Tuesday, January 25, 2011

நெம்பர் கடைசி பதிவரின் ஒரு பெரிய பேட்டி

எச்சரிக்கை: இது எதிர்பதிவு அல்ல, நேர் பதிவு!

நம்பர் 1. பதிவர் நண்பர் சி.பி. செந்தில்குமாருடைய பேட்டியை நண்பர் பிரபாகரன் வெளியிட்டிருந்தார். சரி நாமலும் ஒரு பேட்டிய எடுத்துப் போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல  நம்பர் கடைசி பதிவர்தான் சிக்குனாரு. சரி ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி ஏதோ நமக்குக் கிடைச்சது நம்பர் கடைசி பதிவர்தான் மனசைத் தேத்திக்கிட்டு பேட்டி எடுத்திருக்கோம். பார்த்துப் படிச்சு வெளங்கி நடந்துக்குங்க மக்களே!

பதிவுலகின் கடைசி இடத்தை பல வருடங்களாக வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பிரபலபதிவர் எருமக்குட்டி ஏரிச்சாமியின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைகிறது. போனமாதம்தான் வெற்றிகரமாக 150 கிலோவைக் கடந்தார். அதனால் அவரைப் பேட்டி எடுக்க விரும்பி தொடர்பு கொண்டோம். உடனே மறுத்துவிட்டார். சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

(இது நேர்காணல் அல்ல, சைடு(வாங்கிய)காணல்)



ஒழுங்கா தொடர்ந்து பதிவு எழுத மாட்டேங்கிறீங்களே ஏன்?
பொதுவாவே எனக்கு சாப்பாடு, தண்ணின்னா ரொம்ப இஷ்டம். அதுனால எல்லா வெரைட்டியவும் ஒரு கை.... இல்ல, இல்ல ரெண்டு கை பார்த்துடுவேன். ஓவரா தின்றது எப்போவாவது டைஜஸ்ட் ஆகாம புடிங்கிட்டுப் போகும், அப்போ தான் பதிவே எழுதுவேன். சோ, பதிவு எப்போ எழுதுவேன்கறது என் கையில இல்ல, இங்க (வயிற்றைக் காட்டி) இங்க தான் இருக்கு, சிகுனல் அங்கே இருந்து வரனும், புரிஞ்சதா?

Off the record:
வெளங்கிரும், தொடர்ந்து எழுதாததுக்கு இதான் காரணமா? அப்போ நல்ல டாகுடரை பாருங்க.

டாகுடரை பார்த்ததுல இருந்துதான் இப்படி இருக்கு!


பதிவு எழுத எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
அதான் சொன்னேனே, அப்பப்போ கக்கூஸ் போவேன்னு, அப்படிப் போகும் போது அங்கேயே உக்காந்து எழுதுவேன்.

Off the record:

அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?

இல்ல சார், சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்!



மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?
நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.

Off the record:

நான் தான்  படிக்க சொன்னேன்னு சொல்லி, தயவு செஞ்சு நம்ம கோமாளி செல்வாவோட மொக்கைய தொடர்ந்து மூணு நாளு படிச்சிடாதீங்க சார், அப்புறம்  கோர்ட்டு, கேசுன்னு என்னால அலைய முடியாது!



மொக்கைப் பதிவு எழுதும்போது எதிர்க்குரல்கள் கிளம்புமே?
ஆமா, நிறைய மொக்கைப் பதிவர்கள் இதுனால அவங்க பேரு கெட்டுப் போகுதுன்னு போன் பண்ணியும், ஈமெயிலிலும் திட்டுறாங்க. இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? பேரு கெட்டுப் போச்சுன்னா ஒண்ணு பேர ஃப்ரிட்ஜ்லேயே வெச்சுக்கனும் இல்ல தூக்கிப்போட்டுட்டு வேற பேரு வாங்கிடனும். அதவிட்டுப்புட்டு என்னைய குத்தம் சொன்னா எப்பிடி சார்?


சமீபத்தில் சிரிப்பு போலீசை சந்தித்த போது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக எழுதிவருகின்றீர்களாமே?
அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார். நான் மட்டுமா எழுதறேன் எல்லாரும்தான் எழுதறீங்க. எல்கேஜி சேர்ந்ததுல இருந்து எல்லோரும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஏ, பி, சி, டி, ஆனா, ஆவன்னான்னு இதுவரை எம்புட்டோ எழுதியாச்சு.

நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!

Off the record:

வாத்தின்ன உடனே அவருக்கு ரொம்ப வயசாயிடுச்சோன்னு தப்பா நெனச்சுடாதீங்க சார். அவருக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு ரிட்டையர்மெண்ட்டுக்கு!



அப்படின்னா சிரிப்பு போலீசுகிட்ட நிறைய அடிவாங்கியிருப்பிங்களே?
அதுதான் இல்ல. எப்போதும் போல சிரிப்பு போலீசுதான் எங்ககிட்ட அடிவாங்குனாரு. மொதல்ல ரொம்ப வருத்தப்பட்டாரு, அப்புறம் நம்ம விதி அவ்வளவுதான்னு நேர்மையா ஏத்துக்கிட்டாரு.
சார், டீ ஆர்டர் பண்ணிட்டீங்களா? அப்பிடியே ரெண்டு பஜ்ஜியும் சொல்லிடுங்க. ஏன்னா, அது ’அது’க்கு நல்லதாம்.

Off the record:

அதுன்னா எதுங்க?

தறுதலை சொல்ற அது இல்ல இது, இது வேற அது!

அதுதான் எதுன்னு கேக்குறேன்?

சாப்பாடு வாங்கிக் கொடுத்தா சொல்றேன்

ஹி..ஹி.. அடுத்த மொக்கைக்கே..சே...  கேள்விக்கே போவோம்!

த்தூ........
நோ மென்சன்.......



மொக்கை எழுதி சர்ச்சையானது போல வேற ஏதாவது சர்ச்சை ஏற்பட்டதுண்டா?
வேற ஏதாவது எழுதுனாத்தானே வேற சர்ச்சை வரும்? மொக்கையத் தவிர வேற ஏதாவது எழுதச் சொல்லி மிரட்டுறாங்க. வேற எதுவும் எழுதக்கூடாதுன்னும் சொல்லி மிரட்டுறாங்க. நான் என்னதான் பண்றது? நான் வேற அலுவலகத்துல இருந்து எழுதறதால, டேமேஜரு இல்லாத நேரமா பாத்து மிரட்டுனா நல்லாருக்கும். (ஒரே நேரத்துல எத்தனை பேருகிட்டதான் அடிவாங்கறது?)

Off the record:

தொடர்ந்து ஒரே ஆளுதான் சார் மெரட்டுறாரு. அதுவும் அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லி மெரட்டுறாரு சார்! எனக்குத் தெரிஞ்சா நான் போட மாட்டேனா?



சரி இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போகவேண்டாம், நீங்கள் பார்த்த படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து?
கமர்சியலாகப் பார்த்தால் அஞ்சரைக்குள்ள வண்டிக்குத்தான் முதலிடம். அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம். தேவலீலை படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து.  மாயவலை டப்பா.

Off the record:

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!


தேவலீலைதான் டாப் படம்னு எல்லாரும் சொல்றாங்களே?
நல்ல படம்தான், புடிச்சிருந்தா போயிப் பாருங்க. ஆனா அந்த பிகரு மூஞ்சிக்கு இந்தப் படம் எடுபடாது என்பதே எனது கணிப்பு!

Off the record:

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!



அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

Off the record:

நெட்ல கூட வராது!



மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

Off the record:

அட என்ன சார் நீங்க, மொக்கையப் போயி எண்ணிக்கிட்டு,  எல்லாம் குத்துமதிப்பா எழுதறதுதான்.  எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க, நான் நோட்டு பேனா எடுத்துட்டுப் போயி எழுதுறேன்னு, அதுதான் இல்ல, நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! 

சூப்பர்ப் எருமக்குட்டி ஏரிச்சாமி, உங்களோட பசி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்தப் பேட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி.

Off the record:

தம்பி டீ இன்னும் வரல....!
சே.....  ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......



அடுத்த தடவ பேட்டி எடுக்கும் போது சாப்பாடா வாங்கிக் கொடுக்கப் பாருங்க தம்பி,





எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!





படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!




205 comments:

«Oldest   ‹Older   201 – 205 of 205
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
இவ்வளவு லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும்...////

நாட்ல என்னென்னமோ நடந்துக்கிட்டு இருக்கு,இதெல்லாம் ஒரு குத்தமா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Philosophy Prabhakaran said...
அப்பாடா... லேட்டா வந்தாலும் வடை கிடைச்சது,...////

பரவால்லையே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
இது எதிர் பதிவு அல்ல, நேர் பதிவு என்ற ஆரம்பமே அமர்க்களம்.. எருமக்குட்டியை சைடு காணல் எருமை.. சாரி அருமை..
ஆப் த ரெக்காட் அசத்தல்...////

நன்றிங்கோ.....

மங்குனி அமைச்சர் said...

அதான் எல்லாருமா சேந்து பதிவ காமன்ட்சுல நோண்டி நொங்கெடுத்திங்க ........ அப்புறம் நான் வந்து என்னத்த புதுசா கமன்ட் போடப்போறேன் ........... எல்லாரது காமன்ட்சையும் வழிமொழிகிறேன்

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

«Oldest ‹Older   201 – 205 of 205   Newer› Newest»