Monday, July 22, 2013

தலைவா.... எனது பார்வையில்...!




எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்

ஓப்பனிங் சீன். சந்தானம், மனோபாலா மற்றும் பிற அல்லக்கைகள் எல்லாரும் எதற்கோ காத்திருகிறார்கள். அங்கே ஒரு புதியவர் வந்து பார்த்து எல்லாரும் காத்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார். ஏன் இப்படி காத்திருக்கீங்க ஏன்று திட்டுகிறார். அதற்கு சந்தானம் படத்துக்கு படம் பலவருசமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு தெரியாதா. ஏன்யா சினிமா எதுவும் பாத்தது இல்லையா...? ஸ்ட்ரெயிட்டா சென்ட்ரல் ஜெயில்ல இருந்து வர்ரியான்னு எகிற,  மனோபாலா எல்லாத்தையும் மூடிட்டு உக்காந்து வேடிக்கை பாரு தெரியும்னு சொல்ல, எல்லாருக்கும் பல்ஸ் பதறுது. தங்கச்சி கேரக்டர்ஸ் ரெண்டு பேரு எங்கண்ணன் இப்ப வந்துடும், இப்ப வந்துடும்னு சொல்லி சொல்லி தாய்க்குலங்களை தவியா தவிக்க வெக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம், நாலஞ்சு பேர் தலைவா வந்துட்டார் தலைவா வந்துட்டார்னு கத்திக்கிட்டே தலைதெறிக்க ஓடிவாராங்க. அந்த இடம் முழுதும் ஒரே பதட்டமும்  பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.




அப்போ க்ளோசப்ல ஒரு வலது பக்க ஷூவ மட்டும் (காலோடுதான்யா) காட்டுறாங்க. அதுல நாலாபக்கமும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. இடது பக்க ஷூவையும் காட்டுறாங்க அதுலயும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேமராவ மேல தூக்குறாங்க. டாகுடர் எதுக்குன்னே தெரியாம ஆக்ரோஷத்தோட வர்ராரு. முகத்துல இருந்தும் நெருப்பு பொறி அங்கங்க தெரிச்சு விழுது. பக்கத்துல வந்ததும் முகம் டக்குன்னு சாந்த்தமா மாறுது, உடனே க்ளோசப்ல காட்டுறாங்க. அப்படியே கைய மேல தூக்கி வணக்கம் வைக்கிறார் பாருங்க, சான்சே இல்ல, பட்டாசு கிளப்பும் சீன். பின்னால தலிவா... ச்சே தலைவா தலைவான்னு கோசம் வேற விண்ணை முட்டுது. பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது. இதுவரை எந்த படத்துலயும் வந்திராத ஓப்பனிங்  சீன்ன்னு கண்ணு, வாயி, மூக்குன்னு எல்லாத்தையும் மூடிட்டு சொல்லலாம். இப்படி ஒரு வழியா ஓப்பனிங் சீன்  முடிஞ்சு ஓப்பனிங் சாங் ஆரம்பிக்குது. சாங்னா சாங் அப்படி ஒரு சாங். விஜய் யார், என்ன செய்றாரு, என்ன செய்ய போறாரு, எப்படி செய்ய போறாரு, அவருடைய திறமை, புகழ், பெருமைன்னு எதையும் விட்டு வைக்காம நம்மளை திக்குமுக்காட வெக்கிறாங்க, ஒரே பாட்டுல இவ்ளோ விஷயத்தையும் எப்படி கொண்டுவந்தாங்கன்னு திகைப்பா இருக்கு. ஒண்டர்புல் ஜாப்.




குட்டிசுவத்து மேல டாக்டர் விஜய் தன் நண்பர்களோட உக்காந்து ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்கார். அப்போ சைடு வில்லன் & கோ குவாலிஸ், ஸ்கார்ப்பியோ சகிதமா கத்திக்கிட்டே தாறூமாறா வர்ராங்க. கைல அருவாள வேற வெச்சி சுத்திக்கிட்டே இருக்கானுங்க (அப்பதானே அவங்க அருவா வெச்சிருக்கறது நமக்கு தெரியும்?) நம்ம ஹீரோ & கோ அதை கண்டுக்காம அலட்சியமா அரட்டைல பிசியா இருக்காங்க. வில்லன் குரூப்ல இருந்து ஒரு வண்டி அவங்க பக்கத்துல நிக்குது, அதுல இருந்து கரடுமுரடா ஒருத்தன் இறங்கி நேரா இவங்கள நோக்கி வந்து பக்கத்துல வந்த உடனே விலகி  அருகிலேயே ஒண்ணுக்குப் போறான். அவன் இறங்கி வர்ரதும், ஒதுங்கி ஒண்ணுக்குப் போறதும் பரபரப்பின் உலகத்தரம். அதைப் பார்த்து நமக்கே கோவம் கோவமா வருது.

ஆனா டாக்டர் விஜய், அதையும் கண்டுக்காம அலட்சியமா ஒரு லுக் விட்டுட்டு அரட்டையை கண்டினியூ பண்ணுவது செம கெத்து சீன். அந்த கரடுமுரடு பார்ட்டி ஒண்ணுக்கடிக்கும் போது வேணும்னே ஹீரோ கோஷ்டியோட அல்லக்கை கால் மேல தெரிக்கிற மாதிரி அடிக்கிறான். அதை பார்த்ததும் விஜய் அவன் சட்டைய புடிச்சு இழுத்து ஏண்டா இப்படி பண்றே என்று கேக்கிறார். அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான். அதைக் கேட்டதும் விஜய் சூறாவளியா கெளம்பி வேட்டையாடுறாரு பாருங்க, சான்சே இல்ல. தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சண்டைய பாத்து எத்தன வருசமாச்சுய்யா. 

சண்டை போட்டு முடிஞ்சதும்தான் தெரியுது அந்த வில்லன் & கோ ஏதோ வில்லங்கமான வேலைக்காகத்தான் போய்ட்டு இருக்காங்கன்னு. அவங்களோட எல்லா கார்களையும்  நிறுத்தி பரபரன்னு செக் பண்றார். நமக்கும் திக் திக்னு இருக்கு. அதுல ஒரு கார்ல அமலா பால் கட்டி வைக்கப்பட்டிருக்கார். விஜய் உடனே அவரை விடுவிக்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறாங்க. உடனே நம்ம டாக்டர் வழக்கம் போல ஸ்டைலா வாய்க்குள்ள கோலிக்குண்டை குதப்புறார். அப்படியே செமத்தியா ஒரு டூயட் சாங்க். செம பீல் குட் எபக்ட்.




பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது. வில்லன் கும்பல்ல எல்லாரும், அடிக்கடி தேவையில்லாம அழுகுறாங்க. அதை நோட் பண்ணி, அவங்க கடத்துறது சாம்பார் வெங்காயம்தான்னு கண்டுபிடிப்பது சபாஷ் போட வைக்கிறது. அந்த வில்லன் கும்பல் சென்னைல இருந்துதான் சாம்பார் வெங்காயத்தை கடத்திட்டு வர்ராங்கன்னும் கண்டுபுடிக்கிறார். நண்பர்கள்லாம் இது ரொம்ப பெரிய இடம் வேணாம்னு சொல்லும் போது பதிலுக்கு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இனி பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன்  சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும், அதை டாக்டர் விஜய் அந்த விஞ்ஞானிகள் மூலமாகவே தடுப்பதும் செம ஹைடெக். இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப எல்லாமே பேஸ்புக்கிலேயே நடப்பதாக காட்டி இருப்பது மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

சென்னைல உள்ள அவங்க நெட் ஒர்க்கை கண்டுபுடிச்சி மெயின் வில்லனை அழித்து ஒழிக்கறதுக்காக சென்னை கிளம்புறார். அவர் சென்னை செல்லும் அந்த பாட்டு சீன்கள் ஜோரா வந்திருக்கு. அமலா பாலும் சென்னைக்கு வருவது, அவரை வில்லன்கள் கடத்த முயற்சிப்பது எல்லாம் கிளாஸ்.  சென்னைல அவர் ஒவ்வொரு தாதாவா தனித்தனியா ஸ்கெட்ச் போட்டு, பஞ்ச் டயலாக் பேசி(யே)  போட்டுத்தள்ளும் சீன்கள் ஏ ஒன் ரகம். செம விருவிருப்பு. கடைசில அவர் மெயின் வில்லனை நேருக்கு நேரா சந்திச்சு கேள்விகள் கேக்குறது செம பஞ்ச். அவற்றை உலகில் உள்ள தாதாக்கள் அனைவரையும் கேக்க வைத்தால் அவர்கள் அனைவரும் அந்த நிமிடமே திருந்திவிடுவார்கள்.  அவ்வளவு கருத்துக்களும், தத்துவங்களும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.  சமூக ஆர்வலர்கள் முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் தலைவா பட்டாசு கிளப்புகிறான்.

நன்றி: கூகிள் இமேஜஸ்!

26 comments:

நாய் நக்ஸ் said...

Hai....panni....
Nan maalai...
Vanthu...
Punch.....

Pesuren.....

நாய் நக்ஸ் said...

Immputtu.....
New....story-yaa.....
Irukku......

New story....
Vijiy-kku....
Set....
Aakaathey......!!!!!!

Tirupurvalu said...

PANNI KUTTI AMMA SENTIMATE SCENES ELLAIYA,THAKACHI SENTIMATE SCHENES ELLAIYA ,FRIEND SENTIMATE SCENE ELLAIYA ,NAADAI KAPATHARA SCENELA PALLAI KADICHUKIDU PESARA GOLDEN WORDS ELLAIYA

MANO நாஞ்சில் மனோ said...

மனோ நீ ஓடிரு மக்கா.....பேசாம நான் தீ மிதிக்கவே போயிருதேன், திருவிழா கொண்ட்டாட்ட நாள்களிதான் இவனுகளுக்கு பேதியே எடுக்கும் போல....

நல்ல நல்ல நாட்கள்ல ஊருல இருக்கவிடாம பலபேரை காட்டுக்குள்ளே தூரத்துறாங்க.

MANO நாஞ்சில் மனோ said...

படத்தின் விமர்சனம் அருமை படத்தை கண்டு [[ஓட]] மகிழ ஆசை அவ்வ்வ்வ்....

அஞ்சா சிங்கம் said...

அமலாபால்க்கு விஜய் மேல் காதல் வரும் காரணத்தை கொஞ்சம் விளக்கி இருந்தால் நாங்களும் விளங்கி இருப்போம் .......

செங்கோவி said...

டாகுடர்னாலே பன்னியாருக்கு தனி குஷி தான்..அடிச்சு விளையாடுவாரு!

செங்கோவி said...

விஜய்க்கு ஏன் அமலாபாலை பிடித்தது என்று விளக்கவும். கூடவே அதற்கு நாகர்ஜூனாவின் ரியாக்சன் என்ன என்றும் சொல்லவும்.

செங்கோவி said...

//வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன் சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும்,//

ரொம்ப காஸ்ட்லியான சரக்கா இருக்குமோ?

செங்கோவி said...

//அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான்.//

ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உட்கார்ந்தா ரொம்ப வலிக்காது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
Hai....panni....
Nan maalai...
Vanthu...
Punch.....

Pesuren.....//////

ஏன் உங்கூர்ல ஈவ்னிங்தான் டாஸ்மாக் திறப்பாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
Immputtu.....
New....story-yaa.....
Irukku......

New story....
Vijiy-kku....
Set....
Aakaathey......!!!!!!/////

ஹீரோ பேரும் விஜய், டைரக்டர் பேரும் விஜய், அதான் அப்படி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Tirupurvalu said...
PANNI KUTTI AMMA SENTIMATE SCENES ELLAIYA,THAKACHI SENTIMATE SCHENES ELLAIYA ,FRIEND SENTIMATE SCENE ELLAIYA ,NAADAI KAPATHARA SCENELA PALLAI KADICHUKIDU PESARA GOLDEN WORDS ELLAIYA/////

படத்துக்கு படம் வித்தியாசமா பண்றவரு எங்க டாகுடர் விஜய்ன்னு உங்களுக்கு தெரியாதா பாஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
மனோ நீ ஓடிரு மக்கா.....பேசாம நான் தீ மிதிக்கவே போயிருதேன், திருவிழா கொண்ட்டாட்ட நாள்களிதான் இவனுகளுக்கு பேதியே எடுக்கும் போல....

நல்ல நல்ல நாட்கள்ல ஊருல இருக்கவிடாம பலபேரை காட்டுக்குள்ளே தூரத்துறாங்க.////

அப்படியெல்லாம் தப்ப முடியாது, கொஞ்ச நாள்லயே டீவிலயும் வந்து டார்ச்சர் கொடுப்போம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// MANO நாஞ்சில் மனோ said...
படத்தின் விமர்சனம் அருமை படத்தை கண்டு [[ஓட]] மகிழ ஆசை அவ்வ்வ்வ்..../////

மனசுக்குள்ள இம்புட்டு ஆசைய வெச்சிக்கிட்டு சைலண்ட்டா இருக்கீங்களேண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
அமலாபால்க்கு விஜய் மேல் காதல் வரும் காரணத்தை கொஞ்சம் விளக்கி இருந்தால் நாங்களும் விளங்கி இருப்போம் .......//////

அது ஹீரோயின், இவரு ஹீரோ... இதுக்கு மேல உங்களுக்கு எதுக்குண்ணே காரணம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
டாகுடர்னாலே பன்னியாருக்கு தனி குஷி தான்..அடிச்சு விளையாடுவாரு!/////

பலவருசமா நாம இததானே பண்ணிக்கிட்டு இருக்கோம்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
விஜய்க்கு ஏன் அமலாபாலை பிடித்தது என்று விளக்கவும். கூடவே அதற்கு நாகர்ஜூனாவின் ரியாக்சன் என்ன என்றும் சொல்லவும்.//////

அமலா கொண்டு வந்த பால் ஆடையில்லாம இருந்ததால அது விஜய்க்கு புடிச்சிடுச்சாம். (இதுக்கு நாகார்ஜுனா ரியாக்சன் பண்ணா என்ன, பண்ணாட்டி என்ன......)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
//வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன் சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும்,//

ரொம்ப காஸ்ட்லியான சரக்கா இருக்குமோ?///////

ரொம்ப கிக்கான சரக்காம்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
//அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான்.//

ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உட்கார்ந்தா ரொம்ப வலிக்காது?/////

பட்டும் படாமேயும் உக்காரனும்ணே.....

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் சூப்பருங்கோ........

Unknown said...

பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது.///இதுக்குள்ள 'வேட்டை' ன்னு ஒரு படமும் புதைந்து கிடக்கிறதோ?

தனிமரம் said...

வெங்காயத்தை கடத்துவதை முறியடிக்கின்றாரா இல்லை முழிக்க வைக்கின்றாரா காட்டுக்கத்தல் போட்டு! ஓட ரெடி அண்ணாச்சி!ஹீ

உணவு உலகம் said...

//எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்//
பின்குறிப்பு:1) இது ஒரு முன்(விரோத!) விமரிசனம்.
2)இப்படிக்கு டாகுடரை தெய்வமாகக் கொண்டாடும் அல்லக்கைகள் சாரி அன்பர்கள்.
ஹா ஹா.

vinu said...

me the 25thyeeeeeeeeeeeeei

S.டினேஷ்சாந்த் said...

படம் ஏதோ படுகேவலமா வந்திருக்கு எண்டு சொன்னாங்க