Thursday, July 25, 2013

கன்னி கணிணி அனுபவம்....

கன்னி கணிணி அனுபவம்னு ஒரு தொடர்பதிவு எழுதிக்கிட்டு வர்ராங்க. நம்மளைலாம் யாரும் கூப்புட மாட்டாங்க பட் அதுக்காக அப்படியே விட்ர முடியுமா? தன்கையே தனக்கு உதவவில்லை யெனில், முழங்கை கூட மதிக்காதுன்னு பாலமன் ஆப்பையாவே சொல்லி இருக்கறதால நானே என்னை கூப்டுக்கிட்டு நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு. கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சா போதும், ஆளாளுக்கு ஒரு பிகர தள்ளிக்கிட்டு போய்டுவானுங்க. நமக்கு போக்கிடமே இருக்காது. கேண்டீனுக்கு போனா எல்லா டேபிள்லயும் இவனுங்களே சிங்கிள் டீய வாங்கி வெச்சிக்கிட்டு ரெண்டு மணி நேரம் வறுப்பானுங்க, உக்காந்து வேடிக்க பார்க்க கூட இடம் கிடைக்காது, கிரவுண்ட் பக்கம் போனா வெட்டியா ஒரு பால், பேட்ட வெச்சிக்கிட்டு நாலு பேரு சீன் போட்டுட்டு இருப்பானுங்க. அவனுங்களும் வெளையாட மாட்டானுங்க அடுத்தவனையும் வெளையாட விடமாட்டானுங்க. அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு தஸ்புஸ்னு பேசுற நாலு பிகருக அங்க நின்னுக்கிட்டு ஹாய்யா போயா வாயான்னு அலப்பற பண்ணிட்டு இருப்பாளுக.

வெளில போய் டீக்கடைலயாவது உக்காரலாம்னா அங்க காலேஜ் வாத்தியாருங்க தொல்லை. சரி மிச்சம் மீதி இருக்க அல்லகைஸ் எவனையாவது ரெடி பண்ணிட்டு தியேட்டர் பக்கம் போகலாம்னா, அவனுங்க பிட்டுப்படத்த தவிர வேற படம் பாக்க மாட்டோம்னுட்டானுங்க. நாமலும் ஒரே படத்த எத்தன வாட்டிதான் பாக்குறது? இப்படி நம்ம பொழப்பு லோல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. 

ஒருநா இந்த மாதிரியான ஒரு நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாம லைப்ரரில தனியா உக்காந்து பெரிய பெரிய பொஸ்தகங்களை வெச்சி வெட்டி சீன் போட்டுட்டு இருந்தப்ப ஒரு சுமாரான ஜூனியர் பிகரு, பேரு சுதா,  பக்கத்துல வந்துச்சு. வந்து சுத்திமுத்தி பாத்துட்டு,

சார், வந்து.....

சொல்லு சுதா.. என்ன வேணும்?

அது வந்து, நீங்கதான் கம்ப்யூட்டர்ல பெரியாள்னு சொன்னாங்க ...

"!!!!!!!" ( எவனோ நம்ம பசங்கதான் சொல்லி இருக்கனும், நம்ம பசங்க எப்பவும் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் பண்ண மாட்டானுங்களே, இதுல எதுவும் சதி இருக்குதா?) எவனாவது ஒளிஞ்சிருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கானான்னு சுத்தி முத்தி பார்த்தேன்..... ஒரு பக்கியையும் கணோம்...

என்ன சார், யோசிக்கிறீங்க, நான் வேணா அப்புறம் வரவா?

...ம்ம் இல்ல இல்ல,. சொல்லு சுதா... ஏதாவது ப்ரோகிராம் இன்ஸ்டால் பண்ணனுமா?

இல்ல சார், பிரவுசிங் செண்டர் போய் ஈமெயில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன். 
அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும். ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் நல்லா போய்ட்டு இருந்துச்சு. அப்புறம்தான் கவனிச்சேன், அங்க ஒரு சூப்பர் பிகர் வேலைல இருக்குன்னு. இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு. அதை கூப்புடனும்னா சிஸ்டத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னுதான் கூப்புட முடியும், நாமலோ பெரிய ஐடி அப்பாட்டக்கர் ரேஞ்சுக்கு ஈமெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டு இருக்கோம், கடலை வேற நல்லா போய்ட்டு இருக்கு, இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படனுமான்னு ஒரே யோசனை. பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல.
கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.  நம்புன மாதிரியே செமையா ஐடியா கொடுத்தான். மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான். சரின்னு சொல்லி கொஞ்சம் ஸ்பீடா ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணிக் கொடுத்து காலேஜ் பிகரை சீக்கிரமே அனுப்பி வெச்சிட்டேன், அது போனதும் சும்மா ரெண்டு வெப்சைட்ட ஓப்பன் பண்ணி வெச்சிட்டு, பிரவுசிங் செண்டர் பிகரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டேன். ரொம்ப நேரமா கூப்புடாத ஆள் கூப்பிடுறாரேன்னு அதுவும் வேகமா பக்கத்துல வந்துச்சு, வந்து...,

என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?
நன்றி: கூகிள் இமேஜஸ்!

87 comments:

கோகுல் said...

கன்னி,கணிணி அனுபவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோகுல் said...
கன்னி,கணிணி அனுபவமா?/////

ஆமாங்கோ.....

Manimaran said...


//ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன்.//

பிரவுசிங் சென்டருக்கு முன்ன காப்பி ஷாப்புக்கு போயிட்டு அப்படியே ஐஸ்க்ரீம் பார்லர் போனத ஏன் சொல்லல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Manimaran said...

//ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன்.//

பிரவுசிங் சென்டருக்கு முன்ன காப்பி ஷாப்புக்கு போயிட்டு அப்படியே ஐஸ்க்ரீம் பார்லர் போனத ஏன் சொல்லல.. //////

கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, அதான் ஸ்ட்ரெயிட்டா பிரவுசிங்க் செண்டருக்கு வந்துட்டேன்......

Manimaran said...


//கன்னி கணிணி அனுபவம்.... //

கன்னிகளுடம் கணினி அனுபவம்.. இதைத்தானே சொல்ல வந்தீங்க..

Manimaran said...


//அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும்.ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன்//

இதெல்லாம் தெரிஞ்சி தான அந்த பிரவுசிங் சென்டர் கூப்பிட்டு போனீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Manimaran said...

//கன்னி கணிணி அனுபவம்.... //

கன்னிகளுடம் கணினி அனுபவம்.. இதைத்தானே சொல்ல வந்தீங்க../////

ஹி...ஹி....

Manimaran said...//இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு.//

பக்கத்துல வேற ஒரு பிகர வச்ச்ருந்தா இன்னொரு பிகர் எப்படின்னே தெரியும்... தெரிஞ்சாதான் ஆச்சர்யம்.

! சிவகுமார் ! said...

/ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே./

இதைத்தான் அந்த பொண்ணும் நெனச்சி இருக்கும்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Manimaran said...

//அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும்.ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன்//

இதெல்லாம் தெரிஞ்சி தான அந்த பிரவுசிங் சென்டர் கூப்பிட்டு போனீங்க..//////

இதெல்லாம் யதார்த்தமா நடக்குறதுங்கோ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Manimaran said...


//இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு.//

பக்கத்துல வேற ஒரு பிகர வச்ச்ருந்தா இன்னொரு பிகர் எப்படின்னே தெரியும்... தெரிஞ்சாதான் ஆச்சர்யம்.
//////

அதுக்கெல்லாம் பல்கலை நிபுணர்கள் இருக்காங்க...

! சிவகுமார் ! said...

/என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?/


:))))))))))))))))))))))))))

Manimaran said...


//காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு.//

ச்சே டுட்டோரியல் காலேஜ்ல கூட ஒழுங்கா படிக்க விடாமா இந்த சுமாரான பிகர்க எல்லாம் ஏன்தான் இப்படி டிஸ்டர்ப் பன்னுதுக.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
/ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே./

இதைத்தான் அந்த பொண்ணும் நெனச்சி இருக்கும்!!//////

இதுக்குத்தான் அதததுக்கு உள்ள ஆளுக வேணும்றது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
/என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?/


:))))))))))))))))))))))))))///////

என்ன குத்தால அருவியில் குளிச்சது போல் இருக்குதா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Manimaran said...

//காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு.//

ச்சே டுட்டோரியல் காலேஜ்ல கூட ஒழுங்கா படிக்க விடாமா இந்த சுமாரான பிகர்க எல்லாம் ஏன்தான் இப்படி டிஸ்டர்ப் பன்னுதுக. //////

பிகர்னு வந்துட்டாலே இதெல்லாம் இருக்கறதுதானே?

Manimaran said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Manimaran said...

//ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன்.//

பிரவுசிங் சென்டருக்கு முன்ன காப்பி ஷாப்புக்கு போயிட்டு அப்படியே ஐஸ்க்ரீம் பார்லர் போனத ஏன் சொல்லல.. //////

கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, அதான் ஸ்ட்ரெயிட்டா பிரவுசிங்க் செண்டருக்கு வந்துட்டேன்......//

அண்ணே இது கன்னிகளுடன் கணினி அனுபவம் தானே...

! சிவகுமார் ! said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
/என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?/

:))))))))))))))))))))))))))///////

என்ன குத்தால அருவியில் குளிச்சது போல் இருக்குதா..../

depanetly. depanetly.

! சிவகுமார் ! said...

இதுக்குத்தான் சொல்றது ப்ரிட்ஜுல இருக்குற கொக்க கோலாவ விட கைல இருக்குற காளிமார்க்கே மேலுன்னு!!

சங்கவி said...

// மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான் //

சரி சிஸ்டம் என்னாச்சுன்னு சொல்லுங்க தல... ஹேங் ஆனதா கழட்டி சரிபாத்தீங்களா? இல்லையா?

டிபிஆர்.ஜோசப் said...

இப்படி ஏடாகூடமா எதையாச்சும் எழுதுவீங்கன்னு தெரிஞ்சிதான் யாரும் ஒங்கள தொடர் பதிவு சங்கிலி ஜோதியில ஐக்கியமாக கூப்டல.. சரிதானே:))

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

செம..ஹாஹாஹா

சக்கர கட்டி said...

ஹாஹா இதான் வான்டேடா போயி மாட்டிகிறது

Subramaniam Yogarasa said...

அண்ணா!!!!!!!!!!!!!!!!!!!///ஹ!ஹ!!ஹா!!!(உள்ளதும் போச்சுடா, நொள்ளக்கண்ணா கதை ஆயிடுச்சே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
இதுக்குத்தான் சொல்றது ப்ரிட்ஜுல இருக்குற கொக்க கோலாவ விட கைல இருக்குற காளிமார்க்கே மேலுன்னு!!///////

நிபுணர்கள் என்னமோ சொல்றீங்க... கேட்டுக்கிறேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சங்கவி said...
// மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான் //

சரி சிஸ்டம் என்னாச்சுன்னு சொல்லுங்க தல... ஹேங் ஆனதா கழட்டி சரிபாத்தீங்களா? இல்லையா?///////

அதுக்கப்புறம் சிஸ்டம் மட்டுமா ஹேங் ஆகுச்சி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிபிஆர்.ஜோசப் said...
இப்படி ஏடாகூடமா எதையாச்சும் எழுதுவீங்கன்னு தெரிஞ்சிதான் யாரும் ஒங்கள தொடர் பதிவு சங்கிலி ஜோதியில ஐக்கியமாக கூப்டல.. சரிதானே:))///////

கண்டுபுடிச்சிட்டீங்களே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
செம..ஹாஹாஹா//////

ஹி...ஹி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சக்கர கட்டி said...
ஹாஹா இதான் வான்டேடா போயி மாட்டிகிறது//////

எங்க போனாலும் இப்படித்தாங்க ஆயிடுது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Subramaniam Yogarasa said...
அண்ணா!!!!!!!!!!!!!!!!!!!///ஹ!ஹ!!ஹா!!!(உள்ளதும் போச்சுடா, நொள்ளக்கண்ணா கதை ஆயிடுச்சே?)/////////

டோட்டல் டேமேஜ்.....

அஞ்சா சிங்கம் said...

ஹா.ஹா........ஹோ....ஹோ.....ஹையோ ...ஹையோ .........மாப்பு நான் எவ்வளவோ பரவாஇல்லை காப்பிகொட்டையை வறுத்து காப்பி போட்டு குடிச்சிட்டுதான் வந்தோம் ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
ஹா.ஹா........ஹோ....ஹோ.....ஹையோ ...ஹையோ .........மாப்பு நான் எவ்வளவோ பரவாஇல்லை காப்பிகொட்டையை வறுத்து காப்பி போட்டு குடிச்சிட்டுதான் வந்தோம் ............//////

என்னது காப்பிக்கொட்டைய வறுத்தீங்களா? தீஞ்சிருக்குமே?

Tirupurvalu said...

Panni kutti un thangs eppo ennga velaila iruku i mean entha browsing centerla .Can u recommand me

அஞ்சா சிங்கம் said...

@ பன்னிகுட்டி கடலை வறுப்பது எல்லாம் ஈசி தலைவரே .........
கடலை வறுக்கும் இடங்களிலே காப்பிகொட்டை வருப்பவன் எவனோ

அவனே காதல் மன்னன் ...
நீங்க உங்க லெவலுக்கு ஒரு மாங்கொட்டையோ, ஒரு புளியங்கொட்டையோ வறுக்க முயற்சிபன்னுங்க .....
ப்ரேக்டீஸ் மேக் தி மேன் பெர்பெக்ட் ..
கூடிய விரைவில் முந்திரி கோட்டை வருக்கும் அளவிற்கு முன்னேற வாழ்த்துக்கள் ........

தமிழ்வாசி பிரகாஷ் said...

கணினி அனுபவம் மாதிரி சொல்லாம, கன்னி அனுபவம் மாதிரியில சொல்லி இருக்கீங்க????

செல்விகாளிமுத்து said...

ஹாஹாஹா முதல்முறையாக உங்க பதிவு படிக்கிறேன் சார்.நல்லா சிரிச்சேன்.இறுதியாக முடிவில்லாமல் ஹேங் ஆகிடுச்சின்னு பதிவையும் முடிச்சிட்டு போட்டிருக்கும் படம் இருக்கே?நல்லா சிரிச்சேன் சார்.

Madhavan Srinivasagopalan said...

// காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். //
யாருன்னு சொல்லவேயில்ல..

Madhavan Srinivasagopalan said...

// பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல. //
இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு..

Madhavan Srinivasagopalan said...

////////Manimaran said...

//ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன்.//

பிரவுசிங் சென்டருக்கு முன்ன காப்பி ஷாப்புக்கு போயிட்டு அப்படியே ஐஸ்க்ரீம் பார்லர் போனத ஏன் சொல்லல.. //////

கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, அதான் ஸ்ட்ரெயிட்டா பிரவுசிங்க் செண்டருக்கு வந்துட்டேன்...... //

மணி சார்..
மணி சார்..
யாருக்கிட்ட இந்தக் கேள்விய கேட்டீங்க.....?

இந்தப் பதில் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா ?

# Great timing, Panni Sir

Madhavan Srinivasagopalan said...

// கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, //
சொன்னாங்களா,
யாருப்பா அது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Tirupurvalu said...
Panni kutti un thangs eppo ennga velaila iruku i mean entha browsing centerla .Can u recommand me///////

பார்ரா.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
@ பன்னிகுட்டி கடலை வறுப்பது எல்லாம் ஈசி தலைவரே .........
கடலை வறுக்கும் இடங்களிலே காப்பிகொட்டை வருப்பவன் எவனோ

அவனே காதல் மன்னன் ...
நீங்க உங்க லெவலுக்கு ஒரு மாங்கொட்டையோ, ஒரு புளியங்கொட்டையோ வறுக்க முயற்சிபன்னுங்க .....
ப்ரேக்டீஸ் மேக் தி மேன் பெர்பெக்ட் ..
கூடிய விரைவில் முந்திரி கோட்டை வருக்கும் அளவிற்கு முன்னேற வாழ்த்துக்கள் ........//////

இண்டர்னேசனல் டென்னிஸ் அசோசியேசன் தலைவர் மாதிரியே என்னென்னமோ சொல்றாரு, சரி கேட்டுக்குவோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
கணினி அனுபவம் மாதிரி சொல்லாம, கன்னி அனுபவம் மாதிரியில சொல்லி இருக்கீங்க????/////

யோவ் டைட்டில பார்க்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செல்விகாளிமுத்து said...
ஹாஹாஹா முதல்முறையாக உங்க பதிவு படிக்கிறேன் சார்.நல்லா சிரிச்சேன்.இறுதியாக முடிவில்லாமல் ஹேங் ஆகிடுச்சின்னு பதிவையும் முடிச்சிட்டு போட்டிருக்கும் படம் இருக்கே?நல்லா சிரிச்சேன் சார்./////

வாங்க மேடம்... நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
// காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். //
யாருன்னு சொல்லவேயில்ல..//////

தெரிஞ்சாத்தானே சொல்ல முடியும்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
// பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல. //
இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு../////

எனக்கும் பிடிச்சிதான் இருந்துச்சி, பட் இப்போ டூ லேட்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
////////Manimaran said...

//ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன்.//

பிரவுசிங் சென்டருக்கு முன்ன காப்பி ஷாப்புக்கு போயிட்டு அப்படியே ஐஸ்க்ரீம் பார்லர் போனத ஏன் சொல்லல.. //////

கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, அதான் ஸ்ட்ரெயிட்டா பிரவுசிங்க் செண்டருக்கு வந்துட்டேன்...... //

மணி சார்..
மணி சார்..
யாருக்கிட்ட இந்தக் கேள்விய கேட்டீங்க.....?

இந்தப் பதில் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா ?

# Great timing, Panni Sir//////

ஹி..ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
// கன்னி கணிணி அனுபவத்த பத்திதானே எழுத சொல்லி இருக்காங்க, //
சொன்னாங்களா,
யாருப்பா அது ?///////

அதுவும் நானேதான்.......

செங்கோவி said...

நல்லவேளை..நான் யோசிச்ச கான்செப்ட்ல எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டென்.

செங்கோவி said...

எப்படியும் இந்தாளு மேட்டர்சைட்டு தான் ஒப்பன் பண்ணுவாரு..கண்டிப்பா ஹேங் ஆகும்னு அந்தப் பொண்ணு கரெக்டா கண்டுபிடிச்சிருச்சே.

s suresh said...

கடைசியிலே வச்சீங்க பாரு ஒரு பஞ்ச்! சூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
நல்லவேளை..நான் யோசிச்ச கான்செப்ட்ல எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டென்.///////

அடங்கொன்னியா இது வேறயா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
எப்படியும் இந்தாளு மேட்டர்சைட்டு தான் ஒப்பன் பண்ணுவாரு..கண்டிப்பா ஹேங் ஆகும்னு அந்தப் பொண்ணு கரெக்டா கண்டுபிடிச்சிருச்சே.//////

அப்புறம் அங்க போறவன்லாம் என்ன அணுசக்தி ஆராய்ச்சி பண்ணவா போறான்?

Shankar said...

This must be like getting hit by a sledge hammer.I sympathies with you.
idhukku ellam oru Machcham venum pola.

Shankar said...

இதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் தலைவரே.
I am trying this for the first time.
Shankar

TERROR-PANDIYAN(VAS) said...

அன்புள்ள பன்னிகுட்டி அவர்களுக்கு முதல் முறையாக உங்க பதிவு படிக்கிறேன் சார்.நல்லா சிரிச்சேன்.இறுதியாக முடிவில்லாமல் ஹேங் ஆகிடுச்சின்னு பதிவையும் முடிச்சிட்டு போட்டிருக்கும் படம் இருக்கே?நல்லா சிரிச்சேன் சார்.. :))

தொடர்ந்து எழுதுங்க சார் ப்ளீஸ்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

///என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?//

இதை படித்து தேம்பி தேம்பி அழுதேன்.. :))

சே. குமார் said...

இதுல கணினி அனுபவம் எங்க வந்துச்சி...
கன்னிகளை வறுத்த அனுபவம்தானே இருக்கு அண்ணாச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஒரே வார்த்தையில இப்பிடி ஆப்பு வச்சுடுச்சே, ஐடியா குடுத்தவன தூக்கிப்போட்டு மிதிக்கலையாக்கும் ?

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் பன்னி, இப்பவும் [[எப்பவும்]]பிரவுசிங் செண்டர்ல இருக்குற பிகருங்க எல்லாம் அண்ணா'ன்னுதான் கூப்பிடுறாங்க இது கூட தெரியாம இருக்கீரே....!

நாங்கெல்லாம் இப்பிடிப்பட்ட பிகருக்ங்க பேசுறதுக்கு முன்பே தங்கச்சி'ன்னு கூப்பிட்டுருவோம் ஹி ஹி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.//

என்னய்யா கலர் கலரா ரீல் விடுற? இன்டர்நெட் வந்த புதுசுல செல்போன் ஏது ? வெளில போயி பூத் ல இருந்து போன் செஞ்சியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Follow-up

Manickam sattanathan said...

நெட் இணைப்பு வந்த பிறகு நான் பார்க்கும் முதல் தளம் நம்ம பன்னி குட்டியோடதுதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// s suresh said...
கடைசியிலே வச்சீங்க பாரு ஒரு பஞ்ச்! சூப்பர்!/////

அது பஞ்ச் இல்லீங்க, ஆப்பு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Shankar said...
இதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் தலைவரே.
I am trying this for the first time.
Shankar//////

ஆமாங்கோ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
அன்புள்ள பன்னிகுட்டி அவர்களுக்கு முதல் முறையாக உங்க பதிவு படிக்கிறேன் சார்.நல்லா சிரிச்சேன்.இறுதியாக முடிவில்லாமல் ஹேங் ஆகிடுச்சின்னு பதிவையும் முடிச்சிட்டு போட்டிருக்கும் படம் இருக்கே?நல்லா சிரிச்சேன் சார்.. :))

தொடர்ந்து எழுதுங்க சார் ப்ளீஸ்.. :)///////

சம்பவம் அதோட முடிஞ்சிடுச்சுங்களே சார்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
///என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?//

இதை படித்து தேம்பி தேம்பி அழுதேன்.. :))//////

இதைப்படித்தவுடன் தங்களின் கேவலமான ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்துவிட்டதா தோழர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சே. குமார் said...
இதுல கணினி அனுபவம் எங்க வந்துச்சி...
கன்னிகளை வறுத்த அனுபவம்தானே இருக்கு அண்ணாச்சி....//////

அததான் நாங்க தலைப்புலயே சொல்லிட்டம்ல அண்ணாச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா ஒரே வார்த்தையில இப்பிடி ஆப்பு வச்சுடுச்சே, ஐடியா குடுத்தவன தூக்கிப்போட்டு மிதிக்கலையாக்கும் ?//////

அப்புறம் மறுக்கா யாரு ஐடியா கொடுப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
யோவ் பன்னி, இப்பவும் [[எப்பவும்]]பிரவுசிங் செண்டர்ல இருக்குற பிகருங்க எல்லாம் அண்ணா'ன்னுதான் கூப்பிடுறாங்க இது கூட தெரியாம இருக்கீரே....!

நாங்கெல்லாம் இப்பிடிப்பட்ட பிகருக்ங்க பேசுறதுக்கு முன்பே தங்கச்சி'ன்னு கூப்பிட்டுருவோம் ஹி ஹி....///////


அண்ணன் பலபாஷைகள் அறிந்தவர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.//

என்னய்யா கலர் கலரா ரீல் விடுற? இன்டர்நெட் வந்த புதுசுல செல்போன் ஏது ? வெளில போயி பூத் ல இருந்து போன் செஞ்சியா?////////

அதெல்லாம் நீங்க படிச்ச காலத்துல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Follow-up////

ஆமா இங்க 500 கோடிக்கு பிசினஸ் நடக்க போகுது, அப்படியே பாலோ பண்ணி வர்ராரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Manickam sattanathan said...
நெட் இணைப்பு வந்த பிறகு நான் பார்க்கும் முதல் தளம் நம்ம பன்னி குட்டியோடதுதான்./////

வாங்கண்ணே வந்து களத்துல குதிங்க......

நாய் நக்ஸ் said...

கணிணி கன்னி அனுபவத்தையும் எழுதறது....!!!

நாய் நக்ஸ் said...

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம்.////

கிரேட் இன்சல்ட் ....

நாய் நக்ஸ் said...

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். . கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சா போதும்,/////////////


இங்கன தான் பெரியயயயயயயயயய....மிஸ்டேக்....இதுலேயே தெரியுது...நீர் காலேஜ் போகலைஎன்று....

காலேஜ்-ல் சேர்ந்தா எப்பவுமே பிரி தானே....??????????

நாய் நக்ஸ் said...

ஆளாளுக்கு ஒரு பிகர தள்ளிக்கிட்டு போய்டுவானுங்க. நமக்கு போக்கிடமே இருக்காது. கேண்டீனுக்கு போனா எல்லா டேபிள்லயும் இவனுங்களே சிங்கிள் டீய வாங்கி வெச்சிக்கிட்டு ரெண்டு மணி நேரம் வறுப்பானுங்க, உக்காந்து வேடிக்க பார்க்க கூட இடம் கிடைக்காது, கிரவுண்ட் பக்கம் போனா வெட்டியா ஒரு பால், பேட்ட வெச்சிக்கிட்டு நாலு பேரு சீன் போட்டுட்டு இருப்பானுங்க. அவனுங்களும் வெளையாட மாட்டானுங்க அடுத்தவனையும் வெளையாட விடமாட்டானுங்க. அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு தஸ்புஸ்னு பேசுற நாலு பிகருக அங்க நின்னுக்கிட்டு ஹாய்யா போயா வாயான்னு அலப்பற பண்ணிட்டு இருப்பாளுக.//////////////////

நீங்க ""சச்சின்"" படத்து வடிவேலுதானே....?????

நாய் நக்ஸ் said...

வெளில போய் டீக்கடைலயாவது உக்காரலாம்னா அங்க காலேஜ் வாத்தியாருங்க தொல்லை. சரி மிச்சம் மீதி இருக்க அல்லகைஸ் எவனையாவது ரெடி பண்ணிட்டு தியேட்டர் பக்கம் போகலாம்னா, அவனுங்க பிட்டுப்படத்த தவிர வேற படம் பாக்க மாட்டோம்னுட்டானுங்க.////////////

அந்த போட்டால் காட்டுல இதெல்லாம் இருந்துச்சா.....???

பெரிய காலேஜ்...பெரிய படிப்பு.....நீ கலக்கு பன்னி....

நாய் நக்ஸ் said...

ஒருநா இந்த மாதிரியான ஒரு நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாம லைப்ரரில தனியா உக்காந்து பெரிய பெரிய பொஸ்தகங்களை வெச்சி வெட்டி சீன் போட்டுட்டு இருந்தப்ப////////////////

பார்ரா.....ம்ம்ம்ம்....நடக்கட்டும்....

நாய் நக்ஸ் said...

சார், வந்து.....

சொல்லு சுதா.. என்ன வேணும்?//////////////

மீதி பேர் எங்கையா...???
"கரன்" தானே....???

நாய் நக்ஸ் said...

அது வந்து, நீங்கதான் கம்ப்யூட்டர்ல பெரியாள்னு சொன்னாங்க .../////////////


உலகிலேயே மிக பெரிய பொய்....எங்க சிரிப்பு போலீஸ்-ஐ விடவா....???

devadass snr said...

தங்களது பதிவையும் படித்தேன்.அதற்கு வந்திருந்த பின்னுாட்டங்களையும் படித்தேன்.நானும் தங்களது பதிவுக்கு ஒரு பின் அடிக்கலாம் என்று யோசித்தேன்.
எனது வயது எதையும் எழுத தடுத்துவிட்டது.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

FOOD NELLAI said...

//என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?//
ஐ லைக் இட்.சொன்ன வார்த்தையைச்சொன்னேன். ஹா ஹா ஹா

Siva sankar said...

///என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?//

இதை படித்து தேம்பி தேம்பி அழுதேன்.. :))me too...

மதுரைநண்பன் said...

//என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?//
ஓவரா சீன் போட்ட இப்படித்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : சனிக்கிழமையின் சகாப்தங்கள்

Baskar S said...

வலைச்சரம் மூலமாக தங்கள் தளத்திற்கு வருகை புரிந்தேன். நான் இணைந்தும் கொண்டேன். தளம் அருமை. வாழ்த்துக்கள்.

எனது தளம் உங்கள் பார்வைக்கு
http://nellaibaskar.blogspot.com/