மணியண்ணன் கடல் படத்த வழக்கம் போல படுசீக்ரட்டா (?) எடுத்திட்டிருக்காராம். அதுக்காக சும்மா விட்ர முடியுங்களா.....? உக்காந்து தோண்டி துருவி கதைய கிண்டி எடுத்துட்டோம்ல.......
கதைப்படி ஹீரோ ஒரு மீனவர். பார்ட் டைம் ரவுடியாவும் இருக்கார். ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும் இருட்டா இருக்கு, கடல்ல ஹீரோ கட்டுமரத்துல அன்னிக்கு கெடச்ச மீனை வெச்சிட்டு வந்துட்டு இருக்கார். அங்கங்க சக மீனவர்களும் வந்துட்டு இருக்காங்க. ஹீரோவுடைய நண்பனும் அருகில் தன் கட்டுமரத்தில வந்துட்டு இருக்கான். அப்போ அவனை ரெண்டு பேர் தாக்குறாங்க. ஹீரோ உதவிக்கு போறார். ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால (?) எல்லாரையும் அடிச்சி துவம்சம் பண்றார். கடல் தண்ணிலயே ஃபைட்டு தண்ணி சிதற சிதற நடக்குது. ஒருவழியா நண்பனை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வர்ரார். கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான். ஹீரோவ பாத்து கேட்கிறான்.
வில்லன்: வந்துடு.. என்கூட வந்துடு
ஹீரோ: ஏன்?
வில்லன்: உனக்கு தெரியல..
ஹீரோ: அதான் ஏன்?
வில்லன்: எனக்கும் தெரியல....
ஹீரோ: வரலேன்னா....?
வில்லன்: அடிப்பேன்....
ஹீரோ: யாரை.....?
வில்லன்: அவனை...
ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார். ஒருநாள் கடற்கரையில் சண்டை நடக்கிறது. ஹீரோ யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி அந்த வழியாக வந்தவர் சண்டையை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். சண்டையின் நடுவே ஹீரோ, ஹீரோயினை பார்க்கிறார். கண்ணும் கண்ணும் நோக்குகின்றன. நோக்கு வர்மம் வேலை செய்கிறது. சண்டை நிற்கிறது. ஹீரோ திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும் போதே ஹீரோயின் தலையை குனிந்தபடி சென்று விடுகிறார். ஹீரோவும் பின்னாடியே சென்று ஹீரோயின் அந்த ஊரில் உள்ள ஸ்கூலில் வந்திருக்கும் புது டீச்சர் என்பதை கண்டுபிடிக்கிறார்.
மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும் இருக்கிறது. டீச்சரை பார்த்ததில் இருந்து அவர் ஞாபகமாவே இருக்கும் ஹீரோ எப்படியாவது டீச்சரை பார்த்துவிட வேண்டும் என்று இருட்டு சந்தில் இருக்கும் டீச்சர் வீட்டுப் பக்கமாக செல்கிறார். வீட்டுக்குள் இருந்து குடைபிடித்தபடி டீச்சர் வெளியே வருகிறார். வெளியில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவைப் பார்த்த டீச்சர் ஹீரோவை அருகில் அழைக்கிறார்.
டீச்சர்: எனக்கு வேணும்...
ஹீரோ: என்ன வேணும்..?
டீச்சர்: மீன்...
ஹீரோ: என்ன மீன்?
டீச்சர்: வஞ்சிரம்...
ஹீரோ: எடுத்துக்கோ... எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ.....
டீச்சர்: எதை?
ஹீரோ: நான் புடிக்கிற மீன் எல்லாமே உனக்குத்தான்.... அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது?
டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது. பாடல் முடிந்ததும் பார்த்தால் கடற்கரை மணலில் மறுபடியும் சண்டை. உக்கிரமாக நடக்கிறது. ஹீரோ சுற்றிச் சுற்றி எல்லோரையும் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி கடற்கரை மணலில் அலைகள் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அலைகள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறன. சண்டையை பார்க்கிறார். மௌனமாக நிற்கிறார். க்ளோசப் ஷாட். டீச்சர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. உதடுகள் விம்முகின்றன. ஹீரோ இதைக் கவனித்து விட்டு மறுபடியும் ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். டீச்சர் அருகில் வருகிறார்.
டீச்சர்: நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்....
ஹீரோ: மொதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க....
டீச்சர்: நீங்கதான் மொதல்ல நிறுத்தனும்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: ஏன்னா நீங்கதான் அடிக்கிறீங்க, அவங்க அடிவாங்குறாங்க....
ஹீரோ: முடியாது....
டீச்சர்: ஏன்?
ஹீரோ: எனக்கு என்னோட பங்கு வேணும்...
டீச்சர்: எதுல...?
ஹீரோ: அவங்க பண்ண சுண்டக்கஞ்சில....
டீச்சர்: அது வேணாம்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: நான் காய்ச்சி தாரேன்.....
இதைக் கேட்டு ஹீரோ சிரிக்கிறார். ஹீரோயினும் சிரிக்கிறார். மாறி மாறி சிரிக்கிறார்கள். மறுபடியும் பாடல் தொடங்குகிறது........ பாடல் முடிந்த உடன் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் ஏற்கனவே அடிவாங்கி ஓடியவன் கத்தியோடு ஓடி வந்து ஹீரோவை குத்தி விடுகிறான். ஹீரோ மயங்கிச் சரிகிறார். டீச்சரின் கதறலோடு ஷாட் முடிகிறது.
ஹீரோயின் வீடு. டீச்சருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர் உள்ளே அறையில் சோகம் அப்பிய முகத்துடன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் வருகிறது. டீச்சர் அதிர்ந்து போய் நிற்கிறார்...... டீச்சரின் குடும்பத்தினரும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
நன்றி: கூகிள் இமேஜஸ்
44 comments:
வணக்கம் . பன்னியாேர
வணக்கம் கோவையாரே.....
அமா இது ஏப்ரல் மாசம் கூட இல்லியே.
////பூந்தளிர் said...
அமா இது ஏப்ரல் மாசம் கூட இல்லியே./////
நாங்க எப்பவுமே இப்படித்தாங்க....
presenttu presenttuuuuuu
ஏண்டா பரதேசி நாயே நீ கடலோர கவிதைகள் கதையை திருடி உல்டா பண்ணி போட்டா எங்களுக்கு தெரியாதா... க்க்க்க்ர்ர் தூ... :)
/////vinu said...
presenttu presenttuuuuuu/////
சரி சரி அப்புறமா வந்து பேட்டாவ வாங்கிட்டு போ.....
வாழ்த்துக்கள் ..,அருமையானா .,ஆழமாழமான விமர்சனம் ,
Ok....
Where is the
STORY......??????
panni......
Ethum top 10-la
vara .....
Muyarchchiya.......?????
Neer....
OLI VATTA PATHIVAR.....
thaane......??????
/// TERROR-PANDIYAN(VAS) said...
ஏண்டா பரதேசி நாயே நீ கடலோர கவிதைகள் கதையை திருடி உல்டா பண்ணி போட்டா எங்களுக்கு தெரியாதா... க்க்க்க்ர்ர் தூ... :)////////
கண்டுபுடிச்சிட்டாருய்யா..... பெரிய கலக்டரு........ ஒரிஜினலே அப்புடித்தான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்...... இவரு வந்து கண்டுபுடிக்கிறாராம்...
/////கொசக்சி பசபுகழ் said...
வாழ்த்துக்கள் ..,அருமையானா .,ஆழமாழமான விமர்சனம் ,//////
என்னா வழவழாங்கிறே..... மறுபடியும் மட்டையா..... நல்லா பாருடா ம்மூதேவி இது விமர்சனம் இல்ல, கதைச் சுருக்கம்...!
/////நாய் நக்ஸ் said...
Ok....
Where is the
STORY......??????
panni......
Ethum top 10-la
vara .....
Muyarchchiya.......?????
Neer....
OLI VATTA PATHIVAR.....
thaane......??????///////
யோவ் என்னய்யா இது ஒளிவட்டம், புள்ளிவட்டம்னுக்கிட்டு....
// கதைப்படி ஹீரோ ஒரு மீனவர்.
படத் தலைப்பு கடல்னா அவரு மீனவராத்தா இருப்பாரு, பின்ன மாணவரா ?
நல்லா சொல்றாங்கையா டீடைலு
// ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால
ஹீரோ ரவுடியா ? சொல்லவேயில்லே
// தண்ணி சிதற சிதற நடக்குது
தண்ணி ? நடக்குது ?
ரைட்டு
// கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான்
யோகாசனம் பண்றாரு ?
டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது.//
அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தாரியாடி....
// ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார்
ஒருவேளை காது கேக்காதோ ?
/////விஸ்வநாத் said...
// கதைப்படி ஹீரோ ஒரு மீனவர்.
படத் தலைப்பு கடல்னா அவரு மீனவராத்தா இருப்பாரு, பின்ன மாணவரா ?
நல்லா சொல்றாங்கையா டீடைலு//////
டீடைலுனு வந்துட்டா சொல்லித்தானுங்களே ஆகோனும்.....?
////விஸ்வநாத் said...
// ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால
ஹீரோ ரவுடியா ? சொல்லவேயில்லே //////
அதான் சொல்லி இருக்கோம்ல...... அப்புறமும் சொல்லவே இல்லேன்னா?
// ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும்
// மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும்
கவிதை கவிதை
////விஸ்வநாத் said...
// தண்ணி சிதற சிதற நடக்குது
தண்ணி ? நடக்குது ?
ரைட்டு//////
தண்ணிய தண்ணின்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்ணே.....!
////விஸ்வநாத் said...
// கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான்
யோகாசனம் பண்றாரு ?//////
இல்ல... அவன் கோணலா நிக்கலேன்னு எல்லாருக்கும் புரியனும்கறதுக்காகத்தான் நேரா நிக்கிறான்னு சொல்லி இருக்கோம்......
////MANO நாஞ்சில் மனோ said...
டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது.//
அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தாரியாடி..../////
சிச்சுவேசன பாத்த உடனேஎப்படி பாட்டு தன்னால கெளம்பி வருது பாருங்க.... இந்தப்படம் ஓடும்யா.... 100 நாள் ஓடும்யா....
///விஸ்வநாத் said...
// ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார்
ஒருவேளை காது கேக்காதோ ?//////
இல்ல, டைரக்டர் அப்படியே போக சொல்லிட்டாராம்......
////விஸ்வநாத் said...
// ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும்
// மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும்
கவிதை கவிதை/////
இதெல்லாம் மணியண்ணன் சீக்ரெட் ஃபார்முலாய்யா... இப்படி பப்ளிக்கா சொல்லப்படாது.......
பன்னி, உன்னோட பிளாக்க பாத்தாவே, கொட்டாவி கொட்டாவியா வர்து...
ஆதலால், நன்றி
அடுத்த பதிவு, ஹீப்ரு மொழியில் இயற்றினால், படித்து தான்யனாவேன்!
மறுபடியும், நன்றி!!!
//////வெளங்காதவன்™ said...
பன்னி, உன்னோட பிளாக்க பாத்தாவே, கொட்டாவி கொட்டாவியா வர்து...
ஆதலால், நன்றி//////
அப்போ படமும் தேறாதா..... வெளங்கிரும்....!
/////வெளங்காதவன்™ said...
அடுத்த பதிவு, ஹீப்ரு மொழியில் இயற்றினால், படித்து தான்யனாவேன்!
மறுபடியும், நன்றி!!!/////
தம்பி மப்புல கடை மாறி வந்துட்டாப்புல போல....
பன்னி....சார்! உம்ம போட்டாவ தெரியாம பதிவு கடைசீல..போட்டுட்டீரு...!எடுத்திரும் வோய்...!
வில்லங்கமாயிறப் போவுது..!
என்ன இது மணிரத்தனம் படத்தை பாரதிராஜ டைரேக்ட் பண்ண மாதிரி இருக்கு ..........
/////வீடு சுரேஸ்குமார் said...
பன்னி....சார்! உம்ம போட்டாவ தெரியாம பதிவு கடைசீல..போட்டுட்டீரு...!எடுத்திரும் வோய்...!
வில்லங்கமாயிறப் போவுது..!/////
யோவ் அர்விந்த்சாமிகூட அடுப்புல வெந்த சாமிய போய் கம்பேர் பண்ணிட்டீங்களே......?
//////அஞ்சா சிங்கம் said...
என்ன இது மணிரத்தனம் படத்தை பாரதிராஜ டைரேக்ட் பண்ண மாதிரி இருக்கு ..........//////
நோ நோ..... பாரதிராஜா படத்த மணி டைரக்ட் பண்ணி இருக்காரு....
வணக்கம்,ப.ரா சார்!!!///எப்புடியோ,'கடல்' கதை லீக் ஆயிடிச்சு!!!பாட்டு சீன் ஒண்ணுமே சொல்லலியே?
யோவ்... என்னய்யா நடுவுல கொஞ்சம் பாரதி ராஜா வாடை வருது...
ஆமா... எதுக்கு அடுப்புல வெந்த சாமி ஸ்டில் போட்டிருக்கீங்க...
//////Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!!!///எப்புடியோ,'கடல்' கதை லீக் ஆயிடிச்சு!!!பாட்டு சீன் ஒண்ணுமே சொல்லலியே?//////
வணக்கம் யோகா ஐயா, அதான் ரெண்டு பாட்டு சீன் வெச்சிருக்கோமே?
/////Philosophy Prabhakaran said...
யோவ்... என்னய்யா நடுவுல கொஞ்சம் பாரதி ராஜா வாடை வருது.../////
ஒரிஜினல் கதையே அவருதுதானே?
//// Philosophy Prabhakaran said...
ஆமா... எதுக்கு அடுப்புல வெந்த சாமி ஸ்டில் போட்டிருக்கீங்க...///////
உங்களுக்கு மேட்டர் தெரியாதா..... அவரும் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறாராமே?
ரைட்டு , இதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி .......
////சி.பி.செந்தில்குமார் said...
ரைட்டு , இதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி ......./////
பண்ணி?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சி.பி.செந்தில்குமார் said...
ரைட்டு , இதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி ......./////
பண்ணி?/////அவரு ஒரு பதிவு தேத்திடப் போறாராமாம்!ஹி!ஹி!ஹீ!!!
கதை சூப்பர். படம் பிச்சிகிட்டு ஓடும்.
பன்னி, இதை அப்படியே ஆங்கிலத்துல எடுத்தா ஆஸ்காரை அள்ளிடலாம் அள்ளி.!
Post a Comment