Wednesday, January 9, 2013

பவர்ஸ்டார் படத்தின் கதை வெளியானது?
பார் புகழும் பவர்ஸ்டார் நடித்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் படம் ”கண்ணா லட்டு தின்னா ஆசையா?” இந்தப் படத்தில் பவர்ஸ்டார் காமெடி ஹீரோ வேடத்தில் கலக்கி வருகிறார். படப்பிடிப்பு பற்றிய செய்திகள், படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதும், நகைச்சுவைக்காக உலகளவில் பேசப்படும் படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் கதையை யாரும் அறிந்துவிடாதவாறு படுரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் கதை வெளியானது படக்குழுவுனரை மட்டுமல்லாது பவர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கதையை யார் வெளியிட்டது என்பதை உயர்மட்டக் குழு ஒன்று விசாரிக்க வேண்டும் என்று பவர்ஸ்டார் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நம் பவர்ஸ்டார் படத்தின் கதை ’இன்று போய் நாளை வா’ என்ற படத்தில் 1981-ம் ஆண்டு வெளியாகி இருப்பதாக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன. பவர்ஸ்டார் நடிக்கும் க.ல.தி. ஆ வை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அதன் கதையை திருடி இன்னொரு படத்தை எடுத்ததும் இல்லாமல் அதனை 1981-லேயே ரிலீசும் செய்திருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் அல்ல என்று சினிமா வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பரபரப்பினால் க.ல.தி.ஆ. படத்திற்கான எதிர்பார்ப்பு படுபயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில்  கமல் துணிச்சலாக விஸ்வரூபம் படத்தை பவர்ஸ்டார் படத்துடன் ரிலீஸ் செய்ய நினைத்து தற்போது பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நன்றி: கூகிள் இமேஜஸ்...!

18 comments:

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

SUPER. SEMA SATTAIYADI..

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

செமத்தியான சாட்டை அடி... கதை திருடியவர்களுக்கு! (அவங்க பாணியிலே ஆப்பு வைக்க நீங்க தான் சரியான ஆளு)

பூந்தளிர் said...

படம் எப்படி இருக்கு அதச்சொல்லுங்க பாஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பூந்தளிர் said...
படம் எப்படி இருக்கு அதச்சொல்லுங்க பாஸ்//////

அய்யய்யோ பவர்ஸ்டார் படத்த போய் எப்படி இருக்குன்னு கேக்கலாமா? தெய்வகுத்தமாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.எஸ்.பூங்கதிர் said...
SUPER. SEMA SATTAIYADI..//////

வாங்க பாஸ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.எஸ்.பூங்கதிர் said...
செமத்தியான சாட்டை அடி... கதை திருடியவர்களுக்கு! (அவங்க பாணியிலே ஆப்பு வைக்க நீங்க தான் சரியான ஆளு)//////

ஹஹ்ஹஹா......... நன்றி!

K.s.s.Rajh said...

ஹி.ஹி.ஹி.ஹி.............

K.s.s.Rajh said...

////இந்தப் பரபரப்பினால் க.ல.தி.ஆ. படத்திற்கான எதிர்பார்ப்பு படுபயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில் கமல் துணிச்சலாக விஸ்வரூபம் படத்தை பவர்ஸ்டார் படத்துடன் ரிலீஸ் செய்ய நினைத்து தற்போது பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
////பவரு கிட்ட நெருங்க முடியுமா?

தனிமரம் said...

:)))

வீடு சுரேஸ்குமார் said...

என்ன கொடுமை சார் இது...?
பவர் ஸ்டார் படக் கதைய யாரோ பாக்கியராஜ் அப்படிங்கிறவர் என் கதைன்னு வேற சொல்லுறாப்ல...!அவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...!

சமீரா said...

என்ன சார் பவர் ஸ்டார் பத்தி பதிவே போட்டு இருக்கீங்க!! இதுல இருந்தே தெரியுதே ஏன் கமல் பயந்துடார்னு!!

வைகை said...

எல்லாவற்றையும் சொல்லிய தாங்கள்... ஒரு லட்டா இரண்டு லட்டா என்று சொல்லவில்லையே?

காட்டான் said...

எப்பிடியோ சிறந்த ஒலக படமாய் வர வேண்டிய படத்த பாக்கியராஜ் என்பவர் 1981 லேயே காப்பியடிச்சது மன்னிக்க முடியாத குற்றம்..!

சட்டம் தன் கடமையை செய்ய தவறினால்....!?

FOOD NELLAI said...

பாவம் பவர்ஸ்டார்!

Yoga.S. said...

'கண்ணா ஜெயில்ல களி திங்க ஆசை'யான்னு,முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே பவர் ஸ்டார் படக் கதையத் திருடிப் படம் எடுத்தவரு கொக்கரிக்கிறாராமாம்!

Yoga.S. said...

'கண்ணா ஜெயில்ல களி திங்க ஆசை'யா?(இந்த டைட்டில் சி.பி பதிவில திருடியது!)

Tirupurvalu said...

Panni sir
Eppadiyoo Power starai periya star agidinga .Ad thu devayani purusan avaraiyum eppadiyey paysi star akidunga .

சே. குமார் said...

சரி... படம் நல்லாயிருக்காம்...

கமலையே கவலைப்பட வைத்த பவர் ஸ்டார் வாழ்க....