Tuesday, June 3, 2014

நேர்ந்து விடப்பட்ட சிலர்.....

பலவருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு பிகர் இல்லையே என்று என்னிடம் வந்து மிகவும் வருத்தப்பட்டார். அது ஏன் அவர் என்னிடம் வந்து இப்படி வருத்தப்பட்டார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரை சேலம் வைத்தியரிடம் கூட்டிச் சென்று அங்கே கூடும் கூட்டத்தை காண்பித்து, பிகர் இருந்தும் அவதிப்படுபவர்கள் நிலையை உணர்த்தினேன். அந்த ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று அவர் உலகின் மிகப்பெரிய சித்த வைத்திய நிபுணராகி பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த சம்பவத்தை பற்றி நெடுநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். பல அறிஞர்களுடன் அதை பற்றி விவாதித்திருக்கிறேன்.  மனித இனம் தழைத்தோங்க வேண்டும் பண்பாட்டு நுண்ணறிவு வளரவேண்டும் என்ற அறிவுத்திறன் கொண்டவர்கள் அந்த வைத்தியர்கள்தான். அவர்கள்தான் இன்று நாம் காணும் இந்த வளர்ச்சியை, எழுச்சியை உருவாக்கியவர்கள். மீதிப்பேர் லேகியம் என்ற பெயரில் மைதா மாவை விற்பவர்கள். வைத்திய தொழிலின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர எந்த ஒரு பொறுப்பையும் அவர்கள் அளிக்கவில்லை.

25 வருடங்களுக்கு முன் ஒரு நாள் பறங்கிமலைஜோதி தியேட்டரில் இருந்துவெளியே வரும் போது அங்கே அடுத்த காட்சிக்காக நின்றிருந்த பெரும் கூட்டத்தைப் பார்த்து மன அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் யாருக்குமே இந்தப்படத்தின் எந்த இடத்தில் நல்ல பிட்டு வரும் என்று தெரியாது. அவர்கள் யாரும் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பவர்கள் அல்ல. அவர்கள் கிடைக்கப் போவது பழைய லோக்கல் பிட்டே. அதை எண்ணியது பெரும் துக்கம் வந்து என் நெஞ்சை அடைத்தது. கண்களில் தானாக கண்ணீர் வந்துவிட்டது. 
மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரி கிடையாது. சிலருக்கு பலான புத்தகமே பிடிக்கிறது. சிலருக்கு அந்த வகைஎழுத்துக்களே வருகிறது. அவர்களின் நுண்ணுணர்வு அத்தகையது. இந்த வகை இலக்கியத்தை எழுதும் தகுதியும் பொறுப்பும் அவர்களுக்கே உண்டு. அவர்கள்  இந்த தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும். அதுதான் இயற்கை அவர்களுக்கு அளித்த நியதி. இத்தனை தியாகங்களோடு இவர்கள் எழுதும் புத்தகங்களை பாமரர்களும் படித்து சுவைத்து இன்புற்று மகிழ்வார்கள், ஆனால் இறுதிவரை எழுதியவர் யார் என்றே தெரியாமல் வாழ்வார்கள். அதுதான் மரபு.

ஆகவேதான் எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க தோன்றுவதே இல்லை. ஏன் பலான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்ட போது என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என திரும்ப கேட்டார். குரூரமான கேள்வி என்று இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் அவர் வெட்டியாகத்தான் இருந்தார்.  

ஆம் இந்த புத்தகங்களை எல்லாம் படிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் கோடான கோடி  வாய்ப்புகள் இருக்கும் போது இதை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இலவசமாக இணைய தொடர்பு பெற்றவர், இப்புத்தகங்களை படிப்பது பெரிய அறியாமை. இயற்கை அவருக்களித்த வாய்ப்பை தட்டிக்கழிக்கும் மென் அவமதிப்பு. கையில் முறுக்கை வைத்துக் கொண்டு காராச்சேவை பொறுக்க முயலும் குழந்தைகளின் நிலை அது. இதெல்லாம் ஒரு மாபெரும் வாய்ப்புதான், ஆனால் அதை தவறவிடும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.  


நன்றி: ஃபேஸ்புக்,கூகில் இமேஜஸ்!

18 comments:

ilyas aboobacker said...

இந்த வண்டி ஏன் எனக்கு முன்னாடி ரிவேர்ஸ்ல போகுது

பெம்மு குட்டி said...

2014 ல முத போஸ்ட் ... தர நீயிர் பிளாக் க்கு திரும்பி வா தல .... இந்த பேஸ்புக்கில் மொக்கை போடுறதெல்லாம் நல்லா இல்ல தல .... உனக்கு பிளாக்கு. தான் கரெக்டு தல .... :):)

மொ.ராசு (Real Santhanam Fanz ) said...

ஒன்னுக்கு மூணு வாட்டி மேல இருந்து கீழ வந்துட்டேன்.. ஒன்னும் பிரிய மாட்டேங்குது!

மொ.ராசு (Real Santhanam Fanz ) said...

///2014 ல முத போஸ்ட் ... தர நீயிர் பிளாக் க்கு திரும்பி வா தல .... இந்த பேஸ்புக்கில் மொக்கை போடுறதெல்லாம் நல்லா இல்ல தல .... உனக்கு பிளாக்கு. தான் கரெக்டு தல .... :):)////

ரீப்பீட்டு................

முத்தரசு said...

பன்னியாரின் எலக்கியமே எலக்கியம் அட அட. ...என்னா நட...

இவண்
பன்னி பாறைகள்

TERROR-PANDIYAN(VAS) said...

//2014 ல முத போஸ்ட் ... தர நீயிர் பிளாக் க்கு திரும்பி வா தல .... இந்த பேஸ்புக்கில் மொக்கை போடுறதெல்லாம் நல்லா இல்ல தல .... உனக்கு பிளாக்கு. தான் கரெக்டு தல .... :):) //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் பண்ணிட்டாங்கையா.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//அது ஏன் அவர் என்னிடம் வந்து இப்படி வருத்தப்பட்டார் என்று தெரியவில்லை. //

இங்க இத்தனை பேரு இருக்க அப்போ அது ஏண்டா என்னை பார்த்து அந்த கேள்வி கேட்ட..

இப்படிக்கு
பன்னிகுட்டி

செங்கோவி said...

பன்னிக்குட்டி பழைய பன்னீர்செல்வமா மாறி வந்துட்டார்...செம!

வானரம் . said...

பன்னியாரோட பதிவுக்கு எங்கே கமெண்ட் போட முடியாதோ என்று தவித்து கொண்டிருக்கும்
வேளையில் அருமருந்தாய் வந்தது இந்த அருமையான பதிவு .
பதிவுலகம் பல பதிவுகளை கண்ட போதிலும் இந்த மாதிரி பலான பதிவை ஒரு போதும் கண்டதில்லை.
இத்தகைய பதிவை போடுவதற்கு சித்த வைத்தியர் கொடுத்த லேகியம் தான் காரணமா ? இல்லை லேகியம்
வித்த சித்த வைத்தியர் தான் காரணமா ?
விளக்கினால் நன்றாக இருக்கும் .

Subramaniam Yogarasa said...

வணக்கம்,வணக்கம் ப.ரா சார்!நலமா?வாங்க,வாங்க! அருமை!அருமை!!அருமை!!!/////ஒருவரை வைத்தியராக்கி,இப்படி எங்களைப் பைத்தியமாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே?ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

ஆஹா வாங்க வாங்க எஜமான் சார் பறங்கிமலைஜோதி இப்பவும் பார்ட்டியாமே!ஒரு டவுட் !ஹீ

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா சொல்ல வாரீரு ? புரியுது புரியுது ஆனா பிரியல...

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்னுக்கு மூணு வாட்டி மேல இருந்து கீழ வந்துட்டேன்.. ஒன்னும் பிரிய மாட்டேங்குது!//

மூணு தடவையா ஆஆஆஆஆ,,,,? யோவ் இதெல்லாம் நல்லாயில்ல ஆமா ?

Madhavan Srinivasagopalan said...

// நேர்ந்து விடப்பட்ட சிலர்.... //
ரீப்பீட்டு................

# Present Miss

mathi sutha said...

பாலாண்ணா புத்தகமா?
கார்டுனிஸ்ட் பாலாவா?
இயக்குனர் பாலாவா?
அவ்... அவ்... புரியல அண்ணே

Srikanth Vallipuram said...

one of the best pieces of writing I read.. really great comedy..

Srikanth Vallipuram said...

really one of the great pieces of writing... ONLY a few people can understand the magnitude of the comedy inside this writing.. I am happy that I am one of those few...

Keep going.. I am one of your die hard fan...

Srikanth Vallipuram said...

one of the best pieces of writing I read.. really great comedy..