Saturday, July 2, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. இதே மாதிரி சினிமாக்காரங்களால கண்டுக்காம வீணாக்கப்பட்ட, சில பல  அம்சமான நடிகைகள் லிஸ்ட்ட ஏற்கனவே ஒரு பதிவுல போட்டிருந்தேன் (பழைய பதிவு ஒண்ண படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு?). அதப் படிச்சிப்புட்டு அப்பவே பல பேரு கதறி அழுதாய்ங்க. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகைகள கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)


1. சிந்து மேனன்




அழகுன்னா அழகு குடும்பப்பாங்கான அழகு, அப்படி ஒரு அழகான முகம், அதில் வரும் அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க. ஆனா என்ன பிரயோசனம்? அங்கொண்ணும் இங்கொண்ணும் சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க. சமீபத்துல ஈரம்னு ஒரு படத்துல நடிச்சிருந்தாங்க, அந்தப் பாட்டுல கூட ரொம்ப நல்லா இருப்பாங்க சிந்து. நம்ம மாங்கா மண்டைசுக்கு அப்படியும் புடிக்கல...!


2. வேகா (ஷோபிக்கண்ணு)


பசங்க படத்துல ஷோபிக்கண்ணுவா நடிச்ச வேகாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் (எனக்கு மட்டுமா?). பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி தோற்றம், உணர்ச்சிக் குவியலாய் முகம், தெளிந்த நீரோடை போல் நடிப்பு. அதிலும் அந்த புருவங்கள மேலும் கீழுமாய் அசைச்சி பார்க்குமே ஒரு பார்வை... சான்ஸ்லெஸ்..... ! பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க, வேற என்ன சொல்றது?
ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்.




3. சஞ்சனா


ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க, ஆனா அதுலல்லாம் ஒண்ணுமில்லீங்கோ, கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...)


4. மல்லிகா கபூர்



மென்மையான அழகு, அற்புதத்தீவு படத்துல இளவரசி வேடத்துல நிஜமாவே ஒரு இளவரசி மாதிரி இருந்தாங்க, அத்தனை அழகு.......! அழகான ஸ்ட்ரக்சர், அதற்கேத்த சூப்பர்ப் முகவாக்கு, ம்ம்...... யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ? நாம அட்லீஸ்ட் படத்துலேயாவது பாத்து ரசிக்கலாம்னா நமக்கு அதுக்கும் கொடுத்து வெக்கலியே?


5. விமலா ராமன்



செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? ஹோம்லி முகம், கவர்ச்சியான உடல்வாகுன்னு வெரி டேஞ்சரஸ் காம்பினேசன், என்ன இருந்தும் என்ன பயன்,வழக்கம் போல (?) மனவாடுகள் அள்ளிட்டு போய்ட்டாங்க, இப்போ தெலுங்குல கலக்கிட்டு இருக்காங்க............ ! 


6. சமிக்‌ஷா 



அறிந்தும் அறியாமலும் படத்துல, பாவாடை தாவணியோட ஒரு காட்சில, அப்புறம் மாடர்ன் மங்கையா படம் பூரா.. சும்மா சொல்லக்கூடாதுங்க, நல்லாத்தாங்க இருந்துச்சு. நல்ல ஸ்லிம் பாடி, அதற்கேற்ற முக அழகு வேற என்னங்க வேணும்? ஆனா ஏன் நம்மாளுங்க படத்துல போட மாட்டெங்கிறானுங்க? ஒண்ணுமே புரியலியே?


7. அபிதா



சேது படத்த மறக்க முடியுமா, இல்ல அதுல நடிச்ச அபிதாவத்தான் மறக்க முடியுமா? எப்படி ஒரு ஹோம்லி அழகு? அபிதாவோட முகத்துக்கே எவ்வளவு வேணாலும் கொட்டி கொடுக்கலாம். அம்மிணி ஒரே ஒரு எக்குத்தப்பான மலையாள படத்துல நடிச்சிருச்சுங்க, அதுவும் சேது வரமுன்னாடி சான்ஸ் தேடிட்டு இருந்தப்ப நடிச்சதாம் அது.  சேது ஓடுனதுக்கப்புறம் அந்தப் படத்த தூசிதட்டி எடுத்து ரிலீஸ் பண்ணி அபிதாவ டோட்டலா காலி பண்ணிட்டானுங்க ராஸ்கல்ஸ்....! (அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)

ஓகே லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கு, இத்தோட முடிச்சுக்குவோம். கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!


Saturday, June 25, 2011

வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். 

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!







மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.



மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!


!

Tuesday, June 7, 2011

பன்னீஸ் டீவி: அப்பாடக்கர்ஸ் ஸ்பெசல்....!

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பலப்பல அப்பாடக்கர்கள் வலம் வருகிறார்கள். அவர்களில் எனக்குப் பிடிச்ச சில சினிமா அப்பாடக்கர்கள் யார் யாருன்னு பார்ப்போமா?

விஷால்
இவர் ஆரம்பத்துல ஒழுங்காத்தான் போய்க்கிட்டு இருந்தாரு, அப்புறம் திடீர்னு வழக்கமா எல்லா நடிகர்களுக்கும் வர்ர ஞானதோயம் இவருக்கும் வந்திடுச்சு. அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு. பைட்டுன்னா பைட்டு அப்படி ஒரு பைட்டு, கீழ் இருந்து மேல, மேல இருந்து கீழ...... அப்பப்பப்பா என்ன ஒரு சாகசம்?

இந்த வீடியோவ பாருங்க, இவரு அந்த பாலை வெச்சு என்ன என்ன பண்றாருன்னு?




சிம்பு
இவரு பெரிய அப்பாட்டக்கருன்னு இவரே சொல்லுவாருங்க. இந்த பைட்ட பாத்தீங்கன்னா நீங்களும் அதைத்தான் சொல்லுவீங்க....!



சுந்தர் சி
ஏற்கனவே இருக்கிற அப்பாடக்கர்கள் பத்தாதுன்னு ஒழுங்கா டைரக்சன் பண்ணிக்கிட்டு இருந்த மனுசன புடிச்சி களத்துல எறக்கி விட்டுட்டானுங்க. அண்ணன் சும்மா விடுவாரா? வீடியோவ பாருங்க, இனி அடுத்து விஜயகாந்த் இடத்த புடிக்க போறது இவர்தான். யார் கண்டது கூடிய சீக்கிரம் இவருக்கும் ஒரு டாகுடர் பட்டம் கிடச்சாலும் கிடைச்சுடும்!



சின்ன டாகுடர்
இவரு இல்லாம இந்த லிஸ்ட்ட போட முடியுங்களா? எங்க இளையதளபதிய பத்தி இனி சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லீங்கோ...!



பழைய அப்பாடக்கர்
நோ கமெண்ட்ஸ்




தி கிரேட் ஆல் டைம் அப்பாடக்கர்
(நோ கமெண்ட்சுன்னு சொல்லக் கூட முடியலீங்க......)





இன்றைய ஸ்பெசல் ஷோ:
எல்லா சாகசங்களையும் பாத்து பாத்து நொந்து போயிருப்பீங்க, அதுனால உங்களுக்காக இன்னிக்கு ஸ்பெசல் பாட்டு ஒண்ணு போடுறேன். (தேடிப்பாத்ததுல ரெண்டு பாட்டு சிக்குச்சு, எது நல்லாருக்குன்னு முடிவு பண்ண முடியல, அதுனால ரெண்டையுமே போட்டுட்டேன், நீங்களே பாத்து முடிவு பண்ணிக்குங்க)






புலி நல்லா உறுமுதுல்ல?

சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார் டாகுடர் சீனி, ஜேகே ரித்தீஷ் போன்ற வளரும் அப்பாடக்கர்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்!



நன்றிகள்
யூ டியூப்
வீடியோ ரீமிக்சிங், அப்லோட் செய்த நண்பர்கள்! 


!

Friday, June 3, 2011

ஆண்டு விழாவுங்கோ...!

எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ஆனா ஒரு பய கூட கண்டுக்கல. அட எனக்கே ஞாபகம் இல்லேன்னா பாருங்களேன். 

அப்படி என்னன்னு கேட்கறீங்களா? அட அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். இப்ப சொல்லுங்க, ஒரு வருசமா எப்படியெல்லாம் எழுதி எழுதி களைச்சி போயி இருக்கேன், பொன்னாட போர்த்தலேன்னா கூட பரவால்ல, அட ஒரு வார்த்தையாவது சொல்லி பாராட்ட வேணாமா? என்ன ஒலகமடா இது....? ஒரு பிரபல பதிவர பாராட்டனுமே, ஆறுதலா நாலு வார்த்த பேசனுமே கொஞ்சம் கூட அக்கறையில்லாம.... சே....!

ஓகே விடுங்க சார், நானே என்னை வாழ்த்திக்கிறேன். இப்போ மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு ஆண்டு விழா கொண்டாடப் போறேன். (ஏன் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்தான் ஆண்டுவிழா கொண்டாடனுமா...? நாங்களும் கொண்டாடுவோம்ல....!)   அதுனால ப்ளாக் பக்கம் வரும் அன்பர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள், பரிசுகள் தரலாம்னு இருக்கேன்.

இன்றைய ஆண்டுவிழா பதிவிற்கான பரிசுகள் அறிவிப்பு

1. இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு

பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே ப்ளாக்கிற்கு வந்து உடனடியாக பவர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்ற ஒபாமா

(பவர் ஸ்டார்: நான் ஒரு ப்ளாக் ஆரமிக்கலாம்ன்னு இருக்கேன்...

ஒபமா: ஏன் டாகுடர்?

பவர் ஸ்டார்: மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )

2. முதல் கமெண்ட் போடுபவருக்கு அடுத்த 20 கமெண்ட்டுகள் இலவசம்

3. நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

4. 50, 100, 150 வது கமெண்டுகள் போடுபவர்களுக்கு ஒரு வடை வாங்கித் த்ரப்படும் அல்லது வடை போட்டோவாவது தரப்படும்.

5. இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்.


அறிவிப்பு: மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எச்சரிக்கை: வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்னு கமெண்ட் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும், அப்படியும் அடங்காதவர்களுக்கு சராமாரியாக மைனஸ் ஓட்டுகள் போட்டுத்தள்ளப்படும்!



நன்றிகள்:
எஸ்கே: புகைப்படம்
சிரிப்பு போலீஸ்: ஒபாமா-பவர் ஸ்டார் உரையாடல்


!

Wednesday, May 25, 2011

வேணாம்... விட்ருங்க... !

நம்ம மங்குனிக்கு ஒரு போஸ்ட் (அட லெட்டர்தாங்க) வந்துச்சு,

போஸ்ட்மேன்: சார் உங்க ஒருத்தருக்காக அஞ்சு கிலொமீட்டர் வரேன்

மங்குனி: யோவ் ஏன்யா இப்படி வேஸ்ட்டா அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிட வேண்டியதுதானே?

*****

சிரிப்பு போலீஸ்: என்னடா டெர்ரர் பாண்டி, ஜெராக்ஸ் எடுக்க போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர்ரே? ஜெராக்ஸ் எடுக்க கொடுத்த காச முறுக்கு வாங்கி தின்னுபுட்டியா?

டெர்ரர் பாண்டியன்: பின்ன, நீ பாட்டுக்கு 10 பக்கத்த கொடுத்துட்டே, ஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி  செக் பண்ணி பார்க்க வேணாமா?

*****

நம்ம இம்சை பாபு இல்ல, அவரு ஒரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு,

அதுக்கு அந்த பொண்ணு, எனக்கு உங்களவிட ஒரு வயசு ஜாஸ்திங்க...

இம்சை அரசன் பாபு: சரி, அப்போ அடுத்த வருசம் வர்ரேன்....!

*****

சிரிப்பு போலீஸ்: ஏன்டா நரி.. ஏன் கண்ணாடிக்கு முன்னாடி இப்படி கண்ண மூடிக்கிட்டு ரொம்ப நேரமா நிக்கிறே? ஏதாவது புதுசா யோகா பண்ணி திருந்தி வாழ முயற்சி பண்றியா?

நரி: அட போ மச்சி... அதுலாம் ஒண்ணுமில்ல.... நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, நீயும் வேணா ட்ரை பண்ணி பாரேன்.....!

*****

டெர்ரர் பாண்டியன்: ஏன் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க...?

மங்குனி: இது ஓட்டப்பந்தயம், ஜெயிக்கிறவருக்கு கப்பு கொடுப்பாங்க...!

டெர்ரர்: அப்போ ஏன் மத்தவங்க ஓடுறாங்க...?

மங்குனி: ??????!!!!!!! %&^%^%$%

*****

மங்குனி : ஏண்டா டெரரை போட்டு இந்த அடி அடிக்கிற?

சிரிப்பு போலீஸ்: நம்ம புரோக்கர் கூடஅக்ரிமென்ட் போடுறதுக்கு பத்திர பேப்பர் வாங்கிட்டு வாடான்னா வெறுங்கைய வீசிட்டு வந்து நிக்கிறான். ஏன்னு கேட்டா பத்திர பேப்பர் பத்திரமா இருக்கட்டும்னு பேங்க் லாக்கர்ல வச்சிட்டேன்னு சொல்றான்.

டெரர் : நான் சரியாதான செஞ்சேன். எதுக்கு என்னை அடிக்கிறான். !#@@@@

*****

நம்ம நரி ஒரு இண்டர்வியூவுக்கு போயிருந்தான் (வேறெதுக்கு... வேலைக்குத்தான்...!). அங்க துரதிர்ஷ்டவசமா சிரிப்பு போலீசுதான் டேமேஜரு...!

சிரிப்பு போலீசு: இப்போ ஒரு கேள்வி கேப்பேன், கரெக்டா பதில் சொல்லனும்!

நரி: கேளுங்க சார், அதுக்குத்தானே வந்திருக்கேன்!

சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!

நரி: ம்ம்ம்.... ஏழு சார்...!

சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல..... ரெண்டு பெருச்சாளி........, அப்புறம் ரெண்டு பெருச்சாளி..........., அப்புறம் ரெண்டு பெருச்சாளி..... தந்தா, இப்போ........... உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!

நரி: இப்பவும் ஏழு தான் சார்.....!

சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது.... ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக...!), அது எப்படி தம்பி ஏழு வரும்....?

நரி: ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு பெருச்சாளி இருக்கே...!

சிரிப்பு போலீசு: %^#&& ^&^%%^$%

*****



கேப்டன்... வேணாம்.... விட்ருங்க.... !

Monday, May 16, 2011

இனி தமிழகத்தின் எதிர்காலம்....?

இனி தமிழகத்தின் எதிர்காலம் அப்பாடக்கர்கள் கையிலா? என்ன அரசியல் பேசுறேன்னு பாக்கறீங்களா? மேல படிங்க சார்....!

எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிச்சு சொல்றவங்க பல பேரு இருக்காங்க, பல டெக்குனிக்குகள் இருக்கு, ஆனா இப்படி ஒரு நெலம வரும்னு யாராலேயும் எந்த டெக்குனிக்காலேயும் கண்டுபுடிச்சிருக்கவே முடியாது, அப்படி ஒரு எதிர்காலம் கையையும் காலையும் பப்பரக்கான்னு விரிச்சு வெச்சுக் காத்துக்கிட்டு இருக்கு. அது என்ன ஏதுன்னு பாத்து வெளங்கி நடந்துக்குங்க சார்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


கடந்தகாலம்



நிகழ்காலம்



எதிர்காலம்


இந்தப் படத்துக்காவது சிபி விமர்சனம் எழுத வேண்டும்! எழுதுவாரா? இல்லை வழக்கம்போல் திருட்டுத்தனமாக படத்தை பாத்துட்டு இல்லையென்று பம்முவாரா?

அவர் விமர்சனம் எழுதியே ஆக வேண்டும் என்று விரும்புவர்கள், தங்கள் காணிக்கையை இங்கே செலுத்திவிட்டுச் செல்லலாம்.அப்படியும் அவர் எழுதமாட்டேன் என்று சொல்வாரானால் பவர்ஸ்டாரின் பவர் ரசிகர்கள் உடனடியாக தீக்குளிப்பார்கள் (டீ இல்ல சார், தீ....  தீ சார் தீ.....!)

தமிழகத்தின் எதிர்காலத்தையே மாற்றி எழுத வரும் ஆனந்த தொல்லை படத்திற்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத எதிர்(பார்)ப்புகள் தமிழ் சினிமா உலகில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனந்த தொல்லை படத்தின் முதல் ஷோ அல்லது அதற்கு முன்பாகவே டிக்கட் வேண்டுபவர்கள், மெட்ராஸ் பவன் சிவகுமார் அவர்களை அணுகவும்! எப்படியும் உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டீவியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெனாவெட்டாக இருக்கும் வாலிப வயோதிக அன்பர்களை பவர்ஸ்டார் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கடுமையாக எச்சரிக்கிறோம். 

பவர்ஸ்டாரை இங்கே கிண்டலடிக்க விரும்பும் அப்பாடக்கர்கள் தயவுசெய்து லத்திகா படத்தைப் பார்த்து (வெறியேற்றிக்) கொண்டு வரவும்!

Saturday, May 14, 2011

யோவ்... புடிங்கய்யா... புடிங்கய்யா.....!



 இனி அஞ்சு வருசம் அவன் கைல சிக்காம எப்படி ஓட்டுவேன்........அவ்வ்வ்வ்வ்வ்வ்..........!



அவன எங்கேய்யா தேடுறது? சிக்க மாட்டாங்கிறானே? ஒருவேள கூகிள்ல தேடிப் பாக்கலாமா?



 என்னது சிக்கிட்டானா? அவனை அப்படியே புடிச்சு வைங்கய்யா இதோ வந்துடறேன்...!



 அப்பாடா இனி தைரியமா அடிக்கலாம், மொதல்ல ஒரு நல்ல பீர் கப்பு வாங்கனும்...!



அந்தப் பய மட்டும் மாட்டுனான்னா இனி ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் சார்ஜ்தாண்டா........!


கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா.. சட்டசபைக்கு போய்ட்டு உடனே ஓடி வந்திடுறேன்..!


போய்ட்டானா....?

!