Wednesday, August 25, 2010

டாக்டரேட் பட்டங்கள்: குழப்பங்களைத் தவிர்க்க ஒரு சிம்பிள் ஐடியா!டாக்டர் பட்டம் கொடுப்பதை வைத்து எப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று பார்த்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையோடு யார் யாருக்கு எதிர்காலத்தில் டாக்டர் பட்டம் கிடைக்கப் போகிறது என்ற ஒரு லிஸ்ட்டை தயாரித்துள்ளோம். இதை வைத்து தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் செய்து கொண்டால் கடைசிநேரக் குழப்படிகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் 6 மாததிற்குள் தேர்தல் வரக்கூடிய நிலை இருப்பதால், தேர்தல் முடிவுகளையொட்டிய சாத்தியக்கூறுகளை வைத்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இனி யார் யாருக்கு டாக்டரேட் பட்டம் கிடைக்கப் போகிறது?

தேர்தலில் திமுக கூட்டணி வென்றால்:

1. அழகிரி
2. கனிமொழி
3. கலாநிதி மாறன்
4. தயாநிதி மாறன்
5. உதயதி
6. துரை தயாநிதி
7. அறிவுநிதி
8. வைரமுத்து
9. வாலி
10. இராம. நாராயணன்
11. எஸ். ஏ. சந்திரசேகர் (தனிகட்சி தொடங்கக்கூடாது என்ற உத்தரவாதத்துடன்)
12. விஜயகாந்த் (கூட்டணியில் இணைந்தால் அல்லது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தால்)
13. டி. விஜய ராஜேந்தர்
14. ராதிகா சரத்குமார்

தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால்

1. ஜெயலலிதா
2. சசிகலா
3. சசிகலாவின் அண்ணன் தம்பிகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்
4. சசிகலாவின் அக்கா தங்கைகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்


எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாக்டர் பட்டம் கிடைக்க வாய்ப்பே இல்லாதவர்கள்

1. வைகோ
2. மருத்துவர் அய்யா
3. நல்லமுத்து
4. தா. பாண்டியன்
5. திருமாவளவன்

பதிவர்களும் இந்த லிஸ்ட்டை பயன்படுத்தி சம்பந்தப் பட்டவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவித்து ஆச்சர்யம் அளிக்கலாம். அதைப் பயன்படுத்தி அப்படியே அவர்களைப் பழக்கம்பிடித்து வைத்துக்கொண்டால் பின்னால் பயனளிக்கும்!

பி.கு.: தங்களுக்கும் டாக்டர் பட்டம் வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் (Deemed University) ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனுடைய அதிபரை தகுந்த சிபாரிசோடும், சன்மானத்தோடும் சந்தித்தால், உங்களுக்கும் உண்டு பட்டம்!

எச்சரிக்கை: மத்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கலைக்கப் போவதாக கொள்கை முடிவு எடுத்து இப்போது நிலுவையில் உள்ளது. எனவே பட்டம் வேண்டுவோர் விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்!

24 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிக அருமையாக ஆராய்ச்சி செய்தமைக்காக அருமை அண்ணன் பன்னிக்குட்டியாருக்கு (முழு பெயர் சொல்வது வழக்கத்தில் இல்லீங்கோ!) அகில உலக தமிழ்ப் பதிவர் சங்கத்தால் டாக்டர் பட்டம் வழங்கப் படுகிறது. (இந்த சங்கம் இப்பதான் என் தலைமையில் உருவாகியிருக்கிறது, உறுப்பினர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்) நீங்க எந்த நாட்டின் சிடிசன் என்பதை அறிவிக்குமாறு உங்களை கேட்டுக் "கொல்"கிறேன்.

துளசி கோபால் said...

அம்மா ஏற்கெனவே டாக்குட்டர்தாங்க!
இன்னொண்ணு தரலாமா? டபுள் டாக்குட்டர்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மவனே உனக்கு டாக்டர் பட்டம் confirm . ஏதாச்சும் nursre ச பிக் அப் பண்ணிட்டியா தல? ரெண்டு நாளா டாக்டர் பத்தியே பேசிகினு இருக்கியே!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said... //

யோவ், மொதல்ல உங்க சங்கத்து ஆளுகளுக்கு பட்டம் கொடுங்கய்யா இல்லேன்னா பிச்சிக்கிட்டு போயிடப்போறானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//துளசி கோபால் said...
அம்மா ஏற்கெனவே டாக்குட்டர்தாங்க!
இன்னொண்ணு தரலாமா? டபுள் டாக்குட்டர்?//

வாங்க துளசி, அம்மாவுக்கு ஏது ரூல்ஸ், ரெண்டாவது பட்டத்துக்கு தனியா சட்டம் போட்டுட மாட்டாங்க? (சட்டப்படி ஒண்ணுக்கு மேல டாக்டர் பட்டம் வாங்கலாம் தப்பில்லை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மவனே உனக்கு டாக்டர் பட்டம் confirm . ஏதாச்சும் nursre ச பிக் அப் பண்ணிட்டியா தல? ரெண்டு நாளா டாக்டர் பத்தியே பேசிகினு இருக்கியே!!!//

யோவ் சிரிப்பு போலீசு, கம்பேனி மேட்டர்லாம் வெளியே சொல்லாதேய்யா (உனக்கும் ஏதாவது கம்பவுன்டர் பட்டம் ரெடி பண்றேன்ய்யா)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 4
//பெயர் சொல்ல விருப்பமில்லை said... //

யோவ், மொதல்ல உங்க சங்கத்து ஆளுகளுக்கு பட்டம் கொடுங்கய்யா இல்லேன்னா பிச்சிக்கிட்டு போயிடப்போறானுங்க!
//

எங்க சங்கத்துல இருக்கறதே டாக்டர் பட்டம் வாங்கினதுக்கு சமம்தான், மக்கா!

TERROR-PANDIYAN(VAS) said...

யோ!! மரியாதையா லிஸ்ட்ல என் பெயார் சேரு...இல்ல உன்ன பேர்க் ப்ரை பண்ணிடுவேன்...

பனங்காட்டு நரி said...

நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய் பன்னிகுட்டி ...,நாங்கள் (மங்குனி ,ஜெய் ,பட்டாபட்டி,TERROR பாண்டி) உனக்கு என்ன பாவம் செய்தோம் கொற்றவனே !!வயலுக்கு வந்த நீரை விழலுக்கு இரைத்தோமா சொல் பன்னி சொல் ???எங்களுக்கு ஏன் இந்த பட்டம் தரக்கூடாது

Jayadeva said...

எங்காச்சும் கோவில்ல பொங்கல் சுண்டல் தர்ராங்கன்னு சொன்னா, ஓடிபோய் வாங்கலாம், வாய்க்கு ருசியா இருக்கும் அப்போதைக்கு கொஞ்சம் பசியாறும், தெம்பா இருக்கும், அதில அந்த அளவுக்காவது ஒரு உபயோகம் இருக்கு. இந்த டாக்டர் பட்டத்தை வாங்கி வச்சிக்கிட்டு என்ன பண்ணுவாங்களோ தெரியல. அதில என்ன உபயோகமோ புரியல. கோவில்களில் அள்ளி விடப்படும் பிரசாதம் செய்ய வேண்டிய பொருட்கள் வாங்குவதற்காவது கொஞ்சம் காசு செலவாகும், ஆனா இந்த பல்கலைக் கழகங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு எந்த செலவுமே இல்ல, பத்து பைசா காகிதம் போதும். பசங்க வாங்குற பட்டத்தை பீச்சுலயாவது [அனுமதிச்சா!] விடலாம், ஆனா இந்த டாக்டர் பட்டம் வாங்குகிறவனுக்கு அது போண்டா மடிக்கத்தான் ஆகும், வேறெதற்கும் பிரயோஜனம் இல்ல, பேருக்குப் முன்னால டாக்டர்ன்னு போட்டுக்கலாம், ஆனா உண்மையான மனசாட்சி இருக்கிறவன் ஒரு கணம் நமக்கு அந்த தகுதி இருக்கான்னு யோசிப்பான், வெட்கி அவனே வேண்டாமுன்னு சொல்லிடுவான், ஆனா வெட்கம் மானம், சூடு சொரணை இதெல்லாம் கிலோ என்ன விலைன்னு கேட்கிறவங்க அதெல்லாம் பாக்காம வாங்கிக்குவாங்க. வெட்கக் கேடு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பாண்டி, நரி, உங்க ரெண்டு பேருக்கும் டாக்டர் பட்டத்துக்கு ஒரு இடத்துல சொல்லி வெச்சிருக்கேன்யா.. அத இதப் பண்ணி பேரக் கெடுக்காம, கொஞ்ச நாளு கையையும் காலையும் சும்மா வெச்ச்சிக்கிட்டு இருந்து பட்டத்த வாங்கிட்டு போங்கப்பா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பெயர் சொல்ல விருப்பமில்லை, உங்க சங்கத்துக்கு என்ன தலைவராக்குங்கய்யா, எல்லாத்துக்கும் ஆளுக்கொரு பட்டத்துக்கு ஏற்பாடு பண்ணித் தாரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ஜெயதேவா அண்ணே, பின்னூட்டம் போடச் சொன்னா பதிவே போட்டு பின்னிட்டீங்க!

Jey said...

பன்னி, நேத்துலேர்ந்து இங்க நெட் பிரச்சினை.

லிஸ்ட் குடுத்து உதவினதுக்கு உனக்கும் ஒரு டாக்டர் பட்டம் குடுக்கப் போறதா கேள்வி பட்டேன் உண்மையா???.

அப்புறம் லிஸ்ட்ல போட்ட ஒரு பேரு தப்பு, “நல்லமுத்து” இல்லை அது “ ”நல்லகண்ணு”.

ரெட்டைச்சுழி said...

தக்காளி நல்லா உறைக்கிராமாறி சொல்லிருக்கேலே..., இந்த நாதாரி நாத்தமெடித்த நாய்களுக்கு இந்த டாக்டர் பட்டம் ஒரு கேடா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி, நேத்துலேர்ந்து இங்க நெட் பிரச்சினை.

லிஸ்ட் குடுத்து உதவினதுக்கு உனக்கும் ஒரு டாக்டர் பட்டம் குடுக்கப் போறதா கேள்வி பட்டேன் உண்மையா???.

அப்புறம் லிஸ்ட்ல போட்ட ஒரு பேரு தப்பு, “நல்லமுத்து” இல்லை அது “ ”நல்லகண்ணு”.//

வாப்பு, நெட் இப்போ சரியாடிச்சா? கிடைக்கற பட்டத்தையும் கெடுத்துடுவே போலே? கம்முனு இருய்யா உனக்கும் ஏதாவது கம்பவுண்டர் பட்டம் ஏற்பாடு பண்ணலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது நல்லக்கண்ணு தான் ஜெய், தேங்க்ஸ்மா, கைய்யி ஸ்லிப் ஆயிடிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரெட்டைச்சுழி said...
தக்காளி நல்லா உறைக்கிராமாறி சொல்லிருக்கேலே..., இந்த நாதாரி நாத்தமெடித்த நாய்களுக்கு இந்த டாக்டர் பட்டம் ஒரு கேடா????//

வாய்யா ரெட்ட! இந்த நாதாரிங்க நடுமண்டைல நச்சுன்னு அடிச்சாலும் திருந்தமாட்டானுங்கப்பா!

ரெட்டைச்சுழி said...

ஆமா...கலிஞ்சரு வீட்டு குஞ்சு குளுவான் பேரெல்லா விட்ருக்கே..., மனசுல என்னயா நினைச்சிட்டு இருக்கே... கத்திரிக்கா ஒலுங்க அவனுக பேரெல்லாம் என்னானு தெரிஞ்சிகிட்டு எழுதுரே...இல்லனா..என்னை அப்படெயே வறுத்து உப்புக்கண்டம் போட்டு வித்து காசாக்கிருவென்... சொல்லிட்டேன்...

Anonymous said...

ஏதேது போற போக்கப் பாத்தா நமக்கெல்லாம் பேசண்ட் பட்டம் குடுத்துடுவாங்க போல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரெட்டைச்சுழி said...
ஆமா...கலிஞ்சரு வீட்டு குஞ்சு குளுவான் பேரெல்லா விட்ருக்கே..., மனசுல என்னயா நினைச்சிட்டு இருக்கே... கத்திரிக்கா ஒலுங்க அவனுக பேரெல்லாம் என்னானு தெரிஞ்சிகிட்டு எழுதுரே...இல்லனா..என்னை அப்படெயே வறுத்து உப்புக்கண்டம் போட்டு வித்து காசாக்கிருவென்... சொல்லிட்டேன்...//

யோவ் கோச்சுக்காதைய்யா, இந்த லிஸ்ட்டு 2011க்கு மட்டும்தான்யா, கொள்ளுப்பேரன்கள்லாம் வரிசையா அதுக்கப்புறம் வந்து வாங்குவானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
ஏதேது போற போக்கப் பாத்தா நமக்கெல்லாம் பேசண்ட் பட்டம் குடுத்துடுவாங்க போல..//

அப்போ இன்னும் நீங்க வாங்கிக்கலைய்யா? எங்களூக்கெல்லாம் எப்பவோ குடுத்துட்டானுங்க!

மங்குனி அமைசர் said...

ரொம்ப சாரி பன்னி , ஆபீசுல ஆணி ஜாஸ்த்தி , அதுதான் பிளாக் பக்கம் அதிகமா வரமுடியல, அடுத்த வாரம் பிரியாயிடுவேன்னு நினைக்கிறேன் அப்புறம் வந்து கும்மியடிக்கிறேன்

ப.செல்வக்குமார் said...

அட பாவமே .. இப்படியெல்லாமா பட்டம் தறாங்க ..
நமக்கு பட்டமே வேண்டாம்க. சரி சரி அப்படியே நம்ம வீட்டுக்கும் வாங்க ..