Saturday, January 5, 2013

தமிழ்சினிமாவின் டாப் நடிகர்கள்-2012

2012-ம் ஆண்டுக்கான பலவிதமான தரவரிசைகளில் முக்கியமானது சினிமா நடிகர்களின் வரிசை. அந்த வகையில் தமிழ்சினிமாவின் டாப் நடிகர் யார் என்று என்னுடைய பார்வையில் (?) இப்போது பார்க்க போகிறோம். முதலில் பரிசீலனையில் இருப்பவர்களைப் பற்றி பார்த்துவிடுவோம். 



முகமூடி நடிகர்
இவர் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் தலைப்பைப் போலவே படத்திலும் இவர் முகமூடி போட்டிருந்ததால் ஆள் யார் என்றே தெரியவில்லை. இருப்பினும் அருமையான நடிப்பை வாரி வழங்கி இருப்பதால் இவரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டியிருக்கிறது. முகத்தை மூடி இருந்தாலும் சிக்ஸ் பேக் போன்ற கட்டுடல், கைகளோடு படத்தில் காட்டி இருப்பது பிரம்மாண்டம். சண்டைக்காட்சிகள் ரசனையின் உட்சகட்டம்.



மாற்றான் சூர்யா
2011-ல் 7-ம் அறிவு என்ற மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்சாணக் காவியத்தை கொடுத்த சூர்யா, மீண்டும் அதே போல் மாற்றான் என்ற அற்புதத்தை வழங்கி அனைவரையும் புல்லரிக்க செய்தார். ஒட்டிக் கொண்டு பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் ஜாலியாக தோளில் கையை போட்டுக் கொண்டே (?) நடித்து, காதல் செய்து, நடனம் ஆடி.. கண் கலங்க வைத்தார்.  படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் மட்டுமே இருந்தது ஒரு பெரிய குறை. இரண்டு ஹீரோயின்கள் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் விமலன், அகிலன் இருவரும் காதல் செய்து உலக சாதனை படைத்திருப்பார்கள் என்பது நிபுணர்களின் கருத்து. 




தாண்டவம் விக்ரம்
தொடர்ந்து டுமாங்கோலி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கொள்கை முடிவெடுத்து அதன்படி நடித்து வரும் நடிகர் விக்ரம், இந்த வருடமும் நம்மை ஏமாற்றவில்லை. தாண்டவம் என்ற உலகப்படத்தில் வயதான வேடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து எல்லோரையும் பரவசப்படுத்தினார். அவருடைய பழைய படங்களான சாமி, தூள் போன்ற படங்களை பார்த்தவர்கள் அனைவரும் தாண்டவம் பார்த்து சிலிர்த்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். விக்ரமின் டுமாங்கோலி சாதனையில் இது இன்னும் ஒரு மைல்கல்.



முரட்டுக்காளை சுந்தர் சீ
டாகுடர் கேப்டன் அவர்கள் தீவிர அரசியலில் குதித்தவுடன் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடத்தை யார் நிரப்புவார்களோ என்று கவலைப்பட்ட தமிழ் சினிமா ஆர்வலர்களின் காயத்திற்கு அருமருந்தாக வந்து அமர்ந்தவர் நமது சுந்தர் சீ. கேப்டனின் இடத்தை மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரின் இடைத்தையும் என்னால் நிரப்ப முடியும் என்று உலகுக்கே எடுத்துக்காட்டும் விதமாக முரட்டுக்காளை என்ற காவியத்தில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரது வசனங்கள், உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் அனைத்துமே வருங்கால தமிழ்சினிமாவை அவரது தோளில் குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிவைத்துவிடக் கூடிய தீவிரத்துடன் இருக்கின்றன. வெல்டன் சுந்தர் சீ. 





மேதை ராமராஜன்
2012-ன் தொடக்கத்தில் வெளியான மேதை படம் ராமராஜனுக்கு பெரும்புகழ் தேடித்தந்தது. பதிவர்கள், ட்வீட்டர்கள், ஃபேஸ்புக்காளர்கள் அனைவரும் மேதை படத்தை சந்தோசத்துடன் ஆரவாரமாக வரவேற்றனர். ஒரே குத்தில் 10 பேரை ராமராஜன் வீழ்த்திய மயிர்க்கூச்செரியும் காட்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது இளம் நடிகர்களான சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார், சொம்பு ஆகியோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மேதையில் நடித்து மாமேதையான ராமராஜன் 2012-ன் முக்கிய நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார்.


இத்தனை நடிகர்கள் முதலிடத்திற்கு போட்டா போட்டி (?) போட்டாலும், மிக எளிதாகவும் சுலபமாகவும் அதை தட்டிச் செல்பவர், 2012-ல் எந்தப் படத்திலும் நடிக்காமலே வருடம் முழுதும் அவரைப் பற்றியே அனைவரையும் பேச வைத்த பெருமை மிக்க நடிகரான.....
.
.
.

.

.


.



.




பவர்ஸ்டாரே.......!



பவர்ஸ்டாரின் எழில்மிகு தோற்றம்....!



வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!


நன்றி: கூகிள் இமேஜஸ்

22 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அய்யா வடை எனக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

மேதை ராமராஜன் ரசிகர் மன்றத்தின் சார்பாக பொன்னான பொன்னான பொன்னான...யோவ் முழுசா சொல்லுய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

சண்டைக்காட்சிகள் ரசனையின் உட்சகட்டம்.//

"உச்ச"கட்டமா? எங்கேயோ சுடுதே...

MANO நாஞ்சில் மனோ said...

படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் மட்டுமே இருந்தது ஒரு பெரிய குறை. இரண்டு ஹீரோயின்கள் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் விமலன், அகிலன் இருவரும் காதல் செய்து உலக சாதனை படைத்திருப்பார்கள்//

மொத்தத்துல கொல்லாம விடமாட்டாயிங்களோ...

MANO நாஞ்சில் மனோ said...

சண்டைக்காட்சிகள் அனைத்துமே வருங்கால தமிழ்சினிமாவை அவரது தோளில் குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிவைத்துவிடக் கூடிய தீவிரத்துடன் இருக்கின்றன. வெல்டன் சுந்தர் சீ. //

எனக்கு கண்ணுல தண்ணியா ஊத்துது அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

இத்தனை நடிகர்கள் முதலிடத்திற்கு போட்டா போட்டி (?) போட்டாலும், மிக எளிதாகவும் சுலபமாகவும் அதை தட்டிச் செல்பவர், 2012-ல் எந்தப் படத்திலும் நடிக்காமலே அவரைப் பற்றியே அனைவரையும் பேச வைத்த பெருமை மிக்க நடிகரான.....
.
.
.

.

.


.



.




பவர்ஸ்டாரே.......!//

தயவு செய்து இந்த உலகம் உடனே அழியக் கடவது.

”தளிர் சுரேஷ்” said...

சரியா சொன்னீங்க! பவர் ஸ்டார போல யாரால நடிக்க முடியும்?!! வாழ்த்துக்கள்!

அஞ்சா சிங்கம் said...

இதில் மேதையை தவிர வேறு எந்த படத்தையும் பார்க்காத துரதிஷ்ட சாலி நான் ......

காட்டான் said...

எப்பிடியோ நம்மாள் சிறந்த நடிகர் என்பதை நினைக்கும்போதே "புல்"லரிக்கின்றது.! அவ்வ்வ்

தனிமரம் said...

நிறைய படம் பார்க்கவில்லை என்றாலும் சூப்பர் இஸ்டார் பவர்ஸ்டார் என்பதில்:))) சூப்பர் கொண்டாட்டம்!:)))

காட்டான் said...

இதுவரை வந்த தரவரிசைப் பட்டியலில் இந்த பதிவுக்கே முதலிடம்..!
வாழ்த்துக்கள் ராம்சாமி..! :-)

Philosophy Prabhakaran said...

பன்னிக்குட்டி... நிறைய பேரை லிஸ்டில் மிஸ் பண்ணியிருக்கிங்க...

முத்தரசு said...

ஹாட்ரிக் பதிவு பன்னியாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Philosophy Prabhakaran said...

தவறவிட்ட முக்கிய புள்ளிகள் :

1. உடும்பன் திலீப் ரோஜர்
2. OKOK உதயநிதி ஸ்டாலின்
3. பொல்லாங்கு ரவி ராகுல்
4. அணில் பரத்
5. வாலிபன் சுற்றும் உலகம் MGR ஹரி
6. சக்ரவர்த்தி திருமகன் MGR சிவா
7. போடா போடி சிம்பு
8. அகிலன் Dr.சரவணன்
9. பாரசீக மன்னன் சுரேஷ்

Unknown said...

சூப்பர் பவர் ஸ்டார் வாழ்க

Manimaran said...

கவித்துவமான நடிப்பாலும்,கலை நயமிக்க நடனத்தாலும் ,துடிப்பான பைட்டினாலும் பவர் ஸ்டாருக்கு பக்கத்தில் இருக்கும் அகிலம் புகழ் சாம் ஆண்டர்சன்னுக்கு இந்த பட்டியலில் இடம் கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

பூந்தளிர் said...

ஐயயோ மறுபடியும் பவர்ஸ்டாரா????????????

பட்டிகாட்டான் Jey said...

டாப் நடிகர்களின் நடிப்புக்கேற்ற வகையில் தரம்பிரித்து வரிசைப்படுத்திய விதம் மிக அருமை. இதன் மூலம் தாங்கள் இந்த நடிகளின் நடிப்பை உன்னிப்பாக உற்றுபார்த்து வந்துள்ளீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தொடருங்கள் தொடர்கிறோம். நன்றி!.

உணவு உலகம் said...

//வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!//
நல்லா சொன்னீஙக! :)

Anonymous said...

'பாரசீக மன்னன்' சுரேஷை லிஸ்டில் சேர்க்காமல் ஓரவஞ்சனை செய்த உங்கள் கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனங்கள். 2012 சூப்பர் ஹீரோ சுரேஷ் மட்டுமே!!!!

செங்கோவி said...

ஓ..இது புதுப்பதிவா?...தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏற்கனவே படிச்சதுன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி!

Yoga.S. said...

வெல்டன்,ப.ரா!!!!!எங்களுக்காக இந்தப் பொக்கிஷத்தைத் தரப்படுத்திக் கொடுத்தமைக்கு என்றென்றும் கடப்பாடு உடையவர்களாய் இருப்போம்!பவர்ஸ்டார் வால்க!!!!