Monday, May 13, 2013

நண்பனே...

இரண்டு மாதங்களாக ப்ளாக்கில் எதுவும் எழுதவில்லை. ஏதாவது எழுதலாம் என்று அவ்வப்போது எண்ணம் வந்து போனாலும் உக்காந்து எழுத முடியாத அளவுக்கு நேரப்பற்றாக்குறையாக இருந்து வருகையில், இன்று இப்படி ஒரு விஷயத்திற்காக எழுத நேர்ந்திருக்கிருக்கிறது என்பதை மிகுந்த வருத்ததுடன் எண்ணிப்பார்க்கிறேன். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னால் ஏதேச்சையாக எதையோ கூகிளில் தேடிய போது வந்து மாட்டியது வெளியூர்க்காரன் ப்ளாக். அங்கே பின்னூட்டம் இடும் போதுதான் அவர் பழக்கமானார். பழக்கம் என்பதைவிட அறிமுகம் என்று சொல்லலாம். யார் இவர் என்று அவருடைய ப்ளாக்கிற்கு சென்று பார்த்துவிட்டு ஆடிப்போனேன். அசாத்திய துணிச்சல், நகைச்சுவை, நக்கல், சமூக பொறுப்பும் கலந்துகட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.மிக எளிமையான வார்த்தைகளில் எழுதுவார். இன்று வரை அவர் எழுதுவது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. ப்ளாக்கில் கும்மியடிப்பது என்றால் என்னவென்று தெரிந்து கொண்டது அங்கேதான். அந்த உந்துதலில் தான் இந்த ப்ளாக்கை ஆரம்பிக்கும் எண்ணமே ஏற்பட்டது. எங்கள் டெரர்கும்மி நண்பர் குழுவே அவரது ப்ளாக்கில் பின்னூட்டம் இடுபவர்களுக்குள் ஏற்பட்ட நட்பில் உண்டானதுதான். 

அவரை பிடித்துப் போனவர்களே எனது நண்பர்கள் வட்டமாக அமைந்தது தற்செயலானது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. அவருடன் வழமையாக சாட்டோ, போன் காலோ செய்ததில்லை. இருப்பினும் நல்ல புரிதல் இருந்தது.  சமீபகாலமாக அவரும் மிக பிசியாக இருந்ததால் முன்பு போல் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை.  இன்று காலை திடீரென வந்த இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கும் என்றே நினைத்தேன். செய்தி உறுதிப்படுத்தப்பட்ட போதும் நம்ப முடியாமல் அது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே விரும்புகிறது மனது.  அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் விரைவிலேயே மீண்டு வர வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார். 

எங்கள் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


17 comments:

நாய் நக்ஸ் said...

Rip...
:(

hered 1 st news from...
Vilangathavan......

Nobody couldn't...
Bilive......

Stil.....weighting for
his comment.....

:(
:(
:(

வெங்கட் said...

செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்... மனம் கனக்கிறது..

:(

மொ.ராசு (Real Santhanam Fanz ) said...

வாசிக்கும்போதே வருத்தமா இருக்குண்ணே... :-(
பட்டாபட்டி அண்ணனின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

பருப்பு (a) Phantom Mohan said...

நம்பவே முடியலை, எனக்கு இப்பவும் பொழுது போகலைன்னா 2009 ல அவர் எழுதின பதிவையும், நாம மொக்க போட்டு விளையாடிய கமெண்டையும் தான் படிச்சு சிரிச்சிட்டு இருப்பேன்.

இந்த அதிர்ச்சில இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிய வரமுடியாது :( miss you my dear friend pattapatti :(

TERROR-PANDIYAN(VAS) said...

//செய்தி உறுதிப்படுத்தப்பட்ட போதும் நம்ப முடியாமல் அது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே விரும்புகிறது மனது. //

அனைவரின் மனநிலையும் அப்படிதான் உள்ளது.. :(

! சிவகுமார் ! said...


தமிழக அரசியல்வாதிகள் மீதான அவரது கோபம் எழுத்தாக மாறும்போது அனலை கொட்டும். என்னடா இப்படி எழுதுகிறார் என்று சில சமயம் அதிர்ந்ததுண்டு. டெர்ரர் கும்மி நண்பர்கள், விக்கி ஆகியோருக்கு இந்த இழப்பு எப்படிப்பட்டது என்று அறிவேன்.

பிரார்த்தனைகள்...

விக்கியுலகம் said...

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை...ஆழந்த இரங்கல்கள் எமதருமை நண்பருக்கு....

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

பாலா said...

என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு என் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

மாலுமி said...

பட்டாபட்டிக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் :(((

வீடு சுரேஸ்குமார் said...

ஏற்கனவே வௌங்காதவன் என்னிடம் அவரைப்பற்றி அடிக்கடி சொல்லிட்டே இருப்பான். காங்கிரஸ்,திமுக, சாருவை விமர்சிக்கும் போது ஒரே மனநிலையில்...ஒத்த கருத்துடன் பேஸ்புக்கில் கும்மியடிக்கும் போது நெருங்கிய நட்பாக இருந்தார் அதற்குள் இப்படி வேதனையாக இருக்கிறது பன்னி!

"ராஜா" said...

என்னால் நம்ப முடியவில்லை ... அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பம் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர பிரார்த்திப்போம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவுலகில் தனக்கென தனிப்பட்ட பாணியில் அனைவரும் மனதிலும் இடம்பிடித்தவர்...

நண்பரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

செங்கோவி said...

எனக்கும் முதலில் நம்பமுடியவில்லை..நம் ஆட்கள் விளையாடுகிறார்களோ என்று தான் நினைத்தேன்.ஆனால்...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Subramaniam Yogarasa said...

எல்லாம் அவரவருக்கு வகுக்கப்பட்டபடியே தான் நடக்கின்றன.அறிமுகமில்லை ஆனாலும் டெர்ரர் கும்மி வாயிலாக தெரிந்தது தான்.செய்தி இடியாக.............. ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டி.............

arunvetrivel said...

அண்ணாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள்கள் , மேலும் நம் அன்பு அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிறார்த்திப்போம்.

ஜீ... said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கல்கள்...