டாகுடர் தலைவா ரிலீஸ் ஆகிவிட்ட களிப்பில் நல்லா சாப்புட்டு மப்பும் மந்தாரமுமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். அப்போ உள்ளே டைரக்டர் விஜய் வர்ரார்.
டைரக்டர் விஜய்: அண்ணே... அண்ணே...
டாகுடர்: வாங்கண்ணா... வணக்கங்கண்ணா எப்படிங்ணா இருக்கீங்க.. ?
டைரக்டர்: வணக்கம்ணே....உங்க புண்ணியத்துல நல்லாருக்கேண்ணே...
டாகுடர்: அப்புறங்ணா....?
டைரக்டர்: உங்களை வெச்சி இன்னொரு படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டு வந்திருக்கேண்ணே...
டாகுடர்: என்னாது உங்கூட இன்னொரு படமா? சரி விடுங்ணா, நாமல்லாம் என்ன தெய்வத்திருமகன் மாதிரி படத்துலயா நடிக்க முடியும்? என் பேர வெச்சிருந்தப்பவே நெனச்சேன் நீங்களும் டுபாக்கூராத்தான் இருப்பீங்கன்னு.... சரி கதைய சொல்லுங்ணா.......
டைரக்டர்: ஒப்பனிங் சீன், அது ஒரு வில்லேஜ், திருவிழா நடந்திட்டு இருக்கு, எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....
டாகுடர்: ஸ்டாப் ஸ்டாப், ஸ்டாப், இதெல்லாம் நானும் எங்க நைனாவும் பாத்துக்கிறோம், மொதல்ல நீங்க க்ளைமேக்ஸ் பைட் பத்தி சொல்லுங்ணா.....
டைரக்டர்: அது செம சீனுங்கண்ணா, உங்களுக்காகவே ஒரு மாசம் உக்காந்து யோசிச்சது...
டாகுடர்: அட சொல்லுங்ணா..........
டைரக்டர்: ஒரு பெரிய பில்டிங்க், 20-25 மாடி ரேஞ்சில புடிக்கிறோம். நீங்க வில்லனுங்க எல்லாரையும் அடிச்சி துவைச்சி தூக்கு கொண்டு போய் அந்த பில்டிங்கோட லிப்ட் முன்னாடி போடுறீங்க, எல்லாருக்கும் திக்கு திக்குங்குது, என்ன பண்ண போறீங்கன்னு...
டாகுடர்: செமையா இருக்கே..... அடிச்சு தூக்கி போட்டுட்டு அடுத்து என்னங்ணா பண்றேன்...
டைரக்டர்: அங்கதாண்ணே பெரிய டிவிஸ்ட்டே வெச்சிருக்கேன், ஹாலிவுட்டே அசந்திடுவானுங்கண்ணே.... இந்த சீனுக்காக நாம ஹாலிவுட் போய் எடுக்க வேண்டி இருக்கும்ணே, பெரிய ப்ரொடியூசரா போடுங்கண்ணே......
டாகுடர்: அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், நீங்க மேட்டருக்கு வாங்ணா....
டைரக்டர்: ஒவ்வொருத்தனா அடிச்சி, முடிச்சி கடைசில மெயின் வில்லனையும் அடிச்சு கொண்டு வந்து போடுறீங்க. லிப்ட் கதவை ஓப்பன் பண்ணி, எல்லாரையும் உள்ள தூக்கி போடுறீங்க, போட்டுட்டு உள்ள போய் டாப் ப்ளோர் பட்டனை அமுக்கிட்டு வெளில வந்துடுறீங்க....
டாகுடர்: ஆஹா........ சூப்பர்........ அப்புறம்.......
டைரக்டர்: லிப்ட் மேல போக முன்னாடி செம ஸ்பீடா படிக்கட்டுல ஏறி மொட்டமாடிக்கு போயி....
டாகுடர்: போயி........
டைரக்டர்: லிப்டுக்கு நேர மேல இருக்க கூரையை உடைச்சி எடுத்துடுறீங்க, கீழ இருந்து செம ஸ்பீடா வர்ர லிப்ட் அப்படீயே மேல ராக்கெட் மாதிரி பறக்குது... 100 அடி ஹைட் போயி வெடிச்சி சிதறுது..... பின்னாடி தீப்பிழம்பு தெறிக்க ஸ்லோ மோசன்ல நீங்க உங்க வழக்கமான ஸ்டைல்ல கேமராவ பாத்து நடந்து வர்ரீங்க.. அப்படியே ப்றீஸ் பண்ணி படத்தை முடிக்கிறோம்... அந்த இடத்துல ஏதாவது நச்சின்னு கேப்சன் ஒண்ணு புடிச்சு போட்டுடலாம்.....
டாகுடர்: வாவ் செம சூப்பருங்ணா............ உடனே பூஜைய ஆரம்பிங்ணா...... விஸ்வரூபம்-2 கூட சேர்த்தே ரிலீஸ் பண்ணி கலக்குவோம்....
எஸ்.ஏ.சி: ஆங் டைரக்டர் தம்பி.. எல்லாம் நல்லாருக்கு பட் ஒரு விஷயம்.....
டைரக்டர்: சொல்லுங்கண்ணே.....
எஸ்.ஏ.சி: பட டைட்டில்ல மாநிற அண்ணா, மற்றும் மாநிற எம்ஜிஆர் வழங்கும்னு போடனும், ஓக்கேவா....?
டைரக்டர்: போயாங்க்........................ இதுக்கு நான் எங்கூரு பக்கமா போயி புண்ணாக்கு வித்து பொழச்சிக்குவேன், ஆளை விடுங்கடா சாமி..........
நன்றி: கூகிள் இமேஜஸ்!
13 comments:
appuram?
கதை சூப்பருகன்னா, தலைவா மாதிரி வெடிகுண்டு புரளி கெளப்பிட்டா மொதலுக்கு மோசம் ஆகாது.
சூப்பர் கதைங்ண்ணா.'நாலு பேருக்கு நன்றி,அந்த நாலு பேருக்கு நன்றி' ங்கிறாப்புல ஒரு சாங் கூட சேத்துக்கலாம்!
super....Storyinganaa.
Neengale Pesama Director Agita Supera erukkum...
பன்னி..
நீனும் வழக்கம்போல மொக்கையா எழுத ஆரம்பிச்சுட்ட...
எதுக்கும், எழுதரபோது டார்டாய்ஸ் கொழுத்திவச்சிட்டு எழுது!
#நன்னி
எஸ்.ஏ.சி: பட டைட்டில்ல மாநிற அண்ணா, மற்றும் மாநிற எம்ஜிஆர் வழங்கும்னு போடனும், ஓக்கேவா....?//
கல்லெடுத்து எரிங்கலெய் இவனை ராஸ்கல்....
உங்க ஸ்கிரிப்ட் நல்லாயிருக்குங்க...
விஜய் இனி எஸ்.ஏ.சி. சொல்லைக் கேட்டால் பனால்தான்...
மாநிற எம்.ஜி.ஆரா?.......மறுபடியுமா?...கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
இந்த சீன் வேற எந்தப்படத்திலும் வந்த மாதிரி தெரியலையே... அப்புறம் எப்படி இந்த டைரக்டர் இத பிடிச்சார்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...
ரொம்ப நன்றி தனபாலன் சார்!
Once Again :
வாங்க... சகோதரி கூப்பிடுகிறாங்க...
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : கொஞ்சம் தூசி தட்டுங்க!!
Post a Comment