அரசு அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியவை. திமுக அரசின் அட்டூழியங்கள் முந்தைய அதிமுக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என்று கூறும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக மோசமாக உள்ளது என்பதற்காக திமுக ஆட்சியின் அராஜகங்களை நியாயப்படுத்த முடியாது.
இந்த அரசு சில நல்ல திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறது என்பதாலோ, வேறு சரியான மாற்று சக்திகள் இல்லை என்பதாலோ, அவர்கள் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா?
நியாயத்திற்குக் குரல் கொடுப்போம். இது நம் ஜனநாயகக் கடமை.
தமிழகத்தின் தலைவிதி இரு பெரும் குடும்பங்கள் கையில் (மன்னார்குடி குடும்பத்தார்களாலும், கலைஞர் குடும்பத்தினர்களாலும்) சீரழிந்து வருவது ஜனநாயக சக்திகளால் தடுக்கப்பட வேண்டும்.
உங்கள் கண்டங்களையும் ஒரு பதிவாக இட்டு நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள். கீழ்கண்ட பதிவுகளுக்கும் சென்று உங்கள் கண்டங்களைப் பதிவு செய்யுங்கள்.
1. Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu: (தருமி ஐயா)
2. http://umashankarias.wordpress.com/
3. Campaign to save democracy and Justice for Umashankar IAS
4. உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்: வால்பையன்
5. உமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன்? அரசு விளக்கம் - ஏற்றுக்கொள்ள முடியாது: ப்ரியமுடன் வசந்த்
6. உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...: பட்டாபட்டி
7. உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்: மங்குனி அமைச்சர்
8. உமாசங்கர் -விண்ணப்பம் + கண்டனம் - பட்டிக்காட்டான் (பட்டணத்தில்)
21 comments:
முதல் வெட்டு... உமாசங்கருக்கு ஆதரவா...
நன்றி ஜெய், நம் குரல் கேட்கப்பட வேண்டிய இடத்தை அடையட்டும்!
நானும்தான் :-)
நானும் தான்..
யார் எப்படி இருந்தாலும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன்,லஞ்சம், ஊழலை எதிர்த்து களத்தில் இறங்கி போராடாவிட்டாலும், லஞ்சம், ஊழலுக்கு துணை நிற்க மாட்டேன்.
மோகன்
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.
அரசுக்கு என்னுடைய கண்டனம்
பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....
அரசுக்கு எனது கண்டனங்களும்..
அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.
ராம்சாமி, இப்படிப்பட்ட நல்ல காரியத்துக்காகத்தான் எல்லாரும் ஒன்னு சேர்றாங்க.
அரசுக்கு என்னுடைய கண்டனம்
ஆதரவு தெரிவித்து பதிவிட்ட, பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
Bravo.....
என்ன தான் அலும்பு பண்ணிக்கிட்டு அட்ராசிட்டி செஞ்சிகிட்டு இருந்தாலும், ஒற்றுமைன்னு வரும்போது நமது பலம் நம்மையே பிரமிக்க வைக்கிறது..
கண்டிப்பாக உமாசங்கர் அவர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று நம்புவோம்..
என்னுடைய பதிவிலும் தெரிவித்து விட்டேன்..
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன் பாஸ்...
ரொம்ப நல்ல மனுஷன் அதான் இப்படி நடக்குது,அவரை எனக்கு பெர்சன்னல்லா நன்றாக தெரியும்.அவருக்கு இது போல் நடப்பதை பார்த்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை
இன்னும் ஊரில் தான் இருக்கியா
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்
நேர்மையான அதிகாரிகளைக் கண்டால் எங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது. பின் எப்படி எங்களது குடும்ப வாரிசுகள் அனைவரையும் உலகின் நெ.1 பணக்காரர்களாக ஆக்குவது. அதனால் தான் இந்த நடவடிக்கை. வரும் தேர்தலிலும் ஓட்டுக்போட்டால் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து நேர்மையான அதிகாரிகளை முலையிலேயே கிள்ளியெரிவோம் என்பதனை வரும் தேர்தலுக்கு ஒரு உறுதிமொழியாக இப்பொழுதே வருகிறோம். கண்டிப்பாக எங்களுக்கே வாக்களியுங்கள்.
Post a Comment