Thursday, October 6, 2011

என்னா மீட்டிங்கு.......
இந்த மீட்டிங்கு இருக்கு பாருங்க மீட்டிங்கு..........அதாங்க நம்ம ஆப்பீசுகள்ல போடுவாய்ங்களே மீட்டிங்கு அதைத்தான் சொல்றேன்......ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க......  சம்பந்தமே இல்லாம கைய கால ஆட்டி பேசுறது, வானத்த வளைக்கிறேன், பூமிய சுத்த வெக்கிறேன்னு சலம்புறது. அவனுக மட்டும் இல்லேன்னா கம்பேனிய இன்னேரம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு அலப்பறை பண்றதுன்னு நல்லா எண்டர்டெயின் பண்ணுவானுங்க. பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. 

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க. அப்புறம் அதை கரெக்ட் பண்றதுக்குள்ள அடுத்த மீட்டிங்கே வந்துடும்....
அப்புறம் பாருங்க, மீட்டிங்ல பார்த்து திடீர்னு சில பேருக்கு கொம்பு மொளச்சிக்கும். அதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கூட உக்காந்து ஓசி டீ அடிச்சிட்டு அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு பிட்ட போட்டுக்கிட்டு இருப்பானுங்க. நாமலும் ஆஹா நமக்கும் ஒரு அல்லக்கை சிக்கிட்டான்டான்னு குளுந்து போய் மீட்டிங்குக்கு வருவோம். ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும், இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...  எங்கேருந்துதான் கெளம்புவானுங்களோ? ஒரு ஆட்டம் ஆடித்தான் நிப்பானுங்க. எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல மாட்டை தொழுவத்துல கட்டுன மாதிரி போய் உக்காந்துடுவானுங்க, இனி அடுத்த மீட்டிங் வரைக்கும் நம்மாளு கெணத்துல விழுந்த கல்லுதான்.......

இன்னும் சில பேரு இருப்பானுங்க, யாருன்னே யாருக்கும் தெரியாது. சும்மா வந்து உக்கார்ந்து எதையோ முறைச்சி பார்த்துட்டே இருப்பானுங்க, மேலேயும் கீழேயும் பாத்துட்டு என்னமோ பரிட்சை எழுதுற மாதிரி விறுவிறுப்பா எழுதுவானுங்க. காப்பி வந்ததும் காப்பி சாப்புடுவானுங்க, மீட்டிங் முடிஞ்சதும் அப்படியே எந்திரிச்சி போய்டுவானுங்க. எதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்...... அது யாருன்னு கேட்கவே எல்லாரும் பயப்படுவானுங்க..

இப்படி எல்லாரும் என்னத்தையாவது பேசி முடிச்ச உடனே பாஸ் வாய தொறப்பாரு. ஏற்கனவே அவரு அவர் பாசோட பேசி எடுத்த எல்லா முடிவையும் வரிசையா சொல்லுவாரு, சொல்லிட்டு பெருமையா(?)   ஒரு பார்வை வேற பார்ப்பாரு... ங்கொக்காமக்கா அதான் முடிவு பண்ணிட்டீங்கள்ல அப்புறம் என்ன கருமத்துக்குய்யா மீட்டிங்க கூட்டி ரணகளம் பண்றீங்க? பாஸ் சொன்னதைக் கேட்டது ஆடுனவன்லாம் பொட்டிப்பாம்பா அடங்கிருவானுங்க. எஸ்சார், அப்படியே பண்ணிடலாம் சார், முடிச்சிடலாம் சார்னு கோசம் போடுவானுங்க.  தலைவரும் உடனே கேனத்தனமா ஒரு இளிப்பு இளிச்சிக்கிட்டே ஓகே, எனக்கு இன்னொரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு, அப்புறம் பேசுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி வைங்கன்னு ஆர்டர் போட்டுட்டு நைசா எஸ்கேப் ஆகிடுவாரு.... நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.
முடியலடா சாமி, வாரா வாரம் மீட்டிங் போட்டுக் கொல்றாய்ங்க......... இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......

ஆபீஸ்ல நெஜமாவே மீட்டிங் தொல்ல தாங்க முடியலீங்கோ...... கொஞ்சம் நேரம் லைட்டா ப்ளாக் படிக்க கூட விடமாட்டேங்கிறானுங்கங்கோ....... நான் எஸ்கேப் ஆகிக்கிறேங்கோ....

நன்றி: கூகிள் இமேஜஸ், மற்றும் பட உரிமையாளர்கள்

93 comments:

கோகுல் said...

இது என்ன புது பீலிங்கு .....

அஞ்சா சிங்கம் said...

இந்த சோம்பு ரொம்ப அடிவாங்கிருக்கு போல ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோகுல் said...
இது என்ன புது பீலிங்கு .....////

பழைய பீலிங்தான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
இந்த சோம்பு ரொம்ப அடிவாங்கிருக்கு போல ............//////

கொஞ்சநஞ்ச அடியா.......

கோகுல் said...

அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு //

ஹா ஹா ஹா ஹா !

கோகுல் said...

மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க
//

அந்த ரெண்டு வார்த்த உள்ளே வரலாமா'ங்கறதுதானே?

MANO நாஞ்சில் மனோ said...

டூரிசம் மீட்டிங்குன்னு என்னையும் போட்டு கொல்லுராணுக கொய்யால எவம்டா கண்டுபிடிச்சான் இந்த மீட்டிங்கை.....??

சி.பி.செந்தில்குமார் said...

உங்களூக்கே பல்பா?!!!!

வியபதி said...

மீட்டிங் பத்தி எழுதியிருக்கிற சமாச்சாரம் எல்லாம் ஓகே, ஆனால் லாங்குவேஜ்தான் .....மொத்தத்தில் பல பேர் சொல்ல நினைக்கிறதை சொல்ல முடியாம தவிக்கிறதை எழுதியிருக்ககீங்க

MANO நாஞ்சில் மனோ said...

சம்பளம் கூட்டி தரணும்னு சம்பந்தமே இல்லாம பேசி கடுப்பேத்துனா அடுத்த மீட்டிங்குக்கு கூப்பிட மாட்டாயிங்க முயற்ச்சி செய்து பாருங்க...

MANO நாஞ்சில் மனோ said...

நான் மீட்டிங் போனால் சம்பந்தம் இல்லாம இல்லாம பேசி கடுபேத்துவேன் என்னை கண்டாலே சும்மா ஜெர்க் ஆவணுக, அப்பிடி ஒருக்கா பேசிப் பாருங்க ஒரு பய உங்களை மீட்டிங் கூப்பிட மாட்டானுக...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
சம்பளம் கூட்டி தரணும்னு சம்பந்தமே இல்லாம பேசி கடுப்பேத்துனா அடுத்த மீட்டிங்குக்கு கூப்பிட மாட்டாயிங்க முயற்ச்சி செய்து பாருங்க...//////

யோவ் மீட்டிங்குக்கு மட்டுமில்ல, ஆபீசுக்கே கூப்பிடமாட்டாய்ங்கய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ ஐயோ எல்லாரையும் வாரும் பன்னிகுட்டியை வாரிட்டானுகளே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோகுல் said...
மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க
//

அந்த ரெண்டு வார்த்த உள்ளே வரலாமா'ங்கறதுதானே?/////////

இவரும் பலப்பல மீட்டிங் கண்டவர் போல......

விக்கியுலகம் said...

அண்ணே வணக்கம்னே!

விக்கியுலகம் said...

அய்யய்யோ அத ஏன்யா இப்போ ஞாபகப்படுத்துன!...இப்போதான் ஒரு மீட்டிங் முடிஞ்சிது...வந்ததுங்க என்ன பேசுச்சின்னு மறந்து போச்சே!

K.s.s.Rajh said...

ஆகா மீட்டிங் பத்தி பதிவா இருங்க தலைவா படிச்சிட்டு வாரன்

சேட்டைக்காரன் said...

ஸேம் பிளட் பானா ராவன்னா! கொஞ்ச நாளா மீட்டிங்கே நடக்கலியேன்னு அதுக்கு ஒரு மீட்டிங் போட்டு அடுத்த மீட்டிங்குக்கு நாளு குறிச்சிட்டாய்ங்க எங்க ஆபீசுலே! என்ன கொடுமை சார் இது..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
டூரிசம் மீட்டிங்குன்னு என்னையும் போட்டு கொல்லுராணுக கொய்யால எவம்டா கண்டுபிடிச்சான் இந்த மீட்டிங்கை.....??/////

போய் சீக்கிரம் கண்டுபுடிச்சி கூட்டிட்டு வாலே....

Powder Star - Dr. ஐடியாமணி said...

ஹாய் ஹாய் பன்னி பிரதர்! ஹௌ ஆர் யூ? எனி டிஸ்டபன்ஸ்?? டேக் இட் ஈசிய்யா! கூல் டவுண்! கூல் டவுண்!

ஐ ஜஸ்ட் ஃபினிஸ்ட் எ மீட்டிங் ஜஸ்ட் நௌவ்வ்யா!

Powder Star - Dr. ஐடியாமணி said...

ஆல் மேட்டர்ஸ் ஆர் கரெக்டுய்யா! ஐ ஹாவ் த சேம் ப்ளட்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
உங்களூக்கே பல்பா?!!!!/////

உங்களுக்கேன்னா...? நான் என்ன கலெக்டரா?

Powder Star - Dr. ஐடியாமணி said...

இன் எ ஆஃபீஸ் இதெல்லாம் நார்மல்யா! ஆஃப்டர் 5 ஓ குளோக் ஆல் பிராப்ளம் சால்வ்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Powder Star - Dr. ஐடியாமணி said...
ஹாய் ஹாய் பன்னி பிரதர்! ஹௌ ஆர் யூ? எனி டிஸ்டபன்ஸ்?? டேக் இட் ஈசிய்யா! கூல் டவுண்! கூல் டவுண்!

ஐ ஜஸ்ட் ஃபினிஸ்ட் எ மீட்டிங் ஜஸ்ட் நௌவ்வ்யா!////////

படுவா கண்ட கண்ட பிகர்கிட்டயும் கடலை போட்டுட்டு அப்படியே இங்க வந்து பீட்டர் விடுறத பாரு.....

Powder Star - Dr. ஐடியாமணி said...

இட் இஸ் எ டிஃப்ஃபெரெண்ட் பதிவு ஆஃப் திஸ் வீக்குய்யா! ஐ லைக் இட்!

K.s.s.Rajh said...

தலைவரே மீட்டிங் பத்தி ப்லாக்குல ஒரு மீட்டிங் போட்டு நீங்களும் ஒரு கூட்டத்தை கூட்டிபுட்டீங்க சூப்பருங்கோ..........

மீட்டிங் மீட்டிங்..மீட்டிங்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Powder Star - Dr. ஐடியாமணி said...
இன் எ ஆஃபீஸ் இதெல்லாம் நார்மல்யா! ஆஃப்டர் 5 ஓ குளோக் ஆல் பிராப்ளம் சால்வ்யா!/////

ஏன் 6 மணிக்கு மட்டையாகிடுவியா?

Powder Star - Dr. ஐடியாமணி said...

நார்மலி, இன் அன் ஆஃபீஸ் வித் எ லேசி பாஸ்,

கன்ஃபியூஷன் ஆஃப் த காண்ட்ரிஃபியூஷன் ஆஃப் த கன்ஃபார்மேஷன் இஸ் காமென்யா!

யூ பேசாமல், கூலா சிட்டுய்யா!

K.s.s.Rajh said...

நல்லா சொல்லியிருக்கீங்க தலைவரே..பல இடங்களில்.நானும் மீட்டிங்போடுபவங்களை கண்டு பீதியாகி ஓடியது உண்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வியபதி said...
மீட்டிங் பத்தி எழுதியிருக்கிற சமாச்சாரம் எல்லாம் ஓகே, ஆனால் லாங்குவேஜ்தான் .....மொத்தத்தில் பல பேர் சொல்ல நினைக்கிறதை சொல்ல முடியாம தவிக்கிறதை எழுதியிருக்ககீங்க////////

வாங்கண்ணே... லாங்குவேஜ் என்னாச்சு?

Powder Star - Dr. ஐடியாமணி said...

பாஸ் உங்ககிட்ட திட்டு வாங்கணும் அப்டீங்கறதுக்காகவே, உக்காந்து யோசிச்சு இந்த மாதிரி கமெண்டு போட்டிருக்கேன்!

நல்லா திட்டுங்க பாஸ்! அப்புறமா மணியாடர்ல பணம் அனுப்பறேன்!

பாஸ், நீங்களும் ஹன்சிகாவும் ஒண்ணு அண்ணே!

இருவர் திட்டினாலும் வலிப்பதேயில்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
நான் மீட்டிங் போனால் சம்பந்தம் இல்லாம இல்லாம பேசி கடுபேத்துவேன் என்னை கண்டாலே சும்மா ஜெர்க் ஆவணுக, அப்பிடி ஒருக்கா பேசிப் பாருங்க ஒரு பய உங்களை மீட்டிங் கூப்பிட மாட்டானுக...///////

அப்புறம் நம்மளை என்ன பண்றதுன்னு முடிவு பண்றதுக்கு ஒரு தனி மீட்டிங் போட்ருவானுங்களே மக்கா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
ஐயோ ஐயோ எல்லாரையும் வாரும் பன்னிகுட்டியை வாரிட்டானுகளே....?////////

இந்தாளுக்கு எம்புட்டு சந்தோசம் பாருய்யா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
அண்ணே வணக்கம்னே!//////

வணக்கம்ணே.....

சத்ரியன் said...

ராம்சாமிண்ணா,

ஆபிஸ் சீக்ரெட்டெல்லாம் வெளில கசியவிட்றது நல்லதுக்கில்ல, சொல்லிட்டன்.

பெசொவி said...

An urgent meeting in tho offing, will catch you later! :))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
அய்யய்யோ அத ஏன்யா இப்போ ஞாபகப்படுத்துன!...இப்போதான் ஒரு மீட்டிங் முடிஞ்சிது...வந்ததுங்க என்ன பேசுச்சின்னு மறந்து போச்சே!/////////

யோவ் அதுங்க பேசுனத கவனிச்சாத்தானே ஞாபகம் இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////K.s.s.Rajh said...
ஆகா மீட்டிங் பத்தி பதிவா இருங்க தலைவா படிச்சிட்டு வாரன்//////

வாங்க வாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
ஸேம் பிளட் பானா ராவன்னா! கொஞ்ச நாளா மீட்டிங்கே நடக்கலியேன்னு அதுக்கு ஒரு மீட்டிங் போட்டு அடுத்த மீட்டிங்குக்கு நாளு குறிச்சிட்டாய்ங்க எங்க ஆபீசுலே! என்ன கொடுமை சார் இது..?/////

வாங்க சேட்டை, மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு நல்லா காப்பி குடிச்சிட்டு வாங்க......

manjoorraja said...

ஒண்ணெ வுட்டுட்டீங்க. மீட்டிங்க்னாலே தூங்கலாம்னு வரும் ஒரு கூட்டம் இருக்கு அதெ மறந்துட்டீங்களே (என்னை போல)

நிறைய மேனேஜர்களுக்கு மீட்டிங் வைப்பதுதான் வேலையே...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அது என்ன நான் பதிவு போடுற அன்னைக்கே நீயும் பதிவு போடுறா?
எங்கயோ தப்பு நடக்குது . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

என்னவோ மீட்டிங்ல போய் பக்கம் பக்கமா பேசுற மாதிர்தான் பீலிங்க்ஸ் . . அங்க போயும் குடுக்குற டீ , பிஸ்கட் தின்னுப்புட்டு நல்ல குப்புற படுத்து துங்கிபுட்டி , லொள்ள பாரு , எகதாளத்த பாரு . . .

வைகை said...

சரி...சரி...அடுத்த மீட்டிங் எப்ப? :)

Mohamed Faaique said...

//இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......///

மீட்டிங் நடக்குர நாள்`அ கொங்ரீட்`அ கரச்சு குடிச்சுட்டு போகலாமே!!!

வைகை said...

.ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க..//

அதுமட்டுமா? அவனுங்க இம்க்ரிமென்ட் பிரமோசனே இங்க பேசுறத வச்சுதான் கொடுக்குற மாதிரி பில்ட் அப் கொடுப்பானுங்க :?)

நிரூபன் said...

I voted boss, I will kumms leater

Mohamed Faaique said...

இந்த மீட்டிங் தொல்ல, எல்லா ஆபீஸ்`லயும் இருக்கு.. சில ஆளூங்க இருக்கானுங்க, அவனுங்களுக்கு மீட்டிங் போடுரதுனா அவ்ளோ சுகம்..மீட்டிங்`ல டெமேஜருக்கு சோப்பு போடுரது அத விட சுகம்... என்ன பண்ண.. நாமளும் ச்சும்மா போயி உக்காந்துட்டு வரலாம்`னு பார்த்தா நம்ம வாயயும் கிளரி விட்ருவானுங்க..

வைகை said...

பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. //

பக்கத்துல ஸ்டெனோ இல்லைனாதான் ஐபாட நோண்டுவாறு.... இருந்தா...

வைகை said...

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க...//

பரதேசிங்க.... டீ குடிக்க காசு இல்லைனாகூட மீட்டிங் போட்டு ஓசில டீ குடிப்பானுங்க :))

வைகை said...

ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும்//

வெளில வந்ததும் தோள்ல கைபோட்டு... பாஸ் தப்பா நினைக்காதிங்க சூழ்நிலை அப்பிடின்னு சொல்லிட்டு.. வாங்க டீ சாப்டுவோம்னு இன்னொரு ஓசி டீக்கு அடி போடுவானுங்க :))

வைகை said...

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...///

ஆமா... அம்பி மாதிரி சாதுவா இருக்கவனுங்க எல்லாம் உள்ள வந்ததும் அந்நியனா மாறிருவாங்க :)

வைகை said...

50

மாணவன் said...

நல்லா போடுறாய்ங்கய்யா மீட்டிங்கு.... :))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......
//

super பன்ச்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

மகாபாரதத்தில் மங்காத்தா

செங்கோவி said...

அண்ணே...எப்படீண்ணே..இப்போத் தான் ஒரு மீட்டிங் முடிச்சிட்டு வந்து, உட்கார்றேன்...கரெக்டா உங்க பதிவு..எவன்யா கண்டுபிடிச்சான் இந்த மீட்டிங்கை..

செங்கோவி said...

இதெல்லாம் பேசணும்..ரெடி பண்ணிக்கோ-ன்னு சொல்றாங்க..நாமளும் மாங்கு மாங்குன்னு எல்லா டாக்குமெண்ட்டையும் ரெடி பண்ணிட்டுப் போனா, நம்ம மேட்டரைத் தவிர எல்லா மேட்டரையும் பேசிட்டு ‘இப்போ அது அர்ஜண்ட் இல்லே’ங்கிறாங்க..

செங்கோவி said...

ஒரே ஒரு ஆறுதல் டீயும் பிஸ்கட்டும் கொடுக்கிறது தான்!

செங்கோவி said...

ஏதாவது ஃபிகர் இருந்த்டுச்சுன்னா, இவங்க படம் ஓவராப் போயிடுது!!!

மாலுமி said...

ஹி ஹி ஹி
நான் தான் டெய்லி அடி வாங்கிட்டு இருந்தேன்.
இப்போ நீ.......
ஹா ஹா ஹா

Dr. Butti Paul said...

என்று ஓயும் இந்த மீட்டிங் தொல்லை? வாரா வாரம் ஒன்னுன்னா பரவாயில்ல, இது வாரம் ரெண்டு. கடுப்பு தாங்கல மை லார்ட்.

shanmugavel said...

//நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். //

எல்லா இடத்துலயும் இப்படித்தானா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல செமத்தையா அனுபவிச்சியிருக்கிங்க போல...


இந்த ஆபிஸர்ங்களே இப்படித்தான்...


குட் மானிங் ஆபிஸர்... (நைட்டா இருந“தாலும் இதுதான்)

அடுத்த நம்ம மீட்டிங் எப்போ்்

NAAI-NAKKS said...

என்னா தலைவா ...சொம்பு மட்டும் இல்லாம எல்லாமே நசுங்கிடுச்சி
போல ....

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,
ஒரு மீட்டிங் நடை பெறும் போது, ஆப்பிசில் பல பதவிகளிலும் உள்ளோர் செய்யும் லீலைகளை அழகுற உங்களுக்கேயுரிய ஸ்டைலில் எழுதியிருக்கிறீங்க.

கலக்கல் பாஸ்.

பொன். செந்தில்குமார் said...

மீ டூ சேம் ஃப்லிங் பன்னிக்குட்டி...ஒரு அதிகாரியோட கஷ்டம் இன்னொரு அதிகாரிக்குத்தான் புரியும்... எப்படி என் மனசில இருந்தத காப்பி பேஸ்ட் அப்படியே பதிஞ்சிட்டிங்க பன்னிக்குட்டி..ஐ திங்க் வி ஆர் இன் சேம் வேவ் லெங்த்...பன்னிக்குட்டி...

”மன்னா!...மன்னா!.. எங்கே போய் விட்டிர்கள்?...அரசவைய கூட்ட வேண்டாமா...அதவிட்டுவிட்டு இங்கென்ன பன்னிகுட்டியோடு கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்கீறீர்கள் ம்ன்னா!!!..”

”அடங்கொக்கமக்கா.. யார்ரா அது...மங்குனியா..தோ வர்ரேன்....எடுரா தொடப்பகட்டைய..கூட்டுறா மீட்டிங்க”

நல்லா கூட்டுறாய்ங்கடா மீட்டிங்கு...

பொன். செந்தில்குமார் said...

மீ டூ சேம் ஃப்லிங் பன்னிக்குட்டி...ஒரு அதிகாரியோட கஷ்டம் இன்னொரு அதிகாரிக்குத்தான் புரியும்... எப்படி என் மனசில இருந்தத காப்பி பேஸ்ட் அப்படியே பதிஞ்சிட்டிங்க பன்னிக்குட்டி..ஐ திங்க் வி ஆர் இன் சேம் வேவ் லெங்த்...பன்னிக்குட்டி...

”மன்னா!...மன்னா!.. எங்கே போய் விட்டிர்கள்?...அரசவைய கூட்ட வேண்டாமா...அதவிட்டுவிட்டு இங்கென்ன பன்னிகுட்டியோடு கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்கீறீர்கள் ம்ன்னா!!!..”

”அடங்கொக்கமக்கா.. யார்ரா அது...மங்குனியா..தோ வர்ரேன்....எடுரா தொடப்பகட்டைய..கூட்டுறா மீட்டிங்க”

நல்லா கூட்டுறாய்ங்கடா மீட்டிங்கு...

bandhu said...

எல்லாத்தையும் விட, மாங்கு மாங்குன்னு ஒரு விஷயத்தை பேசி, தொவச்சி காயப்போட்டதுக்கு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மறுபடியும் அதை ஒருத்தன் ஆரம்பிப்பான் பாருங்க.. ஆஹா.. மறுபடியுமான்னு வடிவேலு குரல் காதுல கேக்கும்.. முடியல!

பொன். செந்தில்குமார் said...

என்னா மங்குனி மணி எட்டு மணிக்கு மேல ஆச்சா....அதான் என்னோட கருத்த 2 முறை போட்டியாக்கும்...யாரங்கே எடுறா வாளை....வெட்டுறா ஒரு பதிவ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோத்தகிரி மூத்திர சந்துல அடுத்த மீட்டிங்காம். போயிடுங்க

தமிழ்வாசி - Prakash said...

லீவுலயும் மீட்டிங் நெனப்பா? அம்புட்டு அடி வாங்கிடிங்கிளா????

! சிவகுமார் ! said...

கேப்டனின் டயலாக்கை உங்களுக்கு டெடிகேட் செய்கிறேன்:

WE WILL MEET. WILL MEET. MEET.

! சிவகுமார் ! said...

சில சமயம் ஒண்ணுமே இல்லாத தப்பைகூட பெரிசு பண்ணி ப்ரொஜெக்டர் எல்லாம் போட்டு படம் காட்டுவானுங்க. ராஸ்கோல்ஸ். நான் அட்டென்ட் பண்ண பல மீட்டிங்ல 90% அவங்க என்ன பேசுவாங்கன்னே கண்டுக்காம மனசுல வேற எதையோ நெனச்சிக்கிட்டு இருப்பேன். எப்பயும் வராத தூக்கம் மீட்டிங்லதான் வரும்.

பட்டாபட்டி.... said...

ரிலாகஸ் பண்ணலாம்னு வந்தா.. புலம்பி தள்ளியிருக்கே...

ஆனாலும்ம்ம்...

அருமை.. அருமை...
வாழ்த்துக்கள்...
பதிவு அபாரம்...ஆமா... அந்த மீன் பொறிக்கும்போது , முக்காடு போட்டுககனுமா?

FOOD said...

பதிவுலகம் சார்பா ஒரு மீட்டிங் போட்டு இதைக் கண்டிச்சிருவோமா?

M.R said...

ஹா ஹா ஹா

நண்பரே நாம ஒரு மீட்டிங் போடலாமாஐயயோ அடிக்க வராரே .......

வெளங்காதவன் said...

Present my lord.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல புலம்பி இருக்கீங்க இதுக்கு பேரு தான் புலமையா?

Yoga.s.FR said...

வணக்கம் ஆபீசர்!இன்னிக்கு வெள்ளிக்கிழமை.வார இறுதி மீட்டிங் ஒண்ணு போட்டுடுவமா?

vinu said...

me 80thu person who attended this meettingu.....


varttaaaaaaaaaaaa

தனிமரம் said...

இப்படித்தான் இந்த மீட்டிங்கில் நாங்களும் நூடில்ஸ் ஆனது ஒரு காலம் இப்ப தப்பித்தோம்!

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்.

மாய உலகம் said...

நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.//

நிறைய எடத்துல மேலிடம் என்ன சொன்னாங்க எதுக்கு சொன்னாங்கன்னே தள்ளிய காலங்கள் இருக்கே... ச்சே சே சேஏஏ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்.///////

தண்ணியும் வீணா போயிடுமே,அத ஏன் சொல்லல? (ஆமா நீங்க எந்தத் தண்ணிய சொல்றீங்க?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துரை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நேரப்பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் தனித்தனியே பதிலளிக்க முடியாது போய்விட்டது!

Anonymous said...

அண்ணே மன்னிச்சிருங்க. இந்த போஸ்ட் என் கண்ணுல படாமலே இருந்துர்ச்சு..செம போஸ்ட்..(லேட் ஆனதால ஒரு டெம்ப்ளேட் கமெண்ட், ஆனா சாமி சத்தியமா வாசிச்சேன்)

காட்டான் said...

அட நானும் ஒரு மீட்டிங் போடலாமென்னு வந்தா எல்லாரும் ஓடிபோட்டாங்களேய்யா???

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்

பாடிசோடா said...

எங்க ஊர்ல எல்லாம் மீட்டிங் போனா குவாடரும் கோழி பிரியாணியும் தருவாங்க .. இந்த IT கம்பெனி ல ஒரு காபி தண்ணி கூட தர மாற்றங்க...

பாடிசோடா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///கருத்துரை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நேரப்பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் தனித்தனியே பதிலளிக்க முடியாது போய்விட்டது!///

பேசாம ஒரு மீட்டிங் போட்டு எல்லாருக்கும் மொத்தமா பதில் சொல்லிருங்க

ViswanathV said...

எனக்குத் தெரிந்த வரையில்,
தனித்தனியா ஒக்காந்து
ஒன்னு செய்ய முடியாம,
நாலு பேரு சேர்ந்து ஒக்காந்து பேசி
ஒன்னு செய்ய முடியாதுன்னு
ஒத்துக்கரதுதா
மீட்டிங்

அப்பாதுரை said...

வாயாரச் சிரித்தேன்.

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஎதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்.ஃஃஃஃ

அண்ணாச்சி அது சிபிஐ, றோ, எப்பிஐ அப்படி ஏதோ இடத்து ஆட்களாயிருக்கலாமுல்ல... ஹ..ஹ..