Friday, May 31, 2013

வாசக மொண்ணைகளின் கடித மொண்ணைகள்....


ஒருவழியாக ஜெயிலுக்குள் வந்து செட்டில் ஆகி 10 நாட்களாகி விட்டிருந்தன. மணியடித்த உடன் பசிக்க தொடங்கும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன். நான் எழுத்தாளன் என்பது சிறையில் இருந்த பலருக்கும் சவுகர்யமாக போய்விட்டது. வீட்டிற்கு, கள்ளக்காதலிகளுக்கு, அடியாட்களுக்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவரும் என்னிடமே வந்தனர். நானும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சளைக்காமல் எழுதி குவித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது. 


அன்புள்ள மொக்கைச்சாமி,
நீ சிறைக்கு சென்ற பின் நம்ம ஊரே நிம்மதியாக இருக்கிறது. டீக்கடையில் நீ வந்துவிடுவாய் என்ற பயம் இல்லாமல் எல்லாரும் சுகமாய் டீ குடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல வியாபாரம் என்று டீக்கடை நாயர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நீ எங்கேயோ திருடி விட்டு ஜெயிலுக்கு போய்விட்டாய் என்று கேள்விப்பட்டதும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று உன் பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். மேலும் ஏதாவது செய்துவிட்டு உள்ளேயே இருக்குமாறு சில நண்பர்கள் உன்னிடம் தெரிவிக்க சொன்னார்கள். உன் முடிவு என்ன?

மொண்ணைச்சாமிஅன்புள்ள மொண்ணைச்சாமி
1. சிறைச்சாலையின் பதினைந்து கழிவறைகளை தினமும் சுத்தம் செய்யும் அருமையான பணி எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனக்கானவற்றை அன்றி வேறெதையும் கழுவுவது மட்டும் அல்ல, உள்ளே போகக்கூட என்னால் முடியாது. ஏனென்றால் அவ்வளவு கூட்டம் இங்கே. கக்கூசில் பினாயிலை ஊத்தி அது சுகந்தமாக உள்ளே பரவும் அற்புதக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். இத்தகைய மகிழ்ச்சிகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது இந்த சிறைச்சாலை. வெட்டியாக பேப்பர் படிக்கும் அந்த டீக்கடை கூட்டத்தால் நிறைந்தது அல்ல எனது உலகம்.

2. நாள் முழுதும் டீக்கடையில் உக்கார்ந்து பேசும் எழுத்தாளர்கள் நம்மிடம் மிகச்சிலரே இருக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகளின் மீது என்றைக்கு இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே இனி அந்த டீக்கடை எனக்கானது அல்ல. வெளியில் வந்ததும் அடுத்த தெரிவில் இருக்கும் அண்ணாச்சி டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக்கிக்  கொள்வேன். அதுவே என்னைப் போன்ற மாட்சிமைமிக்க எழுத்தாளர்களுக்கு இயல்பு

3. நான் எப்பொழுதும் எனக்கான டீக்கு காசு கொடுத்தே வந்திருக்கிறேன். பிரச்சனை என்று வரும் போது அதுவே பாதுகாப்பு. ஆனால் எப்போதும் ஒரு டீயைவிட அதிகமாக காசை சுமந்தலைவதில்லை.  யாரும் புதிதாக வந்து டீ வாங்கிக் கேட்டால் கடனுக்கு வாங்கிக் கொடுப்பதே என் வழக்கம். (அப்போதுதான் மறுபடி வாங்கி கேட்க மாட்டார்கள்)

4. இந்த டீக்கடை விவகாரம் பற்றி பேசுபவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்? காலையில் எழுந்த உடன் பல்லு கூட விளக்காமல் டீக்கடைக்கு சென்று எவனாவது ஓசி டீ வாங்கித்தருவானா என்று காத்திருக்க வேண்டியது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா? இவர்கள் மக்களைச் சந்தித்து எத்தனை நாட்களாகிறது? நான் மக்களோடு மக்களாக வாழ்பவன். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நான் ஒரு பக்கத்து வீட்டுக்காரன். இதை யாரும் எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட வக்கில்லாதவர்கள் இன்று டீக்கடையில் டீ குடிப்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். நான் பிச்சைக்காரனோடு பிச்சைக்காரனாக பிச்சை எடுத்து அவர்களோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான முறை டீக்குடித்திருக்கிறேன். எனக்கு இந்த அரைவேக்காடுகள் எப்படி டீ குடிக்க வேண்டும் அறிவுரை சொல்கிறார்கள். பாண்டிச்சேரிக்காரனுக்கு சரக்கு அடிக்க சொல்லித்தருவதை போல. அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  டீக்குடிப்பவர்களுக்கு மூளையில்லை என்று டீ மாஸ்டருக்கு தெரிந்தாலும் டீ போடுகிறார். அதுதான் வியாபார நுண்ணரசியல். ஆனால் அதற்காக யாரும் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று ஆய்ந்தறிவதுதான் ஒரு தரித்திர எழுத்தாளனின் இயல்பு.

5. எழுத்தாளனும், டீ மாஸ்டரும் ஒன்று என்று எந்த நல்ல டீக்கடைக்காரனும் சொல்ல மாட்டான். ஏனென்றால் எழுத்தாளர்களால் டீக்கடை வருமானம் பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். நம்மூர் டீக்கடை ஜந்துகளுக்கு சுயமாக டீயும் குடிக்க முடியாது, வருபவனுக்கு வாங்கி கொடுக்கவும் முடியாது எபோதும்.

நான் ஜெயிலுக்கு போனபின் என்ன பேசுவார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜெயிலுக்கு போவதற்கும், சிறைக்கு போவதற்கும் வேறுபாடு தெரியாத கும்பல் அது அவர்களால் டீக்கடை அரசியலில் இருக்கும் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு டீ மாஸ்டரை அங்கே டீ குடிக்க வருபவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்ற மொள்ளமாரித்தனத்தைத்தானே எழுதி இருக்கிறேன். அதனால் அவர்கள் திட்டுவது அத்தனையும் அவர்களுக்கேதான்.

இவர்கள் இப்படி சொல்லி அனுப்பியதன் மூலம் டீக்கடையில் என்னால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். என்னால் எதுவுமே விளங்காது என்றிருந்ததை இப்போது இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
மொக்கைச்சாமி


11 comments:

கை ப்புள்ள said...

அண்ணே சமகால எழுத்தாளர்கள் அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாரகிட்டன்களோ,

கை ப்புள்ள said...

இதெல்லாம் நாளைக்கு புத்தகமா வரும், வரலாற்று சுவடுகளில் அழியாத இடம் பெரும்,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thoooooo

மொக்கராசா said...

போலிஸ் ஏன் தன்னை தானே துப்பிகிறாரு.....ஒரு வேளை அவரும் முன்னால் எழுத்தாளரோ

வெளங்காதவன்™ said...

இதுக்குத்தேன் பொட்டலம்கட்டிட்டு, இலக்கிய விவாதத்துக்குப் போகப்படாதுன்னு சொல்லுறது!

MANO நாஞ்சில் மனோ said...

பிரபல எழுத்தாளர்கள் நாறடிக்கப் பட்டனர் மற்றும் டவுசர் கழட்டப்பட்டது ஹி ஹி...

தனிமரம் said...

ஹீஈஈஈஈஈஈஈஈஈ! விவாதமா!ம்ம்ம்!பொன்னாடை தயார்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஇ!

Philosophy Prabhakaran said...

பதிவின் இறுதியில் எழுத்தாளருடைய முழுப்பெயரையும் போடக்கூடாது பாஸ்... தூ, பீ இந்த மாதிரி ஒரே ஒரு வார்த்தையை யூஸ் பண்ணோணும்...

வெளங்காதவன்™ said...

http://velangaathavan.blogspot.in/2013/06/jeyamohan-charu.html

FOOD NELLAI said...

எழுத்தாளர்னா நாலு பேர் பேசத்தான் செய்வாக! :)

! சிவகுமார் ! said...

ஏம்பா அழுகறன்னு கேட்டது குத்தமா?