முன்னிரவு நேரம். ஊர் அடங்கி இருந்தது. எல்லாரும் குடும்ப(?) சீரியல்கள், குத்துப்பாட்டு, காமெடி நியூஸ் என்று பார்த்துப் பார்த்து களைத்துப் போய் தூங்கி கொண்டிருக்க வேண்டும். எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன். என்ன செய்யலாம், மறுபடியும் டீவியை போட்டேன். இன்னேரம் ஏதாவது ஒரு சேனலில் தாட்டியான பெண்மணிகள் குலுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்ற நப்பாசையில் ரிமோட்டை சுழட்டினேன். சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார். வைத்தியராம். கோபத்துடன் மிகுந்த அக்கறையாக பேசிக்கொண்டிருந்தார். இவருக்குத்தாம் நம் இளைஞ்சர்களின் மீது எவ்வளவு கவலை? மற்ற சேனல்களில் இன்னேரம் வந்து கொண்டிருக்கும் குலுங்கல்களைப் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு உடனடியாக பயன்படும் விதமாக இந்த சேனலில் பொருத்தமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் போல. நல்ல சிந்தனைதான். வைத்தியரை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுபடியும் ரிமோட்டை சுழற்ற ஆரம்பித்தேன்.
இப்போது போய் நின்றது இன்னொரு சேனலில். அங்கே கோட்டுசூட்டு போட்ட ஒருவர் ஒரு போர்டில் பெயர்களை எழுதி நம்பர் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். நம்பர்களை வைத்தே பெயர்களை அருமையாக டிங்கரிங் பண்ணுகிறார். புதுப்பெயர் பழைய பெயர் போலவே இருக்க அவர்கள் மெனக்கெடுவதை பார்க்க திகைப்பாக இருக்கிறது. பெயர்கள் எல்லாம் பிரெஞ்சு, ஸ்பானிஷ் ரேஞ்சிற்கு மாற்றப்படுகிறது. பெயர் மாற்றப்பட்டவுடன் அனைவரும் உடனடியாக புதுப்பொலிவடைகிறார்கள். எல்லாமே மாறிவிடும், காசு கொட்டோ கொட்டென்று கொட்டும், வீட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு காசை அள்ளலாம் என்கிறார்கள். நம்பமுடியவில்லை ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார். அருமையாக பேசுகிறார். எந்தவித தயக்கமோ தடுமாற்றமோ இல்லை. தொலைக்காட்சியில் வந்து பேசுகிறார். பொய்சொல்பவர், ஏமாற்றுபவர்கள் தொலைக்காட்சிக்கு வருவார்களா? எத்தனையோ பேர் தொலைக்காட்சியை பார்க்கிறோம், யார் யாரோ பெரிய பெரிய படிப்பாளிகள், விஞ்சாணிகள், மேதாவிகள் எல்லாம் பார்க்கிறார்கள் எல்லாரையும் ஏமாற்றிவிட முடியுமா என்ன? நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்டும் என்று முடிவு செய்தவனாக அவருடைய முகவரி, போன் நம்ப்ரை குறித்துக் கொண்டேன். மறுபடியும் ரிமோட்டை கையிலெடுத்தேன்.
இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறுத்தினேன். சிறிய கல் ஒன்று வைத்திருக்கிறார்கள், அதை மோதிரத்தில் வைத்து அணிந்து கொண்டால் பணம் அதுபாட்டுக்கு நம்மை தேடி வரும் என்கிறார்கள். அதிசயமாக இருக்கிறது. ஒரு சிறு கல்லுக்கு இத்தனை எஃபக்டா என்று யோசிக்கும் போதே இவரும் கோட்டு சூட்டு போட்டிருப்பதை கவனிக்க நேர்ந்தது. பெயருக்கு பின்னால் இரண்டு வரிகள் வரும் அளவுக்கு டிகிரிகள் வாங்கி இருக்கிறார். மெத்தப்படித்தவர். ஏமாற்ற மாட்டார். டிவியில் வேறு சொல்கிறார். வாங்கியவர்கள் ஏமாந்திருந்தால் இன்னேரம் பிரச்சனை ஆகி இருக்காதா? ஏற்கனவே பெயர் மாற்றம் வேறு செய்யப் போகிறோம், கல்லை வேறு வாங்கி அணிந்து கொண்டால் பணம் டபுள் மடங்காக கொட்ட தொடங்கி விடும். இதையும் பார்த்தது நல்லதாக போயிற்று, நாளைக்கு பேரை மாற்றியதும், உடனடியாக நல்ல கல் ஒன்றும் வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும்.
பணம் சேர்வதற்கான வழியை பார்த்தாகிவிட்டது. இனி எஞ்சாய் பண்ண வேண்டும். ஏதாவது குலுங்கல் பக்கம் போகலாம் என்று தேட ஆரம்பித்தேன். ஒரு சேனலில் பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் எவனோ ஏமாற்றிவிட்டானாம். அதற்கு டீவியில் வந்து ஏன் அழுகிறார் என்று புரியவில்லை. இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் நன்றாக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தேன். யார் யாரை ஏமாற்றினார்கள் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏன் சொந்தக்காரனிடம் கூட சொல்ல தயங்கும் பல விஷயங்களை அங்கே சர்வசாதாரணமாக போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியை நடத்துபவரும் தன் பங்குக்கு தாறுமாறாக கேள்விகளை அள்ளி வீசி கொண்டிருந்தார். இதையெல்லாம் கோர்ட்டிலோ, போலீஸ் ஸ்டேசனிலோ வைத்து விசாரித்தால் மனித உரிமை மீறல் என்று போராட்டமே நடத்தி ஒரு காட்டு காட்டி விடுவார்கள். டீவியில் வைத்து நடத்துவதால் அதே போல் பேச நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இத்தனை தொலைக்காட்சிகள் வந்ததில் கிடைத்த நல்ல வளர்ச்சி.
மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில் அரையிருட்டாக என்னமோ ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா நம்ம மேட்டர் இதுதான்யா என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒரு தாட்டியான பெண் அரையிருட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். முகம் அடையாளம் தெரியாதவறு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. (தெரிந்தாலும் ஒரு எழவும் ஆகிவிட போவதில்லை என்றாலும் அப்படி மறைத்தால் தான் பார்க்கிறவனுக்கு ஒரு இது வருமாம்...). புருசனுக்கு ஒண்ணுமே முடியலையாம், ஏதோ ஒரு கேப்சூலாம் ஃபிரண்டு சொன்னாராம். அதை வாங்கி புருசனுக்கு கொடுத்து இப்போ சந்தோசமா இருக்காராம். அதற்கு ஆதாரமாக ஒரு வயதான தம்பதியை எசகுபிசகாக காட்டினார்கள். தலையில் அடித்துக் கொண்டேன். அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர், இங்கே பெண்மணிகளை குறிவைத்து ஒரு கேப்சூல். ஆனா பாருங்க எல்லாத்தையும் ஆண்கள்தான் தின்று தொலைக்க வேண்டி இருக்கு. என்ன ஒரு பெண்ணாதிக்கம்?
அடுத்த சேனலுக்கு தாவினேன். அங்கு ஒருவன் வடைசுடும் சட்டியை மூவாயிரம் ரூவாய்க்கு விற்றுக் கொண்டிருந்தான். அடேய் மூவாயிரம் ரூவாய வெச்சி ஒருத்தன் வாழ்க்கை பூரா வடை சாப்பிடலாமேடா என்று எண்ணிகொண்டேன் சீக்கிரம் தூங்க வேண்டும். நாளைக்கு போய் பெயர் மாற்ற வேண்டும், கல் மோதிரம் வாங்க வேண்டும். அதற்கு அப்புறம் வந்து கொட்டப் போகும் பணத்தை எங்கே போட்டு வைப்பது? மறுபடியும் சேனலை மாற்றினேன். அதிலே சென்னைக்கருகில் நிலம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிப்போட்டால் பலமடங்கு உயருமாம். பணம் வந்தவுடன் பல்க்காக நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். ஆகவே நண்பர்களே இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உங்கள் கையில்.........
நன்றி: கூகிள் இமேஜஸ்
28 comments:
ஐய்யோ ஐய்யோ...... கடைசி வரைக்கும் கில்மா மேட்டர் சிக்கவே இல்லை போலும்..... அந்த சேலம் சித்த வைத்திய சாலை வைத்தியரே பெரிய கில்மா பார்ட்டிதான்.
Panni kodiswararey( nalaiku )
kalu vanki, perai mathi,nilam vanki, appuram capsule vankarathaiyum, salem doctorai pagaratha neega sollavey ella
/////Vijayan K.R said...
ஐய்யோ ஐய்யோ...... கடைசி வரைக்கும் கில்மா மேட்டர் சிக்கவே இல்லை போலும்..... அந்த சேலம் சித்த வைத்திய சாலை வைத்தியரே பெரிய கில்மா பார்ட்டிதான்.////
என்ன பண்றது முன்னாடியெல்லாம் நைட்டு டீவில உக்காந்தா நல்லா பொழுது போகும், இப்போ இவனுங்க தொல்ல ரொம்ப கூடிப்போச்சி....
/////Tirupurvalu said...
Panni kodiswararey( nalaiku )
kalu vanki, perai mathi,nilam vanki, appuram capsule vankarathaiyum, salem doctorai pagaratha neega sollavey ella////
பணம் வந்துட்டா மத்த எல்லாம் ஆட்டோமேட்டிக்கா வந்துடும்ல....
@..பண்ணி....
விளம்பரதாரர்....நிகழ்ச்சி....முடிந்து...இன்னும்..
மெயின் மேட்டர்...ஆரம்பிக்கலை....
அந்த...சீடியை மாற்றவும்........
யோவ்வ்வ்வவ்வ்வ் பன்னி .........
செய்முறை எல்லாம் அப்புறம்....
இப்ப படிக்க வாயா....
(ஓஓஓஓஓ....நமக்கு ஓவ்வாத காரியம் இல்ல....)
தற்சமயம் நேரம் இல்லாத காரணத்தால்
நேரம் கிடைக்கும் நேரத்தில் வந்து இந்த பதிவை வாசிக்கிறேன்
நன்றி வணக்கம்
ம்ம்மம்மம்ம்ம்ம்......
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்...........
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...............
ம்ம்ம்ம்ம்ம்ம் தாஆஆஆஆஆன்...............
இது 18+ தானே......??????????
@...முத்தரசு.....
இன்னும் கழட்டவேண்டியத....கழட்டலை....பாருங்க.....
நான் பன்னிக்கு----வேண்டியதை சொன்னேன்.....
நல்இரவு....வணக்கம்....
ஆனால்....நாளை...காலை...இங்க இனி கமெண்ட் போட்டவங்க....
Qu-ல இருக்கணும்....சொல்லிப்புட்டேன்...ஆமா...
அப்பாடி,ஒரு வழியா பொழைப்புக்கு வழி கெடைச்சுடுச்சு.என்ன,கல்லு வாங்கத் தான்..............................!
ஷ்.... அபா!
தாம்பரம் மிக அருகில் நாகர்கோவிலில் ஒரு இடம் இருக்காம் வேணுமா ?
ங்கே...
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒரு விழிப்புணர்வும் உள்ளது.. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..
ங்கே...
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒரு விழிப்புணர்வும் உள்ளது.. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..
// ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார். //
"அவரின் நிறம் வெள்ளை" -- குறிப்பிட மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன். என்ன செய்யலாம்,
/////////////////////
பருப்பு சட்டியில் கால் வுடலாம், மாவு டப்பாவை உதைக்கலாம், இல்ல மாடியில் இருந்து குதிக்கலாம்....அத வுட்டுட்டு டிவி பாத்துட்டு...
சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார்.
/////////////////////
யோவ்...அது எதிர் வீட்டு ஜன்னல் அதை எட்டிப்பாத்தா திட்டத்தான் செய்வான்....!
சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார்.
/////////////////////////
கன்பார்மா அது சுட்டி டிவியா இருக்கும்!
நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்டும் என்று முடிவு செய்தவனாக அவருடைய முகவரி, போன் நம்ப்ரை குறித்துக் கொண்டேன். மறுபடியும் ரிமோட்டை கையிலெடுத்தேன்.
////////////////////
சரீரீரீ...சரீரீரீ...பன்னிக்குட்டி வீங்குனசாமின்னு மாத்திக்கங்க....
இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறுத்தினேன்.
///////////////////////
யோவ் அது மானட மயிலாட நமீக்குட்டி கல்லு இல்ல....
அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர்,
//////////////////////
அது வைத்தியரா இல்ல நம்ம பாரு என்கின்ற பருத்திவீரனா..?
இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உங்கள் கையில்.........
////////////////////////////
ஆமாய்யா குளிர்ல அவனவன் 11 மணிக்கு மேல.......
ஒன்னுமில்ல இழுத்துப் போத்திட்டு தூங்குவான்...!
கடைசிவரைக்கும் சிக்கல போல!!! அதுக்குதான் இங்கிலீசு சேனலா பார்க்கனும்ன்கறது....
super, super, super!
நகைச்சுவையாக சொல்லப் பட்டிருந்தாலும் கட்டுரையில் உள்ள உண்மைகள் சிந்திக்க வைக்கின்றன!
மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில் அரையிருட்டாக என்னமோ ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா நம்ம மேட்டர் இதுதான்யா என்று பார்க்க ஆரம்பித்தேன்.//
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா நம்ம மேட்டரு....ஆனா சிக்காம போயிருச்சே மக்கா....!
நாம நைட் ஆனா ச்னக்ஸ்க்ஸ் தான் பாக்குறது ஹி ஹி
நானும் சில சமயங்களில் இந்த மாதிரிதான் துாக்கம் வராமல் இருக்கும் போது டிவி காண்பதுண்டு.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் எற்பட்டுள்ளது.
ஆனால் தங்களைப் போல அழகாக அடுத்தவர்களை சுவராசியமாக படிக்க வைக்கும்படி எழுத தெரியாது.ஆதலால் இவை அனைத்தையும் நான் எழுதியதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment