் உள்பட...! நகைச்சுவைப் பிரிவில் மொக்கைகளும் வரும்!

NAAI-NAKKS said...

Aduthu miga periya alavula
THIRATTI
aarambikira velai-i
parkkavum....

Yoga.S.FR said...

வணக்கம்,ப.ரா சார்!ஏழு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த இயற்கை அனர்த்த நாளை உங்களுடன் இணைந்து நினைவு கூறுகிறேன்.இழப்புகளை சந்தித்த அத்தனை பேருக்குமாக ஆண்டவனை இறைஞ்சுவோம்.///போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!டெரர் கும்மி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வெற்றிகரமாக அனுப்பியாச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Aduthu miga periya alavula
THIRATTI
aarambikira velai-i
parkkavum....//////

நாம நல்லாருக்கறது புடிக்கலியா? பிச்சிபுடுவேன் பிச்சி....... என்ன வெளையாட்டு இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.S.FR said...
வணக்கம்,ப.ரா சார்!ஏழு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த இயற்கை அனர்த்த நாளை உங்களுடன் இணைந்து நினைவு கூறுகிறேன்.இழப்புகளை சந்தித்த அத்தனை பேருக்குமாக ஆண்டவனை இறைஞ்சுவோம்.///போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!டெரர் கும்மி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//////

வாங்க ஐயா... மிக்க நன்றி.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
வெற்றிகரமாக அனுப்பியாச்சி...////

வாழ்த்துகள்......!

நிரூபன் said...

வணக்கம் பன்னி அண்ணே,
சுனாமி மீட்டலுடன் பதிவினைத் தொடங்கியிருக்கிறீங்க.

நானும் ரிஜிஸ்டர் பண்ண ட்ரை பண்றேன்.

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள்

நிரூபன் said...

Yoga.S.FR said...//

வணக்கம் யோகா ஐயா,
உங்க ஈமெயிலுக்கு ஒரு கடதாசி போட்டிருக்கேன். பாருங்க.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சொக்கா.. சொக்கா..

ஆயிரம் போற்காசுகள்( ஒ இங்கு பணமா)..

அனுப்பிட்டாப் போச்சு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்...

ஸ்வீட் எடு கொண்டாடு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிரூபன் said...
வணக்கம் பன்னி அண்ணே,
சுனாமி மீட்டலுடன் பதிவினைத் தொடங்கியிருக்கிறீங்க.

நானும் ரிஜிஸ்டர் பண்ண ட்ரை பண்றேன்./////

வணக்கம் நிரூபன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீச்சல்காரன் said...
வாழ்த்துகள்/////

நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சொக்கா.. சொக்கா..

ஆயிரம் போற்காசுகள்( ஒ இங்கு பணமா)..

அனுப்பிட்டாப் போச்சு../////

அனுப்புங்க அனுப்புங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள்...

ஸ்வீட் எடு கொண்டாடு...///

நன்றி கருன்!

ViswanathV said...

ஏனுங் இது காபி பேஸ்ட் ஆங் ?

காட்டான் said...

வணக்கம் ராம்சாமி..!
நானும் ஒரு பதிவ இணைகிறேன்.. வென்றால் ஆயிரம் யூரோ அனுபுவீங்கதானே...!! ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ViswanathV said...
ஏனுங் இது காபி பேஸ்ட் ஆங் ?////

ஆமாங்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// காட்டான் said...
வணக்கம் ராம்சாமி..!
நானும் ஒரு பதிவ இணைகிறேன்.. வென்றால் ஆயிரம் யூரோ அனுபுவீங்கதானே...!! ஹி ஹி/////

வணக்கம்.......! என்னது ஆயிரம் யூரோவா...... ஹஹ்ஹா....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good work . . I will participate . .

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

பங்கெடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கலைமாமணி சேகர் said...

இத பாக்க எதோ சீரியஸ் மாட்டார் மாதிரி தெரியுது ....! நம்பி இறங்கலாமா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Good work . . I will participate . .////

வாங்க ராஜா, வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.பி.ஜெ.கேதரன் said...
பங்கெடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.////

நீங்களும் கலந்துக்குங்க, உங்களுக்கும் வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கலைமாமணி சேகர் said...
இத பாக்க எதோ சீரியஸ் மாட்டார் மாதிரி தெரியுது ....! நம்பி இறங்கலாமா ???/////

ஆமா, இறங்கலாம். வாழ்த்துகள்!

FOOD NELLAI said...

பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கோடு களம் இறங்கியிருக்கீங்க.டெரர் கும்மி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.