ஒரு கிராமத்துல வெட்டியா ஒரு ஹீரோ இருப்பாரு, அவருக்கு ஒரு தங்கச்சி இவங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு லூட்டி அடிப்பாங்க. ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது, அது தமிழ் சினிமா ஹீரோக்களுக்குன்னே உள்ள தனிச்சிறப்பு. அப்புறம் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான உடனே சென்னைக்கு வருவாரு(?)... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்......! என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலான படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி(?) இறங்கும் கதைக் களம் (!).
அந்த மாதிரி ஒரு ஒன்லைன் வெச்சுக்கிட்டு, ஒரு ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...), 4-5 ஃபைட்டு.... அவ்வளவுதாங்க படம்... இதுல பெரிய காமெடி இந்த எழவெடுத்த கதைய ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி படம் எடுக்குறாங்க. ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?
இதுல ஒவ்வொரு வாட்டியும் இதுவரைக்கும் யாருமே எடுக்காத கதை, நடிக்காத கதைன்னு பில்டப்பு வேற... என்ன பண்றது இதையும் நம்பி ஏமாற நாட்ல நிறையப் பேரு இருக்காங்களே...? இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி:
நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு..... ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க? மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே? சமீபத்துல தல நடிகர் ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைச்சி ஒரு நல்ல முன்மாதிரியை தொடங்கி வெச்சார். ஆனா எவனும் கண்டுக்கல, வழக்கம் போல கட்டவுட்டுக்கு பால் ஊத்தி தமிழனின் பெருமைய நிலைநாட்டிட்டாங்க. என்ன கொடும சார் இது?
சரி அத விடுங்க, இவங்க பண்ற அலம்பலை பார்த்து நேத்து வந்த நடிகர்லாம் ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, கேமராவ பார்த்து தத்துவம் பேசுறதுன்னு கொல்றானுங்களே அதுக்காகவாவது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்யா...! கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!
உள்ளூர்ல சகிச்சுக்கிறதாவது பரவால்ல, வெளியூர்கள்ல இவனுகளால நம்மாளுக எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியதா இருக்கு தெரியுமா? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?
சினிமாவுல அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் வளர்த்து வந்த தேசபக்தி வியாபாரம் கொஞ்சம் தணிஞ்சு, இப்போ தமிழுணர்வு வியாபாரம் தொடங்கிடுச்சு. இப்ப கொஞ்ச காலமா எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுணர்வு பொங்கி வழியுது. நமக்குக் கிடைத்த சினிமாக்காரர்கள்தான் திறமைசாலிகளாச்சே, விடுவாங்களா.... அதையும் காசாக்கிடுவாங்கள்ல.... இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ?
அப்புறம் நம்ம பதிவர்கள் மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு ஒரு ப்ளாக் வெச்சிக்கிட்டு சினிமா விமர்சனம் போடலேன்னா சங்கத்துல இருந்து தள்ளி வெச்சிடுவாங்க போல. இதுல யாரு முதல்ல விமர்சனம் போடுறதுன்னு போட்டி வேற கன்னாபின்னான்னு எகிறிப் போச்சு. கடந்த 4-5 நாளா வெறும் சினிமா விமர்சனமா படிச்சிட்டு இருக்கேன். ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.
இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)
சரி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துடுச்சு. இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...!
படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!