Wednesday, May 15, 2013

பட்டா போய்விட்டார்....

பட்டா போய்விட்டார்....
நக்கல் நையாண்டிகள் முடிந்தது.
பின்னூட்ட போர்கள் ஓய்ந்தன.

இதுவரை முகம் தெரியாமலே இருந்துவிட்டு,
நீ இறந்துவிட்ட பின்பு பார்த்த உன் முகம்
இனி வதைத்துக் கொண்டே இருக்க போகிறது
அதையும் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.....

என்றாவது ஒருநாள் பழையபடி பதிவுகளில்
ஒன்றாக களம் இறங்கி கலக்குவோம் என்று
காத்திருந்தது கானல் நீராகிவிட்டது...
அத்தனை ஆக்ரோஷமாக அரசியல் பதிவுகள்
எழுதினாலும், எத்தனை எத்தனை நட்புகளை
சம்பாதித்து வைத்திருக்கிறாய்?

எத்தனை பதிவுகள், எத்தனை அஞ்சலிகள்....
உனக்காக சிந்தும் கண்ணீரின் துளியோரம்
கொஞ்சம் பெருமிதமும் எட்டிப் பார்க்கிறது....
உன்னோடு இன்னும் கொஞ்சம் நன்றாக பேசி பழகி
இருக்கலாமோ என்று காலம் கடந்த
ஞானம் வருகிறது இன்று....

இருந்தாலும்...
உன் முகத்தை பார்க்காமலேயே
இருந்திருக்கலாம் கடைசிவரை....

9 comments:

Anonymous said...

rip.........

Unknown said...

எனக்கும் அப்படியே தோன்றியது...அதனால் தான் அவரைப்பற்றிய தகவல்களை பகிரவில்லை...என்றும் பட்டா பட்டியாகவே நமது உள்ளத்தில் இருப்பார்...இன்னும் நம்ப மனம் மறுக்கிறது...என் செய்வேன்...

MANO நாஞ்சில் மனோ said...

நாப்பத்தாறு வயசென்று தெரிந்து நம்பவே முடியவில்லை, அவரை நான் தம்பி தம்பி என்றேதான் நினைத்து வைத்திருந்தேன் அவர் மரணம்தான் எனக்கு அவர் அண்ணன் என்பதை தெரிவித்தது.

அண்ணே....இறைவனடியில் நிம்மதியாக துயில் கொள்ளுங்கள்.

கோவை நேரம் said...

வருத்தமே...அவரின் ஆன்மா சாந்தியடைட்டும்

மாலுமி said...

/// எத்தனை எத்தனை நட்புகளை சம்பாதித்து வைத்திருக்கிறாய்? ///

கொஞ்சம்மல்ல ..... பதிவுலகை போல், சொந்த ஊரிலும் நிறைய நட்பை சம்பாரித்து வைத்துள்ளார் ........

/// உன் முகத்தை பார்க்காமலேயே இருந்திருக்கலாம் கடைசிவரை.... ///

ஆமாம் ....மச்சி, கஷ்டத்தோடு கஷ்டமா போயிருக்கும் ..... என்னத்த சொல்ல ..... :((((

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையான முகத்தை பார்த்தவுடன் வேதனை அதிகமாகிறது....

முன்பின் தெரியாத ஒருவருக்காக அவருடைய எழுத்துக்களையே அடையாளமாக்கி இவ்வளவு நட்பாகி வேதனைப்படுவது பதிவுலகில் மட்டுமே சாத்தியம்...

பதிவுலகில் கிடைத்த அத்தனை நண்பர்களையும் நான் மனதார நேசிக்கிறேன்...

அனைத்து பதிவர்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கைக்காவும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

Unknown said...

முகம் தெரியாது.பட்டாபட்டி ன்னு பெயர் மட்டும் தெரிந்திருந்தது.திடீரென்று................துணுக்குற்றது நெஞ்சம்.ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.

Madhavan Srinivasagopalan said...

RIP.....

உலக சினிமா ரசிகன் said...

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.