Tuesday, February 1, 2011

ட்வீட்டர் #tnfisherman: இன்னும் எழுச்சி தேவை நண்பர்களே....!

?

நானும் அரசியல் பத்தி எழுத வேணாம்னு தான் ரொம்ப பொறுமையா இருந்தேன், முடியல சார், முடியல. 2-3 நாளா இவனுங்க வர்ர வரத்து தாங்க முடியல சார். பொதுமக்களை கூமுட்டைகள்னே கன்பர்ம் பண்ணிட்டானுங்க. இப்பவே இப்படின்னா தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கேவலங்கள் நடக்கப் போகுதோ?

தமிழக மீனவர்கள் மேல் இலங்கை அத்துமீறல்... இதுவரை 539 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. 10 வருசத்துக்கு மேல நடந்துக்கிட்டு இருக்கு. டெல்லிக்குப் போன நம்ம முதல்வர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? ”மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது, அவரிடம் எடுத்து சொல்லியிருகிறோம்” என்ன கொடும சார் இது?  தன் நாட்டின் குடிமக்களை வெளிநாட்டு கடற்படை கொன்று குவிக்கிறது,  அதைப் பற்றி ஒரு நாட்டோட பிரதமருக்கு அவ்வளவாக தெரியாதாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைவிட ஒரு கேவலம் கிடையவே கிடையாது! நம் முதல்வர் என்ன நினைப்பில் அப்படி சொல்லியிருக்காருன்னே தெரியல.

ஒரு நாட்டின் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது என்று கலைஞர் எப்படி முடிவு செய்தார்?  மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை பிரதமரே எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டாரா? இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த  நாடு........ ?

எனக்கு அப்பவே டவுட்டு, என்ன வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தான் இலங்கை போறதா சொல்லிட்டாங்களே, இவரு எதுக்கு அதுக்கப்புறமும் டெல்லி போறாருன்னு! பார்த்தா கூட்டணி பேச்சு வார்த்தையாம். அதானே தலைவரு எங்கே அனுப்பிச்ச கடிதம் கெடச்சிருச்சான்னு கேக்க போறாரோன்னு நெனச்சுட்டேன். இதுக்கிடையில நம்ம மருத்துவர் அய்யா வேற மக்களோட நகைச்சுவை உணர்வோடு விளையாடுகிறார். அய்யா, நீங்கள்  எதையும் கண்டு கொள்ளாமல் உங்கள் நகைச்சுவையை தொடருங்கள், பல பிரச்சனைகளில் சிக்கிச் சீரழியும் மக்களுக்கு அதாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டுமே?

இந்த அரசியல் வியாதிகளுக்கும் அவர்கள் அல்லக்கைகளுக்கும் மீனவர் பிரச்சனையை விட தேர்தல்ல யாருக்கு எத்தனை சீட்டுங்கறதுதான் இப்போ முக்கிய விஷயமா இருக்கு. இப்படியே போனால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று உணர்த்தப்பட வேண்டும். நிருபமா ராவ் இலங்கையில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்காங்க, அதாவது இரு நாடுகளின் கூட்டுக் குழு விரைவில் கூடி ஆலோசனை நடத்துமாம்.  ஏண் அந்தக் கருமத்த இப்பவே பேசித் தொலைச்சா என்ன? மூணு மாசத்துல தேர்தல் வர்ரதுனால அதுவரைக்கும் இப்படியே சமாளிச்சுட்டு அப்புறம் அப்படியே பழையபடி விட்டுட போறாங்க. அதுக்குத்தான் இந்த பம்மாத்து. அதற்கு இடம் தரக்கூடாது. நிரந்தர தீர்வு வர்ர வரை தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும் நண்பர்களே!

இணைய வழியாக போராட்டத்தை முன்னெடுக்கும் நண்பர்களை பாராட்டவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அதே நேரம் இது போதாது, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும். ட்விட்டர் தளத்தில் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் எழுச்சி மகத்தானது. ஆனால் இன்னும் #tnfisherman ட்விட்டர் ட்ரெண்ட்சில் முதலிடத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இன்னும் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை (நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்). அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருக்காமல் உடனே ட்விட்டரில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டிவீட்டரும் ஃபேஸ்புக், ஆர்க்குட் போல ஒரு சோசியல் நெட்வொர்ர்கிங் தளம்தான். இருப்பதிலேயே பயன்படுத்த மிக சுலபமானது. ஒருவேளை தெரியவில்லை என்றால் கூச்சப்படாமல் கேளுங்கள். உங்கள் ட்வீட்டுகளால் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
 
ட்விட்டரில் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு, நண்பர்களே, ட்விட்டரில் அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட விஷயம் உலக மீடியாக்களின் கவனத்தை பெறும். குறைந்தபடசம் இந்திய மீடியாக்களின் கவனைத்தையாவது பெறலாம். மேலும், இப்போதைக்கு இதுவே சுலபமான வழி. நீங்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதில்லை, போலீஸ் பயமில்லை, நீங்கள் யாரென்று கூட காட்டிக் கொள்ள வேண்டியதில்லை, சும்மா ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ஒரு கமெண்ட் அடித்து அத்தோடு #tnfisherman என்பதையும் பேஸ்ட் செய்து அனுப்பிவிட வேண்டியதுதான் (140 எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும்).  #tnfisherman என்று பேஸ்ட் செய்துவிட்டால், உங்கள் கமெண்ட்டுகள் #tnfisherman  அக்கவுண்டிற்கு சென்று விடும்.
 
இதுவரை 17000 கமெண்ட்டிற்கு மேல் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வெறும் தமிழ் பதிவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்தாலே இது மிக மிக குறைவு. தமிழ்மணத்தில் மட்டும் ஒரு நாளில் எழுதப்படும் பதிவுகள் 400, கமெண்ட்டுகள் 6000. இப்போது புரிகிறதா நாம் எங்கு இருக்கிறோம் என்று? ஆகவே நண்பர்களே உங்கள் அனைவரின் தொடர் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுகிறது. தினமும் ஆளுக்கு 10 ட்வீட்களாவது #tnfisherman  க்கு செய்யுங்கள். அடுத்தவர் கமெண்ட்டை ரீட்வீட் செய்தாலும் சரி, இல்லை காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், என்னுடைய #tnfisherman ட்வீட்டுகள் அனைத்தையும் யாரும் #tnfisherman க்காக பயன்படுத்திக்கொள்ளலாம்!


என் ட்வீட்டர் ஐடி: pannikkuttir

!

92 comments:

கொல்லான் said...

நல்ல விசயத்த யார் கேக்கப் போறாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கொல்லான் said...
நல்ல விசயத்த யார் கேக்கப் போறாங்க//////

வாங்க சார், ஏதோ நம்மால முடிஞ்சது ஊதற சங்க ஊதியாச்சு...!

கொல்லான் said...

//நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்//

நான் உங்களுக்கு சீனியர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கொல்லான் said...
//நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்//

நான் உங்களுக்கு சீனியர்./////

அப்போ 5 நாளு முன்னாடி நீங்க தொடங்குனீங்களா?

ரேவா said...

இவங்கல்லாம் அரசியல்கிற பேருல எந்த ஆணியும் புடுங்க வேணாம்... நாம எல்லாரும் ஒன்று படுவோம் தோழரே... எனக்கு கூட twitter use பண்ணத் தெரியாது... ஆனால் எனக்கு தெரிந்த வழிகளில் முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன்... தொடர்ந்து போராடுவோம்..

கொல்லான் said...

ஒன்னு முக்கியம் ராம்சாமி.
தமிழர்கள் மேல இன்னைக்கு இத்தனை விழிப்புணர்வு வந்திருக்குதுன்னா, அதுக்கு நம்ம பிளாக், டுவீட்டார் மாதிரியான இணைய ஊடகங்கள் ஒரு காரணம். இது தொடர வேண்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரேவா said...
இவங்கல்லாம் அரசியல்கிற பேருல எந்த ஆணியும் புடுங்க வேணாம்... நாம எல்லாரும் ஒன்று படுவோம் தோழரே... எனக்கு கூட twitter use பண்ணத் தெரியாது... ஆனால் எனக்கு தெரிந்த வழிகளில் முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன்... தொடர்ந்து போராடுவோம்../////

வாங்க, ட்வீட்டர், ப்ளாக் பயன்படுத்துவதை விட சுலபமானதே, உடனே ஆரம்பியுங்கள்!

சக்தி கல்வி மையம் said...

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
கன்டிப்பாக நீங்கள் சொல்வதை அனைத்து பதிவர்களும் கடைபிடிக்கவேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கொல்லான் said...
ஒன்னு முக்கியம் ராம்சாமி.
தமிழர்கள் மேல இன்னைக்கு இத்தனை விழிப்புணர்வு வந்திருக்குதுன்னா, அதுக்கு நம்ம பிளாக், டுவீட்டார் மாதிரியான இணைய ஊடகங்கள் ஒரு காரணம். இது தொடர வேண்டும்./////

நிச்சயமா, இதை ஆக்க பூர்வமான முடிவுகள் வரும்வரை தொடரவேண்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////sakthistudycentre-கருன் said...
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
கன்டிப்பாக நீங்கள் சொல்வதை அனைத்து பதிவர்களும் கடைபிடிக்கவேண்டும்/////

நன்றி கருன்....!

karthikkumar said...

இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த நாடு........ ?////
வெளங்கிரும் மாம்ஸ். வெளிபடையா சொல்லுங்க அதானே உண்மை கூட

ராஜகோபால் said...

நானும் பல மாதங்களுக்கு முன் twitter அக்கௌன்ட் ஆரமித்தேன் ஆனால் அதில் கடந்த மூன்று நாளாகத்தான் நல்ல விசதுக்காக யூஸ் பண்ரேன். இன்னும் பலமாக சொல்ல வேண்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த நாடு........ ?////
வெளங்கிரும் மாம்ஸ். வெளிபடையா சொல்லுங்க அதானே உண்மை கூட/////

ஆமா மாப்பு, இவனுங்களை திட்டறதுக்கு எந்த வார்த்தையுமே கெடைக்கல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜகோபால் said...
நானும் பல மாதங்களுக்கு முன் twitter அக்கௌன்ட் ஆரமித்தேன் ஆனால் அதில் கடந்த மூன்று நாளாகத்தான் நல்ல விசதுக்காக யூஸ் பண்ரேன். இன்னும் பலமாக சொல்ல வேண்டும்.//////

ஆமாம், இது பத்தாது, கண்டிப்பாக அனைவரும் தொடரவேண்டும்!

உமர் | Umar said...

பதிவுக்கு நன்றி நண்பா. நானே இது தொடர்பாக உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்றிருந்தேன். நீங்கள் பதிவே இட்டுவிட்டீர்கள்.

தொடக்கத்தில் தீவிரமாக ட்விட்டரில் இயங்கிய சில நண்பர்கள் இது தொடர்பான தகவல்களை திரட்டும் பணி உள்ளிட்ட மற்றவற்றில் இறங்கியுள்ளதால், புதியவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இடையிடையே கிடைக்கும் சொற்ப நேரத்திலும் அவர்களும் தொடர்ந்து ட்விட்டரில் இயங்கி வருகின்றார்கள். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக மிக முக்கியமானதாக இருக்கின்றது. நம் சகோதர்களுக்காக நீங்கள் அனைவரும் இதனை இன்னும் சில நாட்களுக்காவது தொடர வேண்டும்.

#tnfisherman தொடர்பான ட்விட்டுகளின் எண்ணிக்கைக்கான வரைபடம்.

வெள்ளியன்றும் சனியன்றும் வந்த ட்விட்டுகளை விட அடுத்தடுத்த நாட்களில் ட்விட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதில் தெரியும். தயவு செய்து தொடர்ந்து இதில் ஈடுபடுங்கள். நம் சகோதரர்களுக்காக நாம் சிறிது நேரமேனும் ஒதுக்குவோம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

good post pannikkutti sir

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கும்மி said...
பதிவுக்கு நன்றி நண்பா. நானே இது தொடர்பாக உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்றிருந்தேன். நீங்கள் பதிவே இட்டுவிட்டீர்கள். ///////

நன்றி பாஸ், நிறைய பேர் தயங்கிட்டு இருக்காங்க, எல்லாரும் வரனும், அப்பிடியே விட்டுட கூடாது, முடிவு கிடக்கும் வரை தொடரவேண்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரஹீம் கஸாலி said...
good post pannikkutti sir/////

நன்றி ரஹீம் கஸாலி, தொடர்ந்து ட்வீட்டுங்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

இது கூட இந்திய அரசின் தந்திர நடவடிக்கை என்று தான் சொல்லுவேன் .அதாவது இலங்கை அரசை காப்பற்றவும் .கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்ததை மறக்கவும் இந்த மீனவர்கள் பிரெச்சனையை இந்திய அரசின் தூணுதல் பேரில் தான் நடத்தி இருக்க கூடும் .நம் தமிழர்களுக்கு தான் மறதி ஜாஸ்தி ஆயிற்றே.இனி அதை மறந்து இதை வைத்து விளையாடுவார்கள் ...அதற்க்கு அப்புறம் வேற எதாவது ஒன்று வர கூடும் என்றே எண்ணுகிறேன்

செல்வா said...

//ஆனால் இன்னும் #tnfisherman ட்விட்டர் ட்ரெண்ட்சில் முதலிடத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இன்னும் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை (நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்). அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருக்காமல் உடனே ட்விட்டரில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். //

இதுல என்ன பிரச்சினை அப்படின்னா இதுல எழுதறதால யாருக்குப் போய் சேரப்போகுது அப்படின்னு நினைக்கிறாங்க. போய் சேருதோ சேரலையோ முயற்சி பண்ணி பார்க்கலாமே .. எத்தனையோ மொக்கை போடுறோம் , அந்த நேரத்துல கொஞ்சம் இதையும் பண்ணிப்பர்க்கலாமே .. எனக்கு கூட சீரியஸா எழுதுறது பிடிக்காது , ஆனா இதுல நான் முடிஞ்சா அளவுக்கு ட்விட்டர்ல எழுதுறேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
இது கூட இந்திய அரசின் தந்திர நடவடிக்கை என்று தான் சொல்லுவேன் ./////

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது, தாக்குதல்கள், நிருபமாராவ் சந்திப்பு எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...//////

தொடருவோம்.....

ரஹீம் கஸ்ஸாலி said...

நான்கூட ஒரு அரசியல் பதிவிட்டிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்
http://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html

--

settaikkaran said...

பானா ராவன்னா, இன்று மாலையிலிருந்து இடைவிடாமல் ட்வீட் செய்வதாய் இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி! முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்...

எஸ்.கே said...

தொடர்ந்து போராடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரஹீம் கஸாலி said...
நான்கூட ஒரு அரசியல் பதிவிட்டிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்
http://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html///////

அங்கேதான் இருக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, இன்று மாலையிலிருந்து இடைவிடாமல் ட்வீட் செய்வதாய் இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி! முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்...//////

நன்றி சேட்டை... தொடர்ந்து முயல்வோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
தொடர்ந்து போராடுவோம்!///////

நிச்சயமாக!

Anonymous said...

போய் சேருதோ சேரலையோ முயற்சி பண்ணி பார்க்கலாமே //yes

Madhavan Srinivasagopalan said...

நண்பர் பன்னிக்குட்டி..ராமசாமிக்கு .... சாரி. சாரி..
மீனவ நண்பர்களுக்காக.. நானும் டிவிட்டரில் எழுனேன்.. எழுதுகிறேன்.. இன்னும் எழுதுவேன்..

Anonymous said...

ஆமாம் தலைவரே...குத்துங்க எஜமான் குத்துங்க இவனுக திருந்தவே மாட்டானுக்

Chitra said...

முயற்சி நல்ல பயனை பெற்று தரட்டும்.

Anonymous said...

டிவிட்டர் சூறாவளியா அவனுக வயித்தை கலக்கணும்

Anonymous said...

இந்த வார ஜூவி கவர் ஸ்டோரியா வரும்னு எதிர்பார்க்குறேன் பார்க்கலாம்

sulthanonline said...

எனக்கு அப்பவே தெரியும் நம்ம முதல்வர் கட்சி விசயமாகத்தான் டெல்லி போறாரு. மக்கள் (மீனவர்கள்) விசயமாக செல்லலைன்னு. இவனுங்க திருந்த மட்டானுங்க எவன் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன அதான் இவனுங்க முடிவு. நமக்கு ஒரு விடிவுகாலத்த செய்ய மாட்டானுங்க.

மாணவன் said...

ஒன்றுபடுவோம்...தொடர்ந்து இணைந்திருந்து குரல் கொடுப்போம்....

sulthanonline said...

நான் என்னுடைய நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன் அவர்களும் ட்விட் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் வெற்றி நமதே எந்த அரசியல் கட்சி நாய்களும் தேவயில்லை வென்று காட்டுவோம். வெற்றி நமதே!

மாணவன் said...

அண்மைய டிவீட் நண்பர்களின் வேண்டுகோள் தாய்க்குலங்கள் யாரும் அதிகமாக பங்கெடுத்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள் தயவுசெய்து இணையத்தில் உள்ள சகோதரிகள் தோழிகள் பதிவர்கள் சில மணித்துளிகளை செலவு செய்து உங்களின் பங்களிப்பினையும் ஆதரவினையும் வழங்க வேண்டுகிறோம்... நன்றி

பொன் மாலை பொழுது said...

//சரி, இல்லை காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், என்னுடைய #tnfisherman ட்வீட்டுகள் அனைத்தையும் யாரும் #tnfisherman க்காக பயன்படுத்திக்கொள்ளலாம்!//

அப்படி சொல்லு பன்னிகு.....சீ ..சிங்கக்குட்டி

வைகை said...

அப்ப இந்த தலீவரு இத்தனைநாள் எழுதிய கடிததைஎல்லாம் அந்த மண்ணு மோகன் என்ன செஞ்சாரு?!!! ஒரு வேளை சைனாக்காரன் மாதிரி @%$# தொடச்சாரா?

வைகை said...

என்னுடைய பங்களிப்பும் உண்டு பன்னி! வேறு பெயர்களில்!

வானம் said...

நானும் இதுக்காத்தான் டிவிட்டர் அக்கவுண்ட் ஆரம்பிச்சேன், 4 நாள் முன்னாடி. இன்னும் நிறைய டிவீட் அனுப்பணும். இந்தியாவோட ஆசியோடு இலங்கை நடத்துற மீனவர் படுகொலையை கண்டித்து குறைந்தபட்சம் இதையாவது நாம செய்யணும்.

வைகை said...

தொடர்ந்து போராடுவோம்! இப்ப ஒரு எச்ச நாயி அங்க போயி கடுமையான கண்டனம் தெரிவிக்காம அவனோட ##%௫ நக்கிகொடுக்குது! பன்னாட....நல்லா வருது பன்னி..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நன்றி பாஸ்! ட்வீடரில் தொடர்வோம்! வெற்றிபெறுவோம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

”மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது, அவரிடம் எடுத்து சொல்லியிருகிறோம்”
//

ஓ.. இதெல்லாம்கூட நடந்திருக்கா?...

கண்றாவியா..>!!1

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் ஏதாவது சொல்லப்போக, கண்டபடி..கெட்டவார்த்தையா வந்திடும் போலிருக்கு...பன்னி சார்...

எம் அப்துல் காதர் said...

ஒன்று படுவோம்!! வென்று காட்டுவோம் !!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தொடர்ந்து போராடுவோம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடர்ந்து போராடுவோம்!

காதர் அலி said...

அழகான அருமையான தமிழ் பெயர் உங்கள் பெயர்காகவே twit பண்ண போறேன்.

Arun Ambie said...

நீங்க சொல்ற கணக்குப்படி பாத்தா முக்காவாசி பதிவர்கள் கம்முனு இருக்காங்களோ? போறவங்க போகட்டும். ட்விட்டரில் பார்ப்போம்!

Anonymous said...

என்ன பதிவு என்ன ஆகுது. பதவின்னா பறந்தும் , மீனவர்களுக்குன்னா லெட்டர் போட்டுட்டும் தூங்குவாங்க தலைவர்கள்.

கண்டனங்களை கூட செய்யாத தமிழர்களை கடலில் தூக்கி போட்டால் என்ன ?

எங்கள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் எங்கள் தலைவர் வகையில் 58 ட்விட்டுகள் செய்திருக்கிறோம்.

(சீரியஸான பதிவில் விளம்பரம் வேண்டாம் என எங்கள் பெயர் வெளியிடவில்லை)

Anonymous said...

How can use it twitter and face book Gayathri.M

'பரிவை' சே.குமார் said...

ஒன்றுபடுவோம்
வெற்றி பெறுவோம்.

சி.பி.செந்தில்குமார் said...

good post ramsamy..i am also tweeting

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் ட்வீடரில் உங்களைப் புடிக்க முடியலையே! என்னை அங்கு தொடர்பு கொள்ளவும் - My ID is krrajeevan

logu.. said...

nangalum arambichachunga..

ippa illa...

mothalliye kalathula erangiyachu.

தினேஷ்குமார் said...

கவுண்டரே நல்ல பதிவு தொடர்ந்து குரல் கொடுப்போம்

Anonymous said...

Please help how can use it twitter, Gayathri.M

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
Please help how can use it twitter, Gayathri.M////

sorry I was little bit busy.
Pls go to http://twitter.com and sign up for a new account. You will need an email address to complete this sign up.

Then check your mail and you will receive email from twiiter with a link for activation of your new twitter account. Click on that link and your twiiter accout will b ready to use.

You can follow people, just like friends. You can search for friends also to follow them.

You can enter your comments in the box near "What's happening? " on the top of the page in your home page in twitter. Then paste #tnfisherman and click tweet. thats all, your comment will reach tnfisherman forum

Hope this helps! thanks

Unknown said...

சொல்லிட்டீங்கல்ல இன்னைக்கே ட்வீட்டர் அக்கவுண்ட் தொடங்கிவிடுகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல செய்தி பன்னிகுட்டி.. ( உங்க டிவீடும் என்னை சிரிக்க வைத்தது .. அப்படி திட்டு )

மாணவன் said... 38

அண்மைய டிவீட் நண்பர்களின் வேண்டுகோள் தாய்க்குலங்கள் யாரும் அதிகமாக பங்கெடுத்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்

நான் ரெகுலரா தினமும் டிவீட்டுகிறேன் இரவு வேலை முடிந்ததும்.. பகலிலும்..

maryshan
@maryshan5

500 டிவிட் கிட்டத்தட்ட. இருக்கும்..

பலரும் வரணும் ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

f

அஞ்சா சிங்கம் said...

நானும் அரசியல் பத்தி எழுத வேணாம்னு தான் ரொம்ப பொறுமையா இருந்தேன்,/////////////////////////

ஆமா சார் நானும் அப்படிதான் நெனச்சேன் ஆனா முடியல நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் .
ட்விட்டரில் ட்விட் செய்கிறேன் ....
எல்லாரும் இணைந்தால் கண்டிப்பாக மாற்றம் வரும் ............

MANO நாஞ்சில் மனோ said...

//ட்விட்டரில் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு,//

அருமை அருமை....

Unknown said...

உண்மைதான் ராம்சாமி சார்

மொக்கராசா said...

flash news :
மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
thodarnhdhu twitter pannunkal

டக்கால்டி said...

ட்விட்டியாச்சு... நண்பர்களிடம் சொல்லி வருகிறேன்...என்னுடைய பேஸ்புக் தளத்திலும் கையொப்பம் இட வசதியாக பெட்டிஷன் லின்க்கை கொடுத்துள்ளேன்...

பொறுத்திருந்து பார்ப்போம்...

செங்கோவி said...

உங்களையே சீரியஸ் ஆக்கிட்டாங்களே..ச்சே!

Anonymous said...

>>> மீனவர் பிரச்னை தொடர்பாக சென்னை நண்பர்கள் மெரினாவில் கூடி விவாதித்தோம். பல திட்டங்கள் தீட்டப்பட்டன. விரைவில் அதன் பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம் நண்பரே!! தமிழன் வெல்வான்.

Philosophy Prabhakaran said...

எனக்கு சில வரிகளில் ட்வீட் செய்யத் தெரியவில்லை... அதனால் ரீ ட்வீட் மட்டுமே செய்கிறேன்...

Anonymous said...

Thank u so much sir, me also joined Gayathri.M

Anonymous said...

மீனவர் துயரம்
சொல்லுது ரேடியோ
இதுக்கெல்லாம்
இல்லையா ஒரு ராடியா ?

அலைக்கற்றை அள்ளும்
ராஜாக்களே!வேண்டிமட்டும்
பணம் பதவி பார்த்தாச்சே!

ஒரு துரும்பாவது
கிள்ளிப் போடுங்களேன்!!
இல்லாவிட்டால்......

மங்குனி அமைச்சர் said...

good

Unknown said...

இவனுங்களுக்கெல்லாம் இறங்கி கட்டுவோம் நாம் யார் என்று.

Srini said...

” நல்ல நேரம் ஆர்.கே.சதீஸ்குமார் “ யுடைய பதிவுல உங்க கமெண்ட்...
----------------------------
“ அம்மாவும் அவங்க கும்பலும் இருக்கற வரை நாட்ல யாரும் என்னென்ன அராஜகம் அக்கிரமம் பண்ணாலும் எடுபடாது......”

சூப்பரா சொன்னீங்க தலைவரே...
ஒரு வாசகம்னாலும் திருவாசகம்

Srini said...

” இந்த படைப்பு..மிக அற்புதம்...
வெளிப்படையான கருத்துகள் “
கலக்கிட்டீங்க...

Krishnamoorthy L said...

தொடர்ந்து போராடுவோம்!///////

நிச்சயமாக! #TNfisherman

சாமக்கோடங்கி said...

ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள்..

ksground said...

thank you,your message was so useful...........
by saravanan.

Anisha Yunus said...

twitter trending இப்ப குறைஞ்சிடுச்சு போலவே? எல்லா பதிவர்களும் ஒவ்வொரு பதிவு போட்டாத்தேன் ஆகுமோ? நானும் போட முடிவு செஞ்சிட்டேன். ஆனால், ஏதும் ஒரு தொடராக கொண்டு போகனும்னு எண்ணம், அப்பத்தேன் எல்லா இடத்திலும் ரெக்கார்டு ஆகும்..!!

Sivakumar said...

>>> உங்க ட்விட்டர் கமன்ட் ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளது, நண்பரே.

புலிக்குட்டி said...

என் புதிய தளத்தில் இருந்து உங்கள் தளத்திற்க்கு இனைப்பு கொடுக்க உங்கள் அனுமதி தேவை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட் போட்ட நண்பர்களுக்கும், ட்விட்டரில் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நன்றி!

@ புலிக்குட்டி, தாராளமாக லிங் கொடுத்துகொள்ளுங்கள், நன்றி!

Unknown said...

உங்க ட்விட்டர் கமன்ட் ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளது, நண்பரே.

Jainadhiya said...

பண்ணிகுட்டி அண்ணே தாத்தா இவ்வளவு மோசம்ன அம்மா வந்தாவும் இதே அவல நிலைதான். யாருக்கு தல ஓட்டு போட?

உளவாளி said...

யார் ஆட்சிக்கு வந்தாலு இந்த நிலை தான் தொடரும். இனிமேல மீனே கடல்ல இருந்து கரைக்கு வந்தாதான் மீனவர்கள் தப்பிக்க முடியும்...

உளவாளி said...
This comment has been removed by the author.
ப்ரியா said...

//ஒரு நாட்டின் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது என்று கலைஞர் எப்படி முடிவு செய்தார்? மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? ....//
பொங்கி எழுந்து இப்பவே டெல்லிக்கு ஒரு போடுங்க அண்ணே..நம்ம யாருன்னு தெரியட்டும் .. கமல் மாதிரி சொல்லனும்னா உங்களையும் எழுத்தாளன் ஆக்கிடாங்களே....
எனக்கும் இன்னமும் டிவிட்டர் பயன்படுத்த தெரியாதுங்க.. நானும் உடனே முயற்சிக்கறேன் ..நன்றி.. நகைச்சுவையா எழுதுற உங்கள மாதிரி பதிவர்கள் சொன்ன தான் எல்லாரும் கேப்பாங்க .. மன்னிக்கணும் எதோ ஒரு பதிவுல உங்கள பிரபல பதிவர் அப்படினு சொல்லல என்று வருத்தபட்டதை பார்த்தேன்.. இப்ப சொல்றேங்க உங்கள மாதிரி பிரபல பதிவர் சொன்ன தாங்க சரியான முறையில் எல்லாரையும் சென்றடையும் ... தொடர்ந்து எழுதுங்க நன்றி...

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கனவு காணும் வாழ்க்கையாவும்....
//

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Unknown said...

ம்ம் ஒன்றிணைவோம்..
ஐ..வாழப்பழம் எனக்கு..நான் தானே கடைசி கமென்ட்!!

ம.தி.சுதா said...

ஏங்க அரசியல்வாதிகளுக்கு காது செவிடா... தங்களுக்க சங்கு ஊதப் போற சத்தமாவது கேட்குமா ?


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..